செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

சர்ச்சைக்குரிய நாடுகள் சூடானிடமிருந்து ஏதையும் கற்றுக் கொண்டுள்ளதா?

சூடான் பிரியுமானால் நான் அதையிட்டு மிகவும் கவலை அடைவேன். அதேவேளை சூடானில் இரு பிரிவினருக்கும் இடையில் சமாதனம் இருக்குமானால் நான் மிக சந்தோசம் அடைவேன்” சூடான் ஜனதிபதி ஓமார் அல்-பாசீர்.
‘‘ஒரு பெரிய இஸ்லாமிய நாடு பிரியுமானால் நாம் அதையிட்டு சந்தோசம் அடையவில்லை……. ஆனால் அவர்கள் பிரிய விரும்பினால், நாம் அவர்கள் சுகுமான உறவுடன் இருக்க உதவுவோம்.’’ ஈரான் வெளிநாட்டு அமைச்சின் பேச்சாளர், ராமின் மேகமன்பரசற்.

உலகில் பல பிராந்திய நிறுவனங்கள், கட்டமைப்புக்கள் – சட்டம், பொருளாதாரம், வாழ்க்கை தாரம் போன்றவற்றை பேணுவதற்காக அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஐரோப்பியா யூனியன், ஐரோப்பிய சபை, ஆபிரிக்க யூனியன், அமெரிக்கா நாடுகளின் நிறுவனம் ஆகியவை நடைமுறையில் உள்ளன. ஆசியாவில் சார்க், ஆசியான் போன்ற இரு பெரிய பிராந்திய நிறுவனங்கள் இருந்த பொழுதும், ஆசியவிற்கேன ஓர் தனி அமைப்பு இன்றுவரை கிடையாது.
உலகில் பல பிராந்திய நிறுவனங்களில் இருந்த பொழுதிலும் ஆபிரிக்க யூனியனின் யாப்பின், 20வது சாரத்தில் மட்டுமே, “மக்களின் சுயநிர்ணய உரிமை” பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆபிரிக்காவில் பல நாடுகளில் சுயநிர்ணயத்திற்கான போராட்டங்கள் நடைபெறுகின்றன. வட அங்கோலாவில் காபின்டா, நைஜிரீயாவின் தென் கிழக்கில்  வியாபரா, தென் செனகலில் கசமனஸ், சிம்பாவேயில் மத்துவகாசி ஆகியவற்றுடன் வேறுசில. மேற்கு சகார ஏற்கனவே சில ஆபிரிக்க நாடுகளினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது, சோமலீலான்ட் அங்கீகரத்திற்காக காத்திருக்கிறது.
தற்போதை உலக முறையில், பல் புத்திஜீவிகள்,  முக்கிய புள்ளிகள மக்களிற்கு அரசியலினால் ஏற்படும் கஷ்ட நஷ்டங்களை தவிர்ப்பதற்கு – கலோனித்துவ காலத்திற்கு முன்பு இருந்hர் போல், “ஆண்ட பரம்பரை மீண்டும் தாமே தங்கழை ஆழ வேண்டும்” என்ற தீர்வையே கொண்டுள்ளனர்.
ஆபிரிக்காவில்  சூடான் மிக பெரிய நாடு மட்டுமல்லாது – எகிப்த், எரித்திரியா, எதியோப்பியா, கென்யா, யூகான்டா, கொங்கோ ஜனநாயகா குடியராசு, மத்திய ஆபிரிக்கா குடியரசு, சாட், லீபியா ஆகிய 9 நாடுகளையும், 10வதாக செங்கடலையும் தனது எல்லைகளாக கொண்டுள்ளது. ஆகையால் உலகில் ஆகக் கூடிய எல்லை அல்லது அயல் நாடுகளை கொண்ட நாடு சூடான் ஆகும்.
சூடானை பொறுத்தவரையில் அராபிய மொழி, கலச்சரத்தை கொண்ட மக்கள் வாழும் பிரதேசமான வடக்கிலேயே அரசியல் அதிகாரங்கள் உள்ளன. இதனல் அராபிய மொழி காலச்சரம் இஸ்லாமிய அடையாளம் அற்ற தெற்கு, மேற்கு, கிழக்கு ஆகிய பகுதிகளில் வாழும் மக்கள் – தமது சமஉரிமை, சமஅந்தஸ்து, சம பொருளாதர பரிமாணங்களிற்காக அயல் நாடுகளின் உதவிகளுடன,; வேறுபட்ட அரசியல் போராட்டங்கள் நடந்துகிறார்கள்.
சூடானில் சரித்திரத்தை நாம் பார்க்கும்பொழுது, இது பல சுதந்திரமான அரசுகளை கொண்ட நாடாக உள்ளது. 1820ம் ஆண்டு ஏகிப்து முதன் முதலாக அதன் வடக்கு பிராந்தியத்தை கைப்பற்றியது. அதனை தொடர்ந்து, பிரிந்தானியருக்கு ஏகிப்துக்கும் ஏற்பட்ட ஒருங்கிணைந்த ஆட்சி ஒப்பந்தத்தின் அடிப்படையில், முக்கியமாக பிரித்தானியரினால் வடக்கும் தெற்கும் தனியான இரு நிர்வாகத்தின் கீழ் நிர்வாகிக்கப்பட்டு வந்ததுடன், வடக்கை சேர்ந்த யாரும் தெற்கில் எந்தவித நிர்வாக கட்டமைப்பில் ஈடுபடாதும் நிர்வாகித்தனர்.
வடக்கும் மேற்கும் ஒன்றாக்கப்பட்டது
ஆனால் 1946ம் ஆண்டு வழமையான பிரித்தானியரின் சட்டுப்போக்கான, “இலகுவான நிர்வாகம்” என்ற அடிப்படையில், வடக்கும் கிழக்கும் ஒன்றாக இணைக்கப்பட்டது. இவ்விணைப்பு பற்றி, தெற்கில் உள்ள மக்களிடம் எந்தவித ஆலோசனையும் நடத்தாது, எகிப்தியரையும் வடக்கையும் திருப்திபடுத்துவதாக அமைந்தது.
தெற்கில் பெரும்பான்மையாக ஆபிரிக்க கறுப்பு இன கிறீஸ்தவர்களுடன் மற்றைய சமயத்தவர்களும் வாழ்கிறார்கள். சூடானின் எண்ணை வழத்தில் ஏறக்குறை 80 வீதம் தெற்கு பிராந்தியத்ரில் உள்ளது.
1956ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரித்தானியர் சூடானுக்கு சுதந்திரம் கொடுக்கும் வேளையில், தெற்கில் உள்ள மக்களின் எந்தவித ஆலோசனையுமின்றி, வழமைபோல் எண்ணிக்கையில் பெரும்பான்மையான 22 மில்லியன் மக்களை கொண்ட வடக்கில் வாழும் அரபிய மொழி, கலச்சரத்தை கொண்டவர்களிடம் அதிகரத்தை கையழித்தனர். ஆனால் பிரித்தானியரிடம் அதிகரத்தை பெறும் வேளையில், தென் பிராந்தியத்திற்கு மாநில சுயஆட்சி வழங்குவதாக பிரித்தானியரிடம் கூறப்பட்டது. ஆனால் சுதந்திரத்தின் பின்னர், அதற்கு எதிர்மறாக, சூடான் நிர்வாக குழுவில் ஏறக்குறைய 800 நிர்வாக பதவிகள் இருந்த பொழுதிலும், தெற்கை சார்ந்த 6 பேருக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அரபிய மொழிக்கு முதன்மை கொடுக்கப்படது மட்டுமல்லாது, கிறீஸ்தவ பாடசாலைகள் முடப்பட்டு, வெளிநாட்டு கிறீஸ்தவ நிறுவனங்களும் தெற்கிலிருந்து வெளியேற்றப்பட்டன. தெற்கில் பதவி வகித்த நீதிபதிகள் உட்பட சகல முக்கிய பதவிகள் வகித்த பெரும்பாலானோர் இடமாற்றப்பட்டு, அவ்வெற்றிடங்களுக்கு வடக்கு பிராந்தியத்தை சார்ந்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதனால் தமது அரசியல், சமுக, பொருளாதார, உரிமைகளுடன் தமது அடையாளத்தை காப்பாற்றுவதற்கு வேறு வழியற்ற தென் சூடானை சார்ந்த இராணுவ உத்தியோகத்தர்களினால,; முதலாவது உள்நாட்டு யுத்தம் ஆரம்பிக்கப்பட்டது. அவ்வேளையில் வடக்கிலிருந்து தெற்கிற்கு வந்து கடமையாற்றிய ஆசிரியர்கள், நிர்வாகிகள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
பொதுவாக உலகில் சகல சுயநிர்ணய உரிமை போராட்டம,; என்றும் ஒரு காலோநித்துவ ஆட்சியின் பிரதிபலிப்பினால் ஏற்பட்டவையே. எண்ணிக்கையில் பெரும்பான்மையான ஓர் இனம,; எண்ணிக்கையில் குறைந்த ஒரு தேசிய இனத்தை நசுக்குவதுடன், அவர்களுக்கு சிறுபான்மையினர் என்ற பெயரையும் சூட்டிவிடுவார்கள்.  சர்வதேச கோட்பாடுகளுக்கு அமைய, சிறுபான்மையினர் ஒரு பொழுதும் சுயநிர்ணய உரிமைக்கு தகுதியுடையவர்கள் அல்லா.
சூடானை பொறுத்தவரையில் மூன்று இராணுவச் சதியும், தெற்கில் இரு உள்நாட்டு யுத்தங்களும் நடந்து முடிந்துள்ளன. மேற்கு பிராந்தியமான டாபூரில் சமதான ஒப்பந்தம் கைச்சாத்தனாலும், இன்றும் பதட்ட நிலை தொடர்ந்து நிலவுகிறது. கிழக்கை பொறுத்தவரையில் 2006ம் ஆண்டுடன் ஒர் உடன் படிக்கையின் பிரகாரம் அங்கு ஓர் சுமுக நிலை தோன்றியுள்ளது.
தெற்கில் இரு உள்நாட்டு யுத்தங்கள்
தெற்கில் 1955ன் பிற்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட உள்நாட்டு யுத்தம், 1972ம் ஆண்டில், ஜெனிவாவை தளமாக கொண்ட, உலக தேவலாய சபை, மற்றும் ஆகில ஆபிரிக்க தேவலாய மாகாநாடு ஆகியவற்றினால் உருவாக்கப்பட்ட “அடிஸ் அபா உடன்படிக்கை” யில் இரு பகுதியினரும் கையெழுத்திட்டத்தை தொடர்ந்து முடிவுக்கு வந்தது. இவ் உடன்படிக்கையின் பிரகாரம், தெற்கிற்கு பல அதிகாரங்களை கொண்ட ஓர் சுயஆட்சி உருவாக்கப்பட வேண்டும்.
ஆனால் வடக்கில் உள்ளவர்கள, வழமைபோல் தெற்கு பிராந்தியத்திற்கு எந்த அடிப்படை உரிமையையோ அதிகாரத்தையோ கொடுப்பதை தொடர்ந்து எதிர்த்து  வந்தாதனால் “அடிஸ்அபா உடன்படிக்கை”, சூடானின் அரசியல் யாப்பில் இணைக்கப்பட்டிருந்த பொழுதிலும், நடைமுறை படுத்தப்படவில்லை.
1983ம் ஆண்டு, சூடானின் ஜனதிபதி, சூடானை ஓர் இஸ்லாமிய நாடாக பிரகடனப்படுத்தியதுடன், வடக்கு-தெற்கில் உள்ள எண்ணை வளங்களை சுவீகரிப்தற்கு முயற்சித்தார். இப்படியாக பல விதத்;தில் “அடிஸ்அபா உடன்படிக்கை” சூடானிய அரசு அலட்சியம் செய்த காரணத்தினால், இரண்டாவது உள்நாட்டு யுத்தம் தெற்கில் ஆரம்பமாகியது.
“அடிஸ்அபா உடன்படிக்கை” கைவிடப்பட்ட அதேவேளை, சூடனிய மக்கள் விடுதலை இராணுவம், அதனுடன் இணைந்த அரசியல் பிரிவான “அமைப்பு” ஆகிய இரண்டும் “SPLA/M – Sudan People’s Libertion Army / Movement”  1983ம் ஆண்டு, ஒருங்கணைந்த  சூடானுக்குள் ஓர் சுயஆட்சியை தெற்கிற்கு ஏற்படுத்துவதற்காக  உதயமாகியது. இவ்  மக்கள் விடுதலைப் அமைப்;பு, தாம்  ஒருங்கிணைந்து வாழ்வதை சூடானிய அரசு விரும்பவில்லையென குறை கூறியது. இவர்கள் தெற்கின் 2வது உள்நாட்டு யுத்தத்தையும் முன்னின்று வழிநடத்தினார்கள்.
1989ம் ஆண்டு யூன் மாதம், சூடான் அரசின் நடவடிக்கைக்கு எதிரான 13 அரசியல் காட்சிகள் கூட்டாக இணைந்து ஓர் “தேசிய ஜனநாயக கூட்டமைப்பை” உருவாக்கினர். இதனை தொடர்ந்து வடகிழக்கிலும் கிளர்ச்சிகள் ஆரம்பமாகியதும், 2வது உள்நாட்டு யுத்தத்தை வேறும் வடக்கு கிழக்கு பிரச்சனையாக யாரும்  கருத முடியவில்லை. இவ் யுத்தம் முழு சூடானையே பாதித்திருந்தது.
தொடர்ச்சியான உள்நாட்டு யுத்தம் தென் சூடானில் – தோட்டத் தொழில் பெரும் பாதிப்பை கொண்டிருந்ததுடன், பசி பட்டினி, கல்வி, தொழில் வாய்ப்பு சுகாதாரம் போன்றவையும் மிக மோசமாக பாதிக்கப்பட்ட காரணத்தினால், நாலு மில்லியன் மக்கள் பலமுறை இடப்பெயர்ந்து, சூடானின் தலைநாகரிலும், அயல் நாடுகளான – எரித்திரியா, எதியோப்பியா, கென்யா, யூகான்டா, ஏகிப்த் போன்ற நாடுகளுக்கு சென்றனர்.
சூடானிய மக்கள் விடுதலை அமைப்பு மூன்றாக பிளவுபட்டது
உலகில் மற்றைய விடுதலை அமைப்புக்களுக்குள் நடப்பது போன்று, சூடானிய மக்கள் விடுதலை அமைப்பிற்குள் ஏற்பட்ட உட்பூசல் காரணமாக, 1991ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், இவ் அமைப்பு மூன்றாக பிளவுபட்டது. இதனால் இவர்களுக்கு  மேற்கு நாடுகளிடமிருந்த செல்வாக்கு மாற்றமடைந்தது. அதேவேளை ஈராக்கிற்கு ஆதராவாக அவ்வேளையில் சூடான் அரசு செயற்பட்ட காரணத்தினால், சூடானின் மிக மோசமான மனித உரிமை மீறல்களை அமெரிக்கா ஆதரமாக முன்வைத்து,  சூடானை சர்வதேச ஆதரவிலிருந்து புறக்கணிக்க ஆரம்பித்தது.
ஆரம்பத்தில் சூடானிய மக்கள் விடுதலைப் அமைப்பும், தேசிய ஜனநாயக கூட்டமைப்பையும் எரித்திரியா, எதியோப்பியா, யூகான்டா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் சூடானிய அரசை பதவியிலிருந்து விலக்;கி, எதிர்காட்சியினரை அப்பதவியில் அமர்த்தும் நோக்குடன் ஆதரித்தனர். அதேவேளை அமெரிக்காவும் சில உதவிகளை சூடானிய மக்கள் விடுதலைப் அமைப்;பிற்கு மறைமுகமாக வழங்கியிருந்ததாக சில பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.
1993ம் ஆண்டிலிருந்து, அயல் நாட்டவர்களான கிழக்கு ஆபிரிக்க நாடுகள், சமாதான பேச்சுவார்த்தைகளை முன்னேடுத்தனர். இவர்கள் சமாதனத்தை ஏற்படுத்துவதற்கான வழிகளை ஆய்வு செய்தவேளை, அதில் ஒரு அம்சமாக சுயநிர்ணய உரிமையையும் ஏற்று, அவற்றை பேச்சுவார்த்தைகான பிரகடானமாக அறிமுகம் செய்தனர். அப்பிரகடனத்தில், இரு பகுதியினரையும் கையெழுத்திடுமாறு வேண்டுகோள் விடப்பட்ட  பொழுது, அப்பத்திரத்தில் சுயநிர்ணய உரிமை பற்றி கூறப்பட்டுள்ளதால், தாம் அதில் கையெழுத்திட முடியாதென சூடான் அரசு மறுத்துவிட்டது. ஆனால் 1997ம் அரச படைகள் எதிர்பாராத விதமாக சந்தித்த படுதோல்விகளை தொடர்ந்து, அப்பத்திரத்தில் சூடான் அரசு ஏற்று கையெழுத்திட்டது.
1998ம் ஆண்டு, எரித்திரியாவுக்கும் எதியோப்பியாவிற்கும் இடையில் ஏற்பட்ட எல்லை யுத்தத்தினாலும், யூகாண்ட தனது கவனத்தை கொங்கோ ஜனநாயகா குடியராசில் நடைபெறுகின்ற சர்ச்கைளில் செலுத்தியமையாலும், இவ் இரு நாடுகளின் ஆதரவும் சூடானிய மக்கள் விடுதலைப் அமைப்பிற்கு குறைந்து கணப்பட்டது.
2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம், அமெரிக்கா ஜனதிபதியினால் சூடானில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கான ஓர் பிரதிநிதி நியமிக்கப்பட்டார். 2002ம் ஆண்டு ஒக்டொபர் மாதம், தென் சூடானில் ஓர் இன அழிப்பு நடைபெற்றுள்ளதாகவும், அதில் 2 மில்லியன் மக்கள் கொலை செய்யப்பட்டுள்தாகவும் அமெரிக்கா அறிவித்தது. இதனை தொடர்ந்து சூடானிய மக்கள் விடுதலைப் அமைப்பிற்கும,; சூடானிய அரசிற்குமிடையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, இறுதியாக 2005ம் ஆண்டு ஜனவரி மாதம், யூகாண்டவின் தலைநகரான நைரோபியில் சூடானிய மக்கள் விடுதலைப் அமைப்பிற்கும், சூடானிய அரசுக்கும் இடையில் சமாதான உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.
இவ் உடன்படிக்கை, தெற்கிக்கான சுயஆட்சியை அங்கீகரித்த அதேவேளை, சூடானிய மக்கள் விடுதலைப் அமைப்பு அரசுடன் இணைந்து, அரசாங்க நிர்வாகத்தில் மூன்றில் ஒரு வீகிதமான பதவிகளையும் பெற்றுக்கொண்டனர். தென் சூடானுக்கான சுயஆட்சியை 6 ஆண்டுகளுக்கு அனுமதிக்கும் அதேவேளை, 6வது ஆண்டு முடிவில், தென் சூடானிய மக்களிடம் ஓர் பொதுஜன வாக்கெடுப்பை நடத்துவதன் மூலம், தென் சூடான் பிரிந்து சென்று சுதந்திர நாடாகுவது பற்றி முடிவு செய்யப்படுமெனவும் கூறப்பட்டது.
ஆனால் தொடர்ச்சியாக ஏற்பட்ட சில ஒப்பந்த மீறல் சம்பவங்களினால், மக்கள் விடுதலை அமைப்பு, 2007ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், சூடானிய அரசிலிருந்து வெளியேறியது.
நாட்டுக்கு வெளியிலான வாக்களிப்பு
சுயநிர்ணய உரிமைக்காக போராடும் மக்கள், உலகில் பல பகங்களிலும் இடம்பெயர்ந்தும், அகதிகளாக வாழ்வதென்பது தற்கால உலகில் ஒர் சாதரண நிகழ்வாக நாம் காணலாம். இந்த அடிப்படையில,; பொதுஜன வாக்கெடுப்பை, நாட்டுக்கு வெளியில் நடத்துவது, தென் சூடானிற்கு முன்பு பல நாடுகளில் நடைபெற்றுள்ளன. சுதந்திரம் பெற்ற நாடுகளான பொஸ்னியா, கிழக்கு தீமுர், கொசவா போன்று சில நாடுகளிற்கான பொதுஜன வாக்கெடுப்பும் வெளிநாடுகளிலும்  நடைபெற்றன.
இந்த அடிப்படையில், தென் சூடானினியருக்கான வாக்களிப்பு 8 நாடுகளில் -  ஆவுஸ்திரெலியா, கனடா, எகிப்த், எதியோப்பியா, கென்யா, யூகாண்டா, பிரித்தானியா, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும், அத்துடன் வட சூடானில் சில இடங்களிலும் தென் சூடானியர் வாக்களித்துள்ளனர்.
இவ் பொதுஜன வாக்கெடுப்பின் முக்கிய அம்சம் என்னவெனில், இவ் வாக்கெடுப்பு செல்லுபடியகுவதற்கு, குறைந்தது 60 வீதமான மக்களால் வாக்களிக்கப்பட்டிருக்க வேண்டும். அடுத்து குறைந்தது 51 வீதமான வாக்குகள,; தென் சூடான் பிரித்து செல்வதற்கு ஆதரவாக அளிக்கப்பட்டிருக்க வேண்டும். இவ் முக்கிய அம்சங்கள் நிறைவு செய்ய தவறும் பட்சத்தில், தென் சூடான் தொடர்ந்து ஐக்கிய சூடானிற்குள்ளேயே ஓர் அரசியல் தீர்வை ஏற்க வேண்டும்.
சூடான் இஸ்லாமிய குடியரசு?
இம்மாதம், 9ம் திகதி முதல் 15ம் திகதி வரை நடைபெற்ற பொதுஜன வாக்கெடுப்பின் குழு தலைவரின் அறிக்கையின் பிரகாரம், ஏறக்குறைய 80 வீதத்திற்கு மேலான மக்கள் வாக்களித்துள்ளனர். இவற்றில் 90 வீதமான வாக்குகள், தென் சூடான் பிரிந்து சென்று ஓர் சுதந்திர நாடாகுவதற்கான வாக்குகளாகவே கணப்படுகின்றன. இவ் வாக்கெடுப்பின் முடிவுகள், முழு வாக்குகளும் எண்ணப்பட்டு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்படவுள்ளது.
மிக வரைவில் ஐக்கிய நாடுகள் சபையின் 193வது அங்கத்துவ நாடாக, தென் சூடான் அந்தஸ்தை பெறுவுள்ளது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் யுத்தங்களில் பின்னர் இராண்டாக பிரிந்த – ஜேர்மனி, கொரியா, வியட்நாம் போன்று இராண்டாக பிரிந்து செல்ல தயாராகும் சூடான், வட சூடான் தென் சூடான் என தமது நாட்டின் பெயர்களை பேணுவார்களா? அல்லது வேறு பெயர்களை சூட்டிக் கொள்வார்களா என்பது இதுவரையில் தெளிவாக இல்லை.
வடக்கு சூடானில் பெரும்பான்மையாக இஸ்லாமியர்கள் வாழும் காரணத்தினால், தமது நாட்டின் பெயரை (வடக்கை) கூடுதாலகா, ‘சூடான் இஸ்லாமிய குடியரசு’ எனப் பெயர் மாற்றிக்; கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் நிறைய உள்ளது. இப்படியான சந்தர்பத்தில, தெற்கில் பெரும்பான்மையான கிறீஸ்தவர்கள் இருந்த பொழுதிலும், தென் சூடானிற்கு எக்காரணம் கொண்டும் சமயத்தை தளுவும் ஓர் பெயரை சூட்டமாட்டார்கள் என்பது நம்பிக்கையான விடயம்.
மேற்கு பிரதேசமான டாபூர்
சூடானின் மேற்கு பிரதேசமான டாபூரில், அரபியார் அல்லாதவர்கள் மிகவும் மோசமான முறையில் பாகுபாடு காட்டப்பட்டு, சூடானிய அரசாங்கத்திலும் சம அந்தஸ்து மாறுக்கப்பட்டது. டாபூரில் “சூடான் விடுதலை அமைப்பும் – (எஸ்.எல்.எம்)”, “நீதிக்கும் சமத்துவத்திற்கான அமைப்பும் (ஜே.ஈ.எம்)”, 2006ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒன்றாக இணைந்து, “மேற்கு சூடானின் புரட்சிவாத கூட்டமைப்பாக” (எ.ஆர்.எப்;.டவிள்யு.எஸ்) உருவானது.
குறைந்தது 2 லட்சம் டாபூர் மக்கள் அயல் நாடான சாட்டில் தஞ்சம் புகுந்திருந்தனர். இதனால் சாட்டும், எ.ஆர்.எப்;.டவிள்யு.எஸ் இணைந்து சூடானின் வன்செயல்களை எதிர்கொண்டனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் தகவலின் பிரகாரம், 3 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் போர், பசி பட்டினி ஆகிய காரணங்களினால் டாபூரில் இறந்துள்ளனர். ஆனால் மற்றைய அரசாங்கங்கள் போன்று, சூடான் அரசும், டாபூரில் 10 ஆயிரம் மக்கள் மட்டுமே இறந்துள்ளதாகவும், டாபூரின் நிலைமைகள் திரிபுபடுத்தப்படுவதாகவும் கூறினார்கள்.
2006ம் ஆண்டு மார்ச் மாதம் சூடான் விடுதலை அமைப்பு இரண்டாக பிளவுபட்டது. ஒரு பிரிவிற்கு, சூடான் விடுதலை அமைப்பின் ஸ்தபகார், தற்பொழுது பாரிஸில் தஞ்சம் புகுந்துள்ள அப்துல் வாகிட் அல்-நூரின் தலைமையிலனாது, மற்றையது மீனாவி தலைமையிலானது. 2006ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட டாபூர் சமாதான உடன்படிக்கையில், சூடானிய அரசாங்கமும் மீனாவி தலைமையிலானா சூடான் விடுதலை அமைப்பினரும் கைச்சாத்திட்டனர். கடந்த டிசம்பர் மாதம் இவ் உடன்படிப்கையிலிருந்து இவர்களும் விலகியுள்ளனர். டாபூர் பிராந்தியத்தில் இன்றும் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள், அமெரிக்கா அரசு போன்றவை டாபூரில் ஓர் இன அழிப்பு இடம் பெற்றுள்ளதாக கூறினார்கள். அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை பிரிவினர், டாபூரில் போர் குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக 2005ம் ஆண்டு அறி;வித்தார்கள்.
போர் குற்றம் புரிந்த நாடுகள் எப்பொழுதும் சர்வதேச தண்டனையை தவிர்த்து கொள்வதற்காக, தமது நாட்டில் ஓர் கண்துடைப்பு விசாரண குழு, நீதி மன்றங்களை தற்கலிகமாக நிறுவுவது உலகில் வழக்கமாகியுள்ளது. இப்படியான ஓர் கண்துடைப்பு விசாரணைக் குழுவை சூடன் அரசு நிறுவியபொழுது, அதை சர்வதேச சமூதாயம் ஏற்க மறுத்துவிட்டது.
2009ம் ஆண்டு மார்ச் மாதம், சூடானின் ஜனதிபதி ஓமார் பாசீர் மீது, சர்வதேச கீறிமினல் நீதி மன்றத்தினல், போர் குற்ற புரிந்துள்ளதாக புகார் கூறி, சர்வதேச பிடிவிறாந்து வழங்கப்பட்டுள்ளது.
ஏதிர்காலத்தில் சூடானிலிருந்து டாபூரும் பிரிவதற்கான சாத்வீககூறுகள் பெரிதாக காணப்படுகின்றனா.
கிழக்கு பிராந்தியம்
சூடானின் கிழக்கு பிராந்தியம் – செங்கடல், காசாலா, அல்-கடாறிப் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கியுள்ளதுடன், எண்ணெய் வளங்கள், தங்கம், விவசாயம் செய்யப்படாத பெரிய நிலப் பிரதேசங்களை கொண்டுள்ளது.
இங்கு காணப்படும் எண்ணெய் வளங்களின் வருமானம், சரியான விகிதாசார முறைப்படி பிரிக்கப்படாததினால், 1994 முதல் இங்கு பல சர்ச்சைககள் வன்முறைகள்  ஆரம்பமாகியது. கிழக்கு பிராந்தியத்தை சார்ந்தவர்கள் தம்தை கூடிய எண்ணிக்கையில் அரசு அரசில் சேர்க்குமாறு  கோரிக்கை வைத்தனர்.
கிழக்கு பிராந்தியத்தின் “கிழக்கு முன்ணனி”, என்ற போராட்டக்காரர்கள், 2005ம் ஆண்டு முதல் அயல் நாடான எரித்திரியாவின் ஆதரவை பெற்றிருந்தார்கள். ஆனால், 2006ம் ஆண்டு, எரித்திரியா இரு பகுதியினரை பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தியதன் பலனாக, 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம், சூடானிய அரசிற்கும் கிழக்கு முன்ணனியினருக்கு இடையில் ஓர் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதன் பிரகாரம், சூடான் அரசு பிராந்தியா, மாநில அடிப்டையில் அரசியல் உரிமைகள், சொத்துக்களை பகிர்ந்து கொள்ளும் அதேவேளை, கிழக்கின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக