தமிழ்த்தாய் வே.பார்வதி வேங்கடம் பிள்ளை அம்மையார் காலமானார்...! ஈழதேசத்தின் கண்ணீர் அஞ்சலி...!
தமிழ் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் தாயார் திருமதி வே. பார்வதி அம்மையார் வல்வெட்டித்துறை மருத்துவமனையில் இன்று காலை சுமார் 06 :10 மணியளவில் மரணம் அடைந்து விட்டார் என்பதை ஆழ்ந்த இரங்கலுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அன்னையின் ஈமக் கிருகைகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என வேண்டுகிறோம்.ஈழமக்களை சிங்கள அடிமைத் தளத்தில் இருந்து விடுவிக்கும் போராட்டத்தை முன்னெடுக்கும் தனயனை பெற்ற இந்த தமிழ் தாயை உலகெங்கிலும் உள்ள ஈழத் தமிழர்கள் மற்றும் உலக தமிழர்கள் நினைவு கூர்ந்து தமது அஞ்சலியை நடத்த வேண்டும் என்று ஈழதேசம் வேண்டுகோள் விடுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக