tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
tamil லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 மார்ச், 2011

முவம்மர் கடாபியும் இலத்தீனமெரிக்கப் புரட்சியாளர்களும்

முவம்பர் கடாபியை நேரடியிலாக ஆதரித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் நிகரகுவா சான்டினிஸ்டாப் புரட்சியாளரான டேனியல் ஒர்ட்டேகா.
டேனியல் ஒர்ட்டேகா நிகரகுவாவை ஆண்ட சமோசா எனும் சர்வாதிகாரியை எதிர்த்து எழுந்த மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கியவர். தேர்தலில் ஒரு முறை தோற்கடிக்கப்பட்டு மறுமுறை அதே மக்களின் பெருவாரியான வாக்குகளால் மீளவும் நிகரகுவாவை ஆண்டு வருபவர் டேனியல் ஒர்ட்டேகா.
லிபியா, அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடு எனவும், அமெரிக்கா லிபியாவின் எண்ணெய் வளங்களை அபகரிக்கத் திட்டமிட்டிருக்கிறது எனவும், லிபியாவின் மீதான வரப்போகிற அமெரிக்க ஆக்கிரமிப்பைக் கண்டிக்க வேண்டும் எனவும் அறிக்கை வெளியிட்டிருக்கிறார் கியூபப் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ.
அதனோடு முவம்பர் கடாபி தமது மக்களுக்கான பொறுப்பைத் தட்டிக் கழித்துவிட முடியாது எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
காஸ்ட்ரோ எந்தவிதத்திலும் கடாபியை நேரடியாக ஆதரிக்கவில்லை என்றாலும், அவர் லிபிய மக்கள் எழுச்சி குறித்து எதுவும் பேசவில்லை என்பது மிகமிகத் துரதிரஷ்டவசமானது. பிடல் காஸ்ட்ரோ 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கியூபாவை ஆண்ட பாடிஸ்ட்டா எனும் சர்வாதிகாரியை எதிர்த்து, மக்கள் எழுச்சிக்கு அல்ல, கெரில்லா யுத்தத்திற்குத் தலைமையேற்றவர்.
வெனிசுலாவின் புரட்சியாளரான சேவாஸ் ‘கடாபி உள்நாட்டு யுத்தத்தை எதிர்கொண்டிருக்கிறார், லிபிய சுதந்திரம் நீடூழி வாழ்க’ எனத் தெரிவித்திருக்கிறார்.
உலகின் தெற்கு நாடுகளின் பிரச்சினையை தெற்கு நாட்டவரே தீர்த்துக் கொள்கிறோம் என்பது அவரது கருத்தியல். அதனடிப்படையில் அமெரிக்க-மேற்கத்திய அதிகாரத்துக்கு எதிராக லிபியப் பிரச்சினையை சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்வோம் என உலக நாடுகளுக்கு அவர் அறைகூவல் விடுத்திருக்கிறார்.
லிபியாவும் அமெரிக்க ஏகாதிபத்தியமும் குறித்துத்தான் சேவாஸ் பேசுகிறாரேயல்லாது, அவர் லிபிய மக்களின் எழுச்சி குறித்து எதுவும் பேசுவதில்லை. வெனிசுலாவில் மக்கள் எழுச்சிக்குத் தலைமை தாங்கிய சேவாஸ், இருமுறை அதே மக்களின் பெருவாரியான வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவிக்கு வந்தவர்.
லிபியாவில் நடப்பது இன்று நடப்பது என்ன?
மத்தியக் கிழக்கின் மக்கள் எழுச்சிகளின் ஒரு பகுதியாகவும் தொடர்ச்சியாகவும்தான் லிபியாவில் மக்கள் எழுச்சி எழுந்திருக்கிறது.
முபாராக்,பென் அலி போன்றுதான் லிபியாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, தனது இரும்புக்கர அதிகாரத்தினால் பதவி வகித்து வருகிறார் கடாபி. மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளை அதனது முரண்கள் மற்றும் பலவீனங்களோடும் ஆதரித்திருக்கிறார்கள் சமிர் அமின் மற்றும் தாரிக் அலி போன்ற மார்க்சியர்கள்.
இந்த எழுச்சிகளுக்கு மார்க்சியர்கள் தலைமைதாங்க வில்லை, ஆயினும் இந்த மக்கள் எழுச்சிகளை அவர்கள் ஆதரித்து நிற்கிறார்கள். தாமதமாகவேனும் திரட்டப்பட்ட தொழிலாளிகளும் இந்த மக்கள் எழுச்சிகளுக்கு ஆதரவாகவே நிற்கிறார்கள்.
லிபியாவில் இன்று ஏற்பட்டிருப்பது மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகளின் ஒரு பகுதிதான். அதனது சர்வாதிகாரிகளுக்கும் மன்னராட்சிகளுக்கும் ராணுவ சர்வாதிகாரிகளுக்கும் எதிரானதுதான் இந்த மக்களது எழுச்சி.
மக்கள் எழுச்சிகளின் மூலம் ஆட்சிகளுக்கு வந்த சேவாசுக்கும், ஒர்ட்டேகாவுக்கும் குறைந்தபட்சம் இந்த மக்கள் எழுச்சிகளை ஏன் பரிவாகப் பார்க்க முடியவில்லை?
அந்த மக்களின் எழுச்சிகளின் முரண்களோடும் பலவீனங்களோடும் கூட ஏன் அதனது குணாம்சத்தை அளவிட அவர்கள் தயாராகவில்லை? இந்த மக்கள் எழுச்சிபற்றிப் பேசுகிற நிலைமையில், சர்வாதிகாரியான பாடிஸ்டாவை எதிர்த்துப் போராடிய பிடல் காஸ்ட்ரோ ஏன் மனம் கொள்ளவில்லை?
அவர்களால் ஒரே ஒரு காரணம்தான் சொல்ல முடிகிறது.
கடாபி ஏகாதிபத்திய எதிர்ப்பாளர். ஏகாதிபத்தியம் எண்ணெய்வளத்தின் மீது ஆதிக்கம் கொள்வதற்காக இந்தப் பிரச்சினையைப் ‘பாவிக்க’ப் பார்க்கிறது.
முக்கியமான சில கேள்விகளை அவர்கள் தமக்குத்தானே கேட்டுக் கொள்ளவில்லை.
இந்த மக்கள் எழுச்சி ஏகாதிபத்தியத்திற்கு ஆதரவான எழுச்சியா? இந்த மக்கள் எழுச்சியை ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் தலைமை தாங்குகிறார்களா? அல்லது இதுவரையிலும் கடாபியினால் கொல்லப்பட்ட 2000 வெகுமக்களும் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் என்பதனால்தான் கடாபியினால் விமானக் குண்டுவீச்சினால் கொல்லப்பட்டார்களா?
‘எமக்கு எந்தவிதமான வெளிநாட்டு உதவிகளும் தேவையில்லை, வெளிநாட்டுத் தலையீட்டையும் நாங்கள் விரும்பவில்லை’ என்று சொல்லியிருக்கிறார்கள் லிபியாவின் இரண்டாவது நகரான பெஞ்சாய் நகரின் கிளர்ச்சியாளர்களான இடைக்கால நிர்வாகத்தினர்.
எனில், மக்கள் மீதான தாக்குதலை நிறுத்திவிட்டு, அந்தக் கிளர்ச்சியாளர்களை ஆயுதமுனையில் அடக்குவதை நிறுத்திவிட்டு, ஒரு சமாதான அரசியல் தீர்வுக்கு ஏன் கடாபி இணங்கிவரக் கூடாது? அந்தச் சமாதான முயற்சிக்கு - கிளர்ச்சியாளர்களுக்கும்; கடாபிக்கும் இடையிலான அப்படியான இணக்கத்திற்கு காஸ்ட்ரேவும், ஒர்ட்டேகாவும், சேவாசும் முயற்சி செய்யலாமே?
அதைவிட்டுவிட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் 40 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியிலிருக்கும் கடாபியின் அதிகாரத்தைத் தக்க வைக்கவேண்டும் என்கிற ரீதியிலும், கடாபிக்கு அமெரிக்க ஆபத்து எனப்பேசுவதிலும் என்னவிதமான தார்மீக அல்லது புரட்சிகர அறம் இருக்க இயலும்?
அனைத்துக்கும் மேலாகக் கேட்கவேண்டிய பிறிதொரு கேள்வியும் இருக்கிறது.
கடாபி கடந்த பத்து ஆண்டுகளாக ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகத்தான் இருக்கிறாரா? அமெரிக்க-மேற்கத்திய நிறுவனங்களுடன் அவர் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற-எண்ணெய் நிறுவனங்களை மேற்குக்குத் தாரைவார்க்கிற அவரது கொள்கைக்கு என்ன பெயர்? அல்லது பயங்கரவாதத்திற்கு எதிரான அமெரிக்காவின் யுத்தத்தில் அவர் அவர்களது செல்லப் பிள்ளையாக இருக்கிறாரே அதற்கு என்ன பெயர்?
இந்தக் கேள்விகள் அனைத்திற்கும் இவர்களிடம் சொல்வதற்கு ஒரே பதில்தான் இருக்கிறது.
அவர் எம்முடைய நண்பராக இருந்தவர். ஓரு காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளராக இருந்தவர். எம்முடைய அனுபவத்தில் அமெரிக்காதான் எமக்குப் பொது எதிரி. ஆகவே எல்லாப் பிரச்சினையிலும், அமெரிக்காவுக்கும் மேற்கத்திய அதிகாரத்துக்கும் எதிர்ப்புத் தெரிவிப்பதுதான் எமது கொள்கை. ஓரு நாட்டை ஆளுகிறவர், சர்வாதிகாரியாக இருந்தாலும், மக்களது விருப்புக்கு எதிராக நூறாண்டுகாலம் எதேச்சாதிகாரியாக ஆட்சி செய்தாலும், கொடுங்கோல் மன்னராக இருந்தாலும், இனக்கொலை செய்பவராக இருந்தாலும், அவர்கள் தமது சொந்த மக்களையே கொன்றொழித்தாலும், அவர்களை நாங்கள் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கடமையின் பெயரால் ஆதரிப்போம்!
இந்தப் பதிலில் ஒரே ஒரு விடயம் மட்டுமே பொருட்படுத்தத்தக்கதாக இருக்கும்.
இலத்தீனமெரிக்க நாடுகளின் பொது அனுபவத்தில், அவர்தம் சொந்த அனுபவத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் என்பது அவர்களுக்குப் பிசாசு. அமெரிக்க ஏகாதிபத்தியமே வரலாற்று ரீதியில் இலத்தீனமெரிக்க நாடுகளின் கொடுங்கோலர்களுக்கு, சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்து வந்திருக்கிறது. அதற்கு எதிராகவே அங்கு மக்கள் எழுச்சிகள் தோன்றின. காஸ்ட்ரோவின் தலைமையிலும், ஒர்ட்டேகாவின் தலைமையிலும், சேவாசின் தலைமையிலும் அவர்கள் மாற்றத்தைக் கொண்டுவந்தார்கள். அதன்பொருட்டே அவர்கள் தென்னமெரிக்காவில் அமெரிக்க அதிகாரத்தைத் தகர்க்கிற மாதிரியிலான கூட்டமைப்பையும் சாதித்திருக்கிறார்கள்.
என்றாலும், இந்த அனுபவத்தை உலகின் எல்லா நாடுகளுக்கும் பிரதேசங்களுக்கும் இன்று பொருத்தமுடியாது.
எந்தெந்த நாடுகளில் எது எது முன்னுரிமை என்பதனை அந்தந்த நாட்டு மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இலத்தீனமெரிக்க நாடுகள் தமது அனுபவத்தைப் பொதுமைப்படுத்தியதும், ஆசிய நாடுகளின் இடதுசாரிகள் தமது கடந்தகால அனுபவங்களைப் பொதுமைப்படுத்தியதும்தான் ஈழப்பிரச்சினையில், நடைமுறையில், அவர்களை இனக்கொலைக்கு உள்ளான தமிழ்மக்கள் எதிர்ப்பு நிலைபாட்டுக்கும் மகிந்த ராஜபக்சே ஆதரவு நிலைபாட்டுக்கும் அவர்களைக் கொண்டு சேர்த்தது.
துரதிருஷ்டவசமாக ராஜபக்சே அமெரிக்க-மேற்கத்திய-சீன-இந்திய ஆதரவைக் கோரிப்பெறுகிற ஒரு ஆட்சியாளர்தான் என்பதனை அவர்கள் உணரவில்லை. அதுமட்டுமன்று ஒரு மூன்றாம் உலக நாட்டுக்கு எதிராக அமெரிக்காவும்-மேற்கத்தியர்களும் வலியுறுத்துகிற மனித உரிமை எனும் அஸ்திரத்தை நாங்கள் ஒப்புவதா எனும் அடிப்படையில், சுயாதீனமான மனித உரிமை அரசியலையும் அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.
உலகின் எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் எழுகிற எதிர்ப்பு அரசியல் ஏகாதிபத்திய எதிர்ப்பைத் தமது உடனடி நோக்காகக் கொண்டிருப்பதில்லை. இன்றைய நிலையில் அது திட்டவட்டமான இடதுசாரித் திசையிலான அரசியலைத் தேர்ந்து கொள்வதும் சாத்தியமில்லை.
பின்-சோவியத் பின்-செஞ்சீன நிலைமையில் சோசலிச மறுகட்டமைப்புக்கான இடைக்காலகட்டமே இன்றைய காலம்.
மேலாக, ஒடுக்குமறையின் தன்மையே அவர்களது எதிர்ப்பின் தன்மையையும் தீர்மானிக்கிறது. அவ்வகையில் ஏற்பட்டிருக்கும் மத்தியக் கிழக்கு எழுச்சி, எகிப்து முதல் லிபியா வரையிலான எழுச்சி அதனது அடிப்படையில் முடிமன்னராட்சிகள், பல பத்தாண்டுகளாக வாரிசுகளை வளர்த்துவரும் எதேச்சாதிகாரிளுக்கு எதிரான மக்களாட்சி நோக்கிய எழுச்சிகள்தான். இதனை அமெரிக்க ஏகாதிபத்தியம் ‘பாவித்து’க் கொள்ளும் என்பதற்காக இந்த எழுச்சிகளை அங்கீகரிக்க மறுப்பதோ, அது பற்றிப் பேசாமல் தவிர்ப்பதோ இடதுசாரி அரசியல் ஆகாது.
எகிப்து-துனீசியா-லிபியா எனத் தொடரும் இந்த எழுச்சி எதேச்சாதிகாரிகளை பதவியிலிருந்து அகற்றுவதோடு மட்டும் நின்றுவிடாது. இந்த மக்களின் எழுச்சிகள் மக்களாட்சிக்கும் தேசிய இறையான்மைக்கும் ஆனது எனில், இது ஏகாதிபத்திய ஆக்கிரமைப்பை எதிர்த்;துப் போராடுவதனின்றும் தவிர்க்கவியலாதது.
இன்றைய கேள்வி இதுதான் : ஏகாதிபத்தியம் ‘பாவித்து’க் கொள்ளும் என்பதன் அடிப்படையில் சொந்த மக்களைக் கொல்கிற சர்வாதிகாரியை நாம் ஆதரிப்பதா? அல்லது உடனடியில் பிரதிநிதித்துவ ஆட்சி நோக்கிய, சர்வாதிகாரிகளுக்கு எதிரான மக்களாட்சி அமைப்புக்கள், அதன்பின்பான தவிர்க்கவியலாத தேசிய இறையான்மைக்கான போராட்டம் - அது ஏகாதிபத்திய எதிர்ப்பாகவே இருக்கும் - என்பதனை நாம் ஆதரிப்பதா?
எமது தேர்வு இரண்டாவதாகவே இருக்க வேண்டும்.

வியாழன், 24 பிப்ரவரி, 2011

சோனியா அம்மாவுக்கு பயந்து பார்வதி அம்மாவை மறந்த தமிழக வீரத் தமிழர்கள்.



ஊறணிச்சுடலை நாய்க்கு ஒரு பிடி சோறு போட்ட ஈழத்து பிச்சைக்காரன் தமிழக தலைவர்களுக்கு எழுதும் மடல்..
பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கேப்டன் பிரபாகரன் மன்னிக்க கேப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை.
பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்…
இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா..
ஈழத் தமிழனுக்காக கேப்டன் வந்துவிட்டார் என்று முழங்கினார்கள் அவருடைய கட்சித் தொண்டர்கள்.
இந்த மூன்று பேரும் பார்வதி அம்மா மரணித்தபோது அவருக்கு மரியாதைக்காகவேனும் ஓர் அஞ்சலி செலுத்தவி;லை..
இந்தத் தலைவர்களுடைய பணத்தில் வரும் தொலைக்காட்சிகளின் மட்டைகளை எடுத்து மகிழ்வோடு பார்ப்பவன் ஈழத் தமிழன். அந்த மானங்கெட்டவன் எடுக்கும் மட்டைகளுக்காவது ஒரு மரியாதை கொடுத்திருக்கலாம் இந்த பிழைப்புவாத ஊடகங்கள்.. அதுவும் இல்லை..
ஏன்..?
வரும் தேர்தலில் காங்கிரஸ் திமுக – கூட்டு இன்னமும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினால் காங்கிரஸ் தாய் சோனியாவின் பார்வையில் எதிரணியாகிவிடுவோம் என்ற பயத்தில் இந்த மூன்று தலைவர்களும் மௌனம் காத்திருக்கலாம்.
காங்கிரசுடன் உறவென்றால் ஈழத் தமிழனை விற்க மூவரும் தயார்தான்.
அட சும்மா கெட புள்ளே…!
தேர்தல் வரும்போது ஈழத் தமிழா என்று முழங்கினால் போதும் அவன் காதில் பூ சுற்றிவிடலாம் என்று கருதுகிறார்கள். ஈழம் என்றுவிட்டால் எல்லாவற்றையும் மறந்து, கோமாளிகள் தாயே தெய்வமே என்று ஜெயலலிதாவுக்கு கவிபாட காத்துக் கிடப்பது அவர்களுக்கு தெரியும்
அசினை படத்தில் கதாநாயகியாக போட்ட காவலன் படம் ஓடி முடிக்கும்வரை புலிப்பால் குடிக்காத நமது இளைய தளபதி விஜய் நேற்று நாகபட்டணத்தில் புலிப்பால் குடித்திருக்கிறார். அந்தப் பாலில் ஒரு மிடறை அசினுக்கு பருக்கியிருந்தால் காவலன் கதறிக் கொண்டு ஓடியிருக்குமே…
திருமாவளவனை சிங்கள நாட்டின் விமான நிலையம் திருப்பி அனுப்பியதற்கு பதிலடியாக டக்ளசை கைது செய்ய வேண்டும் என்றுள்ளார் டாக்டர் ஐயா.. டக்களஸ் மீது சுமத்தப்பட்டது கொலைக் குற்றம், திருமாவளவன் செய்த குற்றம் என்ன ? சூளை மேட்டில் செத்தவனைப் பற்றி யாருக்கு என்ன கவலை..
சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்படும் ஈழத் தமிழருக்காக குரல் கொடுங்கள் என்று திருமாவளவனிடம் கேட்டவர் பலர். அவர் கலைஞருக்கு பயந்து அடக்கி வாசித்தார். இன்று கொழும்பு விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவுடன் அடக்க முடியாத கோபம் அவருக்கு வந்துள்ளது. ஐயா.. பண்டாரநாயக்கா விமான நிலையமும் சிங்கார சென்னை விமான நிலையமும் மானமுள்ள ஈழத் தமிழனுக்கு ஒன்றுதான். மானமுள்ள ஈழத் தமிழனாக இந்த இரண்டு விமான நிலையங்களுக்குள்ளும் போய்ப்பாருங்கள்.
அன்று..
1984ம் ஆண்டு வல்வையில் இராணுவம் சுட்டு ஒரு வயோதிபர் தெருவில் குற்றுயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் உயிர் பிரியும் தறுவாயில் எங்கள் உடன் பிறப்பு தலைவர். மு. கருணாநிதி வருவார் என்று கூறிவிட்டு நம்பிக்கையோடு இறந்தார். அந்த ஆத்மா உங்களை எல்லாம் கண்ணீருடன் பார்க்கிறதையா.. !
இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு ஒரு புதிய சந்தேகம் வருகிறது..
பார்வதி அம்மாவுடன் செத்துக்கிடக்கும் நாய்களும் எங்கே உங்களுடைய வீர முழக்கங்களை கேட்டுத்தான் தவறுதலாகக் குரைத்துவிட்டனவோ என்பதுதான் அந்த அச்சம் ஐயா…
ஈழத்து பிச்சைக்காரன்.. 23.02.2011

புலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியகமாக மாற்றிப் பிழைக்கும் சிங்களம்.

அனைத்து வசதிகளோடும், தொழில்நுட்பத்தோடும் மற்றும் பல நாடுகளின் உதவிகளைப் பெற்றுவந்தும், இலங்கை அரசானது ஆயுதங்களையும் ரோந்துக் கப்பல்களையும் வெளிநாடுகளிடமே வாங்கி வந்தது. ஆனால் விடுதலைப் புலிகளோ, தம்மிடம் இருந்த வளங்களைக் கொண்டு, சிறிய இடப்பரப்பில் இருந்தாலும் குறுகிய தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு தமக்குத் தேவையான பல ஆயுதங்களை, கப்பல்களை, ஏன் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கூட வடிவமைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது படகுகளைத் தயாரித்து, பல தாக்குதல்களையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

ஆனால் சிங்களமோ அதனைக்காட்டி பிழைப்பு நடத்துகிறது. வெளிநாட்டில் இருந்து, கொழும்பிற்கு வரும் பல இலங்கை உயரதிகாரிகளின் உறவினர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் வன்னிக்குப் போய் புலிகளின் இடங்களைப் பார்க்க இவ்வளவு தொகை. அதி உயர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இவ்வளவு தொகை என அறவிடப்பட்டு, பின்னர் அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று, புலிகளின் பாசறைகளையும், அவர்கள் தயாரித்த ஆயுதங்களையும் காட்டி, காசு வாங்குகிறது சிங்களம். இதைவிட வெட்கக்கேடான செயல் உள்ளதா ?

1990 களில் பசிலன் 2000 என்னும் பாரிய ஷெல் எறிகணையைக் கண்டு பிடித்தனர் புலிகள். அதன் அகோரம் தாங்காமல் தனது மனைவியோடு தப்பி ஓடினார் கோட்டைக்குப் பொறுப்பாக இருந்த அப்போதைய இராணுவ அதிகாரி. பின்னர் "அருன்" எனப்படும் துப்பாக்கியில் பொருத்தி செலுத்தும் சிறியவகை ஏவுகணைகள் தொடக்கம், பிந்திய காலத்தில், கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இவர்கள் வடிவமைத்தனர். இறுதியாக போர் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில், புலிகளின் கப்பல் கட்டும் தொழிற்சாலை ஒன்றை இராணுவம் கைப்பற்றியவேளை, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அங்கே காணப்பட்ட அனைத்து கப்பல்களும் புலிகளால் வடிவமைக்கப்பட்டவை என்பதே உண்மையாகும்.

அவர்கள் பாவித்த தொழில்நுட்பம், மற்றும் நேர்த்தியான கட்டுமாணம் என்பன வியப்பில் ஆழ்தியது. அதனால் அவர்கள் அத் தொழில்சாலையை, பாதுகாத்து, ஒரு அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். அங்கே புலிகளால் கட்டப்பட்ட தாக்குதல் படகுகள், தாக்குதல் நீர்மூழ்கிப் படகுகள், உட்பட, புலிகளால் பாவிக்கப்பட்ட பல கனரக ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் பாவித்த கைத்துப்பாக்கிளும் இதில் அடங்கும். அங்கே தரையில் இருந்து கப்பலைத் தாக்க கடலுக்கு அடியால் அனுப்பப்படும் ஏவுகணை(ரோப்பிடோக்கள்) களும் அடங்கும். சில வகை ரோப்பிடோக்களை புலிகளே வடிவமைத்தும் உள்ளனர்.

பல சிங்கள மக்களுக்கு அதனைக் காட்டி, தமது பெருமைகளை பிதற்றிக்கொள்ள சிங்கள இராணுவம் இதனைப் பயன்படுத்துகிறது. சாதாரண மக்களால் இப் பகுதிகளுக்குச் செல்லமுடியாது. இராணுவ உயரதிகாரியின் குடும்பஸ்தர்கள், வெளிநாட்டு தூதுவர்களின் குடும்பத்தவர் என உயர் பீடத்தில் உள்ளவர்களுக்கே இராணுவம், காசைப் பெற்றுக்கொண்டு இதனைக் காட்டி பெரும் பணம் ஈட்டிவருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதனால் திரட்டப்படும் பணத்தின் பெரும்பங்கு யாருக்குச் செல்கிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள்.

























அனுராதபுரம் சிறைச்சாலையில் புலிகள் மீது சிங்களக் காடையர் தாக்குதல் (பட இணைப்பு)

அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலையில் சிங்கள காடையர்கள், புலிகளை தடுத்துவைத்துள்ள பகுதிக்குள் அத்துமீற முயன்றதால் இன்று காலை கலவரம் வெடித்துள்ளது. கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள் இருக்கும் சிறைச்சாலைக் கதவுகளை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்நுழைய முனைந்ததால் பெரும் பதற்றம் நிலவுவதாக அறியப்படுகிறது. சிங்கள இராணுவத்தினர் வேண்டுமென்றே இவ்வாறு ஒரு கலவரத்தை உருவாக்கி, எஞ்சியுள்ள போராளிகளைச் சுட்டுக் கொல்லும் நோக்கில் செயல்பட்டுவருவதாக கைதி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை இக் கலவரம் இடம் பெற்றவேளை இராணுவத்தினர் சுட்டதில் 6 சிங்களவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், தாங்கள் தமது அறைகளை உள்தாழ்ப்பாள் இட்டு மூடிவிட்டு, அச்சத்தோடு உள்ளதாகவும் கைதி ஒருவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தினரே சமையல் அறையை எரித்ததால் சமைக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், வெறும் நீரை மட்டும் குடித்துக் கொண்டு தாம் இருப்பதாவும் சில போராளிகள் கூறியுள்ளனர். சில நாட்களாகவே இராணுவத்தினர் புலிகள் இருக்கும் அறைகளைச் சோதனையிட்டும், மண்ணுக்குள் எதோ புதைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பல தேடுதல்களை மேற்கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இன்று காலை இராணுவத்தினர் துப்பாக்கியால் சரமாரியாக மற்றும் கண்மூடித்தனமாகவும் சுட்டுள்ளனர். இதனால் சிறைச்சாலைச் சுவர் மற்றும் கைதிகள் தங்கும் அறை என்பனவும் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்ப்ட்டு காணப்படுவதாகவும், எங்களுக்கு எந் நேரமும் எதுவும் நடக்கலாம் என அக்கைதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

கலவரத்தைத் தூண்டி, அதன் மூலம் தமது குறியில் உள்ளவர்களை சுட்டுக் கொல்லும் நோக்கில் இராணுவம், இவ்வாறு செய்வதாக போராளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சர்வதேசம் இதில் தலையிட்டு தம்மை காப்பாற்றவேண்டும் எனவும் அவர்கள் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச சமூகம் பாரா முகமாக இருக்குமாயில், இலங்கை இராணுவத்தினர் கலவரம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து போராளிகளையும் சுட்டே கொண்றுவிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.





புதன், 23 பிப்ரவரி, 2011

நாம் தமிழர் முத்துக்குமார்' கொலையின் பின்னணி என்ன..? ஏன் கொலை செய்யப்பட்டார்..?!

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப.முத்துக்குமார் கடந்த செவ்வாய்க்கிழமை 15.02.2011 இரவு சுமார் 10.15 மணிக்கு புதுக்கோட்டை நகரின் மைய்யப் பகுதியான அண்ணா சிலை அருகில் உள்ள தாஜ் என்ற பழங்கள் விற்கும் கடையில், பழங்கள் வாங்கிக்கொண்டு இருக்கையில் பின்புறமாக வந்த மூன்று பேர் கொண்ட கும்பலில் வயிற்றில் கத்தியை சொருகுகிறார் ஒருவர்.
நிலைமை என்னவென்று அறிவதற்குள் மற்றொருவர் பின்புற தலையை நோக்கி அரிவாளால் வெட்டுகிறார். இதை சற்றும் எதிர்பாராத அவருடைய வக்கீல் தடுக்க முற்படும் போது அவரின் கையில் வெட்டு விழுகிறது. முகத்திலும் வெட்டு விழுகிறது. சுப.முத்துக்குமார் எந்த வித சுயநினைவும் இன்றி பழக்கடையின் மைய்யப் பகுதியில் குடல் சரிய விழுந்து உயிரை விடுகிறார். கடைக்காரர்கள் நிலை என்னவென்று அறிவதற்குள் இந்த கொலைகார கும்பல் காரில் எறி தப்பி விடுகிறது. சுப.முத்துக்குமார் வக்கீல் கூச்சலிடுகிறார். போலீஸ் வருகிறது. முத்துக்குமாரை வழியனுப்பிய நண்பர்கள் விரைகின்றனர். முத்துக்குமார் படுகொலை கிட்டத்தட்ட அன்று இரவு சுமார் ஒரு மணிக்குள் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது.

புதுக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்படுகிறது அவரின் நண்பர் வக்கீல் சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறார். தமிழகமெங்கும் இருக்கும் முத்துக்குமாரின் நண்பர்கள், அரசியல் தோழர்கள், மாற்று கட்சியினர் என்று அனைவரும் மீளாத்துயரில் ஆள்கொள்கின்றனர். அதிகாலையில் இருந்தே அரசு மருத்துவமனை சுற்றிலும் பெருந்திரளான மக்கள் கூட்டம். புதுக்கோட்டை பாவாணன் அவர்கள் விரைகிறார். நாம் தமிழர் மாவட்ட நிர்வாகிகள், செயலர்கள், அமைப்பாளர்கள் என்று அனைவரும் குவிந்து விட்டனர். அரசு மருத்துவமனையில். போஸ்ட் மார்டம் செய்யப்பட்டு முத்துக்குமார் உடலை நாம் தமிழர் இயக்கத்தினர் பெறுகின்றனர். முத்துக்குமார் உடல் சுமந்த வாகனம் மெல்ல ஊர்ந்து செல்ல பின்வரிசையாக சுமார் 100 - க்கும் மேற்பட்ட கார்கள் செல்ல, புதுக்கோட்டை - பேராவூரணி - பட்டுக்கோட்டை சாலையில் உள்ள வடகாடு என்ற பெரும் கிராமத்தை நோக்கி கிட்டத்தட்ட ஒரு மூன்று மணி நேரம் கார் ஊர்வலமாக செல்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு புதுக்கோட்டை மாவட்டம் திணறியது.

புதன் கிழமை காலையில் செந்தமிழர் சீமான் விரைகிறார். வடகாடு நோக்கி. நாம் தமிழர் நிகழ்சிகள் அனைத்தையும் நன்கு திட்டமிட்டு நடத்தி வரும் நாம் தமிழர் இயக்கத்தினர், இந்த நிகழ்ச்சியை எப்படி நடத்துவது என்று திணறினர். வடகாடு கிராமம் மட்டும் அல்ல, அங்கிருந்த நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் செய்தவறியாது நின்றனர். பின்பு முத்துக்குமார் உடலை அவரின் வீட்டின் முன் அதாவது முத்துக்குமார் மாமனார் கரு.காளிமுத்து வீட்டின் முகப்பில் புதைக்கப்படுகிறார். சீமான் வீரவணக்கம் முழங்க இந்த துயர சம்பவம் கனத்த நெஞ்சுடன் முடிவடைகிறது. நாம் தமிழர் இயக்கத்தினர் அடையும் முக்கிய சோக, துயர நிகழ்ச்சி இது.

சில மாதங்களுக்கு முன் இதே வடகாடு கிராமத்தில் முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர் வெங்கடாசலம் என்பவர் கொலை செய்யப்படுகிறார் அவரது சொந்த வீட்டிலேயே. இவரின் நெருங்கிய உறவினர் தான் கரு.காளிமுத்து. இவரின் மகளை தான் முத்துக்குமார் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் திருமணம் முடித்தார். முத்துக்குமார் மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன் " இவரைப் பற்றி தெரியுமா " என்று துண்டு பிரசுரங்களை ஆங்காங்கே வீசி செல்கின்றனர் ஒரு சிறு கும்பல் இரவில். அந்த பிரசுரத்தின் துண்டு நோட்டீசில் முத்துக்குமார் மீது உள்ள வழக்குகள், வீரப்பனுடன் உள்ள தொடர்புகள், தடை செய்யப்பட்ட புலிகளுக்கு மருந்துகள் வாங்கிய விபரங்களை எல்லாம் தெரிவித்து இறுதியில், கொலையுண்ட வெங்கடாசலத்தை ஏன் இவர் கொலை செய்திருக்கக் கூடாது என்று அரசியல் வகுப்பைப் போல எழுதி இருந்தார்கள். இந்த சிறு பிரசுரத்தை அறிந்த முத்துக்குமார் தனது நண்பர்களை மிக கவனமாக இருக்கச் சொல்லி இருக்கிறார்.

இடையில், முத்துக்குமாரின் மாமனார் கரு,காளிமுத்து, இந்தப் பிரசுரம் குறித்து தான் சந்தேகம் அடையும் இருண்டு மூன்று நபர்களை அடையாளப் படுத்துகிறார் காவல் நிலையத்தில். சிறு பிரசுரம் வெளியிட்ட மூன்றாவது நாளில் முத்துக்குமார் படுகொலை செய்யப்படுகிறார். இந்த துயர சம்பவத்திற்கு என்ன காரணம் என்று முழுதும் நண்பர்களால் அலசி பார்க்க முடிந்தது.காரணங்கள் அரசியல் தவிர வேறு ஒன்றும் இருக்க முடியாது. என்றே பலராலும் பேசிக் கொண்டிருந்ததை அறிய முடிந்தன.



முத்துக்குமார் 89 - ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டு காலம் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்துள்ளார்.பின்பு தமிழகம் வந்து தமிழர் மீட்சிப் படை என்ற ஒரு அமைப்பை பலப்படுத்துகிறார். தமிழீழம் தமிழகம் என்று அரசியல் வேலைகளை செய்கிறார். பின்பு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளியாக சேர்க்கப்படுகிறார். தடா சட்டத்தில் சிறைக்கு செல்கிறார். பின்பு குற்றமற்றவர் என்று விடுதலை செய்யப்படுகிறார். 'மீசை' என்று மரியாதையுடன் அழைக்கப்படும் வீரப்பனோடு சேர்ந்து காட்டிற்கு செல்கிறார். வீரப்பனின் 'வெள்ளி திருப்பூர்' காவல் நிலைய தாக்குதலில் சேர்க்கப்படுகிறார். மீண்டும் கைது செய்யப்பட்டு சிறைக்கு செல்கிறார். 'தமிழ் விடுதலைப் படை' மாறனுடன் இணைந்து தமிழக உணர்வாளர்களை ஒன்றிணைக்கும் வேலைகளை செய்து கொண்டு இருந்தார். கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட நிலையில், வீரப்பன் வைத்த நிபந்தனைகளில் ஒன்று முத்துக்குமார் விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற ஒன்றும்.

புலிகளின் யுத்த கால கட்டங்களில் மருந்துப் பொருட்களை மணல் மேடு பகுதியில் இருந்து, இரவு வரை காத்திருந்து படகு கரைக்கு வராததால் விடியற்காலை பொது மக்கள் தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல் துறை முத்துக்குமாரை கைது செய்து இந்த தடவை பொடாவில் போட்டார்கள். பின்பு வெளியே வந்த முத்துக்குமார் இந்திய இலங்கை விடுதலைப் புலிகளின் இறுதி கட்ட யுத்தங்களில் படுகாயம் அடைந்த பொது மக்களுக்கு ரத்தம் மற்றும் மருந்து பொருட்கள் அனுப்புவார் என்று அல்லது அனுப்பினார் என்று கைது செய்து வழமை போல சிறையில் தள்ளியது. எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து அதன் ஒருங்கிணைப்பாளராக சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தார். முந்தா நாள் வரைக்கும்.

முத்துக்குமாரின் செயற்பாடுகளை மட்டும் அல்ல. நாம் தமிழர் இயக்கத்தின் செயற்பாடுகளையும் நிறுத்த வேண்டும். என்ன யோசித்தாலும் காவற் துறைக்கு இந்த பாழாய்ப்போன சட்டங்கள் இடையூறாக இதுகாறும் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர் விழுப்புரம் பகுதியில் நாம் தமிழர் இயக்க பணிகளை நிறுத்துவதற்கு ரயிலில் கல்லுகளைப் போட்டும் இரும்புத் துண்டங்களைப் போட்டும் தமிழ் தீவிரவாதிகள் என்றார்கள். நாம் தமிழர் என்றார்கள். ஒரு பத்துப் பதினைந்து பேர்களை தூக்கிக் கொண்டு சென்றார்கள். படு ரகசியமாக. பின்பு வக்கீல் தோழர்கள் 'ஆட் கொனர்வு' மனுவைப் போட்டு இந்த பாழாய்ப் போன சட்ட இடையூறுகளை ஏற்படுத்தி ஜாபர் சேட்டுக்கும், தமிழக முதல்வருக்கும் நெருக்கடியை ஏற்படுத்தினார்கள். பிறகு ஏன் இது போன்று செய்கிறீர்கள் என்றதற்கு முதல்வர் அவர்களின் நெருங்கிய தமிழ் அறிஞர் ஒருவர் இப்படி சொன்னார். " எல்லாம் இந்த ஜாபர் சேட் அவர்களின் வேலை என்று " முதல்வருக்கு தெரியாமல் இந்த உளவுத் துறை அதிகாரி நடவடிக்கை எடுத்து விட்டார் என்று புதிய விளக்கத்தை கொடுத்தனர்.

பிறகு என்ன செய்வது..? எப்படி நாம் தமிழர் இயக்கத்தை முடக்குவது..? நன்கு யோசித்து ஒரு செய்தியை கசிய விட்டார்கள் சில வாரங்களுக்கு முன்..! சீமான் அவர்களை கொலை செய்வதற்கு ஒரு டீம் சிங்கள உளவு மற்றும் இந்திய உளவு அமைப்புகளால் ட்ரெயின் செய்து ஆட்களை தமிழகத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்று. எனவே சீமான் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்று சொன்னார்கள். சீமான் அவர்கள் சொன்னார்கள் 'எனது மண்ணில் இறப்பதை பெருமையாக கொள்வேன்' என்றார். போலி மோதலில் கொல்ல முடியாது. அங்கேயும் சட்ட சிக்கல் வந்து விடுகிறது. மேலும் இந்த போலி மோதலை சீமான் அவர்கள் அரசியலாக்கி விட்டால் மேலும் பெரும் சிக்கலாகி விடும். எனவே தேர்தல் வேறு நெருங்கிக் கொண்டு இருக்கிறது. என்ன செய்யலாம்..? ஏதாவது செய்தே ஆக வேண்டும்..? என்ற நிலைமை இந்திய தமிழக உளவு துறைக்கு, சில அரசியல் கட்சிகளுக்கு இவர்கள் பெரும் முட்களாக உள்ளனர். எல்லாம் தேர்தல் வரைக்கும். பிறகு தான் இருக்கிறதே அடக்குமுறை.



எனவே சீமானை பயமுறுத்தி வைக்க வேண்டும். அரசியல் செயற்பாடுகளை தற்காலிகமாவது தடுத்து நிறுத்த வேண்டும். எனில், என்ன செய்யலாம் என்று கருதி....நாம் தமிழர் இயக்கத்தின் முக்கியமானவராக இருக்கும் இந்த முத்துக்குமாரை பழைய பாணியில், அதாவது கருப்பு வெள்ளை கால சினிமா பாணியில், காவல் துறையே மாற்று வேஷங்களில் புகுந்து ரவுடி வேசங்கள் போட்டு 'போட்டுத் தள்ளி' விட்டால் என்ன என்று, யோசித்து செய்திருக்கலாம் என்று ஒரு தோழர் இறங்க கூட்டத்தில் இருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். இதன் மூலம் வருங்காலங்களில் ஒரு மாற்று சக்தியாக வளர்ந்து விடுவதை தடுத்து நிறுத்தலாம். சீமானை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் இளைஞர்கள் பட்டாளத்தை தடுத்து நிறுத்தலாம்..! எனவே இந்த மாதிரி நடவடிக்கைகளை 'நவீன போலி மோதல்' என்று சொல்லலாமா..? என்று இறங்கக் கூட்டத்திற்கு வந்தவர்கள் பிரித்து மேய்ந்து விட்டார்கள்.

இளம் வயதில் முத்துக்குமார் போன்றவர்கள் பெற்ற அரசியல் போராட்ட அனுபவங்கள் கிடைக்கப் பெற்ற ஒரு சிலரில், இன்று முத்துக்குமார் நீக்கப்பட்டு விட்டார். அரசியல் அனுபவங்கள் அற்ற சினிமா நடிகர்கள் மற்றும் உதிரி அரசியல் கட்சிகள், சாதியக் கட்சிகள், மத கட்சிகள் என்று தமிழகத்தில் வலம் வருகையில், இது போன்ற தமிழ், தமிழ் தேசியம், தமிழ் மக்கள், தமிழர்கள் விடுதலை, தமிழ் நாடு, உலகத் தமிழர்கள் என்று மிக ஆழமான கருத்து உருவாக்கங்களை கொண்டிருக்கும் தமிழ் உணர்வாளர்களின் தலைவர்களாக வர முடியாத சூழலை உருவாக்குவதே திராவிட அரசியல், இந்திய தேசிய அரசியலுக்கு மிக கட்டாயமாக உள்ளது.

இது போன்ற நிலையை உருவாக்க தலைகீழாக முயன்று வருகிறது இந்திய பார்ப்பனிய அரசியல் கூட்டம். எல்லாவற்றையும் மீறி, எல்லா தடைகளையும் கடந்து இன்று தமிழன், உலகத் தமிழன் என்ற தேவை உடனடி நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்று விட்டது என்று கருதலாம் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

நாம் ஒருதாய் பிள்ளைகள். ஒற்றுமையே எமது இனத்தின் விடுதலையை தீர்மானிக்கும்,


2009 வரை ஒரே இலக்கில் புள்ளி விலகாமல் தமிழினத்தின் செய்திகளை மிக ஒற்றுமையாக வெளியிட்ட தமிழ் ஊடகங்கள், இணையங்கள், இன்று கட்டுப்பாடற்று, காட்டாறாக கரை புரண்டு காழ்ப்புணர்வு செய்திகளை கக்குகின்றன. எதை எடுப்பது எதை நிராகரிப்பது என்பது தெரியாமல் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் ஒருகருத்தை உண்டுபண்ணி  தடுமாறுகிறான், இது எங்குபோய் முடியுமோ என்ற ஆதங்கத்தில் பலர் செய்வதறியாது திகைத்துப்போயுள்ளனர்.

எந்த தமிழ் இணயத்தளத்தை திறந்தாலும் மனவருத்தத்தோடு வெளியேறவேண்டிய நிலை, எங்குபார்த்தாலும் போட்டி, நானோ நீயோ என்ற நாய்களை விடக்கேவலமான கடிபாடு, ஒவ்வொருவரும் போராளியென்றும் பொறுப்பாளரென்றும் கட்டுரைகள் எழுதுகின்றனர். ஆனால் அவர்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்தில்தான் பொறுப்பாளராகவும் போராளியாகவும் இருந்ததாகத்தான் எழுதுகின்றனர் அப்போ ஏனிந்த முரண்பாடென்று தெரியவில்லை, ஒன்றரை வருட இடைவெளியில் இப்படியென்றால் ஒரு ஐந்து வருடங்கள் சென்றால் இந்திய தமிழ்நாட்டின் அரசியலையும் வென்றுவிடும் அளவுக்கு குத்து வெட்டில் வந்து முடியுமோ என்ற அச்சம் தோன்றுகிறது.

ஒருவர் கூறுகிறார் முள்ளிவாய்க்கால் இறுதிப்பொழுதில் வன்னியில் இருந்தவர் எப்படி விமானநிலையம் கடந்து வந்துசேர்ந்தார். அப்படியென்றால் இராணுவ உதவியுடன்தான் வெளியேறியிருக்கவேண்டும். இவர் உளவுபார்க்க வந்திருக்கிறார் என்கிறார, குற்றஞ்சாட்டுபவர் எப்படி வந்துசேர்ந்தார் என்பதை நோக்கினால் அவரும் உளவாளி என்றுதானே இன்னொருவர் சந்தேகப்படுவார். தீர விசாரிக்காமல் ஒருவரை குற்றஞ்சொல்லுவதை முதலில் நிறுத்தவேண்டும். உண்மையில் உளவாளியானால் நிச்சியம் கவனமெடுக்க வேண்டுமென்பது மறுப்பதற்கில்லை.

ஒவ்வொருவரும் தமது தனிப்பட்ட கோபதாபங்களை பொதுவில் இழுத்துவிடுவது தமிழ்ச்சமூகத்தையே குப்பைக்கும்பியாக்கிவிடும். ஒருவரை சந்தேகப்பட்டால் அதில் உறுதியான நியாயம் இருக்கவேண்டும். அல்லது இரகசியமாக அமைப்புரீதியாக புலனாய்வு செய்து உறுதிப்படுத்தியபின் குற்றச்சாட்டை ஆதாரத்துடன் வெளியிடலாம். அனுமானத்தையும் காழ்ப்புணர்வையும் வைத்துக்கொண்டு வசைபாடுவது "வசைபாடுபவரையே சந்தேகிக்க வைக்கும்",விடுதலைப்புலிகள் இயக்கத்தில் போராளியாக இருந்த ஒருவருக்கு இதுபற்றி சொல்லிக்கொடுக்க வேண்டிய தேவை இருக்காதென்றே நம்பலாம்.

தமிழருக்கு எதிராக செயற்பட்டு தமிழினத்தை அழித்து சிதைத்த சிங்களவனைப்பற்றியோ, சிங்களவனை ஊக்குவித்து வழிநடத்திய இந்தியனைப்பற்றியோ,ஒன்றோடு ஒன்றாக இருந்து அழிவின் கொடூரங்களுக்கு பக்கச்சாவியாக செயற்பட்டு தமிழரின் சவக்காட்டுக்கு சுருதி பாடிய தமிழ்த்துரோகிகளை பற்றியோ, கவலையில்லாமல் எல்லாம் மறந்து ஒரே வீட்டுக்குள் அடிபிடி, காட்டிக்கொடுப்புக்கள். வெட்கப்பட வைக்கிறது. வெட்கம் ஒருபுறம் தள்ளி வைத்தாலும் தமிழரின் பலம் சிதைக்கப்படுகிறது என்பதை பொது நோக்கோடு உணரவேண்டும்.

பிரித்தானியாவில் ராஜபக்க்ஷவுக்கு லாடம் கட்டி ஒக்ஸ்போட்டில் கால் வைக்காமல் திருப்பியனுப்பிய புலம்பெயர் தமிழர்களின் ஒற்றுமையையும் உறுதியையும் உலகத்தமிழினமே உள்ளத்தில் பெரும் உவகையோடு கொண்டாடியது, அந்தநிகழ்வு இந்திய அரசையும் தமிழ்நாடு கருணா அரசையும் கடகடக்க வைத்திருந்தது அதை ஏன் வீர ஈழத்தமிழினம் உணரமறுக்கிறது.

நாட்டில் ஈழத்தமிழர்களுக்கான அரசியல் கட்சிகள் தம்பாட்டுக்கு ஏதோ ஒரு ராகத்தில் போய்க்கொண்டிருக்கின்றன. துரோககூட்டங்களான விரோதிகளுடன் அரசியல் அரங்கம் அமைத்து அரசாங்கத்துடன் இணைந்து உரிமையை பெறப்போவதாக நகைப்புக்கிடமாக அறிக்கை விடுகின்றன. அரசாங்கத்துடன் இணைந்து உரிமையை வென்றெடுக்கப்போவதாக அவர்கள் கூறும் உலக அதிசயத்தை அவர்களாவேயே புரிந்துகொள்ள முடியுமோ தெரியவில்லை.

தமிழனுக்கு ஒன்றுமில்லை என்பதுதான் சிங்களவனின் 100 வருடங்களுக்கு மேலான அரசியல் நிலைப்பாடு. அந்த நிலையை எதிர்த்து உருவானதுதான் ஆயுதப்போராட்டம். இப்போ அரசாங்கத்துடன் இணைந்து தமிழரின் உரிமையை வென்றெடுக்கப்போகிறோம் என்கின்றனர் .சில அரசியல் ஆசான்கள் இன்னும் ஒருபடி மேலேபோய் துரோகி கருணா மூலம் தமிழர்களுக்கான உரிமைகளை தட்டிக்கேட்டு பெறமுடியும் என்று தன்னிலை மறந்து கூறியிருக்கின்றனர். இதைவிட ஒரு நகைச்சுவை தமிழ்ச்சினிமாவிலும் இதுவரை எவரும் கண்டுகளித்திருக்கு முடியாது.

தமிழர்களுக்கான நியாயம் இருப்பதை உலகம் உணர்ந்துகொள்ளும் இந்தச்சமயத்தில் எமது ஒற்றுமையை குலைக்கலாமா? உலகமே வியக்கக்கூடிய அளவு வீரத்தையும் விவேகத்தையும் கொண்ட விடுதலைப்புலிகளின் வாரிசுகளான நாம் எமது உள்க்கட்டமைப்பை உடைத்து பலயீனமானவர்களாக எதை சாதித்துவிடப்போகிறோம்? விடுதலைப்புலிகளின் உட்கட்டமைப்பும் வெளிக்கசிவு ஏற்படாத அறுதியான உறுதியும் எம்மாலேயே கேள்விக்குள்ளாகலாமா.

செயல்ப்பாடுதான் எதையும் நிர்ணயிக்கும் தராசாக இருந்துவருவதாக பலசந்தர்ப்பங்கள் தமிழினத்திற்கு இனங்காட்டியிருக்கின்றன, விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளே உலகுக்கு தமிழரின் இன்னலை எடுத்துச்சென்றது. இன்றய எமது செயற்பாடுகள் நிச்சியம் எமக்கான இடத்தை தீர்மானிக்கும்.

எல்லாவற்றிர்கும் மேலாக விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுதியும், தலைவரின் சுயநலமற்ற தீர்க்கதரிசனமான தொலைநோக்கும்தான் இன்று தமிழர்களை ஒரு ஒழுங்குக்குட்பட்டு நடக்கக்கூடியவர்கள் என உலகநாடுகளுக்கு அறியவைத்திருக்கிறது.

சில கட்டுப்பாடுகளுக்காகவும் சபிரதாயத்திற்காகவும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை உலகம் எதிர்த்தாலும், தனிப்பட்ட ரீதியில் தலைவர் பிரபாகரன் அவர்களை உலக அரசியல்த்தலைவர்கள் மிகுந்த மரியாதையோடுதான் நோக்குகின்றனர், அவரது நடத்தையை அவரை எதிர்ப்பவர்கள் கூட விமர்சிப்பதில்லை என்பதை தமிழினம் பெருமையுடன் பார்க்கவேண்டும். இன்று தலைவர் வெளிவரமுடியாத குறுகிய காலத்தில் கண்மூடி ஒருவினாடி தலைவரை நினைத்து அடுத்த அடியை எடுத்து வைக்க கட்டுப்பாட்டுடன் முயற்சிப்போம்,, ஒற்றுமையே எமது இனத்தின் விடுதலையை தீர்மானிக்கும்,.

மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல

மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல– கௌரி
தமிழன் என்றால் இந்த அகிலமே இன்று திரும்பிப் பார்க்கின்றது. தமிழருக்கென்று ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம் உண்டு என்பதை தெரியவைத்தவர்தான் இந்த பிரபாகரன். பலரை வரலாறு படைத்திருககலாம். வரலாறுக்காக பிரபாகரன் எதையும் படைக்கவில்லை ஆனால் பிரபாகரன் ஒரு வரலாறு படைத்துள்ளார் என்பதுதான் உண்மை. பிரபாகரன் என்றால் தமிழ், தமிழ் என்றால் பிரபாகரன்.அவர்தான் நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள தமிழன்.
 
சில தினங்களுக்கு முன்பு லண்டன் தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் ஒரு கலந்துரையாடல் கேட்க நேர்ந்தது. தனிப்பட்ட எந்த ஒரு நபரின் பெயரையும் நான் இங்கு குறிப்பிட விருப்பவில்லை. அது அநாகரீகமும் கூட.ஆனால் அதை பார்த்த நாளிலிருந்து இரணமான நெஞ்சம் இன்னும் ஆறவில்லை. ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதரைக் கடிப்பது என்று சொல்வார்களே..அதுதான் அன்று நடந்தது.
 
வைகாசி பேரவலத்தின் பின்பு மெல்ல மெல்ல மறைமுகமாகப் புலிகளைத் தாக்கினார்கள் இந்த பொய் வல்லுனர்கள். ஆனால் இப்பொழுதெல்லாம் நேரடியாக அதுவும் தொலைக் காட்சியில் வந்து தாக்கும் அளவுக்கு துணிந்துவிட்டார்கள் இந்த “நாவலர்கள்”.அன்று அந்தத் தொலைக்காட்சியில் இந்த ” நாவல்லவர்” கூறியதாவது … சிங்களவர்களைக் கொல்வதைப் புலிகள் ஒரு கொள்கையாக வைத்திருந்தது போலவும் அதைத் தவிர அவர்களிடம் ஒருப்படியாக வேறு எந்த கொள்கையும் இருக்கவேயில்லை என்பதுபோலவும் ஒரு அணுகுண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு இந்த உலகத்தில் எனக்குத் தெரியாத விடயமே இல்லை என்ற ஒரு தோரணையில் காலுக்கு மேல் கால் போட்டு அமர்ந்திருந்தார் இந்த அறப்படித்த வெறும் மண்டை.
இந்த வெற்று மண்டைகளுக்கு நாம் கூற விரும்புவது ஒன்றே ஒன்றுதான்.சிங்களவர்களைக் கொல்வதை ஒரு கொள்கையாக பிரபாகரன் வைத்திருந்திருந்தால் தமிழ் ஈழம் என்றோ பிறந்திருக்கும். இரண்டு கிராமங்களை அழித்திருந்தால் சிங்களவன் பிரபாகரன் காலில் வந்து விழுந்திருப்பான். அதை செய்வதற்கு பிரபாகரனிடம் தில்லும் இருந்தது திறனும்(capacity) இருந்தது. ஆனால் பிரபாகரன் ஒரு பயங்கரவாதியல்ல. சிங்களவர்களைக் கொள்வது அவர் நோக்கமும் அல்ல. யார் இந்த பிரபாகரன் என்று தெரியாதவர்களுக்கும் தெரியாதது போல் நடிப்பவர்களுக்கும் சொல்கின்றோம் கேளுங்கள்.
தமிழ் உணர்வு என்ற ஒக்சிஜனை(oxygen)மட்டும் தனது இரத்த ஓட்டத்தில் கலந்தவர்தான் இந்த பிரபாகரன். தமிழ் என்ற ஒரு தேசிய இனம் இந்த உலகில் உண்டு என்பதை இந்த உலகத்திற்கு எடுத்துரைத்தவர் இந்த பிரபாகரன். ஸ்ரீலங்கா என்று சொன்னாலே “தமிழா” என்று வெளிநாட்டவர் வினாவுமளவுக்கு கொண்டுவந்தவர் இந்த பிரபாகரன். இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக தமிழன் என்று சொல்லி நெஞ்சை நிமிர்த்தி தலையை உயர்த்தி தமிழர்களை இலங்கையில் மட்டுமல்ல உலகெங்கும் நடக்க வைத்தவர் இந்த பிரபாகரன்.
இன்று இந்த இந்து சமுத்திர பிராந்தியத்தின் வரலாற்றையே தலைகீழாக மாற்றி வைத்திருப்பவர்தான் இந்த பிரபாகரன். அறவழியில் போராட வேண்டும் என்று செல்வா அன்று அகிம்சாவழியில் போராடினார். இந்த அகிம்சா மொழியெல்லாம் புரிந்து கொள்பவன் அல்ல சிங்களவன் என்ற முடிவுக்கு உந்தப் பட்டு ஆயுதப் போராட்டத்தைக் கையிலெடுத்தாலும், அந்த ஆயுதப் போராட்டத்தையும் தார்மீகத்தின் வழியில் தர்மத்தின் அடிப்படையில் நடாத்தியவர்தான் இந்த பிரபாகரன்.
இணையங்களில் இன்று பயன்படுத்தப்படும் மொழிகளில் தமிழும் ஒரு முக்கிய மொழியாக இருக்கின்றதென்றால் அதற்குக் காரணமும் இந்த பிரபாகரன்தான். இன்று இந்தப் பொய் வல்லுனர்கள் எழுத்தாளர்கள் என்ற போர்வையில் வெளிநாடுகளில் உள்ள தமிழ் தொலைக் காட்சிகளில் தோன்றி தங்கள் விதண்டாவாதக் கருத்துக்களை சுதந்திரமாகப் பேசுகின்றார்கள் என்றால் அதற்குக் காரணமும் இந்த பிரபாகரன்தான்.  மீசை வைத்தவன் எல்லாம் ஆண்மகனுமல்ல பேனா பிடித்தவன் எல்லாம் எழுத்தாளனும் அல்ல.  எழுத்தின் மேல் உள்ள மோகத்தினால்(passion)  எழுதுபவன்தான் எழுத்தாளன். வயிறு வளர்ப்பதற்காக எழுதுபவநெல்லாம் எழுத்தாளனாக முடியாது.
இன்று இவரைப் போன்றோர் எல்லோரும் சுதந்திரமாக தொலைக் காட்சியில் வந்து ஒய்யாரமாக தங்கள் பொய்ப்பிரச்சாரங்களை தைரியமாக கூறிவிட்டு இன்னும் உயிருடன் இருக்கின்றீர்கள் என்றால் அதற்குக் காரணம் பிரபாகரன். எனக்கு கருத்துச் சுதந்திரம் இல்லையோ என்று கேட்கின்றார் இந்த “நாவல்லவர்”,..இந்தக் கருத்துச் சுதந்திரப் புண்ணாக்கை இலங்கையில் நீங்கள் பேசமுடியுமா? அல்லது பேசிவிட்டுதான் உயிருடன் இருக்க உம்மை ராஜபக்ஷே விடுவானா? இந்த கருத்துச் சுதந்திரம் எல்லா தமிழருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக போராடியவர்தான் இந்த பிரபாகரன்.
“அனுராதபுரத்தில் சிங்களவன் அடித்தால் அடியை வாங்கிக்கொடு யாழ்ப்பாணத்துக்கு உயிருடன் வருவதுதான் புத்திசாலித்தனம் அதை விட்டு விட்டு நாம் திருப்பி அடித்தால் நாம் உயிருடன் வரமுடியாது”  என்கின்றார் இந்த நாவல்லவர்.அதுதான் ராஜதந்திரமாம்…. உம்மிடம் ஒரு கேள்வி.  நீர் கோழைத்தனமாகத் திருப்பி அடிக்காவிட்டால் மட்டும் அந்த கொலைகாரர் உம்மை உயிருடன் விட்டு விடுவார்களா?  செத்தாலும் இரண்டு அடி என்றாலும் திருப்பி அடித்துவிட்டு சாபவன்தான் மானமுள்ள மனிதன்…. எதையுமே நடந்து முடிந்தபின்பு அதைச் செய்திருக்கலாம் இதை செய்திருக்கலாம் என்று என்னாலும்தான் கூற முடியும். (hindsight has outcome knowledge, foresight hasn’t got that luxury)  
நடந்து முடிந்ததைப் பற்றி நீர் பேசுவதால் புத்திசாலியாக காட்டிக் கொள்ள முடியாது. திருவிளையாடல் தருமி நாகேஷ் சொன்னதுபோல் ” பாட்டெழுதிப் பெயர் எடுத்தவங்களும் இருக்கின்றார்கள்.பிழை கண்டுபிடித்துப் பெயர் வாங்குபவர்களும் இருக்கின்றார்கள்.” ஆனால் நமது இந்த நாவலர் விடயத்தில்”  இல்லாத பிழையைக் கண்டுபிடித்துப் பெயர் வாங்குபவர்களும் இருக்கின்றார்கள்.
இனித் தமிழன் தலை தூக்கவே முடியாது என்று சோர்ந்திருந்த காலக் கட்டத்தில் தமிழனுக்கு புத்துணர்ச்சி கொடுத்து அவன் உணர்வைத் தட்டி எழுப்பியவர்தான் இந்த வேலுப்பிள்ளை பிரபாகரன்.பிரபாகரன் என்பது வெறும் பெயரல்ல.அது தமிழ் மக்களின் ஆத்மபலம். தமிழர்கள் சோர்ந்துபோகாமல் இருப்பதற்காக பாவிக்கப்படும் ஒரு ஊட்டச் சத்து.அது நம் மக்கள் இரத்தத்தில் கலந்துவிட்ட தொனிக்(tonic).நாம் சாகும்வரை அந்த ஊட்டச் சத்து நம்மை சோர்ந்து போகவிடாமல்,எதற்காக இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தோமோ அந்த இலக்கை நாம் அடையும்வரை நம்மை இழுத்துச் செல்லும் என்பதில் எந்த ஐயமும் கிடையாது.
வெள்ளையும் சொள்ளையுமாக தொலைக் காட்சியில் தோன்றி, கடைசியாக சொன்ன பொய் என்ன என்பதை மறந்து அந்த பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்லித் திரியும் அரசியல்வாதியல்ல அவர்.அதிகப் படிப்பு அவரிடம் இல்லை. அதிகப் பேச்சும் அவரிடமில்லை. அதிகப் பிரசங்கித் தனம் இருக்கவில்லை.. ஆனால் அவருடன் செய்கை இருந்தது..தெளிவானசிந்தனை இருந்தது… நிறையக் கேள்விகள் இருந்தன அதற்குப் பதிலும் அவரிடம் இருந்தது. சந்திரபோசைப் பிடிக்கும் அவருக்கு. அதனால் சந்திரபோஸ் போன்று நேர்மையுடனே வாழ்பவர்.
முப்பது வருடப்போராட்டத்தின் பலாபலன் முள்ளிவாய்க்கால் என்று வாய்கூசாமல் கூறுபவர்களும் இருக்கின்றார்கள்.  இந்த முள்ளிவாய்க்காலில் பலி எடுக்கப்பட்டோர் எத்தனைப் பேர் என்று யாருக்காவது தெரியுமா?  தமிழர் பண்பாடு, கலாச்சாரம் எல்லாமே சீரழிக்கப்படுத்தப்படுகின்றன.  எங்கள் நிலங்கள் அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில் களவாடப்படுகின்றன.  நம் பாரம்பரியம் அழிக்கப்படுகின்றது.
நாம் தலை நிமிர்ந்து நடக்க முடியாமல் கூனிக் குறுகி அடிமைகளாக ஒடுங்கிப்போய் விட்டோம். சரி….இப்படி நினைப்போரிடம் ஒரு கேள்வி.. ஆயுதப் போராட்டம் இல்லாமல் இருந்திருந்தால் 1983-2009 வரையில் இலங்கையில் எத்தனை கலவரங்கள் நடந்திருக்கும் என்று யாராலாவது எதிர்வு கூற முடியுமா? எத்தனை எத்தனை தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டிருப்பார்கள் என்று எண்ணிக்கை  சொல்ல முடியுமா? எவ்வளவு சொத்துக்கள் அளிக்கப்படிருக்கும் என்று கணக்கு கூறமுடியுமா?
இதுவரைக்கும் எவ்வளவு தமிழர் நிலம் பறிபோய் இருக்கும் என்று கூறமுடியுமா? முடியாது யாராலும் முடியாது…
ஆனால் இந்த முள்ளிவாய்க்கால் மூலம் இன்று இந்த உலகம் நம் பக்கம் அதன் பார்வையை திரும்பிப் பார்க்கவைக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை.
தமிழன் என்றால் இந்த அகிலமே இன்று திரும்பிப் பார்க்கின்றது. தமிழருக்கென்று ஒரு வரலாறு, ஒரு பாரம்பரியம் உண்டு என்பதை தெரியவைத்தவர்தான் இந்த பிரபாகரன். பலரை வரலாறு படைத்திருககலாம். வரலாறுக்காக பிரபாகரன் எதையும் படைக்கவில்லை ஆனால் பிரபாகரன் ஒரு வரலாறு படைத்துள்ளார் என்பதுதான் உண்மை.
பிரபாகரன் என்றால் தமிழ், தமிழ் என்றால் பிரபாகரன்.அவர்தான் நம் நெஞ்சங்களில் நிறைந்துள்ள தமிழன்.
கௌரி

அன்பான தமிழீழ மக்களே .. ! , என்ற அவருடைய குரல் நம் காதுகளில் மறுபடியும் ஒலிக்கும்..

அன்பான தமிழீழ மக்களே .. ! , என்ற அவருடைய குரல் நம் காதுகளில் மறுபடியும் ஒலிக்கும்..
புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து தமிழகத்தில் இருந்து விமர்சனக் கடிதம்"
ஒரு மாவீராங்கனையின் தாய் எழுதும் திறனாய்வு மடல்..
கண்டிப்பாக படிக்க வேண்டிய கருத்துள்ள கடிதம்…

சென்னை
நாள் 27.01.2011

அன்புடன் திரு.துரை அவர்களுக்கு,
முதலில் உளமார்ந்த நல்லாசிகள் பாராட்டுதல் கலந்த நல் வாழ்த்துக்கள்.
புதுமாத்தளன் சோகங்களுக்கு புது மருந்து என்ற புத்தகத்தைப் படித்தேன். படித்தல் நிறைவுறும் முன்பாகவே அது வெறும் புத்தகமல்ல.. ஒவ்வொரு ஈழத்தமிழனுக்குமான பொக்கிஷம் என்பதை உணர்ந்தேன். உணர்ந்தவண்ணமே அந்தப் பதினெட்டு நாட்களின் பயணத்தை நிறைவு செய்தேன். இந்தப் புத்தகத்தை அல்ல.. பொக்கிஷத்தை அறிமுகம் செய்தமைக்காக சென்னையில் நடந்த புத்தகக் கண்காட்சிக்கு எனது உளமார்ந்த நன்றியை முதலாகக் கூற வேண்டும்.
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளலை அறிந்திருக்கிறோம். மகாபாரதம் கேட்டிருக்கிறோம், இராமாயணம் படித்திருக்கிறோம். கணியன் பூங்குன்றனின் யாதும் ஊரே யாவரும் கேளிர் .. ஒன்றல்ல இரண்டல்ல .. பல நூறு தடவைகள் எமக்குள் எதிரொலி செய்கிறது. ஆயினும் என்ன? இவை யாவற்றுள்ளேயும் புதைந்து கிடக்கின்ற அற்புதத்தை – வாழ்க்கையின் உன்னதத்தை–ஊடுருவிப் பார்க்கின்ற சிந்தனைத்திறன்–நானறிந்தவரை–இதுவரை யாருக்கும் ஏற்பட்டதில்லை உங்களைத்தவிர..
புயலுக்குள் புதுமை கண்டு, அதைப் புதுமாத்தளனோடு இணைத்து, புலம் பெயர் தமிழர் உன்னதம் பெறுவதற்கான செய்தியாகக் கொடுத்திருக்கிறீர்கள்.. பாராட்டுகிறேன்…
2009 மே – பதினெட்டாம் நாளுக்குப் பிறகு தமிழினம் சோர்ந்துபோய்க் கிடக்கின்றது. எல்லாமே முடிந்துவிட்டது என்ற ரீதியில் விரக்தியின் விளிம்புக்கு வந்து நிற்கிறது. , எங்கள் விடுதலைப் போராட்டம் 50 ஆண்டுகளுக்கும் அதிகமாகவே பின்நோக்கிப் போய்விட்டது.. தமிழன் இனி நிமிர்வது எங்ஙனம்…? , என்ற மனப்பாங்குதான் ஏறக்குறைய எல்லோரிடமும் காணப்படுகிறது.
ஆடுகளம், சமமாக இல்லாத இடத்தில் நம் ஈழத்தமிழ் வீரர்கள் மோதினார்கள்… அவர்கள் அழிக்கப்படவில்லை.. இப்போரில் அவர்களுக்கே வெற்றி..எனவும், தனது சிறிய படையணியினரோடு உலகத்தையே துணிந்து எதிர்த்த பிரபாகரன் அடைந்தது தோல்வியா… ? எனவும், உங்களுடைய பேனா ஒவ்வொரு ஈழத் தமிழனையும் தெம்பேற்றுகிறது. இது காலத்தின் தேவை, ஒரு தேசத்தின் கட்டாயம். இந்த நூல் பட்டிதொட்டி எங்கும் போய்ச் சேர வேண்டும் என்பதே என் ஆதங்கம்.
நடக்குமா.. ? நடக்க வேண்டும்…
பிரபாகரன் தன்னைக் காட்டிக் கொடுத்த சில புலித்தம்பிகளை புதுமாத்தளனில் நேரடியாகக் கண்டார்.. ,தம்பி தமிழீழம் பிறக்க முன்னர் நீ பிறந்துவிட்டாயே.. ! என்று அவர்களைப் பார்த்து சிரித்தபடி சொன்னார், என்ற வரிகளைப் படித்து துடித்துப்போனேன். பெருகிவந்த கண்ணீரைக் கட்டுப்படுத்த என்னால் முடியவில்லை.
அடுத்த வினாடியே..
,திரும்பிப் பார்க்காதே.. !,என்ற மாபெரும் தத்துவம் எனக்கு முன்னால் நிற்பது தெரிந்தது.
உதிர்ஷ்டிரனையும், மகலனையும் சொல்லி .. இந்தத் தத்துவத்தோடு இணைத்து.. இறுதியில் காது கொடுத்துக் கேட்டுப்பார் ! என்கிறீர்கள். இதோ இப்பொழுதும் கேட்கிறேன்.. எங்கள் அருமைத் தலைவன்.. என்போன்ற தாயாருக்கெல்லாம் இனிய மகன்..ஓர் அற்புத வரலாற்றின் பிறப்புக்காக திரும்பிப் பாராமலே நடந்து கொண்டிருக்கிற அந்தக் காலடி ஓசைகளை..
அவனை எங்கள் தேசத்தின் பிள்ளையை, இந்தப் பயணத்தில் நீ நிச்சயம் வெற்றி பெறுவாய் மகனே.. என்று மனம் திறந்து ஆசீர்வதிக்கிறேன். விரைவில் எங்களிடம் வந்துவிடு தலைவா..! என்ற ஆதங்கத்தோடு. 2009 மே 18 ற்குப் பிறகு தமிழன் தமிழனாக இல்லை. உயிர் கொடுத்தவர்களும், அநியாயமாக உயிர் பறிக்கப்பட்டவர்களும் போய்ச் சேர்ந்துவிட, அவரவர் உயிரே அவரவர்க்கு சுமையாகிவிட்டதான ஒரு கொடுந்துயரம்..
தமிழன் என்றால் , தலை நிமிர்வு , என்பதாய் அர்த்தப்படுத்தி வாழ்ந்தோமே இன்று உலகமே நம்மைப் கைகொட்டிச் சிரிக்கிறதே..இது ஏன் நடந்தது..? எப்படி நடந்தது.. ? கனவில்கூட நினைத்துப் பார்த்திராத இந்த அவலத்திற்கு யார் அல்லது எது காரணம்? இதுபோன்ற விடை தெரியாக் கேள்விகளோடு ஒரு வெறுமையான வாழ்க்கைக்குள் தள்ளப்பட்டுத் தவித்துக் கொண்டிருக்கும் தமிழ் இதயங்களின் மத்தியில் மற்றுமொரு முக்கியமான கேள்வியும்:
தமிழீழம் என்ற இலட்சியக் கனவோடு சாவைத்தழுவிக் கொண்ட, வெடிகுண்டு சுமந்து வெடித்துச் சிதறி மண்ணுக்குள் புதைந்து போன பல்லாயிரம் மாவீரர்களுடையை அசையாத நம்பிக்கை வீணாகிப் போனதா..? சத்தியம், தர்மம், நீதி, கடவுள் என்பதெல்லாம் வெறும் கதைகள்தானா..? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் உங்கள் பேனா விடை தருகிறது. ,தியாகமே வடிவான போராளிகள் மண்ணுக்குள் இருக்கிறார்கள்.. அவர்கள் இதைக் காப்பாற்றுவார்கள்.., என்று உறுதியோடு பிரபாகரன் நம்புகிறார்.–என்ற வரிகள்.
,பிரபாகரன் என்ற பிரகாச ஒளி இப்புவியில் பரவும்..  ,நம்புவோம்.. காத்திருப்போம்.. !
இவ்வாறு நம்பிக்கை தந்த உங்களுடைய பேனா உங்களுடைய 10 வது கதையில் வாசகர் நெஞ்சங்களைக் கலங்கவும் வைக்கிறது. டைட்டானிக் கப்பலை புதுமாத்தளனோடு ஒப்பிடும் நீங்கள், , டைட்டானிக் பெரிய கப்பல்தானே.. அது ஒரு காலமும் உடையாது என்ற நம்பிக்கையுடன் பயணித்த மடமைச் செயலை எண்ணி வருந்திய கப்பல் தலைவன் கடைசியில் டைட்டானிக்கோடு சேர்ந்து தானும் மூழ்கி உயிரை மாய்க்கிறான் என்றும் எழுதியுள்ளீர்கள்.
வாசித்தபோது இதயம் துணுக்குற்றது… எதையோ எமக்கு சொல்வதற்கான சூசகமான வரிகளா இவை..? என்ற நினைப்பில் மனம் பதைபதைப்பதை தவிர்க்க முடியவில்லை. சொல்லுங்கள் தம்பி.. அதைச் சாதாரணமாகத்தானே எழுதினீர்கள்.. ? சூசகமாக எதையும் எமக்கு சொல்வதற்காக அல்லவே..?
போருக்குப் பிற்பட்ட காலமே கொடியது என்றும், அதன் பிறகுதான் உண்மையான அவலம் சமுதாயத்தைச் சூறையாடத் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளீர்கள். எத்தனை பெரிய உண்மை இது.. கூடவே.. அறிஞர் மட்டத்திலான போர் மதிப்பீட்டு ஆய்வுக்குழுவை நாம் நியமிக்கவில்லை என்றும்,  அந்த மதிப்பீட்டை வைத்துத்தான் நாம் அடுத்த கட்டத்திற்கு போயிருக்க வேண்டும் என்றும் கூறுகிறீர்கள்.
ஆறாத்துயரிலும் கண்ணீரிலும் கிடக்கிற தமிழ் மக்களுக்கு முன்னால் விஸ்வரூபம் எடுத்து நிற்கின்ற விடை தெரியா கேள்விகளில் இதோ சில: இனி யார் எங்கள் வழிகாட்டி.. ? அதைத் தெரிந்து கொள்ளும் அளவுகோல் எது?
இப்போது வெளியிடப்படுகின்ற வகை வகையான அறிக்கைகள், பிரகடனங்கள், அறிவுறுத்தல்கள் என்பவற்றில் எதை சரியென்று கொள்வது?  எதை பிழையென்று தள்ளுவது? தமிழனுக்கென ஒரு எதிர்காலம் இனி உண்டா.. இல்லையா..?  குழப்பம் எங்கும் குழப்பம்.. எதிலும் குழப்பம். புலம் பெயர்ந்த பெயராத அனைத்து தமிழ் மக்களிடையேயும் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்தை யார் சரி செய்வது..?
இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் விடை தெரியாதவரை தமிழ் சமுதாயம் சூறையாடப்பட்டுக் கொண்டுதான் இருக்கப் போகிறது என்பதே யதார்த்தம். மற்றுமொரு விடயம் பற்றி தெளிவுபெற விரும்புகிறேன்.
அறிஞரால் மீட்கப்பட்ட அழகிய டென்மார்க் என்ற அத்தியாயம் பின்வருமாறு கூறுகிறது. ,இனிமேல் ஐரோப்பாவில் எந்தப் பிரச்சனை ஏற்பட்டாலும் அதை ஆயுதம் மூலம் தீர்ப்பதில்லை என்று புது விதி எழுதினார்கள்… ,,போரில் வென்றவர்களும் தோற்றவர்களும் ஒருவரை நோக்கி மற்றவர் ஆயுதத்தை தூக்குவதில்லை.. ,என்ற ஒப்பந்தம் எழுதப்பட்டது.
இதுபோன்ற ஒரு கோட்பாட்டைக் கடைப்பிடித்து, சிறீலங்காவில் எந்தவொரு பிரச்சனைக்கும் துப்பாக்கி வேட்டு தீர்க்கப்படக் கூடாது என்று ஒப்பந்தத்தை தமிழ் தலைவர்களும், சிங்கள தலைவர்களும் எழுதினால் முதல் அச்சம் தீரும்…, என்றதன் பின் வரும் பேராசிரியர் சபா. இராஜேந்திரனுடைய கருத்து நடை முறைச்சாத்தியமா..? ஒப்பந்தங்களை கிழத்தெறியும் சிறீலங்காவுடன் இனியும் ஓர் ஒப்பந்தமா.. ? இது எந்தக் காலத்திலும் நடக்கக்கூடிய ஒன்றா.. ?
தமிழருடைய தாயக நிலப்பரப்பு சூறையாடப்பட்டு, இன அடையாளங்கள் அழிக்கப்பட்டு, சிங்கள மயமாக்கப்பட்டு வருகின்ற இன்றைய சூழலில்..
பேராசிரியர் கூறுவது போல வெளிநாட்டில் உள்ள இளைஞர் தாயகத்தை மேம்படுத்தும் நோக்குடன் பாதுகாப்பாக..! அங்கு போய்வரக்கூடிய சூழல் எவ்வாறு ஏற்பட முடியும்? தாயகம், என்பதே ஒரு கேள்விக்குறியாகி நிற்கும் நிலையில் அவருடைய இந்தக் கருத்து யதார்த்தத்தில் இருந்து வெகு தூரம் விலகிப் போயிருப்பதாகவே உணர முடிகிறது.
(பேராசிரியருடைய கருத்தை விமரிசிப்பது எனது நோக்கமல்ல .. என் மனதில் பட்டதை எழுதுகிறேன்.. தவறு எனில் மன்னிக்க வேண்டுகிறேன்..)
இனி…
,குற்றமற்ற ஒரேயொரு இனமாய் நிற்கும் ஈழத்தமிழன் குரல் இறைவன் திருச்சபையில் கேட்கும்.. ! ,
,பிரபாகரன் முன்னைவிட வேகமாக செயற்பட்டுக் கொண்டிருக்கிறார்.. ,
,நேதாஜி திரும்பவில்லை பிரபாகரன் திரும்புவார்.. !
,அன்பான தமிழீழ மக்களே .. ! , என்ற அவருடைய குரல் நம் காதுகளில் மறுபடியும் ஒலிக்கும்..
,இறப்பே இல்லா இளவரசன் , என்ற புதிய கொன்ஸ்பிரேசன் தியரி..
தமிழைப் புதிதாய்ப் பிறக்க வைக்கும் வலிமை மேற்படி வாசகங்களுக்கு நிச்சயம் உண்டு. புலம் பெயர் தமிழருக்கெல்லாம் இந்தப் புத்தகம் பெருமளவில் போய்ச் சேர வேண்டும். தமிழினம் புத்துயிர் பெற வேண்டும்.
மேலும்,
என்னைப்பற்றி சில வரிகள்..
பிறந்த மண்ணை விட்டு இடம் பெயர்ந்து தமிழ் நாட்டில் வசிப்பவள்..பிரபாகரன் என்கின்ற தனிப் பெருந் தலைவனை மகனாக நேசிக்கின்ற ஒரு தமிழிச்சி.. அந்தப் பெருமகனை நேரில் காணவும், உரையாடவுமான அரிய வாய்ப்பினை ஒரு சில தடவைகள் பெற்றவள். தமிழீழக் கனவை நெஞ்சில் சுமந்து, மண்ணில் புதையுண்டு போன ஒரு மாவீராங்கனையை வயிற்றில் சுமந்தவள்.. உங்களைப் போன்ற சமூகப் பிரக்ஞையுள்ள எழுத்தாளர்கள் படைக்கின்ற போர்க்கால இலக்கியங்கள், அறிவின்மை என்ற பாதாளத்தில் விழுந்து கொண்டிருக்கிற ஒரு சமூகத்தை பகுத்தறிவு சமவெளிக்குள் கொண்டுவரக்கூடிய வலிமை உள்ளவை.
இதுபோன்ற பயனுள்ள விடயங்கள் இன்னும் நிறைய எழுதுங்கள். விடுதலை என்ற உன்னதம் நோக்கி ஒவ்வொரு புலம் பெயர் தமிழனும் அடியெடுத்து வைக்க நேரானதும், சீரானதுமான பாதைக்கு உங்களுடைய எழுத்து அழைத்து செல்லட்டும். எனது வாழ்த்துக்களும் நல்லாசிகளும்.
அன்புடன்,சாவித்திரி
சென்னை – தமிழ்நாடு

செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

திருப்பி அனுப்பப் பட்ட திருமா


தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, ஒரு நாடகத்தை அரங்கேற்ற திட்டமிட்டு, நேற்று இரவு இலங்கை சென்ற, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனை, இலங்கை அரசு நேற்று திருப்பி அனுப்பியது.
பார்வதி அம்மாளின் இறுதிச் சடங்கில் பங்கேற்று, அங்கே புகைப்படம் எடுத்து, அதை சுவரொட்டிகளாக தமிழகமெங்கும் ஒட்டி, அதை வைத்து சட்டசபைத் தேர்தலில் ஆதாயம் தேடலாம் என்று திட்டமிட்டிருந்த தொல்.திருமாவளவனுக்கு, இது பெரும் பின்னடைவு என்று கருதப் படுகிறது.

sff_bmp
ஈழ ஆதரவாளர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், ஈழத் தமிழர்களை கொன்று குவிக்க காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியோடு கைகோர்த்துக் கொண்டு, தமிழனின் மானத்தையும்,  தலித்துகளின் மானத்தையும்,  அந்தோனியோ மொய்னோவின் காலடியில் அடகு வைத்த திருமாவளவனுக்கு, தேசியத் தலைவரின் தாயாரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள எந்த உரிமையும் இல்லை, அவரை இலங்கையிலிருந்து திருப்பி அனுப்பியது சரியே என்று தெரிவித்தனர்.
(திருமாவளவன் ஒரு சுயநலவாதி . எச்சில் இலையை கழுவி புது இலை என்று கூறி வியாபாரம் செய்யும் ஒரு போலி அரசியல்வாதி.திருடர்கள் அரசியலில் இருந்தால் இதுதான் நடக்கும்..

ஈழத் தமிழரை கொன்று குவித்த, காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் இருந்து, காங்கிரஸின் வாக்குகளைப் பெற்று, எம்.பியாக ஆன, திருமாவளவன், ஈழத் தமிழரின் பிணத்தை வைத்து வியாபாரம் நடத்துபவர் திருமாவளவன்.

தமிழ்ப் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்க ு ஆளாக்கிய இந்திய ராணுவத்தை அனுப்பிய ராஜீவ் காந்தி மீது விடுதலை சிறுத்தைகளுக்கு பெரும் மதிப்பும் மரியாதையும் உண்டு என்று, கடிதம் எழுதி, சோனியாவின் பாதங்களை கழுவி பிராயசித்தம் தேடியவர் திருமாவளவன்.

இனப்படுகொலை குற்றவாளி ராஜபக்ஷேவோடு, விருந்துண்டு, இன்பச் சுற்றுலா சென்று வந்தவர் திருமாவளவன். ஈழத் தமிழர்கள் கை வேறு கால் வேறாக, கொத்துக் குண்டுகளுக்கு இரையாகி வீதிகளில் குப்பைகளைப் போல கிடந்த போது, ஸ்பெக்ட்ரம் பணத்தை எண்ணிக் கொண்டிருந்த கயவன் கருணாநிதியின் காலை நக்கிக் கொண்டிருந்தவர் திருமாவளவன்.

திருமாவளவன், ஏழை தலித்துகள் பெயரைச் சொல்லிக் கொண்டே, சொகுசு வாழ்க்கை வாழும், போலி தலித். தலித் இனத்தின் எதிரி. குலத்தை கெடுக்க வந்த கோடரிக் காம்பு.
திருமாவிடம் இருந்து விடுதலை சிறுத்தை கட்சியை ஒரு படித்த சுயநலமில்லாத இளைஞன் தட்டி பறிக்க வேண்டும். இதுதான் சரியான நேரம், இதை செய்யும்போது ஆதரவாளார்கள் அந்த இளைஞன் பின் வருவார்கள்..

திருமாவளவன் இப்போது அறியப்பட்ட தமிழினத்துரோகி
தான் ஒரு சூழ்நிலைக் கைதி என்று அடிக்கடி புலம்புகிறாரே, அது வேறு ஒன்றுமில்லை, பெண்கள் விசயத்தில் திருமாவின் பலவீனம் வீடியோ ஆதாரமாய் தி மு க விடம் உள்ளது. எங்கும் அசைய முடியாது. இன்றைய தலித்துகளுக்க்த ் தேவை நல்ல தலைமை. அதைத் திருமாவளவினிடம் இருந்து ஒரு நல்ல படித்த தலைவன் தட்டி பறிக்க வேண்டும். இந்த பெண் பித்தனிடம் தலித் அரசியல் சிக்கியிருப்பது மிகவும் வருத்தப் பட வேண்டிய விஷயம்

Commentsதேறாத நாடகங்கள்
தினம் நடித்து
திடமில்லா உண்ணா நோன்பு
சிரிப்பு காட்டி
படை கொண்ட சிறுத்தையென்று
புலுடா விட்டு
பாறாத்தை சோனியாவின்
காலில் வீழ்ந்து
அடம்பிடித்து ஐயாவின்
செருப்பும் தூக்கி
ஆடுகிறார் பாடுகிறார்
தெருமா அண்ணன்,

விடுதலைப்புலிகள ின்
தம்பியென்றார்,
விளக்குமாறு சோனியாவை
அன்னையென்றார்,
தெலுங்கு தாத்தா கருணாவை
தெய்வம் என்றார்,
கொலைகாரன் டக்கிளஸின்
காலில்வீழ்ந்து
கும்பிடுறேன் அண்ணா
நீ கோவில் என்றார்,
ராஜபக்க்ஷ கையினிலோர் பரிசுமிட்டு
ராப்பகலாய் உனக்காக உழைப்பேனென்றார் ,

புரியாத புதிரான
தெருமா அண்ணன்
வருங்காலம் தாத்தாவின் வசனம் வாங்கி
அரிய பல நாடகங்கள் நடிப்பார் காணீர்,

திங்கள், 21 பிப்ரவரி, 2011

தேசிய தலைவரின் தாயார் காலமானார்

தமிழீழ தேசியத் தலைவர் திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மா இன்று காலை காலமானார்.
இன்று காலை 6:10 மணியளவில் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலையில் காலமாகினார்.
leadersmother

V_Parvathi_amma_02
வேலுப்பிள்ளை பார்வதிப்பிள்ளை இப்புனிதத்தாய் 81வது அகவையில் விண்ணுலகத்தை அடைந்தார்.
ஈழத் தமிழினத்தை அடிமைத் தளையிலிருந்து மீட்டெடுக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எமது தலைவரைப் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கிய அத்தாயை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் நினைவுகூர்ந்து தமது அஞ்சலியைச் செலுத்துமாறு வேண்டிக் கொள்கின்றோம்