நாமெல்லாம் யார் ..?எந்த மானமும் சொரணையும் அற்றவர்கள்..உனக்கு ஏன் தன்மானம் வந்தது..உன் உடையை களைய காலம் காலமாக நமது மூதாதையர்களின் உடையை நம் அனுமதியின்றி பிறர் களைய நம் மீது எச்சிலையும் மலத்தையும் திணித்தாலும் வாய் கட்டி கை கட்டி நிற்க மட்டுமே நமக்கு இந்த தாயுள்ளம் கொண்ட அரசாங்கத்தாலும் அரசு அதிகாரிகளாலும் அனுமதி கொடுத்திருக்கிறது என்பது உனக்கு சொல்லப்பட்டும் நீ ஏன் உயிரை விட்டாய்..உன் அங்கங்களை குதறினாலும் நீ அமைதி காக்க வேண்டும் என்றே நமக்கான கடவுள் மனுவையும் அதிகாரிகளையும் கல்லூரியின் பெயரை கூட வெளியில் சொல்லி விடாத விடாத ஊடகங்களை படைத்திருக்கிறார் ..நமக்கு நடப்பதெல்லாம் கடவுள் சபிக்கப்பட்டவருக்கு போட்ட பிச்சை என நீ ஏன் நம்ப மறுத்தாய்..கோவையில் குழந்தைகள் வன்புனர்ச்சிக்குல்லானபோது தண்டிக்கப்பட்டவன் வெறும் ஓட்டுனர் மட்டுமே..அதுவும் நிற்க வைத்து சுடப்பட்டது கேள்விப்பட்டதும் நமது தேசம் புனித மடைந்ததே....ஆனால் நீ இறந்ததால் அந்த கல்லுரி தீட்டு பட்டு விட்டதே..நாங்கள் என்ன செய்வோம்..இதற்காக இன்னும் ஆயிரம் ஆண்டுகள் மலம் அள்ளினாலும் எங்கள் மீது கடவுள் கருணை காட்ட மாட்டாரே நாங்கள் என்ன செய்வோம்..உனக்கு வந்த கோபமும் ஆற்றாமையும் எங்களுக்கு வந்தால் நாங்கள் என்ன செய்வது..உன்னை போலவே உயிரையும் மயிரையும் மட்டும்தானே கொடுக்க இயலும்..மக்கள் தெருவில் இறங்கி போராடுவது குற்றமில்லையா..கோபம் வரும்போது அவர்களை திருப்பி தாக்க நினைக்கும் மனதே தவறு இல்லையா..பாவம் உனது இந்த செயலால் ஆசிரியைகளுக்கு நெஞ்சு வலி வந்து மருத்துவமனையில் படுத்திருக்கிரார்களே..ஏன் இப்படி செய்தாய்..உன் அம்மாவுக்கு மட்டும் எங்கிருந்து வந்தது உனக்கு உணர்ச்சியை ஊட்டும் சக்தி..நீ தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு உனக்கு மானத்தை விதைத்த உன் அம்மாவை முதலில் தண்டித்திருக்க வேண்டும்..நீ ஏன் அதை செய்யாமல் உன்னையே மாய்த்து கொண்டாய்..இனி நாங்கள் என்ன்ன செய்வோம்..கண்டிப்பாக கல்லூரியில் சென்று நீ திருடியதாக நாங்களும் சேர்ந்து வந்து திருடியதாக ஒப்பு கொள்கிறோம் ..இனியும் நமது சமுகத்திற்கு தன்மானம் என ஒன்று இல்லாமல் அறுத்தெறிய சொல்கிறோம்..இனி தலைவர்களின் அந்த கல்லூரிக்கு அனுப்பி நம் பிள்ளைகளை படிக்க வைக்காமல் மலம் அல்லவோ அல்லது மீன் பிடிக்கவோ அனுப்பி வைப்போம்..அப்போது தான் நம்மை ஆளும் நமது கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக மாறுவோம்..கண்டிப்பாக எந்த வித போராட்டத்தையும் உன்னை போல அறிவில்லாமல் செய்து தொலைக்க மாட்டோம்..உன்னால் எம் கல்லுரியாலர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை யாரும் செய்ய விடாமல் பார்த்துக்கொள்வோம்..ஒரே ஒரு கவலைதானம்மா..எங்களுக்கு..நீ தற்கொலை செய்து கொள்ளும் பொது உனக்கு வந்ததே ஒரு ஆவேசம்..பணம் படைத்தவனையும் அதிகார பீடங்களில் அமர்ந்து சுகபோகம் அனுபவிப்பவனையும் உன்னை நிர்வாணப்படுத்திய கல்வியாளர்களையும் கொள்ள வேண்டும் என்று வெறி வந்ததே..அது அவர்களுக்கு தெரியாமல் போயி விட வேண்டும் என்பது தான்..அதை உன்னோடு புதைத்து விடு..வேறு யாரிடமும் சொல்லி விடாதே..பின்பு தேசத்தின் நலன் பாதிக்கப்படும்..உன் சாவின் மூலம் கோவையில் சுட்டார்களே அது போல அந்த கல்வியாளர்களை சுட்டு விடுவார்கள் என கனவு காணாதே..அது வேறு ..இது வேறு..பொய் வா குழந்தையே..உன் கோபத்தை உனக்கு முன்பு செத்த நமது சந்ததியினரிடம் வேண்டுமானால் காட்டு..இங்கே காட்டாதே..உனக்காக என்னால் கண்ணீர் வடிக்க முடியாது..ஏனெனில் அந்த கண்ணீர் தரையில் விழ ஏதாவது சேரியை நான் தேட வேண்டும்..தேடி போனாலும் அதற்க்கு கடவுளிடம் விண்ணப்பிக்க வேண்டும்..ஏனெனில் எனது சேரிகள் கூட ஆட்ச்சியாளர்களால் மீட்கப்பட்டிருக்கிறது..அது வெளி தேசத்திளுந்து வரும் அமெரிக்க..அல்லது எனக்கு பெயர் தெரியாத கடவுள் வாழ அனுமதியளிக்கப்பட்டு அதற்காக நாங்கள் இடம் பெயர்ந்து கொண்டிருக்கிறோம்..நாடற்ற நமக்கு சேரியும் இழந்த நமக்கு கண்ணீர் விட மட்டும் அனுமதிக்க யார் உண்டு..நம் கடவுளை தவிர..எப்போதாவது என் விண்ணப்பத்திற்கு கடவுள் இடம் சொல்லுவார் அது வரை என் கண்ணீரை தேக்கி வைப்பேன் கண்ணே..போயி வா..போயி வா..போயி வா..
இப்படிக்கு
நாடற்றவளின் தாய்கள்.
இப்படிக்கு
நாடற்றவளின் தாய்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக