வெள்ளி, 14 ஜனவரி, 2011
புதன், 12 ஜனவரி, 2011
கவிஞர் தீபச்செல்வன் – நேர்காணல்
குழந்தைகளின் புன்னகைகளை நிலங்களின் அடியில் புதைத்து வைத்துவிட்டு நாம் நசுங்கிய எதிர்காலத்தோடு அமர்ந்திருக்கிறோம்” – தீபச்செல்வன்
கவிஞர் தீபச்செல்வன் ஈழத்தின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறியப்பட்டு வருகிறார். ஈழத்தின் போர்ச்சூழலில் வாழ்ந்து கொண்டு அந்த வாழ்வை இந்த மண்ணோடு மண்ணாக அநுபவித்து பதிவாக்கி வருபவர். தீபம் இணைய இதழின் மூலம் தன்னை தமிழ்ச்சூழலில் அடையாளப்படுத்தி வருபவர். இவரின் ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’ என்ற கவிதைத் தொகுப்பு காலச்சுவடு பதிப்பகத்தால் வெளிவர உள்ளது.
தற்கால போர்க்கால வாழ்வில் அமிழ்ந்திருக்கும் மக்களின் அவலமும் அழிவும் நிறைந்த வாழ்வை, இலங்கை அரசு தமிழ் மக்கள் மீது நிகழ்த்தி வரும் மிகப் பெரும் இனஅழிப்புக் கொடூரத்தை, தமிழ் மக்களின் அடையாள அழிப்பை, திறந்த வெளிச்சிறைச்சாலையில் வாழும் யாழ் மக்களின் அச்சமும் அறியப்படாத கொலைகளும் பலவீனமும் நிறைந்த வாழ்வை, இரத்தமும் சதையுமாக தனது கவிதைகளில் வெளிப்படுத்தி வருகிறார்.
‘கிளிநொச்சி’, ‘யாழ் நகரம்’,’முற்றுகையிடப்பட்ட நகரத்தின் பதுங்குகுழி’, ‘கிணற்றினுள் இறங்கிய கிராமம்’, ‘குழந்தைகளை இழுத்துச்செல்லும் பாம்புகள்’, ‘பதுங்குகுழியில் பிறந்த குழந்தை’, ஆகிய கவிதைகள் முக்கியமானவை. ஈழத்தின் பத்திரிகை சஞ்சிகைகள் மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் சஞ்சிகைகளிலும் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. தமிழின் அதிகமான இணைய சஞ்சிகைகளில் எழுதி வருபவர்.
இவரின் தீபம் இணைய இதழில் ‘கீறல் பட்ட முகங்கள்’, ‘பல்லி அறை’, ஆகிய தளங்களில் உள்ள கவிதைகள் ஒவ்வொன்றும் தனித்துவமானவை. கவிதைகள் தவிர, விமர்சனம், பத்தி எழுத்து, ஓவியம், என்பவற்றிலும் தனது ஆளுமையைச் செலுத்தி வருகிறார். அவருடன் மின்னஞ்சல் ஊடாக ஒர் உரையாடலை நிகழ்த்தினோம்.
01.
சித்திராங்கன்:
எங்கள் அடையாளம் இருப்பு தொடர்ந்தும் களவாடப்படுவதாக நான் உணர்கிறேன். இதன் பின்னணியில் உங்களின் சில கவிதைகள் அமைந்துள்ளன. எங்கள் கிராமங்கள் மட்டுமல்லாமல் எங்கள் வாழ்வும் எங்கள் அடையாளமும் அழிக்கப்பட்டு வருகின்றது. இது பற்றிய உங்கள் கருத்து யாது ?
தீபச்செல்வன்:
எங்களுடையவை எல்லாமே களவாடப்பட்டு வருகின்றன. நாம் அறியாதபடி களவாடப்படுகின்றன. அடையாளம் இருப்பு என்பதற்கப்பால் மனிதர்களும் மனங்களும் களவாடப்படுகின்றன. அதிகாரம் எல்லாவற்றையும் நன்கு திட்டமிட்டு பெரியளவில் களவாடிக் கொண்டிருக்கிறது. இனத்தின் இருப்பு கனவு எல்லாவற்றையும் சிதைத்து விடுகிற பசியில் இந்தக் களவு நடைபெறுகிறது. எல்லோரும் அறிந்திருக்க எல்லோரும் சேர்ந்து எல்லாவற்றையும் களவாடுகிறார்கள்.
அதனடியில் எல்லாமே அழிகின்றன. உண்மையில் கிராமம் ஒன்று அழிகிறபோது அங்கான நமதாயிருந்த வாழ்வும் விட்டுவந்த சுவடுகளும் அழிக்கப்படுகின்றன. நாம் கிராமங்களை இழக்கிற வலியில் வாழ்வும் அடையாளமும் அவசரமாக பிடுங்கியியெடுக்கப்படுகிறது. உலகத்திடம் ஆயுதங்களிடம் அதிகாரத்திடம் நம்முடையவை எல்லாமே இரையாகின்றன. அதனை அல்லது அதன் பின்னணிகளை எழுதுகிற பொறுப்பும் நம்மிடம் இருக்கிறது. மிகவும் ஆத்திரமாக எழுதவேண்டியிருக்கிறது.
02.
சித்திராங்கன்:
இலங்கை அரசு வன்னிநிலப்பரப்பில் நிகழ்த்தி வரும் யுத்தத்தினால் மக்கள் எவ்வாறான அவலங்களை எதிர்கொள்கிறார்கள்.?
தீபச்செல்வன்:
வன்னியில் உலகத்தில் நடந்திராத கொடுமையான போர் நடக்கிறது. தமிழ் மக்கள் சொற்களால் எழுத முடியாத துயரங்களை சுமக்கிறார்கள். வன்னி மண்ணை கையப்படுத்த வேண்டும் என்ற மண் வெறியில் அரசு நிற்கிறது. உணவு மருந்து வாழிடம் எல்லாவற்றையும் இழந்து அரசின் பயங்கர ஆயுதங்களுக்கு அஞ்சியபடி இங்கு ஒரு வாழ்க்கை நடக்கிறது. குழந்தைகள் பெண்கள் மாணவர்கள் என்று மக்கள் எல்லோருமே அரச நோக்கங்களால் பலிவாங்கப்படுகிறார்கள். தமிழ் மக்களின் கனவையும் விடுதலை உணர்வையும் அழிக்கிற திட்டத்துடன் விடாப்பிடியான போரை நடத்துகிறது.
வன்னியில் போர் தருகிற அவலங்களுக்கு முகம் கொடுத்தபடி அலைந்தபடி தமிழ் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள். வாழிடங்களை ஒடுக்கி அவகாசங்களாலும் தடைகளாலும் அரசு மிரட்டிக் கொண்டிருக்கிறது. பெரியளவில் சூழுகிற இந்த அவலங்களிலிருந்து வாழ்வுக்கான போராட்டத்தை மிகவும் துணிவுடன் நம்பிக்கையுடன் மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். நிலங்களை அபகரித்துக்கொண்டு ஆயுதங்களால் எச்சரித்துக்கொண்டு அடிமைப்படுத்த முனைகிறது அரசு. வன்னியின் போர்த்துயரம் உலகம் எங்கிலும் வாழுகிற மனிதர்களை கடுமையாக வதைக்கிறது. ஈழத்துக்கு பொறுக்க முடியாத சோகத்தை வலியை வரலாற்று துயரத்தை வன்னியில் பல முனைகளில் பல கோணங்களில் அரசு வழங்கிக்கொண்டிருக்கிறது. இந்தப்போர் ஒட்டு மொத்த ஈழமக்களது கனவுகளையும் குறிவைத்து அதனை அழிக்க நடக்கிறது என்பதிலிருந்து இது வன்னியை கடந்து எல்லாரையும் துயர் படுத்துகிற ஒரு பெரிய அவலமாயிருக்கிறது.
03.
சித்திராங்கன்:
உங்களின் ‘பல்லி அறை’ தளத்திலுள்ள கவிதைகள் தொடர்பாக ‘மனதுக்குள் கிடந்து நெளிகின்ற அந்த வலிகளை நெருக்கடிகளை வடித்திருக்கிறேன்’ என்றும் ‘அறைக்கு உள்ளும் வெளியும் காணும் மனிதர்கள் பற்றியவை’ என்றும் கூறியிருக்கிறீர்கள். இக்கவிதைகளில் அகம் பேசப்படுகிறது என்று நினைக்கிறேன். அக்கவிதைகள் பற்றிக் கூறுங்கள் ?
தீபச்செல்வன்:
உண்மைதான் மனிதர்களை விலத்திச் செல்லுகிறபோதிருக்கும் புரிதல்களில் மனம் துடித்துக்கொண்டேயிருக்கிறது. எத்தனை மனிதர்கள் அவர்களுக்கு எத்தனை முகங்கள் சிலவேளை வந்து விடுகிற நமது தவறான புரிதல்கள் முரண்பாடுகள் எல்லாமே மனதை அலைத்துக் கொண்டிருக்கிறது. அறைகளில் ஏற்படுகிற மனிதர்களுடனான முரண்பாடுகள் வெளியில் அலைய வைக்கின்றன. வெளியில் எச்சரிக்கின்ற மனிதர்களால் அறைகளில் பதுங்கி வாழுகிற நிர்பந்தம் இரண்டுக்கும் இடையிலாக சொற்களை தவிர எனக்கு எதுவும் ஆறுதலாய்படவில்லை.
போர்க்கவிதைகள் மட்டுமே எழுதுகிறேன் என்று நிறையப்பேர் கூறுகிறார்கள். போர் மனிதர்களை அலையவைக்கிறது. ஆனால் மனிதர்களின் புரிதல்களின் குழப்பங்களால் மனிதர்கள் அகத்தில் துடிக்கிறார்கள். அந்த குழப்பம் புரிதலின்மை பலிவாங்குகிற மனது மற்றவர் பற்றிய கருத்து இவற்றிலிருந்தே போர் உற்பத்தியாகிறது. நமக்கிடையில் எரிந்து கொண்டிருக்கிற இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபடுவது எப்படி என்று முயன்று கொண்டிருக்கிறேன். மனிதர்களாக நாம் வாழுகிறோமா? மனித குணங்கள் மிகவும் ஆபத்தை தருகின்றன. பக்கத்தில் இருப்பபவரை முதலில் புரிவது நேசிப்பதை சாத்தியப்படுத்த வேண்டும். பல்லியறையில் அதற்கான அலைச்சலை எழுத முற்படுகிறேன்.
04.
சித்திராங்கன்:
‘செலவு’ என்ற கவிதையும் முக்கியமானது. பலர் தாங்கள் வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதாகத் தெரியவில்லையே. பல வேளைகளில் முகமூடிகளைப் போட்டு தங்களை மூடிவிடுகிறார்களே?
தீபச்செல்வன்:
அது வெளியில் சந்தித்த ஒரு சிறுவனை பற்றி எழுதியது. அவன் எனக்கு கூறிய செலவு விபரம் பற்றி இருக்கிறது. அவனின் வார்ததைகளில் வாழ்வின் பொறுப்பும் சமூக அனுபவமும் இருந்தன. எனினும் அவன் இன்னும் சற்று வளர அவனை உள்ளிளுக்கிற இந்த சமூகத்தின் போக்குகள் குறித்துத்தான் நாம் சிந்திக்க வேண்டும். அவன் பின்னர் பார்க்கிற கணக்குகள் நம்மைப்போலாகி விடுகின்றன. எவ்வளவுதான் அனுபவமும் துயரமும் இருந்தாலும் சிலவேளை பாதை பிழைத்து விடுகிறது. ஆனால் சிறுவர்களது அந்த அனுவபங்கள் குறிப்புகள் எமக்கு மிகவும் அவசியமாக தேவைப்படுகின்றன. வாழ்வை உணர்த்துகின்றன.
05.
சித்திராங்கன்:
‘கிளிநொச்சி’ என்ற கவிதையில் ‘நானும் பிரகாசும் மெலிந்து விட்டோம்…..’ என்றவாறான மொழிக் கையாளுகை கவிதையாக அல்லாமல் கதையாகக்கூட விரியக்கூடிய அனுபவங்களைக் கொண்டிருக்கிறதே..?
தீபச்செல்வன்:
கிளிநொச்சியின் வாழ்வு அதன் பங்கு அது மீதான கவனம் எல்லாவற்றையும் பேசுதல் மிக முக்கியமானதாக இந்த நகரத்தில் வாழுகிறவன் என்ற அடிப்படையில் எனக்கு இருக்கிறது. சமாதானம் இதற்கு ஏற்படுத்திய கதிகளை அப்படியே எழுத வேண்டும் போலிருந்தது. 2006மற்றும் 2007களில் இருந்த சூழல் மிகவும் துன்பமானது. கிளிநொச்சி சமாதானத்திடமிருந்து போரிற்கு பழக்கப்பட்டுக் கொண்டிருந்தது. பதுங்குகுழியிலிருந்து நிறைய நாளுக்கு பிறகு பிரகாஷ் என்ற நண்பனை கண்டு மீளவும் அதற்குள் அடங்க நேர்ந்த பிறகு எழுதியது. அது அவன் மீதான சொற்களாயிருக்க கதையாக விரிவதுபோல உங்களுக்கு படுகிறது.
06.
சித்திராங்கன்:
‘ஒரு கமரா ஒளித்துக்கொண்டிருக்கிறது’ கவிதையில் ‘பதுங்குகுழிச் சனங்கள்’ என்ற புதிய சொற்சேர்க்கை வருகிறது. இது வாழ்வனுபவத்தின் வழியானதா? படைப்பனுபவத்தின் வழியானதா?
தீபச்செல்வன்:
எனக்கு நெருக்கமான கமராப்போராளி அன்பழகன் வீரமரணம் எய்தியபொழுது அதை எழுதியிருந்தேன். போராளிகள் சனங்களிடமிருந்துதானே உருவாகிறார்கள். அவர்கள் சனங்களாக களத்தில் முகம் கொடுக்கிறார்கள். அன்பழகனுக்கும் சனங்கள்மீது தீராத பற்றிருந்தது. சனங்கள் வாழுகிற சூழலால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். நமது சனங்கள் கடந்த முப்பது வருடங்களால் பதுங்குகுழிகளில்தானே வாழுகிறார்கள். அதற்குள் எமது வாழ்வு வடிவமைக்கப்பட்டதாயிருக்கிறது அதற்குள் முடிகிறது திட்டமிடப்படுகிறது. எனவே பதுங்குகுழிச்சனங்களாக நாம் வாழ்து கொண்டே இருக்கிறோம். அதனால்தான் எமது அடையாளம் மிஞ்சியிருக்கிறது.
அந்த குழியிலிருந்து மீள்வதற்கான மனதுடன் போகிறவர்களாக அன்பழகன் போன்ற போராளிகளை கருதுகிறேன். நமது அடையாளத்திற்காக அவன் கமராவையும் துப்பாக்கியையும் எடுத்திருந்தான். அவற்றை அவர்கள் தூக்கியின் பின்னணியில் பதுங்கு குழிச்சனங்களின் வாழ்வுக்கனவு கண்ணீர் போன்றன இருக்கிறது எனவே அது வாழ்வனுபவத்திலிருந்து வந்திருக்கிறது.
07.
சித்திராங்கன்:
படைப்புக்களில் வட்டாரத்தன்மை, எம்மை எமது வாழ்வை, எமது அடையாளத்தை, பதிவு செய்வதாக அமைகின்றது. இது வரவேற்கத்தக்கது. ஆனால் உலகு நோக்கிய பொதுமைப்பட்ட படைப்புக்கள் என்று வருகின்றபோது ஓர் அளவுக்கு அப்பால் இவற்றை எடுத்துச் சென்ற படைப்புக்கள் மிகக் குறைவு. இந்த இடைவெளிகளை நாம் எப்படிக் கடக்கலாம்?
தீபச்செல்வன்:
இன்று பொதுமைப்பட்ட மொழியால் எழுதப்பட வேண்டிய தேவையும் இருக்கிறது. வட்டாரத்தன்மையுடன் எழுதுவது பொதுமைக்கு உலகளவிலான கருத்தாடலுக்கு சிக்கலானது என்றில்லை. அங்கு குறித்த வாழ்வின் அடையாளத்தின் தனித்துவம் கொண்டு பேசப்படுகிறது. மொழிபெயர்பில் இது சிக்கலைத்தரலாம். அவற்றுக்கு மாற்றான சொற்கள் வேற்று மொழியில் இல்லாதிருக்கும். தமிழ்நாட்டில் எமது சில வழக்காற்று சொற்களை புரிவதில் சிக்கலிருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டு வழக்காறுகளை நாம் ஓரளவு புரிந்து வைத்திருக்கிறோம்.
எனினும் அங்கு அநேகமானவர்கள் பொதுமைப்பட்ட மொழியினை கையாளுகிறார்கள். நமக்கும் அப்படியொரு பாதிப்பு அல்லது எழுத்து பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் வட்டாரம் சார்ந்த எழுத்துக்கள் பொதுமைப்பட்ட எழுத்துக்கள் என்பன சூழல் மனநிலை தேவை முதலியவற்றை பொறுத்து நம்மிடம் இயல்பாக வருகின்றன.
08.
சித்திராங்கன்:
‘நொருங்கிக் கிடக்கும் கடதாசிச் சைக்கிள்கள்’ கவிதையில் காணாமற்போன பிள்ளைகளின் அன்னையர் துயர் சொல்லப்படுகிறது. இது ஆஜென்ரீனாவிலும் சரி, இலங்கையிலும் சரி, ஒரு பொதுமைக்குள் வந்து விடுகின்றன. இவ்வாறான படைப்புக்கள் தேசம் கடந்த பிரச்சனைகளாக விரிகின்றன. இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
தீபச்செல்வன்:
அதிகாரங்கள் உலகில் எங்கும் தனக்குரிய வகையில்தான் இயங்குகிறது. அர்ஜன்ரீனாவில் இடம்பெற்ற அந்த செய்தியை வாசிக்கும்பொழுது எங்கள் நகரங்களில் கடத்தப்படுகிற சைக்கிள்கள் பற்றிய ஆதங்கம் ஏற்பட்டது. அங்கு தமது பிள்ளைகளை மீட்க அன்னையர்கள் கடதாசிச் சைக்கிளை வைத்து போராட்டம் நடத்தினாhர்கள். அந்த அன்னையர்களில் பலர் பிறகு காணாமல் போயிருந்தார்கள்.
இதே மாதிரி இங்கும் நிலமையிருக்கிறது. நம்மைப்போலவே அர்ஜன்ரீனா போன்ற நாடுகளில் உள்ளவர்களும் அதிகாரங்களினால் கொண்டு செல்லப்படுகிறார்கள். அச்சுறுத்தப்படுகிற நமது நகரங்களிலும் கடதாசிச் சைக்கிள்களில் செல்கிறவர்கள் சாம்பலாகிப்போகிறார்கள். அந்த பயங்கரத்திலும் நான் வாழுகிறேன். எனது சைக்கிளும் நொருங்கிக் கொண்டிருக்கிறது. நீங்கள் கருதுவதுபோல அதிகாரங்கள் உலகெங்கிலும் நம்மை விரட்டி வருகிறது என்பது பொதுமைப்பட்டதாயிருக்கிறது.
09.
சித்திராங்கன்:
இந்தப் போரின் வலியும் மக்களின் துயர் நிறைந்த வாழ்வும் உங்களின் அதிகமான கவிதைகளில் பதிவு பெற்றுள்ளன. ஒரே பொருளில் அமைந்த அனுபவங்களை மீண்டும் மீண்டும் வித்தியாசமாக படைப்பாக்குவதில் உள்ள அனுபவ வெளிகள் பற்றிக் கூறுங்கள் ?
தீபச்செல்வன்:
போர் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. போர் பற்றி எழுதுவதில் தொடர்ந்து எழுவது எனக்கு சிக்கலாக படவில்லை. ஆனால் நிறையப்பேர் இப்படித்தான் கேட்கிறார்கள். அதிலும் முப்பது வருடமாக தொடருகிற போர் பற்றி எழுதியிருக்கிறார்கள் எனவே அதிலிருந்து வித்தியாசமாக எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. கடந்த தசாப்தத்தில் அதாவது ஈழத்தின் மூன்றாவது கட்ட போரின் பொழுது கருணாகரன், நிலாந்தன் போன்றவர்கள் அதனை எழுதியவிதம் என்னை பாதித்தது.
ஆனால் தற்போதைய போர் காலம் சூழல் என்பவற்றிற்கு ஏற்ப குரூரமடைந்திருக்கிறது. எங்கள் இனத்தை அழித்துவிட எங்கள் நகரங்களை கைப்பற்றிவிட அது வகுத்திருக்கிற வியூகங்கள் மிகவும் வித்தியாசமாயிருக்கிறது. முன்னைய போர்களிடமிருந்து அது வேறு வியூகங்களை வகுத்திருக்கிறது. பல முனைகளில் ஒரு நகரத்தை முற்றுகையிடுகிற படைகள் போலவே அவை இருக்கின்றன. இந்தப்போர் மக்களையும் உணர்வுகளையும் நுட்பமாக அழித்துக்கொள்ள முயலுகிறது. அதன் தீவிரத்தை மக்கள் நன்கு உணருகிறார்கள். போரின் கொடுமைகள் என்னை பல முனைகளில் பாதிக்கிறது. அதை எழுதும்போது கடந்தகாலங்களிலிருந்து வேறுபட்டெழுத முடிகிறது.
10.
சித்திராங்கன்:
தற்கால யாழ்ப்பாணத்து நெருக்கடி மிகுந்த வாழ்வைப் பதிவு செய்தவற்றுள் முன்னர் ‘முரண்வெளி’ யில் வெளிவந்த (மூன்றாவது மனிதனிலும் வந்தது) ‘யாழ்ப்பாண நாட்குறிப்பு’ எனக்கு முக்கியமாகப் படுகிறது. அது கவிதையோ கதையோ அல்லாத வடிவம். இப்போ உங்களின் கவிதைகளும் முக்கியமானவை. இவற்றை விட உங்கள் வாசிப்பில் வேறு படைப்புக்கள் ஏதாவது அகப்பட்டதா?
தீபச்செல்வன்:
மிகவும் நெருக்கடியான யாழ்நகரத்தின் காலத்தில் ஹரிகரசர்மாவின் யாழ்ப்பாண நாட்குறிப்பு எழுதப்பட்டது. அந்த நெருக்கடி இன்றும் தொடருகிறது. மிக முக்கியமானதொரு பதிவு என்னையும் பாதித்திருந்தது. 2006இல் போர் மீள தொடங்கியபொழுது எழுத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நிறைப்பேர் எழுதுவதை கைவிட்டார்கள். இது ஈழம் எங்கும் நிகழத்தொடங்கின. ஆனால் யாழ்ப்பாணத்தின் மரணவீதிகளை பின் தொடருகிற அச்சுறுத்தல்களை எழுதியவர்களில் சிலரே குறிப்பிடக் கூடியவர்கள். சித்தாந்தன், ஹரிகரசர்மா, துவாரகன், த.அஜந்தகுமார், வினோதரன், த.ஜெயசீலன் போன்றவர்கள் உணர்வுபூர்வமாக எழுதினார்கள்.
இதே நிலமை வன்னியிலும் காணப்பட்டது. அங்கு எழுத்துச் சூழல் சற்று பாதிப்புற்றுள்ளது. வன்னியின் போர் மற்றும் அரசியற் சூழல் குறித்தான எழுத்துகள் பெரியளவில் எழுதப்படவில்லை. கருணாகரன், பொன்காந்தன், த.அகிலன் போன்றவர்களுடன் போராளிகளான ராணிமைந்தன், வெற்றிச்செல்வி, கு.வீரா, செந்தோழன், த.ஜெயசீலன் போன்றவர்கள் எழுதினார்கள்.
கிழக்கிலும் இந்த நிலமை ஏற்பட்டது. அங்கு முன்பிருந்த எழுத்துச் சூழல் சுருங்கத்தொடங்கியது. அலறி, மலர்ச்செல்வன் போன்றவர்கள் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
11.
சித்திராங்கன்:
இந்த நெருக்கடிகளைப் பதிவு செய்வதில் ஓவியம், புகைப்படம், குறும்படம் ஆகியன பற்றி கூறுவீர்களா ?
தீபச்செல்வன்:
படைப்புத்துறை மிகவும் பாதிப்புற்றிருக்கிறது. எழுத்து சுருங்கியிருந்தாலும் ஓரளவு நெருக்கடிகளை பேச முடிகிறது. கருத்தாடல்களும் இடம்பெறுகிறது. ஆனால் புகைப்படம், குறும்படம் முதலிய துறைகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளன. ஓவியத்துறையின் வளர்ச்சி திருப்தி தருகிறது. சனாதனன், நிலாந்தன், ஆசை.ராசையா, சஞ்ஜித், கோ.கைலாசநாதன், க.செல்வன், விஜிதன் ரமேஸ் போராளி நவீனன் போன்றவர்களின் ஓவியங்கள் சமகாலத்தின் நெருக்கடிகளை பிரதிபலிக்கிறது. வன்னியில் நெருக்கடிகளை பிரதிபலிக்கிற புகைப்படங்கள் கலைஞர்களாலும் போராளிக்கலைஞர்களாலும் பிடிக்கப்படுகின்றன. இன்று உலகளவில் வன்னிப்புகைப்படங்கள் கவனத்தை ஏற்படுத்துகின்றன.
ஈழத்தின் குறும்படங்கள் நெருக்கடிகளை பிரதிபலிக்கிறது. ஈழத்துக்குறிய தனித்துவமான இயல்புகளுடன் அவை வருகின்றன. தற்போதைய ஈழத்து குறும்படங்களில் முல்லை.யேசுதாசனது படங்கள் முக்கியமானவை. துடுப்பு, ஒரு நாட்க் குறிப்பு, கனவு போன்ற அவரது படங்கள் தனித்துவமான இயல்புடையது. போராளிகளான நிமலா, திலகன், நவநீதன் போன்றவர்களின் படங்களும் சமகால நெருக்கடிகளை பேசுகின்றன. போராளி நிமலாவின் வேலி என்ற பெண்ணியம் சம்பந்தமான குறும்படம் என்னை மிகவும் பாதித்திருந்தது.
ரதிதரனின் வெட்டை, கால்கள் முதலியனவும் மிக அண்மையில் வந்த குறும்படங்கள். அவையும் கவனத்தை பெற்றிருந்தது. ஆனால் மீளவும் போர் காரணமாக இந்தத்துறை மிகவும் பாதிப்புற்றுள்ளது.
12.
சித்திராங்கன்:
கவிதைகளில் பன்முகத்தன்மையை எல்லாக் கட்டங்களிலும் உங்களால் பேண முடிகிறதா?
தீபச்செல்வன்:
இப்படித்தான் எழுத வேண்டும் என்று நினைப்பதில்லை. எழுதுகிற சூழல் மனம் நெருக்கடிப்படுகிற நேரம் இடம் என்பவைதான் அவற்றை தீர்மானக்கிறது. என்னால் எழுத முடிகிற மாதிரி நான் எழுதுகிறேன். வலிந்து கொள்ளவதில்லை. மொழியை சரியாக கையாள வேண்டும் என்ற கவனம் இருக்கிறது. கூடுதலாக போர் பற்றி தொடர்ந்து எழுகிறபோது சொற்கள் போர் மூள்கிற இடங்கள் பற்றி அவதானித்து எழுதுகிறேன். எந்நேரமும் அது அச்சுறுத்திக் கொண்டிருக்க அதனிலிருந்து பெறப்படுகிற அனுபவங்களை அப்படியே எழுதிகொண்டிருக்கிறேன்.
13.
சித்திராங்கன்:
பின்நவீனத்துவம் எங்கள் சூழலில் எங்கள் பிரச்சனைகளை எடுத்துக் கூற ஏற்றதொரு கோட்பாடாக உணர்கிறேன். அல்லது குறியீடுஇ மற்றும் சர்ரியலிச உத்திகள் பயன்படும் என்று நினைக்கிறேன். இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?
தீபச்செல்வன்:
பின்நவீனத்துவ எழுத்துக்களை வாசிக்கிற பொழுது அதன் தாக்கம் நமது எழுத்தில் நுழைந்து விட்டது. மனிதர்கள் கருத்துக்களால் தேடப்படுகிற அடக்குமுறைச் சூழலில் பின்நவீனத்துவ எழுத்து மெல்லிய உரையாடலுக்கு இடம் தருகிறது. அதைப்போலகுறீட்டுப் பாங்குகளும் எழுதும்போது வருகின்றன. சாரியலிச உத்திகளும் வருவதை சுட்டிக் காட்டப்படுவதை உணருகிறேன்.
சேலைக்கிளி கூறியதுபோல கோட்பாடுகளுக்காக நாம் கவிதைகளை எழுதுவதில்லை. எழுதுகிற கவிதைகளில் வாழ்வின் கோட்பாடுகளும் சூழ்நிலைகளும் வந்து விடுகின்றன. வாழ்வு பதுங்குவது போல பின் நவீனத்து எழுத்து புழக்கம் ஏற்பட்டிருக்கிறது. எல்லாமே குறியீடுகளாகிவிட்டன. வாழ்வை தீவிரமாக சித்திரிக்குமளவில் எழுத்து பெருத்து நிற்கிறது.
14.
சித்திராங்கன்:
தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஈழத்துச் சஞ்சிகைகளின் பங்களிப்புக் குறித்து ஏதாவது கூற முடியுமா ?
தீபச்செல்வன்:
ஏற்கனவே வெளிவந்த சில சஞ்சிகைகள் இன்னும் தம்மை எவ்விதத்திலும் வளர்க்காத விதத்தில் வருவது சங்கடமாயிருக்கிறது. சில சஞ்சிகைகள் தனியாள் அதிகாரத்திள் வருகிறது. அரசினது அச்சுறுத்தல் தணிக்கை என்பனவற்றால் சிலது இடைவெளிகளுடன் வருகின்றன. எனினும் மறுகா, கலைமுகம், வெளிச்சம், பெருவெளி, தாயகம் போன்றவை தொடர்ந்து வருகின்றன. மூன்றாவது மனிதன், சரிநிகர், தெரிதல் போன்றவை நின்று போனது எழுத்தை பாதிக்கிறது. மல்லிகை, ஞானம் என்பவை வளர்ச்சியற்று தமது தனியாள் கொள்கைகளுள் முடங்கியிருக்கின்றன. பெருவெளி போன்றவை முஸ்லீம் தமிழ் எழுத்தை உரையாடல்களை மேற்கொள்ளுகிறது. அனுராதபுரம் வஸீம்அக்கரம் தொடங்கியிருக்கும் படிகள் இதழ் நேர்தியுடன் வருகிறது.
நிறையவற்றில் எழுதப்பட வேண்டிய விடயங்கள் இல்லாதிருக்க அவைகளில் இடைவெளிகள் இருக்கின்றன. அச்சுறுத்தல்கள் அவை மீது தொடருகின்றன. சஞ்சிகைச் சூழலும் சற்று பாதிக்கப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது.
15.
சித்திராங்கன்:
இணையத்தள சஞ்சிகைகளின் வரவும், அதில் பங்களிப்புச் செய்யும் வாசகப் பரப்பும் தற்போது அதிகரித்துள்ளது. ஈழத்தை விடப் புலம்பெயர் இலக்கியப் பரப்பில் அவை நன்கு பேசப்படுகின்றன. இவ்வாறான சஞ்சிகைகளின் பங்களிப்புக் குறித்து தாங்கள் கருதுவது யாது ?
தீபச்செல்வன்:
இணையதள சஞ்சிகைள் வாசிப்புப்பரப்பை விரித்திருக்கிறது. உலகம் எங்கிலும் நமது வாசிப்பு மிக எளிதாக நடைபெறுகிறது. ஈழத்து எழுத்துக்களை பொறுத்தவரை புலம்பெயர் சூழலுக்கு உடனுக்குடன் கொண்டு செல்கிறது. இங்கு இணையத்தளங்கள் இணையதள சஞ்சிகைள் என்று எல்லாமே இதை இலகு படுத்துகிறது. தனியாள் தளங்களின் பிரவேசம் முதலியனவும் கருத்தாடல்களை விரிக்கிறது.
ஈழத்தை பொறுத்தவரை இணையதளத்தில் வாசிப்பது என்பது சற்று நெருக்கடியானது. ஆனால் உலக அளவில், புலம்பெயர் சூழலுடன் எழுத்தை கொண்டு செல்ல உதவுகிறது. அச்சுநிலைப்பட்ட சஞ்சிகைகளை வாசிக்கும் போது ஏற்படுகிற வசதி, வாசிப்பு இலகு இணைய சஞ்சிகைகளில் இல்லாதிருக்கின்றன.
16.
சித்திராங்கன்:
‘எப்போதாவது வரும் வாகனங்களை விலத்தி விட்டு நெல்மணிகளை கோழிகள் பொறுக்கிக் கொண்டிருக்கின்றன’ இவ்வாறான கட்புல அனுபவங்களை உங்கள் கவிதைகளில் பதிவு செய்யும்போதுஇ அல்லது பதிவு செய்தபின்னர் உங்கள் உணர்வுகள் எவ்வாறானவை?
தீபச்செல்வன்:
மனம் குழம்பாத சூழலில் ஒன்றிவிடத் துடிக்கிறது. நாங்கள் இயற்கையின் அசைவுகளை கண்டு எழுதுகிற சூழல் எங்கே இருக்கிறது. எங்கள் பேனாக்களும் கடதாசிகளும் இன்று கணனிகளும் இணையங்களும் குருதியை தவிர பயங்கரங்களை தவிர அச்ச மூட்டுகிற இரவைதவிர எதை எழுதுகின்றன. காலம் எம்மை இப்படித்தானே எழுதத் தூண்டுகின்றன.
கிளிநொச்சிக்கு பக்கத்திலிருக்கும் முறிப்புக்கிராமம் போரின்றி அச்சுறுத்தலின்றி இருந்த நாட்களில் இங்கு அடிக்கடி சைக்கிளில் சென்று வருவேன். மிகவும் ஆறுதலாயிருக்கும். அது போலான காட்சிகளுடன் அக்கராயன், ஸ்கந்தபுரம், கோணாவில் போன்ற கிராமங்களும் இருந்தன. அந்த வனப்புகனை நாம் இழந்து விட்டோம். அந்த கிராமங்களில் அந்த காட்சிகளை காணுகிறபோது அதனுடன் வாழுகிறபோது அவற்றை எழுதுகிறபோது பெரு நிம்மதி கிடைத்திருந்தது.
17.
சித்திராங்கன்:
கலை இலக்கியத்தில் மட்டுமல்லாது எல்லாப்பக்கங்களிலும் ‘பொறுப்புணர்வு’ என்பது இல்லாது போய்விட்டதே?
தீபச்செல்வன்:
பொறுப்புணர்வற்ற தன்மை எங்கும் காணப்படுகிறது. அவரவர் தமது கடமைகளை சரியாக செய்தால் யாருக்கும் அசௌகரியங்கள் ஏற்படாது. இலக்கியத்திலும் பொறுப்பற்ற எழுத்துக்கள் படைப்புக்கள் இருக்கின்றன. பொறுப்பற்ற மனிதர்களை தினமும் சந்திக்கிறோம். பிரச்சினைகளும் குழப்பங்களால் அதனால் தோன்றுகிறது. சிலர் தமது கடமைகளை சரிர செய்கிறதை காணுகிறோம் அதனுடாய் கடப்பதற்கு எவ்வளவு இலகுவாயிருக்கிறது.
18.
சித்திராங்கன்:
‘இலங்கையில் ஒரு சிங்களத்தாய் துடித்தழுகிறாள். ஈழத்தில் ஒரு தமிழ்த்தாய் துடித்தழுகிறாள்’ என ‘போர்க்களத்தில் சிதைந்த கிராமமும் கிடந்த உடல்களும்’ கவிதையில் எழுதியிருக்கிறீர்கள். இந்த அழுகைகள் ஏன் தொடர்கின்றன?
தீபச்செல்வன்:
போர் குழந்தைகளை பறியெடுக்கையில் தாய்மார் தானே அழ வேண்டியிருக்கிறது. அம்மாக்களைத்தான் யுத்தம் கடுமையாக வதைக்கிறது. மாதுமைகவிதையில் வருவதுபோல உலக துயரங்களை அம்மாக்கள் ஒற்றுமையாக சுமக்கின்றனர். ஈழத்தில் சிங்கள இனவாத அரசுகளின் போர் வெறியால் இரண்டு நாடுகளின் அம்மாக்களும் அழுகிறார்கள். இந்த அழுகைகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இலங்கை ஈழம் என்ற இரண்டுநாடுகளிடையான போர் என்று கருதுகிறேன். இந்தப்போர் கிராமங்களை சிதைப்பதையும் உடல்களால் எறியப்பட்டிருப்பதையும் தந்துகொண்டிருக்கிறது.
அரசு ஈழத்தில் புகுந்து மண்மீதான பேராசை கொண்டு நிற்கிறது. அது அதற்காக போர் தொடுக்கிறது. ஆனால் நாம் வாழ்வுக்காக போராடுகிறோம். போராளிகளின் தாக்குதல்களின் பின்னால் நிம்மதியை தேடுகிற வாழ்வுக்காக ஏங்குகிற உணர்வு இருக்கிறது. சனங்களின் ஏக்கம் இருக்கிறது. வாழ்வுக்கான பெரும் கனவு இருக்கிறது. எங்களை அடிமையாக்கி எங்கள் வாழ்வை அழித்து வாழ்விடத்தை அழித்து மண்ணை அள்ளுகிற கனவுடன் இலங்கை அரசு இருக்கிறதால் இந்த அழுகை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.
19.
சித்திராங்கன்:
இந்த யுத்தத்தின் தீவிரத்தை அறிந்தும் கூட எந்த ஒரு நாடும் பாராமுகமாக இருப்பதற்கு ஏதேனும் விசேட காரணங்கள் இருக்கக் கூடுமா?
தீபச்செல்வன்:
கை உயர்ந்த நாடுகள் அல்லது நாட்டு அரசுகள் எல்லாமே தங்களுடைய பொருளாதார நலன்களில் தான் கவனம் செலுத்துகின்றன. மனிதர்கள் அல்லது மனிதநேயம் குறித்து அவைகளுக்கு அக்கறை இல்லை. மக்களுக்கு தேவைப்படுகிற விடுதலை இல்லாமலிருக்க கொளுத்த அதிகார சிந்தனைதான் இருக்கிறது. அவைகள் தமது அரசியல் பொருளாதார நலன்களை விட்டு ஈழத்தமிழர் விடயத்தியில் உன்மையான அகக்றையுடன் செயல்பட தயாரில்லை. அவர்கள் இந்த விடயத்தில் எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதுபோல எங்களுக்கு எதிரான செயல்களில் இலங்கையரசுடன் பின்னிருப்பதுதான் மேலும் துயரத்தை தருகிறது.
இந்தியா ஈழத்தமிழர் விடயத்தில் தலையிட்டு வாழ்வுரிமையை பெற்றுத் தரும் என்று தமிழ் மக்கள் இன்னும் நம்பிக்கொண்ருக்கிறார்கள். ஆனால் எந்த மாற்றமுமற்று அதே கதியில் இந்தியா இலங்கையுடன் கை சேர்த்தபடியிருக்கிறது.
இந்தியா முதல் அமெரிக்க, யப்பான் என்று எல்லா நாடுகளுமே தமிழர்களுக்கு எதிராக இப்படி செயல்படுகின்றன. இந்த நாடுகளின் பயங்கர ஆயுதங்களுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. அதன் பொருளாதார கணக்குகள் எம்மிடம் தீர்க்கப்படுகின்றன. எனவே அந்த நாடுகளிடம் நாம் என்ன ஆதரவை எதிர்பார்க முடியும்? அவர்கள் எமக்காக என்ன நலனை செய்ய முன்வருவார்கள்? அவர்களது வாழ்வும் கணக்கும் ஈழத்தில் நடக்கிற போரிலேயே தங்கியிருக்கிறது. பலிகொள்ளப்படுகிற எங்களில்தான் அது அபிவிருத்தி செய்யப்படுகிறது. ஈழத்தை அடிமைகொள்ள அலைகிற இலங்கை அரசைப்போல உலகத்தையே இந்த நாடுகள் அடிமை கொள்ள அலைகின்றன

கலைஞரின் இளைஞன் கதை.
படமே இன்னும் ரிலீஸ் ஆகலை. அதுக்குள்ள எப்படி அந்தப் படத்தின் கதையை சவுக்கு எழுதுகிறது என்று பார்க்கிறீர்களா ?
அந்தப் படத்தில் கதை என்று ஒன்று இருக்கிறதா என்ன ? ஆனாலும், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தால் (நடக்காது பயப்படாதீங்க… ஒரு பேச்சுக்கு) 2011ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாகவும், சிறந்த கதை வசனமாகவும், இளைஞனும், கருணாநிதியும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்பதில் ஐயம் ஏது.
இளைஞன் படத்தின் தயாரிப்பாளர் யார் ? சான் டியாகோ மார்ட்டின். யார் இந்த சான்டியாகோ மார்ட்டின் ? இவரை சான் டியாகோ மார்ட்டின் என்று சொல்லுவதை விட, ‘லாட்டரி மார்ட்டின்‘
என்றே பிரபலமாக அழைக்கப் படுகிறார்.
மார்ட்டின் பிறந்த அன்றே யோகம் தான். ஆம் தோழர்களே… பர்மாவில் சான்டியாகோ மார்ட்டின் பிறந்த அன்றே, மாட்டினின் பெற்றோர்களுக்கு லாட்டரியில் 1000 டாலர் விழுந்தது. இதை சொல்லிச் சொல்லியே வளர்த்ததனால் மார்ட்டினுக்கு லாட்டரி மீது தீராத காதல் உருவாகி, லாட்டரி சாம்ராஜ்யத்தையே கட்ட வைத்தது.
இப்படித்தான் மார்ட்டினின் வாழ்க்கை தொடங்கியது. பள்ளிப் படிப்பை கூட முடிக்காத மார்ட்டின் இன்று 4000 கோடி ரூபாய் லாட்டரி தொழில் நிறுவனத்துக்கு அதிபதி.
பர்மாவில் யாங்கோன் நகரில் தனது தொழிலை துவக்கினார். அங்கே சிறிய அளவில் லாட்டரி டிக்கட்டுகளின் ஏஜென்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பர்மாவில் சட்டவிரோத லாட்டரி டிக்கெட்டுகள் பெரும் அரசியல் சூறாவளியைக் கிளப்ப, மார்ட்டின் தப்பித்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு வருகிறார். அங்கிருந்து, அஸ்ஸாம், நாகாலாந்து, போன்ற அனைத்து வடகிழக்கு மாகாணங்களுக்கும் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார்.
சில வருடங்கள் கழித்து தனது மொத்த சாம்ராஜ்யத்தையும், தமிழகத்துக்கு கொண்டு வருகிறார். மார்ட்டினின் சாம்ராஜ்யத்தை உருவாக்கி கட்டமைத்ததில் பின்னாளில் அவருக்கு எதிரியான உஸ்மான் பயாஸ் பெரும் பங்கு வகிக்ககிறார். கோவை மாவட்டத்தில் தனது சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார் மார்ட்டின்.
அதன் பிறகு, ஜெயலலிதா அரசாங்கம் லாட்டரிகளை தடை செய்ததும், மார்ட்டினுக்கு பின்னடைவு என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், இந்தத் தடையே, மார்ட்டினை வளம் கொழிக்க வைத்தது.
மார்ட்டினின் நிறுவனத்தில் உஸ்மான் பயாஸ் என்ற ஒரு நபர் மிக நெருக்கமான அரசியல் தொடர்புகளை உருவாக்குகிறார். தமிழகத்தில் மார்ட்டினின் சட்டவிரோத கள்ள லாட்டரிகள் தாறுமாறாக விற்கத் தொடங்குகின்றன. மார்ட்டினின் கோயம்பத்தூர், காந்திபுரம் 6வது தெரு, டெய்சி ப்ளாஸா, எண் 355-359 என்ற முகவரியில் மார்ட்னின் லாட்டரி ஏஜென்சி இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மார்ட்னின் செல்வாக்கு போகாத இடங்களே இல்லை எனலாம். மார்ட்டினின் செல்வாக்குக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு சொந்தமான தேசாபிமானி என்று ஒரு நாளிதழ் வருகிறது. நம் தமிழ்நாட்டில் தீக்கதிர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். 2005ம் ஆண்டில் மார்ட்டின் கொடுத்த இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுக் கொண்டது தேசாபிமானி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷயம் வெளியே வந்து சர்ச்சை ஆனதும், தேசாபிமானி, அந்தத் தொகையை மார்ட்டினிடம் திருப்பி அளித்தது.
தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டே வந்த மார்ட்டின், எஸ்எஸ் ம்யூசிக் என்ற சேனலை விலைக்கு வாங்குகிறார். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு மார்ட்டினின் சட்டவிரோத லாட்டரிகளின் விற்பனைத் தொகை 1.5 கோடி ரூபாய்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மார்ட்டின் சட்டவிரோத லாட்டரிகள் விற்றதற்காக வழக்கு ஒன்று பதிவு செய்யப் படுகிறது. அந்த வழக்கில் மார்ட்டின் முன்ஜாமீன் பெறுகிறார். இன்றும் மார்ட்டின் முன்ஜாமீனில்தான் உள்ளார்.
இப்படியே இயல்பாக போய்க் கொண்டிருந்த மார்ட்டினின் வாழ்க்கையில் ஒரு திருப்பம். மார்ட்டினின் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த உஸ்மான் பயாஸ், ஒரு பெரும் தொகையை ஆட்டையை போட்டு விட்டு, மார்ட்டினிடமிருந்து பிரிகிறார். பிரிந்தவுடன், மார்ட்டின் தனது பண பலத்தால் பயாஸூக்கு நெருக்கடி தருகிறார். ஏற்கனவே, பல்வேறு அரசியல் தொடர்புகளோடு இருந்த பயாஸ், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நெருக்கமாகிறார். பயாஸ் மீது மார்ட்டின் கடும் கோபத்தில் இருக்கிறார்.
பயாஸுக்கு எப்படி நெருக்கடி கொடுக்கலாம் என்று மார்ட்டின் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், தமிழகத்தில் மார்ட்டினின் கள்ள லாட்டரிகள் விற்கும் இடங்களில் காவல்துறை சோதனையிட பயாஸ் ஏற்பாடு செய்கிறார்.
தொடர்ந்து சோதனைகள் நடந்ததும், மார்ட்டினின் கள்ள லாட்டரித் தொழில் அடி வாங்குகிறது. பணம் நஷ்டமாகிறது.
அரசியல் தொடர்புகள் அனைத்துக்கும், பயாஸையே நம்பி இருந்த மார்ட்டின் அரசியல் தொடர்புகள் இல்லாததால் ஏற்படும் விளைவுகளை நம்பி தொடர்புகளை வளர்த்துக் கொள்ள முயல்கிறார். மார்ட்டின் முதலில் அணுகியது, கருணாநிதியின் மகள் செல்வி. செல்வியோடு தொடர்பு ஏற்பட்டாலும், மார்ட்டினால் காவல்துறையின் சோதனைகளை நிறுத்த முடியவில்லை.
அப்போதுதான், மார்ட்டினுக்கு கவிஞர் பா.விஜயின் நட்பு கிடைக்கிறது. பா.விஜய்யை அணுகிய மார்ட்டின் தனது கோரிக்கையை சொல்கிறார். அதற்கு பா.விஜய், நான் கருணாநிதியிடம் அழைத்துச் செல்கிறேன். தேவையான உதவிகளைச் செய்கிறேன், இதற்கு கைமாறாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்.
மார்ட்டின் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்றதும், நான் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்னை ஹீரோவாக வைத்து, கருணாநிதி கதை வசனத்தில் படம் தயாரியுங்கள், நான் உங்கள் பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.
மார்ட்டின் சம்மதித்ததும், அறிவிப்போடு நின்று விட்ட இளைஞன் படம் மீண்டும் உயிர் பெறுகிறது. இப்படி உருவானதுதான் இளைஞன்.
கருணாநிதி, தன்னுடைய சொத்துக்கணக்கை வெளியிட்டு அளித்த அறிக்கையில், ‘தற்போது தயாரிக்கப் பட்டு வரும் இளைஞன் படத்துக்கு கதை வசனம் எழுதுவதற்காக எனக்கு அளிக்கப் பட்ட ஊதியம் 45 லட்சம் ரூபாய்‘ என்றார். இந்த 45 லட்ச ரூபாயும் கதை வசனத்திற்கு அளித்த ஊதியம் அல்ல….. கள்ள லாட்டரி விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கொடுத்த லஞ்சம்.
இது தொடர்பாக மற்றொரு செய்தியைச் சொன்ன கருணாநிதி, இளைஞன் படம், ஒரு லோ பட்ஜெட் படம் என்றார். உண்மையில் இந்த படத்தின் பட்ஜெட் என்ன தெரியுமா… ? 50 முதல் 60 கோடி என்கிறார்கள். இந்தப் படத்தில் வரும் கப்பல் செட் போட மட்டும் 14 கோடி ரூபாய் செலவிடப் பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பின்னணியில் தான் கேரளாவில் நடந்த சம்பவத்தை பார்க்க வேண்டும். கேரள நாட்டில் இஷாக் என்பவர், பூட்டான் மாநில லாட்டரிகள் 10 வாங்குகிறார். அந்த லாட்டரிகளை பரிசீலித்ததில், அத்தனையும் போலி என்று அறிந்த இஷாக், மார்ட்டின் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால் கேரள மாநிலத்தின் ஒரு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கில் போதுமான முகாந்திரம் இருப்பதால், நீதித்துறை நடுவர், கோட்டை காவல் நிலையத்திற்கு மார்ட்டின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறார்.
அடுத்த வழக்கை கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனே பதிவு செய்ய உத்தரவிடுகிறார். இதையடுத்துதான், மார்ட்டின் முன் ஜாமீன் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். அந்த வழக்கில் தான் முதலில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்க்வி ஆஜராகிரார். கேரளா முழுவதும் எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து, சிங்வி வழக்கிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்கிறார். அடுத்ததாக மார்ட்டினுக்காக ஆஜரானவர் தான் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன். கருணாநிதி சொல்லாமல் பி.எஸ்.ராமன் கேரளா சென்றிருக்க மாட்டார். ஆனால் மார்ட்டினுக்காக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் ஆஜரானதும், எழுந்த கடும் சர்ச்சையை ஒட்டி, கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன், ராமன் எப்படி மார்ட்டினுக்காக ஆஜராகலாம் என்று கருணாநிதிக்கு கடிதமே எழுதினார்.
ஆனால், இந்தக் கடிதத்தையும் கண்டு கொள்ளாத கருணாநிதி, அரசுத் தலைமை வழக்கறிஞர் ராமன் செய்தது தவறே அல்ல என்று உடனடியாக அறிக்கை வெளியிட்டார். அது தவறு என்று கருணாநிதி எப்படி சொல்ல முடியும் ? அனுப்பியதே கருணாநிதி அல்லவா ?
இந்தப் படத்தின் விநியோகஸ்த உரிமையை வாங்கியிருக்கும் சிவப்பு பூதம் நிறுவனம் (அதாங்க ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ்) படத்திற்காக பத்து பைசாவை மார்ட்டினுக்கு கொடுக்கவில்லை என்பது கொசுறு செய்தி. இந்தப் படத்தை எப்படியாவது வெற்றிப் படம் ஆக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் கருணாநிதி உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இப்படிப் பட்ட ஒரு மோசமான குற்றவாளி ஒரு படத்தை தயாரிக்கிறார், அதில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கதை வசனம் எழுதுகிறார், அவனோடு சேர்ந்து விழாவில் கலந்து கொள்கிறார், அவனிடம் 45 லட்சம் ஊதியம் பெற்றேன் என்கிறார்.. …. இதையெல்லாம் கருணாநிதியால் செய்ய முடியும். ஆனால் இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுங்கள் என்றால், ‘ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும்‘ என்கிறார்.
மார்ட்டின் கருணாநிதி உறவு, இத்தோடு முடியவில்லை. கருணாநிதியின் கதை வசனத்தில் வெளி வரும் அடுத்த படமான "பொன்னர் சங்கருக்கும்" மார்ட்டின் தான் தயாரிப்பாளர்.
இந்த அக்கிரமம் உலகில் எங்காவது நடக்குமா ?
அந்தப் படத்தில் கதை என்று ஒன்று இருக்கிறதா என்ன ? ஆனாலும், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்தால் (நடக்காது பயப்படாதீங்க… ஒரு பேச்சுக்கு) 2011ம் ஆண்டின் சிறந்த திரைப்படமாகவும், சிறந்த கதை வசனமாகவும், இளைஞனும், கருணாநிதியும் தேர்ந்தெடுக்கப் படுவார்கள் என்பதில் ஐயம் ஏது.
(சாரி பாஸ் படம் தப்பாயிடுச்சு)
ஆனால் இந்தப் பதிவு இளைஞன் கதைப் பற்றியதல்ல. இளைஞனின் பின்னால் உள்ள கதையைப் பற்றியது. அது மிக மிக சுவராஸ்யமாக இருக்கிறது. படித்து விட்டு நீங்களே சொல்லுங்களேன். சுவராஸ்யமா இல்லையா என்று.இளைஞன் படத்தின் தயாரிப்பாளர் யார் ? சான் டியாகோ மார்ட்டின். யார் இந்த சான்டியாகோ மார்ட்டின் ? இவரை சான் டியாகோ மார்ட்டின் என்று சொல்லுவதை விட, ‘லாட்டரி மார்ட்டின்‘
என்றே பிரபலமாக அழைக்கப் படுகிறார்.
மார்ட்டின் பிறந்த அன்றே யோகம் தான். ஆம் தோழர்களே… பர்மாவில் சான்டியாகோ மார்ட்டின் பிறந்த அன்றே, மாட்டினின் பெற்றோர்களுக்கு லாட்டரியில் 1000 டாலர் விழுந்தது. இதை சொல்லிச் சொல்லியே வளர்த்ததனால் மார்ட்டினுக்கு லாட்டரி மீது தீராத காதல் உருவாகி, லாட்டரி சாம்ராஜ்யத்தையே கட்ட வைத்தது.
இப்படித்தான் மார்ட்டினின் வாழ்க்கை தொடங்கியது. பள்ளிப் படிப்பை கூட முடிக்காத மார்ட்டின் இன்று 4000 கோடி ரூபாய் லாட்டரி தொழில் நிறுவனத்துக்கு அதிபதி.
பர்மாவில் யாங்கோன் நகரில் தனது தொழிலை துவக்கினார். அங்கே சிறிய அளவில் லாட்டரி டிக்கட்டுகளின் ஏஜென்டாக தன் வாழ்க்கையை தொடங்கினார். பர்மாவில் சட்டவிரோத லாட்டரி டிக்கெட்டுகள் பெரும் அரசியல் சூறாவளியைக் கிளப்ப, மார்ட்டின் தப்பித்து அருணாச்சலப் பிரதேசத்துக்கு வருகிறார். அங்கிருந்து, அஸ்ஸாம், நாகாலாந்து, போன்ற அனைத்து வடகிழக்கு மாகாணங்களுக்கும் தனது சாம்ராஜ்யத்தை விரிவு படுத்தினார்.
சில வருடங்கள் கழித்து தனது மொத்த சாம்ராஜ்யத்தையும், தமிழகத்துக்கு கொண்டு வருகிறார். மார்ட்டினின் சாம்ராஜ்யத்தை உருவாக்கி கட்டமைத்ததில் பின்னாளில் அவருக்கு எதிரியான உஸ்மான் பயாஸ் பெரும் பங்கு வகிக்ககிறார். கோவை மாவட்டத்தில் தனது சாம்ராஜ்யத்தை நிறுவுகிறார் மார்ட்டின்.
அதன் பிறகு, ஜெயலலிதா அரசாங்கம் லாட்டரிகளை தடை செய்ததும், மார்ட்டினுக்கு பின்னடைவு என்று அனைவரும் எண்ணிக் கொண்டிருந்த வேளையில், இந்தத் தடையே, மார்ட்டினை வளம் கொழிக்க வைத்தது.
மார்ட்டினின் நிறுவனத்தில் உஸ்மான் பயாஸ் என்ற ஒரு நபர் மிக நெருக்கமான அரசியல் தொடர்புகளை உருவாக்குகிறார். தமிழகத்தில் மார்ட்டினின் சட்டவிரோத கள்ள லாட்டரிகள் தாறுமாறாக விற்கத் தொடங்குகின்றன. மார்ட்டினின் கோயம்பத்தூர், காந்திபுரம் 6வது தெரு, டெய்சி ப்ளாஸா, எண் 355-359 என்ற முகவரியில் மார்ட்னின் லாட்டரி ஏஜென்சி இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
மார்ட்னின் செல்வாக்கு போகாத இடங்களே இல்லை எனலாம். மார்ட்டினின் செல்வாக்குக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், கேரளாவில் சிபிஎம் கட்சிக்கு சொந்தமான தேசாபிமானி என்று ஒரு நாளிதழ் வருகிறது. நம் தமிழ்நாட்டில் தீக்கதிர் போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். 2005ம் ஆண்டில் மார்ட்டின் கொடுத்த இரண்டு கோடி ரூபாயை நன்கொடையாக பெற்றுக் கொண்டது தேசாபிமானி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். விஷயம் வெளியே வந்து சர்ச்சை ஆனதும், தேசாபிமானி, அந்தத் தொகையை மார்ட்டினிடம் திருப்பி அளித்தது.
தமிழ்நாட்டில் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டே வந்த மார்ட்டின், எஸ்எஸ் ம்யூசிக் என்ற சேனலை விலைக்கு வாங்குகிறார். தமிழ்நாட்டில் மட்டும் ஒரு நாளைக்கு மார்ட்டினின் சட்டவிரோத லாட்டரிகளின் விற்பனைத் தொகை 1.5 கோடி ரூபாய்.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் மார்ட்டின் சட்டவிரோத லாட்டரிகள் விற்றதற்காக வழக்கு ஒன்று பதிவு செய்யப் படுகிறது. அந்த வழக்கில் மார்ட்டின் முன்ஜாமீன் பெறுகிறார். இன்றும் மார்ட்டின் முன்ஜாமீனில்தான் உள்ளார்.
இப்படியே இயல்பாக போய்க் கொண்டிருந்த மார்ட்டினின் வாழ்க்கையில் ஒரு திருப்பம். மார்ட்டினின் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த உஸ்மான் பயாஸ், ஒரு பெரும் தொகையை ஆட்டையை போட்டு விட்டு, மார்ட்டினிடமிருந்து பிரிகிறார். பிரிந்தவுடன், மார்ட்டின் தனது பண பலத்தால் பயாஸூக்கு நெருக்கடி தருகிறார். ஏற்கனவே, பல்வேறு அரசியல் தொடர்புகளோடு இருந்த பயாஸ், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நெருக்கமாகிறார். பயாஸ் மீது மார்ட்டின் கடும் கோபத்தில் இருக்கிறார்.
பயாஸுக்கு எப்படி நெருக்கடி கொடுக்கலாம் என்று மார்ட்டின் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், தமிழகத்தில் மார்ட்டினின் கள்ள லாட்டரிகள் விற்கும் இடங்களில் காவல்துறை சோதனையிட பயாஸ் ஏற்பாடு செய்கிறார்.
தொடர்ந்து சோதனைகள் நடந்ததும், மார்ட்டினின் கள்ள லாட்டரித் தொழில் அடி வாங்குகிறது. பணம் நஷ்டமாகிறது.
அரசியல் தொடர்புகள் அனைத்துக்கும், பயாஸையே நம்பி இருந்த மார்ட்டின் அரசியல் தொடர்புகள் இல்லாததால் ஏற்படும் விளைவுகளை நம்பி தொடர்புகளை வளர்த்துக் கொள்ள முயல்கிறார். மார்ட்டின் முதலில் அணுகியது, கருணாநிதியின் மகள் செல்வி. செல்வியோடு தொடர்பு ஏற்பட்டாலும், மார்ட்டினால் காவல்துறையின் சோதனைகளை நிறுத்த முடியவில்லை.
ரஜினிகாந்துடன் மார்ட்டின்
அப்போதுதான், மார்ட்டினுக்கு கவிஞர் பா.விஜயின் நட்பு கிடைக்கிறது. பா.விஜய்யை அணுகிய மார்ட்டின் தனது கோரிக்கையை சொல்கிறார். அதற்கு பா.விஜய், நான் கருணாநிதியிடம் அழைத்துச் செல்கிறேன். தேவையான உதவிகளைச் செய்கிறேன், இதற்கு கைமாறாக நீங்கள் என்ன செய்வீர்கள் என்று கேட்கிறார்.
மார்ட்டின் உங்களுக்கு என்ன வேண்டும் என்று சொல்லுங்கள் என்றதும், நான் ஹீரோவாக நடிக்க வேண்டும், என்னை ஹீரோவாக வைத்து, கருணாநிதி கதை வசனத்தில் படம் தயாரியுங்கள், நான் உங்கள் பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன் என்கிறார்.
மார்ட்டின் சம்மதித்ததும், அறிவிப்போடு நின்று விட்ட இளைஞன் படம் மீண்டும் உயிர் பெறுகிறது. இப்படி உருவானதுதான் இளைஞன்.
கருணாநிதி, தன்னுடைய சொத்துக்கணக்கை வெளியிட்டு அளித்த அறிக்கையில், ‘தற்போது தயாரிக்கப் பட்டு வரும் இளைஞன் படத்துக்கு கதை வசனம் எழுதுவதற்காக எனக்கு அளிக்கப் பட்ட ஊதியம் 45 லட்சம் ரூபாய்‘ என்றார். இந்த 45 லட்ச ரூபாயும் கதை வசனத்திற்கு அளித்த ஊதியம் அல்ல….. கள்ள லாட்டரி விற்பனையை கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு கொடுத்த லஞ்சம்.
இந்தப் பின்னணியில் தான் கேரளாவில் நடந்த சம்பவத்தை பார்க்க வேண்டும். கேரள நாட்டில் இஷாக் என்பவர், பூட்டான் மாநில லாட்டரிகள் 10 வாங்குகிறார். அந்த லாட்டரிகளை பரிசீலித்ததில், அத்தனையும் போலி என்று அறிந்த இஷாக், மார்ட்டின் மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை இல்லாததால் கேரள மாநிலத்தின் ஒரு நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்த வழக்கில் போதுமான முகாந்திரம் இருப்பதால், நீதித்துறை நடுவர், கோட்டை காவல் நிலையத்திற்கு மார்ட்டின் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடுகிறார்.
அடுத்த வழக்கை கேரள முதலமைச்சர் அச்சுதானந்தனே பதிவு செய்ய உத்தரவிடுகிறார். இதையடுத்துதான், மார்ட்டின் முன் ஜாமீன் கோரி, கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுகிறார். அந்த வழக்கில் தான் முதலில், காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்க்வி ஆஜராகிரார். கேரளா முழுவதும் எழுந்த எதிர்ப்பலைகளை அடுத்து, சிங்வி வழக்கிலிருந்து வாபஸ் வாங்கிக் கொள்கிறார். அடுத்ததாக மார்ட்டினுக்காக ஆஜரானவர் தான் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன். கருணாநிதி சொல்லாமல் பி.எஸ்.ராமன் கேரளா சென்றிருக்க மாட்டார். ஆனால் மார்ட்டினுக்காக தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ராமன் ஆஜரானதும், எழுந்த கடும் சர்ச்சையை ஒட்டி, கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன், ராமன் எப்படி மார்ட்டினுக்காக ஆஜராகலாம் என்று கருணாநிதிக்கு கடிதமே எழுதினார்.
ஆனால், இந்தக் கடிதத்தையும் கண்டு கொள்ளாத கருணாநிதி, அரசுத் தலைமை வழக்கறிஞர் ராமன் செய்தது தவறே அல்ல என்று உடனடியாக அறிக்கை வெளியிட்டார். அது தவறு என்று கருணாநிதி எப்படி சொல்ல முடியும் ? அனுப்பியதே கருணாநிதி அல்லவா ?
இந்தப் படத்தின் விநியோகஸ்த உரிமையை வாங்கியிருக்கும் சிவப்பு பூதம் நிறுவனம் (அதாங்க ரெட் ஜெயன்ட் பிக்சர்ஸ்) படத்திற்காக பத்து பைசாவை மார்ட்டினுக்கு கொடுக்கவில்லை என்பது கொசுறு செய்தி. இந்தப் படத்தை எப்படியாவது வெற்றிப் படம் ஆக்க வேண்டும் என்று அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் கருணாநிதி உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
மேடம் அடுத்து நீங்க மார்ட்டின் தயாரிப்புல, "அலைக்கற்றை வாங்கிய அபூர்வ சிந்தாமணி" ன்னு ஒரு படம் எடுங்க மேடம்.
அருமையான ஆடு ஒன்னு சிக்கிருக்கு. வேஸ்ட் பண்ணக் கூடாது மேடம்
இது தவிர, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மார்ட்டின் மீது 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.இப்படிப் பட்ட ஒரு மோசமான குற்றவாளி ஒரு படத்தை தயாரிக்கிறார், அதில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கதை வசனம் எழுதுகிறார், அவனோடு சேர்ந்து விழாவில் கலந்து கொள்கிறார், அவனிடம் 45 லட்சம் ஊதியம் பெற்றேன் என்கிறார்.. …. இதையெல்லாம் கருணாநிதியால் செய்ய முடியும். ஆனால் இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுங்கள் என்றால், ‘ஒரு அடிமை இன்னொரு அடிமையிடம் என்ன கேட்க முடியும்‘ என்கிறார்.
மார்ட்டின் கருணாநிதி உறவு, இத்தோடு முடியவில்லை. கருணாநிதியின் கதை வசனத்தில் வெளி வரும் அடுத்த படமான "பொன்னர் சங்கருக்கும்" மார்ட்டின் தான் தயாரிப்பாளர்.
இந்த அக்கிரமம் உலகில் எங்காவது நடக்குமா ?
அடங்க மறுப்போம்.... அத்து மீறுவோம்........
ஆனால் கோபாலபுரம் போனால் கூழைக் கும்பிடு போடுவோம்திருமாவளவனை மான ரோசமான தமிழன் என்று நம்பி ஏமாந்த ஈழத்தமிழர்களில் தலைவர் பிரபாகரனும் ஒருவர். ஈழத்தமிழர்கள் ஈழத்திலிருப்பவர ்களை விட இந்தியத்தமிழர்க ளைத்தான் அதிகம் நம்பியதுண்டு, சுனா பானா வீரபாண்டி என்ற தறுதலையை, சூனியம் கசுப்பனை, தெருமாவை, உலகம் முளுவதும் அறிமுகப்படுத்தி ய அனீதியையும் நாங்கள் செய்ததுண்டு. இன்றும் தமிழ்நாட்டில் அந்த விஷக்கிரிமிகளை ஈழ ஆதரவாளர்களென சிலர் நம்புவதுபோல் தெரிகிறது. ஆனால் ஈழத்தமிழர்கள் தலை முழுகி நீண்ட நாட்களாகிவிட்டத ு, வேண்டாம் என்றபின்னும் தலைவர் பிரபாகரனின் படத்தோடு தானும் நின்று தெருமா படங்காட்டுவது தாங்க முடியாத ஆத்திரத்தை உண்டாக்குகின்றத ு. தமிழ்நாட்டில் நின்று அவன் ஆடுவதால் தமிழ்நாட்டுத்தம ிழர்கள்தான் செருப்பால் அடித்து விரட்டவேண்டும், எவர்கள் தத்தமது வேலையை கண்ணுங்கருத்தும ாக செய்கிறார்கள்(த மிழ் இன அழிப்பை).தமிழர்களாகிய நாம் தான் நம்முடைய வேலையை இல்லை கடமையை செய்யதிருக்கிறோ ம்....மேற்கண்ட கருத்துப் பதிவில் ஒரு கேள்வியை கேட்டிருக்கிறார ்.நாம் இந்தியனாம்,ஏன் பிரபாகரனின் படத்தை பயன்படுத்துகிறா ர் சவுக்கு என்று....ஒங்களிடம் ஒன்றைச் சொல்கிறேன்....நான் கோபாலக்ருஷ்ணன், சப்பாணி இல்லேன்னு சொன்னாலும் ஊர் உங்கள சப்பாநிதாணு கூப்பிடுது.நீங்க எவலோதான் இந்தியன் சொன்னாலும் உன்ன தமிழன் என்றுதான் இந்த நாடு சொல்லுது ....பிரபாகரனின் படத்தை தமிழர்கள் நாங்கள் பயன்படுத்தாமல் வேறு யார் பயன்படுத்துவார் கள்.....?
திருமாவளவன் அவர்கள் இலங்கை போவார் ராஜபக்சேவ பார்ப்பார் விருந்தும் உண்பார் பரிசு பொருளும் வாங்குவார் தமிழ்நாடு வந்து விகடனில் முள்வேலி தொடர் எழுதி அழுது புலம்புவார், காங்கிரசை அழித்தே தீருவேன் என்று சபதம் ஏற்பார் பிறகு பாராளமன்ற தேர்தலில் திமுக காங்கிரசு கூட்டணியில் சேர்ந்து எம் பி ஆவார். வரும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக வுடன் தான் கூட்டணி என்று தன்னிலை விளக்கம் கொடுப்பார். மேலும் முத்துக்குமார்க ்கு சாதி சாயம் பூசுவார், இப்போது தலைவர் பிரபாகரன் அவர்களுக்கும் சாதி சாயம் பூசி இருக்கிறார், இவர் என்னதான் சொல்ல வரார் என்றும் ஒன்றுமே புரியலங்க, திருமாவளவனே உங்கள் சாதி சாயம் வெளுத்து விட்டது. இன்னும் உங்களுக்கு வாய்ப்பு இருக்கிறது. தமிழ் மக்களிடம் துரோகிகள் வரிசையில் நீங்களும் வந்து விடாதீர்கள்.
போயஸ் அம்மாவோடைய கடையில தொங்குற சடை மயிருங்கோ!
போயஸ் அம்மாவோடைய கடையில தொங்குற சடை மயிருங்கோ!
எலை மலர்ந்தா, ஈழம் மலருமுன்னு எலை நக்கப் போன வைக்கோ நெடுமாற ராமதாசுச் சீமான்களின் நரைச்ச வங்கு மயிருங்கோ.!!!!
எலை மலர்ந்தா, ஈழம் மலருமுன்னு எலை நக்கப் போன வைக்கோ நெடுமாற ராமதாசுச் சீமான்களின் நரைச்ச வங்கு மயிருங்கோ.!!!!
விடுதலைப்புலிகளுக்கு பிந்தைய காலம் என்பது இல்லை அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.
புலிகள் அழிக்கப்பட்டுவிட்டார்கள், தமிழ் மக்களின் தியாகத்தையும், போராளிகளின் தியகத்தை சிதைத்து விடுதலைப்புலிகளின் காலத்திற்கு அப்பாற்பட்ட அடுத்த கட்டபோராட்டம் ஆரம்பிக்கப்படும் எனவும் தமிழ் மக்கள் மீது குழப்பமான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
ஆனால் விடுதலைப்புலிகளுக்கு பிந்தைய காலம் என்று ஒன்று வரப்போவதில்லை என்பதுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான அடுத்த கட்ட ஈழப்போரட்டமும் விடுதலைப்புலிகளின் வழிநடத்தலில் தான் தனது பயணத்தை தொடரும் என்பதையும் நாம் இங்கு குறிப்பிடுவதுடன், காலத்தின் தேவை கருதி 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் டெகல்கா இதழுக்கு விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுத் தலைவர் திரு பா. நடேசன் வழங்கிய நேர்ணானலை நாம் மீண்டும் எமது மக்களின் பார்வைக்கு கொண்டுவருகின்றோம்.
டெகல்கா இதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி:
கேள்வி: பிரபாகரனின் மறைவுக்கு பிறகு என்ன ஆகும் என்று பேச ஆரம்பித்துள்ளார்களே?
நடேசன்: நான் ஒரு விஷயத்தை தெளிவாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். விடுதலைப் புலிகளை அழித்துவிட்டு அவர்களுக்குப் ‘பிந்தைய காலம்’ என்று ஒன்று இருக்கப் போவதில்லை. அவர்கள் எப்போதும் இருப்பார்கள்.
இலங்கைத் தமிழர்களின் உணர்வில் சுதந்திரத்திற்கான தாகம்தான் குடிகொண்டுள்ளது. தமது அரசியல் விருப்பங்களை அடைவதற்கான ஒரு வழிமுறையாகவே விடுதலைப் புலிகள் இயக்கத்தை தமிழர்கள் கருதுகின்றனர்.
போர்க் களங்களில் பின்னடைவுகளும் முன்னேற்றங்களும் தவிர்க்க முடியாதவை. இறுதியாக எதை அடைகிறோம் என்பதுதான் முக்கியம். விடுதலைப் புலிகளுக்கு பிந்தைய காலம் ஒன்று வரும் என காத்திருந்து காலத்தை வீணாக்காமல் தமிழர்களின் சுயநிர்ணய உரிமை மற்றும் தாயகத்துக்கான போராட்டத்தை அங்கீகரித்து அவர்களின் அரசியல் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தும்படி இந்தியாவையும் உலக நாடுகளையும் கேட்டுக் கொள்கிறேன்
‘இந்தியத் தேசியம்' என்ற குருட்டுப் பார்வையும், இந்தியப் புரட்சி என்கின்ற வரட்டுத் தத்துவமும் முடிவுக்கு வந்துவிட்டது.
இந்தியாவை அல்லது இந்தியப் பார்ப்பனியக் கூட்டமைப்பு எப்பாடு பட்டாவது காப்பாற்ற வேண்டும் என்கின்ற முனைப்பு பிற்போக்கு, முற்போக்கு என இருவேறு முகாம்களிலிருந்து வந்தது. ஒவ்வொரு முகாம்களும் தங்களுக்கானக் கோட்பாட்டு முழக்கங்களை முன்னிறுத்திக் கொண்டனர். இந்தியா ஒரு தேசம் இல்லை என்பது இரு தரப்புமே அறிந்திருந்தனர். இருந்தபோதிலும் இந்தியாவை ஒரே தேசமாக்க வேண்டுமென்ற முயற்சியை தீவிரமாக்கினார்கள்.
பிற்போக்கு முகாம்களைச் சேர்ந்தவர்களின் நலனே முகாமையானது. பார்ப்பன பனியா மார்வாடி சேட்டுகளின் விரிந்த சந்தை நலனின் அடிப்படையைக் கொண்டிருந்தது. அடுத்து ஆரியப் பார்ப்பன சாதிய சனாதன இந்து மதவெறி அடிப்படை வாதிகளின் நோக்கம் இணைந்துக் கொண்டது. மேலும், நேரு, காந்தி, பட்டேல் போன்றவர்களின் ஆளுமையின் கீழிருந்த காங்கிரசும், இந்து மதவாதிகளின் ஆளுமை யான கீழிலிருந்தபாரதிய சனதாவும் இணைந்து பிற்போக்கு சாதிய சுரண்டல் வாதிகளின் நலன்களை பாதுகாக்க இந்தியத் தேசியத்தை தேடினார்கள். இந்தியும், இந்து மதமும், இராமனும், பிள்ளையாரும், இராமாயணமும், மகாபாரதமும் இந்தியாவை ஒட்ட வைக்க இவர்களுக்குப் பயன்பட்டன.
ஒரு வட்டார மொழியான இந்தியையும், சிறு பான்மை பார்ப்பனர்களின்கடவுள்களையும், பண் பாட்டுக் கலாச்சாரத்தையும், வாழ்வியல் கூறுகளை யும், இந்திய மொழியாக, இந்தியப் பண்பாடாக, இந்தியக் கலாச்சாரமாகட்டும் இப்பிற்போக்கர்கள். இந்தியாவிற்குள் அடக்கப்பட்டிருக்கும் தேசிய இனங்களின் தேசியக் கூறுகளை முடமாக்கி விட்டார்கள். மொழிப் பற்றையும், இனப் பற்றையும், தேசிய விடுதலைப் போராட்டங்களையும், தீவிர வாதம், பயங்கரவாதம் என சித்தரித்தனர். குறுகிய மனநிலையுடைய மலிவான பிரச்சாரத்திற்கு இவர்கள் இட்டுக் கொண்டப் பெயர் இந்திய ஒற்றுமை.
அடுத்து எதிர்முனையில் இருக்கும் முற்போக்கர் களின் நிலைப்பாடு. அதாவது மார்க்சிய லெனினிய மாவோவியத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடாளுமன்ற திரிபு வாதிகளான இந்திய கம்யூனிஸ்டு கட்சி (இ.க.க.), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), (இ.க.க.(மா), மற்றும் புரட்சி வழியை முன்னிறுத்துகின்ற மார்க்சிய லெனினிய மாவோவிய அமைப்புகளும் இந்தியாவை ஒரு தேசமாக உயர்த்திப் பிடிக்கின்றனர். இந்து மதத்தைத் தவிர பிற்போக்கர்கள் வலியுறுத்தும் அனைத்து இந்திய அடையாளத்தையும் ஏற்கின்றனர். "இந்தியன்' இந்தியக் கலாச்சாரம், பண்பாடு, பழம் பெருமை என இல்லாத ஒன்றை உண்மைக்குப் புறம்பாக கட்டியமைக்கத் துடிக்கிறார்கள்.
வரலாற்று ஆய்வாளர்களும், அரசியல் அறிஞர் களும் இந்தியா குறித்து தெரிவிக்கும் கருத்து யாதெனில், ஆங்கிலேயராட்சிக்கு முன்பு அரசியல், பொருளாதார, பண்பாட்டு ரீதியில் ஒரே நாடாக இருந்ததில்லை. நகராட்சி முறை அல்லது உலக சட்ட விதிகளின்படி பார்த்தாலும் இந்தியா அரசியல் அடிப் படையில் முழுமையாக இருக்கவில்லை. இதுதான் கடந்த நூற்றாண்டு கால வரலாறு. மேலும் இதன் நீண்ட வரலாறு என்று சொல்லப்படும் அரசுகளான மௌரியர்களும், குப்தர்களும், மொகலாயர்களும் ஒரு பரந்த அரசை அமைத்திருந்தாலும் கூட அதில் இப்போதுள்ள இந்தியா முழுமையும் உள்ளடக்கப்பட வில்லை. மாறும் எல்லைகளைக் கொண்டே இந்தப் பேரரசுகள், நீண்ட காலம் ஆட்சி செய்தாலும் அந்த வம்சஆட்சி முடிந்தவுடன் அவர்களின் ஆட்சியும், எல்லையும் மறைந்துவிட்டன. மேலும் அப்பேரரசுகள் பெரும்பகுதிகள் வெறும் கப்பத் தொகையை மட்டும் செலுத்தி விட்டு சுதந்திரமாக இருந்தன. ஒருபோதும் ஒரே நாடாக இணைக்கப்படவில்லை.
ஆங்கிலேயர்களின் ஆளுகைக்கு கீழ் இந்தியா வந்த பிறகுதான் பெரும் பகுதி பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி ஆட்சிப் பகுதிக்குள் இருந்தது. இந்த எல்லையும் மாறுபட்டதே! மேலும் 1947 வரை 562 சுதந்திரமான சுயாட்சியான பகுதிகளும் இருந்தன. இவைகளில் பெரும்பகுதி தங்களை தனி தன்னாட்சிப் பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று வட்டமேசை மாநாட்டில் கோரிக்கை வைத்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
""இந்தியாவின் அரசியல் ஒற்றுமை ஆங்கிலேயர் களின் கத்தி முனையில் புகுத்தப்பட்டது'' என்பதுதான் கார்ல் மார்க்சின் கூற்று. ஆனால் இந்திய மார்க்சியர்கள் என்ன சொல்கிறார்கள், இந்தியா 2000 ஆண்டு பழமையும், பெருமையும் வாய்ந்தது என்ற பொய்யை எந்தவிதத் தயக்கமுமின்றி தங்களின் அறிக்கையில் பதிவு செய்கின்றனர்.
இவர்கள் பாட்டாளி வர்க்கம், சாதி, மதம், மொழி இனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று முழங்கு கிறார்கள். சாதி, மதம் என்ற பிற்போக்கு அமைப்பு களோடு மொழியையும், இனத்தையும் இணைத்துக் கொண்டப் பெருமை இவர்களைத்தான் சாறும். பாட்டாளி வகுப்புக்குள் பதுங்கிக் கொண்ட பார்ப் பனியச் சிந்தனையின் வெளிப் பாடுதான் இவையெல்லாம். மார்க்சிய இயங்கியல்படி தேசிய சனநாயக அலகுக்குள் இருக்கும் அடிப்படை கூறுகள் தான் மொழியும் இனமும். பாட்டாளி வர்க்கத்தின் கடமை மொழி இனங்களைக் கடந்து தேசங்களை இணைப்பது மட்டுமல்ல, பாட்டாளி வர்க்கம் வர்க்கங்களற்ற சமூகத் தைப் படைப்பதும், அரசு நிறுவனத்தையும், குடும்ப அமைப்பையும், ஏன் தேசங்களை கூட இறுதியில் தகர்ந்து போகும். இதற்காகவே பாட்டாளி வர்க்கம் சேவை செய்யும். இவைஒரே நாளில், ஒரு புரட்சிகரப் போராட்டத்தில் ஆட்சி மாற்றத்தில் நடப்பவை அல்ல. இவைகள் ஒரு நீண்ட இயக்கப் போக்குடன் கூடிய படிநிலை வளர்ச்சிக் கட்டங்களைக் கொண்டது. அப்போது மொழிக்கும் இனத்திற்கும் முக்கியத்துவம் இருக்கப் போவதில்லை. மார்க்சியம் என்பது மந்திரமல்ல, ச்சூ.. மந்திரகாளி... என்றால் மாங்காய் காய்க்காது. அது பொருள் முதல்வாத இயக்கவியலைக் கொண்டது. எனவேதான் மார்க்சும், ஏங்கல்சும் போலந்து, அயர்லாந்து போன்ற தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தனர்.
""ஒரு தேசிய இனத்தை அடிமைப்படுத்துவது இன்னொரு தேசிய இனத்திற்கு எவ்வளவு கேடான செயல்.'' அயர்லாந்து இங்கிலாந்தின் தலையிலிருந்து விடுபடும் வரை ஆங்கிலத் தொழிலாளி வர்க்கம் சுதந்திரம் பெற்றிருக்க முடியாது. அயர்லாந்தை இங்கிலாந்து அடிமைப்படுத்தியதால் இங்கிலாந்தில் பிற்போக்கு வலுப் பெற்றது. ஊட்டம் பெற்று விட்டது'' என்று லெனின் மார்க்சின் கருத்துகளை மேற்கோளுடன் விளக்கப்படுத்துகிறார்.
இப்படி மார்க்சும், ஏங்கல்சும் லெனினும் தேசிய இனச் சிக்கல் குறித்து தெளிவான முடிவுக்கு வந்தடைந்த நிலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு என்ன நேர்ந்தது என்று தெரியவில்லை. இந்திய ஒற்றுமையின் தீவிர பாதுகாவலராகவே இருக்கிறார்கள். நமது நாட்டில் பிரிவினை வாத சக்திகளை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது என்பது பெரும்பாலான கட்சிகளின் உறுதியான நிலைப்பாடு.
மேலும் இந்திய ஒற்றுமையை நியாயப்படுத்த அடிப்படை இல்லாத வாதங்களை முன் வைக் கின்றனர்.
1. தேசிய இனப் போராட்டங்கள் ஏகாதிபத்தியத் திற்கு ஆதரவானவை.
2. இந்திய ஆளும் வகுப்புக்கு எதிராகப் போராட வேண்டுமானால் இந்திய அளவில் ஒருகட்சி வேண் டும்.
3. பாட்டாளி வர்க்கம் பரந்த அளவிலான உழைக்கும் மக்களை யும், பெரிய நாட்டை உருவாக்கும் நோக்கத்தையும் கொண்டிருப்பவை.
முதலில் முன் வைக்கப்பட்ட வாதம் இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்களுக்கு எந்த வகை யிலும் பொருந்தக் கூடியவையல்ல. மாறாக தேசிய இன விடுதலைப் போராட்டம், வல்லரசிய எதிர்ப்புப் போராட்டத்தை அடிப்படை யாகக் கொண்டது என்பதுதான் உண்மை.
இரண்டாவது இந்திய ஆளும் வகுப்பை எதிர்க்க இந்திய அளவிலான கட்சி அல்லது இதன் இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்பது வெறும் அகநிலை விருப்பத்தை தவிர வேறெந்தக் கோட்பாடு அடிப்படையும் இதற்கில்லை.
மூன்றாவதாக கூறப்பட்டவை பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையைக் கொண்டவைதான் என்றாலும் அதன் செயல் வடிவம் விரிவானது. இதுகுறித்து லெனின் கருத்து:
""உழைக்கும் மக்களின் நலனுக்காக பாட்டாளி வர்க்க கட்சி மிகப் பெரிய நாட்டை உருவாக்கவே முயல்கிறது. தேசங்களை மிக நெருக்கமாகக் கொணர வும் அவற்றை இணையச் செய்யவும் முயல்கிறது. ஆனால் தனது இந்த நோக்கத்தை வன்முறை மூலமின்றி, அனைத்து தேசங்களின் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதரத்துவ ஒற்றுமை உணர்வின் மூலம்தான் நடைபெறும்'' என்று கூறுகிறார். மேலும் இவை எப்போது சாத்தியம் என்பதையும் விளக்குகிறார்.
""பாட்டாளி வர்க்கக் கட்சியின் உடனடி வேலை பிரிந்து செல்வதற்கான முழுமையான சுதந்திரத்தை உணர்ந்து அறிவித்தலே ஆகும். இப்பணி முடிந்தப் பிறகுதான் தேசங்களுக்கும் மக்களுக்கும் பாட்டாளி வர்க்கக் கட்சியின் தலைமையின் கீழ் ஒன்றொ டொன்று நெருங்கவும் அதைத் தொடர்ந்து இணைய வும் அல்லது ஒன்றுபடவுமான நிலையை அடைய முடியும். முழுமையான பிரிந்து போகும் சுதந்திரம் பரந்துபட்ட ஸ்தல மற்றும் தேசிய சுயாட்சி, தேசிய சிறுபான்மையினரின் விரிவான உத்தரவாத மளிக்கப் பட்ட உரிமைகள் போன்றவைகளே புரட்சி கரப் பாட்டாளி வர்க்கத்தின் திட்டங்களாகும்'' என்கிறார்.
இரசியாவில் உள்ள தேசிய இனச் சிக்கலை அடிப்படையாகக் கொண்டு விளக்குகிறார். அங்குள்ள ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து ஒடுக்கப்படும் தேசிய இனச் சிக்கலிலிருந்து பாட்டாளி வகுப்பு நிலைப் பாட்டை விளக்குகிறார்.
இந்தியாவில் உள்ள தேசிய இனங்களின் நிலை வேறு வகைப்பட்டவை. இங்கே ஒடுக்கும் தேசிய இனம், ஒடுக்கப்படும் தேசிய இனம் என்று கிடையாது. (ஆனால் இந்திய விரிவாக்கத்தில் சுரண்டிக் கொழுக்கும் இந்தியப் பிற்போக்கு ஆளும் வகுப்பின் அதிகாரம் இருக்கிறது)
இந்தியா அல்லது இந்தியக் கூட்டமைப்பு என்பது பொய்யான மாயையான ஒரு அமைப்பு முறை இந்த அமைப்பு முறைக்கு அல்லது இதே அமைப்பு முறையைப் பாதுகாக்கின்ற ஆளும் வகுப்பிற்கு உண்மையான தேசிய அடையாளங்கள் அல்லது பொதுவான தேசிய அடையாளங்கள் ஏதுமில்லை. ஆக முறையான ஒரு தேச அலகுகள் அற்ற நிலையான எல்லைகளற்ற இந்த அமைப்பு முறைக்கு செயற்கையான தேச அடையாளத்தையும், இன, மொழி, பண்பாட்டு அடையாளத்தையும் பல் தேசிய இனங்கள் மீது திணித்து அதற்கு கட்டுப்பட வேண்டும் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் நெருக்கடி களை இந்தியப் பாராளுமன்ற, புரட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த மண் குதிரைக்கு இவ்வளவு பெரிய கடிவாளத்தை இவர்களைத் தவிர வேறு யாரும் போட முடியாது.
சமூக எதார்த்தத்தையும், வாழ்க்கையின் உண்மை யையும் உறுதியான புறவய பகுத்தாய்வு அடிப்படை யில் சமூக வளர்ச்சி விதிகளைப் பற்றிய அறிவியலைத் தான் மார்க்சியம், லெனினியம் நமக்கு வழங்கி யிருக்கிறது. இதன் அடிப்படையில்தான் தேசிய விடுதலைக்காகவும், சமூக விடுதலைக்காகவும் சனநாயகத்திற்காகவும், சோசலிசத்திற்காகவும், கம்யூனிசத்திற்காகவும் போராட்ட வழியை நாம் பெற முடிகிறது.
இந்தியாவைப் பற்றிய சமூக எதார்த்தத்தையும் அதன் உண்மைத் தன்மையையும் இவர்கள் பகுப்பாய வில்லை என்பதும் தேசிய இனச் சிக்கல் கடந்த இங்குள்ள சாதிய சிக்கல் குறித்து தெளிவான நிலைப்பாடும் இவர்களுக்கு இல்லை. சிக்கலான இவர்களின் நிலைப்பாடு விவாதிக்கப்பட வேண்டியது.
இந்திய ஆளும் பிற்போக்கு சக்திகளுக்கு இந்தியக் கட்டமைப்புத் தேவை குறித்தும், அது யாருடைய நலனைப் பாதுகாக்கும் என்பது குறித்தும் தெளிவான திட்டமிருக்கிறது. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளும் அப்படி எந்தத் திட்டத்தையும் தெளிவாக முன்வைத்ததாகத் தெரியவில்லை.
ஆனால் பாட்டாளி வகுப்பு நலன், உழைக்கும் மக்கள் ஒற்றுமை எனப் பொதுப்படக் கூறுகிறது. கடந்த 90 ஆண்டுகளாக கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றில் அப்படி அதை சாதித்தது என்ற கேள்வி எழுகிறது.
இந்தியாவில் உள்ள பாட்டாளி வகுப்பைத் திரட்டி எவ்வகையான ஒற்றுமையை ஏற்படுத்தியுள்ளது? தங்களின் வர்க்கப் போராட்டத்தை இந்தியா முழுமையும் கட்டமைக்கப்பட்டுள்ளதா? மேலும் பாட்டாளி வர்க்கம் புரட்சிக்கான குறைந்தபட்ச இலக்குகளை அடைந்துள்ளனரா? அடிப்படை முரண்பாடுகளின் இலக்கு நோக்கிய முன்னேற்றம் என்ன? மற்றும் ஐக்கிய முன்னணி, தேசிய இன விடுதலை குறித்தான நடைமுறை வேலைத் திட்டங்கள் என்ன?
பாராளுமன்ற திரிபுவாத இ.க.க., (ம) கட்சிகளும், புரட்சிகர மார்க்சிய லெனினிய மாவோவிய அமைப்பு களும், சமூக அமைப்பை வரையறுப்பதிலும், புரட்சிப் பாதை எத்தகையது என்று தீர்மானிப்பதிலும்தான் வேறுபாடு உள்ளது. மற்ற அனைத்து வரையறுப்பிலும் சற்று ஏறக்குறைய ஒரே முடிவுக்குத்தான் வந்தடைந் திருக்கின்றனர். இந்தியா ஒரு தேசம் இல்லை என்று அரசியலாக வரையறை செய்திருந்தாலும், நடை முறையில் இந்தியத் தேசத்தை நிறுவ அனைவரும் ஒரே நோக்குடன் பின் இருந்தார்கள். மேலும் தேசிய இனம் சாதி பற்றிய நிலைப்பாட்டிலும் ஒற்றை நிலைப்பாடு உடையவர்களே! எனவே நாம் கேட்கும் பெரும்பாலான கேள்வி அனைவருக்கும் பொது வானவையே.
தேச ஒற்றுமைக்காக பாடுபடுவோம், பாட்டாளி வகுப்பு இன, மொழிகளைக் கடந்து ஒன்றுபடக் கூடியது என்று இவர்கள் சொல்லும் கருத்துக்கு எந்தளவு நேர்மையாக இருக்கிறார்கள் என்பது கவனத்திற்குரியது. குறிப்பாக இ.க.க. (மா) இது கேரளா மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் தங்களின் அரசை நிறுவியுள்ளது. இதில் கேரளா மார்க்சிஸ்ட்களின் நிலைப்பாடு என்ன? தமிழகத்தில் உள்ள பாட்டாளி களின் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை தடுப்பது ஏன்? முல்லைப் பெரியாறு நீரை கடலில் கலப்போம் ஆனால் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழக விவசாயிகளுக்குத் தரமாட்டோம் என்று கேரள முதல்வர் இ.க.க. (மா) தலைமைக்குழு உறுப்பினரு மான அச்சுதானந்தன் சொல்லுகிறார். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் பாதுகாவலர்கள் இந்திய ஒற்றுமையை காக்கும் தீர்க்கத்தரிசிகள் ஏன் இவர்களின் வரையறைப் பாடி இந்தியப பாட்டாளியான தமிழக மக்களுக்கு தண்ணீர் தர மறுப்பது இந்திய ஒற்றுமைக்கு எதிரான குறுங்குழுப் போக்கும், இனவெறி திமிறுமில் லையா?
அதேபோல் காவிரி, பாலாறுகளில் தண்ணீர் விட மறுக் கும் கருநாடக, ஆந்திர அரசுகளைக் கண்டித்து அங்குள்ள கம்யூனிஸ்டு கள் என்ன செய்தார்கள்? தங்களின் அரசுகளைக் கண்டித்துப் போராடி னார்களா? போராடினார்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தராதே என்று. தமிழகத்தில் உள்ள இவர்கள் தண்ணீர் வேண்டுமெனப் போராடுகிறார்கள்.ஒரு கொள்கை, ஒரு கொடி, ஒரு தலைமையின் கீழ் இந்தியப் பாட்டாளி வகுப்புக்காகப் பாடுபடும் முறை இதுதானா? தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம் ஆகிய நான்கு தேசங்களில் உள்ள உழைக்கும் மக்களின் ஒற்றுமை தாங்கும் நடவடிக்கையா? இந்த தேசங்களின் உழைக்கும் மக்களை, பாட்டாளிகளை பகையாளிகளாக மாற்றிக் கொண்டிருக்கும் இவர்கள் எந்தப் பாட்டாளி களுக்காகப் புரட்சி செய்யப் போகிறார்கள்? லெனின் சொன்னார் அனைத்துத் தேசங்களின் உழைக்கும் மக்களின் சுதந்திரமான சகோதரத்துவ ஒற்றுமையை இப்படித்தான் பாதுகாப்பதா? இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் வாய்ப்புகள் வைத்திருக்கிறார்கள் அல்லது இவைகளெல்லாம் "பிராந்திய சிக்கல்கள்' அதாவது "பகுதி சிக்கல்கள்' என்று தட்டிக் கழிக் கின்றது மைய அமைப்பு. பாட்டாளி வகுப்புக் கிடையில் ஏற்படும் பகைமுரண்கள் இவர்களுக்குப் பகுதி சிக்கல்கள்.
இந்தியப் புரட்சிக்கான எல்லைகள் இந்தியா முழுமைக்குமானதாகவுமில்லை, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அசாம், நாகலாந்து, மணிப்பூர் போன்ற தேசங்கள் தங்களை ஒருபோதும் ""இந்தியர்கள்'' என்று கருதுவதில்லை. மேலும் ""இந்தியா'' என்பதும் ""இந்தியன்'' என்பதும் பகைமையானதுதான். எனவே இங்கே இந்திய மாய்மாலங்கள் எடுபடாது. தங்களுக் கான தேசிய விடுதலைப் போராட்டத்தை தீரத்துடன் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அதேபோல் தென் பகுதிகளில் தமிழகம், கருநாடகம், ஆந்திரம், மராட்டியம் போன்ற தேசங்களிலும் இந்திய ஏற்பு; சிந்தனைகளை விட இந்திய மறுப்பு; கருத்தாக் கங்களே வேரூன்றியுள்ளது. இதில் நீண்ட காலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகளால் வழி நடத்தப்பட்ட புரட்சிகரப் போராட்ட வரலாறு ஆந்திரத்திற்கு உண்டு என்றாலும், அப்போராட்டம் ஆந்திர தேசத்திற்குரிய சிறப்புக் கூறுகளின் அடிப்படையில் தான் கட்டமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வீரஞ் செறிந்த தெலுங்கானாப் போராட்டம், இதற்குச் சான்று. தேசியக் கூறுகளோடு கிளர்ந்தெழும் போராட்டங்களுக்கு ""இந்தியப் புரட்சி'' என்று பெயர் வைத்துக் கொள்வதால் இந்தியாவில் புரட்சி வந்து விடாது.
ஆக வடகிழக்குத் தேசங்களிலும், தென்னிந்தியத் தேசங்களிலும் இந்தியப் புரட்சிக்கான வாய்ப் பேதுமில்லை. இங்கெல்லாம் மா.லெ.மாவோவிய அமைப்புகளும் சரி திரிபுவாதி களும் சரி, இப்பகுதிகளில் தங்களின் செல்வாக்கை செலுத்த முடியவில்லை. இப் போது மட்டுமல்ல, எப்போதுமே இவர்கள் தங்களை நிலைநிறுத்த முடியவில்லை என்பதுதான் எதார்த்தம். மீதமுள்ளப் பகுதிகளிலும் ஒரு குறிப்பிட்ட பகுதிகளில்தான் அதாவது நான்கைந்து மாநிலங்களில்தான் தங்களின் செல்வாக்கை உறுதிப்படுத்தியுள்ளனர். இதற்கும் இந்திய முழக்கம் காரணமில்லை. அந்தந்தத் தேசம் சார்ந்த அடிப்படை முரண்பாடுகளை முன்னிறுத்தியே கட்சிகள் கட்டப்பட்டுள்ளன. இவர்களின் செயல் தளத்தைப் பொறுத்தவரை இந்திய எல்லை இப்போது சுருங்கி விட்டது. கடந்த 90 ஆண்டுகளில் இவர்களின் நிலை இதுதான். இப்போது இந்தியா என்பது எதுவரை? இதிலும் கொடுமை என்னவென்றால் ஒரு தேசத்திற்குள் மட்டும் அதுவும் ஐந்தாறு மாவட்டங் களில் மட்டுமே இந்தியாவுக்கான கட்சியைக் கட்டி கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் புரட்சியைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கின்றனர் என்பதுதான் வேடிக்கை.
தேசிய இனங்கள் குறித்து ஒரு சிறு வேறுபாடு களைத் தவிர அனைத்து சுட்டிகளுமே ஒரே முடிவுக்குத்தான் வந்திருக்கின்றன.
1. இந்திய தேசியம் இன்னும் உருவாகவில்லை.
2. பல்வேறு தேசிய இனங்கள் பலாத்காரமாக ஆங்கிலேயர்களால் ஒன்றிணைக்கப்பட்டது.
3. இந்தியா பல்தேசிய இனங்களின் சிறைக் கூடம்.
4. பிரிந்து செல்லும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை அங்கீகரிக்கிறோம் என்பதுதான் இவர்களின் அவணங்கள் வழி உறுதி செய்யப்பட்ட கோட்பாட்டு முடிவுகள்.
முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத காரணத் தால் இந்தியத் தேசியம் உருவாகவில்லை என்பது இவர்களின் முடிவு. ஆனாலும் இந்தியத் தேசியத்தை உருவாக்குவது இவர்களின் உள்ளார்ந்தத் திட்டம். இதை வெளிப்படையாக எல்லாக் கட்சிகளும் அறிவிக்கவில்லை. என்றாலும் இதன் நடைமுறை இதை நோக்கியதே! அப்படி என்றால் துப்பாக்கி முனையில் ஒன்றிணைக்கப்பட்ட தேசிய இனத்தை என்ன செய்யப் போகிறார்கள்? தேசிய இனங்களின் சிறைக் கூடமான இந்தியாவை ஏற்பதா? எதிர்ப்பதா? என்ன செய்யப் போகிறார்கள்? பிரிந்துப் போகும் உரிமையுடன் கூடிய சுய நிர்ணய உரிமையை ஏற்கிறோம் அல்லது வழங்குகிறோம் என்றால், யார் யாரைத் தீர்மானிப்பது? யார் யாருக்கு உரிமை வழங்குவது? யார் யாருக்குத் தீர்ப்பெழுதுவது? இந்தியா ஒரு தேசியத்திற்கான தகுதிப் பெறாத நிலையில், இது ஒரு பெரும் தேசிய இனமாக இல்லாத சூழலில் எது அதிகார மையம். இதுவரை ஆங்கில வல்லாதிக்க நலனுக்காகவும், இப்போது இந்திய பார்ப்பனியத் தரகு முதலாளிகளின் நலன்களுக்காகவும் உருவாக்கப்பட்ட இந்தியச் சிறை, இனி யாருடைய நலனுக்காக தேசிய இனங்களின் இந்தச் சிறையைப் பாதுகாக்க வேண்டும். ஒருவேளை பாட்டாளிகளின் நலனுக்காகத்தான் இதை பாதுகாக்க வேண்டுமென்றால், இது ஏற்புடையதா?
ஒரு பாட்டாளி வர்க்கம், ஆங்கிலேயர்களாலும் இந்தியப் பார்ப்பனியத் தரகு முதலாளிகளாலும், அடக்கப்பட்டிருக்கும் தேசங்களை விடுவிக்காமல், அதற்காகப் போராடாமல், தேசிய விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளாமல், இதிலிருந்து விலகி இவ்விருப்பை அப்படியே ஏற்றுக் கொண்டு, 1947 இல் நடந்த ஆட்சி மாற்றம் போல் பாட்டாளி வகுப்புக் கட்சி இந்தியப் புரட்சிக்கு தலைமை ஏற்கும் என்ற அறிவிப்பு. இத்தலைவர்களின் மேதாவித்தனத்தையும் சனநாயக மற்ற ஆளுமைப் போக்கையும் தானே காட்டுகிறது. மேலும் நடைபெறும் தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்நிலையோடு அணுகுகிறதே தவிர அதன் எதார்த்தப்பூர்வமான உண்மைத் தன்மையை ஏற்பதில்லை. எப்போதும் தேசிய விடுதலைப் போராட்டத்திலிருந்து தன்னை அந்நியப்படுத்திக் கொள்கிறது. ஆக இக்கட்சிகள் பாட்டாளி வகுப்புப் போராட்டத்தை விட இந்தியாவை முன்னிறுத்து வதுதான் இவர்களின் இலக்காக இருக்கிறது. இந்தியா எந்த வடிவத்தில் இருந்தாலும் அது தேசிய இனங்களின் சிறைதான்.
சமூக அமைப்பை தீர்மானிப்பதில் இ.க.க. (மா) வைத் தவிர அனைவரும் அரைக்காலனிய அரை நிலவுடைமை அமைப்பாக வரையறுத்துள்ளனர். இந்தியச் சமூக அமைப்பின் அதிகார மையங்களாக இருப்பவை பாதியளவு வல்லாதிக்கமும் பாதியளவு நிலவுடைமை அமைப்பும் இருப்பது.
1. அடிப்படை முரண்பாடுகளில்: ஏகாதிபத்தியம், சமூக ஏகாதிபத்தியம் து நமது நாடு அல்லது தேசம். அடுத்து நிலபிரபுத்துவம் து பரந்துபட்ட மக்ள்.
2. புரட்சியின் தன்மை குறித்த வரையறுப்பில் அனைத்து பாராளுமன்ற / புரட்சிகர இயக்கங் களுமே புதிய சனநாயகப் புரட்சியையே முன்னிறுத்துகின்றனர்.
சமூக அமைப்பைத் தீர்மானிப்பது, முரண்பாடு களை வரையறுப்பது, புரட்சியின் தன்மை அனைத் தும், சீனாவின் சமூக அமைப்பு குறித்து மாவோவின் வரையறைகளை அப்படியே ஏற்று இந்தியாவிற்குள் பொருத்தப்பட்டதுதான் இவ்வரையறைகள். இ.க.க. தவிர அனைத்துக் கட்சிகளும் சீனாவை வழிமொழிந்தன (இ.க.க. சீனாவின் வரையறையை ஏற்றுக் கொண்டு சீனாவை மறுத்ததுதான் இதன்கதை)
இந்தியாவிற்கென்று சமூக ஆய்வு, முரண்பாடுகள் புரட்சியின் தன்மை, அதன் வழித்தடம் என்று எதுவும் தனித்துமாக இல்லை. சீனாவும், இந்திய அமைப்பும் மேலோட்டமாக ஒன்று போல தோன்றினாலும், அடிப்படையில் வேறுபாடுகள் உள்ளது. சீனா ஒரு தேசம். இந்தியா ஒரு தேசமில்லை. சீனா ஒரு தேசத்திற்கான அனைத்துக் கூறுகளையும் கொண்ட மொழி, இனம், பண்பாடு, எல்லை, உளவியல் விருப்பம் இப்படி எதுவும் இந்தியாவுக்கு இல்லை. தேசத்திற்கான தகுதியற்ற ஒன்றை எப்படி தேசமாகக் கருத முடியும். இதன் எதார்த்த நிலை என்னவென்றால், இது எப்போதும் ஒரு தேசமாக மாற முடியாது. மாறாக இப்போது இருக்கும் இந்தியா நாளை இருக்காது. அது சிதறுண்டுப் போகும். இப்படி சொல்வது யாருடைய குறுகிய அகநிலை விருப்பமும் அல்ல. இயக்கவியல் வரலாற்றுப் பொருள் முதல் வாத அடிப்படையில் மார்க்சியக் கண் கொண்டுப் பார்க்கும், அறிவியல் வழிப்பட்ட புறவயப் பார்வையேயாகும். இந்தியப் பார்ப்பனியப் பிற்போக்கு கருத்து முதல் வாதிகளாகவும், உலக வல்லாதிக்கப் பெரும் தீனிக் கரங்களுமே இவ்வமைப்புக்குக் கட்டப்பட்டுள்ளது. இவ்விரு அமைப்புகளுக்குமான அவரவர் நலன் சார்ந்த சமரச ஒப்பந்தமே, இந்தியக் கட்டமைப்பு உயர்வாழ்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது. இந்திய தேசம் என்பதும், இந்தியப் புரட்சி என்பதும் அறிவியலுக்கு முரணானது, புரட்சிக்கு எதிரானது.
ஆனால் தேசம் குறித்த வரையறையில், இந்தியா ஒரு தேசமாக உருவாகவில்லை. இது பல்தேசிய இனங்களின் சிறைக் கூடம் என்று முடிவெடுத்த வர்கள். அடிப்படை முரண்பாடுகளில் ஏகாதிபத்தியத் திற்கும் தேசத்திற்குமான முரண்பாட்டையே முதன்மை முரண்பாடாக இருப்பின், இதன் பொருள் வல்லரசுக்கு எதிராகத் தேச விடுதலையை முன்னிலைப்படுத்துவதுதான். அப்படி யென்றால், எந்தத் தேசத்தை முன்னிலைப்படுத்துகின்றனர். அய்யமில்லை அது இந்தியத் தேசியம்தான். அப்படி யென்றால் இந்திய விடுதலைப் போராட்டத்தின் நட்பு சக்திகள் யார்? யார் தலைமையில் புதிய சனநாயகப் புரட்சியை நிறைவேற்றுவது?
"பாட்டாளி வர்க்கம், விவசாயி வர்க்கம், குட்டி முதலாளி வர்க்கம், பணக்கார விவசாயிகள், தேசிய முதலாளிகள் அடங்கிய ஐக்கிய முன்னிøனையைக் கொண்ட பாட்டாளி வகுப்புத் தன்மை, (அதாவது எல்லாப் புரட்சிகர வர்க்கங்கள், நாட்டுப் பற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பும் கொண்ட சனநாயகவாதிகள் உள்ளடக்கிய ஐக்கிய முன்னணி) இதுதான் இவர்களின் வரையறை.
இங்கே புதிய சனநாயகப் புரட்சி என்பது பாட்டாளி வர்க்கப் புரட்சி அல்ல. முதலாளி வர்க்கத்திற்கும் பாட்டாளி வர்க்கத்திற்கும் இடைப்பட்டவையே புதிய சனநாயகப் புரட்சி.
இது முற்றும் முழுதானப் பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை நிறுவுவது. பாட்டாளி வகுப்புத் தலைமையின் கீழ் உழவர்கள், சனநாயக ஆற்றல்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பும், நிலவுடைமை எதிர்ப்பும் கொண்ட சிறு முதலாளிகள், தேசிய முதலாளிகள், பணக்கார விவசாயிகளைக் கொண்ட கூட்டு சர்வாதிகார அரசு, தான் புதிய சனநாயக அரசு. இந்த புதிய சனநாயக அரசின் பொருளாதாரக் கட்டமைப் பைப் பற்றி மாவோ கூறுவதைப் பார்ப்போம்:
ஏகபோகத் தன்மை வாய்ந்த அன்னிய அல்லது சீனத் தொழில் நிறுவனங்களையும், தனி மனிதனால் உருவாக்க முடியாத வங்கிகள், இரயில்வேக்கள், விமானத் தொழில் நிறுவனங்களையும் அரசே ஏற்று நடத்தும். இவ்வாறு செய்வதால் தனி நபர் மூலதனம் மக்களைப் பணயம் வைத்து ஆட முடியாது. இதுவே மூலதனத்தைக் கட்டுப்படுத்தும் பிரதானக் கோட்பாடாகும்.''
இது, புதிய சனநாயகக் குடியரசின் பொருளாதார அமைப்பிற்கான சரியான கொள்கையாகும். பாட்டாளி வர்க்கத் தலைமையிலான புதிய ஜனநாயக குடியரசில், அரசு முதலீட்டு நிறுவனங்கள் சோசலிசம் குணாம்சம் கொண்டிருக்கும். மொத்த தேசியப் பொருளாதாரத்தில் அதுதான் தலையான பங்கு வகிக்கும். இதர முதலாளித்துவத் தனி நபர் உடைமைகளை புதிய ஜனநாயகக் குடியரசு பறிமுதல் செய்யாது. முதலாளித்துவ உற்பத்தியின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்தாது. கிராமப்புறங்களில் உள்ள நிலப்பிரபுத்துவ சுரண்டலை ஒழித்து, நிலத்தை விவசாயிகளின் தனி உடைமையாக மாற்றும். கிராமப்புறங்களில் உள்ள பணக்கார விவசாயிகளின் பொருளாதார அமைப்பு அனுமதிக்கப்படும். இதுதான் "நிலவுரிமைக்கான சமத்துவத்தை நோக்கிச் செல்லும் கொள்கை. "உழவனுக்கே நிலம் சொந்தம்' என்ற முழக்கமாகும் என்பதுதான் இதன் சாரமாகும். ஆக புதிய சனநாயகப் புரட்சி என்பது முழுமைப் பெற்ற பாட்டாளி வர்க்கப் புரட்சியல்ல. பாட்டாளி வர்க்கத் தலைமையின் கீழ் ஒருங்கிணைக்கப்படும் கூட்டுத் தலைமையாகும். பாட்டாளி வர்க்கத் தலைமையில் அமையவிருக்கின்ற சோசலிசப் புரட்சிக்கு ஆதரவான முதற் கட்ட அமைப்பு முறையாகும். இது சோசலிசத்திற்கு சேவை செய்யக் கூடிய அமைப்பு. இதுவே சோசலிச அமைப்பு அல்ல.
ஆனால் தேசிய இன விடுதலைப் போராட்டத்தைப் பற்றி கருத்துரைக்கும் இந்தியக் கட்சிகள் இது ஒரு முதலாளித்துவப் புரட்சி என்றும், இவர்கள் நடத்தும் புரட்சி பாட்டாளி வர்க்க சர்வாதிகாரப் புரட்சிப் போலவும், நாளையே பொதுவுடைமை சமூகத்தைப் படைத்து விடுவது போலவும், ஒரு மயக்கத்தை ஏற்படுத்துகின்றனர். தேசிய இன விடுதலைப் போராட்டமும், புதிய சனநாயகப் புரட்சியும் மிகப் பெரும் வேறுபாடு ஏதுமில்லை. ஏறத்தாழ ஒத்த அடிப்படையைக் கொண்டதுதான். இதுவும் வல்லரசிய எதிர்ப்பும், நிலவுடைமை எதிர்ப்பும் கொண்ட புரட்சிகர வர்க்கம்தான். அதில் யார் தலைமை தாங்குகிறார்கள் என்பதுதான் வேறுபாடு. ஆனால் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும், புதிய சனநாயகப் புரட்சிக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வேறுபாடுகளைப் போல பரப்புகிறார்கள். புதிய சனநாயகப் புரட்சியே தேசிய விடுதலையின் உள்ளடக்கத்தைக் கொண்டதுதான். மாவோ சீனாவில் நடத்திய புதிய சனநாயகப் புரட்சியை, சீனாவின் தேசியப் போராட்டமாகவே அடையாளப்படுத்தினார். அதுதான் "மக்கள் சீனம்' என்ற முழக்கம்.
தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பாட்டாளி வகுப்புத் தலைமை தாங்க முடியாதா? இல்லாத இந்தியாவில் தேச விடுதலைப் போராட்டம் நடத்த முடியுமென்றால், இந்தியச் சிறையில் அடைக்கப் பட்டிருக்கும் அனைத்து தேசங்கள், தேசிய இனங்களுக் கான விடுதலைப் போராட்டத்திற்கும் பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்க முடியாதா? உண்மையை சொல்வதென்றால் இங்கு மட்டும்தான் இது சாத்தியம்.
இந்தியப் புரட்சியின் நட்பு சக்திகள் மற்றும் தலைமை வர்க்கங்கள் மேலே ஐக்கிய முன்னணியில் வரையறுக்கப்பட்டுள்ள வர்க்கங்கள்தான். இதில் தேசிய முதலாளிகள், முகாமையானவர்கள். அதாவது இந்தியாவின் தேசிய முதலாளிகள் யார்? இந்தியா முழுவதும் சந்தைகளுடைய முதலாளிகளே தேசிய முதலாளிகள் அல்லது சுதேசி முதலாளிகள்என இந்திய முதலாளிகள் யார்? இவர்கள் "டாட்டா' "பிர்லா' "கோயங்கா' "முகேஷ் அம்பானி', "அனில் அம்பானி', "டி.வி.எஸ். அய்யங்கார்' இப்படித் தொடரும் இவர்கள்தான் தேசிய முதலாளிகள்.
இந்த முதலாளிகள் தேசிய முதலாளிகள் அல்ல. இவர்கள் தரகு முதலாளிகளாக இருந்து இன்று உலக முதலாளிகளாக மாறி விட்டவர்கள் என்றும் கூறலாம். அது உண்மையும் கூடத்தான். ஆனால் அடுத்து யாரைக் காட்டுவீர்கள். இவர்களின் வாரிசுகளையும், தம்பி களையும்தானே! இந்திய ஏகபோக சுரண்டல் வாதிகளான இவர்கள்தானே தேசிய முதலாளிகள். அதாவது பல்வேறு தேசிய இனங்களின் வளங்களை யும், வாழ்வாதாரங்களை சுரண்டிக் கொழுக்கும் இவர்கள்தானே இந்தியத்திற்கான தேசிய முதலாளி கள். பார்ப்பன பனியா மார்வாடி சேட்டுக்கள்தான் அந்த தேசிய முதலாளிகள் வேண்டுமென்றால் இதில் வல்லரசிய நிலவுடைமை எதிர்ப்புக் கொண்ட தேச பக்கதர்களை மட்டும்தான் இணைப்போம் என்று "வியாக்கியானம்' பேசலாம். இந்தியச் சந்தையைச் சுரண்ட வாய்ப்பிருக்கும்போது, எந்த முதலாளிக் குத்தான் தேச பக்தி வராது. இவர்களின் கூட்டோடு இந்தியாவில் ஒரு சனநாயகப் புரட்சி நடந்தால் இதற்கு பெயர் சனநாயகப் புரட்சியா? இவர்கள் தங்களின் சந்தை நலனை இழக்கக் கூடிய தேசிய இனப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவார்களா? இந்திய பாட்டாளி வர்க்கத்தின் பெயரில் மீண்டும் வலிமைப்படும். பாட்டாளிகளின் நலனுக்காக அல்ல. இந்தியப் பெரும் முதலாளிகள் நலனுக்காக. ஆக ஒரு சிறைக் கூடத்தை தேசமாக, புரட்சிகரக் குணாம்சம் கொண்ட புனிதமாக மாற்றுகின்ற வேலையைத்தான் 1920 இல் தொடங்கி இன்று வரை அதாவது 90 ஆண்டுகளாக பாராளுமன்ற மற்றும் புரட்சிகர கம்யூனிஸ்டுகள் அரும்பாடு பட்டுக் கொண்டிருக் கிறார்கள். இவர்கள் ஆசை இன்றுவரை நிறைவேற வில்லை.
இந்தியாவை இவர்கள் பாதுகாக்கத்தான் வழி இம்மியளவும் இந்தியா பாட்டாளி வர்க்கத்திற்கு பயன்படவில்லை. மாறாக ஏகாதிபத்தியத்திற்கு சிக்கலில்லாத சுரண்டல் தளமாகவும், மற்றும் இந்தியப் பார்ப்பனிய தரகு முதலாளிகட்கும், சாதி மதவாத பிற்போக்கு வாதிகளின் நலன்களுக்கே பயன்பட்டது. ஏகபோக சந்தையை விரிவுபடுத்தவும், தனியார் மயம், தாராள மயம் உலக மயத்தை அனுமதிக்கும் வாய்ப்பை வழங்கவும் இது உதவியது.
இதனால் தொழிலாளர் உரிமைச் சட்டங்கள் பறிக்கப்பட்டது. உழவு நெசவு, மீன்பிடி தொழில் ஏகபோக முதலாளிகளிடம் தாரை வார்க்கப்பட்டது. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் பெருகத் தொடங்கின. காட்டுவளங்களும், அதன் மீது படிந்து கிடக்கும் கனிம வளத்தையும் சூறையாட வாய்ப்பேற் பட்டுள்ளது. தடையற்ற சுரண்டலுக்கு இந்தியச் சந்தை திறக்கப்பட்டுவிட்டது. இறக்குமதிக்கான தடையில்லை. முதலாளிகளின் சூறையாடல்கள் அசூரத்தனமான நடக்கிறது. உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் போராட்டம் மரணத்தை நோக்கியே இருக்கிறது. இப்படி உலக முதலாளிகளின் தடையற்ற கொள்ளைக்கு யார் காரணம்? பாட்டாளி வர்க்கத்தின் பலி பீடமான வாசிங்டனில் எடுக்கும் முறைகள் அனைத்தும் இந்தியாவின் தலைநகரான புதுடெல்லி மூலம் தானே அடுத்த நொடிப் பொழுதில் அனைத்து தேசங்களும் சூறையாடப்படுகின்றன. இந்திய ஒற்றுமை இப்போது யாருக்குப் பயன்பட்டது, பயன்படுகிறது? இதனால் இந்தியப் பாட்டாளிகளுக்கு என்ன பயன்?
இந்தியா ஒரு தேசமில்லாததால், ஏகாதிபத்தியத் தின் எதிரியாக இந்தியத் தேசியத்தை வரையறுத்தது மிகப் பெரும் பிழை. பல தேசங்களை ஒடுக்கி இந்தியாவே ஒரு துணை ஏகாதிபத்தியமாக வளர்ந்து கொண்டிருக்கும்போது, ஒரு ஏகாதிபத்தியம் எப்படி இன்னொரு ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் இந்தியக் கட்டமைப்பு. ஏகாதிபத்திய வாதிகளால் ஏகாதிபத்திய நலனுக்காகவே கட்டமைக்கப்பட்டது. ஆகவேதான் இந்திய ஆளும் வர்க்கம் ஏகாதிபத்திய நலனுக்காகவே சேவை செய்கிறது.
அடுத்து இவர்கள் செய்த இரண்டாவது பிழை நிலவுடைமை வர்க்கத்திற்கும் து பரந்துபட்ட மக்களுக் குமான வரையறுப்பு. அதாவது ஏகாதிபத்தியத்திற்கு அடுத்து அதிகாரமுள்ள அமைப்பு நிலவுடைமை வர்க்கம். பரந்துப்பட்ட மக்களின் துணைக் கொண்டு நிலவுடைமை வீழ்த்துவதென்பதுதான் இதன் புரட்சிகர நடவடிக்கை. ஆனால் இந்திய ஆட்சிப் பகுதியில் நிலவுடைமைக்கென்று தனித்த அதிகாரம் ஏதுமில்லை. வெறும் நிலம் அதன் வழியான ஆளுமைதான் இங்கு நிலவுகிறது என்பது ஏற்புடையது இல்லை. துண்டு நிலம் கூட இல்லாதவன் இச் சமூகத்தில் சாதியின் பெயரால் ஆளுமை செய்கிறான். சமூக அமைப்பில் அதிக வலிமைப் பொருந்திய ஆளுமை அமைப்பாக சாதியே இருக்கிறது. ஒவ்வொரு ஊரிலும் முறைப்படுத்தப்பட்ட அமைப்பு முறை அதாவது அதிகாரமுள்ள, ஆட்சி செய்கின்ற அமைப்பாக சாதி இருக்கிறது.
சாதியை நீக்கிய அல்லது சாதி இல்லாத ஒரு அதிகாரம் எந்த நிலவுடைமையாளனுக்கும் கிடை யாது. உதாரணத்திற்கு ஒரு தாழ்த்தப்பட்டவர் 5000 ஏக்கர் நிலம் வைத்துள்ளார் என்று ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொள்வோம். இப்போது இவர் ஒரு நிலவுடைமையாளர். இப்போது இச்சமூகத்தில் இவருக்கு ஏதாவது அதிகாரமுண்டா? ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த நிலமில்லாத கூலித் தொழிலாளரை தனக்கு கீழ் பண்ணையாளராக வைத்துக் கொண்டு இவரை ஒடுக்க முடியுமா? மற்ற சாதிய நிலவுடை மையாளரோடு உறவு கொள்ள முடியுமா? தனக்காகப் படை வைத்துக் கொள்ள முடியுமா? அரசுகளோடு தனது அதிகாரத்தை நிறுவிக் கொள்ள முடியும்? அப்படி எதுவும் செய்து விட முடியாது. சாதி இல்லாத நிலவுடைமையாளனால் ஆதிக்கம் செய்ய முடியாது. நிலமே இல்லாத சாதியால் ஆதிக்கம் செய்ய முடியும். இங்கு ஆளுமை அமைப்பாக சாதி இருக்கிறது. எனவே இது சாதிய நிலவுடைமை அமைப்பு சமூக எதார்த்தம் கண்ணைக் குத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இவர்கள் கண்களுக்கு மட்டும் இது தெரியவில்லை. ஒருவேலை சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது என்ற பழமொழிப் போல இதை மறைக்க முற்பாட்டார்களோ என்னவோ? எது எப்படியோ நீண்ட காலத்திற்கு உண்மையைப் பதுக்க முடியாது.
சமூக அமைப்பு சாதிய நிலவுடைமை என்றால், அடிப்படை முரண்பாடுகளும் போர் தந்திரம், செயல் தந்திரம், புரட்சியின் தலைமை, ஐக்கிய முன்னணி, புரட்சியின் தன்மை அனைத்தும் மாற்றத்திற் குரியதுவே.
மேலும் மார்க்சு கோடிட்டுக் காட்டிய "ஆசிய உற்பத்தி முறை' இன்று கூர்மையாக விவாதிக்கப்பட்டு வருகிறது. "ஐரோப்பாவின் உற்பத்தி முறைக்கும்' ஆசியாவின் உற்பத்தி முறைக்கும் வேறுபாடுகள் உண்டு. குறிப்பாக இந்தியாவில் நிலவுடைமை என்ற வர்க்கமே இல்லை என்றும், சாதியை இவ்வர்க்கம் வளர விடாமல் விழுங்கி விட்டது என்றும் பல்வேறு மார்க்சிய அறிஞர்களும், அரசியலாளர்களும் முனைப் பெடுத்து ஆய்வுகள் செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
தேசம் குறித்த வரையறை மற்றும் சமூக அமைப்பு பற்றிய ஆய்வு, இந்தியக் கம்யூனஸ்ட் கட்சிகளால் முழுமையாக மேற்கொள்ளப்படவில்லை. இதன் தலைவர்கள் தங்களின் அகநிலை விருப்பத்தின் அடிப்படையினருக்கும் இரசியாவிலிருந்தும், சீனாவி லிருந்தும், புரட்சியை இறக்குமதி செய்ய ஆசைப்பட்டனர். மேலும் இவர்களின் வாழ்க்கைத் தன்மை, சமூகத் தன்மை, வர்க்க நலன்களும், இந்தியப் புரட்சியில் எதிர் நிலை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவேதான் புரட்சியின் இலக்குகளை இதுவரை அடையவே இல்லை.
இந்தியக் கட்சிகளில் சற்று மாறுதலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மாவோஸ்ட்) இருக்கிறது. இது நடைமுறையளவில் தேசிய இன விடுதலை இயக்கங்களுக்கும் தோழமை உறவுகளை பேணி வருகிறது. இது வரவேற்கக் கூடியதே! ஆனால் அரசியல் முடிவுகளில் எந்த மாற்றமும் இல்லை. தண்டாவாட மலைப் பகுதியில் பழங்குடி மக்களுக்கு ஆதரவாக காடுகளையும், கனிமவளங்களையும், பாதுகாக்கும் பொருட்டு பன்னாட்டு வல்லரசிய பெரும் முதலாளிகளுக்கு எதிராகவும், இந்திய ஆளும் வகுப்பிற்கு எதிராகவும் அர்ப்பணிப்பு மிக்க ஆயுதப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருப்பது. அவர் களின் புரட்சிகரப் போர்க் குணத்தைப் பறைசாற்று வதாக உள்ளது. அதேநேரம் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் புரட்சிகரப் பேராட்டம் கொண்டு பழங்குடியின மக்களுக்கும் இந்திய அரசுக்கும் இடையிலானப் போராட்டம்.
மாறாக இதை இந்தியப் புரட்சி என்றோ, இந்தியாவின் இதயத்தில் நடக்கும் போர் என்றோ வர்ணிப்பது அல்லது மிகைப்படுத்துவது தேவை யற்றது. இந்தியாவுக்கும் கோண்டு இனப் பழங்குடி மக்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இவர்களின் தாயகம், தேசம் எல்லாம் தண்ட காரணிய காடுகள்தான். இதுதான் எதார்த்தம். பரந்த இந்திய அரசை முதலாளிகளுக்கானதே தவிர பாட்டாளி களுக்கானதில்லை. எவ்வளவு சிறியத் தேசத்தில் வர்க்கப் போராட்டம் நடந்தாலும் அது உலகப் புரட்சியின் ஓரங்கம். உலகப் பாட்டாளி வர்க்கத்தின் தோழன்.
ஆக இந்தியப் புரட்சி, இந்தியத் தேசம் என்ற கருத்தும் போராட்டமும் முச்சந்தியில் முட்டி நிற்கிறது. 90 ஆண்டுகாலம் எந்தத் தடியைக் கொண்டு எழுப்பியும் அது எழுவில்லை. ஏனென்றால் அதற்கு உருவமில்லை. உறுப்புகள் இல்லை. குறிப்பாக கால்கள் இல்லை. ஒருவேலை அது அடிமாடாக இருக்குமோ என்று அருவமான முடிவுக்கு வந்திருக் கிறார்கள். அநேகமாக இன்னும் 10 ஆண்டுகளில் 100 ஆண்டை எட்டி விடும். அப்போது அந்த அருவமும் மறைந்து விடும்.
அப்போது இந்தியச் சிறை இற்று விழும். அடைபட்டு கிடந்த தேசிய இனங்கள் பலத்தோடு எழுந்து நிற்கும். புதிய சனநாயகமும், பொதுவடைமை புரட்சியும் அணிவகுக்கும்.
இந்தியச் சிறை இற்று விழும்,
தேசிய விடுதலைப் புரட்சி இலக்கை வெல்லும்.
வீறு கொண்டெழும்
இந்தியச் சிறைச்சாலைக்குள் ஒளிரும் நட்சத்திரமாய் ஐரோம் ஷர்மிளா
கடந்த சில வருடங் களாகவே இந்திய அரசியல் அமைப்பு முறையில் நாற்றம் அதிகமாக வீசத் தொடங்கி விட்டது. நாற்றத்தை மூடி மறைக்க அமெரிக்க மாமாவும், அவர்களிடம் பாடம் கற்ற கொழுப்பேறிய மன்மோகன்சிங், பா.சிதம்பரம் கும்பலின் மோடிமஸ்தான் வேலைகள் பலிக்காமல் போய்க் கொண்டிருக்கிறது.
இந்திய தேசியச் சிறைச் சாலைக்குள் இரத்த நாற்றம், தாய்மார்களின் அழுகுரல், பசி, பட்டினி, பாலியல் வன்முறைகள் ஜனநாயகம் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை சம காலம் மனிதர்களான நாம் புரிந்து கொள்ளா மல் போய் விடுவோமோ என்ற அச்சத்தை இந்திய பயங்கரவாத அரசு நடவடிக்கை தீவிரப் படுத்துகிறது.
மத்திய தர வர்க்கம் கடந்த சில நாட்களாக ஊழல் ஒழிப்பை தீவிரமாக பேசிக் கொண்டிருக்கிறது. லலித் மோடி, ஆ.ராசா, கல்மாடி, காமன்வெல்த், எடியூரப்பா போன்ற ஊழல் பெருச்சாளி களின் செயல்பாடு இவ் வாதத்தை மேலும் தீவிரப் படுத்துகிறது. இந்த விவாதத்தில் நாம் ஒன்றை மட்டுமே பதிவு செய்யவேண்டியிருக்கிறது. அடிப்படையில் எங்கள் வாழ்க்கை வளங்கள் முழுவதும் விற்கப்படும் நிலையில் ஊழல் என்பது எங்களை யாரிடம் விற்பது என்று மட்டுமே நடைபெறுகிறது.
ஆகையால் புறக்கணிக்கப் பட்ட மக்கள் ஊழலை எதிர்ப்பதை விட தன் வாழ்க்கை, வளம், உரிமை விற்பனையாவதை எதிர்த்து போராடுவதே முக்கியமானதாக அமைகிறது. அதனால்ஊழலை எதிர்த்து கொதித்து எழும் மத்தியத்தர வர்க்கத்தை நாம் உரிமைக்கான போராட்டத்தில் அணி சேர்க்க நிர்பந்திப்போமாக.
ஊழலை எதிர்த்து போர்க்குரல் எழுப்பும் அனைத்து எதிர்க்கட்சியும் சரி, ஆளும் கட்சிகளும் சரி, நம் உரிமைக்கான போராட்டத்தை எதிர்ப்பதில் ஓரணியில் நின்று விடுகின்றன. அது மத்திய இந்தியாவில் நடைபெறும் பழங்குடியினர் போராட்டமாக இருந்தாலும் சரி, காஷ்மீர் விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி, வடகிழக்கு இந்தியாவில் நடைபெறும் தேசிய இனப் போராட்டமாக இருந்தாலும் சரி இவர்கள் தங்கள் கட்சிகளின் பெயர்களை மறந்து பாரத் மாதாவின் சீடர்களாக மாறி ஒடுக்குவதில் ஓரணியில் திரண்டு விடுகின்றனர்.
இந்தியா உருவாக்கத்தை மிகத் தீவிரமாக கேள்விக் குள்ளாக்கும் வடகிழக்கு இந்தியாவில் அமைந்து இருக்கும் தேசங்களில் ஒன்றான மணிப்பூரின் ஐரோம் ஷர்மிளா சிறப்பு ஆயுதப் படை அதிகார சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் காலவரையற்ற உண்ணாவிரதம் கடந்த நவம்பர் 3ந் தேதி பத்தாண்டுகள் நிறைவுற்றது. இது உலக அரங்கில் இந்திய பயங்கரவாத அரசின் மனித உரிமை மீறல்களை வெளிச்சம் போட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறது.
ஆயுதப் போராட்டம் எந்த வகையிலும் பிரச்சனைக்கு தீர்வு ஆகாது என்று கூக்குரல் எழுப்பும் நவீன கால மகாத்மாக்களின் காதுகளில் ஐரோம் ஷர்மிளாவின் ஒற்றைக் கோரிக்கை விழாதது ஏனோ? மணிப்பூர் தேசத்தின் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது இந்த மகாத்மாக்களின் வன்முறையை காண முடிகிறது.
பிரிட்டிஷார் இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேறிய அதே நாளில் ஆகஸ்ட் 11, 1947ல் மணிப்பூர் மகாராஜா போத் சிந்த்ராவும், இந்தியாவின் கவர்னர் ஜெனரல் மவுண்ட் பேட்டனும் உடன்படிக் கையில் கையெழுத்திட்டனர். அதனடிப்படையில் ஆகஸ்ட் 15, 1947ல் மகாராஜா தலைமையில் மணிப்பூர் சுதந்திர பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட்டது. பிரிட்டிஷ் கொடிகள் இறக்கப்பட்டு அதற்குப் பதிலாக மணிப்பூரில் பாகன்பா முத்திரை பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. மணிப்பூருக்கான புதிய அரசியல் சட்டம் இயற்றப்பட்டது.
1948ல் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு அரசியல் அமைப்புச் சட்ட மகாராஜா முன்னிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பதவியேற்கப்பட்டது. இதற்கிடையில் இந்திய பயங்கரவாத இருகிய மனிதர்களின் மிரட்டலுக்குப் பயந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை ஆலோசிக்காமலே மகாராஜா 1949, அக்டோபர் 15ல் இந்தியாவுடன் இணைவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கலைக்கப்பட்டது. இந்திய அரசு அமைப்புச் சட்டம் அமலுக்குக் கொண்டு வரப்பட்டது.
1950 களிலிருந்து இந்தியாவின் சீர்கேடு மாநிலமாக மணிப்பூர் இருந்து வந்தது. பல்வேறு எதிர்ப்புக்குப் பின் 1956ல் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. 1968ல் மணிப்பூர் மாநில கோரிக்கை கமிட்டி உருவாக்கப் பட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியது. இறுதியில் 1972ல் தனி மாநிலமாக மணிப்பூர் அங்கீகரிக்கப்பட்டது.
இந்தியத் துணைக் கண்டத்தில் வலுக்கட்டாயமாக இணைத்த முதல் நாளிலிருந்தே மணிப்பூர் மக்கள் தொடர்ச்சியாக புறக்கணிக் கப்பட்டு வருகின்றனர். 14ம் நூற்றாண்டின் பார்ப்பன ஆதிக்கம் தலைத் தூக்கி 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆதிக்கம் வளர்ந்து மீண்டும் பார்ப்பனப் பேய்க் கூட்டம் கபளீகரம் செய்து கொண்டிருக் கிறது. சுய பொருளாதார சமூகமாக இருந்த தேசத்தை உணவுக்காக வெளி உலகத் திடம் கையேந்தும் நிலைக்கு ஆளாக்கி விட்டனர். யுரேனி யம் போன்ற கனிம வளங்கள் மட்டுமே கார்ப்பரேட் பார்ப் பனிய கண்களுக்கு தெரிகிறது.
அங்கு ரத்தமும், சதையுமாகத் திரியும் மனிதக் கூட்டம் நடைபிணமாகவே கருதப்படுகிறது. பெண்களை முன்னிருத்தும் சமுதாயம் என்பதை மணிப்பூர் உணர்த்துகிறது. பிரிட்டிஷாருக்கு எதிராக நடத்திய போராட்டத்தை ஒருங்கிணைத்ததும் பெண்களே ஆனால் இன்றோ பாரத் மாதாவின் சிப்பாய்கள் மணிப்பூர் பெண்களின் சதைகளை ஆராய்ச்சி செய்கிறது.
எந்த விதத்திலும் இந்திய பார்ப்பனிய அரசிடம் சம்பந்தமில்லாத மணிப்பூர் மக்கள் தங்கள் தேசிய உரிமைக்காக வெகுண்டு எழுவதற்கு முன்னரே 1958ல் ஆயுத சிறப்புப்படை காவல் சட்டம் சில இடங்களில் அமுலுக்கு கொண்டு வரப்பட்டது. ஆயுதப் போராட்டம் தீவிரம் அடைந்ததையொட்டி 1980 களில் பெரும்பான்மை இடங்களில் இச்சட்டம் பரவலாக் கப்பட்டது.
இச்சட்டத்தில் சாராம்சம் என்னவெனில் சிவில் உரிமையை முழுமையாக மக்களிடம் இருந்து பிரிப்பது சட்டத்தை முழுமையாக இருட்டறையில் பூட்டி வைப்பது, கடந்த 50 ஆண்டு காலமாக மணிப்பூர் மக்களின் சாதாரண வாழ்க்கையை கேள்வி குறியாக்கிக் கொண்டிருக்கிறது இச்சட்டம். இதன் விளைவாக வரைமுறையின்றி பெண்கள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்படுகின்றன. இளைஞர்களும் அப்பாவிப் பொதுமக்களும் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். இந்தியாவை எதிர்த்துக் கேள்வி யெழுப்பிக் கொண்டி ருக்கின்றனர். இச்சட்டத்தை எதிர்த்துதான் வீரமங்கை ஷர்மிளா கடந்த 10 ஆண்டுகளாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து கொண்டிருக்கிறார்.
1972ம் ஆண்டு மார்ச் 14ந் தேதி ஷர்மிளா பிறந்தார். விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர் இந்திய அரசின் பாடப் புத்தகங்களை அதிகமாகப் படிக்க முடியவில்லை. 12ம் வகுப்புடன் தன் படிப்பை முடித்துக் கொண்டார். இந்தியப் பாடப் புத்தகங்களில் அதிக புளுகு மூட்டைகள் இருப்பதனால் என்னவோ அவரால் அதிக ஆர்வம் காட்ட முடியவில்லையோ! என்னவோ? 1991ல் தன் பள்ளிப் படிப்பை முடித்த பின் பல்வேறு சமூக அமைப்புகளில் பணி யாற்றத் தொடங்கினார். மனித உரிமை அமைப்புகளுடன் மிக நெருக்கத்துடன் செயல்படத் தொடங்கினார். பல்வேறு மனித உரிமை அமைப்புகள் நடத்தும் பயிலரங்கம், கருத்தரங்கம் ஆகியவற்றில் கலந்து கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
அவ்வாறு 2000 செப்டம்பர் மாதம் மனித உரிமை கழகம் நடத்திய இரண்டு மாத பயிலரங்கத்தில கலந்து கொண்டார். அம்மாதத்தில் சிறப்பு அதிகார சட்டத்தையும், மணிப்பூரில் நடக்கும் மனித உரிமை மீறல்களை ஆய்வு செய்ய பம்பாய் உயர்நீதிமன்ற முன்னால் நீதிபதி ஹெச். சுரேஷ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அவ்விசார ணைக் குழுவுக்கு உதவி செய்யும் வண்ணமாக அவர்களின் மகிழ்வுந்துக்கு பின்னால் மிதிவண்டியில் பயணம் செய்து இரத்தச் சாட்சியங்களைக் கேட்டு அறிந்துக் கொண்டார்.
பயிலரங்கம முடிந்து இரண்டே நாட்கள் ஆன நிலையில் நவம்பர் 2, 2000 ஓங்காய் அருகில் கர் என்ற இடத்தில் கலாச்சார சம்பந்தமான ஒரு கருத்தரங்கில் கலந்து கொண்டு மாலையில் ஒரு மிதிவண்டியில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது இடிபோல் ஒரு செய்தி அவரைத் தாக்கியது. மகுலர் கிராமத்தில் 10 அப்பாவி பொதுமக்கள் பாதுகாப்பு படையினரால் வரைமுறையற்று சுட்டு கொல்லப்பட்டனர். இச் செய்தி அவரை முற்றிலும் பாதித்தது. அன்று இரவு முழுவதும் அவரால் தூங்க முடியவில்லை.
நவம்பர் 3ல் ஏராளமான அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. மணிப்பூர் தேசமே அதிர்ச்சியில் உறைந்துபோனது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டன. இவை அனைத்தையும் தாண்டி ஒரு புதுவிதமான போராட்டத்தை நடத்த வேண்டுமென்று முடிவெடுத்த சர்மிளா ஒற்றை கோரிக்கை சிறப்புக் காவல் அதிகார சட்டத்தை நீக்கக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவெடுத்தார். அவர் போராட்டத்தை துவக்கிய நாளில் இருந்து பல தடவை தற்கொலைக்கு முயற்சித்ததாகக் கைது செய்து 6 மாதம், 1 வருடம் என்று தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும் அவரது உறுதி மேலும் மெருகேறிக் கொண்டுதான் இருக் கின்றது. மேலும் 10 ஆண்டு களாக அவருக்கு செயற்கை (டியூப்) வழியாக மட்டுமே உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
சர்மிளாவை கைது செய்து விசாரணை என்ற பெயரில் நீதிமன்ற காவலில் காலவரையின்றி வைத்துவிட்டு திடீர் என்று ஒருநாள் விடுவிப்பது திடீரென்று கைது செய்வது வாடிக்கையாகி விட்டது. நீதிமன்றக் காவலில் இருந்து நிபந்தனை இன்றி தன்னை விடுதலை செய்யுமாறு சர்மிளா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் 2006 அக்.3ல் அவரை விடுதலை செய்தது. போராட்டத்தைத் தீவிரவப்படுத்த எண்ணிய சர்மிளா போலி பெயரில் விமானம் மூலம் டில்லி சென்று ஜெண்டர் மந்தர் தன் போராட்டத்தை தொடர்ந்தார். விஷயம் விபரீதம் அடைவதை அறிந்த டில்லி காவல் துறை இரவில் அவரை கைது செய்தது. தெற்கு டில்லியில் உள்ள அகில இந்திய விஞ்ஞான் மருத்துவ கழகத்திற்குக் கொண்டு சென்று பின்னர் சிகிச்சைக்காக வார்டு எண் 57 என்ற புதிய பிரிவில் தங்க வைக்கப்பட்டார். ஒரு வருட தில்லி போராட்டத்தின் பிறகு 2007 மார்ச் 4 மணிப்பூருக்கு மீண்டும் பயணம் செய்தார். அன்று இரவே மணிப்பூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அந்நாளிலிருந்து தனிமைச் சிறையில் காலத்தைக் கடத்திக் கொண்டு இருக்கிறார். பின்னர் மீண்டும் விடுதலை கைது என்று போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.
அமைதி தத்துவத்தை ஏற்றுக் கொண்ட இந்திய மகாத்மா காதுகளில் ஷர்மிளாவின் ஒற்றைக் கோரிக்கை விழ வில்லை. ஆனால் போராடும் அமைப்புகளிடையே இன மோதலை ஊக்குவித்துக் கொண்டு இருக்கும் குள்ள நரி வேலையை ஈடுபட்டுக் கொண்டவிருக் கின்றனர்.
அதாவது மணிப்பூர் தேசத்தை பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு பிரிவுகளும் பல உட் பிரிவுகளைக் கொண் டிருக்கிறது. மல்மத், நாகா, குக்கி போன்ற இனங்களிடம் திட்டமிட்டு இந்திய அரசு முரண்பாடு உருவாக்குகிறது. மக்கள் விடுதலையை முன்வைத்துப் போராடும் போது அவர்களை நிலை குலையச் செய்ய பாலியல் வன்முறையை இராணுவத்தார் ஒரு உக்தியாகக் கையாளப்படுகின்றது. இவைகளை மணிப்பூர் பெண்கள் தவிடு பொடியாக்குகின்றனர்.
உதாரணமாக 2004ம் வருடத்தில் மனேரம்மா என்ற பெண் இராணுவத் தால் பலமுறை பாலியல் வன்முறை செய்யப்பட்டு, படுகொலை செய்யப் படுகிறாள். இதை கண்டித்து மெயிரா பைபிஸ் குழுவைச் சேர்ந்த பெண்கள் முழு நிர்வாணமாகஇந்தியா இராணுவ முகாம் முன்சென்று இந்திய இராணுவமே எங்களையும் கற்பழி, எங்களையும் கொலை செய், எங்கள் சதைகளையும் எடுத்துக் கொள் என்று மனேரம்மா படுகொலையைக் கண்டித்து அவர்கள் முழங்கியது அனைவர் நெஞ்சைம் உறைய வைத்தது. தமிழகம் போன்ற அமைதி பூங்காக்கள்தான் மணிப்பூர் போன்ற தேச விடுதலையை முட்டுக் கட்டையாக தடுத்து நிறுத்துகிறது. நம்மை பொறுத்தவரையில் பாரத் மாதாவையோ அல்லது இந்திய கட்டமைப்பையோ சுத்த தமிழால் புகழ்ந்து பேசினால் போதும், அவர்கள் எழுத்துக்களையும் பேச்சுக்களையும் பின் தொடர்ந்து விடுகிறோம்.
மணிப்பூர் போராட்டம் இந்திய கட்டமைப்பு எவ்வளவு கொடுமையானது என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஆகையால் ஷர்மிளா போன்ற மனித உரிமை போராளிகள் உறுதியை நம் நெஞ்சில் ஏந்துவோம்! மணிப்பூர் வீர பெண்களின் மன உறுதியை நம் படைக் களத்தில் பெண்களிடம் பரப்பி விடுவோம். இந்திய ஆளும் கும்பல் எதைக்கொண்டு நம்மை ஒடுக்குகிறதோ அவைகளை கையில் தறித்து மனித உரிமையை மீட்கப் போராடுவோம்
திங்கள், 10 ஜனவரி, 2011
மக்களின் சார்பில் தமிழ் கவிதைகள் இடுகைகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)