புதன், 23 பிப்ரவரி, 2011

பார்வதியம்மாளின் அஸ்தி இனந்தெரியாதோரால் நாசமாக்கப்பட்டுள்ளது

பார்வதியம்மாளின் அஸ்தி நேற்று இரவு இனந்தெரியாதோரால் மிகவும் கேவலமான முறையில் நாசமாக்கப்பட்டுள்ளது. அவரை எரியூட்டிய இடத்தில் நாய்களை சுட்டுப் போட்டதுடன் அவரது அஸ்தியும் தாறுமாறாக அள்ளி வீசப்பட்டிருந்தது.
இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது,
நேற்று மாலை பார்வதியம்மாளின் பூதவுடல் அஞ்சலி நிகழ்வுக்குப்பின்னர் ஊறணி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இரவு 7 மணிக்குப்பின்னர் அங்கு கூடியிருந்த மக்கள் கலைந்து சென்றனர்.
இன்று காலை மயானத்துக்குச் சென்று பார்த்தவேளை அவரது அஸ்தி எரியூட்டப்பட்ட இடத்தில் இருந்து அள்ளி தாறுமாறாக வீசப்பட்டிருந்தது.
அத்துடன் மூன்று நாய்கள் சுடப்பட்டு அரைகுறையாக எரிக்கப்பட்ட நிலையில் அவரது அஸ்தியுடன் போடப்பட்டும் இருந்தது.
அதேவேளை, நேற்று மாலை மயானத்திற்கு வந்த சிலர் இறுதிக் கிரியைகளை நடத்திய ஐயர் யார்? என சிங்களத்தில் மிரட்டும் தொனியில் விசாரித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக