மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல– கௌரி
தமிழன் என்றால் இந்த அகிலமே இன்று திரும்பிப் பார்க்கின்றது. தமிழருக்கென்று ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம் உண்டு என்பதை தெரியவைத்தவர்தான் இந்த பிரபாகரன். பலரை வரலாறு படைத்திருககலாம். வரலாறுக்காக பிரபாகரன் எதையும் படைக்கவில்லை ஆனால் பிரபாகரன் ஒரு வரலாறு படைத்துள்ளார் என்பதுதான் உண்மை. பிரபாகரன் என்றால் தமிழ், தமிழ் என்றால் பிரபாகரன்.அவர்தான் நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள தமிழன்.
சில தினங்களுக்கு முன்பு லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு கலந்துரையாடல் கேட்க நேர்ந்தது. தனிப்பட்ட எந்த ஒரு நபரின் பெயரையும் நான் இங்கு குறிப்பிட விருப்பவில்லை. அது அநாகரீகமும் கூட.ஆனால் அதை பார்த்த நாளிலிருந்து இரணமான நெஞ்சம் இன்னும் ஆறவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்களே..அதுதான் அன்று நடந்தது.
வைகாசி பேரவலத்தின் பின்பு மெல்ல மெல்ல மறைமுகமாகப் புலிகளைத் தாக்கினார்கள் இந்த பொய் வல்லுனர்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் நேரடியாக அதுவும் தொலைக் காட்சியில் வந்து தாக்கும் அளவுக்கு துணிந்துவிட்டார்கள் இந்த “நாவலர்கள்”.அன்று அந்தத் தொலைக்காட்சியில் இந்த ” நாவல்லவர்” கூறியதாவது … சிங்களவர்களைக் கொல்வதைப் புலிகள் ஒரு கொள்கையாக வைத்திருந்தது போலவும் அதைத் தவிர அவர்களிடம் ஒருப்படியாக வேறு எந்த கொள்கையும் இருக்கவேயில்லை என்பதுபோலவும் ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு இந்த உலகத்தில் எனக்குத் தெரியாத விடயமே இல்லை என்ற ஒரு தோரணையில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் இந்த அறப்படித்த வெறும் மண்டை.
இந்த வெற்று மண்டைகளுக்கு நாம் கூற விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.சிங்களவர்களைக் கொல்வதை ஒரு கொள்கையாக பிரபாகரன் வைத்திருந்திருந்தால் தமிழ் ஈழம் என்றோ பிறந்திருக்கும். இரண்டு கிராமங்களை அழித்திருந்தால் சிங்களவன் பிரபாகரன் காலில் வந்து விழுந்திருப்பான். அதை செய்வதற்கு பிரபாகரனிடம் தில்லும் இருந்தது திறனும்(capacity) இருந்தது. ஆனால் பிரபாகரன் ஒரு பயங்கரவாதியல்ல. சிங்களவர்களைக் கொள்வது அவர் நோக்கமும் அல்ல. யார் இந்த பிரபாகரன் என்று தெரியாதவர்களுக்கும் தெரியாதது போல் நடிப்பவர்களுக்கும் சொல்கின்றோம் கேளுங்கள்.
தமிழ் உணர்வு என்ற ஒக்சிஜனை(oxygen)மட்டும் தனது இரத்த ஓட்டத்தில் கலந்தவர்தான் இந்த பிரபாகரன். தமிழ் என்ற ஒரு தேசிய இனம் இந்த உலகில் உண்டு என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துரைத்தவர் இந்த பிரபாகரன். ஸ்ரீலங்கா என்று சொன்னாலே “தமிழா” என்று வெளிநாட்டவர் வினாவுமளவுக்கு கொண்டுவந்தவர் இந்த பிரபாகரன். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தமிழன் என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்தி தலையை உயர்த்தி தமிழர்களை இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்க வைத்தவர் இந்த பிரபாகரன்.
இன்று இந்த இந்து சமுத்திர பிராந்தியத்தின் வரலாற்றையே தலைகீழாக மாற்றி வைத்திருப்பவர்தான் இந்த பிரபாகரன். அறவழியில் போராட வேண்டும் என்று செல்வா அன்று அகிம்சாவழியில் போராடினார். இந்த அகிம்சா மொழியெல்லாம் புரிந்து கொள்பவன் அல்ல சிங்களவன் என்ற முடிவுக்கு உந்தப் பட்டு ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்தாலும், அந்த ஆயுதப் போராட்டத்தையும் தார்மீகத்தின் வழியில் தர்மத்தின் அடிப்படையில் நடாத்தியவர்தான் இந்த பிரபாகரன்.
இணையங்களில் இன்று பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழும் ஒரு முக்கிய மொழியாக இருக்கின்றதென்றால் அதற்குக் காரணமும் இந்த பிரபாகரன்தான். இன்று இந்தப் பொய் வல்லுனர்கள் எழுத்தாளர்கள் என்ற போர்வையில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் தொலைக் காட்சிகளில் தோன்றி தங்கள் விதண்டாவாதக் கருத்துக்களை சுதந்திரமாகப் பேசுகின்றார்கள் என்றால் அதற்குக் காரணமும் இந்த பிரபாகரன்தான். மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல. எழுத்தின் மேல் உள்ள மோகத்தினால்(passion) எழுதுபவன்தான் எழுத்தாளன். வயிறு வளர்ப்பதற்காக எழுதுபவநெல்லாம் எழுத்தாளனாக முடியாது.
இன்று இவரைப் போன்றோர் எல்லோரும் சுதந்திரமாக தொலைக் காட்சியில் வந்து ஒய்யாரமாக தங்கள் பொய்ப்பிரச்சாரங்களை தைரியமாக கூறிவிட்டு இன்னும் உயிருடன் இருக்கின்றீர்கள் என்றால் அதற்குக் காரணம் பிரபாகரன். எனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையோ என்று கேட்கின்றார் இந்த “நாவல்லவர்”,..இந்தக் கருத்துச் சுதந்திரப் புண்ணாக்கை இலங்கையில் நீங்கள் பேசமுடியுமா? அல்லது பேசிவிட்டுதான் உயிருடன் இருக்க உம்மை ராஜபக்ஷே விடுவானா? இந்த கருத்துச் சுதந்திரம் எல்லா தமிழருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடியவர்தான் இந்த பிரபாகரன்.
“அனுராதபுரத்தில் சிங்களவன் அடித்தால் அடியை வாங்கிக்கொடு யாழ்ப்பாணத்துக்கு உயிருடன் வருவதுதான் புத்திசாலித்தனம் அதை விட்டு விட்டு நாம் திருப்பி அடித்தால் நாம் உயிருடன் வரமுடியாது” என்கின்றார் இந்த நாவல்லவர்.அதுதான் ராஜதந்திரமாம்…. உம்மிடம் ஒரு கேள்வி. நீர் கோழைத்தனமாகத் திருப்பி அடிக்காவிட்டால் மட்டும் அந்த கொலைகாரர் உம்மை உயிருடன் விட்டு விடுவார்களா? செத்தாலும் இரண்டு அடி என்றாலும் திருப்பி அடித்துவிட்டு சாபவன்தான் மானமுள்ள மனிதன்…. எதையுமே நடந்து முடிந்தபின்பு அதைச் செய்திருக்கலாம் இதை செய்திருக்கலாம் என்று என்னாலும்தான் கூற முடியும். (hindsight has outcome knowledge, foresight hasn’t got that luxury)
நடந்து முடிந்ததைப் பற்றி நீர் பேசுவதால் புத்திசாலியாக காட்டிக் கொள்ள முடியாது. திருவிளையாடல் தருமி நாகேஷ் சொன்னதுபோல் ” பாட்டெழுதிப் பெயர் எடுத்தவங்களும் இருக்கின்றார்கள்.பிழை கண்டுபிடித்துப் பெயர் வாங்குபவர்களும் இருக்கின்றார்கள்.” ஆனால் நமது இந்த நாவலர் விடயத்தில்” இல்லாத பிழையைக் கண்டுபிடித்துப் பெயர் வாங்குபவர்களும் இருக்கின்றார்கள்.
இனித் தமிழன் தலை தூக்கவே முடியாது என்று சோர்ந்திருந்த காலக் கட்டத்தில் தமிழனுக்கு புத்துணர்ச்சி கொடுத்து அவன் உணர்வைத் தட்டி எழுப்பியவர்தான் இந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்.பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல.அது தமிழ் மக்களின் ஆத்மபலம். தமிழர்கள் சோர்ந்துபோகாமல் இருப்பதற்காக பாவிக்கப்படும் ஒரு ஊட்டச் சத்து.அது நம் மக்கள் இரத்தத்தில் கலந்துவிட்ட தொனிக்(tonic).நாம் சாகும்வரை அந்த ஊட்டச் சத்து நம்மை சோர்ந்து போகவிடாமல்,எதற்காக இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோமோ அந்த இலக்கை நாம் அடையும்வரை நம்மை இழுத்துச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.
வெள்ளையும் சொள்ளையுமாக தொலைக் காட்சியில் தோன்றி, கடைசியாக சொன்ன பொய் என்ன என்பதை மறந்து அந்த பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்லித் திரியும் அரசியல்வாதியல்ல அவர்.அதிகப் படிப்பு அவரிடம் இல்லை. அதிகப் பேச்சும் அவரிடமில்லை. அதிகப் பிரசங்கித் தனம் இருக்கவில்லை.. ஆனால் அவருடன் செய்கை இருந்தது..தெளிவானசிந்தனை இருந்தது… நிறையக் கேள்விகள் இருந்தன அதற்குப் பதிலும் அவரிடம் இருந்தது. சந்திரபோசைப் பிடிக்கும் அவருக்கு. அதனால் சந்திரபோஸ் போன்று நேர்மையுடனே வாழ்பவர்.
முப்பது வருடப்போராட்டத்தின் பலாபலன் முள்ளிவாய்க்கால் என்று வாய்கூசாமல் கூறுபவர்களும் இருக்கின்றார்கள். இந்த முள்ளிவாய்க்காலில் பலி எடுக்கப்பட்டோர் எத்தனைப் பேர் என்று யாருக்காவது தெரியுமா? தமிழர் பண்பாடு, கலாச்சாரம் எல்லாமே சீரழிக்கப்படுத்தப்படுகின்றன. எங்கள் நிலங்கள் அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் களவாடப்படுகின்றன. நம் பாரம்பரியம் அழிக்கப்படுகின்றது.
நாம் தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் கூனிக் குறுகி அடிமைகளாக ஒடுங்கிப்போய் விட்டோம். சரி….இப்படி நினைப்போரிடம் ஒரு கேள்வி.. ஆயுதப் போராட்டம் இல்லாமல் இருந்திருந்தால் 1983-2009 வரையில் இலங்கையில் எத்தனை கலவரங்கள் நடந்திருக்கும் என்று யாராலாவது எதிர்வு கூற முடியுமா? எத்தனை எத்தனை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிக்கை சொல்ல முடியுமா? எவ்வளவு சொத்துக்கள் அளிக்கப்படிருக்கும் என்று கணக்கு கூறமுடியுமா?
இதுவரைக்கும் எவ்வளவு தமிழர் நிலம் பறிபோய் இருக்கும் என்று கூறமுடியுமா? முடியாது யாராலும் முடியாது…
ஆனால் இந்த முள்ளிவாய்க்கால் மூலம் இன்று இந்த உலகம் நம் பக்கம் அதன் பார்வையை திரும்பிப் பார்க்கவைக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
ஆனால் இந்த முள்ளிவாய்க்கால் மூலம் இன்று இந்த உலகம் நம் பக்கம் அதன் பார்வையை திரும்பிப் பார்க்கவைக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
தமிழன் என்றால் இந்த அகிலமே இன்று திரும்பிப் பார்க்கின்றது. தமிழருக்கென்று ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம் உண்டு என்பதை தெரியவைத்தவர்தான் இந்த பிரபாகரன். பலரை வரலாறு படைத்திருககலாம். வரலாறுக்காக பிரபாகரன் எதையும் படைக்கவில்லை ஆனால் பிரபாகரன் ஒரு வரலாறு படைத்துள்ளார் என்பதுதான் உண்மை.
பிரபாகரன் என்றால் தமிழ், தமிழ் என்றால் பிரபாகரன்.அவர்தான் நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள தமிழன்.
கௌரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக