parvathi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
parvathi லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 பிப்ரவரி, 2011

மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல

மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல– கௌரி
தமிழன் என்றால் இந்த அகிலமே இன்று திரும்பிப் பார்க்கின்றது. தமிழருக்கென்று ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம் உண்டு என்பதை தெரியவைத்தவர்தான் இந்த பிரபாகரன். பலரை வரலாறு படைத்திருககலாம். வரலாறுக்காக பிரபாகரன் எதையும் படைக்கவில்லை ஆனால் பிரபாகரன் ஒரு வரலாறு படைத்துள்ளார் என்பதுதான் உண்மை. பிரபாகரன் என்றால் தமிழ், தமிழ் என்றால் பிரபாகரன்.அவர்தான் நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள தமிழன்.
 
சில தினங்களுக்கு முன்பு லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு கலந்துரையாடல் கேட்க நேர்ந்தது. தனிப்பட்ட எந்த ஒரு நபரின் பெயரையும் நான் இங்கு குறிப்பிட விருப்பவில்லை. அது அநாகரீகமும் கூட.ஆனால் அதை பார்த்த நாளிலிருந்து இரணமான நெஞ்சம் இன்னும் ஆறவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்களே..அதுதான் அன்று நடந்தது.
 
வைகாசி பேரவலத்தின் பின்பு மெல்ல மெல்ல மறைமுகமாகப் புலிகளைத் தாக்கினார்கள் இந்த பொய் வல்லுனர்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் நேரடியாக அதுவும் தொலைக் காட்சியில் வந்து தாக்கும் அளவுக்கு துணிந்துவிட்டார்கள் இந்த “நாவலர்கள்”.அன்று அந்தத் தொலைக்காட்சியில் இந்த ” நாவல்லவர்” கூறியதாவது … சிங்களவர்களைக் கொல்வதைப் புலிகள் ஒரு கொள்கையாக வைத்திருந்தது போலவும் அதைத் தவிர அவர்களிடம் ஒருப்படியாக வேறு எந்த கொள்கையும் இருக்கவேயில்லை என்பதுபோலவும் ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு இந்த உலகத்தில் எனக்குத் தெரியாத விடயமே இல்லை என்ற ஒரு தோரணையில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் இந்த அறப்படித்த வெறும் மண்டை.
இந்த வெற்று மண்டைகளுக்கு நாம் கூற விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.சிங்களவர்களைக் கொல்வதை ஒரு கொள்கையாக பிரபாகரன் வைத்திருந்திருந்தால் தமிழ் ஈழம் என்றோ பிறந்திருக்கும். இரண்டு கிராமங்களை அழித்திருந்தால் சிங்களவன் பிரபாகரன் காலில் வந்து விழுந்திருப்பான். அதை செய்வதற்கு பிரபாகரனிடம் தில்லும் இருந்தது திறனும்(capacity) இருந்தது. ஆனால் பிரபாகரன் ஒரு பயங்கரவாதியல்ல. சிங்களவர்களைக் கொள்வது அவர் நோக்கமும் அல்ல. யார் இந்த பிரபாகரன் என்று தெரியாதவர்களுக்கும் தெரியாதது போல் நடிப்பவர்களுக்கும் சொல்கின்றோம் கேளுங்கள்.
தமிழ் உணர்வு என்ற ஒக்சிஜனை(oxygen)மட்டும் தனது இரத்த ஓட்டத்தில் கலந்தவர்தான் இந்த பிரபாகரன். தமிழ் என்ற ஒரு தேசிய இனம் இந்த உலகில் உண்டு என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துரைத்தவர் இந்த பிரபாகரன். ஸ்ரீலங்கா என்று சொன்னாலே “தமிழா” என்று வெளிநாட்டவர் வினாவுமளவுக்கு கொண்டுவந்தவர் இந்த பிரபாகரன். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தமிழன் என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்தி தலையை உயர்த்தி தமிழர்களை இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்க வைத்தவர் இந்த பிரபாகரன்.
இன்று இந்த இந்து சமுத்திர பிராந்தியத்தின் வரலாற்றையே தலைகீழாக மாற்றி வைத்திருப்பவர்தான் இந்த பிரபாகரன். அறவழியில் போராட வேண்டும் என்று செல்வா அன்று அகிம்சாவழியில் போராடினார். இந்த அகிம்சா மொழியெல்லாம் புரிந்து கொள்பவன் அல்ல சிங்களவன் என்ற முடிவுக்கு உந்தப் பட்டு ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்தாலும், அந்த ஆயுதப் போராட்டத்தையும் தார்மீகத்தின் வழியில் தர்மத்தின் அடிப்படையில் நடாத்தியவர்தான் இந்த பிரபாகரன்.
இணையங்களில் இன்று பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழும் ஒரு முக்கிய மொழியாக இருக்கின்றதென்றால் அதற்குக் காரணமும் இந்த பிரபாகரன்தான். இன்று இந்தப் பொய் வல்லுனர்கள் எழுத்தாளர்கள் என்ற போர்வையில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் தொலைக் காட்சிகளில் தோன்றி தங்கள் விதண்டாவாதக் கருத்துக்களை சுதந்திரமாகப் பேசுகின்றார்கள் என்றால் அதற்குக் காரணமும் இந்த பிரபாகரன்தான்.  மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல.  எழுத்தின் மேல் உள்ள மோகத்தினால்(passion)  எழுதுபவன்தான் எழுத்தாளன். வயிறு வளர்ப்பதற்காக எழுதுபவநெல்லாம் எழுத்தாளனாக முடியாது.
இன்று இவரைப் போன்றோர் எல்லோரும் சுதந்திரமாக தொலைக் காட்சியில் வந்து ஒய்யாரமாக தங்கள் பொய்ப்பிரச்சாரங்களை தைரியமாக கூறிவிட்டு இன்னும் உயிருடன் இருக்கின்றீர்கள் என்றால் அதற்குக் காரணம் பிரபாகரன். எனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையோ என்று கேட்கின்றார் இந்த “நாவல்லவர்”,..இந்தக் கருத்துச் சுதந்திரப் புண்ணாக்கை இலங்கையில் நீங்கள் பேசமுடியுமா? அல்லது பேசிவிட்டுதான் உயிருடன் இருக்க உம்மை ராஜபக்ஷே விடுவானா? இந்த கருத்துச் சுதந்திரம் எல்லா தமிழருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடியவர்தான் இந்த பிரபாகரன்.
“அனுராதபுரத்தில் சிங்களவன் அடித்தால் அடியை வாங்கிக்கொடு யாழ்ப்பாணத்துக்கு உயிருடன் வருவதுதான் புத்திசாலித்தனம் அதை விட்டு விட்டு நாம் திருப்பி அடித்தால் நாம் உயிருடன் வரமுடியாது”  என்கின்றார் இந்த நாவல்லவர்.அதுதான் ராஜதந்திரமாம்…. உம்மிடம் ஒரு கேள்வி.  நீர் கோழைத்தனமாகத் திருப்பி அடிக்காவிட்டால் மட்டும் அந்த கொலைகாரர் உம்மை உயிருடன் விட்டு விடுவார்களா?  செத்தாலும் இரண்டு அடி என்றாலும் திருப்பி அடித்துவிட்டு சாபவன்தான் மானமுள்ள மனிதன்…. எதையுமே நடந்து முடிந்தபின்பு அதைச் செய்திருக்கலாம் இதை செய்திருக்கலாம் என்று என்னாலும்தான் கூற முடியும். (hindsight has outcome knowledge, foresight hasn’t got that luxury)  
நடந்து முடிந்ததைப் பற்றி நீர் பேசுவதால் புத்திசாலியாக காட்டிக் கொள்ள முடியாது. திருவிளையாடல் தருமி நாகேஷ் சொன்னதுபோல் ” பாட்டெழுதிப் பெயர் எடுத்தவங்களும் இருக்கின்றார்கள்.பிழை கண்டுபிடித்துப் பெயர் வாங்குபவர்களும் இருக்கின்றார்கள்.” ஆனால் நமது இந்த நாவலர் விடயத்தில்”  இல்லாத பிழையைக் கண்டுபிடித்துப் பெயர் வாங்குபவர்களும் இருக்கின்றார்கள்.
இனித் தமிழன் தலை தூக்கவே முடியாது என்று சோர்ந்திருந்த காலக் கட்டத்தில் தமிழனுக்கு புத்துணர்ச்சி கொடுத்து அவன் உணர்வைத் தட்டி எழுப்பியவர்தான் இந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்.பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல.அது தமிழ் மக்களின் ஆத்மபலம். தமிழர்கள் சோர்ந்துபோகாமல் இருப்பதற்காக பாவிக்கப்படும் ஒரு ஊட்டச் சத்து.அது நம் மக்கள் இரத்தத்தில் கலந்துவிட்ட தொனிக்(tonic).நாம் சாகும்வரை அந்த ஊட்டச் சத்து நம்மை சோர்ந்து போகவிடாமல்,எதற்காக இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோமோ அந்த இலக்கை நாம் அடையும்வரை நம்மை இழுத்துச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.
வெள்ளையும் சொள்ளையுமாக தொலைக் காட்சியில் தோன்றி, கடைசியாக சொன்ன பொய் என்ன என்பதை மறந்து அந்த பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்லித் திரியும் அரசியல்வாதியல்ல அவர்.அதிகப் படிப்பு அவரிடம் இல்லை. அதிகப் பேச்சும் அவரிடமில்லை. அதிகப் பிரசங்கித் தனம் இருக்கவில்லை.. ஆனால் அவருடன் செய்கை இருந்தது..தெளிவானசிந்தனை இருந்தது… நிறையக் கேள்விகள் இருந்தன அதற்குப் பதிலும் அவரிடம் இருந்தது. சந்திரபோசைப் பிடிக்கும் அவருக்கு. அதனால் சந்திரபோஸ் போன்று நேர்மையுடனே வாழ்பவர்.
முப்பது வருடப்போராட்டத்தின் பலாபலன் முள்ளிவாய்க்கால் என்று வாய்கூசாமல் கூறுபவர்களும் இருக்கின்றார்கள்.  இந்த முள்ளிவாய்க்காலில் பலி எடுக்கப்பட்டோர் எத்தனைப் பேர் என்று யாருக்காவது தெரியுமா?  தமிழர் பண்பாடு, கலாச்சாரம் எல்லாமே சீரழிக்கப்படுத்தப்படுகின்றன.  எங்கள் நிலங்கள் அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் களவாடப்படுகின்றன.  நம் பாரம்பரியம் அழிக்கப்படுகின்றது.
நாம் தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் கூனிக் குறுகி அடிமைகளாக ஒடுங்கிப்போய் விட்டோம். சரி….இப்படி நினைப்போரிடம் ஒரு கேள்வி.. ஆயுதப் போராட்டம் இல்லாமல் இருந்திருந்தால் 1983-2009 வரையில் இலங்கையில் எத்தனை கலவரங்கள் நடந்திருக்கும் என்று யாராலாவது எதிர்வு கூற முடியுமா? எத்தனை எத்தனை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிக்கை  சொல்ல முடியுமா? எவ்வளவு சொத்துக்கள் அளிக்கப்படிருக்கும் என்று கணக்கு கூறமுடியுமா?
இதுவரைக்கும் எவ்வளவு தமிழர் நிலம் பறிபோய் இருக்கும் என்று கூறமுடியுமா? முடியாது யாராலும் முடியாது…
ஆனால் இந்த முள்ளிவாய்க்கால் மூலம் இன்று இந்த உலகம் நம் பக்கம் அதன் பார்வையை திரும்பிப் பார்க்கவைக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
தமிழன் என்றால் இந்த அகிலமே இன்று திரும்பிப் பார்க்கின்றது. தமிழருக்கென்று ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம் உண்டு என்பதை தெரியவைத்தவர்தான் இந்த பிரபாகரன். பலரை வரலாறு படைத்திருககலாம். வரலாறுக்காக பிரபாகரன் எதையும் படைக்கவில்லை ஆனால் பிரபாகரன் ஒரு வரலாறு படைத்துள்ளார் என்பதுதான் உண்மை.
பிரபாகரன் என்றால் தமிழ், தமிழ் என்றால் பிரபாகரன்.அவர்தான் நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள தமிழன்.
கௌரி

அன்பான தமிழீழ மக்களே .. ! , என்ற அவருடைய குரல் நம் காதுகளில் மறுபடியும் ஒலிக்கும்..

அன்பான தமிழீழ மக்களே .. ! , என்ற அவருடைய குரல் நம் காதுகளில் மறுபடியும் ஒலிக்கும்..
புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து தமிழகத்தில் இருந்து விமர்சனக் கடிதம்"
ஒரு மாவீராங்கனையின் தாய் எழுதும் திறனாய்வு மடல்..
கண்டிப்பாக படிக்க வேண்டிய கருத்துள்ள கடிதம்…

சென்னை
நாள் 27.01.2011

அன்புடன் திரு.துரை அவர்களுக்கு,
முதலில் உளமார்ந்த நல்லாசிகள் பாராட்டுதல் கலந்த நல் வாழ்த்துக்கள்.
புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற புத்தகத்தைப் படித்தேன். படித்தல் நிறைவுறும் முன்பாகவே அது வெறும் புத்தகமல்ல.. ஒவ்வொரு ஈழத்தமிழனுக்குமான பொக்கிஷம் என்பதை உணர்ந்தேன். உணர்ந்தவண்ணமே அந்தப் பதினெட்டு நாட்களின் பயணத்தை நிறைவு செய்தேன். இந்தப் புத்தகத்தை அல்ல.. பொக்கிஷத்தை அறிமுகம் செய்தமைக்காக சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு எனது உளமார்ந்த நன்றியை முதலாகக் கூற வேண்டும்.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலை அறிந்திருக்கிறோம். மகாபாரதம் கேட்டிருக்கிறோம், இராமாயணம் படித்திருக்கிறோம். கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் .. ஒன்றல்ல இரண்டல்ல .. பல நூறு தடவைகள் எமக்குள் எதிரொலி செய்கிறது. ஆயினும் என்ன? இவை யாவற்றுள்ளேயும் புதைந்து கிடக்கின்ற அற்புதத்தை – வாழ்க்கையின் உன்னதத்தை–ஊடுருவிப் பார்க்கின்ற சிந்தனைத்திறன்–நானறிந்தவரை–இதுவரை யாருக்கும் ஏற்பட்டதில்லை உங்களைத்தவிர..
புயலுக்குள் புதுமை கண்டு, அதைப் புதுமாத்தளனோடு இணைத்து, புலம் பெயர் தமிழர் உன்னதம் பெறுவதற்கான செய்தியாகக் கொடுத்திருக்கிறீர்கள்.. பாராட்டுகிறேன்…
2009 மே – பதினெட்டாம் நாளுக்குப் பிறகு தமிழினம் சோர்ந்துபோய்க் கிடக்கின்றது. எல்லாமே முடிந்துவிட்டது என்ற ரீதியில் விரக்தியின் விளிம்புக்கு வந்து நிற்கிறது. , எங்கள் விடுதலைப் போராட்டம் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாகவே பின்நோக்கிப் போய்விட்டது.. தமிழன் இனி நிமிர்வது எங்ஙனம்…? , என்ற மனப்பாங்குதான் ஏறக்குறைய எல்லோரிடமும் காணப்படுகிறது.
ஆடுகளம், சமமாக இல்லாத இடத்தில் நம் ஈழத்தமிழ் வீரர்கள் மோதினார்கள்… அவர்கள் அழிக்கப்படவில்லை.. இப்போரில் அவர்களுக்கே வெற்றி..எனவும், தனது சிறிய படையணியினரோடு உலகத்தையே துணிந்து எதிர்த்த பிரபாகரன் அடைந்தது தோல்வியா… ? எனவும், உங்களுடைய பேனா ஒவ்வொரு ஈழத் தமிழனையும் தெம்பேற்றுகிறது. இது காலத்தின் தேவை, ஒரு தேசத்தின் கட்டாயம். இந்த நூல் பட்டிதொட்டி எங்கும் போய்ச் சேர வேண்டும் என்பதே என் ஆதங்கம்.
நடக்குமா.. ? நடக்க வேண்டும்…
பிரபாகரன் தன்னைக் காட்டிக் கொடுத்த சில புலித்தம்பிகளை புதுமாத்தளனில் நேரடியாகக் கண்டார்.. ,தம்பி தமிழீழம் பிறக்க முன்னர் நீ பிறந்துவிட்டாயே.. ! என்று அவர்களைப் பார்த்து சிரித்தபடி சொன்னார், என்ற வரிகளைப் படித்து துடித்துப்போனேன். பெருகிவந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை.
அடுத்த வினாடியே..
,திரும்பிப் பார்க்காதே.. !,என்ற மாபெரும் தத்துவம் எனக்கு முன்னால் நிற்பது தெரிந்தது.
உதிர்ஷ்டிரனையும், மகலனையும் சொல்லி .. இந்தத் தத்துவத்தோடு இணைத்து.. இறுதியில் காது கொடுத்துக் கேட்டுப்பார் ! என்கிறீர்கள். இதோ இப்பொழுதும் கேட்கிறேன்.. எங்கள் அருமைத் தலைவன்.. என்போன்ற தாயாருக்கெல்லாம் இனிய மகன்..ஓர் அற்புத வரலாற்றின் பிறப்புக்காக திரும்பிப் பாராமலே நடந்து கொண்டிருக்கிற அந்தக் காலடி ஓசைகளை..
அவனை எங்கள் தேசத்தின் பிள்ளையை, இந்தப் பயணத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் மகனே.. என்று மனம் திறந்து ஆசீர்வதிக்கிறேன். விரைவில் எங்களிடம் வந்துவிடு தலைவா..! என்ற ஆதங்கத்தோடு. 2009 மே 18 ற்குப் பிறகு தமிழன் தமிழனாக இல்லை. உயிர் கொடுத்தவர்களும், அநியாயமாக உயிர் பறிக்கப்பட்டவர்களும் போய்ச் சேர்ந்துவிட, அவரவர் உயிரே அவரவர்க்கு சுமையாகிவிட்டதான ஒரு கொடுந்துயரம்..
தமிழன் என்றால் , தலை நிமிர்வு , என்பதாய் அர்த்தப்படுத்தி வாழ்ந்தோமே இன்று உலகமே நம்மைப் கைகொட்டிச் சிரிக்கிறதே..இது ஏன் நடந்தது..? எப்படி நடந்தது.. ? கனவில்கூட நினைத்துப் பார்த்திராத இந்த அவலத்திற்கு யார் அல்லது எது காரணம்? இதுபோன்ற விடை தெரியாக் கேள்விகளோடு ஒரு வெறுமையான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் இதயங்களின் மத்தியில் மற்றுமொரு முக்கியமான கேள்வியும்:
தமிழீழம் என்ற இலட்சியக் கனவோடு சாவைத்தழுவிக் கொண்ட, வெடிகுண்டு சுமந்து வெடித்துச் சிதறி மண்ணுக்குள் புதைந்து போன பல்லாயிரம் மாவீரர்களுடையை அசையாத நம்பிக்கை வீணாகிப் போனதா..? சத்தியம், தர்மம், நீதி, கடவுள் என்பதெல்லாம் வெறும் கதைகள்தானா..? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பேனா விடை தருகிறது. ,தியாகமே வடிவான போராளிகள் மண்ணுக்குள் இருக்கிறார்கள்.. அவர்கள் இதைக் காப்பாற்றுவார்கள்.., என்று உறுதியோடு பிரபாகரன் நம்புகிறார்.–என்ற வரிகள்.
,பிரபாகரன் என்ற பிரகாச ஒளி இப்புவியில் பரவும்..  ,நம்புவோம்.. காத்திருப்போம்.. !
இவ்வாறு நம்பிக்கை தந்த உங்களுடைய பேனா உங்களுடைய 10 வது கதையில் வாசகர் நெஞ்சங்களைக் கலங்கவும் வைக்கிறது. டைட்டானிக் கப்பலை புதுமாத்தளனோடு ஒப்பிடும் நீங்கள், , டைட்டானிக் பெரிய கப்பல்தானே.. அது ஒரு காலமும் உடையாது என்ற நம்பிக்கையுடன் பயணித்த மடமைச் செயலை எண்ணி வருந்திய கப்பல் தலைவன் கடைசியில் டைட்டானிக்கோடு சேர்ந்து தானும் மூழ்கி உயிரை மாய்க்கிறான் என்றும் எழுதியுள்ளீர்கள்.
வாசித்தபோது இதயம் துணுக்குற்றது… எதையோ எமக்கு சொல்வதற்கான சூசகமான வரிகளா இவை..? என்ற நினைப்பில் மனம் பதைபதைப்பதை தவிர்க்க முடியவில்லை. சொல்லுங்கள் தம்பி.. அதைச் சாதாரணமாகத்தானே எழுதினீர்கள்.. ? சூசகமாக எதையும் எமக்கு சொல்வதற்காக அல்லவே..?
போருக்குப் பிற்பட்ட காலமே கொடியது என்றும், அதன் பிறகுதான் உண்மையான அவலம் சமுதாயத்தைச் சூறையாடத் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள். எத்தனை பெரிய உண்மை இது.. கூடவே.. அறிஞர் மட்டத்திலான போர் மதிப்பீட்டு ஆய்வுக்குழுவை நாம் நியமிக்கவில்லை என்றும்,  அந்த மதிப்பீட்டை வைத்துத்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு போயிருக்க வேண்டும் என்றும் கூறுகிறீர்கள்.
ஆறாத்துயரிலும் கண்ணீரிலும் கிடக்கிற தமிழ் மக்களுக்கு முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்ற விடை தெரியா கேள்விகளில் இதோ சில: இனி யார் எங்கள் வழிகாட்டி.. ? அதைத் தெரிந்து கொள்ளும் அளவுகோல் எது?
இப்போது வெளியிடப்படுகின்ற வகை வகையான அறிக்கைகள், பிரகடனங்கள், அறிவுறுத்தல்கள் என்பவற்றில் எதை சரியென்று கொள்வது?  எதை பிழையென்று தள்ளுவது? தமிழனுக்கென ஒரு எதிர்காலம் இனி உண்டா.. இல்லையா..?  குழப்பம் எங்கும் குழப்பம்.. எதிலும் குழப்பம். புலம் பெயர்ந்த பெயராத அனைத்து தமிழ் மக்களிடையேயும் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை யார் சரி செய்வது..?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியாதவரை தமிழ் சமுதாயம் சூறையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கப் போகிறது என்பதே யதார்த்தம். மற்றுமொரு விடயம் பற்றி தெளிவுபெற விரும்புகிறேன்.
அறிஞரால் மீட்கப்பட்ட அழகிய டென்மார்க் என்ற அத்தியாயம் பின்வருமாறு கூறுகிறது. ,இனிமேல் ஐரோப்பாவில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை ஆயுதம் மூலம் தீர்ப்பதில்லை என்று புது விதி எழுதினார்கள்… ,,போரில் வென்றவர்களும் தோற்றவர்களும் ஒருவரை நோக்கி மற்றவர் ஆயுதத்தை தூக்குவதில்லை.. ,என்ற ஒப்பந்தம் எழுதப்பட்டது.
இதுபோன்ற ஒரு கோட்பாட்டைக் கடைப்பிடித்து, சிறீலங்காவில் எந்தவொரு பிரச்சனைக்கும் துப்பாக்கி வேட்டு தீர்க்கப்படக் கூடாது என்று ஒப்பந்தத்தை தமிழ் தலைவர்களும், சிங்கள தலைவர்களும் எழுதினால் முதல் அச்சம் தீரும்…, என்றதன் பின் வரும் பேராசிரியர் சபா. இராஜேந்திரனுடைய கருத்து நடை முறைச்சாத்தியமா..? ஒப்பந்தங்களை கிழத்தெறியும் சிறீலங்காவுடன் இனியும் ஓர் ஒப்பந்தமா.. ? இது எந்தக் காலத்திலும் நடக்கக்கூடிய ஒன்றா.. ?
தமிழருடைய தாயக நிலப்பரப்பு சூறையாடப்பட்டு, இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில்..
பேராசிரியர் கூறுவது போல வெளிநாட்டில் உள்ள இளைஞர் தாயகத்தை மேம்படுத்தும் நோக்குடன் பாதுகாப்பாக..! அங்கு போய்வரக்கூடிய சூழல் எவ்வாறு ஏற்பட முடியும்? தாயகம், என்பதே ஒரு கேள்விக்குறியாகி நிற்கும் நிலையில் அவருடைய இந்தக் கருத்து யதார்த்தத்தில் இருந்து வெகு தூரம் விலகிப் போயிருப்பதாகவே உணர முடிகிறது.
(பேராசிரியருடைய கருத்தை விமரிசிப்பது எனது நோக்கமல்ல .. என் மனதில் பட்டதை எழுதுகிறேன்.. தவறு எனில் மன்னிக்க வேண்டுகிறேன்..)
இனி…
,குற்றமற்ற ஒரேயொரு இனமாய் நிற்கும் ஈழத்தமிழன் குரல் இறைவன் திருச்சபையில் கேட்கும்.. ! ,
,பிரபாகரன் முன்னைவிட வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.. ,
,நேதாஜி திரும்பவில்லை பிரபாகரன் திரும்புவார்.. !
,அன்பான தமிழீழ மக்களே .. ! , என்ற அவருடைய குரல் நம் காதுகளில் மறுபடியும் ஒலிக்கும்..
,இறப்பே இல்லா இளவரசன் , என்ற புதிய கொன்ஸ்பிரேசன் தியரி..
தமிழைப் புதிதாய்ப் பிறக்க வைக்கும் வலிமை மேற்படி வாசகங்களுக்கு நிச்சயம் உண்டு. புலம் பெயர் தமிழருக்கெல்லாம் இந்தப் புத்தகம் பெருமளவில் போய்ச் சேர வேண்டும். தமிழினம் புத்துயிர் பெற வேண்டும்.
மேலும்,
என்னைப்பற்றி சில வரிகள்..
பிறந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்து தமிழ் நாட்டில் வசிப்பவள்..பிரபாகரன் என்கின்ற தனிப் பெருந் தலைவனை மகனாக நேசிக்கின்ற ஒரு தமிழிச்சி.. அந்தப் பெருமகனை நேரில் காணவும், உரையாடவுமான அரிய வாய்ப்பினை ஒரு சில தடவைகள் பெற்றவள். தமிழீழக் கனவை நெஞ்சில் சுமந்து, மண்ணில் புதையுண்டு போன ஒரு மாவீராங்கனையை வயிற்றில் சுமந்தவள்.. உங்களைப் போன்ற சமூகப் பிரக்ஞையுள்ள எழுத்தாளர்கள் படைக்கின்ற போர்க்கால இலக்கியங்கள், அறிவின்மை என்ற பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிற ஒரு சமூகத்தை பகுத்தறிவு சமவெளிக்குள் கொண்டுவரக்கூடிய வலிமை உள்ளவை.
இதுபோன்ற பயனுள்ள விடயங்கள் இன்னும் நிறைய எழுதுங்கள். விடுதலை என்ற உன்னதம் நோக்கி ஒவ்வொரு புலம் பெயர் தமிழனும் அடியெடுத்து வைக்க நேரானதும், சீரானதுமான பாதைக்கு உங்களுடைய எழுத்து அழைத்து செல்லட்டும். எனது வாழ்த்துக்களும் நல்லாசிகளும்.
அன்புடன்,சாவித்திரி
சென்னை – தமிழ்நாடு

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

திருப்பி அனுப்பப் பட்ட திருமா


தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, ஒரு நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டு, நேற்று இரவு இலங்கை சென்ற, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை, இலங்கை அரசு நேற்று திருப்பி அனுப்பியது.
பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, அங்கே புகைப்படம் எடுத்து, அதை சுவரொட்டிகளாக தமிழகமெங்கும் ஒட்டி, அதை வைத்து சட்டசபைத் தேர்தலில் ஆதாயம் தேடலாம் என்று திட்டமிட்டிருந்த தொல்.திருமாவளவனுக்கு, இது பெரும் பின்னடைவு என்று கருதப் படுகிறது.

sff_bmp
ஈழ ஆதரவாளர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்துக் கொண்டு, தமிழனின் மானத்தையும்,  தலித்துகளின் மானத்தையும்,  அந்தோனியோ மொய்னோவின் காலடியில் அடகு வைத்த திருமாவளவனுக்கு, தேசியத் தலைவரின் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எந்த உரிமையும் இல்லை, அவரை இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பியது சரியே என்று தெரிவித்தனர்.
(திருமாவளவன் ஒரு சுயநலவாதி . எச்சில் இலையை கழுவி புது இலை என்று கூறி வியாபாரம் செய்யும் ஒரு போலி அரசியல்வாதி.திருடர்கள் அரசியலில் இருந்தால் இதுதான் நடக்கும்..

ஈழத் தமிழரை கொன்று குவித்த, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து, காங்கிரஸின் வாக்குகளைப் பெற்று, எம்.பியாக ஆன, திருமாவளவன், ஈழத் தமிழரின் பிணத்தை வைத்து வியாபாரம் நடத்துபவர் திருமாவளவன்.

தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்க ு ஆளாக்கிய இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ் காந்தி மீது விடுதலை சிறுத்தைகளுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்று, கடிதம் எழுதி, சோனியாவின் பாதங்களை கழுவி பிராயசித்தம் தேடியவர் திருமாவளவன்.

இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்ஷேவோடு, விருந்துண்டு, இன்பச் சுற்றுலா சென்று வந்தவர் திருமாவளவன். ஈழத் தமிழர்கள் கை வேறு கால் வேறாக, கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி வீதிகளில் குப்பைகளைப் போல கிடந்த போது, ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கயவன் கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தவர் திருமாவளவன்.

திருமாவளவன், ஏழை தலித்துகள் பெயரைச் சொல்லிக் கொண்டே, சொகுசு வாழ்க்கை வாழும், போலி தலித். தலித் இனத்தின் எதிரி. குலத்தை கெடுக்க வந்த கோடரிக் காம்பு.
திருமாவிடம் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியை ஒரு படித்த சுயநலமில்லாத இளைஞன் தட்டி பறிக்க வேண்டும். இதுதான் சரியான நேரம், இதை செய்யும்போது ஆதரவாளார்கள் அந்த இளைஞன் பின் வருவார்கள்..

திருமாவளவன் இப்போது அறியப்பட்ட தமிழினத்துரோகி
தான் ஒரு சூழ்நிலைக் கைதி என்று அடிக்கடி புலம்புகிறாரே, அது வேறு ஒன்றுமில்லை, பெண்கள் விசயத்தில் திருமாவின் பலவீனம் வீடியோ ஆதாரமாய் தி மு க விடம் உள்ளது. எங்கும் அசைய முடியாது. இன்றைய தலித்துகளுக்க்த ் தேவை நல்ல தலைமை. அதைத் திருமாவளவினிடம் இருந்து ஒரு நல்ல படித்த தலைவன் தட்டி பறிக்க வேண்டும். இந்த பெண் பித்தனிடம் தலித் அரசியல் சிக்கியிருப்பது மிகவும் வருத்தப் பட வேண்டிய விஷயம்

Commentsதேறாத நாடகங்கள்
தினம் நடித்து
திடமில்லா உண்ணா நோன்பு
சிரிப்பு காட்டி
படை கொண்ட சிறுத்தையென்று
புலுடா விட்டு
பாறாத்தை சோனியாவின்
காலில் வீழ்ந்து
அடம்பிடித்து ஐயாவின்
செருப்பும் தூக்கி
ஆடுகிறார் பாடுகிறார்
தெருமா அண்ணன்,

விடுதலைப்புலிகள ின்
தம்பியென்றார்,
விளக்குமாறு சோனியாவை
அன்னையென்றார்,
தெலுங்கு தாத்தா கருணாவை
தெய்வம் என்றார்,
கொலைகாரன் டக்கிளஸின்
காலில்வீழ்ந்து
கும்பிடுறேன் அண்ணா
நீ கோவில் என்றார்,
ராஜபக்க்ஷ கையினிலோர் பரிசுமிட்டு
ராப்பகலாய் உனக்காக உழைப்பேனென்றார் ,

புரியாத புதிரான
தெருமா அண்ணன்
வருங்காலம் தாத்தாவின் வசனம் வாங்கி
அரிய பல நாடகங்கள் நடிப்பார் காணீர்,

திங்கள், 21 பிப்ரவரி, 2011

தேசிய தலைவரின் தாயார் காலமானார்

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமானார்.
இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமாகினார்.
leadersmother

V_Parvathi_amma_02
வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்