வியாழன், 24 பிப்ரவரி, 2011

தமிழ்நாடு விடுதலைக்கு ஒன்றிணைவோம்!

1938 இல் தந்தை பெரியாரால் முன்னெடுக்கப்பட்ட "தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கம், மேலும் ஆகஸ்டு 15, 1947 தமிழர்களின் துக்கநாள் என்று அறிவித்தது. 1960 இல் தமிழ்நாடு நீங்கலாக இந்திய வரைபடம் எதிர்ப்புப் போராட்டம் என பல போராட்டங்கள் தமிழ்த் தேசிய எழுச்சிக்கு அடிப்படையை தந்தது. இதுவே தமிழ்நாடு விடுதலை என்ற புரட்சி இலக்கு நோக்கி முன்னேறியிருக்கிறது.
பெரியாரைக் கடந்து தமிழ் மொழி, இனம், பண்பாடு, மீட்சி சிந்தனையாளர்களின் செயல்பாடும், தேசிய விடுதலை நோக்கில் சிந்தித்த மார்க்சிய சிந்தனையாளர்களின் செயல்பாடுகளும், தமிழினத்தின் தனித்த தேசிய அடையாளத்தை உறுதிபடுத்தி விட்டது.
இதுநாள் வரை நம் தமிழகத்தை மேலாண்மை செய்து கொண்டிருக்கின்ற இந்தியச் சிந்தனையும், இடைச் செருகலான திராவிட சிந்தனையும் முடிவுரையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் இந்தியம். திராவிடம் இரண்டுமே உண்மைக்கு புறம்பானது என்பதுதான். தேசிய வரையறைக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாதவற்றை "இந்தியன்' "திராவிடன்' என்ற தேசிய இன அடையாளத்தோடு நிறுவ வலிந்து முயற்சி செய்தது இதன் தோல்விக்கு காரணமாகும். இதனால் இக் கருத்துக்கள் அரை நூற்றாண்டு காலம் கூட பற்றுதியுடன் நீடிக்க முடியவில்லை.
சமூக எதார்த்தத்திற்கு பொருந்தாத இக் கருத்துக்கள் புறந்தள்ளப்பட்டு இயற்கையான தமிழ்த் தேசியம் முன்னுக்கு வந்துள்ளது. யார் விரும்பினாலும், யார் விரும்பாவிட்டாலும் யார் ஆதரித்தாலும், ஆதரிக்கா விட்டாலும் தமிழ்த் தேசியம் அதற்கான அடையாளத்தை உலக அரங்கில் அது நிறுவிக் கொள்ளும். இது சமூக இயங்கியல் விதி.
தமிழ்த் தேசியம் யாருக்கானது? போரின் நலனை முன்னிலைப்படுத்துகிறது? என்பதெல்லாம் நாம் வடிவமைப்பதில்தான் இருக்கிறது. தமிழ்த்தேசியம் முற்போக்கானதா? பிற்போக்கானதா? உழைக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை முன்னிலைப் படுத்தக் கூடியதா? அல்லது ஆதிக்கர்களின் நலனை முன்னிலைப்படுத்தக் கூடியதா? என்பது தமிழ்த் தேச விடுதலை அரசியலின் நிலைப்பாட்டைப் பொறுத்தது. தமிழ்த்தேச விடுதலையை நிறுவக் கூடிய இயக்கங்களின் செயல் நோக்கங்களைப் பொறுத்தது.
இந்நிலையில் நாம் ஒன்றை மட்டும் தெளிவாக சொல்லிவிட முடியும். அதாவது தமிழ்நாடு விடுதலையை யாராலும் தடுக்க முடியாது. அது நிகழ்ந்தே தீரும். இதற்கான அகபுறக் காரணிகள் இன்றைய நிலையில் கூர்மையடையத் தொடங்கி விட்டது. திரை விலக்கப்பட்டு எதிரியும் தெளிவாக தெரிகிறது. தமிழீழத்தில் நடத்திய தமிழினப் படுகொலையும், தமிழகத்தின் மீதான உரிமை மறுப்பு நிகழ்வுகளும், இந்தியாதான் எதிரி என்பதை சாமானிய மக்களும் எளிதில் புரிந்து கொண்டு விட்டார்கள். எனவே, இந்தியாவுக்கு எதிராக தமிழ்த் தேசிய விடுதலையை உயர்த்திப் பிடிக்க வேண்டியது தமிழ்த் தேசிய இயக்கங்களின் கடமையாக இருக்கிறது. இதில் எவ்வகையான சுற்றி வளைப்பும் இல்லாமல் இந்தியாவே நமது முதன்மை எதிரி என்பதை பட்ட வர்த்தனமாக அறிவிக்க வேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை அதாவது நம்முடைய எதிரியைப் பொறுத்தவரை நாம்தான் எதிரிகள் என்பதை இந்திய அதிகார வர்க்கம் முடிவுக்கு வந்து பல காலம் ஆகிவிட்டது. இருந்த போதிலும் முன்பை விட இப்போது அசுர வேகத்தில் நமக்கு எதிராகஅரசு எந்திரங்கள் செயல்படத் தொடங்கி விட்டது. மற்ற எந்த அச்சுறுத்தலையும் விட பிரிவினைவாதமே பயங்கரமானது என்றும் இப்பிரிவினை வாதத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று அதிகார வெறியில் ஆணையிடுகின்றனர் ஆட்சியாளர்கள். காஷ்மீர் மற்றும் வடகிழக்கு தேசங்களின் மீது இந்தியாவின் கோர தாண்டவத்தை நாளும் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அந்த நிலைமைதான் தமிழகத்திலும் தமிழீழ ஆதரவாளர்களையும் தமிழக விடுதலைச் சிந்தனையாளர்களையும், தன்னுடைய எடுபிடியான மாநில அரசின் துணை கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது. இனிவரும் காலங்களில் இவ் ஒடுக்க முறைகள் அதிகரிக்கவே செய்யும். இந்தியாவுடனான அமெரிக்காவின் நெருக்கம், உலகமயமாக்கலின் நடவடிக்கை என அனைத்தும் தேசிய விடுதலைக்கு எதிரானவைதான்.
எனவே எதிரிகள் நம்மை எதிர்த்து ஒன்று திரளும்போது நாம் மட்டும் ஒற்றுமையை பேணாமல் இருப்பது சிறந்ததல்ல. நம்முடைய இன்றைய தேவை என்பது இந்தியாவுக்கு எதிரானப் போராட்டத்தில் நாம் கரம் கோர்க்க வேண்டியதுவே உடனடி தேவையாகும். தமிழ்நாடு விடுதலை என்ற ஒற்றை முழக்கத்தில் அனைத்து தமிழ்த் தேசிய இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டும். ஒன்று சேருவோம்! ஒன்றுபடுவோம்! தமிழ்நாடு விடுதலை பெறுவோம்!

மியான்மர் வல்லரசுகளின் வேட்டைக்களம்

தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய நாடான மியான்மர் ஒன்றிய குடியரசு கடந்த சில நாட்களாகப் பத்திரிகை செய்திகளில் தொடர்ந்து அடிபடுவதை வாசகர்கள் அறிவார்கள். கடந்த நவம்பர் 7 ஆம் நாள் அந்நாட்டை ஆட்சி செய்து வரும் இராணுவ ஆட்சியாளர்கள் கண் துடைப்பாக தேர்தல் நடத்தியதே ஊடக கவனத்திற்கு காரணமாகும். இந்தக் கட்டுரை எழுதப்படும்வரை தேர்தல் முடிவுகள் வெளிவரவில்லை. முடிவுகள் என்னவாக இருந்த போதிலும் போட்டியிட்ட இரண்டு முதன்மை கட்சிகளும் இராணுவ ஆட்சி சார்பானதே என்பதால் எந்த பெரிய மாற்றமும் நடைபெற்று விடப் போவதில்லை. அந்நாட்டில் சனநாயகத்திற்காக போராடி வந்த ஆங்சன் சூசி அவர்களை தேர்தலில் பங்கேற்க இராணுவம் தடை விதித்த காரணத்தினால் அவரது கட்சியினர் இத்தேர்தலை புறக்கணித்துள்ளனர். 1990 இல் இராணுவத்தால் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் முழு வெற்றி பெற்றவர் சூகி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்சாங் சூகி 1991 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். 1990 ஆம் ஆண்டு முதல் 21 ஆண்டுகளில் 15 ஆண்டுகள் வீட்டுச் சிறையிலேயே அடைக்கப்பட்டு இருந்தவர். இப்போதுதான் விடுதலை செய்யப்பட்டு இருக்கின்றார். ஆங்சாங் சூசியை முன்னிட்டும் மனித உரிமை நோக்கிலும், மேலை நாடுகளின் பரப்புரை ஊடாகவும் உலகக் கொடுங்கோலாட்சிகளில் ஒன்றாக மியான்மர் அறியப்பட்டு இருக்கிறது.
இந்திய துணைக்கண்ட ஊடகங்களில் மியான்மர் பற்றிய செய்திகளில், மேற்கத்திய ஊடகங்களின் பார்வையிலேயே வெளியாகின்றன. இதன் காரணமாக உண்மைக்கு வெகு தூரமாக அதன் விபரங்கள் உள்ளன. அவற்றிலிருந்து வேறுபட்ட தேசிய இன நல பார்வையிலான பதிவு இது.
இப்போது மியான்மர் என அழைக்கப்படும் பர்மா நீண்ட நெடிய வரலாற்றுக்குச் சொந்தமானது. பர்மாவுக்கும், தமிழகத்துக்குமான உறவும் கூட தொப்புள் கொடி வகைப்பட்ட நெடிய வரலாறு உடையது. 1853 முதல் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தால் கையகப்படுத்தப்பட்டு 1948 வரை அவர்களின் ஆதிக்கத்திலேயே இருந்தது.
1948 ஜனவரி 4ம் நாள் சுதந்திர குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்ட பர்மா இந்தியாவைப் போலவே தரகு முதலாளிகளின் ஆளுகையில் இருந்தது. இந்த புதிய ஆட்சி மக்களுக்கு எந்த சுதந்திரத்தையும் கொண்டு வந்திடாத நிலையில் வெகு மக்கள் அதிருப்தியுற்றவர்களாக காலம் தள்ளினர்.
மக்களின் அதிருப்தியை பயன்படுத்திக் கொண்ட இராணுவம் 1962ல் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டது. மக்களின் தேசிய அபிலாஷைகளை ஓங்கி ஒலித்த இந்த ஆட்சி புத்த மதத்தையும், மார்க்சியத்தையும் கலந்து கட்டிய பர்மிய பாணி சோசலிஸத்தை நடைமுறைப்படுத்துவதாக சொல்லிக் கொண்டது. 26 ஆண்டுகள் இராணுவ ஆட்சியை நடத்திய இராணுவத் தலைவர் நீவின் அடுத்த 14 ஆண்டுகள் பர்மிய சோசலிச திட்டக் கட்சி என்பதன் பெயரால் ஒரு கட்சி ஆட்சி முறையை வழங்கினார். இந்த ஆட்சி காலத்தில் அனைத்தும் அரசுக் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டு தேசிய மயமாக்கப்பட்டது. உறுதிப்படுத்தப்பட்ட ஆட்சியும் எதிர்ப்புக்கு இடமில்லாத ஒழுங்கும் நிலைநாட்டப்பட்டது.
இன்றைய உலக அரசியலை ஒற்றை வரியில் சொல்வதானால் இனங்களை அழிப்போர்க்கும், இன நலன்களை காக்க முயல்வோருக்குமான முரண்பாடும் இயற்கையை அபகரிக்க முயல்வோருக்கும் அதனை பாதுகாக்க போராடுபவர்களுக்கமான முரண்பாடுமே ஆகும். தேசிய இன அரசியலை பொறுத்தவரை அதனை முன் வைக்கிற கட்சி அல்லது ஆட்சி நல்லதா கெட்டதா என்பதை அளவிட 5 கூறுகளை உள்ளடக்கிய அளவுகோலை பயன்படுத்தலாம். அவை
1.     குறிப்பிட்ட தேசிய இன அமைப்பு/ ஆட்சி உலக வல்லரசிய அதிகார மையங்களோடு என்ன வகையான உறவைப் பேணுகிறது?
2.     சொந்த தேசிய இனத்திற்குள் இருந்து வரும் எதிர்ப்பை அல்லது துரோகத்தை எப்படி எதிர்கொள்கிறது?
3.     தனது இனத்தோடு வரலாற்றுப்பூர்வமாய் இணைந்து இருக்கும் இனச் சிறுபான்மையினரை எவ்வாறு கையாள்கிறது?
4.     அண்டை இனங்களோடு என்ன விதமாக உறவையும் பகையையும் பேணுகிறது?
5.     தனது இனத் தலைமையை கட்டமைப்பதில் எத்தகைய ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றுகிறது?
என்பனவே அந்த அளவுகோல். ஒரு தேசிய இன அமைப்பு அல்லது ஆட்சி இனநல செயல்பாடுகளில் உறுதிபட ஈடுபட்டாலும் தலைமையை உருவாக்குவதில் ஏதேச்சதிகாரப்போக்கும் சொந்த இனத்திற்குள் இருந்து வரும் எதிர்ப்பை சகிப்புத்தன்மையற்று ஒடுக்குதலும் வரலாற்று பூரவமாக இணைந்து இருக்கும் இனச் சிறுபான்மையினரோடு பகைமையை பேணுதலும் சண்டை இனங்களோடு தொலைநோக்கற்ற உறவும், பகையும் வல்லரசுகளிடம் அடிபணிதலும், ஆன அணுகுமுறையை கொண்டிருந்தால் நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் விளைவு கேடானதாகவும், சொந்த இனத்திற்கு அழிவானதாகவுமே முடியும் என்பதற்கு இன்னும் ஓர் எடுத்துக்காட்டு மியான்மர்.
பர்மாவைப் பொறுத்தவரை அந்நாட்டு அரசாலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் அங்கு வாழ்கிறார்கள். பாமர் என்கிற இனமே அவற்றில் பெரும்பான்மையானது. ஷன், காய்ன் என்கிற சிறுபான்மை இனங்களை ஒடுக்குவதன் ஊடாகவே பர்மா தன் பேராண்மையை நிலைநாட்டிக் கொள்கிறது. மக்களின் தேசிய இன அபிலாஷை சார்ந்த ஆதரவோடு ஆட்சியை கைப்பற்றிய படையினர் அந்த மக்களை பார்வையாளராகவும் பயன்படுத்திக் கொள்பவர்களாகவும் கருதி கையாண்டதன் விளைவே இன்றைக்கு அவர்கள் எதேச்சாதிகாரிகாய் இழித்துரைக்கப்படுகிறார்கள். எதிரிகளுக்கு அஞ்சி சொந்த குடிமக்களையும் இனச்சிறுபான்மையினரையும் ஒடுக்கியதன் விளைவு உலக பேட்டை ரவுடி அமெரிக்காவின் முன் கை கட்டி நிற்க வேண்டியுள்ளது. அமெரிக்காவுக்கு அஞ்சி ஈழத்திலும், திபெத்திலும் இன அழிப்பில் ஈடுபட்ட சீனாவின் பாதுகாப்பைப் பெற வேண்டி இருக்கிறது.
சொந்த நாட்டு மக்களின் ஆதரவை பெற முடியாததால் உள்நாட்டு உற்பத்தியை இழந்து போதைப் பொருள் கடத்தல் நாடுகளின் முக்கோணப் புள்ளியின் முதல் புள்ளியாய் திகழ வேண்டி இருக்கிறது. இயற்கை வளமிக்க பர்மா வறுமையில் வாட வேண்டியுள்ளது. இதன் விளைவாக 1998 இல் நடைபெற்றது போன்ற சொந்த மக்களின் கிளர்ச்சி எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்ற அச்சத்தில் உலகின் 12வது மிகப் பெரிய இராணுவமாக 4 லட்சத்து 88 ஆயிரம் துருப்புகளோடு தனது படைபலத்தை ஊதிப் பெருக்கி கொள்ள வேண்டி இருக்கிறது. இவையெல்லாவற்றுக்குமான நாம் முன் சொன்ன ஐந்து உறவுகளில் தொடங்கிய முதல் கோணல்தான் முற்றும் கோணலாக முடந்திருக்கிறது.
உள்ளபடியே 1962ல் தரகு முதலாளித்துவ ஆட்சியை தூக்கி எறிந்தபோது படையினர் சொந்த மக்களையும் இனச் சிறுபான்மையினரையும் இணைத்துக் கொண்டு அவர்களின் குடிநாயக உரிமைகளுக்கு குறைவு வராமல் பார்த்துக் கொண்டு இருந்தால் இன்றைக்கு அமெரிக்காவிற்கு அஞ்சி சீனாவிடம் சரணாகதி அடைந்திருக்க வேண்டிய தேவை இல்லை. குடிமக்களுக்கஞ்சி இராணுவத்தை ஊதிப் பெருக்கி இருக்க வேண்டிய தேவை இல்லை.
உலகின் மிகப் பெரிய அரிசி ஏற்றுமதி வளத்தை இழந்திருக்க வேண்டிய அவசியமில்லை. உலகின் 75 விழுக்காடு தேக்கு மரங்களை உற்பத்தி செய்த காட்டு வளம் காணாமல் போயிருக்காது. இப்படி இப்படி ஏராளமாய் சொல்லிச் சொல்லலாம்.
தேசிய இன அரசியல் என்பது இன்றும், என்றும் இன மக்களின் நலவாழ்வு உறுதி செய்வதற்காகவும், பாரம்பரியமாய் தான் பெற்றிருந்த இயற்கை வளத்தை அறிவுச் செல்வத்தை பண்பாட்டு விழுமியங்களை புதிய உலகத் தேவைக்கேற்ப புணரமைத்து பாது காத்துக் கொள்வதற்காகவும்தான். இவற்றையெல்லாம் பறிகொடுத்துவிட்டு உதட்டில் வீரமும், உள்ளங்கைகளில் கருவிகளும் சுற்றிலும் மரண ஓலமாய் எஞ்சியிருப்பதில் என்ன பயன்? தேசிய இன அரசியலில் ஈடுபடுவோர் இப்படியாக எண்ணிப் பார்த்து பயின்று கொள்ள மியான்மரும் ஒரு பாடம்.
நிறைவாக மியான்மர் விடயத்தில் வழக்கம் போல் இந்தியா எவ்வாறு கேவலமாக நடந்து கொண்டது என்பதை விசுவாசமான இந்தியனான அமர்த்தியா சென் சொன்னது இது: (நன்றி: பாடம் 18) நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமர்த்யா சென் ஜான் ஹாப்கின் பல்கலைக் கழகத்தில் சமீபத்தில் நடத்திய உரையின்போது, சீன அரசின் கொள்கையைப் போன்றே, இந்திய அரசின் மியான்மர் (பர்மா) தொடர்பான கொள்கையும், மிகக் கேவலமாக உள்ளது என வருந்தியுள்ளார். கடந்த 48 வருடங்களாக, பர்மா, ராணுவ அதிகாரிகளின் முரட்டுத்தனமான அடக்குமுறையினால் அவர்களது கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. ஜனநாயகப் போராளியும், கட்சித் தலைவரும், நோபல் பரிசு பெற்றவருமான "ஆங் சான் குக்யி', கடந்த 20 வருடங்களாக வீட்டுக் காவலில் தான் வைக்கப்பட்டுள்ளார்.
"சீனா உலகத்தின் தாதா'வாக (வல்லரசு) நடந்து கொள்ள முயன்று வருகிறது. தனது நாட்டின் சக்தியை நிலைநாட்டிக் கொள்ளும் குறுகிய மனப்பான்மையுடன், வடகொரியா, பர்மா போன்ற மோசமான கொடுங்கோல் அரசுகளுக்குத் துணை நிற்கிறது. இந்தியாவும், சீனாவை அப்படியே காப்பி அடிக்க முயல்கிறது' என்கிறார் அமர்த்யா சென்.
"இந்தியா உலகளவில் செல்வாக்கற்ற நாடாக இருந்த காலங்களில் உலக நாடுகளுக்கு ஒழுக்கம் பற்றி பாடம் எடுப்பதிலேயே நேரத்தை கழித்துக் கொண்டிருந்தோம். சீனா அளவிற்கு இல்லையென்றாலும், ஓரளவிற்கு இப்பொழுது ஆற்றல் பெற்றவுடன், ஒழுக்கத்தையும், விழுமியங்களையும் குழிதோண்டிப் புதைத்து விட்டு, நமது பொறுப்புகளைத் தட்டிக் கழிக்கிறேம்'' என்கிறார் சென். “உலகின் மனிதாபிமானம் மிக்க தலைவர்களில் ஒருவரான, எனது இந்திய நாட்டின் பிரதமர் மன்மோகன் சிங், மியான்மரின் கொலைகார ஆட்சியாளர்களுக்கு சிவப்புக் கம்பளம் விரித்து, அவர்களுடன் கைகுலுக்கி மகிழ்ச்சியுடன் இணைந்து நின்று புகைப்படும் எடுத்துக் கொள்கிறார். இதனைப் பார்க்கும்போது, இந்தியாவின் விசுவாசக் குடிமகனான எனது இதயம் நொறுங்கி விட்டது'' என்று பேசியுள்ளார் அமர்த்யா சென். பர்மாவில் உள்ள கொடுங்கோலாட்சி பற்றியும் அங்கு உள்ள மோசமான மனித உரிமைச் சூழல் பற்றியும் இந்திய மக்களிடம் பொதுக்கருத்து சிறிதும் இல்லை என்கிறார் அமர்த்யா சென்.

இந்திய துணைக்கண்டத்தின் புதிய மதம் கிரிக்கெட்

ஒரு விளையாட்டுக்கு இத்தனை முக்கியத்துவமா? என்றாலோ, கிரிக்கெட்டின் மீது இப்படி காதல் கொண்டலைவது சரிதானா? என்றாலோ நம்மை புழுவை விடவும் கீழாய் கருதத்துணியும் மக்களிடையே இருந்து கொண்டிருக்கிறோம். ஊன், உறக்கம், பணி என அனைத்தையும் கடந்த பக்தி போதையின் பரவசத்தைத்தரும் ஒன்றாக கிரிக்கெட் ஆகிவிட்டது. சாதாரணமாக இரண்டு நாடுகள் ஆடும் போதுகளிலேயே இது தான் நிலமை எனும்போது உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும்போது கேட்கவும் வேண்டுமோ. உற்சவம் தான்.

ஆனால், நம்மைச் சூழ நடக்கும் அனைத்தையும் விட ஒரு விளையாட்டு நம் கவனத்தை விழுங்கிவிட முடிவது எப்படி நம்முள் இயல்பாய் ஏற்பட்டிருக்க முடியும்? மகிழ்வாய் வாழ்வது, சொகுசாய் வாழ்வது எனும் இரண்டின் வேறுபாட்டையும் பிரித்தறிய முடியாதபடி ஒன்றாய் கருதிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் இந்தக் கேள்வியின் பொருளைச் செரிப்பது சற்றுக் கடினம் தான். காரணம், நம்முடைய விருப்பங்கள் நம்மீது திணிக்கப்படுபவை என்பதை நாம் இன்னும் முழுமையாய் அறிந்துகொண்டிருக்கவில்லை. விளையாட்டு என்பது நம்முடைய உற்பத்தித் திறனைச் சார்ந்து அதனை மேம்படுத்திக்கொள்ள நாம் ஈடுபடும் ஒரு கலைவடிவம் என்பது மாறி தொழில்நுட்பமும் சந்தை வணிகமும் அதில் கலந்து விளையாட்டு என்பது உற்பத்திப் பொருளான போது நாம் அதன் நுகர்வு அடிமையாகிப் போனோம்.

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆடப்படும் கால்பந்து விளையாட்டு இங்கு எந்தக் கவனத்தையும் ஈர்க்காத ஒன்றாக இருக்கிறது. பல நாடுகளில் கிரிக்கெட் என்ற ஆட்டமே அறிமுகமாகியிருக்கவில்லை. இந்த இரண்டு இடங்களின் மக்களையும் பொதுவான ஒரு ஒப்பீடு செய்து பார்த்தாலே அந்தத்தப் பகுதிகளில் குறிப்பிட்ட விளையாட்டுகள் எப்படி மக்களிடம் திணிக்கப்பட்டு கொள்ளை லாபமீட்டும் தொழிலாக நடந்துவருகிறது என்பது புரியும். இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் விளைவாக உலகின் எந்தப்பகுதியில் விளையாடினாலும் நேரடியாகக் க்காணும் வசதி முதலாக‌, அனைத்து செய்தி ஊடகங்களும் தொடர்ச்சியாக இது குறித்த செய்திகளை வெளியிட்டு மக்களின் நினைவெல்லையிலிருந்து அகன்றுவிடாதவண்ணம் இருத்திவைப்பது ஈறாக அத்தனை வழிகளிலும் இது மக்களின் மனதில் பதியவைக்கப்படுவதினாலேயே சாத்தியப் படுத்தப்பட்டிருக்கிறது. ஆழமான புரிதல் இல்லாத யாரும் இதில் தனிப்பாட்ட விருப்பம் எதையும் கொண்டுவிட முடியாது.

இந்த உலகக் கோப்பை போட்டியைப் பொருத்தவரை, கடந்த போட்டியில் முதலாளிகளுக்கு ஏற்பட்ட நட்டத்தின் காரணமாக எச்சரிக்கையுடன் முதலீடுகள் செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் கூட ஆயிரக்கணக்கான கோடிகள் இதற்காக செலவிடப்பட்டுள்ளன. விளையாடுபவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியம் உட்பட இதில் செலவு செய்யப்படும் அனைத்திற்கும் பகரமாக பலமடங்குகளில் லாபமீட்டாவிட்டால் இந்த விளையாட்டு சீந்துவாரின்றிப் போகும். ஆனால் அவ்வாறில்லாமல் மேலும் மேலும் இதில் கொட்டப்படுவதிலிருந்தே இது எந்த அளவுக்கு வெற்றிகரமான தொழிலாக இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

கிரிக்கெட் விளையாட்டில் கோடிகளைக் கொட்டும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு கிடைக்கும் லாபமென்ன? இந்தியச் சந்தையைக் கைப்பற்றுவதுதான். உலக அளவில் கிரிக்கெட்டிலிருந்து கிடைக்கும் மொத்த வருவாயில் 70 விழுக்காடு இந்தியாவிலிருந்து கிடைக்கிறது. பெப்சி, கோக், நைக் ஷூ உள்ளிட்ட பல நிறுவனங்கள் கிரிக்கெட்டைப் பயன்படுத்தி தங்கள் சந்தையை விரிவுபடுத்திக்கொண்டதன் மூலம் பல்லாயிரம் கோடிகளை லாபமாக ஈட்டியிருக்கின்றன. இந்தியாவில் இந்த உலகக் கோப்பை போட்டியை மட்டும் 30லிருந்து 40 கோடி பேர்வரை காண்பார்கள் என கணிக்கப்பட்டிருக்கிறது. இவர்களிடம் தங்கள் உற்பத்திப் பொருட்களை விளம்பரங்களாக மீண்டும் மீண்டும் காட்டி பதியவைக்கப்படுவதன் மூலமே இந்த விற்பனை சாத்தியப்படுத்தப் பட்டிருக்கிறது. ஆக, பன்னாட்டு நிறுவனங்களின் விளம்பரங்களை தொடர்ச்சியாக பார்க்கவைப்பதற்காகவே கிரிக்கெட் பயன்படுத்தப்படுகிறது. சரி, இந்த விளம்பரங்களுக்காக செலவிடப்படும் பணத்தை அந்த நிறுவனங்கள் உற்பத்திச் செலவுகளாகத்தான் வகைப்படுத்துகின்றன. அதாவது உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலையில் கிரிக்கெட்டிற்காக செலவிடப்படும் தொகையும் அடக்கம். அதையும் உள்ளடக்கித்தான் விலை தீர்மானிக்கப்படுகிறது. என்றால் அந்தப் பணத்தைச் செலுத்துவது யார்? சந்தேகமென்ன மக்கள் தான். சுற்றிவளைத்து மக்களிடம் இருக்கும் கிரிக்கெட் மோகம் மக்களைச் சுரண்டி முதலாளிகளிடம் சேர்க்கும் உத்தியாகவே பயன்படுத்தப்படுகிறது. இதை நாம் விருப்பப்பட்டு தேர்ந்தெடுக்கிறோம் என்றோ, தேசபக்தியின் அடையாளம் என்றோ கூற முடியுமா?

லட்சக்கணக்கான விவசாயிகள் செத்து வீழ்ந்தபோது ஏற்படாத‌ சோகமும், கோபமும் ஒரு போட்டியில் தோற்கும்போது ஏற்படுகிறது என்றால் எந்த விதத்தில் இது தேசபக்தி? ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்படும் குழந்தைகள் அதிகம் வாழும் நாடு எனும்போது ஏற்படாத அவமானம் ஒரு போட்டியில் தோற்கும்போது ஏற்படுகிறது என்றால் எந்த அடிப்படையில் இது தேசபக்தி? இந்தியர்கள் விளையாடினால் எதிரில் யாராக இருந்தாலும் தோற்க வேண்டும் என நினைப்பது எப்படி தேசபக்தியாகும்? ஐ.பி.எல் போட்டிகளின் போது எந்த நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தன்னைச் சார்ந்த அணியாக இருந்தால் ஏற்றுக்கொண்டு அதே விளையாட்டு வீரன் அவ‌னுடைய நாட்டு அணியில் விளையாடும் போது எதிரியாக பார்ப்பது விளையாட்டா? வெறியா? இதை எப்படி தேசபக்தி என்பது?
இதில் இந்திய அணி விளையாடுகிறது, இந்தியாவுக்காக விளையாடுகிறார்கள் என்பதே மோசடியானது. விளையாடுவது அரசு தேர்ந்தெடுத்து அனுப்பும் அணியல்ல அது. பிசிசிஐ எனும் தனியார் அமைப்பு தேர்ந்தெடுத்து, அதனுடைய கட்டுப்பாட்டிலிருந்து ஆடும் அணி என்பதே சரியானது, தவிரவும் விளையாடுபவர்கள் பணத்திற்காகவே விளையாடுகிறார்கள். இதன் மீது தேசியம் வெளிப்பூச்சாக பூசப்பட்டிருக்கிறது. நமக்கு கிரிக்கெட் மீதான மோகம் வற்றிவிடக்கூடாது என்பதற்காக பூசப்பட்ட வெளிப்பூச்சு தான் இந்திய அணி என்பது

மட்டுமல்லாது, வெளியில் தெரியும் அத்தனை பகுதிகளிலும் விளம்பரங்களை எழுதி நடமாடும் விளம்பரத்தட்டியாக நின்று ஆடுபவனை நாட்டுக்காக விளையாடுபவன் என்பது எந்த வகையில் பொருந்தும்? மேட்ச் பிக்சிங், ஸ்பாட் பிக்ஸிங் தொடங்கி அனைத்து ஊழல்களிலும் ஈடுபட்டு விளையாட்டின் முடிவை முன்கூட்டியே தீர்மானிக்கும் அளவுக்கு சென்றுவிட்ட பிறகும் நாட்டுக்காக விளையாடுகிறார்கள் என்பதா? வெளிப்படையாக ஒப்பந்தம் போட்டு மட்டையிலிருக்கும் நிறுவனந்த்தின் பெயரை கேமராவில் காண்பித்தால் அதற்கு தனியே காசு என விளையாட்டை அவர்கள் தொழிலாக்கி விட்டிருக்க, சொந்த வேலையை விட்டுவிட்டு கிரிக்கெட் பார்க்கும் இரசிகனை என்னவென்பது?

கல்வி, மருத்துவம் போன்றவற்றை மக்களுக்கு வழங்குவதற்காக அரசு மக்களிடம் சேவை வரி விதிக்கிறது. ஆனால் இந்த கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது சேவை என்று கூறி பிசிசிஐ எனும் தனியார் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அரசு வரிவிலக்கு அளித்திருப்பதை கிரிக்கெட் இரசிகன் என்னவென்று புரிந்து கொள்வான்?

கிரிக்கெட் எனும் விளையாட்டைச் சூழ்ந்திருக்கும் இவை எதும் எந்த விதத்திலும் சலனப்படுத்தாது, அதில் அடிக்கப்படும் ஃபோர்களும் சிக்ஸர்களும் மட்டும் பரவசத்தைத்தரும் எனக் கூறும் ஒரு ரசிகன் மனிதனாக இருக்கமுடியுமா என்பதை சிந்தித்துப் பார்க்க இதைவிட பொருத்தமான தருணம் வேறு இருக்க முடியாது

சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்

சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்
பிணங்களை சுவைத்த பாசிச வெறி நாய்க்கு
புனிதத்தை கொடுக்க கிளம்பியிருக்கின்றன
எட்டப்பனின் வாரிசுகள்
ஈழத்தை பிணத்தால் அடித்தோம்
தமிழகத்தை பணத்தால் அடித்தோம்
பெருமையில் வெறி நாய் ராஜபட்சே
ஆலோசனை சொல்லியிருப்பான் ராஜபட்சே
திருமாகிழவனுக்கு. விடுதலை சிறூத்தை வேண்டாம்
விடுதலை பெருச்சாளி என்று வைத்துக்கொள்.
பெருச்சாளிக்கு கோபம் வராது – ஏனென்றால்
அது ராஜபட்சே அடித்த ஜோக்கு.
ஈழத்தில் நடந்த பச்சை படுகொலையும்
இனி ஜோக்கு, அதை பெருச்சாள் அறிவிக்கலாம்.
சிங்கள கடற்படை எங்கள் மீனவர்கள்மீது
தாக்குதல் நடத்துவதும் ஜோக்கு.
எல்லாமே ஜோக்கு.
இனி தமிழனென்றால் பேக்கு.
ஆனால் நாம் சொல்வது ஜோக்கு அல்ல
“பிரபாகரன் மட்டும் எங்களோடு இருந்திருந்தால்
சிங்கள ராஜபட்சே நாயே நீ உயிரோடு இருந்திருக்க மாட்டாய்”
(இலங்கை சென்ற திருமாவளவனிடம் வெறிநாய் ராஜபட்சே “ நீங்கள் பிரபாகரனோடு இருந்திருந்தால் உயிரோடிருந்திருக்கமாட்டீர்கள்” என வெறியை கக்கியிருக்கிறான்.அதை ஜோக்-ஆக நினைத்ததாக திருமா சொல்லியுள்ளார்.)

எரித்திரியா தேசிய விடுதலை

ethiopia1ethiopiaஆப்பிரிக்க கண்டத்தில், எந்தவொரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரேயொரு நாடு எத்தியோப்பியா. 1896 ம் ஆண்டு, காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி நடத்திய போரில், எத்தியோப்பியப் படைகளிடம் அவமானகரமான தோல்வியை சந்தித்தது. துப்பாக்கிகள், பீரங்கிகள் போன்ற நவீன ஆயுதங்களை ஏந்தியிருந்த இத்தாலி இராணுவம், வாள், அம்பு-வில், போன்ற புராதன கருவிகளேந்தி போரிட்ட எத்தியோப்பியர்களிடம் தோல்வியுற்றது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆனால் இந்த சரித்திர உண்மையை நம்பித் தான் ஆக வேண்டும். இப்போதே உங்களால் நம்ப முடியவில்லை என்றால், அன்று இந்த செய்தி ஐரோப்பாவில் எத்தகைய அதிர்வலைகளை தோற்றுவித்திருக்கும்? ஐரோப்பியர்கள் அந்த காலனியப் போருக்குப் பிறகு தான், “எத்தியோப்பியா நாகரீகமடையாத காட்டுவாசிகளின் தலைவனால் ஆளப்படும் கிராமமல்ல.” என்ற உண்மையை புரிந்து கொண்டார்கள். எத்தியோப்பிய சக்கரவர்த்தி “மெனலிக்”, ஐரோப்பிய அரசர்களுக்கு நிகரானவராக மதிக்கப்பட்டார். போருக்குப் பின்னர், இத்தாலி எத்தியோப்பியாவுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டது. ஆனால் செங்கடல் ஓரமாக இருக்கும் எரித்திரியாப் பகுதிகளை மட்டும் தன் வசம் வைத்துக் கொண்டது. இருப்பினும் கடல் எல்லை பறிபோனது, எத்தியோப்பியாவிற்கு இழப்பு தான். இத்தாலிய காலனிய நிர்வாகத்தின் கீழ் இருந்த எரித்திரியா பிற்காலத்தில் நீண்ட தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டது. இது குறித்து பின்னர் பார்ப்போம்.
udc-gas-masks-4இத்தாலிய தேசியவாதிகளால் எத்தியோப்பிய தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை. பழிக்குப்பழி வாங்க வேண்டும் என கறுவிக் கொண்டனர். இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில வருடங்களுக்கு முன்னர், இத்தாலியில் தேசியவாதிகள், இனவாதிகளின் ஆதரவுடன் பாஸிச சர்வாதிகாரி முசோலினியின் ஆட்சி ஏற்பட்டது. முசோலினி பழிவாங்கும் படை நடவடிக்கையை எடுத்தார். இம்முறை இத்தாலியப் படைகள் எத்தியோப்பியாவை ஆக்கிரமித்தன. அந்த வெற்றி எவ்வாறு சாத்தியமாகியது? உலக வரலாற்றில் முதன் முதலாக போரில் விஷ வாயு பிரயோகிக்கப்பட்டது. லட்சக்கணக்கான எத்தியோப்பிய மக்களை விஷ வாயு மூலம் கொன்று குவித்து, அந்தப் பிணங்களின் மீது தான் இத்தாலி தனது ஆதிக்கத்தை நிலைநாட்டியது. மேற்குலக நாடுகள் தமது சரித்திர நூல்களில் மறைக்க விரும்பும் அத்தியாயம் அது. இத்தாலியின் ஆக்கிரமிப்பு அதிக காலம் நீடிக்கவில்லை. விரைவில் இரண்டாம் உலகப் போர் மூண்டு, இத்தாலி ஜெர்மனி பக்கம் சேர்ந்ததால் போரில் தோற்க வேண்டியேற்பட்டது. அப்போது வட ஆப்பிரிக்காவில் களமிறங்கிய பிரிட்டிஷ் படைகள், எரித்திரியாவையும், எத்தியோப்பியாவையும் விடுவித்தன. அப்போது ஒரு சுவையான சம்பவம் இடம்பெற்றது. பிரிட்டிஷ் படைகளை வரவேற்க வீதிகளில் எரித்திரிய மக்கள் குழுமியிருந்தனர். வீதியில் வெற்றிப்பவனி வந்த பிரிட்டிஷ் ஜெனரல் ஒருவரிடம், தம்மை விடுதலை செய்ததற்காக ஒரு எரித்திரியப் பெண்மணி நன்றி தெரிவித்தார். அப்போது அந்த ஜெனரல் இவ்வாறு பதிலளித்தார் : “கறுப்பியே! நான் உன்னை விடுதலை செய்வதற்காக இங்கே வரவில்லை!!”
உலகப்போருக்குப் பின்னர் முன்னாள் இத்தாலிய காலனியான எரித்திரியா, மீண்டும் எத்தியோப்பியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஐ.நா. சபை எரித்திரியா தனியான நாடாக இருக்க உரிமை உண்டு என கூறியது. அது நடைமுறைச் சாத்தியமாகாததற்கு, பின்னணியில் பிரிட்டிஷ் அழுத்தம் காரணமாக இருந்திருக்கலாம். 50 ஆண்டு கால காலனிய கலாச்சாரம், ஒன்பது மொழிகள் பேசும் எரித்திரிய மக்கள் மத்தியில் பொதுவான தேசியத்தை உருவாக்கியது. அந்த உணர்வாலேயே பிற எத்தியோப்பியர்களிடமிருந்து தாம் சிறந்தவர்களாக கருதிக் கொண்டனர்.உலகில் பல்வேறு தேசிய விடுதலைப் போராட்டங்கள், ஒரு குறிப்பிட்ட இனத்தை, மொழியை, மதத்தை அடிப்படையாக கொண்டு நடப்பது பலருக்கு தெரியும். ஆனால் முன்னாள் காலனிய பிரதேசம் ஒன்றுக்கு சுயநிர்ணய உரிமை, என்று சொல்கிறது ஐ.நா.மன்றம். அது எப்படி? இங்கே தான் “தேசியம் என்றால் என்ன?” என்று மேலைத்தேய நாடுகள் கொடுக்கும் விளக்கங்கள் நமது புரிதலில் இருந்து முற்றிலும் வேறுபடுகின்றது. மூன்றாம் உலக நாடுகளைப் பொறுத்தவரை, அன்றைய காலனிய நிர்வாகத்திற்குட்பட்ட பிரதேசம் மட்டுமே தேசியமாக அங்கீகரிக்கப்படுகின்றது.
ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் கோரியுள்ள ஆயிரக்கணக்கான எத்தியோப்பிய, எரித்திரிய அகதிகள் ஒரே மொழி (அம்ஹாரி) பேசுவதை அவதானித்திருக்கிறேன். கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை சேர்ந்தவர்கள் இரண்டு பக்கமும் இருந்தனர். இதனால் எரித்திரிய தேசிய விடுதலைப் போராட்டம் எந்த வேறுபாட்டை அடிப்படையாக கொண்டு நடந்தது என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. இறுதியில் எனது நண்பரான, முன்னை நாள் எரித்திரிய விடுதலைப் போராளி ஒருவரிடமிருந்து பல தகவல்கள் கிடைத்தன. தேசிய விடுதலைப் போராட்டம் ஆரம்பத்தில் இஸ்லாமிய Eritrean Liberation Front (ELF) இனால் முன்னெடுக்கப்பட்டது. மொத்த சனத்தொகையில் கணிசமான அளவு (50%) முஸ்லிம்கள் உள்ளனர். இதனால் லிபியா, சூடான் போன்ற நாடுகளும் ஆதரித்தன. ELF இலிருந்து பிரிந்த, Eritrean People’s Liberation Front (EPLF) ஆரம்பத்தில் மார்க்ஸிஸம் பேசினாலும், அது ஒரு தேசியவாத இயக்கமாகவே இருந்தது. அம்ஹாரி, திக்ரின்யா, அரபு, அபார் ஆகிய மொழிகளை பேசும் பல்வேறு இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதே மொழிகளைப் பேசும் மக்கள் எத்தியோப்பியாவிலும் வாழ்கிறார்கள். இருப்பினும் திக்ரின்யா மொழி பேசுபவர்கள் சற்று அதிகம் என்பதால், இன்றைய சுதந்திர எரித்திரியாவில் அதுவே ஆட்சி மொழி.
tegadalitEPLF இயக்கம் அனேகமாக எந்தவொரு நாட்டிடம் இருந்தும் நிதியுதவி பெற்றதாக குறிப்புகள் இல்லை. எத்தியோப்பியாவுடன் பகைமை பாராட்டிய சோமாலியாவும், சூடானும் உதவி செய்த போதிலும், பெருமளவு நிதி புலம்பெயர்ந்த எரித்திரிய மக்களிடம் இருந்தே கிடைத்து வந்தது. கட்டுப்பாட்டுடன் ஒழுங்கமைக்கப்பட்ட கெரில்லாக்கள், அமெரிக்க உதவி பெற்ற எத்தியோப்பிய மன்னரின் இராணுவத்தை தீரத்துடன் எதிர்த்து போராடி வந்தனர். 1974 ம் ஆண்டு, மன்னராட்சி சதிப்புரட்சி மூலம் தூக்கி எறியப்பட்டு, மார்க்ஸிச இராணுவ அதிகாரிகள் ஆட்சியமைத்தனர். அந்த நேரம் பார்த்து, சோமாலியா எத்தியோப்பியா மீது படையெடுத்தது. எத்தியோப்பியாவின் கிழக்குப்பகுதி மாகாணத்தில் சோமாலி மொழி பேசும் மக்கள் வாழ்வது குறிப்பிடத்தக்கது. படையெடுப்பாளருக்கு அகண்ட சோமாலியா அமைக்கும் நோக்கம் இருந்திருக்கலாம். புதிய அரசு எவ்வளவு கேட்டும், அமெரிக்க உதவி வழங்க மறுத்தால், சோவியத் யூனியனிடம் உதவி கோரியது. அதுவரை சோமாலியா பக்கம் நின்ற சோவியத் யூனியன், பூகோள அரசியல் நலன் கருதி எத்தியோப்பியாவிற்கு உதவ முன்வந்தது. உடனடியாக கியூபா வீரர்கள் தருவிக்கப்பட்டு, சோவியத் ஆயுதங்களை கொண்டு போரிட்டு, சோமாலிய படையெடுப்பு முறியடிக்கப்பட்டது.
1974 ம் ஆண்டிலிருந்து, 1991 ம் ஆண்டு வரை எத்தியோப்பியாவை ஆண்ட மென்கிஸ்டு சோவியத் உதவி தாராளமாக  கிடைத்து வந்ததால், சோஷலிச சீர்திருத்தங்களை  முன்னெடுத்து வந்தாலும், அடக்குமுறையும், கொலைகளும் குறையவில்லை. சோவியத் யூனியனும், கியூபாவும் இது குறித்து தமது அதிருப்தியை தெரிவித்து வந்தாலும், மென்கிஸ்டு எல்லாவற்றையும் சோஷலிசத்தின் பெயரில் ஏமாற்றி வந்தார். எத்தியோப்பியாவின் பிற தேசிய இனங்களின் உரிமைகள் மறுக்கப்பட்டன. அம்ஹாரி தேசிய மொழியாகியது. எத்தியோப்பியாவின் கடைசி சக்கரவர்த்தி ஹைலெ செலாசி காலத்திலேயே, “அம்ஹாரி மொழி மேலாதிக்கம்” ஆரம்பமாகி விட்டது. அரசாங்க உத்தியோகம் பெற விரும்புவோர் அம்ஹாரி மொழி பேச வேண்டும் என்ற சட்டம் வந்தது. ஹைலெ செலாசியும், மென்கிஸ்டுவும் சிறுபான்மை இனங்களின் எதிர்ப்பியக்கத்தை கொடூரமாக அடக்கினார்கள். பட்டினிச் சாவுகள் ஒரு அடக்குமுறை ஆயுதமாகவே பயன்படுத்தப்பட்டது.
ஆப்பிரிக்கா என்றதும் உணவின்றி வாடும் குழந்தைகளும், பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும் மக்களும் ஞாபகத்திற்கு வருமளவிற்கு, எத்தியோப்பியாவின் பஞ்சக் காட்சிகளை தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும்  ஒளிபரப்பின. இதனால் எத்தியோப்பியா மக்கள் முழுவதும் ஒரு காலத்தில் உணவின்றி பட்டினியால் செத்து மடிந்ததாக உலகம் நினைத்துக்கொண்டது. அந்த எண்ணம் தவறானது. மொத்த சனத்தொகைக்கும் உணவிட முடியாத அளவிற்கு வளமற்ற நாடல்ல அது. 2500 ஆண்டுகளுக்கு முன்னரே, குளங்களை வெட்டி, அணைகளை கட்டி, விவசாய பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்ற நாடாக எத்தியோப்பியா விளங்கியது. 1973 ம் ஆண்டு, திக்ரின்யா  மொழி பேசும் மக்கள் வாழும் பிரதேசத்தில் பஞ்சம் ஏற்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் மடிந்தனர். நிலைமையை பார்வையிட சென்ற ஊடகவியலாளர்கள், மன்னரின் ஆடம்பர வாழ்க்கைக்கும், எரித்திரியா மீதான போருக்கும் பெருந்தொகை பணம் செலவாவதை கண்டனர். திக்ரின்யா மக்கள் எரித்திரியாவை சேர்ந்த பிரதேசத்திலும்  வாழ்வது குறிப்பிடத்தக்கது. உண்மையில் அந்த சிறுபான்மை மக்களின் போராட்டத்தை முறியடிக்கவே, அரசு உணவுத்தடையை ஏற்படுத்தி, பஞ்சத்தை பட்டினிச் சாவுகளாக மாற்றி விட்டிருந்தது.
famineமன்னர் ஹைலெ செலாசியின் வீழ்ச்சிக்கு பஞ்சமும் ஒரு காரணம். சதிப்புரட்சியில் மன்னரை கொன்று, மாளிகையின் உள்ளேயே புதைத்த மென்கிஸ்டுவின் குடியாட்சியிலும் அரசின் கொள்கை மாறவில்லை. 1984-1985 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சம் கூட அரசின் புறக்கணிப்பு காரணமாக உருவானது தான். கிழக்கே சோமாலியா, வடக்கே எரித்திரியா, தெற்கே ஒரோமோ என்று அரசு மும்முனைகளில் போரில் ஈடுபட்டிருந்தது. அதற்காக பெருமளவு பணம் ஆயுதங்களை வாங்க செலவிடப்பட்டது. அதே நேரம் நாட்டின் சில பகுதிகளில் வரட்சி நிலவியது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் யாவும் சிறுபான்மை இனங்களின் வாழ்விடங்கள் எனது குறிப்பிடத்தக்கது. உள்நாட்டுப் போர்கள் காரணமாக மக்களின் இடப்பெயர்வு நிலைமையை மோசமாக்கியது. தன்னை எதிர்த்து போரிட்ட சிறுபான்மை இன மக்கள் மடிவதைப் பற்றி அரசும் அலட்டிக் கொள்ளவில்லை. இதனால் ஏற்பட்ட மனிதப் பேரவலத்தால், சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தலையிட்டு மக்களை காப்பற்ற வேண்டி ஏற்பட்டது. இந்தச் சந்தர்ப்பத்தை தான் தொலைக்காட்சி கமெராக்கள் எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன.
oromiaregionmapசிறுபான்மையின மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை அடக்குவதற்காக, அரசு அவர்களை பட்டினிச் சாவிற்கு தள்ளிய கதையை எனக்கு கூறியவர் ஒரோமோ இனத்தவர் ஒருவர். அவரை நான், காங்கோ நாட்டு நண்பரின் வீட்டு விருந்தின் போது சந்தித்தேன். நான் வழக்கமாக, அவர்  எந்த நாட்டை சேர்ந்தவர் என்று கேட்டதற்கு, ”ஒரோமியா” என்று பதிலளித்தார். உலக வரைபடத்தில் அப்படி ஒரு நாடு இருப்பதாக எனக்கு தெரிந்திருக்கவில்லை. “ஈழத்தமிழர்கள் ஈழம் என்ற தேசியத்தை அடையாளப்படுத்துவது போல, எத்தியோப்பியாவின் ஒரோமோ இனத்தை சேர்ந்த அவர் அப்படி தனது தேசியத்தை அடையாளப்படுத்துகிறார்.” என்று பின்னர் விளக்கம் கூறினார் எனது காங்கோ நண்பர். எத்தியோப்பியாவில் Oromo Liberation Front (OLF) என்ற இயக்கம், “ஒரோமியா” என்ற தனி நாடு கோரிப் போராடி வருகின்றது. எத்தியோப்பியாவின் மொத்த சனத்தொகையில் ஒரோமியர்கள் 40%, அதாவது பெரும்பான்மை இனம். ஆனாலும் அவர்கள் சொத்துகளற்ற, அடக்கப்பட்ட இனமாகவே இருந்து வந்துள்ளனர். அம்ஹாரி, திக்ரின்யா மொழி பேசும் நிலச்சுவான்தார்கள் ஒரோமியரின் நிலங்களை பறித்து சொந்தம் கொண்டாடியதுடன், மண்ணின் மைந்தர்களை பண்ணையடிமைகளாக வேலை வாங்கினார்கள். எத்தியோப்பியாவில் 1974 ம் ஆண்டு ஏற்பட்ட சோஷலிச அரசாங்கம் கொண்டுவந்த நிலச்சீர்திருத்தத்தின் பின்னரே நிலைமை மாற்றமடைந்தது. நிலப்பிரபுக்கள் கைது செய்யப்பட்டு காணாமல்போயினர். அடிமைகள் விடுதலை செய்யப்பட்டனர். நிலமற்ற விவசாயிகளுக்கு, நிலப்பிரபுக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட நிலங்கள் வழங்கப்பட்டன. அதற்குப் பின்னர் தான் ஒரோமோ மக்கள் தலைநிமிர்ந்தனர். இருப்பினும் அடக்கப்பட்ட ஒரோமோக்களின் எழுச்சியானது, குறுந்தேசியவாதப் போராட்டமாகவே உள்ளது. ஏனெனில் முன்பு மேலாண்மை செய்த அம்ஹாரி, திக்ரின்யா மக்கள் தற்போது ஒரோமோ பகுதிகளுக்கு செல்ல அஞ்சுகின்றனர். அந்த அளவிற்கு இனரீதியான வெறுப்பு மேலோங்கி காணப்படுகின்றது.
எத்தியோப்பியாவின் வடக்கே இருக்கும் “அக்சும்” என்ற இடத்தை தலைநகராகக் கொண்டு தான் பண்டைய எத்தியோப்பிய இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. இராச்சியத்தை விரிவுபடுத்திய மெனலிக் மன்னன் தான், தெற்கே ஒரோமோக்களின் “Finfinne” என்ற இடத்தில் “அடிஸ் அபேபா” என்ற இன்றுள்ள தலைநகரத்தை உருவாக்கினான். சக்கரவர்த்தியின் தெற்கு நோக்கிய நில விஸ்தரிப்புக் காலத்தில், ஒரோமோ பிரதேசங்களை கைப்பற்றிய போர்வீரர்கள் தம்மால் முடிந்த அளவு கொள்ளையடித்து சென்றனர். தங்கம், யானைத்தந்தம், மற்றும் அகப்பட்ட மக்களை அடிமைகளாகவும் பிடித்துச் சென்றனர். அப்போது தான் “கோப்பி”(Coffie) என்ற புதிய பானம் உலகிற்கு அறிமுகமானது. கோப்பி எத்தியோப்பியாவில் இருந்து தான் உலகின் பிற பகுதிகளுக்கு பரவியது. கோப்பி ஏற்றுமதி இன்றும் எதியோப்பியாவிற்கு அதிக வருமானத்தை ஈட்டித் தருகின்றது. கோப்பி மட்டுமல்ல, சிறுவர்கள் மெல்லும் “சூயிங் கம்” தயாரிக்க தேவையான மூலப்பொருள் எத்தியோப்பியாவில் வளரும் ஒரு வகை மரத்தில் தான் கிடைக்கிறது. இவ்வளவு பொருளாதார பலன்களையும் அம்ஹாரி நிலப்பிரபுக்களே அனுபவித்தனர். அதற்கு பிரதிபலனாக ஒரோமோ மக்களை அடிமைகளாக நடத்தினர். ஆளும்வர்கத்தை சேர்ந்தவர்கள் அனைவரும் அன்றும், இன்றும் பழமைவாத கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்கள். இதனால் பல்லாயிரக்கணக்கான ஒரோமோ மக்கள் இன்று இஸ்லாமிய மதத்தை தழுவி தமது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர். இந்தியாவில் மகாராஷ்டிரத்தில் தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் அம்பேத்கார் தலைமையில் பௌத்த மதத்தை தழுவியது போன்றதே அதுவும். இன்றைய எத்தியோப்பிய அரசு, ஒரோமோ இளைஞர்கள் இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதிகளாக மாறி வருவதாக குற்றஞ் சாட்டி வருகின்றது.
2006churchofstgeorge-lalibelaஎத்தியோப்பியாவில் (கிரேக்க வழிபாட்டு முறையை பின்பற்றும்) பழமைவாத கிறிஸ்தவம் அரசமதமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அக்சும் நகரம் கிறிஸ்தவர்களுக்கு புனிதமான நகரம். அங்கே வேறு எந்த மத வழிபாட்டுத் ஸ்தலங்களும் நிறுவ அனுமதி கிடையாது. அக்சும் நகரில் Unesco வால் பாதுகாக்கப்படும், பாறைகளைக் குடைந்து கட்டப்பட்ட மாபெரும் தேவாலயம் ஒன்றுள்ளது. “லல்லிபெல்லா தேவாலயம்” ஒரு உலக அதிசயம். மேலேயிருந்து பார்க்கும் போது சிலுவை போல தோன்றும் வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. அக்சும் நகரில் உள்ள சியோன் தேவாலயத்தில் ஓரிடத்தில் ஆண்டாண்டு காலமாக கவனமாக பாதுகாக்கப்படும் இரகசியம் ஒன்றுள்ளது. ஆண்டவர் மோசெசிற்கு அருளிய பத்துக் கட்டளைகள் பொறித்த ஆவணம் அங்கே பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகின்றது. அதனை இதுவரை எவரும் பார்த்ததில்லை. அக்சும் இராச்சியத்தை ஸ்தாபித்த முதலாவது மெனலிக் காலத்தில், இடிந்து போன யூதர்களின் ஜெருசலேம் ஆலயத்தில் இருந்து அந்த ஆவணம் எடுத்துவரப்பட்டதாக கதை ஒன்றுண்டு.
அம்ஹாரி மொழியானது அரபு, ஹீபுரூ மொழிகளைப் போல செமிட்டிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. இற்றைக்கு மூவாயிரம் வருடங்களுக்கு முன்னர், அரேபிய குடாநாட்டிலிருந்து வந்து குடியேறிய மக்கள், ஆப்பிரிக்க இனங்களுடன் கலந்து இன்றுள்ள அம்ஹாரி, திக்ரின்யா இனங்கள் தோன்றியிருக்கலாம். இந்த மொழிகள் தமக்கென தனியான எழுத்து வரிவடிவங்களை கொண்டிருப்பதால், பிற ஆப்பிரிக்க மொழிகளில் இருந்து வேறுபடுகின்றன. எத்தியோப்பியாவின் சரித்திரம் “மக்கெடா” என்ற இராணியின் காலத்தில் இருந்து ஆரம்பமாகின்றது. அறிவுக் கூர்மையுடைய பேரழகி மக்கெடா பற்றி யேமன் நாட்டு சரித்திரக் குறிப்புகள் “ஷீபா நாட்டு இராணி” என குறிப்பிடுகின்றன. தற்போதும் யேமனியர்களையும், எத்தியோப்பியர்களையும் உற்று நோக்கினால், அவர்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தோன்றுவார்கள். இதனால் செங்கடலின் இருமருங்கிலும் ஆதி காலத்தில் ஒரேயின மக்கள் வாழ்ந்திருக்க வாய்ப்புண்டு. தற்போதும் தொடரும் சில கலாச்சாரக் கூறுகளை மேலதிக ஆதாரமாக கொள்ளலாம்.  உதாரணத்திற்கு வெற்றிலை மெல்லும் பழக்கம். ஆனால் அது எமது நாட்டு வெற்றிலையை விட அதிக போதை தரும்.
சாலமன் ஷீபா பண்டைய இஸ்ரேலிய மன்னன் சாலமன் (972-932) அரண்மனைக்கு, ஷீபா நாட்டு அரசி மக்கெடா விஜயம் செய்த போது, அவளது அறிவிலும், அழகிலும் மயங்கிய சாலமன் அவளை சிறிது காலம் தன்னுடனே தங்கும் படி வேண்டினான். மதிநுட்பம் வாய்ந்த அரசனாக மகிமை பெற்றிருந்த சாலமன், கருநிற பேரழகியின் அணைப்பில் மயங்கிக் கிடந்ததாகவும், இதனால் இராஜ காரியங்களை கவனிக்காமல் விட்டதாகவும் பைபிள் (பழைய ஏற்பாடு) கூறுகின்றது. பைபிள், ஆப்பிரிக்காவை சேர்ந்த ஒரு கறுப்பின பெண்ணை உலகப் பேரழகியாக வர்ணிப்பது, இங்கே குறிப்பிடத்தக்கது. வெள்ளை நிறம் மட்டுமே அழகு என்பது பிற்காலத்தில் ஐரோப்பிய இனவாதிகள் பரப்பிய கருத்தியல். சாலமனுடனான உறவில் கர்ப்பமுற்ற ஷீபா அரசி தாய் நாடு திரும்பியதாகவும், அங்கே ஒரு மகனை பெற்றெடுத்ததாகவும் பைபிள் மேலும் குறிப்பிடுகின்றது. எத்தியோப்பியாவில் 14 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, “Kebra Negest” என்ற மன்னர்களின் கதைகளைக் கூறும் நூலிலும் இது குறிப்பிடப்படுகின்றது. சாலமனுக்கும், மக்கெடாவுக்கும் பிறந்த மகன் தான் எத்தியோப்பியாவில் இராசதானியை நிறுவிய (முதலாவது) மெனலிக் அரசன் என்று கூறுகின்றது.
எத்தியோப்பிய கிறிஸ்தவம், எகிப்தின் “கொப்திக்” மதப்பிரிவை சேர்ந்தது. இந்தப் பிரிவின் வழிபாட்டு முறை கிரேக்க முறையில் இருந்து சற்றே வேறுபடுகின்றது. இவையெல்லாம் ஆதிகால கிறிஸ்தவ வழிபாட்டை கொண்டதால், “பழமைவாத கிறிஸ்தவம்” என்றும் அழைக்கப்படுகின்றன. எத்தியோப்பியாவில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் ஒரே மாதிரியான சடங்குகளை பின்பற்றுகின்றனர். யூதர்களில் இருந்து பிரிந்தவர்களே, கிறிஸ்தவம் என்ற புது மதத்தை தோற்றுவித்தார்கள் என்பது இதிலிருந்து நிரூபணமாகின்றது. ஐரோப்பா கிறிஸ்தவமயமாவதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே ஆப்பிரிக்காவில், அதாவது எத்தியோப்பியாவில், கிறிஸ்தவ மதம் பரவியிருந்ததை முன்னர் ஒரு முறை குறிப்பிட்டுள்ளேன். வத்திக்கானில் லத்தீன் மொழி பைபிள் எழுதப்படுவதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்னரே, எத்தியோப்பியாவில் எழுதப்பட்ட பைபிள் சுவடிகள் இப்போதும் பாதுகாக்கப்படுகின்றன.
axum_obelisk1868 ம் ஆண்டு, எத்தியோப்பியாவில் மாபெரும் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றது. சக்கரவர்த்தியினால் சேவைக்கு அமர்த்தப்பட்ட பிரிட்டிஷ் படைவீரர்கள், சக்கரவர்த்தி மரணமடைந்த குழப்ப சூழ்நிலையை பயன்படுத்தி, விலை மதிப்பற்ற கலைப்பொக்கிஷங்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தனர். அரச ஆபரணங்கள், மத சின்னங்கள், இவற்றுடன் சுவடிகளையும் அள்ளிச் சென்றனர். கையால் எழுதப்பட்டிருந்த பைபிள் பிரதிகள், மற்றும் Kebra Negest வரலாற்று சுவடிகள் ஆகியன பின்னர் லண்டன் தெருக்களில் ஏலம் விடப்பட்டன. பிரிட்டிஷ் மியூசியம் 350 சுவடிகளை வாங்கியது. விக்டோரியா இராணி எட்டு சுவடிகளை தனது பிரத்தியேக நூலகத்திற்கென பெற்றுக் கொண்டார். அரச ஆபரணங்கள் எல்லாம் இப்போது எங்கே இருக்கின்றன என்று தெரியாத அளவிற்கு மறைந்து போயின. இன்றைய எத்தியோப்பிய அரசு பல தடவை முயற்சித்தும், குறிப்பிட்ட அளவு திருட்டு பொருட்கள் மட்டுமே திரும்பக் கிடைத்துள்ளன. என்ன இருந்தாலும், இத்தாலியர்களின் சாதனையை எவராலும் முறியடிக்க முடியாது. அக்சும் நகர மத்தியில், 30 மீட்டர் உயரமும், நூறு தொன் எடையும் உள்ள கல் தூண் (Obelisk) ஒன்று நின்றது. 1937 ல் எத்தியோப்பியாவை ஆக்கிரமித்த முசோலினியின் படையினர், அந்த கல் தூணை துண்டுகளாக்கி இத்தாலி கொண்டு போய் சேர்த்து விட்டார்கள். 2004 ம் ஆண்டு தான் இத்தாலி அதனை திருப்பிக் கொடுக்க முன்வந்தது.
எத்தியோப்பியா ஒரு கிறிஸ்தவ நாடு என்று அறியப்பட்டாலும், அங்கேயும் எரித்திரியாவிலும் மொத்த சனத்தொகையில் அரைவாசிப்பேர் முஸ்லிம்கள். செங்கடலைத் தாண்டினால் இஸ்லாமியரின் புனிதஸ்தலமான மெக்கா மிக அருகாமையில் தான் உள்ளது. இருப்பினும் இவ்விரண்டு நாடுகளிலும் கிறிஸ்தவரும், முஸ்லிம்களும் எந்தப் பிரச்சினையுமின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. அதிசயப்படத் தக்கதாக உலகின் பிற நாடுகளில் மத, இன, மொழி அடையாளங்கள் மக்களிடையே பிரிவினையை தூண்டுவது போல எத்தியோப்பியாவில் நடக்கவில்லை. அதற்கு மாறாக பலவிதமான பொருளாதாரக் காரணிகள் இன அடிப்படையிலான போர்களை ஊக்குவிக்கின்றன. உலகில் சுதந்திரம் கோரி போராடும் எத்தனையோ தேசிய இனங்களுக்கு, தனி நாடு அமைப்பது இலகுவில் நடைமுறைச் சாத்தியமாவதில்லை. இருப்பினும் 30 வருட ஆயுதப் போராட்டத்திற்குப் பிறகு, எந்த வல்லரசின் துணையுமின்றி, எரித்திரியா எவ்வாறு சுதந்திரமடைந்தது என்று பார்ப்போம்.
எரித்திரியாவிற்கு எதிரான போரில் ஈடுபட்ட எத்தியோப்பிய இராணுவத்திற்கு, மன்னராட்சிக் காலத்தில் அமெரிக்க உதவியும், மார்க்ஸிச ஆட்சிக்காலத்தில் சோவியத் உதவியும் கிடைத்து வந்தது. அதே நேரம் எரித்திரிய விடுதலைக்காக போராடிய EPLF இயக்கத்திற்கு புலம்பெயர்ந்த எரித்திரியர்களின் நிதி உதவி மட்டுமே கிடைத்து வந்தது. 1991 ம் ஆண்டு, சோவியத் யூனியன் மறைந்து போனதால், எத்தியோப்பிய இராணுவமும் பலமிழந்து போனது. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அரச எதிர்ப்பு ஆயுதபாணி இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்ற விரைந்தன. ஏற்கனவே களத்தில் ஓரளவு வெற்றி பெற்று பல இடங்களை விடுவித்திருந்த EPLF எரித்திரிய தலைநகர் அஸ்மாராவை கைப்பற்றியது. EPLF உடன் Tigray People’s Liberation Front (TPLF) ஒரு ஐக்கிய முன்னணியை கட்டியிருந்தது. எத்தியோப்பியாவில் மொத்த சனத்தொகையில் 15 வீதமான திக்ரின்யா மொழி பேசும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்திய TPLF ஆட்சியை கைப்பற்றியது. எரித்திரியாவிலும் திக்ரின்யா மக்கள் கணிசமான அளவில் வாழ்வதால், இவ்விரு இயக்கங்களுக்கும் இடையில் நட்பு ஏற்பட்டிருக்க வாய்ப்புண்டு. பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் முதன் முதலாக அம்ஹாரி மக்களின் அரசியல் ஆதிக்கம் முடிவுக்கு வந்து, திக்ரின்யா மக்கள் (இரு நாடுகளிலும்) அதிகாரத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்போதும் பெருமளவு அம்ஹாரி மக்கள், ஒரு திக்ரின்யா அரசின் கீழ் வாழ்வதை விரும்பவில்லை என்பதுடன், எரித்திரிய பிரிவினையையும் ஜீரணிக்க கஷ்டப்படுகின்றனர்.
ctc_02_img0372எரித்திரியாவிலும், எத்தியோப்பியாவிலும் ஒரே மொழி பேசுபவர்கள் ஆட்சியில் இருந்தால், அவர்களுக்கிடையே பிரச்சினை வராது என்று அர்த்தமல்ல. செங்கடலோர பிரதேசம் முழுவதையும் கொண்டுள்ள எரித்திரிய நாட்டின் துறைமுகங்களை, எத்தியோப்பியா தாரளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என ஒப்பந்தம் போட்டதால் தான், ஐ.நா. வாக்கெடுப்பின் மூலம் எரித்திரியா சுதந்திர நாடாவதற்கு புதிய எத்தியோப்பிய அரசு சம்மதித்தது. 1997 ம் ஆண்டு, எரித்திரியா தனக்கென புதிய நாணயத்தை அறிமுகப்படுத்தியதால், டாலரில் வர்த்தகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. எரித்திரியர்கள் தமது நாணயத்தின் பெறுமதியை செயற்கையாக கூட்டி வைத்திருந்தனர். இது எத்தியோப்பியாவிற்கு பாதகமாக அமைந்தது.  வேறு பல பொருளாதாரக் காரணங்களாலும் (எண்ணெய், எரிவாயு அகழ்வாராய்ச்சி) இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. அதுவரை தீர்க்கப்படாதிருந்த எல்லைக்கோடு பற்றி சர்ச்சை ஏற்பட்டது. முதலில் எரித்திரியப் படைகள் எல்லைப்புற பிரதேசங்களை ஆக்கிரமித்தன. எத்தியோப்பியா வெளிநாடுகளில் ஆயுதங்களை வாங்கிப் போட்டு திருப்பித் தாக்கியது. ஒன்றுமில்லாத வெறும் கட்டாந்தரைக்காக இரண்டு இராணுவங்களும் வருடக்கணக்காக மோதிக் கொண்டதில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டு நாடுகளுமே அமெரிக்காவின் உதவி பெறும் “ஆப்பிரிக்க செல்லப்பிள்ளைகள்” என்பதால், அமெரிக்க மத்தியஸ்தத்துடன் போர் முடிவுக்கு வந்தது. தற்போது ஐ.நா.சமாதானப்படை எல்லைக் கோடு நிர்ணயிக்கும், அல்லது பாதுகாக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளது.
இரு நாடுகளிலும், 1991 ம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய முன்னாள் போராளிக் குழுக்களின் தலைவர்கள், பல கவர்ச்சிகரமான எதிர்காலத் திட்டங்களை மக்கள் முன்வைத்தார்கள். ஆப்பிரிக்காவில் அதிக சனத்தொகையை கொண்ட மூன்றாவது பெரிய நாடான எத்தியோப்பியா, பிராந்திய வல்லரசாக வருவேன் என்று கனவு கண்டது. உலகிலே சிறிய நாடுகளில் ஒன்றான எரித்திரியா, தாராளவாத பொருளாதாரத் திட்டங்களால் சிங்கபூர் போல வருவேன் என்று கனவு கண்டது. ஆனால் பாரிய பொருள், உயிரிழப்புகளை ஏற்படுத்திய எல்லைப்போர் இந்தக் கனவுகளையெல்லாம் நூறு ஆண்டுகள் பின்தள்ளி விட்டது.

சோனியா அம்மாவுக்கு பயந்து பார்வதி அம்மாவை மறந்த தமிழக வீரத் தமிழர்கள்.



ஊறணிச்சுடலை நாய்க்கு ஒரு பிடி சோறு போட்ட ஈழத்து பிச்சைக்காரன் தமிழக தலைவர்களுக்கு எழுதும் மடல்..
பார்வதிப்பிள்ளை மரணத்திற்கு தமிழகத்தில் உள்ள பெரும் தலைவர்களான மு.கருணாநிதி, செல்வி. ஜெயலலிதா, கேப்டன் பிரபாகரன் மன்னிக்க கேப்டன் விஜயகாந்த் ஆகிய மூவரும் வாயே திறந்ததாக தெரியவில்லை.
பட்டுக்கோட்டையில் தமிழீழமே தமிழருக்கு தீர்வென பிரகடனப்படுத்தியவன் நானே என்று நமது கலைஞர் அடிக்கடி மார்தட்டுவார்…
இந்திய இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைக்கிறேன் என்று தேர்தலுக்காக வீரமுழக்கமிட்டார் நமது அன்னை பராசக்தி ஜெயலலிதா..
ஈழத் தமிழனுக்காக கேப்டன் வந்துவிட்டார் என்று முழங்கினார்கள் அவருடைய கட்சித் தொண்டர்கள்.
இந்த மூன்று பேரும் பார்வதி அம்மா மரணித்தபோது அவருக்கு மரியாதைக்காகவேனும் ஓர் அஞ்சலி செலுத்தவி;லை..
இந்தத் தலைவர்களுடைய பணத்தில் வரும் தொலைக்காட்சிகளின் மட்டைகளை எடுத்து மகிழ்வோடு பார்ப்பவன் ஈழத் தமிழன். அந்த மானங்கெட்டவன் எடுக்கும் மட்டைகளுக்காவது ஒரு மரியாதை கொடுத்திருக்கலாம் இந்த பிழைப்புவாத ஊடகங்கள்.. அதுவும் இல்லை..
ஏன்..?
வரும் தேர்தலில் காங்கிரஸ் திமுக – கூட்டு இன்னமும் உறுதியாகவில்லை. இந்த நிலையில் பார்வதி அம்மாவுக்கு அஞ்சலி செலுத்தினால் காங்கிரஸ் தாய் சோனியாவின் பார்வையில் எதிரணியாகிவிடுவோம் என்ற பயத்தில் இந்த மூன்று தலைவர்களும் மௌனம் காத்திருக்கலாம்.
காங்கிரசுடன் உறவென்றால் ஈழத் தமிழனை விற்க மூவரும் தயார்தான்.
அட சும்மா கெட புள்ளே…!
தேர்தல் வரும்போது ஈழத் தமிழா என்று முழங்கினால் போதும் அவன் காதில் பூ சுற்றிவிடலாம் என்று கருதுகிறார்கள். ஈழம் என்றுவிட்டால் எல்லாவற்றையும் மறந்து, கோமாளிகள் தாயே தெய்வமே என்று ஜெயலலிதாவுக்கு கவிபாட காத்துக் கிடப்பது அவர்களுக்கு தெரியும்
அசினை படத்தில் கதாநாயகியாக போட்ட காவலன் படம் ஓடி முடிக்கும்வரை புலிப்பால் குடிக்காத நமது இளைய தளபதி விஜய் நேற்று நாகபட்டணத்தில் புலிப்பால் குடித்திருக்கிறார். அந்தப் பாலில் ஒரு மிடறை அசினுக்கு பருக்கியிருந்தால் காவலன் கதறிக் கொண்டு ஓடியிருக்குமே…
திருமாவளவனை சிங்கள நாட்டின் விமான நிலையம் திருப்பி அனுப்பியதற்கு பதிலடியாக டக்ளசை கைது செய்ய வேண்டும் என்றுள்ளார் டாக்டர் ஐயா.. டக்களஸ் மீது சுமத்தப்பட்டது கொலைக் குற்றம், திருமாவளவன் செய்த குற்றம் என்ன ? சூளை மேட்டில் செத்தவனைப் பற்றி யாருக்கு என்ன கவலை..
சென்னை விமான நிலையத்தில் திருப்பி அனுப்பப்படும் ஈழத் தமிழருக்காக குரல் கொடுங்கள் என்று திருமாவளவனிடம் கேட்டவர் பலர். அவர் கலைஞருக்கு பயந்து அடக்கி வாசித்தார். இன்று கொழும்பு விமான நிலையத்தில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டவுடன் அடக்க முடியாத கோபம் அவருக்கு வந்துள்ளது. ஐயா.. பண்டாரநாயக்கா விமான நிலையமும் சிங்கார சென்னை விமான நிலையமும் மானமுள்ள ஈழத் தமிழனுக்கு ஒன்றுதான். மானமுள்ள ஈழத் தமிழனாக இந்த இரண்டு விமான நிலையங்களுக்குள்ளும் போய்ப்பாருங்கள்.
அன்று..
1984ம் ஆண்டு வல்வையில் இராணுவம் சுட்டு ஒரு வயோதிபர் தெருவில் குற்றுயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவர் உயிர் பிரியும் தறுவாயில் எங்கள் உடன் பிறப்பு தலைவர். மு. கருணாநிதி வருவார் என்று கூறிவிட்டு நம்பிக்கையோடு இறந்தார். அந்த ஆத்மா உங்களை எல்லாம் கண்ணீருடன் பார்க்கிறதையா.. !
இதையெல்லாம் பார்க்கும்போது நமக்கு ஒரு புதிய சந்தேகம் வருகிறது..
பார்வதி அம்மாவுடன் செத்துக்கிடக்கும் நாய்களும் எங்கே உங்களுடைய வீர முழக்கங்களை கேட்டுத்தான் தவறுதலாகக் குரைத்துவிட்டனவோ என்பதுதான் அந்த அச்சம் ஐயா…
ஈழத்து பிச்சைக்காரன்.. 23.02.2011

புலிகள் பாவித்த ஆயுதங்களை அருங்காட்சியகமாக மாற்றிப் பிழைக்கும் சிங்களம்.

அனைத்து வசதிகளோடும், தொழில்நுட்பத்தோடும் மற்றும் பல நாடுகளின் உதவிகளைப் பெற்றுவந்தும், இலங்கை அரசானது ஆயுதங்களையும் ரோந்துக் கப்பல்களையும் வெளிநாடுகளிடமே வாங்கி வந்தது. ஆனால் விடுதலைப் புலிகளோ, தம்மிடம் இருந்த வளங்களைக் கொண்டு, சிறிய இடப்பரப்பில் இருந்தாலும் குறுகிய தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு தமக்குத் தேவையான பல ஆயுதங்களை, கப்பல்களை, ஏன் நீர் மூழ்கிக் கப்பல்களைக் கூட வடிவமைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது படகுகளைத் தயாரித்து, பல தாக்குதல்களையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளனர்.

ஆனால் சிங்களமோ அதனைக்காட்டி பிழைப்பு நடத்துகிறது. வெளிநாட்டில் இருந்து, கொழும்பிற்கு வரும் பல இலங்கை உயரதிகாரிகளின் உறவினர்கள், மற்றும் அவர்களது குடும்பத்தினரிடம் வன்னிக்குப் போய் புலிகளின் இடங்களைப் பார்க்க இவ்வளவு தொகை. அதி உயர் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இவ்வளவு தொகை என அறவிடப்பட்டு, பின்னர் அவர்களை வன்னிக்கு அழைத்துச் சென்று, புலிகளின் பாசறைகளையும், அவர்கள் தயாரித்த ஆயுதங்களையும் காட்டி, காசு வாங்குகிறது சிங்களம். இதைவிட வெட்கக்கேடான செயல் உள்ளதா ?

1990 களில் பசிலன் 2000 என்னும் பாரிய ஷெல் எறிகணையைக் கண்டு பிடித்தனர் புலிகள். அதன் அகோரம் தாங்காமல் தனது மனைவியோடு தப்பி ஓடினார் கோட்டைக்குப் பொறுப்பாக இருந்த அப்போதைய இராணுவ அதிகாரி. பின்னர் "அருன்" எனப்படும் துப்பாக்கியில் பொருத்தி செலுத்தும் சிறியவகை ஏவுகணைகள் தொடக்கம், பிந்திய காலத்தில், கப்பல்களும் நீர்மூழ்கிக் கப்பல்களையும் இவர்கள் வடிவமைத்தனர். இறுதியாக போர் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தில், புலிகளின் கப்பல் கட்டும் தொழிற்சாலை ஒன்றை இராணுவம் கைப்பற்றியவேளை, அவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அங்கே காணப்பட்ட அனைத்து கப்பல்களும் புலிகளால் வடிவமைக்கப்பட்டவை என்பதே உண்மையாகும்.

அவர்கள் பாவித்த தொழில்நுட்பம், மற்றும் நேர்த்தியான கட்டுமாணம் என்பன வியப்பில் ஆழ்தியது. அதனால் அவர்கள் அத் தொழில்சாலையை, பாதுகாத்து, ஒரு அருங்காட்சியகமாக மாற்றியுள்ளனர். அங்கே புலிகளால் கட்டப்பட்ட தாக்குதல் படகுகள், தாக்குதல் நீர்மூழ்கிப் படகுகள், உட்பட, புலிகளால் பாவிக்கப்பட்ட பல கனரக ஆயுதங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. புலிகளின் உயர்மட்ட தலைவர்கள் பாவித்த கைத்துப்பாக்கிளும் இதில் அடங்கும். அங்கே தரையில் இருந்து கப்பலைத் தாக்க கடலுக்கு அடியால் அனுப்பப்படும் ஏவுகணை(ரோப்பிடோக்கள்) களும் அடங்கும். சில வகை ரோப்பிடோக்களை புலிகளே வடிவமைத்தும் உள்ளனர்.

பல சிங்கள மக்களுக்கு அதனைக் காட்டி, தமது பெருமைகளை பிதற்றிக்கொள்ள சிங்கள இராணுவம் இதனைப் பயன்படுத்துகிறது. சாதாரண மக்களால் இப் பகுதிகளுக்குச் செல்லமுடியாது. இராணுவ உயரதிகாரியின் குடும்பஸ்தர்கள், வெளிநாட்டு தூதுவர்களின் குடும்பத்தவர் என உயர் பீடத்தில் உள்ளவர்களுக்கே இராணுவம், காசைப் பெற்றுக்கொண்டு இதனைக் காட்டி பெரும் பணம் ஈட்டிவருவதாக அதிர்வு இணையம் அறிகிறது. இதனால் திரட்டப்படும் பணத்தின் பெரும்பங்கு யாருக்குச் செல்கிறது என்பதே கேள்விக்குறியாக உள்ளது என்கிறார்கள்.

























அனுராதபுரம் சிறைச்சாலையில் புலிகள் மீது சிங்களக் காடையர் தாக்குதல் (பட இணைப்பு)

அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலையில் சிங்கள காடையர்கள், புலிகளை தடுத்துவைத்துள்ள பகுதிக்குள் அத்துமீற முயன்றதால் இன்று காலை கலவரம் வெடித்துள்ளது. கைதாகி தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள் இருக்கும் சிறைச்சாலைக் கதவுகளை உடைத்துக்கொண்டு அவர்கள் உள்நுழைய முனைந்ததால் பெரும் பதற்றம் நிலவுவதாக அறியப்படுகிறது. சிங்கள இராணுவத்தினர் வேண்டுமென்றே இவ்வாறு ஒரு கலவரத்தை உருவாக்கி, எஞ்சியுள்ள போராளிகளைச் சுட்டுக் கொல்லும் நோக்கில் செயல்பட்டுவருவதாக கைதி ஒருவர் அதிர்வு இணையத்துக்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை இக் கலவரம் இடம் பெற்றவேளை இராணுவத்தினர் சுட்டதில் 6 சிங்களவர்கள் உயிரிழந்துள்ளதாகவும், தாங்கள் தமது அறைகளை உள்தாழ்ப்பாள் இட்டு மூடிவிட்டு, அச்சத்தோடு உள்ளதாகவும் கைதி ஒருவர் மேலும் தெரிவித்தார். இராணுவத்தினரே சமையல் அறையை எரித்ததால் சமைக்க முடியாத நிலை காணப்படுவதாகவும், வெறும் நீரை மட்டும் குடித்துக் கொண்டு தாம் இருப்பதாவும் சில போராளிகள் கூறியுள்ளனர். சில நாட்களாகவே இராணுவத்தினர் புலிகள் இருக்கும் அறைகளைச் சோதனையிட்டும், மண்ணுக்குள் எதோ புதைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி பல தேடுதல்களை மேற்கொண்டு வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

இன்று காலை இராணுவத்தினர் துப்பாக்கியால் சரமாரியாக மற்றும் கண்மூடித்தனமாகவும் சுட்டுள்ளனர். இதனால் சிறைச்சாலைச் சுவர் மற்றும் கைதிகள் தங்கும் அறை என்பனவும் துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்ப்ட்டு காணப்படுவதாகவும், எங்களுக்கு எந் நேரமும் எதுவும் நடக்கலாம் என அக்கைதிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்

கலவரத்தைத் தூண்டி, அதன் மூலம் தமது குறியில் உள்ளவர்களை சுட்டுக் கொல்லும் நோக்கில் இராணுவம், இவ்வாறு செய்வதாக போராளிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். சர்வதேசம் இதில் தலையிட்டு தம்மை காப்பாற்றவேண்டும் எனவும் அவர்கள் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச சமூகம் பாரா முகமாக இருக்குமாயில், இலங்கை இராணுவத்தினர் கலவரம் என்ற பெயரில் கொஞ்சம் கொஞ்சமாக அனைத்து போராளிகளையும் சுட்டே கொண்றுவிடுவார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.





புதன், 23 பிப்ரவரி, 2011

பிரபாகரனின் இருப்பு மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது


இன்று தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 55 ஆவது அகவை காணும் புனித நாள்.
இறுதிக்கட்ட பொரின்போது வீரமரணமடைந்தார் என்று வந்த செய்திகள் அனைத்தும் பொய் என்பதற்கு இன்று பல ஆதாரங்கள் உண்டு. யுத்தகளத்தில் இருந்து மூன்று தினங்களுக்கு முன்னரே அவர் வெளியேறிவிட்டார் என்ற தகவலை இறுதிக்கட்ட போரின்போது நின்ற போராளிகளில் பலர் வெளியிட்டுள்ளனர். ஆகவே அவர் வருவார் என்ற நம்பிக்கை தமிழீழ மண்ணையும், தமிழீழ விடுதலையையும் நேசித்த ஒவ்வொருவரிடமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் போராட்ட வாழ்வைப் படித்து போர்க்களத்தில் நுழைந்த பிரபாகரனின் வரலாறும் நேதாஜியின் கடைசிக்கால வரலாறு போலவே ஆகியிருப்பது ஆச்சரியம் தரும் உண்மையே.

அவருடைய 55 வது பிறந்த தினத்தில் அவர் மறுபடியும் மக்கள் முன் வரவேண்டும் என்ற கோரிக்கையே எங்கும் மேலோங்கி நிற்கிறது. அவர் வரவேண்டும் தமிழினம் மகிழ வேண்டும், தமிழீழம் மலரவேண்டும் என்ற அனைத்துத் தமிழ்மக்களினதும் விருப்பையே நாமும் அவரது பிறந்தநாள் வேண்டுதலாக வேண்டிநிற்கிறோம்.
பிரபாகரன் என்பவர் முந்தோன்றித்தான் மக்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டிய ஒருவரல்ல. அவருடைய சக்தி தமிழர் நெஞ்சங்களில் எல்லாம் நிறைந்துள்ளது. ஆகவே மாவீரர்நாளில் பிரபாகரன் உரையாற்றவில்லையே என்று மக்கள் கவலையடைதல் கூடாது. அவர் சிங்கள இனவாதத்தை மட்டுமல்ல, உலக இனவாத வெறுப்பையும் எதிர்கொண்டது மட்டுமன்றி உலகத்தமிழருக்கும் அதை அம்பலப்படுத்தியுள்ளார்.
பிரபாகரன் மக்கள் முன் என்றோ ஒருநாள் நிச்சயம் தோன்றுவார். அவர் இறந்ததிற்கான எந்த தடயங்களோ, சாட்சியங்களோ இன்றுவரை இல்லை. இன்றுவரை இந்தியா கேட்ட சாட்சியங்களையோ அன்றி ஆதாரங்களையோ காட்டமுடியாது தடுமாறி திகைத்து நிற்கிறது சிங்கள அரசு.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு அவசர அவசரமாக கடந்த மே மாதம் இலங்கைக்கு சென்ற தமிழ்நாட்டின் புலனாய்வுத்துறையினர் குழு ஒன்று. தலைவர் பிரபாகரன் இந்தியாவில் கைது செய்யப்பட்டு வைத்திருந்தவேளை அவரிடமிருந்து பெறப்பட்ட கைரேகையை கையோடு எடுத்துச்சென்றிருந்த அந்த குழு பிரபாகரன் என இலங்கை அரசு காட்டிய உடலிலிருந்து அந்த கைரேகை மாறுபடுவதால் அதை உறுதிப்படுத்த முடியாமல் திரும்பிச்சென்று மெளனமாக இருந்தது. அதன் பின்னரே பிரபாகரன் இறந்ததான செய்தியை இந்திய அரசு அமத்தி வாசித்தது.
தர்க்கபூர்வமாகவும், விஞ்ஞானபூர்வமாகவும், ஆதாரங்களுடனும் தலைவர் பிரபாகரனின் மரணம் எந்தத் தரப்பாலும் இன்றுவரை உறுதிசெய்யப்படவில்லை. கண்கட்டு வித்தைகளுடனும் பல மோசடிகளுடனும் அவரது மரணம் ஒரு கனவு போலவே விபரிக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்கட்டு வித்தைகளையும் மோசடிகளையும் பல தரப்பாலும் கூறப்பட்ட பொய்களையும் புனைவுகளையும் உருவி எடுத்துவிட்டால் அவர் உயிருள்ள மனிதனாக உலாவுவதற்கே வாய்ப்புக்கள் அதிகம்.
குறைந்தபட்சம் மரணமடைந்ததாகக் கூறப்படும் அவரது பிள்ளைகளின் மரமபணுக்களுடனும், கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அவரது பெற்றோரின் மரபணுக்களுடனும் அவரது மரபணுக்களை சர்வதேச மருத்துவ நிபுணர்களிடம் கொடுத்து (சிறீலங்கா -இந்திய நிபுணர்களின் ஆய்வு ஏற்றுக்கொள்ள முடியாதது) சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்படும் பட்சத்தில் நாம் அரவது மரணத்தை ஏற்றுக்கொள்வது குறித்துப் பரிசீலிக்கலாம்.
தன்னால் மட்டுமே இந்த இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும் என்று இறுக்கமாக நம்பிய ஒருவராக அவர் இருந்தார். அவர் யாரையுமே நம்பவில்லை. அதனால் தனது உயிர் குறித்து பெரும் அக்கறை கொண்டிருந்தார். தனக்கு ஏதும் நேர்ந்தால் இனம் நடுத்தெருவுக்கு வந்துவிடும் என்பதை அவர் தன்னளவில் உணர்ந்தே செயற்பட்டார். இது எமது போராட்டம் சார்ந்து மிக முக்கியமான விடயம். போராட்டம் தொடர்பான சரி, தவறுகள் மேலெழுந்த புள்ளி இங்குதான் மையம் கொண்டுள்ளது. இதை நாம் கவனமாக உள்வாங்கியிருந்தால் தலைவர் பிரபாகரன் குறித்த சச்சரவுகளுக்கு இடமே இருந்திருக்காது.
ஒருவர் தன்னால்தான் இந்த இனத்திற்கு தலைமை தாங்கமுடியும், தன்னால்தான் இந்த இனத்திற்கு விடுதலையைப் பெற்றுத்தர முடியும், அதற்காக எந்த பெயரையும் தாங்கத் தயாராக இருக்கிறேன் என்ற உளவியலோடு யாரையும் நம்பாமல் ஒரு படையணியைக் கட்டியமைத்து அதைக் கொண்டு அந்த விடுதலையை அடைய எத்தனித்தது என்பது எவ்வளவு பெரிய விடயம். இப்படி ஒரு தலைமை கிடைப்பது அபூர்வம். இப்படி ஒரு தலைமை இனி எமக்கு கிடைக்ப்போவது இல்லை. எனவே இதைக் கெட்டியாகப்பிடித்துக் கொள்வதில்தால் எமது அடுத்த கட்ட அரசியலே இருக்கிறது.
எனவே கொஞ்சம் பொறுங்கள்! அவசர அவசரமாக வரும் செய்திகளை கேட்டு நீங்கள் குளப்பமடைவது மட்டுமன்றி மற்றவர்களையும் குளப்புவதானது தேச விடுதலைப் போராட்டத்தையும், மக்களின் உணர்வுகளையும் பெரிதும் பாதிக்கும்.
இங்கு ஒவ்வொரு தரப்பும் தமது எதிர்த் தரப்பாகக் கருதி சில போராளிகள் மீது வசைபாடும் அவலம் அரங்கேறி வருகிறது. செ.பத்மநாதன், கஸ்ரோ, தமிழ்ச்செல்வன், பானு, ராம், நகுலன் என்று பட்டியல் நீளமாகக் கிடக்கிறது. உடனடியாக இதை நிறுத்தி ஒருமித்த கருத்திற்கு வருவதற்கு சம்பந்தப்ட்டவர்கள் முயற்சிக்கவேண்டும்.
இல்லையேல்  தமிழர்களாகிய நாம் அழிவைநோக்கி நகர எதிரியானவன் இலகுவாக எம்மை அழித்துக்கொள்வான்.
பிரபாகரன் தேடப்பட்ட காலத்தில் இருந்தே மக்கள் மத்தியில் நடமாடிய ஒருவரல்ல. எதிரிகளும், ஆதரவாளரும் அவரைத் தேடிக்கொண்டே இருந்தார்கள். ஆகவே தேடக்கிடைக்காத வைரம் போலவே அவர் வாழ்க்கை அமைந்திருந்தது. வருடத்தில் ஒரு தடவை மாவீரர்நாள் நிகழ்விற்கு அவர் மக்கள் முன் தோன்றிப் பேசுவார். அடுத்த வருடம்வரை அதுதான் அவருடைய பிரதான பிரசன்னமாக இருக்கும். அவருடைய உரை சிங்கள ஆட்சியாளராலும், இந்திய ஆட்சியாளராலும், சர்வதேச சமுதாயத்தாலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். உலகத்தில் அவருடைய உரையைப் போல உன்னிப்பாக நோக்கப்படும் வருடாந்த உரையை நிகழ்த்தும் உலகத் தலைவர்கள் எவருமே இருந்தாக சரித்திரமே கிடையாது. அப்படிப்பட்ட ஆளுமையை வளர்த்துக்கொண்ட உலகின் ஒரேயொரு தலைவராக அவர் இருந்தார். இருக்கிறார்.
பிரிட்டனின் பிரபல ஊடகமான பீ.பீ.சி உலகத்தின் மிகச்சிறந்த கெரில்லாப்படை வீரனாக அவரையே தேர்வு செய்தது இங்கு குறிப்பிடத்தக்கது. போராட்டக்களத்தில் இருந்த ஒரு படையணி பெருந்தொகையான கப்பல்கள், விமானப்படை, கரும்புலிகள் அணி, காவல்துறை பிரிவு, நீதிநிர்வாக பிரிவு, விசேட தாக்குதல் படையணிகள், பெண்புலிகள் என்று கட்டமைத்த இராஜ்ஜியம் உலகத் தலைவர்களின் தன்மானத்திற்கே ஓர் அடியாக இருந்தது.
ஓயாத அலைகள் 3ன்போது அவர் சிறீலங்கா படைகளை பலாலி முகாமிற்குள் முற்றாக முடக்கி முழுமையான வெற்றியை எட்டித் தொட்டிருந்தார். மற்றய நாடுகளின் வேண்டுகோளுக்கு அமைய மனிதாபிமானத்தோடு 40.000 சிங்களப் படைகளுக்கு உயிர்ப்பிச்சை கொடுத்தார்.
ஆனால் இன்று சிங்களப் படைகள் தமிழ் மண்ணில் செய்த செயல்களை உற்றுநோக்கினால் எமது தேசியத்தலைவரின் மனிதாபிமானமும், மாசற்ற போர்த்திறணும் தெளிவாக அனைவருக்கும் புரியும்.
இறுதிக்கட்ட போரின்போது காயப்பட்ட பொராளிகளையும் மக்களையும் புல்டோசர்களை ஏற்றி நெரித்து. குற்றுயிராய் கிடந்த அத்தனை உயிர்களையும் குளிதோண்டிப் புதைத்தது. இப்படி வன்னியில் நடந்த மனித அவலங்கள் சொல்லிலடங்கா. இன்று சிங்களப் படைகள் செய்த செயலை அவராலும் செய்திருக்க முடியும். ஆனால் அவர் மனிதாபிமானத்திற்காகவும் உலக சமுதாயத்திற்காகவும் அதைத் தவிர்த்தார்.
கடந்த மே மாதம் விடுதலைப்புலிகளின் தலைவர் தனி ஒரு மனிதனாக உலகத்தின் 32 நாடுகளை (வல்லரசுகளை) எதிர் கொண்டார். சங்கிலியனோ, பண்டாரவன்னியனோ, வீரபாண்டிய கட்டபொம்மனோ, கடைசிச் சோழனோ எதிர் கொள்ளாத பெரும் சவால் இதுவாகும். கடந்த 2000 வருட வரலாற்றில் உலகப்போரை தனிமனிதனாக சந்தித்த ஒரேயொரு வீரத்தமிழனாகவும் எமது தேசியத் தலைவர் விளங்கியுள்ளார்.
அவர் போரில் தோற்கடிக்கப்பட்டார் என்பது தவறான கருத்தாகும். சென்ற ஆண்டு மாவீரர்நாள் உரையைப் பார்த்தால் அவரே இதைச் சொல்லியிருப்பதை உணரலாம். ஒரு சிறிய மக்கள் குழுவை எதிர்க்க இவ்வளவு பெரிய வியூகத்தை உலகநாடுகள் அமைப்பதா என்ற கேள்வியை ஒரு சிறிய சிரிப்புடன் கேட்டிருப்பார். அன்றே அவருக்கு யாவுமே தெரிந்துவிட்டது, அவருடைய மெல்லிய நமட்டு சிரிப்பிற்குள்ளேயே அது பொதிந்து கிடந்தது.
பிரபாகரன் தனது பிள்ளைகள், பெற்றோர், குடும்பம், தான் என்று அனைவரையும் களத்தில் வைத்தே அவர் போரை நடாத்தியிருக்கிறார் என்ற உண்மையை இப்போது நயவஞ்சக எதிரிகள் தெரிந்து கொண்டு மௌனமாக சிந்திக்கிறார்கள். எதிரிகள் மட்டும் பிரபாகரனுக்கு எதிராகப் போராடவில்லை. ஈழத் தமிழரே பல பிரிவுகளாகப் பிரிந்து அவருக்கு எதிராகப் போர் நடாத்தினார்கள். நடாத்தியும் வருகிறார்கள்.
பிரபாகரன் துரோகிகள், மற்றும் வஞ்சகர்கள் பலரை வெளியில் விட்டால் ஆபத்தென அருகில் வைத்திருந்தார் என்பதை இப்போது அனைவரும் உணர்கிறோம். சென்ற மாவீரர் நாள் உரையில் அவர் அதிகமாக பாவித்த சொல் ஆப்பு வைத்தல் என்பதுதான். உள்ளிருந்து ஆப்பு வைத்த அனைவரையும் அவர் அறிந்திருந்தார். இப்படியாக உள்ளிருந்து ஆப்பு வைத்தவர்கள் பற்றிய கதைகள் மேலும் வரும். காலம் அந்தக் கதைகளின் உண்மையை விடுவிக்கும்.
ஒரு இனத்தின் விடுதலை, சுதந்திரம், இறைமை சார்ந்து உள்ளும் வெளியுமாக அவர் உருவாக்கியிருக்கும் கோட்டுருவாக்கச் சித்திரங்கள் அசாதாரணமானது. அது ஒரு தொடர் கூட்டு உளவியல் தொடர்பானது. அது ஒரு இனத்தை காலத்திற்கு காலம் இயக்கக்கூடியது மட்டுமல்ல என்றென்றைக்கும் சேர்ந்து பயணிக்கக்கூடியதும் கூட. இதை நாம் தெளிவாகப் புரிந்திருந்தால் நாம் பல பிரிவுகளாக முரண்பட்டு பிளவுபட்டிருக்கவும் மாட்டோம்.
நேற்று மட்டுமல்ல இன்றும்கூட ஏன் நாளையும் கூட ஈழத்தமிழர்களின் ஏகபிரதிநிதிகளும் போராட்ட சக்திகளும் தலைவர் பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலைப் புலிகள்தான். இதை தற்போதைய யதார்த்தம் கேள்விக்குள்ளாக்கலாம் ஆனால் பிரபாகரனின் அந்த இடத்தையும் அவர் வகிக்கும் வரலாற்றுப் பாத்திரத்தையும் நாம் என்றென்றைக்கும் புறம் தள்ள முடியாது.
எனவே தலைவர் பிரபாகரனின் இருப்பு பல துயரங்களினூடாக அழிவுகளினூடாக மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது அது உறுதிப் படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கும். இதை யார் புரிகிறார்களோ இல்லையோ தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் எமது விடுதலையின் ஆதாரம் இதில்தான் தங்கியுள்ளது.
இனிவரும் தமிழர் வரலாற்றில் பிரபாகரன் : இல்லாமை என்பதே இல்லை அவரது இருப்பே அதிமுக்கியமாகிறது. இதை புறந்தள்ளும் அரசியல் நடவடிக்கைகள் எதுவும் எமக்கு விடுதலையை பெற்றுத்தராது. மாறாக அடக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தோற்கடிக்கப்பட்ட இனமாகவே மீதிக்காலத்தை இந்த பூமிப்பந்தில் கழிக்க வேண்டியிருக்கும். இதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது காலத்தின் அதிதேவையாகிறது. எனவே நாம் முரண்பாடுகளை களைந்து ஒருமித்து ஒரு குரலாக போராடவேண்டும் என்பதே உண்மை.
இன்று அவர் பிறந்தநாள் விழாவை அவர் இறக்கவில்லை என்ற உறுதியுடன் அனைவரும் கொண்டாடுவோம். ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளை நடாத்தி அவருடைய நீண்ட ஆயுளுக்காக இறைவனை வேண்டிக்கொள்வோம். தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் போருக்கு தேசியத்தலைவரின் சிந்தனைக்கு அமைய எமது போராட்டங்களை முன்நெடுப்போம். அதுவே நாம் அவருக்கு கொடுக்கும் சிறந்த பிறந்த நாள் பரிசாகும்

பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அச்சுறுத்தல் கடிதம்! - விக்கிலீக்ஸ்


போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்த காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு நோர்வே எழுதிய அந்தரங்கமான கடிதத்தில் "விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்" என அச்சுறுத்தப்பட்டிருந்ததாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளது.
இவ்வாறு விக்கிலீக்ஸஸ் வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கொழும்பில் இருந்து வெளியாகும் 'சண்டே ரைம்ஸ்' இதழ் தெரிவித்துள்ளது.
ஓகஸ்ட் 17 2005 அன்று நோர்வேயினது வெளிவிவகார அமைச்சர் ஜான் பீற்றசனும் துணை வெளிவிவகார அமைச்சர் ஹெல்கேசனும் விடுதலைப் புலிகள் அமைப்பின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தினை லண்டனில் சந்தித்து உரையாடியபோது பிரபாகரனுக்கு என முகவரியிடப்பட்ட கடிதமொன்றைக் கொடுத்திருக்கிறார்கள் [கடிதத்தின் முழு விபரம் கீழே தரப்பட்டிருக்கிறது].
 
நோர்வே பிரபாகரனுக்கு அனுப்பிய கடிதத்தின் முழுமையான பகுதி இங்கு தரப்படுகிறது [தயவுசெய்து இதனைக் கவனமாகப் பாதுகாக்கவும்].
வெளிவிவகார அமைச்சு,
ஒஸ்லோ
16 ஓகஸ்ட் 2005
திரு.வேலுப்பிள்ளை பிரபாகரன்,
தலைவர்,
தமிழீழ விடுதலைப் புலிகள்.
அன்புடன் பிரபாகரனுக்கு,
அமைதி முயற்சிகள் மிகவும் இக்கட்டானதொரு நிலையில் இருக்கிறது என்பதை நீங்கள் முழுமையான விளங்கிக்கொண்டிருக்கிறீர்கள் என நான் நம்புகிறேன். கடந்த சில மாதங்களாக இடம்பெற்றுவரும் கொலைகள் மற்றும் பதில் கொலைகள் என்பவற்றை நோர்வேயும் அனைத்துலக சமூகமும் அதியுச்ச கரிசனையுடன் அவதானித்து வருகிறது.
விடுதலைப் புலிகளமைப்பு சிறுவர்களைத் தொடர்ந்தும் படையில் இணைந்து வருகிறது. அமைதி முயற்சிகள் தொடர்பில் விடுதலைப் புலிகளின் நோக்கம்தான் என்ன என்ற அவநம்பிக்கையினை ஏற்படுத்துவதாக இவை அமைகின்றன.
சிறிலங்காவினது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை செய்யப்பட்டமையானது நிலைமையினை மேலும் மோசமாக்கியிருக்கிறது.
இவ்வாறு தொடராக இடம்பெற்றுவரும் கொலைகள் தொடர்பாக இடம்பெற்றுவரும் சட்ட நடவடிக்கைகள் பற்றிய முடிவுக்கு வரவேண்டிய தேவை நோர்வேக்கு இல்லை.
எவ்வாறிருந்தாலும், இந்தக் கொலைகளுக்கு விடுதலைப்புலிகள்தான் காரணம் என சிறிலங்காவிலும் அனைத்துலகிலும் மக்கள் கருதுகிறார்கள். மக்களின் இந்த எண்ணம்தான் அரசியல் யதார்த்தமாக உள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பானது அமைதி முயற்சிகளில் தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடனேயே இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் புலிகளமைப்புச் செயற்படவேண்டியது அவசியமானது.
தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்குள்ள அரசியல் தெரிவுகள் தொடர்பாக எடுத்துவிளக்குவது எனது கடப்பாடு என நான் கருதுகிறேன். இக்கட்டான இந்தத் தருணத்தில் விடுதலைப் புலிகளமைப்பு ஆக்கபூர்வமான வழியினைத் தேர்ந்தெடுப்பதற்குத் தவறுமானால் அனைத்துலகத்தினது எதிர்விளைவு மோசமானதாக இருக்கும்.
இந்தப் புறநிலையில் கீழ்க்காடும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் விடுதலைப் புலிகள் விரைந்து செயற்படவேண்டும் என நான் கோருகிறேன்.
01. இரண்டு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை முழுமையான ஏற்றுக்கொண்டு செயற்படுவதற்கான நடைமுறைச்சாத்தியமான வழிகளைக் கண்டறிவதற்கான போர் நிறுத்த ஒப்பந்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான மீளாய்வுக்கு நோர்வே விடுத்திருக்கும் அழைப்பினை ஏற்றுக்கொள்ளுதல்.
02. பாதுகாப்பினை மேம்படுத்தும் வகையில் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்தினருக்கும் இடையிலான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்துதல்.
03. விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களின் போக்குவரத்துக்காக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முன்வைத்திருக்கும் பரிந்துரைகளை காலதாமதம் எதுவுமின்றி ஏற்றுக்கொள்ளுதல்.
04. வடக்குக் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்திற்கும் மீள்கட்டுமான முனைப்புக்களை வேகப்படுத்தும் வகையில் நடைமுறைச்சாத்தியமான அரசியல் வழிவகைகள் ஊடாக ஒத்துழைப்பினை வழங்குதல். இதற்கு பி-ரொம்ஸ் எனப்படும் ஆழிப்பேரலை நிவாரணத்திற்கான உடன்பாடு தொடர்பில் விடுதலைப் புலிகள் தொடர்ந்தும் ஈடுபாட்டுடன் செயற்படுவது அவசியமானது.
05. கொலைகளையும் சிறுவர் ஆட்சேர்ப்பினையும் உடனடியாக நிறுத்தும் வகையில் வினைத்திறன்கொண்ட முனைப்புக்களை மேற்கொள்ளுதல்.
தற்போது நிலவுகின்ற மோசமான நிலைமையின் தன்மையினை நீங்கள் முழுமையாக விளங்கிக்கொண்டிருப்பதோடு அமைதி முயற்சிகள் தொடர்பாக விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்ந்தும் முழு ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகிறது என்பதை அனைத்துலக சமூகத்திற்குக் காட்டும் வகையிலான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என நான் வெகுவாக நம்புகிறேன்.
தங்கள் உண்மையுள்ள,
ஜான் பீற்றசன்
தமிழாக்கம்: தி.வண்ணமதி