உழவே தலையாய்
உழுது வாழ்ந்து...
தொழில்கள் நடத்தி...
வணிகம் செய்து...
வானியல் மருத்துவம்
என்றெல்லாம் சிறந்து,
நானிலமும் திகழ்ந்த
பழந்தமிழர் வாழ்க்கை
மாணவர்களுகுகு வரலாறாய்
தமிழ் மண்ணில் இல்லை...
ஆரியர்களும் ஹர்ஷர்களும்
குப்தர்களும், குஷானர்களுமே
தமிழ் மாணவர்களின்
மண்டைகளிலேற்றப்படுகின்றனர்...
பாரதக் கதைப்புகளும்
புராணப் புளுகுகளும்
ஸ்பைடர் மேனுடனும்
டோராவோடும்...
தொலைக்காட்சி ஊடகங்கள்
தமிழ்ப் பாட்டிகளின்
வாயடைத்தன.
வில், புலி, கயல் என்றால்
bow, tiger, fish ஆ...
விளக்கப்படுத்திக் கேட்கிறான்
தமிழ் மாணவன்...
தமிழ்நாடு டமில் ஸ்டேட் ஆகிப் போனது
தமிழர்கள் இந்தியர்களாயினர்...
கல்வியை ஆளுகிறது ஆங்கிலம்
வழிபாட்டை
வழிமறிக்கிறது சமஸ்கிருதம்
வளங்களை
வாரிச் செல்கின்றன வல்லரசுகள்
தமிழ் நிலத்தை
ஆளுகிறது இந்தியா.,..
தமிழகக் கனிமவளம்...
தமிழகக் கடல்வளம்...
உழவால் விளைந்த வளம்...
உழைப்பால் குவிந்த வளம்...
எல்லாமும்
இந்தியக் கொள்ளைக்குப் பின்
எஞ்சியவையே இம் மக்களுக்கு...
வல்லரசுகள் பிடுங்கிப் போக
தங்கியவையே தமிழ் நிலத்திற்கு...
தமிழ் மண்ணின்
தண்ணீரை உறிஞ்சி
உமிழ்கின்றன
அமெரிக்க "ஆக்குவா' "கின்லே'க்கள்...
கண்ணீர் சிந்தவோ
இழந்தவை அறியவோ
இயலா தமிழக மக்கள்...
அடிமை மக்களுக்கு
விடிவு தெரியவில்லை...
தெரிய வழியின்றி
அவர்களை அமிழ்த்தும்...
குடிப்பும் கும்மாளமுமாய்க்
காமக் கூத்து...
மடியும் மதங்களுமாய்
மயக்கும் போக்கு...
படியும் விளைக்கு
சூதும் விளையாட்டும்...
நடிப்பும் தழுவலுமாய்
திரைப்படக் களிப்பு...
ஒடிகிறது
தமிழக மக்கள் வாழ்க்கை...
இந்தக் கொடிய நிலைக்கு மறுபுறம்
குடியரசு நாளாம் இன்று...
தமிழ்க்குடி கெடுத்த
இந்தியாவும்
வல்லரசுகளும்
குதூகளிக்க...
குடியரசு நாள் யாருக்கு...
தமிழக் குடிகளிடமா
அரசு இருக்கிறது...
அடிமை மக்கள் நாம்...
தமிழ்க்குடி அறுக்கும் இந்தியத்தின்
கொடியறுக்க வேண்டாமா?
வாரிச் செல்லும் வல்லரசுகளின்
வாலறுக்க வேண்டாமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக