வியாழன், 24 பிப்ரவரி, 2011

அனுராதபுரம் சிறைச்சாலையில் புலிகள் மீது சிங்களக் காடையர் தாக்குதல் (பட இணைப்பு)

அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலையில் சிங்கள காடையர்கள், புலிகளை தடுத்துவைத்துள்ள பகுதிக்குள் அத்துமீற முயன்றதால் இன்று காலை கலவரம் வெடித்துள்ளது. கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள் இருக்கும் சிறைச்சாலைக் கதவுகளை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்நுழைய முனைந்ததால் பெரும் பதற்றம் நிலவுவதாக அறியப்படுகிறது. சிங்கள இராணுவத்தினர் வேண்டுமென்றே இவ்வாறு ஒரு கலவரத்தை உருவாக்கி, எஞ்சியுள்ள போராளிகளைச் சுட்டுக் கொல்லும் நோக்கில் செயல்பட்டுவருவதாக கைதி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை இக் கலவரம் இடம் பெற்றவேளை இராணுவத்தினர் சுட்டதில் 6 சிங்களவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், தாங்கள் தமது அறைகளை உள்தாழ்ப்பாள் இட்டு மூடிவிட்டு, அச்சத்தோடு உள்ளதாகவும் கைதி ஒருவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தினரே சமையல் அறையை எரித்ததால் சமைக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், வெறும் நீரை மட்டும் குடித்துக் கொண்டு தாம் இருப்பதாவும் சில போராளிகள் கூறியுள்ளனர். சில நாட்களாகவே இராணுவத்தினர் புலிகள் இருக்கும் அறைகளைச் சோதனையிட்டும், மண்ணுக்குள் எதோ புதைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பல தேடுதல்களை மேற்கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இன்று காலை இராணுவத்தினர் துப்பாக்கியால் சரமாரியாக மற்றும் கண்மூடித்தனமாகவும் சுட்டுள்ளனர். இதனால் சிறைச்சாலைச் சுவர் மற்றும் கைதிகள் தங்கும் அறை என்பனவும் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்ப்ட்டு காணப்படுவதாகவும், எங்களுக்கு எந் நேரமும் எதுவும் நடக்கலாம் என அக்கைதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

கலவரத்தைத் தூண்டி, அதன் மூலம் தமது குறியில் உள்ளவர்களை சுட்டுக் கொல்லும் நோக்கில் இராணுவம், இவ்வாறு செய்வதாக போராளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சர்வதேசம் இதில் தலையிட்டு தம்மை காப்பாற்றவேண்டும் எனவும் அவர்கள் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச சமூகம் பாரா முகமாக இருக்குமாயில், இலங்கை இராணுவத்தினர் கலவரம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து போராளிகளையும் சுட்டே கொண்றுவிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக