செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

யாழ்.பல்கலைக்கழகத்தில் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்கள்! பொலிஸ் குவிப்பு

யாழ்.பல்கலைக்கழகத்தில் பார்வதி அம்மாளுக்கு அஞ்சலி தெரிவிக்கும் துண்டுப்பிரசுரங்கள்! பொலிஸ் குவிப்பு

[ செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011

தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் தாயார் பார்வதியம்மாள் என்றழைக்கப்படும் வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை அவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் துண்டுப் பிரசுரங்கள் இன்று காலை யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.
யாழ். பல்கலைக்கழக சமூகம் என்ற பெயரிலும், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என்ற பெயரிலும் அஞ்சலி தெரிவிக்கும் இந்த துண்டுப்பிரசுரங்களில் தேசத்தாய்க்கு வீர வணக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை மிகவும் விரிவுரை வகுப்புக்களின் பொழுது பார்வதி அம்மாளுக்கு மாணவர்கள், விரிவுரையாளர்கள் அஞ்சலி தெரிவித்திருந்தனர்.
அத்தோடு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் விரிவுரைகளைப் பகிஸ்கரித்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.
யாழ்  பல்கலைக்   கழகத்தில் பொலிஸ் குவிப்பு
பார்வதி அம்மாவின் இறுதிக் கிரியையில் கலந்து கொள்ள செல்லவிருந்த மாணவர்கள் துரத்தப்பட்டனர். அவர்கள் செல்லவிருந்த பஸ் வண்டியும் திருப்பி அனுப்பபட்டது பல்கலை வாசல் எங்கிலும் பொலிஸ் மயம். மாணவர்கள் கொந்தளித்தபடி உள்ளனர். பல்கலையில் பயச் சூழல் காணப்படுகிறது. 
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் தாய் பார்வதி அம்மாளின் மரணச் சடங்குக்கு யாழ்.பல்கலைக்கழகத்தில் இருந்து இன்று புறப்பட்டு செல்ல இருந்த பல நூற்றுக்கணக்கான பட்டதாரி மாணவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் காலையில் ஈடுபட்டு உள்ளனர்.
சுமார் 300 பேர் வரையான மாணவர்கள் மூன்று பஸ்களில் புறப்பட தயாராகி இருந்தனர்.
இந்நிலையில் பல்கலைக்கழகம் பொலிஸாரால் 11.30 மணி முதல் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தை சுற்றி பொலிஸார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
பார்வதி அம்மாளின் மரணச் சடங்குக்கு புறப்பட்டுச் சென்றால் கைது செய்யப்படுவார்கள் என்று மாண்வர்களுக்கு பொலிஸாரால் நேரடி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
இதனால் பல்கலைக்கழகத்தில் பெரும் பதற்றம் நிலவுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாணவ பிரதிநிதிகள் தொலைபேசி மூலம் நிலைமையை அறிவித்து உள்ளார்கள்.
பொலிஸ் உயரதிகாரிகளுடன் பேச்சு நடத்த கூட்டமைப்பு பகீரத முயற்சிகளை மேற்கொள்கின்றது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக