வெள்ளி, 20 மே, 2011

கனிமொழி கவிதை

மூடிய விழிகளைத் தாண்டி துளைக்கின்றது குத்திட்ட பார்வை
(ஓ.பி.சைனியின் பார்வை)
அசைவற்ற முகதில் உறைந்துகிடக்கிறது
(ராசாவின் முகத்தில் சவக்களை)
புன்னகை.
சொல்லொணாப்
பதற்றங்கள் நிறைக்கின்றன என்னை.
(பெயில் கிடைக்குமா, கிடைக்காதா என்று)
அறையின் கதவுகளுக்குப் பின்னால்
பத்திரமாய்ப் பதுக்கிவைத்திருக்கிறேன்
(ராசாவையும், சரத்குமாரையும், சாதிக் பல்வாவையும்)
குருதியில் தோய்த்த
கத்திகளை கருத்த உதிரத்தின் நெடியோடு.

குத்தீட்டிகளும் பஞ்சடைத்த
மிருகங்களும் நிறைந்த அறைக்கு
(சிறை எண் 6. திஹார்)
எப்படித் திரும்புவேன்
இனி எப்படிக் கடப்பது உன்
விழி தவிர்த்த பெருமிதத்தோடு நடந்த
சாலைகளை.
(திஹார் சிறையின் சாலைகள்)
ஓய்ந்து விரிந்த இரவுகளில் கனவாய்
வேண்டுதலாய் யாசித்து சிறு
பிசிறில்லாமல் ஒத்திகைபார்க்கப்பட்ட
இத்தருணம் சிதறி உருள்கிறதுதானே
வகுக்கும் பாதைகளில்.
(நிரந்தரமான சிறைப் பாதை)
நினைவுகள் முகிழதாழ்கள்
நெகிழ்ந்து பேழைகள்
திறக்கின்றன பேய்களும்
தேவதைகளும் ஒருங்கே
அலையும் காடுகளில் முகையும்பூக்களின்
மணம் திக்குகளை நிறைக்கிறது.
அதன் திரை விலக்கித் துவளும்
கரங்கள்.
(கரங்களில் விலங்குகள்)

விற்கப்படும் அடிமைக் கல்வி

வர்க்கச் சமுதாயத்தில் கல்வியில் பள்ளிகளில் ஏற்படும் முன்னேற்றம், மாற்றம் என்பது மாணவர்களைத் தத்தம் வர்க்கத்தில் சிறப்பாக பொருத்துவதற்கே இன்னும் சாதியும் வர்க்கமும் பின்னிக் கிடக்கும் சமுதாயத்தில் நவீன அடிப் படையில் சாதியையும் வர்த்தகத்தை யும் பாதுகாக்கச் செய்கின்றது. பொதுவாக மனித குலத்திற்குக் கல்வி ஏன் தேவைப்படுகின்றது? விலங்கு களில் இருந்து மாறுபட்டு இருக்கும் மனித குலம் தன்னை மேலும் ஆளுமை கொண்ட மனிதனாக மாற்றிக் கொள்வதற்குக் கல்வி தேவைப்படுகிறது.
ஆனால் வர்க்கச் சமுதாயத்தில் மிகப் பெரிய கூட்டத்திற்குக் கல்வி எட்டாக் கனியாகவே உள்ளது, அல்லது புறநிலை எதார்த்தத்தைப் புரிய வைப்பதற்குப் பதில் இயந்திர ரீதியான கல்வி அளிக்கப்படுகின் றது. எந்த ஒரு ஒடுக்கப்பட்டவனும் தன் ஆண்டையின் இருத்தலைப் புரிந்து கொள்ளாத வகையில் கல்வி அளிக்கப்படுகின்றது.
நடைமுறை ரீதியான கல்வி என்பது சமுதாயத்தில் வேர் ஊன்றாமல் தடுக்கப்படுகின்றது. பொருளாதார உற்பத்தியில் ஒவ்வொரு தனி மனிதனும் அதன் ஏதோ ஒரு பாகத்தில் சிக்க வைக்கப்பட்டு அதைத் தாண்டிச் சிந்திக்க முடியாதவாறு கல்வி முறை உருவாக்கப்படுகிறது. மேற்கூறிய புரிதலுடன் இந்தியக் கல்வி முறையை உற்று நோக்கினால் தற்போது ஏற்பட்டு இருக்கும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியும்.
குறிப்பாக நடுவண் அரசு கொண்டு வந்து இருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், தமிழக அரசு நடைமுறைப்படுத்தி இருக்கும் சமச்சீர்க் கல்வி ஆகியவற்றின் பின்னால் இருக்கும் பொருளாதாரச் சூழலைப் புரிந்து கொள்ள முடியும்.
தமிழகச் சமூக சூழலில் கல்வி யென்பது பல்லாயிரம் ஆண்டு வரலாற்றைக் கொண்டுள்ளது. ஆனாலும் கூடக் கேடு கெட்ட சாதி குறிப்பிட்ட அளவு பங்கு வகித்ததால் கல்வி பெரும்பாலும் மேட்டுக்குடி வசமே இருந்திருக்கும் என்பதே தினம் 19ஆம் நூற்றாண்டு பிரிட்டிஷ் வருகைக்கு முன் தமிழகக் கல்வி முறையை வரலாற்றுத் தகவல், இலக்கணம் இலக்கியம் ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
இதில் மூன்று மரபான கல்வி முறையைக் காண முடிகிறது. 1. குருகுலக் கல்வி முறை. 2. திண்ணைப் பள்ளிக் கல்வி முறை, 3. தனி நிலைக் கல்வி முறை இம்மூன்று கல்விமுறையும் குறிப்பிட்ட சமூகத்தினரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பியர் வருகைக்குப் பின் தமிழகச் சமூக பொருளாதாரத் தளத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. இவை கல்வி முறையிலும் எதிரொலித்தது.
 சுரண்டல் நோக்கத்துடன் ஆக்கிரமித்த வல்லரசு ஏன் கல்வி அளிக்க வேண்டும்? முற்றிலும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட ஆதரவற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் மேற்கத்திய கல்வியைக் கற்கச் சிறிதளவு வாய்ப்பு போன்ற நிகழ்வுகளால் இந்தியக் கல்வி முறையைப் பரிசீலனை செய்யப் பெரும்பாலோர் திணறுகின்றனர். துவக்கத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவில் எந்த முறையான கல்வி முறையையும் வளர்த்தெடுக்க ஆர்வம் காட்ட வில்லை.
ஏனெனில் அதன் முதன்மை நோக்கம் வர்த்தகம், இலாபம் என்றிருந்தது. அதன் பிறகு பிரிட்டிசு ஆட்சி பரவலான பின் அது நிதி நெருக்கடியைச் சந்தித்தது. ஆங்கில அதிகாரிகளுக்குக் கொடுக்கப்படும் அதிக சம்பளம் முக்கியச் செலவாக அமைந்தது. இதைச் சரிக்கட்ட ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்தவர் களை இந்தியத் துணைக் கண்டத்தில் உருவாக்க வேண்டியிருந்தது. துணைநிலை வேலைகளைப் புரிவதற்கு பிரிட்டிசு ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சியை மூன்றாகப் பிரிக்கலாம்.
1. வணிக நோக்கம், 2. இந்தியக் கண்டத்தில் இருந்த மூலப் பொருள்களின் ஏற்றுமதி மற்றும் தொழில் துறை வளர்ச்சி, 3. நிதி மூலதன வளர்ச்சி. ஒவ்வொரு பொருளாதாரக் கட்டத்திலும் கல்வித் துறையில் மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக 1835 இல் மெக்காலிய திட்ட வரைவு மூலம் அமுல்படுத்தப் பட்ட அடிமைக் கல்வி முறை இன்றும் தொடர்கிறது. மெக்காலிய வார்த்தையில் இக்கல்வி முறையை விளக்குவது என்றால் இக்கல்வி முறை மூலம் சிலரை நமக்கான (பிரிட்டிஷ்) பலமாக உருவாக்குவதும் நாம் யாரை ஆட்சி செய்ய விரும்புகிறோமோ அவர்கள் இரத்தத்தாலும், வண்ணத்தாலும் இந்தியர்களாகவும், சுவையிலும் எண்ணத்திலும் புரிந்து கொள்வதிலும் பிரிட்டிசாராக இருக்க வேண்டும். 1835இல் இக்கல்விக் கொள்கை பெரும்பாலும் நகர்ப்புற மேட்டுக்குடி களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. பெரும் பான்மையோருக்கான கல்வி முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது.
இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் பள்ளிகளில் இணைந்தவர்களில் 31% சதவீதம் பேரினர்தான் தொடக்கக் கல்வியை நிறைவு செய்திருந்தனர். 1947இல் பிரிட்டிசார் நேரடியாட்சியை விலக்கிக் கொண்ட காலத்தில் இந்தியத் துணைக்கண்டத்தில் கிட்டத்தட்ட 15% சதவீதம் பேரினர்தான் கல்வியறிவு பெற்றிருந்தனர்.
1951 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி 83.4% சதவீதம் பேர் பள்ளி வாசலை மிதித்ததில்லை. 92.9% சதவீதம் பெண்கள் பள்ளி வாழ்க்கையை அறிந்திராமல் இருந்தனர். அக்காலக் கட்டத்தில் பெரும்பாலும் அறிவியல் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படாமல் இருந்தது. சிறிய அளவில் தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்கள் இருந்தாலும் இவையனைத்தும் வேலைவாய்ப்பைச் சார்ந்ததாக இருந்தது. இரயில்வே, பாசனம், அஞ்சல், தந்தி போன்ற நிறுவனங்களுக்கு உற்பத்தியாளர்களைத் தயார் செய்வதற்கு அக்கல்வி நிறுவனம் பயன்பட்டது.
ஆனால் கவனிக்கப்பட வேண்டியது என்ன வெனில் அனைத்துத் துறைகளிலும் உயர் பதவிகள் வெள்ளையருக்கே ஒதுக்கப்பட்டது. ஒரு மாணவன் தன் துறையில் வல்லமை பெற வேண்டுமென்றால் பெரும்பான்மையான நேரம் தன் பள்ளிப் பருவத்தில் அன்னிய மொழியான ஆங்கிலத்தைக் கற்க வேண்டியிருந்தது.
எதனால் தமிழக மக்கள் வெள்ளையன் அறிமுகப் படுத்திய கல்வியைக் கற்றனர்? 1. கிழக்கிந்திய கம்பெனியுடன் தொழில் ரீதியாக உறவு கொண்டிருந்த தரகுக் கும்பல் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத் தொழில் நுட்ப அறிவும் ஆங்கில மொழித் தேர்ச்சியும் பெற வேண்டியிருந்தது. ஆகையால் ஆங்கிலக் கல்வி முறையைப் பொறுப்புடன் படித்தனர். 2. அதிகார வர்க்கமாக மாற விரும்பிய நடுத்தர வர்க்கம் ஆங்கிலக் கல்வியைப் பெறுவதன் மூலம் அரசாங்க வேலைகளில் அமர்வதற்கும் மருத்துவர்களாக, வழக்கறிஞர்களாக ஆவதற்கும் கற்றனர். 3. சாதி ரீதியாக பிளவுண்ட சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாகக் குரல் நெரிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் ஆங்கிலக் கல்வி பெறுவதன் மூலம் தங்கள் குரலை ஓங்கி ஒலிக்க முடிந்தது.
ஆங்கிலக் கல்வி முதலில் பிராமணர் மத்தியில் தாக்கம் செலுத்தியது. அடுத்ததாக ஆதிக்கச் சாதி மற்றும் குறிப்பாகத் தாழ்த்தப்பட்டோர் கல்வி பெற மிகப் பெரிய போராட்டங்கள் நடத்த வேண்டியிருந் தது. வட இந்திய தரகு முதலாளிகளுக்கும், தென்னிந்திய தரகு முதலாளிகளுக்கும் முரண்பாடு முற்றியபோது அதன் உச்சத்தில் தென்னிந்தியாவில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது.
இவ்வியக்கம் பார்ப்பனர் அல்லாதோர் உரிமைக்காக சமூக தளத்தில் போராட்டத்தை முன்னெடுத்தது. இதன் விளைவாக இடைநிலைச் சாதிகளில் சிலர் கல்வி கற்க வாய்ப்பாக அமைந்தது. ஆனால் தாழ்த்தப் பட்டோர் கல்வி கற்பிப்பது கடினமான ஒன்றாக இருந்தது. தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மாணவன் பள்ளியில் இணைந்ததனால் ஒட்டுமொத்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியில் இருந்து நின்ற வரலாற்றை நாம் காண முடிகிறது.
பொருளாதார ரீதியாக ஆதிக்கச் சாதியைச் சார்ந்திருந்த தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் பிள்ளை களைப் பள்ளிக்கு அனுப்ப அஞ்சினர். கல்வி குறித்து தாழ்த்தப்பட்ட தலைவர்கள் மத்தியில் இருவேறு கருத்துகள் நிலவின. அதாவது பொதுக் கல்வி முறையைக் கடைபிடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், தாழ்த்தப்பட்டோருக்குத் தனிக் கல்வி கவனம் செலுத்த வேண்டும் என்று மறு தரப்பினரும் கூறி வந்தனர். இரண்டு நிலைபாடுகளிலும் நியாயங்கள் இருந்தன.
சமுதாயத்தில் நிலவிய சாதிய வன்மம் பொதுக் கல்வி முறையினால் தாழ்த்தப்பட்டவர்கள் பாதிக்கப் படுவார்கள் என்று எண்ணினர். தாழ்த்தப்பட்டோருக் கான தனிப்பள்ளி அமைத்தால் தாழ்த்தப்பட்டோர் இருத்தலை அது இறுக்கமாக்கும் என்று அஞ்சினர். சில தாழ்த்தப் பட்டோர் தன் சொந்த முயற்சியில் கல்வி நிறுவனங்கள் உருவாக்கிச் செயல்படுத்தினர்.
பிரிட்டிசார் உழைக்கும் மக்களுக்கும், தாழ்த்தப் பட்ட மக்களுக்கும் கல்வி அளிப்பது என்பது கீழ்க்கண்ட நோக்கங்களுக்கே. 1. இந்திய ஆளும் கும்பலைப் பணிய வைக்கச் சில முரண்பாடுகளை உருவாக்க வேண்டியிருந்தது. 2. பிரிட்டிசார் தன் இருத்தலை உறுதி செய்யச் சமூக ரீதியில் அங்கீகாரம் பெற வேண்டியிருந்தது. 3. ஒவ்வொரு சமுதாயத்திலும் (சாதிக்குள்) ஒரு குறிப்பிட்ட அதிகார வர்க்கக் கும்பல் உருவாக்குவதின் மூலம் ஒட்டுமொத்தச் சமுதாயத்தை யும் அடக்கி விடலாம் என்று திட்டமிட்டது.
மொத்தத்தில் மெக்காலிய கல்வி முறை என்பது பிரிட்டிசார் ஆசியுடன் தரகு முதலாளியை வளர்த்து எடுப்பதற்கும், அத்தரகு முதலாளிக்குச் சேவை செய்யக் கூடிய அதிகார வர்க்கத்தை உருவாக்கவும், இவர்களை எதிர்த்து கேள்வி கேட்காமல் இருக்க இயந்திர ரீதியான கல்வி முறையில் சிக்க வைத்துக் கிளிப் பிள்ளைபோல் சொன்னதைச் சொல்லும் அடிமைப் புத்தியை நம் மனதில் உருவாக்கியதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லை.
உலகச் சூழலில் ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக பிரிட்டிசார் தன் நேரடி ஆட்சியை விலக்கிக் கொண்ட பிறகு, 1947 ஆகஸ்டில் தரகு முதலாளிகள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட குறுகிய காலத்தில் தாம் எதிர் கொள்ள வேண்டிய கடினப் பணியை அதாவது நேற்று வரை பிரிட்டிசு மூலதனத்தை பாதுகாத்த இவர்கள் மற்ற ஏகாதிபத்திய மூலதனத்தை ஈர்க்க உழைக்க வேண்டியிருந்தது.
சனநாயகம் விடுதலை என்று குரல் எழுப்பிய வர்கள் கையில் அடிமைச் சங்கிலி இறுக்கப்பட்டது. கல்வியிலும் அடிமைத்தனம் தொடர்ந்தது. போலி விடுதலைக்குப் பிறகு இந்திய அரசியலமைப்புச் சட்டம் 48 ஆம் பிரிவின்படி பத்தாண்டுகளில் (1960க்குள்) எல்லாக் குழந்தைகளுக்கும் 14 வயது வரை கல்வி கற்பிக்கப்படும் என்ற வாக்குறுதி இன்றளவும் எட்டப்படாமலேயே இருக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தில் நிறைந்திருந்த கனிம வளங்களை ஏகாதிபத்தியங்கள் சுரண்டுவதற்கும், இந்தியத் தரகு முதலாளிகளின் தொழிற்சாலைக்கு ஏற்ப உட்கட்டுமான வசதி பெருக்கிடப் பல பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இப்பொதுத் துறை நிறுவனங்களுக்குத் தேவைப்படும் மனித வளங்களை உருவாக்கும் வண்ணம் உயர் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
ஐ.ஐ.டி. போன்ற உயர் தொழில் நுட்ப நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. இந்தியா முழுவதும் பரவியிருந்த பல்கலைக் கழகங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. ஆனால் விடுதலை கிடைக்கப்பட்டதாக நம்பிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உடனடித் தேவை யான தொடக்கக் கல்வியில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 1964 67 ஆம் ஆண்டுகளில் நடுவண் அரசால் அமைக்கப்பட்ட கொத்தாரிக் குழு பரிந்துரைத்த அனைத்து முக்கிய அம்சங்களும் நிராகரிக்கப்பட்டன. அக்குழு வேண்டிய பொதுக் கல்வி முறை இன்றளவும் கூட ஏற்றுக் கொள்ளப்படவில்லை. பொதுக் கல்வி அமைத்ததின் மூலம் வர்க்க ரீதியாகப் பிரிந்திருக்கும் சமுதாயங்களைப் பள்ளிகளில் ஒன்றிணைப்பதின் மூலம் சமுதாயத்தில் சமத்துவம் அமையும் என அக்குழு கூறியது. அப்படிப் பொதுக் கல்வி அமையாவிட்டால் கல்வி நிறுவனங்களே சமுதாயப் பிரிவை உருவாக்கும் கருவியாக மாறும் என்று எச்சரித்தது.
ஆனால் இதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாத ஆளும் கும்பல் 1968ஆம் ஆண்டில் கல்விக் கொள்கையை மாற்றியமைத்தது. மீண்டும் அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்று பொய் உரை உரைத்தது.
1975ஆம் ஆண்டில் இந்திய தேசிய அரசாங்கத்தை கருத்தியல் ரீதியாக ஒருங் கிணைக்கும் வண்ணமாக மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி 42ஆவது திட்டப் பிரிவு திருத்தத்தின் மூலம் பொது வான பட்டியலுக்கு மாற்றப் பட்டது. இதன் மூலம் இந்தியாவில் சிறை வைக்கப் பட்ட தேசிய இனங்களில் மூச்சுக் காற்று இறுக்கப் பட்டது. இனித் தமிழகத்திற்கான தனிக் கல்வி முறை என்பது சாத்தியமற்றதாக மாறிவிட்டது. 1986இல் இந்தியத் தரகு முதலாளிகள் மத்தியில் ஏற்பட்ட பொருளுதார ரீதியான மாற்றம் அதாவது உலக வங்கியின் ஆணைக் கிணங்கத் தனியார் மயத்தை ஊக்குவிப்பது என்ற நடவடிக்கை கல்வியிலும் எதிரொலித்தது.
அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்ற முறை மாறி எல்லோருக்கும் எழுத்தறிவு என்ற சொத்தைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. தொழில் சார்ந்த படிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது. அதாவது, ஐ.டி.ஐ., டிப்ளமோ குறுகிய காலத் தொழில் நுட்பப் படிப்பு இவை அனைத்தும் தொழிற் சார்ந்த நடவடிக்கையாக இருந்தது. இக் காலக் கட்டத்தில் உயர்கல்வியில் மானியம் குறைப்பு உயர் கல்வியில் தனியார் உயர்வு வேரூன்ற வழிவகை செய்யப்பட்டது.
1995இல் ஏற்படுத்தப்பட்ட எஅகூகூ ஒப்பந்தம் கல்வியிலும் தீவிர மாற்றத்தைக் கோரியது. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொறுத்தவரை 8%லிருந்து 10% வீதம் பேரே உயர் கல்வியை எட்ட முடிகிறது. இங்குக் கல்வி பொருளாகவே மாற்றப்பட்டு விட்டது. 1995க்கு பிறகு அஞ்சல் வழிக் கல்வி, தனியார் பல்கலைக் கழகம், ஏகாதிபத்திய மூலதனத்தைப் பல்கலைக் கழகம்பால் ஈர்ப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உலக மயச் சூழலுக்குப் பிறகு தமிழகச் சுய பொருளாதாரம் விவசாயியின் வாழ்க்கை, கிராமப்புற இளைஞர்களின் மேம்பாடு ஆகியவை காவு கொடுக்கப்பட்டு, வளர்ந்த ஏகாதிபத்தியத்திற் கான சேவைத் துறை வளர்ச்சியை ஈடுகட்டும் வகையில் ஐ.டி. போன்ற உயர் கல்வி வளரத் தொடங்கியது. இது மாணவர்கள் மத்தியில் சமத்துவக் கருத்து வேரூன்றுவதற்குப் பதில் போட்டி பொறாமை வளர்த்தெடுக்கப்பட்டது.
விலங்கிலிருந்து மாறுபட்ட மனித நாகரீகம் மறைந்து ஆயிரத்தில் ஒருவனாகத் தன் பிள்ளை இருக்க வேண்டும் என்ற மனநிலை பெற்றோர்களிடம் வளர ஆரம்பித்து விட்டது. மனித நாகரீகம் வளர்க்கும் சமூக அறிவியல், மொழி, இலக்கணம் போன்ற கல்வி புறந்தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறது. மத்தியில் பா.ஜ.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன் பிஞ்சுகள் நெஞ்சில் நஞ்சை விதைப்பதைப் போல் மதவெறிக் கருத்துகளைப் பாட நூற்களில் புகுத்தியது.
2000ஆம் ஆண்டில் பிரதமர் வாஜ்பேய் அமைச்சகத்தைச் சார்ந்த வணிகம் மற்றும் தொழிலுக்கான குழு கல்வியில் சீர்திருத்தங்களைக் காண ஒரு கோட்பாட்டு அணுகுமுறை என்றொரு அறிக்கையைச் சமர்ப்பித்தது. இங்கே குறிப்பிட வேண்டியது என்னவெனில் இக்குழுவின் தலைவர் அம்பானி, உறுப்பினர் பிர்லா இவ்வறிக்கையின் பிரதான அம்சம் உயர் கல்வி முழுவதும் தனியார் மயம் ஆக்கப்பட வேண்டும் என்பதே. மேலும் அவற்றில் குறிப்பிடத் தக்க அம்பானி, பிர்லா ஆகியோரின் பரிந்துரைகள் பின்வருமாறு:
1. இந்திய தேசிய அளவிலான ஒரு பொதுவான பாடத் திட்டம் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால் இச்சவாலை நாம் எதிர் கொள்ள வேண்டும். இப்பரிந்துரையின் மூலம் வெகு விரைவில் கல்வி நடுவண் அரசின் கீழ் வந்து விடும் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ளலாம். 2. சந்தை சார்ந்த கல்விக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும். (இந்தியச் சூழலில் மென்பொருள் பொறியாளர்களை உருவாக்குவது). 3. பள்ளிகளுக்கான உட்கட்டு மானத்தை மேம்படுத்த நன்கொடை கட்டணம் ஊக்குவிக்கப்பட வேண்டும். பெருந்தொழில் நிறுவனங்களோடு இணைந்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கண்டுபிடிப்புகளுக்கான உழைப்பு ஊதியம் மூலம் நிதி பெற்றிட வேண்டும். 4. உயர் கல்வியில் அரசின் கட்டுப்பாட்டைத் தளர்த்திட வேண்டும். 5. உயர் கல்வியில் நேரடி அந்நிய மூலதனத்தை அனுமதித்திட வேண்டும். 6. உயர் கல்வி நிறுவனங்களுக்குத் தேசிய அளவில் மதிப்பீடு செய்து தனியார் நிறுவனங்கள் மூலம் குறியீடு வழங்கப்பட வேண்டும்; குறைந்த குறியீடு வாங்கும் நிறுவனங்கள் மூடப்பட வேண்டும். 7. பல்கலைக் கழக வளாகங்களில் மாணவர், ஆசிரியர் ஆகியோரின் அரசியல் நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும். அம்பானி, பிர்லா ஆகியோரின் பரிந்துரைகளை இந்திய அரசு நடைமுறைப்படுத்தி வருவதை நாம் அறிந்ததே. அப்படியானால் ஏழை எளிய மாணவர்களுக்கு உயர்கல்வி என்பது பேராசையாகவே கருதப்படும். மேலும் சமூக நீதி முற்றிலும் உயர் கல்வியில் கேள்விக்குறியாக்கப்படும்.
12.8.2005 அன்று ஏழு நீதிபதிகளைக் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு அரசு உதவி பெறாத சுயநிதிக் கல்லூரிகளில் இடஒதுக்கீடு அளித்திட வேண்டும் என்று உத்தரவிட அரசுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியது. இவ்வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நீதிபதி ஹாசி லொகாத்தி, “நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பு பிடிக்காவிட்டால் சொல்லுங்கள், பேசாமல் நீதிமன்றத்தை மூடி விடுகிறோம்'' என்று அரசு வழக்கறிஞர் அட்டார்னி ஜெனரலிடம் கோபத்துடன் கூறினார்.
இது இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் மூலம் உலக மயத்திற்கு ஏற்ப எவ்வாறு நீதிமன்றங்கள் செயல்படு கின்றன என்று அறியலாம். இத் தீர்ப்புக்குப் பின் சட்டத் திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு மோசடியான முறையில் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. அதிலும் அரசுக்கு ஒதுக்கப்படும் 50% சதவீதம் இடத்தில் மட்டுமே.
அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது சமீபத்தில் ஜூலை 20, 2009ம் ஆண்டில் நடுவண் அரசால் நிறைவேற்றப்பட்ட கட்டணம் இல்லாத கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தைத்தான். அச்சட்டம் முதன்மையாக 1லிருந்து 6 வரை உள்ள குழந்தை களுக்கான கல்வியிலிருந்து அரசு விலகி நிற்பது சட்டப்படியானது. இதுவரை பேசப்பட்டு வந்த பொதுக் கல்வி முறைக்குச் சட்டப்படியாகச் சவப் பெட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது.
இச் சட்டப்படி தொடக்கப் பள்ளிகளில் தனியார் பங்களிப்பை உறுதி செய்திருக்கிறது நடுவண் அரசு. இதைத் தாண்டி பள்ளிக் கல்விகளில் எந்த முன்னேற்றத்தையும், கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் நாம் பெற முடியாது.
இறுதியாகத் தமிழக அரசு அமுல்படுத்துவதாகச் சொல்லப்படும் சமச்சீர் கல்வியைக் கவனிக்க வேண்டும். சமச்சீர் கல்வி அமைப்பதற்கான சூழலை ஆராயத் தமிழக அரசால் அமைக்கப்பட்ட 9 உறுப்பினர்களைக் கொண்ட முத்துக்குமரன் குழு தம் அறிக்கையில் ஜூலை 2007இல் தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. ஆனால் இந்த அறிக்கையை ஒட்டி இரண்டு வருட காலம் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை. பல்வேறு மாணவர் போராட்டத்திற்குப் பின் இறுதியாக 2010 ஆகஸ்டில் தமிழக முதல்வர் சமச்சீர்க் கல்வியை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களில் பெற்றோருக்குப் புகார் கடிதம் அனுப்பியும் வைத்தார். முத்துக்குமரன் குழுவின் பெரும்பாலான பரிந்துரைகள் நிராகரிக்கப் பட்டிருக்கின்றன. குறிப்பாக மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன், ஓரியண்டல் போன்ற கல்வி வாரியங்கள் கலைக்கப்பட்டு பொதுக் கல்வி வாரியம் உருவாக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரை திரிக்கப்பட்டு மேற்கூறிய வாரியங்கள் கலைக்கப் படாமலேயே தமிழகப் பொதுக் கல்வி வாரியம் உருவாக்கப்பட்டிருக்கிறது. தமிழகத் தில் தனியார்க் கல்வி மற்றும் அரசுக் கல்வி உட்பட உட்கட்டமைப்பு சமச்சீராக இல்லாத நிலையில் சமச்சீர்க் கல்வி என்பது கேள்விக்குறியானது.
கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் நிலைமை யைப் பற்றிய பரிந்துரைகள் மீது தமிழக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தொடக்கக் கல்வி யில் தமிழ் வழிக் கல்வி கட்டாயப்படுத்தப்பட வேண் டும் என்பது நிராகரிக்கப்பட்டுள்ளது. முத்துக் குமரன் குழு பதிவு செய்த இடைநிறுத்தம் பின்வருமாறு:
உயர்நிலைப்பள்ளி 42.45% சதவீதம், மேல்நிலைப் பள்ளிகளில் 69.45% சதவீதம். ஏன்? இந்த இடை நிறுத்தம் என்று அந்தக் குழுவும் சிந்திக்கவில்லை; தமிழக அரசும் கவலைப்படவில்லை. பெரும்பாலும் ஆங்கிலப் பாடப் பிரிவில் தேர்ச்சி பெறாமலேயே இடைநிறுத்தம் ஏற்படுகிறது என்பதைக் கவனிக்காமல் இருப்பது கவலைக்குரியது.
2009ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசு தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்திக் கொண்டு வரப்பட்ட வரைவுச் சட்டம் பல்வேறு ஓட்டைகளைக் கொண்டுள்ளது. இச்சட்டப்படி பள்ளிகளில் கட்டணம் தீர்மானிக்கப்படும்போது அப்பள்ளி அமைவிடம், உட்கட்டமைப்பு, நிர்வாகச் செலவுகள் மற்றும் பராமரிப்பு எனப் பலவற்றைக் காரணிகளாகக் கொண்டு கட்டணம் தீர்மானிக்கலாம் என்று கூறுகிறது.
இது எப்படிச் சமச்சீர்க் கல்வியை உறுதி செய்யும். பணம் இருந்தால் தரமான பள்ளிகளில் சேரலாம் என்று சட்டப்படி அறிவித்திருக்கிறது தமிழக அரசு. இச்சட்ட வரைவு கூடப் பொறுத்துக் கொள்ள முடியாத தனியார் கல்வி நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
பொதுவாகத் தமிழக பள்ளிகள், சாதியையும், வர்க்கத்தையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது. கல்வியில் தமிழும், சமத்துவமும் இல்லாத நிலை தொடர்கிறது. மறுபுறம் இந்தியத் தரகு முதலாளிகளின் சமூக, பொருளாதார இருத்தலை உறுதி செய்ய கட்டாய அடிமைக் கல்வி உறுதி செய்யப்படுகிறது. இதை எதிர்த்து மாணவர்களை ஒருங்கிணைக்க வேண்டிய கட்டாயச் சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். நம் கண்முன்னே இருக்கும் கோரிக்கைகள் இவைதாம்.
1. தமிழ் வழிக் கல்வி, 2. சமத்துவக் கல்வி (பொதுக் கல்வி முறை), 3. தனியார் தலையீடு இல்லாத கல்வி முறை, 4. அனைவருக்கும் வாய்ப்பு அளிக்கக் கூடிய கல்வி முறை, 5. கிளிப்பிள்ளை உருவாக்கும் அடிமைக் கல்வியை ஒழித்து விஞ்ஞானப்பூர்வமாக கல்வி முறை. ஆனால் மேற்கூறியவற்றைச் சாத்தியப்படுத்த நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்.
கல்வியில் தமிழைக் கொண்டுவர வேண்டிய சூழலை ஏற்படுத்த வேண்டிய நாமே தனித் தமிழ் மொழிப் பள்ளி நடத்துவது சமரசத்திற்கு இட்டுச் செல்லும் இறையாண்மைக் கொண்ட தமிழக அரசு, அந்நிய தலையீடு இல்லாத தமிழக சுயப் பொருளாதாரம் சாத்தியப்படுத்துவதன் மூலம்தான் தமிழை வழக்கத்திற்குக் கொண்டுவரமுடியும். பொதுக் கல்வி கொண்டுவர வேண்டிய முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஊர், சேரி என வர்க்கமாகப் பிரிந்திருக்கும் தமிழகத்தில் அனைத்து மாணவர்களும் பொதுப் பள்ளியில் படிக்க வாய்ப்பளிக்கப்படுவதன் மூலம்தான் பிஞ்சு நெஞ்சங்களில் சமத்துவத்தைப் பதிக்க முடியும். இட ஒதுக்கீட்டினால் பயன் அடைந்த நடுத்தர வர்க்கமாக மாறியிருக்கும் மேட்டுக்குடி தாழ்த்தப்பட்டவர்கள் உயர் கல்வி நிறுவனங்களில் மட்டுமே தம் அரசியல் நடவடிக்கைகளைச் செயல்படுத்தி விடுகின்றனர். அதைத் தவிர்த்து தொடக்கப் பள்ளிகள் சாதி ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களை உருவாக்கிக் கொண்டிருப்பதைப் பற்றிக் கவலைப்படுவதாகத் தெரிவ தில்லை.
தமிழகத்திற்கான உணவுத் தேவை, நுகர்வுப் பொருட்களின் தேவை, அடிப்படை மூலப் பொருட் களைப் பற்றித் திட்டமிட, இறையாண்மை கொண்ட தமிழக அரசு இல்லாத நிலையில் ஒரு மாணவன் தன் துறையில் வல்லமை கொண்டவனாக மாற வேண்டும் என்றால் ஆங்கிலம் கட்டாயம் கற்க வேண்டும் என்ற அவல நிலை தொடர்கிறது. ஆகையால் நமக்கான திட்டத்தை நாமே உருவாக்கும் நிலையைப் பெற்றிட வேண்டும்.
அதாவது அனைத்துப் பெரும் தொழிற்சாலைகளும், விவசாய ஆராய்ச்சி நிறுவனங்களும் இறையாண்மை கொண்ட தமிழக அரசின் கீழ்க் கொண்டு வருவதன் மூலமாகத்தான் அந்நிய தலையீடுகளை அகற்றுவதன் மூலமாகத்தான் உயர் கல்வியில் தமிழைக் கொண்டு வர முடியும். ஆக இந்தியத் தரகு முதலாளிகளின் ஏகாதிபத்தியங்களைப் பாதுகாக்கும் இந்தியக் கல்வி முறையை எதிர்த்து மாணவர்களை ஒன்று திரட்டுவோம். பலமிக்க இயக்கங்களைக் கட்டியமைப்போம் புதிய தமிழகம் படைத்திடுவோம்.

மார்ச் 25 தோழர்கள் இராசாராம், புதுக்கோட்டை சரவணன் நினைவுநாள்


தனக்காக வாழ்ந்து மடிவதென்பது இறகை விட இலேசானது. மக்களுக்காக வாழ்ந்து மடிவதென்பது மலையை விட கடினமானது.
 தோழர் மாவோ
தேசிய இனங்களின் விடுதலைக் காகவும், தன் தேச வளங்கள் பன்னாட்டு நிறுவனங்களால் கொள்ளை யடிக்கப் படுவதை எதிர்த்தும், உழைக்கும் மக்களின் வாழ்வு வளங்களையும், உழைப்பையும் ஒட்டச் சுரண்டிக் கொழுக்கின்ற உலகப் பெரு முதலைகளை எதிர்த்தும் அதற்குத் துணை போகின்ற இந்த இந்திய அரசை எதிர்த்தும் புரட்சிகரச் சிந்தனை களால் தூண்டப்பட்டு இங்கிருக்கின்ற அரசியல மைப்புச் சட்டத்தையும், சமூக அமைப்பையும் மாற்றம் செய்வதற்காகக் கருவியேந்திப் போராட வருபவர் களை எல்லாம் தீவிரவாதம், பயங்கரவாதம் என்று சொல்லி சுட்டுப் படுகொலை செய்கின்றது இந்திய அரச பயங்கரவாதம்.
1987இல் தமிழ்த் தேசியத் தலைவர் தோழர் தமிழரசனின் நயவஞ்சகக் கொலையில் தொடங்கி அதன் பிறகு பாகநேரி நாகராசன் உள்ளிட்டு தோழர்கள் இராசாராம், புதுக்கோட்டை சரவணன் வரை பல்வேறு தோழர்களைப் போலி மோதல் என்ற பெயரில் கொலை செய்கின்றது இந்த இந்திய அரசும், அதன் அடிமையாய் இருக்கின்ற தமிழக அரசும்.
குறிப்பாகத் தோழர் இராசாராம், தோழர் தமிழரசனுக்குப் பிறகு தமிழ்த் தேச விடுதலை என்பது சாதி ஒழிப்பு இல்லாமல் நிகழாது என்ற தெளிவான சிந்தனையோடு இருந்தவர். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், ஆதிக்கச் சாதி வெறியர்களுக்கு எதிராகவும், பல்வேறு வேலைத் திட்டங்களைத் தலைமை யேற்றுச் செய்தவர்.
பல ஆண்டு களாகத் தலை மறைவுப் போராளியாக வாழ்ந்தவர். சாதி ஒழிப் பின் மூலமே தமிழ்த் தேச விடுதலை அடைய முடியும் என்ற வேட்கையில் தமிழகத்தில் “சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை'' என்ற முழக்கத்துடன் செயல்பட்டு வந்த தலித் கட்சியுடன் இணைந்து செயல்பட்டவர்.
அந்தத் தலித் கட்சியின் தலைவர் தேர்தல் பாதைக்குச் சென்றபோதும் கூட அவரால்தான், “தமிழகத்தின் சாதி ஒழிப்பையும், தமிழக விடுதலையும் நிகழ்ந்த முடியும்'' என்று நம்பியவர். அந்த நம்பிக்கையில் அவர்களோடு தன் வாழ்க்கையின் இறுதி நாட்கள் வரை பயணம் செய்தவர். தமிழகத்தில் இருக்கின்ற பார்ப்பன ஊடகங்களால் "தமிழ்த் தீவிரவாதி' என்ற ஒரு புதிய சொல் உருவாகக் காரணமாக இருந்தவர். அவரைக் கடந்த 2002 ஆம் வருடம் திசம்பர் மாதம் தமிழக அரசு கைது செய்தது.
அதன் பிறகு தமிழகத்தில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்பு வழக்குகளிலும் அவரைத் தொடர்பு படுத்தி நீதிமன்றங்களில் நிறுத்தினர். அப்போது தோழர் இராசாராம், தமிழ்த் தேச விடுதலைக்கு ஆதரவாகவும், இந்துத்துவ இந்தியத்தை எதிர்த்தும் முழக்கமிட்டுக் கொண்டே வருவார்.
இது இந்திய அரசிற்குப் பெரும் தலைவலியாக இருந்தது. இதனால் தமிழக அரசின் காவல் துறை தோழர் இராசாராமை அச்சுறுத்தியது. ஆனால் தோழர் இராசாராம் மீண்டும் துணிச்சலாகச் சங்கர மடத்தை இடிப்போம்! சங்கராச்சாரியார் ஒழிக! என்றும் முழக்கமிட்டார். இந்த முழக்கம் இந்தியப் பார்ப்பன அரசையும், அதன் அடிவருடித் தமிழக அரசையும் கோபப்படுத்தியதன் விளைவு கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் 25 ஆம் தேதி தோழர் இராசாராமையும், தமிழ்த் தேச விடுதலைக்காகப் போராடியவரும், வீரப்பனோடு தொடர்பில் இருந்து பல்வேறு நிகழ்வுகளில் இராசா ராமோடு இணைந்து பணியாற்றியவருமான தோழர் புதுக்கோட்டை சரவணனையும் சென்னை கோட்டூர்புரத்தில் வைத்துச் சுட்டுப் படுகொலை செய்தது.
உண்மையிலேயே மக்கள் மீது கொண்ட அன்பின் காரணமாகத் தன் குடும்ப உறவுகளை எல்லாம் துறந்து சாதி ஒழிப்பு, தமிழ்த்தேச விடுதலை போன்ற இலக்குகளை நடைமுறைப்படுத்துகின்ற பணியில் சமரசமற்றுக் களச் சாவு கண்ட இந்தத் தோழர்களை நினைவு கூர்வதற்குக் கூட நமக்கு 8 ஆண்டுகள் தேவைப்படுகின்ற அதே நேரத்தில் இதே இலக்கு களை முன்னிறுத்தி அரசியல் தளத்தில் நின்ற தலித் தலைவர்கள் அந்த இலக்குகளை விட்டு விலகித் தம்மை நம்பி வந்த மக்களை எல்லாம் விலைபேசி எதிரிகளிடம் சமரசமாகித் தேர்தல் மூலம் இந்தியாவின் எடுபிடிகளாக ஆக்கி மிகப் பெரும் தலைவராவதற்கும் இந்த 8 ஆண்டுகளே போதுமானதாகிப் போனது என்பதனை உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் உணர வேண்டும்.
எந்த ஒரு தனி மனிதனையும் தூக்கிப் பிடிப்பதிலோ, துதி பாடுவதிலோ நமக்கு எப்போதுமே உடன்பாடு கிடையாது. அதே நேரத்தில் நமது அரசியலை நமது சாதி ஒழிப்பை, நமது தேச விடுதலையை, நமது பொதுவுடைமை அரசியலை நடைமுறைப்படுத்துகின்ற பணியில் யாரெல்லாம் பலியாகிறார்களோ அவர்களை மக்கள் போராளிகளாக மக்கள் புரட்சியாளர்களாக அடையாளம் காட்ட வேண்டிய தேவையும், மக்களை விலை பேசி அதன் மூலம் தலைவர்களாக வலம் வருபவர்களை அவர்கள் தலித் தலைவர்களாகவே இருந்தாலும் அவர்களை மக்கள் மன்றத்திலே அம்பலப்படுத்த வேண்டிய தேவையும் நமக்கு இருக்கின்றது.
அந்த அடிப்படையில் இந்த மார்ச் 25ஆம் நாளை நாம் தமிழ்த் தேச விடுதலைப் போராளிகளான தோழர் இராசாராம், தோழர் புதுக்கோட்டை சரவணன் ஆகி யோரை நெஞ்சில் ஏந்துவோம். அவர்கள் மீது நமக்கு நிறைய திறனாய்வுகள் உண்டு என்றாலும் எதிரிகளிடம் சமரசம் இல்லாமல் சாவு கண்ட, அவர்கள் சென்ற
சாதி ஒழிப்புப் பாதையில்
தமிழ்த் தேச விடுதலைக்கான பாதையில்
பொதுவுடைமைப் பாதையில்
பயணிப்போம். தமிழ்த் தேச விடுதலையை வென்றெடுப்போம்! அதற்குத் தடையாக இருக்கின்ற இந்துத்துவ இந்தியக் கட்டமைப்பை வீழ்த்துவோம்.

முதன்மை எதிரியை எதிர்க்காமல்...


எதிரி என்றவுடனேயே மட்டைப்பந்து (கிரிக்கெட்) சுவைஞர் (ரசிகர்)களுக்கு மட்டுமல்ல, இந்திய விடலைகளுக்கெல்லாம் கூட, பாக்கிசுதான் தான் நினைவுக்கு வருகிறது.
இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்றவை மட்டுமல்ல காங்கிரசுக் கட்சியும் அந்தவகை அரசியலைத்தான் பரப்பி வருகிறது.
இந்திய ஆண்டைகள் அவ்வாறு திட்டமிட்டுப் பரப்பும்போது, அடிமைப்பட்டிருக்கிற நம் தமிழகக் குமுகத்திற்கு எதிரிகள் யார் யார் என்று நாம் அறிந்து கொள்வது முகாமையானது.
நமக்கு எதிரியேஇல்லை, நாம் எல்லோரிடமும் ஒரே வகையில் அன்பு செலுத்தக் கூடியவர்கள்தாம் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அது உண்மையில்லை.
என்நண்பனைத் துன்புறுத்தியவனிடத்திலும், என் நண்பனிடத்திலும் நான் ஒரே வகையில்தான் அன்பு செலுத்துவேன் என்று ஒருவன் சொன்னால் அதை உண்மை என்று ஏற்க முடியுமா?
அதாவது நண்பனைத் துன்புறுத்தியவனுக்குச் சார்பானவனாகவே அவனைக் கருத முடியும்.
துன்புறுத்தலை அவன் தடுத்திருக்க வேண்டும். அல்லது துன்புறுத்தியவனைக் கண்டித்திருக்க வேண்டும்.
இரண்டும் செய்யாமல் அமைதியாக இருப்பதால், அவனை நடுநிலையானவன் என எண்ண முடியாது. துன்புறுத்தியவனுக்குச் சார்பானவனாகவே எண்ண வேண்டியிருக்கிறது.
இந்த இடத்தில் அடிபட்டவன் நிலையிலிருந்து பார்க்கையில், அவனைத் தாக்கியவனை எதிர்மையானவனாகவே எண்ண முடியும்.
ஆக, ஒவ்வொரு செயலுக்குள்ளும் ஓர் உடன்பாடும், ஓர் எதிர்மையும் இருக்கவே செய்கிறது.
முரண்பாடுகள் இல்லாமல் இயக்கம் இல்லை. இயக்கம் என்றிருந்தாலே அதில் முரண்பாடுகளை அறிய முடியும்.
முரண்பட்ட இருவினைகளில் ஒன்றுக்கு ஒன்று சார்பாகவும், மற்றதற்கு மற்றது சார்பாகவும் இருப்பதே இயற்கை.
சார்பற்ற ஒன்றாக எதையும் கூற முடியாது.
அவ்வகையில் எதை ஒருவர் சார்ந்திருக்கிறார் என்பதேகேள்வி. அதிலிருந்தே அவரின் அரசியலை, பண்பை, வாழ்க்கைப் போக்கை அளவிடமுடியும்.
கூலி உழவர்களைக் கொடுமைப்படுத்தும் நிலவுடைமை ஆண்டையின் ஆளுமைப் போக்குக்குச் சார்பாக இருக்கப் போகிறோமா அல்லது கூலி உழவர்களின் மீதான கொடுமைகளைக் கண்டித்து நிலவுடைமை ஆளுமையை எதிர்க்கப் போகிறோமா?
இப்படித்தான் குமுகத்தின் மீதான அவலங்களைக் கணிக்கவும், அவ்வகை அவலங்களை எதிர்த்துப் போராடுவதன் நோக்கமும் ஆக இரு வேறு சார்பு நிலைகள் தோற்றங் கொள்கின்றன.
உழைக்கும் பெருவாரியான மக்களின் பக்கம் இருந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் மக்கள் போராளிகளாகவும் ஆண்டைகளுக்காகவும் இருந்து ஆண்டைகளுக்குச் சார்பாக இயங்குகிறவர்கள் ஆண்டை வகுப்புச் சார்பினராகவும் கணிக்கப்படு கிறார்கள்.
குமுக அமைப்பில் இப்படியாக நிறைய முரண்பாடுகள் உண்டு. ஒரு குமுகத்திற்குள் ஒருவகை முரண்பாடு மட்டுமே இருப்பதில்லை. பல முரண்பாடுகள் இருக்கின்றன.
தமிழ்க் குமுகத்தை எடுத்துக் கொண்டால் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் முரண்பாடு உள்ளது. வல்லரசுகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் முரண் உள்ளது. வெளிநாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்த் தேச முதலாளிகளுக்கும் முரண்பாடு உண்டு. உலகப் பெரு வணிகர்களுக்கும், தமிழக வணிகர்களுக் கும் இடையில் முரண் உண்டு. தமிழக நிலவுடைமை யர்க்கும் கூலி உழவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு. அண்டை இன அரசுகளுக்கும் தமிழக மக்களுக்கும் பகை முரண்கள் உண்டு.
ஆக மொத்தத்தில் இப்படிப் பல முரண்கள் தமிழகக் குமுகத்திற்குள் நிலவிக் கொண்டுதான் உள்ளன.
இவற்றில் எல்லா முரண்களுமே எதிர்க்கப்பட வேண்டியவைதாம். தீர்க்கப்பட வேண்டியவைதாம். என்றாலும் எதை முதலில் தீர்ப்பது எதை அடுத்துத் தீர்ப்பது என்று திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலமாகவே படிப்படியாக முரண்களைத் தீர்க்கமுடியும்.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் தமிழக மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொள்ளையடித்துச் செல்லும் பன்னாட்டுக் கொள்ளையர்களை விரட்ட வேண்டி யிருக்கிறது. தமிழ்த் தேச உரிமைகளை நசுக்கும் இந்திய வல்லாட்சியின் வாலறுக்க வேண்டியிருக் கிறது. தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் அண்டை தேச அரசுகளைப் பணிய வைக்க வேண்டியிருக்கிறது...
இப்படியாகத் தமிழ்த் தேச உரிமைகளை மீட்க தமிழ்த் தேசக் குடியரசை நிறுவ நூற்றுக்கணக்கான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.
அவ்வகையில் நூற்றுக்கணக்கான எதிர்மை ஆற்றல்களையும் ஒருசேர ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராட முடியுமா? அப்படிப் போராடி வெல்ல முடியுமா?
தந்தைக்கும் மகனுக்கும் மனவருத்தம் ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருக்கும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து விடுகிற திருடன் ஒருவனைப் பிடிக்க வேண்டும் என்றால், தந்தையும் மகனும் தங்களுக் கிடைப்பட்ட முரண்களை விட்டுக் கொடுத்து இணங்கித்தான் பிடிக்க வேண்டும். மாறாக அந்தநேரத்தில் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு, உங்களுக்கு வேண்டுமானால் திருடனை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள், நான் துணைக்கு வரமாட்டேன் என மகனும், நீ வேண்டுமானால் திருடனைப் பிடித்துக் கொள் நான் உதவ மாட்டேன் எனத் தந்தையும் தங்கள் முரணை முதன்மைப்படுத்திக் கொள்வார்களானால் என்ன ஆகும்? அங்கு நலன் அடைபவன் திருடனாகத்தானே இருக்க முடியும்?
அதுபோல்தான் குமுகத்தில் நிலவும் பல முரண்பாடுகளில் எதை முதலில் தீர்ப்பது எதை அடுத்துத் தீர்த்துக் கொள்வது என்கிற கணிப்பு தேவை.
எதை முதலில் தீர்வுக்கு எடுப்பதால் மற்ற முரண்பாடுகளுக்கு ஆக்கம் விளைந்துவிடாமல் இருக்கும் என்று அளவிட்டு முதன்மை முரண் பாட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.
எனவே முரண்பாடுகளில் எது முதன்மை முரண்பாடு, எதை அடுத்த முரண்பாடாகத் தீர்ப்பது என்பதில் கூர்த்த அரசியல் ஆய்வு தேவை.
எல்லாமே தமிழ்த் தேச நலனுக்கானதாக இருக்கும்போது, எதை முதலில் தீர்த்தால் என்ன என்று சிலர் எண்ணலாம்.
அப்படி எண்ணுவது அறியாமை வயப்பட்டதே. திருடனுக்கு ஊதியத்தை ஏற்படுத்தித் தருவதைப் போன்றதே.
ஒரு தேசத்தின் விடுதலைக்காக முதன்மைப் படுத்தித் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் சில இருக்கும்.
தேசத்தின் விடுதலைக்குப் பின்பாகத் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் சில இருக்கும்.
தேசத்தின் விடுதலைக்குப் பின்பாகத் தீர்க்க வேண்டிய சிக்கல்களை விடுதலைக்கு முன்பாகவே தீர்த்துக் கொள்ள முனையக் கூடாது.
இதுகுறித்துச் சற்றுக் கூடுதலாகப் பார்ப்போம்.
 தமிழகம் ஒரு தேசம் என்கிற அடிப்படையில் உரிமை கொள்ள இயலாமல் இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்கும் அடிமைப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தேசிய முதலாளிகளும், வணிகர்களும் எனத் தமிழ்த் தேசத்தின் அனைத்து வகுப்பினருமே மேற்படி இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்கும் அடிமைப்பட்டிருப்பதை அறிவோம்.
அவை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு வகையில் விடுதலை தேவையுடையதாக இருக்கிறது.
இந்நிலையில் தன் விடுதலைத் தேவைக்காக அவை தானாகவே முன்னின்று வல்லரசியத்தை, இந்தியத்தை எதிர்த்துப் போராட அணியமாக இல்லை.
அதேபோது அவற்றை எதிர்த்துப்போராடும் பிற வகுப்புகளுக்கு அவர்கள் துணை செய்ய விரும்பு கின்றனர். அவர்களின் போராட்டம் வெல்ல வேண்டுமாய் விரும்புகின்றனர்.
இந்நிலையில் இந்திய அரசை, வல்லரசியங்களை எதிர்த்துப்போராடுகிற உழைக்கும் வகுப்புகளுக்குத் தமிழ்த் தேசிய முதலாளிவகுப்புகளும், வணிக வகுப்புகளும் ஆதரவு அணிகளாக அமைகின்றன. வெகு மக்கள் தளத்தில் போராடக் கட்டமைக்கப்படும் முன்னணிகளில் பங்கெடுக்கும் நிலையிலும் அவ்வகுப்புகள் கைகோர்க்கின்றன.
எனவே, அதுபோன்ற சூழல்களில் இந்திய அரசையும் வல்லரசுகளையும் தனிமைப்படுத்தி எதிர்ப் பதற்குத் தமிழகத்தின் அனைத்து வகுப்புகளையும், ஒருங்கிணைத்து முன்னிலைப்படுத்தி ஒருங்கிணைந்த தலைமையை உருவாக்க வேண்டிய கடமை தமிழக உழைக்கும் வகுப்பிற்கு உண்டு.
இந்நிலையில் நாங்கள் உழைக்கும் வகுப்பின் தலைமைக்காõகப் போராடக் கூடியவர்கள். எனவே என்ன இருந்தாலும் முதலாளியம் என்பது வகுப்பு (வர்க்க) அடிப்படையில் இன்றைக்கு இல்லாவிட் டாலும் பின்வரும் காலங்களில் எங்களுக்கு எதிரிகள்தாம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களை இன்றைக்கு அணி சேர்க்க முடியுமா?
அப்படி அவர்களை அணிசேர்க்காமல் தேசிய விடுதலையைப் போராடிப் பெற்றெடுக்கவும் முடியுமா?
எதிர்கால ஒப்புரவிய (சோசலிச)க் குமுக உருவாக்கத்திற்கான போராட்டத்தில் எதிர்மையாகக் கணிக்கப்பட வேண்டியவர்களை, இன்றைய தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிர்மையர்களாகக் கணிக்க முடியாது.
காலத்திற்கேற்பப் போராட்டத் தேவைக்கேற்ப நண்பர்களைத் தீர்மானிப்பதும், எதிரிகளைத் தீர்மா னிப்பதும் மிக மிக இன்றியமையாததாக இருக்கிறது.
இன்றைய காலம் என்பதை இன்றைய குமுக அழுத்தத்தின் அளவீடுகளிலிருந்து தீர்மானித்தாக வேண்டும்.
தமிழகத்தின் இன்றைய முதன்மை எதிரி:
ஆக, நம் தமிழகத்தின் இன்றைய முதன்மை எதிரிகளாக இந்திய அரசும், வல்லரசுகளுமே இருப்பதைத் தெளிவாக உணர முடியும்.
இவ்விரண்டு எதிரிகளும் வலுவான எதிரிகள். நம் தேசத்தை அடிமைப்படுத்தியும், சுரண்டிக் கொள்ளை யடித்துக் கொண்டுமிருக்கிற அவ்விரு எதிரிகளையும் எளிதே நாம் விரட்டி அடித்து விட முடியாது.
அப்படி அவர்களை விரட்டியடிப்பதற்குரிய ஒரே போர்க் கருவி நமக்கு மக்கள்தாம். மக்களின் பேரெழுச்சியால் அல்லாமல் அவ்வெதிரிகளை நிலைகுலையச் செய்ய முடியாது.
மக்கள் பேரெழுச்சியைத் திரட்டுவது எவ்வாறு? என்று நாம் திட்டமிட்டாக வேண்டும்.
மக்களுள் பல்துறைசார்ந்த வகுப்பு அணிகளையும் அணி அணியாகத் திரட்டியாக வேண்டும்.
எல்லா அணிகளையும், இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்கும் எதிராகத் திரட்டியாக வேண்டும்.
உழவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், எழுத்தாளர்கள் என அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைத்தாக வேண்டும். அதற்கான அரசியல் மற்றும் செயல் திட்டங்களிடப்படவேண்டும்.
இத்தகைய ஒருங்கிணைந்த முன்னணிகளைக் கட்டிப் போராடுகிற அதே நேரத்தில் பிற தேசங்களின் இந்தியாவுக்கு எதிரான, வல்லரசுகளுக்கு எதிரான போராட்ட வழியான ஆதரவு ஆற்றல்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். உலகம் முழுக்க வல்லரசுகளுக்கு எதிராகப் போராடும் இயக்கங்களை எல்லாம் நமக்கான ஆதரவாளர்களாக ஒருங்கிணைக் கும் பெரும் முயற்சிகளையும் செய்தாக வேண்டும்.
இத்தகு நீண்ட காலத் திட்டமிட்ட முயற்சிகளின் வழியாகவே தமிழ்த் தேசம் இந்தியத்திடமிருந்தும், வல்லரசுகளின் ஆளுமைச் சுரண்டல்களிலிருந்தும் விடுபட முடியும்.
மாறாக அந்த முதன்மை எதிரிகளைக் கூர்மைப் படுத்தி எதிர்க்கிற அரசியல் தெளிவின்றித் தமிழ்த் தேச விடுதலைக்குப் பிறகு செய்யப் பெறவேண்டிய அடுத்தக் கட்ட வேலைகளையெல்லாம் இப்போது செய்தோமானால் அவை இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்குமே வாய்ப்பாகப் போகும்.
அவை எவை?
தமிழகத்திற்கும் அண்டைத் தேசங்களுக்கும் முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன. காவிரி நீரைக் கருநாடகம் மறிக்கிறது. முல்லைப் பெரியாற்று நீரைப் பறிக்கிறது கேரளம். ஆந்திர நிலவுடைமையர் தமிழகத்திற்குள் வந்தேறி நிலங்களைக் கவர்ந்திருக்கின்றனர்.
அவையாவும் உண்மையாயினும் அந்த அண்டைத் தேசங்கள் யாவும் விடுதலை பெற்ற தனித் தேசங்கள் இல்லை. அவையாவும் இந்திய அரசின் அடிமைத் தேசங்களே.
நமக்கு, இங்கு இந்திய அரசால், வல்லரசுகளால் தமிழ்த்தேசத்தின் மீது ஏற்படும் அரசியல், பொருளியல் அடக்குமுறைகள் அனைத்தும் அவர்களுக்கும் உண்டு.
ஆனால், அவர்கள் தங்கள் தேச உரிமை எழுச்சி களை இந்திய அரசுக்கு எதிராகவும், வல்லரசுகளுக்கு எதிராகவும் போராடிப் பெறும் வரிசையில் தமிழ கத்தை விட மிகப் பிந்திய நிலையிலேயே இருக்கின்றனர்.
அங்கெல்லாம் இந்தியத்திற்கு எதிரான, வல்லரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் மிக மிக அரிதாகவே நடக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து நாம் காவிரிச் சிக்கலுக்காகட்டும், முல்லைப் பெரியாற்றுச் சிக்கல்களுக்காகட்டும், அச்சிக்கல்களைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்தாத இந்திய அரசை நெருக்கிப் போடாமல் கருநாடகத்திற்கு எதிராகவும், கேரளாவுக்கு எதிராகவும் போராடுவோமானால் அது, இந்திய அரசை மகிழ்ச்சிப்படுத்தவும், அண்டைத் தேசங்களுக்கிடை யான பகைமைகளை வளர்க்கவுமே பயன்படும்.
அதைத்தான் இந்திய அரசும், வல்லரசுகளும் விரும்புகின்றன. ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டமாய் ஆகின்றன.
எனவே அவ்வகையில் அல்லாமல், இந்திய ஆட்சிக்குட்பட்டிருக்கிற இரண்டு தேசங்களுக்கு இடைப்பட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசால் முடியவில்லை என்றால் இந்திய அரசே எங்களை இந்தியாவிலிருந்து விடுதலை செய் என்றும், எங்கள் தேசங்கள் தனித்தனித் தேசங்களாக இருந்தால் நாங்கள் இந்தச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வோம் என்றும் அறிவித்தாக வேண்டும்.
அவ்வகையில் அறிவிப்பதோடு நிற்காமல், அக்கருத்தை வலியுறுத்தி இந்திய அரசை எதிர்த்துப் போராடியாகவும் வேண்டும்.
அந்த வகையில் இந்தியாவைப் புறக்கணிக்கிற, எதிர்க்கிற சூழல்களுக்கிடையில்தான் இரண்டு தேசங்களுக்கும் இடையில் பகைமை மாறி, ஒற்றுமை ஏற்பட முடியும். அவ் ஒற்றுமை இந்திய, வல்லரசிய ஆளுமைகளை எதிர்க்கப் பயன்படவும் முடியும்.
இதற்கிடையில் தமிழகத்தில் உடுப்பி விடுதிகள், பெங்களூர் ஐயங்கார் பேக்கரிகள், ஆலுக்காசு நகைக் கடைகள் போன்றவை ஏராளமாக உருவாகிக் கொண்டிருப்பதும் உண்மைதான். கேரள இளைஞர்கள் திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் வேலைகளில் வந்து குவிவதும் உண்மைதான்.
அவற்றின் சுரண்டல்களும், விரிவும் தடுக்கப் படவும், நிறுத்தப்படவும் வேண்டும் என்பதும் தேவையானதுதான்.
ஆனால் அவற்றை விட முகாமையாக விரட்டப்பட வேண்டியவை அமெரிக்க ஸ்டெர்லைட்டும், பெப்சி, கோக் நிறுவனங்களும் இல்லையா? பிரித்தானிய, செர்மானிய, சப்பானிய, கொரிய போன்ற வல்லரசிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பரப்பியிருப் பதைத் தடுத்து நிறுத்துவது முகாமையில்லையா? 
தகவல் தொழில் நுட்பம் எனும் பெயரில் தமிழகப் பெரு நகரங்களில் எல்லாம் அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் அடிவருடி ஆளுகைகள் சுரண்டிக் கொழுக்கின்றனவே அவற்றை விரட்ட வேண்டாமா?
அங்குப் பணியாற்றும் பல தேச, பன்னாட்டு ஆண்கள் பெண்கள் கொழுத்த வருவாயில் குடிப்பதும், கும்மாளமிடுவதுமாய் அரைகுறை ஆடைகளுடன் அலைந்து தமிழகப் பண்பாட்டையே பாழாக்குகிறார் களே! அவற்றைத் தடை செய்ய வேண்டாமா?
நெய்வேலி நிலக்கரி, நரிமணம் கன்னெய் (பெட்ரோலை) சேலம் இரும்பு எனத் தமிழகத்தில் கிடைக்கும் அரிய கனிம வளங்களையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு போகிறதே இந்திய அரசு, அதைத் தடுத்து நிறுத்தித் தமிழகத்திற்காக ஆக்க வேண்டாமா?
ஆக இவற்றில் எவை முதன்மையானவை?
வல்லரசுகளும், இந்திய அரசும் தம் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தமிழகத்தையே ஒட்டச் சுரண்டிக் கொள்ளையடித்துச் செல்லுகிற வகையில் தமிழக நிலத்தை, உழவை, தொழில்களைப் பாழடிக்கவும் செய்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தி விரட்டி அடிப்பது முதன்மையானதா?
அல்லது,
அண்டைத் தேசங்களில் இருந்து ஊடுருவி வரும் சிறுவணிகர்களை, சிறு தொழில் முதலீட்டாளர்களை, வேலை தேடி வருவோரை விரட்டுவது முதன்மை யானதா?
பின்னவர்கள் வந்தேறுவதை எதிர்க்கவோ, தடை செய்யவோ வேண்டாம் என்பதல்ல நம் கருத்து. ஆனால், அது முதன்மையானதல்ல என்பதே நம் தருக்கம்.
இந்திய, வல்லரசிய ஆளுமையை, சுரண்டல்களை வேரறுக்கிற, விரட்டியடிக்கிற அடிப்படை முதன்மைப் பணியைச் செய்யாமல் விட்டு விட்டு மற்றதைச் செய்வோமானால் அச் செயல்களெல்லாம் இந்திய, வல்லரசுகளின் ஆளுமையை வளர்ப்பதற்கே பயன்படும்.
இதனால் தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தின் முன் நகர்வில் சிக்கல்களே ஏற்படும் என்பதைத் தமிழ்த் தேசிய இயக்கத்தினர், கருத்தாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மலையாளிகளை வெளியேற்றுவோம்! வெளியாரை வெளியேற்றுவோம்! என்பவை அப்போதைய அளவில் அரிப்புகளைச் சொரிந்து விடுகிற நிறைவைத் தரலாமே அல்லாமல், அவை தமிழ்த் தேச விடுதலை அரசியலுக்கான திட்டமிட்ட நகர்வாக இருக்காது.
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்!''
எனவே, தோழர்கள் இவை குறித்தெல்லாம் அக்கறையெடுத்துச் சிந்திக்க வேண்டுமாய் வலியுறுத்துவது கடமையாகின்றது.

தோழன் ஒசாமா பின்லேடன் - கட்டற்ற தேசத்தின் கலகக்காரன்



உலகத்தின் மிகப்பெரிய பயங்கரவாதி கொல்லப்பட்டான். உலகத்தின் ஊடகங்கள் அனைத்தும் மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கின்றன. நடுநிலையாளர்களோ முதல் பயங்கரவாதி அமெரிக்க வல்லாதிக்கம்தான், இரண்டாவது பயங்கரவாதிதான் பின்லேடன் என்றும் பெருங்கதையாடிக் கொண்டிருக்கிறார்கள். பழிக்குப்பழி வாங்கிவிட்டதாக அமெரிக்க அதிபரும் அமெரிக்க மக்களும் துள்ளிக்குதிக்கிறார்கள். நெப்டியூன் ஈட்டி என்னும் அந்த நடவடிக்கையில் பங்குபெற்ற அத்தனை கடற்படை வீரர்களும் அமெரிக்க தேசத்தின் மற்றும் உலகத்தின் மாபெரும் வீரர்களாக ஊதிப்பெருக்கப்படுகின்றனர். இரண்டு நிமிடங்களில் தொண்ணூறு தண்டால் எடுப்பார்கள் என்றும் அடுத்த இரண்டு நிமிடங்களில் அய்ம்பது தடவை உக்காந்து உக்காந்து எழுந்திருக்கும் பயிற்சியையும் செய்வார்கள் என்றும் இன்னும் பலபல பயிற்சிகள் செய்து உடலையும் மனதையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஆகும் செலவு மட்டும் பல கோடிகளைத்தாண்டும் என்றும் இந்த அமெரிக்க சூரப்புலிகளைப் பற்றிய பல கட்டுக்கதைகள் உருவாகின்றன.

அமெரிக்க உளவு நிறுவனமான சிஅய்ஏ கூட குப்புறக்கிடந்த தன் மானத்தை தூக்கிநிறுத்தி வெற்றி வெற்றி என்று கூவிக்கொண்டிருக்கிறது. புல்தடுக்கி பயில்வான்கள் இந்தா செயிச்சோம்டம்ல என்று வீரக்கதை பாடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னும் சில வருடங்களுக்கு ஆங்கிலப்படம் பார்க்கவென மழைக்குக்கூட திரையரங்குப்பக்கம் ஒதுங்க முடியாது. அனைத்து ஆங்கிலத்திரைப்பட இயக்குனர்களும் இந்தா பாருடா எம் அமெரிக்க வீரத்தை என்று ஓராயிரம் கலிங்கத்துப்பரணிகளை ஆங்கிலத்தில் இந்த அமெரிக்க சீல்களைப்பற்றி பாட ஆரம்பித்துவிடுவார்கள். எத்தனை பதவிகளோ பட்டங்களோ? நம்ம ஊரு வீரப்பனை மயக்கமருந்து கலந்து பிடித்த விசயகுமாரும் செந்தாமரைக்கண்ணனும் கிடைத்த பணத்தை என்ன செய்வது எப்படி செலவு செய்வது என்று அருணாச்சலம் பட ரேஞ்சில் முழி பிதுங்கிக்கிடக்கும்போது இந்த அமெரிக்க சீழ்கள், ச்சீ அமெரிக்க சீல்கள் கிடைக்கும் பணத்தில் வளர்ப்பு மகன் கல்யாணம் ரேஞ்சில் செலவளித்தாலும் இன்னும் பத்து தலைமுறைக்கு பணம் அப்படியே இருக்கும்.

osama_601
ஒருபக்கம் இப்படி ஒரு கொண்டாட்டங்கள் தூள்கிளப்பிக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கத்தில் இசுலாமியச்சமூகம் அஞ்சலிக்கூட்டங்களை நடத்திக்கொண்டிருக்கிறது. காசுமீரத்தை சேர்ந்த நம் அருமைத்தோழர் செயது அலி கிலானி ஒசாமா பின்லேடனை தியாகி (காசுமீர் விடுதலைக்காக நான் அங்குசென்று போராளியாக போராட விரும்புகிறேன் என்று முன்பு ஒருமுறை சொல்லியிருந்தார் ஒசாமா) என்று சொல்லி அவர் நிராயுதபாணியாக இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து அஞ்சலிக்கூட்டம் நடத்தியிருக்கிறார். இன்னும் பல இசுலாமிய நாடுகள் கனத்த மௌனத்தை சுமந்தாலும் ஏமன், சிரியா, பக்ரைன் போன்ற சில நாடுகளில் இசுலாமியத்தோழர்கள் அஞ்சலிக்கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள்; இன்னும் நடத்திவருகிறார்கள்.

ஆனால் நடுநிலையாளர்கள் என்று சொல்லிக்கொள்கிறவர்கள் கடப்பாறையை முழுங்கியவர்கள்போன்று இன்னும் நட்டுக்குத்தாக நின்று கொண்டு ஓசாமா அப்பாவி மக்களை கொன்றதால் அவர் பயங்கரவாதிதான் ஆனால் அந்த பயங்கரவாதியை உருவாக்கியது அமெரிக்க ஏகாதிபத்தியம்தான் என்று பிலாக்கனம் பாடிக்கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையாக அஞ்சலிக்கூட்டம் நடத்தவோ அந்த மாபெரும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வீரனுக்கு ஒரு மெழுகுவர்த்தி ஏத்தவோ இந்த நடுநிலையாளர்கள் குழாம் தயாராகயில்லை. மனிதஉரிமை புடுங்கிகள் நிராயுதபாணியாக இருந்த பின்லேடன் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கவோ அல்லது அமெரிக்கவீரர்கள் இந்த நடவடிக்கைக்கு கிளம்பும்போதே பின்லேடனைக்கொல்லுமாறு கட்டளையிடப்பட்டார்கள் என்று அமெரிக்க அதிகாரிகளே சொல்வதைக் கண்டிக்கவோ இவர்கள் தயாராகயில்லை. அதுபோன்ற நினைப்பு இவர்களின் அறம் அழிந்த போன மனதிற்கு வந்ததா என்றே எனக்கு அய்யமாகயிருக்கிறது. அப்படி ஒரு போரியல் மரபுகளும் அறமும் அற்றுப்போன ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த அறமும் நீதியும் அற்றுப்போன அரசிடம்தான் நாம் மீண்டும் மீண்டும் நீதியையும், அறத்தையும் வேண்டி நிற்கவேண்டியிருக்கிறது என்பதை வாசகர்கள் நினைவில் கொல்லவேண்டும். நிற்க.

ஒசாமா பின்லேடன் மிகப்பெரிய பணக்கார சௌதி குடும்பத்தை சேர்ந்தவர். அமெரிக்க வல்லாதிக்கம் இசுரேலிய நாட்டுடன் சேர்ந்து கொண்டு எண்ணெய் வளம் கொண்ட அரேபிய நாடுகளை கொள்ளையடிப்பதற்காக, அதற்கு இடையூறாக இருக்கும் இசுலாமியர்களை கொன்றொழிக்கும் உண்மையை அறிந்ததனால் வேறு வழியின்றி அமெரிக்காவிற்கு எதிரான மாபெரும் போரில் இறங்கியவர். முதன்முதலில் இவர் ஆப்கானிசுதானில் ரசியாவின் பாட்டாளிவர்க்க கட்சி சமூக சனநாயகவாதிகளாக திரிந்து அதன்பின்பாக ஆப்கன் ஆக்கிரமிப்பை நடத்தியபோது அதை எதிர்த்து ஆப்கானிசுதானில் சென்று ஆப்கானிய நாட்டவராகவே வாழ்ந்து அம்மண்ணிலேயே வீரமரணமடைந்தவர். இவர் ஒரு கட்டிடக்கலை பொறியியல் பட்டம் பெற்றவர் என்றும் ஒரு செய்தி உள்ளது.

osama_340சௌதியில் பெரும் பணக்கார குடும்பத்தில் பிறந்த ஒசாமா பின்லேடனை பாலத்தீனிய விடுதலைப்போராட்டம் கவர்ந்திழுக்கிறது. அமெரிக்க இசுரேலயக்கூட்டை அவர் தெள்ளத்தெளிவாக புரிந்து கொள்கிறார். மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் இருக்கும் எண்ணெய் வளங்களை தனது பகாசுர நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பதற்காக அமெரிக்க அரசு மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் இருக்கும் இசுலாமிய நாடுகளில் தனக்கு தலையாட்டும் பொம்மை அரசுகளை ஆட்சியில் அமர வைக்கிறது (உதாரணம் ஆயிரம் அடித்தாலும் வலியைத்தாங்கிக்கொண்டு ஒபாமாவை தன் மகன் என்று கடித முத்தம் கொடுக்கும் நம்ம லிபிய அதிபர் முபாரக்) அல்லது நிலவுகிற அரசை சனநாயகத்தை இறக்குமதி செய்கிறேன் பேர்வழி என்னும் பெயரில் படையெடுத்து காலி செய்வது, பின்பு ஒரு பொம்மை நீதிமன்றத்தை நிறுவி அந்த இசுலாமிய அதிபரை தூக்கிலிடுவது அல்லது தூக்கியெறிவது, இல்லாது போனால் சிஅய்ஏ மூலமாக உள்நாட்டு எதிர்ப்பாளர்களுக்கு பணத்தையும் ஆயுதத்தையும் வாரி வழங்கி, நிலவுகிற ஆட்சிக்கு எதிராக ஊதிப்பெருக்கப்பட்ட உள்நாட்டு புரட்சிக்குழுவை உருவாக்குவது. இந்த மூன்று விதமான திருவிளையாடல்களை நிகழ்த்துவதன்மூலம் தமக்கு சாதமான ஆட்சியைக்கொண்டு வருவது அல்லது தமக்கு முற்றிலும் எதிரான ஆட்சியை தூக்கி எறிவது போன்ற செயல்களில் அமெரிக்க அரசு ஈடுபட்டது. இதற்கு இதர அய்ரோப்பிய நாடுகள் எரியும் வீட்டில் பிடுங்கியது வரை லாபம் என்னும் பெயரில் தமது பங்கையும் சீரும் சிறப்புமாக செய்து வருகின்றன. இந்த மொள்ளமாரிகளுக்கு இசுரேலிய தெள்ளமாரி ‘யெஸ் பாஸ்’ என்னும் பாணியில் தொண்டூழியம் செய்து தமது தேசிய நலன்களையும் ஆயுதபலங்களையும் பெருக்கி வருகிறது.

மேற்சொன்னது போன்ற நிலைமைகளில் தான் நமது ஒசாமா களத்திற்கு வருகிறார். சூடானில் இருக்கும் மேற்குலக நாடுகளின் தலையாட்டி அரசை தூக்கியெறிய ஒரு மதரீதியான புரட்சிக்கு முயற்சி செய்கிறார். அந்நாடு அவரை அமெரிக்க அரசு கொலை செய்வதற்கு உதவி செய்ய தயாராகயிருந்த நிலையில் அவர் அந்நாட்டை விட்டு வெளியேற நேரிடுகிறது. சௌதி அரேபியா இவரின் குடிமகன் அந்தஸ்தை ரத்து செய்கிறது. அவரது செல்வந்தக்குடும்பமும் இவரை ‘யாரும் இவனோடு தண்ணி வெண்ணி புலங்கக்கூடாது’ என்று நாட்டாமை விசயகுமார் பாணியில் தள்ளிவைக்க சர்வதேச அனாதை ஆகிறார் ஒசாமா. இந்நிலையில் 1979ல் ரசியாவின் சமூக ஏகாதிபத்திய அரசு ஆப்கானிசுதானின் மீது படையெடுக்க, அந்த அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்து தமது இசுலாமிய மத நாடுகளில்  ஒன்றான ஆப்கானை காக்கவேண்டுமென்பதற்காக இவர் ஆப்கானிற்கு பயணப்படுகிறார். (கதை நமது சே குவேராவின் கதை போலவே இருக்கிறதா? என்ன சேகுவேரா அர்ஜெண்டினாவில் பிறந்து கியூபாவின் புரட்சியில் பங்கேற்று பின்பு பொலிவியாவின் புரட்சிக்கு உதவி செய்வதற்காக சென்று சிஅய்ஏவால் கைது செய்யப்பட்டு சுட்டுக்கொல்லப்படுகிறார்).

சேகுவேராவின் வீரஞ்செறிந்த புரட்சிகர வரலாற்றில் ஓரளவு வர்க்கப்பார்வையிருக்கும். அவர் பிறந்து வளர்ந்த நாடுகள் மற்றும் காலங்களில் வர்க்கரீதியான ஒடுக்குமுறை இருந்தது. ஆனால் ஒசாமா இருந்த நாடுகள் மற்றும் காலங்களில் கடுமையான மதரீதியான ஒடுக்குமுறைகளும், வர்க்கரீதியான ஒடுக்குமுறைகளும் இருந்தன. நேரடியாக, மேலோட்டமாக அவரின் கண்ணுக்கு மதரீதியான ஒடுக்குமுறையே (அன்றைய பாலத்தீனியப்போராட்டத்திலிருந்து இன்றைய லிபியாவரை) பட்டது. எனவே இவர் மதரீதியான எதிர்ப்பை கையிலெடுத்துக்கொண்டார். ஆனால் இருவருமே ஏகாதிபத்திய எதிர்ப்புவாதம் என்பதில் அணிசேர்கிறார்கள். அதுதான் முக்கியமான விடயம்.

சமீபத்தில் அளித்த செவ்வியொன்றில் இந்திய பொதுவுடமைக்கட்சி (மாவோவியர்)யின் பொதுக்குழுச்செயலர் தோழர் கணபதி ‘இந்த இந்திய அரசை நாங்கள் உறுதியாக தூக்கியெறிவோம்’ என்றார். அதுபோக அல்குவைதா போன்ற இயக்கங்களுக்கும் மாவோவியர்களுக்கும் இடையேயுள்ள உறவு பற்றி கேட்கும்போது நெருப்பில் விரலைவைத்ததுபோல் பதறி பதிலளிக்கிறார். ஆனால் இன்றைய சூழலில் எப்படி ஒரு வர்க்க ஸ்தாபனம் பல்லாயிரக்கணக்கான நேர் மற்றும் எதிர்மறை அனுபவங்களோடு (பாரிஸ் கம்யூன் தொடங்கி இன்றைய நேபாளம் வரை) நடைபோடுகிறதோ, அதுபோலவேதான் இன்றைய ஏகாதிபத்தியமும் ஆளும்வர்க்கங்களும் ஒரு கூட்டை ஏற்படுத்தி எப்படி ஒடுக்கப்படும் மக்களின் இயக்கங்களை ஒடுக்குவது என்பதில் ஓயாது சிந்தித்து செயலாற்றுகின்றன.

எப்படி அரசியல்ரீதியாக ஆளும் வர்க்கங்கள் சார்க் என்னும் பெயரில் ஒருங்கிணைந்ததுவோ, அதைப்போல ஒடுக்கப்படும் மக்களுக்கான ஆயுதமேந்தும் இயக்கங்களும் சிகம்போசா என்னும் பெயரில் ஒரு அரசியல்ரீதியான ஒருங்கிணைப்பு ஏற்படுத்தின. இப்போது வெறும் அரசியல்ரீதியான, பண்பாட்டு ரீதியான, பொருளாதாரரீதியிலான கூட்டுக்கள் மட்டும் தெற்காசியா பிராந்தியத்தில் எழும் போராட்டங்களை ஒடுக்கப் போதாது என்பதால் ராணுவக்கூட்டொன்றும் உருவாகி விட்டது. அதனால்தான் இந்திய அமெரிக்க ராணுவக்கூட்டுப்பயிற்சி, இந்திய இலங்கை ராணுவக்கூட்டுப்பயிற்சி போன்றவைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதுபோதாதென்று போர்க்களங்களில் இந்த ஆளும்வர்க்கக்கூட்டு ஒன்றொன்றுக்கொன்று உதவிக்கொண்டதை நாம் ஈழத்தில் நேரடியாகவே கண்டோம்.

என்னதான் மக்கள் பலம் இருந்தாலும், (இதற்காக மக்கள் பலத்தை நான் குறைவாக எடைபோடுகிறேன் என்று வாசகர்கள் தயவுசெய்து புரிந்து கொள்ளவேண்டாம்) மாபெரும் படையை தன்னகத்தே கொண்டுள்ள இந்த இந்திய அரசை தோழர் கணபதி சொன்னதுபோல் உறுதியாக ராணுவரீதியாக தூக்கியெறிவது சாதாரண விடயமல்ல. அதிலும் மாறிவரும் உலக சூழல்களுக்கேற்ப, முக்கியமாக செப்டெம்பர் 11க்குப்பின்பு (நான் சோபாசக்தி -அ.மார்க்சு கும்பலின் ‘ஆயுதப்போராட்டம் இனிமேல் ஒத்துவராது’ என்ற கருத்தாக்கத்தோடு கடுமையாக முரண்படுகிறேன்) அய்க்கிய முன்னணியின் அணிச்சேர்க்கை என்பது மிக மிக முக்கியம். எனவே வெறும் பாட்டாளி வர்க்க, விவசாய, தேசிய முதலாளிகளின் அணிச்சேர்க்கையோடு இன்னபிற இயக்கங்களின் அணிச்சேர்க்கையும் இந்த இந்திய ஆளும் வர்க்கத்தை தூக்கியெறிய நமக்குத் தேவைப்படும். உதாரணமாக இந்திய வெள்ளையரசை மாவோவியர்கள் நீண்டகால நோக்கில் இப்போது இதயப்பகுதியில் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். உல்பா போன்ற தேசிய இயக்கங்கள் அந்தந்த தேசியப்பகுதிகளில் தாக்கிக்கொண்டிருக்கிறார்கள். அதுபோக இந்திய அரசு வீழ்த்தப்பட்டு ஒரு புதிய சனநாயக அரசு ஒன்று கொண்டு வரப்படுமென்றால் இந்தியாவின் மக்கள்தொகைப்படி உலகின் ஆறில் ஒருவர் அந்த புதியசனநாயக அரசின் உறுப்பினராகயிருப்பார்.

இதை எந்நிலையிலும் உலக ஏகாதிபத்தியங்கள் அனுமதிக்கப்போவதில்லை. எனவே உலக ஏகாதிபத்தியங்களுக்கு எதிராகயிருக்கும் அத்தனை சக்திகளும் ஒருங்கிணைக்கப்படவேண்டும். உதாரணமாக அல்குவைதா போன்ற இயக்கங்கள் மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் மேலும் காசுமீரத்தின் விடுதலைக்காகப்போராடும் அத்தனை இயக்கங்களையும் உள்ளடக்கிய அய்க்கிய முன்னணியே இந்திய வெள்ளை அரசை தூக்கியெறிய உதவும். இப்படிப்பட்டதொரு தொலைநோக்குப்பார்வையே நமக்குத்தேவை. இல்லையேல் இந்திய அரசு எந்த மனிதஉரிமைகளையும் கண்டுகொள்ளாமல் இசுரேலின் மொஸாட் இலங்கை இனவாத அரசுக்குச் சொன்னதை அப்படியே இந்தியாவிலும் செயல்படுத்தும். அதாவது ‘பத்து தமிழர்களைக்கொல்லுங்கள், அதில் ஒருவரேனும் விடுதலைப்புலி இருப்பார்’, அதுபோல இந்திய வெள்ளை அரசு பாட்டாளிவர்க்க தலைமையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் போர்தொடுத்து ‘பத்து பழங்குடியினரை கொல்லுங்கள் அதில் ஒருவரேனும் மாவோவியர் இருப்பார்’ என்று படையெடுத்து அழிக்கும். இதிலிருந்து எங்ஙனம் நம் இந்திய பொதுவுடமைவாதிகளுக்கு அல்குவைதா பயன்படும் என்பது விளங்கும்.

ஆம் உண்மைதான். ஒசாமா அமெரிக்காவால் உருவாக்கப்பட்டவர்தான். அல்குவைதா மக்களோடு இயைந்து உருவாக்கப்படாமல் அமெரிக்காவால் தனது சுயதேவைகளுக்காக திடுமென ஊதிப்பெருக்கப்பட்ட அமைப்புதான். ஆனால் அதன் இன்றைய உடனடித்திட்டம் என்ன என்பதுதான் நமது தேவை. அவைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தீவிர எதிரிகள், நாம் அதை பயன்படுத்திக்கொள்ளவேண்டிய தேவையில் இருக்கிறோம். இன்று எதிரி என்பவன் ஒரு தேசம் என்ற அளவிலோ அல்லது நாடு என்ற அளவிலோ இல்லாமல் சர்வதேசிய அளவில் வியாபித்து நிற்கிறான். ஒரு முற்போக்கு நாடுகூட உருவாக விடாமல் கண்ணுங்கருத்துமாக கண்காணிக்கிறான். எங்கெங்கு மக்கள் யுத்தம் நடந்தாலும் அதை அழிக்க உடனடியாக தமது படைகளை அனுப்புகிறான். அவன் எதிர்ப்புரட்சியை சர்வதேசமாக்குகிறான். எனவே நாம் புரட்சியை சர்வதேசியமாக்க வேண்டிய நிலையிலுள்ளோம். மாறாக இன்னும் ஒசாமா பயங்கரவாதி என்று கதைப்பது நீண்டகாலநோக்கில் உலக ஏகாதிபத்தியத்தை வீழ்த்துவதற்கான, அதிலும் ராணுவரீதியாக வீழ்த்துவதில் எந்த பலனையும் தராது.

ஒருமுறை நான் மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தியிடம் அமைப்பு பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்னார். “தோழர் நாங்கள் மே பதினேழு இயக்கத்தை இன்னும் ஒரு அமைப்பாக கொண்டுவரவில்லை, அதை ஒரு மேலோட்டமான (சிறந்த வார்த்தை இருந்தால் போட்டுக்கொள்ளவும்) அமைப்பாக, போராட்டம் நடத்துவதற்கான, ஈழப்பிரச்சனைகளை, ஈழமக்களின் நியாயத்தை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஒரு குடைபோன்றதொரு அமைப்பாகத்தான் வைத்திருக்கிறோம். அதனால்தான் எங்கள் போராட்டங்களில் பெருந்திரளான மக்கள் கலந்து கொள்கிறார்கள். இது ஓர் அமைப்பாகயிருந்திருந்தால் இதுபோன்றதொரு மக்கள் குழாம் எங்கள் ஆர்ப்பாட்டங்களுக்கு வந்திருக்காது” என்றார்.

அது உண்மைதான். ஓர் இயக்கம் ஒரு எதிர்ப்பியக்கமாகயிருக்கும் வரை அது வெறும் பரந்துபட்ட மக்கள் திரள் அமைப்பாகயிருந்தால் போதுமானது, ஏனெனில் அதுவே ஒரு பரந்துபட்ட மக்கள்திரளை தம்முள் இணைத்துக்கொள்ளும் ஆற்றல் பெற்றதாகயிருக்கும். ஆனால் எப்போது ஒரு அமைப்பு நிலவுகின்ற வெள்ளையரசை சுக்குநூறாக உடைப்பதோடன்றி புதியதொரு அரசைக்கட்டவேண்டும்; புதியதொரு சமூகத்தை படைக்கவேண்டுமென்ற ஆசைப்படுகிறதோ அப்போது அது உறுதியாக ஒரு கெட்டிப்படுத்தப்பட்ட உருக்கு போன்றதொரு அமைப்பாக உருவெடுக்கவேண்டிய தேவையிருக்கிறது. ஒசாமாவிற்கு புதியதொரு அரசுருவாக்கம் (அது இசுலாமிய சட்டதிட்டத்தை அடிப்படையாகக்கொண்டது) பற்றிய எண்ணங்கள் இருந்தாலும், அவருக்கு அதுபற்றிய அனுபவங்களோ, அல்லது அதுபற்றிய அவாக்களோ இல்லை. முல்லா முகமது ஓமருக்கு அதுபற்றிய அனுபவங்கள் இருந்தாலும், ஒசாமா ஆப்கானில் சென்று தங்க ஆரம்பித்த சில ஆண்டுகளிலேயே அந்நாடு அமெரிக்காவால் ஆக்கிரமிக்கப்பட்டது. அதுபோக முல்லா முகமதுவின் ஆட்சி அப்போது நிலவிய சார்பு உற்பத்திமுறையை பெருமளவு ஒன்றும் மாற்றிவிடவில்லை. அவர்களின் பிரக்ஞை எல்லாம் சமூக, பண்பாட்டுத்தளங்களிலேயே (கொச்சையாக சொல்வதென்றால் மேற்கட்டுமானங்களிலேயே) இருந்தது.

ஆனால் இந்த பரந்துபட்ட அல்குவைதா என்னும் அமைப்பு தானாக உருவாகியதா அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியம் உலக இசுலாமிய மக்களை ஒட்டுமொத்தமாக எதிர்த்ததன் மூலம் உருவாக்கியதா, அல்லது ஒசாமா பின்லேடன் முனைந்து இதுபோன்ற அமைப்பை உருவாக்கினாரா அல்லது இந்த அனைத்துக்காரணிகளும் இதுபோன்ற அமைப்பு உருவாக்க காரணமாகயிருந்ததா என்பது பற்றி நமக்குத் தெளிவான புரிதல் இல்லாது இருந்தாலும் ஒன்று மட்டும் உறுதி, உலகின் ஆயுதந்தாங்கிய இசுலாமியர்கள் தம்மை எந்தவித அமைப்பாக்கமும், வென்றெடுத்தலுமின்றி அல்குவைதாவின் கிளைகளாக கருத ஆரம்பித்தார்கள். இதுதான் அல்குவைதாவின் வெற்றியின் துவக்கம். உலக முழுவதிலும் இருக்கக்கூடிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது தாங்கொணா வெறுப்பைக்கொண்டிருந்த போராட்டங்கள் அல்குவைதா என்னும் குடையின்கீழ் அவர்கள் விரும்பியோ விரும்பாமலோ கொண்டுவரப்பட்டன. சாத்தியமான இடங்களில் எல்லாம் எந்தவித அமைப்பாக்கல் நிபந்தனையுமின்றி இதுபோன்ற போராட்டங்களுக்கு ஆயுத, பண மற்றும் தொழில்நுட்ப உதவிகளை அல்குவைதாவினர் வழங்கினர்.

osama_600
எப்படி சகாப்தம் படைத்த ஸ்டாலின்கிராடில் ஒரு ஜெர்மானிய போர்வீரன் கூறியபடி ரசியாவின் ஒவ்வொரு வீடும் ஒரு கோட்டையாகவும், ஒவ்வொரு தெருவும் ஒரு போர்க்களமாகவும் இரண்டாம் உலகப்போரில் மாறியதோ, எப்படி அதை தோழர் ஸ்டாலின் மாற்றினாரோ அப்படி ஒசாமாவும் அவரின் அல்குவைதாவும் அனைத்து இசுலாமியர்களையும் ஒரு பொது எதிரிக்கெதிராக போர்வீரனாக மாற்றினார். அந்தப்போர்வீரர்கள் அவர்களின் முடிவை அவர்களே எடுத்தபடி அவர்களுக்கு சாத்தியப்பட்டபடி அவர்களினால் ஆன அளவில் அங்கங்கே கொரில்லா தாக்குதலையும், தற்கொலைத் தாக்குதலையும் தொடுத்தார்கள். வீட்டிலிருந்து தோசை சுட்டுக்கொண்டு வருவதுபோல் ஒரு குண்டை செய்து கொண்டுவந்து மேற்குலக நாடுகளில் போட்டுத்தாக்கினார்கள். இதில் பச்சை பாலகனிலிருந்து பல்லுப்போன தாத்தாவரை அடக்கம். அதிலும் பெண்போராளிகளின் பங்கு அலாதியானது.

இதுபோன்றதொரு குடைபோன்ற அமைப்பில் ஒரு நம்பிக்கையான விடயம் என்னவெனில் தலைமை பற்றிக் கவலைப்பட தேவையில்லை. தலைமை ஒரு கட்டளை மய்யமாகவில்லாமல், ஒரு தகவல் பரிமாற்று மய்யமாகயிருக்கும். ஒரு சாதாரண தபால்காரனின் வேலைதான் ஒபாமாவுக்கு. அதனால்தான் கொரில்லா போரின் விதிகளை எல்லாம் மீறி ஒசாமா ஒரு இடத்தில் சுமார் அய்ந்து ஆண்டுகள் தங்கியிருந்தது. கொரில்லா யுத்தத்தில் முதல் விதியே (அது மூலவுத்திரிதியிலான காடுகளாக இருந்தாலும் சரி அல்லது நகர்ப்புற கொரில்லா யுத்தமாக இருந்தாலும் சரி) ஒரு இடத்தில் இருக்கக்கூடாது என்பதுதான். முக்கியமாக நகர்ப்புற பொறுப்பாளர்கள் நகரின் ஒரு இடத்தில் தங்கியிருந்தாலும் அவர்கள் அந்த இடத்தில் முக்கியமாக அந்த வீட்டில் மிஞ்சிப்போனால் ஆறுமாதம் அல்லது ஒரு வருடம் அதற்கு மேல் தங்கவே மாட்டார்கள். ஏனெனில் நகர்ப்புறம் என்பது ஒப்பீட்டளவில் எதிரி வலுவாகயிருக்கும் இடம்.

தோராபோரா காடுகளின் அங்குலங்களை கொரில்லா யுத்தத்தின்படி நடையால் அளந்த ஒசாமாவிற்கு இந்த கொரில்லா யுத்தத்தின் அரிச்சுவடி அத்துப்படி. ஆனாலும் அவர் ஏன் அங்கே தங்கியிருந்தார் என்பதற்கான விடை என்னைப் பொறுத்தளவில் அவர் பரந்துபட்ட இசுலாமிய மக்களின் போராட்டத்திற்கு ஒரு குறியீடாக மாறவிரும்பினார் என்பதுதான். முக்கியமாக இதுபோன்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களில் இதுபோன்ற குறியீடுகளும் வழிபாட்டு நபர்களும் அவசியம். உதாரணம் சே குவேரா. எனவே ஒரு வீரமரணத்தின்மூலம் (எப்படி பெர்சியன்களுக்கெதிரான வீரமரணத்தின்மூலம் முந்நூறு ஸ்பார்டன்களும் ஸ்பார்டா மக்களின் அடுத்தகட்ட போராட்டத்திற்கு குறியீடாகி அந்தப்போரை எழுச்சிக்குள்ளாக்கினார்களோ) ஒரு போராட்டக்குறியீடாக மாறி போராட்டத்தை எழுச்சியோடு முன்கொண்டு செல்ல ஒசாமா உதவியிருக்கிறார். அதுபோக ஒரு நெகிழ்வான அமைப்பொன்றை கட்டியதன் மூலம் பெருவாரியான மக்களை தமது போராட்டத்தில் இணைத்துக்கொண்டார். வெறும் குறியீடுகளையும் தாண்டியும் மிளிர்ந்தார்.

ஈழப்போராட்டம் ஒரு கட்டுக்கோப்பான அமைப்பின் கீழ் நடந்தததன் விளைவாக இன்று போராட்டங்கள் அன்று போல் இல்லாமல் ஒரு முடிவற்ற சாத்வீகமான முறையில் நடந்து கொண்டிருக்கிறது. தமது தேசிய இனத்தின் எல்லைகளுக்கு மட்டுமல்லாமல் சாத்தியமான அத்தனை வழிகளிலும் ஒரு போராட்டம் நடைபெறவேண்டும். உதாரணமாக பெரு பொதுவுடைமைக்கட்சி பாட்டாளி வர்க்கத்தை அடிப்படையாகக்கொண்டாலும் அதன் தலைமைக்குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதும், உதாரணமாக தோழர் கொன்சாலா கைது செய்யப்பட்டதும் இன்னபிற உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டதும் அப்போராட்டமானது முன்புபோல் வீச்சாக இல்லாமல் போனது. அதுபோக என்னதான் பொதுவுடமைவாதிகள் சர்வதேசவாதிகள் அல்லது சர்வதேச அனாதைகள் என்று சொல்லிக்கொண்டாலும் தோழர் சுனிதிகுமார் கோசு சொன்னதுபோல் அவர்கள் தேசியவாதிகளாகத்தான் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக தோழர் கொன்சாலா கைது செய்யப்பட்டதும் இந்திய மாவோயிஸ்டுகளும், நேபாள மாவோயிஸ்டுகளும் வெறும் அறிக்கைகளோடும், கண்டன ஆர்ப்பாட்டங்களோடும் நிறுத்திக்கொண்டார்களே தவிர ஒன்றும் அரசுக்கெதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்திவிடவில்லை. அதுபோல இந்திய மாவோவியர்களின் தலைவர்களான ஸ்யாம், மகேசு, முரளி ஆகியோர் கொல்லப்பட்டபோது நேபாள மாவோவியர்கள் ஒன்றும் போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்திவிடவில்லை. வெறும் ஆதரவு என்ற தளத்தோடு இவர்களும், இவர்களின் மக்கள் ஆதரவு தளங்களும் நிற்கின்றன.

ஆனால் அல்குவைதா அப்படியில்லை. தேச எல்லைகளைக்கடந்த அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அதற்கெதிரான போரையும் சர்வதேசியமாக்கியிருக்கிறது. பரந்து பட்ட மக்களையும் போராட்டத்தில் இணைத்திருக்கிறது.

osama_203அதுபோக அம்பேத்கர் தலித்துகளைப் பற்றிப் பேசும்போது இந்திய ஒன்றியத்தில் அவர்கள் ஒரு தேசிய இனம் என்பார். ஸ்டாலினின் தேசிய வரையறைக்கு முன்பாகவும், இன்னபிற தேசிய இன வரையறைக்குள்ளாகவும், ஏன் இன்னுஞ்சொல்லப்போனால் தமிழ்த் தேசிய பொதுவுடமைக்கட்சியின் மொசைக் தேசிய இன வரையறைக்குள் கூட அம்பேத்காரின் தலித்துகள் ஒரு தேசிய இனம் என்னும் வரையறை சிக்காது என்றாலும் இந்த வரையறையே (ஈழத் தேசிய இனத்தை, அதன் விடுபடும் உரிமைகளை சிறிதளவும் மதிக்காமல் சிங்கள தேசிய இன பெருங்கதையாடலோடு இணைக்கும் அ.மார்க்சு-சோபாசக்தி கும்பல், தமக்குள்ளேயே பல்வேறு பண்பாட்டு முரண்பாடுகள் கொண்ட இலங்கை இசுலாமியர்களை ஒரு தேசிய இனமாக கதையாடி நிறுத்தும் முயற்சியின் சதி பற்றி தோழர் வளர்மதியிடம் பேசினால் அவர் இக்கும்பலின் ஈழ எதிர்ப்பு-சிங்கள ஆதரவு நிலைப்பாட்டை நன்கு விளக்குவார்) வெறும் கற்பிதமானது என்றாலும் இதற்கும் தேசிய அளவில் இல்லாமல் ஒடுக்குமுறை ரீதியிலான ஒற்றுமையுண்டு. உதாரணமாக உத்தரப்பிரதேச பகுஜன் சமாஜ கட்சியில் நம்மூரு சிவகாமி அய்ஏஎஸ் சேருவது போன்றவைகள்.

அதுபோன்ற ஒரு தேசிய இனமல்லாத அல்லது தேசிய இன வரையறைக்குள் அடங்காத சோகால்டு தேசிய இனமாக இசுலாமியர்களை அவர்களின் மேல் தாம் மேற்கொண்ட ஒடுக்குமுறைகளின் காரணமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கிவிட்டது என்று சொல்லலாம் (வாசகர்களே மீண்டும் சொல்கிறேன் இது கொச்சையான புரிதல்தான்.). சர்வதேச இசுலாமியர்களின் எதிர்ப்புணர்வு ஒரு மாதிரியாக கட்டமைக்கப்பட்டுள்ளது. அந்த எதிர்ப்புணர்வை அமைப்பாக்கியவர் நமது ஒசாமா பின்லேடன். நெகிழ்வான அமைப்பொன்றின் அமைப்பு அதிகாரமில்லா அல்லது அவ்வகையான அதிகாரத்திற்கு கட்டுப்படா அல்லது அமைப்பு அதிகாரமின்றி சுயேச்சையான அதிகாரமுடைய செயல்வீரர்களாக அனைத்து அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாள இசுலாமியர்களும் மாற்றப்பட்டார்கள். அதுபோன்ற கட்டற்ற அல்லது அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டமைத்த (கறாரான தேசிய இன வரையறைக்குள் கட்டுப்படாத) அமெரிக்க ஏகாதிபத்திய தேசிய இனமொன்று வேறுவழியின்றி அமெரிக்க மற்றும் அதன் அடிவருடி அரசுகளுக்கெதிராக ஒரு தெருச்சண்டையில் இறங்கியது.

அதுபோக இன்று ஆயுதப்போராட்டத்தின் சாத்தியமின்மை மற்றும் போதாமை போன்ற விவாதங்கள் முன்னணியில் இருக்கின்றன. ஆனால் அ.மார்க்சு போன்றோரின் விவாதங்கள் எந்த அடிப்படையும் இன்றி (ஆயுதப்போராட்டம் சாத்தியமா இல்லையா என்பது மூலவுத்தி பகுதிகளை அடிப்படையாகவும், பிரதான அம்சமாகவும் கொண்டே நடைபெறும். அப்படி ஒரு விவாதத்தை நடத்திவிட்டு தமது விவாதங்களுக்கு எந்த ஆதாரமும் இல்லாமல் அயர்ந்துபோய் சென்னையில் ஓய்வெடுக்கிறது புதியபோராளிகள் எனும் கலைப்புவாதக்கும்பல்) ஆயுதப்போராட்டமே இருபத்தொன்றாம் நூற்றாண்டிற்கு ஒத்து வராது என்று பேசுகிறது. இந்நிலையில் முக்கியமாக ஆயுதப்போராட்டத்தின் மூலவுத்திப்பகுதிகளான, வெள்ளை அரசு எந்திரத்தின் அதிகாரம் ஒப்பீட்டளவில் வீரியமின்றிக் காணப்படும் காடுகளை ஏகாதிபத்தியங்கள் வேண்டுமென்றே அழித்துவருகின்றன. இந்நிலையில் தோழர் கியாப்பின் மின்னல்வேக நடவடிக்கைகளான குறைவான மக்களைக்கொண்டு பெரியளவிலான எதிரிகளை அழிக்கும் கொரில்லா நடவடிக்கைகள் நகர்ப்புறங்களில் கடைப்பிடிக்கப்படவேண்டும். அது போன்றதொரு தாக்குதல்களை அல்குவைதா மிகப் பரந்தளவில் கைக்கொண்டதை நாம் கண்டோம். அதுபோக நகர்ப்புற நீண்டகால ஆயுதப்போராட்டத்தை துவக்கி வைத்தததில் ஒசாமாவின் பங்கு அபரிமிதமானது.

மக்களைக் கொன்றதால் ஒசாமா பயங்கரவாதி என்று சொல்பவர்களுக்கெல்லாம் பதில் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டியதில்லை. ஏனெனில் அவர்களுக்கு பல தசாப்தங்களுக்கு முன்னதாகவே தனது ஓரியண்டலிசம் என்னும் புத்தகத்தில் தோழர் எட்வர்டு செயது பதில் சொல்லிவிட்டார் “எம்மை நாகரிகமற்றவர்கள் என்று சொல்வதன்மூலம் அந்த மேற்கத்திய நாட்டவர்கள் தம்மை நாகரிகமானவர்களாகக் காட்டிக்கொண்டார்கள்” என்கிறார் அவர். அதுபோல ஒசாமா பின்லேடன் என்ற அந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை பயங்கரவாதியாக காட்டியதன்மூலம் தம்மை நாகரிகமானவனாக, தம் செயல்களை நாகரிக சமூகத்தின் செயல்களாக காட்டிக்கொண்டது மேற்கத்திய சமூகம். அந்த மேற்கத்திய ஆளும் வர்க்கங்களின் பார்வையை மூக்குக்கண்ணாடியாகக் கொண்டு உலகை பார்ப்பவர்கள் நமது முற்போக்குவாதிகள்.

அதுபோக இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் ஏகாதிபத்திய நாடுகளில் வாழ்கின்ற மக்களின் அரசியல் அறிவு என்பது மிக மிக முக்கியம். முதலாளித்துவ நாடாக பீத்திக்கொள்ளும் அமெரிக்கா (முதலாளித்துவம் என்பது நிலப்பிரபுத்துவத்தை விட ஒப்பிட்டளவில் மிகுந்த அரசியல் அறிவு பெற்றது. உதாரணமாக அரை நிலப்பிரபுத்துவ அரைக்காலனிய நாடான இந்தியாவில் நிலவும் உற்பத்தி முறையை விட அமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய நாட்டில் நிலவும் உற்பத்தி முறை மேம்பட்டது என்ற நோக்கில் அம்மக்களின் அறிவு என்பது ஒப்பீட்டளவில் மேம்பட்டதே. எனவே ஒப்பீட்டளவில் மேம்பட்ட அரசியல் அறிவு பெற்ற அம்மக்கள் தம் அரசு செய்யும் தவறுகளைக் கண்டித்தே ஆகவேண்டும். சமமற்ற இந்த வர்க்கப்போரில் நடுநிலைமை என்ற பெயரில் கதையாடிக்கொண்டிருப்பது எந்தப் பலனையும் தரா. ஒன்று அவர்கள் அமெரிக்காவின் அடாவடித்தனங்களை கண்டிக்கவேண்டும். அந்த அரசை தூக்கியெறிய போராட்டங்களில் இறங்கவேண்டும் அல்லது வேறு வழியற்ற அல்குவைதாவின் செயல்களை ஆதரிக்கவேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வீரப்பன் தம்பி அர்ச்சுனன் பேச்சுவார்த்தைக்கு வந்து அரசால் கொல்லப்பட்ட விவகாரத்தில் அரசியல் அறங்கள் பற்றி அ.மார்க்சு குறிப்பிடும்போது அவர் சொல்வார், ‘தனிமனிதனான வீரப்பன் (காட்டிலாகா அதிகாரி சீனிவாசனை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சுட்டுக்கொன்ற விவகாரம்) அறங்களைப் பின்பற்றாவிட்டால், இந்த அரசுக்கு போரியல் அறங்களை பின்பற்றவேண்டிய கடமையிருக்கிறது’ என்பார். ஆனால் தற்போது என்ன நடக்கிறதென்றால் அரசுகள் பயங்கரவாத ஒழிப்பு என்ற பெயரில் அரசியல் அறங்களை கைவிட்டு விட்டு அம்மணக்குண்டியாக களத்தில் நிற்கின்றன. ‘பத்து இசுலாமியர்களைக்கொல், ஒரு அல்குவைதா இருப்பான்’ என்பது போலல்லாமல் ‘ஒட்டுமொத்த இசுலாமியர்களையும் கொல் எண்ணெய் வளம் கிடைக்கும்’ என்ற நோக்கில் இசுலாமியர்களைக்கொல்வது அல்லது அம்பேத்கார் மொழியில் சொல்வதென்றால் மாநிற அமெரிக்க அடிமைகளை உருவாக்குவது என்று செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் முற்போக்காளர்களோ ‘அப்பாவி மக்களை செப்டம்பர் 11ல் கொன்றழித்ததால் ஒசாமா பயங்கரவாதி ஆனால் இரண்டாம் இடத்திலிருக்கும் பயங்கரவாதி’ என்று கதையாடிக்கொண்டிருக்கிறார்கள்.

அண்ணன் பாமரன் சொல்வதுபோல் 2001, செப்டம்பர் 11க்கு முன்பாக இசுலாமிய நாடுகளில் அமெரிக்க நிகழ்த்திய எண்ணற்ற செப்டம்பர் 11களை எத்தனை அமெரிக்கர்கள் கண்டித்தார்கள்? அறமும் வழுவும் அற்றுப்போன இந்த அமெரிக்க சமூகத்திடம் அறமும் வழுவும் பற்றிப்பேசுவதன் காரணமென்ன? பலன்களென்ன? எந்த மனித வெடிகுண்டுத்தாக்குதல்களையும் அமெரிக்க வீதிகளில் தம் நாட்களில் நடத்த தூண்டுவிக்காமல் அநியாயமாகக் கொல்லப்பட்ட சதாம் உசேனின் கொலைக்காக எத்தனை அமெரிக்க மக்கள் பொங்கியெழுந்து கண்டனம் தெரிவித்தார்கள்? ஈழத்தில் லட்சக்கணக்கான மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டபோது எத்தனை அப்பாவி சிங்கள மக்கள் சிங்கள அரசுக்கெதிராக எத்தனை போராட்டங்களை நடத்தினார்கள்?

muslim_boy_369முரண்பாடு கூர்மையடைந்த நிலையில் நடுநிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை. இது இசுலாமியர்களுக்கு வாழ்வா சாவா பிரச்சனை, எனவே அமெரிக்க மக்கள் ஒன்று அமெரிக்க அரசு அப்பாவி இசுலாமிய மக்களை கொல்வதைத் தடுத்து நிறுத்தவேண்டும் அல்லது அமெரிக்க ஏகாதிபத்திய அரசின் அழிவிற்கு தம்மாலான உதவிகளைச் செய்யவேண்டும் அல்லது சோ கால்டு அப்பாவி அமெரிக்க மக்கள் மத்தியில் அல்குவைதா குண்டுகள் வெடிப்பதை ஆதரிக்கவேண்டும். தோழர் கவிஞர் முகமது தார்வீஸ் சொன்னதுபோல் ‘அவர்கள் நாங்கள் மரித்துபோவதைக்காணவே விரும்பினார்கள்.’ கொலைக்களங்களில் இருந்து எப்படியேனும் தம் மக்களை தப்பவைக்கவேண்டும், எப்படியேனும் நம் மக்களை இந்த எந்த அறமும் போரியல் விதிகளும் அற்ற அரசு கொல்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற ஆற்றாமையில் வருவது இந்த அப்பாவி மக்கள் படுகொலை.

இன்னும் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. அப்பாவி ஈழத்தமிழர்கள் மீது மடமடவென்று குண்டுகளைப்பொழிகிறது இலங்கை இனவாத ராணுவத்தின் சமாதானம் பேசவந்த அலுமினியப்புறாக்கள். செஞ்சோலையில் அப்பாவிக்குழந்தைகள் கொல்லப்பட்டபோதும் கைகட்டி வாய்மூடி நின்றது சர்வதேச சமூகம். அந்த சர்வதேச சமூகத்தில் சிங்கள அப்பாவிகளும்தான் இருந்தார்கள் என்பது நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. என்னதான் தேசிய இனவெறிபோதைக்கு தெரியாமல் ஆளாகியிருந்தாலும் ‘பச்சைப்புள்ளைகளை கொல்லாதீங்கடா பாவிகளா’ என்று தம் சிங்கள அரசிடம் சொல்லக்கூடவா வக்கற்றுப்போனது அந்த சிங்கள அப்பாவிகளின் நாக்குகள் (சொல்லியிருந்தாலும் அதை சிங்கள அரசு கேட்காது என்பது வேறுவிடயம்).

வேறு வழியில்லை என்னதான் செய்வது தமிழ் மக்களை, எப்படித்தான் நம் அப்பாவி மக்களை காப்பது என்று வழி தெரியாமல் ‘இனிமேல் தமிழர்கள்மேல் தாக்குதல் தொடுத்தால் அதற்கான பலனை விளைவை சிங்களச் சமூகம் பெறவேண்டியிருக்கும்’ என்று வெளிப்படையாக மிரட்டினார்கள் புலிகள். உடனே ‘அய்யோ அம்மா புலிகள் அப்பாவி சிங்களர்களை கொல்லப்போகிறார்கள்’ என்று கூப்பாடு போட்டது ஒரு கும்பல். வரலாற்றின் பக்கங்களை திருப்பிப் பாருங்கள். அமெரிக்க ராணுவவீரர்களின் பிணங்கள் பெட்டி பெட்டியாக விமானத்தில் வந்து இறங்கியபோதுதான் அப்பாவி அமெரிக்க மக்களுக்கே வியட்நாம் அப்பாவி மக்கள்மீது கருணை வர ஆரம்பித்தது. அவர்கள் தெருக்களில் இறங்கி கதறி அழுது “எங்கள் பிள்ளைகளை கொல்லக்கொடுக்காதே” என்று அமெரிக்க அரசை படைகளை வியட்நாமிலிருந்து திரும்ப அழைக்கச்சொல்லி வற்புறுத்தினார்கள்.

பட்டால்தான் அறிவு வரும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் கையறுநிலையில் இருக்கும் ஒரு சமூகம் ஏதேனும் செய்து தம் குழந்தைகளை, மக்களை காக்க வேண்டிய நிலையிலிருக்கிறது என்பதை யாரும் மறந்துவிடவேண்டும். ஏகாதிபத்திய சுனாமியில் மாட்டிக்கொண்ட இசுலாமியச் சகோதரர்கள் எப்படியேனும் வெளியில் வரவேண்டும் என்ற நிலையில் அல்குவைதா “உன் சுனாமியை நிறுத்து, அல்லது அந்தச்சுனாமியின் வலியை உன் மக்களையும் நான் உணரச்செய்வேன்” என்று சொன்னது. அன்பு வாசகர்களே, பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பாருங்கள் அவனின் வலி புரியும், தப்பிக்க இயலா புதைகுழியிலிருந்து தப்பிக்க நினைப்பவன் எதையும் தவ்விப்பிடிப்பான். பிடிப்பது கயிறா அல்லது காப்பாற்ற வந்தவனின் தலைமுடியா, அல்லது வெளியில் தம்மைக்காப்பாற்ற இயலாமல் நிற்கும் சிறுவனின் கையா என்றெல்லாம் அவனுக்குத் தெரியாது. என்ன கிடைத்தாலும் அதைப்பிடித்துக்கொண்டு வெளியே வர முயற்சி செய்வான். அதுதான் அல்குவைதா விடயத்திலும் நடந்தது; நடக்கிறது. இனிமேலும் அப்பாவிகள் அப்பாவிகளாகவே இருந்தாலும் அப்படித்தான் நடக்கும்.

நினைவில் வையுங்கள். அல்குவைதா வெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்தான். அவர்களுக்கு நிலவும் இசுலாமிய எதிர்ப்பு ஏகாதிபத்திய அரசுகளை உடைத்து தூள்தூளாக்குவது ஒன்றுதான் வேலை. மாறாக மாற்று அரசு கட்டுவதல்ல. அப்படிக்கட்டுவது அவர்கள் இப்போது கட்டியுள்ள நெகிழ்வான அமைப்பால் இயலாத காரியம். இதைப்புரிந்து கொள்ளவேண்டியது பரந்து பட்ட மக்களின் கடமை.

இல்லையில்லை, இது பயங்கரவாதம்தான், இது மக்கள் போராட்டமல்ல என்று நீங்கள் சொன்னால் மக்கள் போராட்டத்தை வடிவமைக்கும் பொறுப்பை யார் உங்கள் கையில் கொடுத்தது என்ற கேள்வி வரும். ஏனெனில் உங்கள் பார்வை வர்க்கப்பார்வை என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கலாம். ஆனால் தோழர் ரேமண்ட் வில்லியம்ஸின் கருத்துக்களிலேயே இனவாதம் இருந்தது என்று கண்டித்தவர் தோழர் எட்வர்டு செயது. அதுவும் உண்மைதான் என்று சுயவிமர்சனம் ஏற்றுக்கொண்டவர் தோழர் வில்லியம்ஸ்.

சரி இறுதியாக என் நண்பன் ‘பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் இறந்ததைப்பற்றி என்ன நினைக்கிறாய்’ என்று என்னிடம் கேட்டான். அதற்கு நான் சொன்னேன் “தோழன் எட்வர்டு செயது இல்லையே உங்களுக்கு பதிலளிக்க” என்று. ஒன்று மட்டும் மனதில் வையுங்கள். நீங்கள் தோழன் ஒசாமாவை பயங்கரவாதி என்று சொன்னதற்கு உங்களை வரலாறு குப்பைத்தொட்டியில் தூக்கியெறிந்தாலும் எறியும். ஏனெனில் வரலாறு ஈவிரக்கமற்றது.

- சார்லசு அன்ரனி ( charlesantony2010@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

பிரிகேடியர் பால்ராஜ்: எதிரிகளாலும் போற்றப்பட்ட உன்னத போராளி !

உலகின் தலைசிறந்த போர்வீரர்களில் ஒருவரும் நூற்றாண்டுகளின் ஆச்சரியமாக விளங்கியவருமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் நாளை ஆகும். தமிழ்மக்களின் சுதந்திரமான வாழ்வுக்காகத் தமது உயிரையே அர்ப்பணித்த பல்லாயிரக் கணக்கான மாவீரர்களில், தலைமைத்துவப் பண்பினாலும் போரியல் நுட்பங்களாலும் போராட்டத்தைத் தோள்கொடுத்து முன்னெடுத்துச் சென்ற வெற்றித் தளபதிகள் பலர்.

அவர்களில் முதன்மையான ஒருவர் தான் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள். தலைவரின் போரியல் சிந்தனைக்கு அமைவாக, பல புதிய இராணுவத் தந்திரோபாயங்களையும் மூலோபாயங்களையும் வகுத்து, பல போரியல் வெற்றிகளை பெற்றுக்கொடுத்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் போரிடும் ஆற்றலை மேன்மைப்படுத்தியவர்களில் பிரதானமானவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக, �விடுதலைப்புலிகள் அமைப்பின் இமாலய வெற்றிகள் பலவற்றிற்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர்� என்று தேசியத்தலைவர் அவர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர்.

ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர்.
வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன் நீண்டகாலமாக பயணித்த அந்த நாட்களின் நினைவுகள் என்றைக்குமே அழியாதவை. ஒவ்வொரு கணமும் வந்து போகும் அவரைப்பற்றிய நினைவுகள், தொடர் துன்பங்களால் துவண்டுபோன உணர்வுகளின் அடிநாளத்தை உரசிச் செல்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய கரையோரக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான் வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை எமக்குக் கொடுத்தது.

ஒருபக்கம் பெருங்கடல் மற்றைய பக்கம் சிறுகடல் சூழ்ந்திருக்க, வயல் வெளிகள் தென்னைத்தோப்புகள் அதனைத் தொடர்ந்து காடு என அழகான அமைதியான அந்தக் கிராமத்தில் கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ம் திகதி (தமிழீழ மாவீரர் தினம் கொண்டாடும் நாள்) பிறந்த இவர் ஆரம்பகல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் புல்மோட்டையிலும் படித்தார். அவரது வாழ்வியல் சூழல் இளவயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதி காடுகள், பிரதேசங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார்.

ஒப்பற்ற இராணுவத் தலைமைத்துவம், கடுமையான உழைப்பு என்பவற்றின் ஊடாக விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவை ஒரு மரபுவழி இராணுவமாக மாற்றிய பெருமைக்குரியவர்.
வெற்றி நாயகனாய் வலம் வந்த அந்த தளபதி வித்தாகி மூன்று ஆண்டுகள் மறைந்து விட்டாலும் அவருடன் நீண்டகாலமாக பயணித்த அந்த நாட்களின் நினைவுகள் என்றைக்குமே அழியாதவை. ஒவ்வொரு கணமும் வந்து போகும் அவரைப்பற்றிய நினைவுகள், தொடர் துன்பங்களால் துவண்டுபோன உணர்வுகளின் அடிநாளத்தை உரசிச் செல்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தின் அழகிய கரையோரக் கிராமங்களில் ஒன்றான கொக்குத்தொடுவாய்தான் வீரத்தளபதி பால்ராஜ் அவர்களை எமக்குக் கொடுத்தது.

ஒருபக்கம் பெருங்கடல் மற்றைய பக்கம் சிறுகடல் சூழ்ந்திருக்க, வயல் வெளிகள் தென்னைத்தோப்புகள் அதனைத் தொடர்ந்து காடு என அழகான அமைதியான அந்தக் கிராமத்தில் கந்தையா கண்ணகி தம்பதியினருக்கு 1964 ம் ஆண்டு கார்த்திகை மாதம் 27 ம் திகதி (தமிழீழ மாவீரர் தினம் கொண்டாடும் நாள்) பிறந்த இவர் ஆரம்பகல்வியை கொக்குத்தொடுவாயிலும் பின்னர் புல்மோட்டையிலும் படித்தார். அவரது வாழ்வியல் சூழல் இளவயது முதலே வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக ஆக்கியது. அதனால் அப்பகுதி காடுகள், பிரதேசங்களை முழுமையாக தெரிந்து வைத்திருந்தார்.

வேட்டையாடுவதற்கு தேவையான அடிப்படை விடயங்களான அவதானிப்பு, கடுமையான முயற்சி, கடினங்களை தாங்கும் தன்மை, அலைந்து திரிதல், மிருகங்களின் தன்மைகளுக்கேற்ப தந்திரோபாய ரீதியல் வேட்டையாடல், பொறுமை, மிருகங்களின் தடையங்களை பின்தொடர்ந்து செல்லுதல் போன்ற பண்புகள் சிறுவயது முதல் இயற்கையாகவே அவருக்கு அமைந்திருந்தன. அது மட்டுமல்லாமல் வேட்டைக்கு சென்றால் ஒருபோதும் வேட்டையில்லாமல் திரும்பமாட்டார் என்னுமளவிற்கு ஓர்மம் மிக்க குணாதியசம் கொண்டவர்.
இவர் பிறந்து வளர்ந்த மணலாறு என அழைக்கப்படும் சிலோன் தியட்டர், மண்கிண்டிமலை முந்திரைக்குளம், கென்பாம், டொலர்பாம் கொக்குத்தொடுவாய், கொக்கிளாய் போன்ற தொழில் வாய்ப்புள்ள, வளம் மிக்க விளைநிலங்களை கொண்ட பகுதிகளில் இருந்த தமிழ்மக்களை விரட்டியடித்து, திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழர் தாயகத்தை துண்டாடும் நோக்குடன் இலங்கை அரசானது செயற்பட்டது.

இதனால் அவரது குடும்பம் உட்பட அங்கு வாழ்ந்த மக்களும் அவரது உறவினர்கள் பலரும் வாழ்விடங்கள் சொத்துக்களை இழந்து ஓரிரவில் அகதிகளாக்கப்பட்டனர். இச்சம்பவங்கள் ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக ஆயுதப் போராட்டத்தினுடாகவே எமது பிரதேசங்களை பாதுகாக்க முடியும் என்று முடிவெடுத்தார். இவரது போக்கை உணர்ந்த தந்தையார் �நீ போராட தீர்மானித்தால் பிரபாகரன் இயக்கத்தில் இணைந்து போராடு, அந்த இயக்கம் தான் சரியான வழியில் போராடும்� என சொல்லி வழிகாட்டியதை பால்ராஜ் அவர்கள் நினைவுகூருவார்.

அவர் 1983ம் ஆண்டு விடுதலைப் விடுதலைப்புலிகள் அமைப்புடன் தன்னை இணைத்துக்கொண்டார். கொக்குத் தொடுவாயைப் பிறப்பிடமாகக் கொண்ட அவருக்கு மணலாறு, தென்னமரவடி, புல்மோட்டை உள்ளடங்கலாக அப்பிரதேசங்கள் முழுதும் பரீட்சயமாக இருந்தது. ஆரம்பத்தில் உள்ளுர் பயிற்சியுடன் வழிகாட்டியாகத் தனது பணியை செய்து கொண்டிருந்த காலத்தில் 1984ம் ஆண்டு ஒதியமலையில் உழவு இயந்திரத்தில் சென்று கொண்டிருந்தபோது இலங்கை இராணுவத்தின் பதுங்கித் தாக்குதலில் லெப் காண்டிபன் உட்பட 09 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இதில் தோள்பட்டையில் காயமடைந்து சிகிச்சைக்காக இந்தியா சென்றார். அதன் பின்னர் இந்தியா-09 பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். மேஜர் பசீலன் அவர்களுடன் நாடு திரும்பிய அவர் வன்னி அணியுடன் இணைந்து அணிக்கான சமையல் பணிகளை செய்து வந்தார்.

இவரது பல்வேறுபட்ட திறமைகளை அறிந்த முல்லைத்தீவு மாவட்ட தளபதியாகவிருந்த பசீலன் அவர்கள் முல்லைத்தீவு அணியுடன் இணைந்து பணியாற்ற அழைத்துச் சென்றார். அவரது செயற்பாடுகளினால் சில நாட்களிலேயே பசீலன் அவர்களின் நம்பிக்கைக்குரியவரானார். முந்திரிகைக்குளத்தில் மேற்கொள்ளப்பட்ட பதுங்கித் தாக்குதல், கிளிநொச்சி திருநகர் முறியடிப்புத் தாக்குதல், என பல தாக்குதல்களில் பசீலன் அண்ணையுடன் பங்கெடுத்திருந்தார். அது மட்டுமன்றி இந்திய இராணுவத்திற்கு எதிராக யாழ்ப்பாணம் கோப்பாயில் நடந்த சமரில் ஆர்.பி.ஜி யால் டாங்கி ஒன்றை தகர்த்து பன்முக ஆற்றலை வெளிப்படுத்தினார்.

1987 ம் ஆண்டு முல்லைத்தீவு முகாமிலிருந்து நந்திக்கடற்கரை வெளியினூடாக, தண்ணீரூற்று நகரப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் நகர்ந்த இந்தியப்படைகளை வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டிருந்த போது பசீலன் அண்ணை வீரச்சாவடைந்தார். தளபதியை இழந்த நிலையில் உடனடியாக அக்களமுனை கட்டளையை பொறுப்பெடுத்த பால்ராஜ் அவர்கள், தனக்கேயுரிய தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து வழிநடத்தினார். பல சண்டைகளில் தனது சண்டைத்திறனை வெளிப்படுத்தினாலும் இச்சண்டையே அவரது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலையும் சண்டைத்திறனையும் தலைவருக்கு வெளிக்காட்டியது.

தளபதி பசீலன் அண்ணையின் இழப்பினால் துயரமும் கோபமும் அடைந்த தளபதியும் போராளிகளும், பசீலன் அண்ணைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தாக்குதல் ஒன்றை செய்யும் நோக்குடன் ஓய்வின்றி திரிந்தனர். அவர்களின் முயற்சி வீணாகவில்லை. பழம் நழுவி பாலில் விழுவதைப்போல பசீலன் அண்ணையின் இழப்பிற்கு காரணமான இருந்த இந்திய அணியே தண்ணீரூற்று வித்தியானந்தாக் கல்லூரிக்குப் பின்னால் ரோந்தில் சென்று கொண்டிருந்த போது இவர்களின் தாக்குதல் எல்லைக்குள் வந்தது. கோபத்துடன் இருந்த போராளிகள் அனைவரும் ஆவேசமாக தாக்குதலை மேற்கொண்டு வந்த படையை நிர்மூலமாக்கினர். அத்துடன் உதவிக்கு வரும் அணியையும் அழிக்க வேண்டும் என பொருத்தமான இடத்தில் நிலையெடுத்துக் காத்திருந்தனர்.

எதிர்பார்த்ததைப் போலவே உதவிக்கு வந்த அணியையும் அழித்து மொத்தமாக இருபந்தைத்துக்கும் மேற்பட்ட இந்திய இராணுவத்தை கொன்று இழந்த தளபதிக்கு அஞ்சலியைச் செலுத்தினார்கள். பசீலன் அண்ணை �எல்லோரையும் மிரளவைக்கும் துணிச்சல்காரன், சிறந்த திட்டமிடலான பல தாக்குதல் உத்திகளையும் அவரிடம் அறிந்து கொண்டேன் அவருடனிருந்த நாட்கள் பசுமையானவை� என பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் கூறுவார். தலைவருடன் தலைவரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான பால்ராஜ் அவர்கள் இந்தியப்படையினர் மணலாற்றுக் காட்டை முற்றுகையிட்டு தலைவரை குறிவைத்துப் பல இராணுவ நடவடிக்கைகளைச் செய்து கொண்டிருந்தபோது தலைவரைப் பாதுகாக்கும் நடவடிக்கையிலும், தலைவரைச் சந்திக்க வருபவர்களை முற்றுகைக்குள்ளால் நகர்த்தும் பணிகளையும் செய்து வந்தார்.

இச்சமயத்தில், தலைவர் காட்டிலிருப்பது பாதுகாப்பில்லை எனவே வெளியேறி வேறு நாட்டுக்கு செல்லுமாறு சில விடுதலை விரும்பிகள் கேட்டபோது �என்ர இனத்தின்ற கௌரவத்தையும் என்னையும் விற்கவேண்டாம் எனக்கு என்ன நடந்தாலும் அது இங்கேயே நடக்கட்டும் பிரபாகரன் தப்பி ஓடியதாக இருக்கக்கூடாது போராடி வென்றான் அல்லது வீரமரணமடைந்தான் என்றுதான் வரலாற்றில் இருக்க வேண்டும்� என்ற செய்தியை சொல்லும்படி தலைவர் ஆக்ரோசமாக கூறியதை போராளிகளுடன் பகிர்ந்து கொள்வார். வன்னிப்பிராந்திய தளபதியாக முல்லைத்தீவு, நெடுங்கேணி பாடசாலையில் அமைந்திருந்த இந்தியப்படையினர் முகாம் மீதான தாக்குதல் நடவடிக்கையில் தளபதி லெப்.கேணல் நவம் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

இதன் பின்னர் பால்ராஜ் அவர்களை அழைத்த தலைவர் �இந்திய இராணுவத்திற்கெதிரான தாக்குதல்களை மேலும் பரவலாக்கும் போது தான் கூடுதலாக இராணுவத்தை மணலாற்றை நோக்கி ஒன்று சேர்க்கமுடியாது. அது தான் மணலாற்றை இறுக்கமான இராணுவ முற்றுகைக்குள்ளிருந்து தளர்த்துவதற்கான வழிமுறை� எனவே முல்லைத்தீவில் மட்டுமல்ல வன்னியெங்கும் தாக்குதலை தீவிரப்படுத்த வேண்டும் எனக்கூறி, வன்னி பெருநிலப்பரப்பின் தளபதியாக நியமித்தார். பால்ராஜ் அவர்கள் பசீலன் அண்ணையிடம் கற்றுக்கொண்ட சண்டை அனுபவம் மற்றும் தலைவருடன் இருந்த காலத்தில் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட தலைமைத்துவம், சண்டைத் தீர்மானங்கள், நிர்வாகம், அரசியல், போன்றன அவரின் தலைமைத்துவத்தை மேலும் செம்மைப்படுத்துவதற்கு வாய்ப்பளித்தது.

பொறுப்பை ஏற்ற தளபதி பால்ராஜ் அவர்கள் முதலில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மாவட்டங்களில் தாக்குதலை தீவிரப்படுத்தும் நோக்குடன், அம்மாவட்டங்களில் இருந்த போராளிகளை சந்தித்து தலைவரின் எண்ணத்துடன் புதிய தாக்குதல் உத்திகளையும் அறிவுரைகளையும் வழங்குவதற்காக நடைப்பயணம் ஒன்றை மேற்கோண்டார். ஆனாலும் வெறும் நடைப்பயணம் என்ற நோக்கைத் தாண்டி சென்ற இடங்களிலெல்லாம் தென்படும் இராணுவத்தின் மீது உடனடி தாக்குதல்களை மேற்கொண்டார். இத்தாக்குதல்கள் போராளிகளுக்கு மேலும் தெம்பைக் கொடுத்தது. பால்ராஐ அவர்களை தனது போர் ஆசானாக கொண்ட தளபதி பிரிகேடியர் தீபன் அவர்கள் இந்திய இராணுவத்துக்கு எதிரான தாக்குதல் பற்றி தெரிவிக்கும் போது �மணலாற்றில் தலைவரிடத்தில் இருந்து வந்து மூன்று மாவட்டங்களிற்கும் நடைப்பயணம் செய்து போராளிகளைச் சந்தித்து ஊக்கப்படுத்தி, தாக்குதல் திட்டங்களையும் கொடுத்து, தலைவரின் கட்டளைகளையும் வழங்கி ஒரு பம்பரம் போல் சுழன்று திரிந்தார்.

அவர் நடந்து போய் வருகின்றாரா! வாகனத்தில் போய் வருகின்றாரா! என்று எங்களுக்குள் பேசுவது வழமை. அந்தளவுக்குப் பயணத்தில் வேகம், வேலை முடிந்ததும் உடனடியாகவே அடுத்த பயணம், அவரின் முகத்தில் சோர்வோ களைப்போ தெரிவதில்லை. படையினர் மீதான தாக்குதல் என்று வரும் போது வேவு பார்த்து - திட்டமிட்டுத் தாக்குவது வழமை.
எதிரிப்படை எதிர்ப்படும் போது உடனடியாகவே திட்டம் தீட்டித் தாக்குதல்களை நடாத்துவது கடினம். ஆனால் இது கடினமானது என்பதால் தவிர்க்கப்பட வேண்டியது என்று பால்ராஜ் நினைப்பதில்லை. எதிரி தென்பட்டால் உடனடியாகத் தாக்கு என்பது அவரின் கருத்து�. என்று கூறியுள்ளார்.

இந்திய கொமாண்டோக்களின் பதுங்கித் தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதல் தளபதி பால்ராஜ் அவர்களைப் பொறுத்தவரையில் சண்டைகளை சவாலாக எடுத்துச் செய்வது இயல்பு. மணலாற்றை இந்திய இராணுவம் இறுக்கமான முற்றுகைக்குள் வைத்திருந்த காலப்பகுதியில் முக்கிய பயணம் ஒன்றை மேற்கொண்டு நெடுங்கேணி பழம்பாசி காட்டுப்பகுதியில் சிறு அணியுடன் சென்று கொண்டிருந்தார். நகர வேண்டிய காட்டுப்பாதையில் இருந்த தடயங்களை வைத்து இந்தியப்படையின் விசேட கொமாண்டோக்களின் தடையம் என்பதை ஊகித்துக் கொண்டார். நாங்கள் செல்ல வேண்டிய பாதையில் ஏதோ ஒரு இடத்தில் எதிரி நிலையெடுத்திருப்பான் என்பதை புரிந்து கொண்ட தளபதி பயணத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, தாக்குதலை மேற்கொள்பவனுக்கெதிராக தாக்குதலை மேற்கொள்வோம் என முடிவெடுத்தார்.

எதிரியின் பதுங்கித்தாக்குதலை எதிர்கொள்ளக்கூடிய வகையில் உடனடித்திட்டம் ஒன்றை வகுத்தார். அதன்படி அணிகளை இரண்டாக பிரித்து, முன்னே லெப்.கேணல் நவநீதன் தலைமையில் ஒரு அணியும் குறிப்பிட்ட இடைவெளியில் மறுஅணியும் நகர வேண்டும். எதிரி எந்தப்பக்கத்திலிருந்தும் தாக்குதலை மேற்கொள்ளலாம். எனவே எதிரி தாக்குதலை மேற்கொண்டால் முன்னால் செல்லும் அணி தாக்குதலை எதிர்கொள்ள மறு அணி பக்கவாட்டால் காட்டுக்குள் இறங்கி, வளைத்து பின்பக்கத்தால் தாக்க வேண்டும் என்பதை விளக்கிவிட்டு, எதிரியின் தாக்குதலை எதிர்பார்த்துக் கொண்டு அவதானமாகவும் மெதுவாகவும் நகரத் தொடங்கினார்கள். திடீரென, இயல்புக்கு மாறாக இருந்த பற்றைகள் மரங்ககளிற்கிடையில் எதிரி நிலையெடுத்திருப்பதை லெப்.கேணல் நவநீதன் திடீரென்று நின்று அவதானித்ததை குறிப்புணர்ந்த தளபதி மறுஅணியை பக்கவாட்டால் வளைக்குமாறு சைகை காட்ட, நவநீதன் தனக்கு அருகே இருந்த இராணுவத்தை சுட்டுக்கொண்டு வேகமாக எதிரிக்குள் நுழைந்து தாக்குதலை தொடர, மறு அணியும் பக்கவாட்டால் வளைத்து பின்பக்கமாக தாக்குதலை செய்தனர்.

எதிரி சுதாகரிப்பதற்குள் முழு இராணுவத்தையும் அவர்கள் நிலையெடுத்திருந்த இடங்களிலேயே கொன்று மயிர்கூச்செரியும் தாக்குதலை நடாத்தி முடித்தனர். இந்திய இராணுவத்தின் பதுங்கித்தாக்குதலை முறியடித்த சண்டையானது பால்ராஜ் அவர்களினது துணிவு, போர் உத்தி, சண்டையிடும் திறனை வெளிப்படுத்திய முக்கியமான சண்டைகளில் ஒன்று. குறிப்பாக இந்திய இராணுவத்தை அதிர்ச்சி, வியப்புக்குள்ளாக்கிய சண்டையாகும். ஏனெனில் பதுங்கித்தாக்குதலை மேற்கொள்ளும் போது நகரும் பாதை, எதிராளிகளின் ஆயுதபலம், ஆட்கள் தொகை போன்ற தகவல்களின் அடிப்படையில் பதுங்கித்தாக்குதல் திட்டமிடப்படும். பின்னர் தாக்குதலிற்கான கொலைவலயத்தை உருவாக்கி, பொருத்தமான ஆயுதங்களுடன் உருமறைத்து, நிலையெடுத்து தாக்குதலை மேற்கொள்வதுதான் தாக்குதலிற்கான அடிப்படை உத்தி.

அத்துடன் உலகத்தின் நான்காவது வலிமையான இராணுவம் தனது சிறப்புப்படைகளை வைத்து திட்டமிடும் பதுங்கித்தாக்குதலை சாதாரண விடயமாக எடுத்து விட முடியாது. பல பதுங்கித் தாக்குதல்களை வெற்றிகரமாக செய்த அனுபவம் மிக்க பால்ராஜ் அவர்கள் அதிலிருக்கும் ஆபத்தை உணர்ந்து அப்பாதையைத் தவிர்த்து வேறுபாதையால் சென்று இருக்கக்கூடிய வாய்ப்பிருந்தது. அப்படியிருந்தும் இந்தசந்தர்ப்பத்தில் பதுங்கித்தாக்குதலுக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை செய்வோம் என்று (அவருடைய மொழியில் இன்டைக்கு ரென்டில ஒன்டு பாப்பம் அவனா? நானா? எண்டு) தீர்க்கமாகவும் தற்துணிவாகவும் முடிவெடுத்து அப்பதுங்கித் தாக்குதலுக்கான முறியடிப்புத் தாக்குதலை எதிர்கொண்டு, வென்று காட்டி தனக்கென்று ஒரு தனிமுத்திரை பதித்தார்.

இத்தாக்குதல் நடவடிக்கை விடுதலைப்புலிகள் மீது இந்திய இராணுவத்திற்கு மேலும் அச்சத்தை கொடுத்ததுடன் போராளிகளுக்கு மேலதிக தெம்பையும் உத்வேகத்தையும் கொடுத்தது. இது போன்ற பல தாக்குதல் நடவடிக்கைகள் பால்ராஜ் அவர்களை சிறந்த தளபதியாக தனித்துவமாக அடையாளம் காட்டின. இந்திய இராணுவ வெளியேற்றத்தின் பின்னர், வன்னியின் இராணுவம், அரசியல், அபிவிருத்தி போன்ற எல்லா பணிகளையும் ஒருங்கிணைத்தார். இந்திய இராணுவ காலத்தில் தங்களுக்கு உதவி செய்த வீடுகளுக்கெல்லாம் சென்றதுடன் அவர்களின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து இயன்றளவு அவர்களிற்கு உதவிகள் செய்தார்.

மக்களின் பிரச்சனைகள் அவர்களின் அத்தியாவசிய தேவைகளை அறிந்து உதவி செய்தார் அந்தளவிற்கு மக்களை நேசித்த தளபதியவர். கொக்காவில் முகாம் வலிந்ததாக்குதல் இலங்கை இராணுவத்துடனான ஈழப்போர்.02, 1990 ம் ஆண்டு மத்தியில் தொடங்கியது. முதலில் மாங்குளம் இராணுவ முகாம் மீது தாக்குதலை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அம்முகாமின் ஒரு பகுதி வீழ்ந்தாலும் சண்டையை தொடர்ந்து நடாத்துவதிலுள்ள பாதக நிலையை உணர்ந்து உடனடியாக சண்டையிலிருந்து பின்வாங்கினர். பின்னர் கிளிநொச்சி படைமுகாம் மீது நடாத்தப்பட்ட தாக்குதல் முயற்சியும் கைகூடவில்லை. தொடர்ந்து முல்லைத்தீவு முகாம் மீதான தாக்குதல் முயற்சியும் வெற்றியளிக்கவில்லை.

இந்த முகாம்கள் அழிக்கப்படாவிட்டால் வன்னி பெருநிலப்பரப்பின் மேலாதிக்கம் விடுதலைப்புலிகளிடம் இல்லாமல் போவது மட்டுமல்லாமல் மக்களும் பாரிய சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி நேரிடும். அத்துடன் ஏற்கனவே மூன்று முகாம் தாக்குதல்களும் வெற்றியளிக்காத நிலையில் இந்த முகாமை எப்படியும் கைப்பற்றியே தீரவேண்டும் என்ற உறுதியான முடிவுடன் கொக்காவில் முகாமைத் கைப்பற்றுவதற்காக தாக்குதலை ஆரம்பித்தார். முதல் நாள் கடுமையான சண்டை, சில பகுதிகள் கைப்பற்றப்பட்டது அதேவேளை துணைத்தளபதியாகவிருந்த தளபதி தீபன் அவர்களும் வேறு சில தளபதிகளும் காயமடைந்திருந்தனர். கடுமையான சண்டை தொடர்ந்து கொண்டிருந்தது. நிலைமையினை உணர்ந்த பால்ராஜ் அவர்கள் ஏற்கனவே மாங்குளம், கிளிநொச்சி, முல்லைத்தீவு முகாம்களை கைப்பற்றமுடியவில்லை, இதிலும் தோல்விகண்டால் போராளிகளின் உளவுரண் பாதிப்படையலாம்.

அதுமட்டுமன்றி இராணுவத்தின் உளவுரண் அதிகரிக்கலாம். அத்தகைய வாய்ப்பை வழங்கக்கூடாது என்ற உத்வேகத்துடன் போராடினார். கொக்காவில் முகாமை எப்படியாவது கைப்பற்றியே தீர வேண்டும் என்ற தீர்மானமான முடிவிலிருந்தார். தளபதி தீபன் அவர்கள் காயமடைந்ததுடன் களமுனைக்கே சென்று அணிகளை மீள் ஒழுங்குபடுத்தி, கட்டளைகளை வழங்கிக் கொண்டு தானும் ஒரு பக்கமாக இறங்கி சண்டையில் ஈடுபட்டார். பால்ராஜ் அவர்களும் இறங்கி சண்டையிடுகின்றார் என்றவுடன் போராளிகள் மேலும் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொள்ள, சில மணிகளில் முகாம் முற்றாக அழிக்கப்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது.

விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் முதன்முதலாக கைப்பற்றி அழிக்கப்பட்ட முகாம் தாக்குதலாக அது பதிவாகின்றது. மாங்குளம் முகாம் வலிந்ததாக்குதல் இதனைத் தொடர்ந்து மாங்குளம் முகாமை மீள தாக்கியழிக்க வேண்டும் என்று நோக்குடன் களப்பணிகளை முடுக்கிவிட்டார். ஏற்கனவே தாக்குதலை மேற்கொண்டு பின்வாங்கிய முகாம் என்பதால் அடுத்த முயற்சி தோல்வியடையக்கூடாது என்ற முடிவுடன் தாக்குதல் திட்டம் தயாரிக்கப்படுகின்றது. அம்முகாமின் இரு முனைகளில் தாக்குதலை நடாத்தி எதிரியை பலவீனப்படுத்தி கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு முகாமை கைப்பற்றுவது என்று தீர்மானிக்கப்படுகின்றது.

பசீலன் ஷெல் தாக்குதலுடன் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலின் முகாமைச் சுற்றியிருந்த காவலரண்கள் முதலில் வீழ்ச்சியடைந்தன. அதன் பின்னர் கரும்புலித் தாக்குதலை கரும்புலி லெப்.கேணல் போர்க் மேற்கொள்ள, காவலரண்களையும் மினிமுகாம்களையும் உடைத்துக் கொண்டு முன்னேறிய அணிகள் பிரதான முகாமிற்கு அருகிலிருந்த �வானூர்தி� இறங்குதளத்திற்கு அருகில் பலமான எதிர்த்தாக்குதலுக்கு முகம்கொடுத்தன. ஏனெனில் வானூர்தி தளத்தை தாம் இழந்தால் மேலதிக உதவியை எடுக்க முடியாமல் அழிந்துவிடுவோம் என்ற நிலைப்பாட்டில் இராணுவம் மூர்க்கத்தனமாக மோதியது. அதேவேளை முகாமின் தென்பகுதி வயல் வெளியால் ஆரம்பிக்கப்பட்ட தாக்குதல் இழப்பின் காரணமாக பின்வாங்கப்படுகின்றது.

அகோர விமானத்தாக்குதல்களிற்கு மத்தியிலும் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. இழப்புகளின் அளவும் கணிசமாக உயர்ந்து கொண்டிருந்தது. நிலைமைகளை அறித்த தலைவர் விரைவாக முகாமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருமாறு அறிவுறுத்தினார். சண்டையின் வியூகத்தை மாற்ற நினைத்த தளபதி, துணைத்தளபதி தீபன் அவர்களை கட்டளைமையத்தில் சண்டையை ஒழுங்குபடுத்தும்படி விட்டு விட்டு, வானூர்தித் தளத்தில் சண்டையிடும் எதிரியை சுற்றி வளைத்து தாக்கியழிக்க வேண்டும் என முடிவெடுத்தார். லெப்.கேணல் நவநீதன் தலைமையில் சிறப்பு அணியொன்றை ஒழுங்குபடுத்திக் கொண்டு சென்றார். பகல் வேளையாக இருந்த போதிலும் பொருத்தமான இடத்தில் தாக்குதலை மேற்கொண்டு வானூர்தித் தளத்தை கைப்பற்றினார்.

வானூர்தி தளம் கைப்பற்றப்பட்டவுடன் தமது தோல்வியை உணர்ந்த எஞ்சியிருந்த இராணுவத்தினர் பின்வாங்கி வவுனியாவில் அமைந்திருந்த இராணுவ முகாம் நோக்கி தற்பாதுகாப்புத் தாக்குதலை மேற்கொண்டு கொண்டு ஓடத்தொடங்கினர். அவர்களும் ஆங்காங்கே கொல்லப்பட்டனர். இச்சமரில் பெருந் தொகையான இராணுவத்தளபாடங்கள் கைப்பற்றப்பட்டன. குறிப்பாக 50 கலிபர் துப்பாக்கி முதன்முதலில் இத்தாக்குதலின் போது கைப்பற்றப்பட்டது. சாள்ஸ் அன்ரனி படையணியின் தலைமைத்தளபதியாக இரண்டாம் கட்ட ஈழப்போரில் இவரது தாக்குதல் வெற்றிகள் இராணுவ ரீதியில் பரிமாண வளர்ச்சியையும் நம்பிக்கையையும் கொடுத்ததுடன் போராளிகளின் உளவுரன், மனோதிடத்தை வளர்த்து சிங்களப்படையை கதிகலங்க வைத்தது. அக்காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் இராணுவத்தை ஒர் மரபுவழி இராணுவமாக வளர்த்தெடுக்க தீர்மானித்த தலைவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது மரபுவழிப்படையணியான சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையை 1991 ம் ஆண்டில் உருவாக்கினார்.

சண்டைகளின் தன்மைகளிற்கேற்ப புதிய புதிய உத்திகளை வகுக்கும் பண்பு, சண்டையிட்டுக்கொண்டே தாக்குதலை தலைமை தாங்கும் தலைமைத்துவப்பண்பு, தாக்குதலின் போது எல்லா களச்சூழல்களையும் தனக்கு சாதகமாக மாற்றும் திறமை, சிறந்த வேவு ஆற்றல், திட்டமிடல், நிர்வாகம் போன்றன அடிப்படை ஆற்றல்களைக் கொண்ட பால்ராஜ் அவர்களை சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தளபதியாக்கினார். துணிவு, தந்திரம், கடும்பயிற்சி போன்றவற்றை தாரக மந்திரமாக கொண்டு தலைவரின் எதிர்பார்ப்பிற்கமைவாகவும், ஆலோசனைக்கமைவாகவும் வலிமை மிகுந்த படையணியாக உருவாக்க தலைவரது சிந்தனைகளையும் தனது போர் அனுபவங்களையும் போராளிகளுடன் பகிர்ந்து, சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணியை ஒரு வலிமை மிகுந்த படையணியாக உருவாக்கினார்.

மரபுவழிப்படையணியாக உருவாக்கிய அப்படையணியிடம் இருந்த இலகு மற்றும் கனரக ஆயுதங்களை மட்டும் வைத்தே பல வெற்றிகரமான தாக்குதல்களையும் புதிய உத்திகளுடன் கூடிய மூலோபாயத் தாக்குதல்களையும் செய்து காட்டினார். குறிப்பாக வன்னி விக்கிரம எதிர்தாக்குதலில் 50 கலிபர் துப்பாக்கியை பயன்படுத்தி உலங்குவானூர்தி அழிக்கப்பட்டது. 1991 ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பினால் பெயரிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முதலாவது வலிந்த தாக்குதல் நடவடிக்கையான ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கையில் கிளிநொச்சி உப்பளப்பக்கத்தால் தாக்குதலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்று வெற்றிகரமாக செய்து முடித்தார். பின்னர் மணலாற்றில் முன்னெடுக்கப்பட்ட மின்னல் எதிர்ச்சமர், அளம்பில் ஒப்பிறேசன் 7 பவர் எதிர்ச்சமர், கொக்குத்தொடுவாயில் இருந்து முன்னேறிய இராணுவத்தை தாக்கி பின்வாங்க வைத்ததுமல்லாமல் முதன்முதலில் ஆர்.சி.எல் கைப்பற்றிய சமர் போன்ற பல சமர்களை வெற்றிகரமாக நடாத்தினார்.

மூலோபாயத் தாக்குதல்கள் தலைவர், தளபதியிடம் சண்டைகள் பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கும் போது �இப்படியே ஒவ்வொரு காவலரணாக மட்டும் தாக்கியழித்துக் கொண்டிருந்தால் எப்படி நாம் இராணுவத்தை அப்புறப்படுத்த முடியும். பாரியளவில் இராணுவத்தை தாக்கும் திட்டங்களை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்� இதனை புரிந்து கொண்ட தளபதி கிளிநொச்சி, தட்டுவன்கொட்டியில் இருந்த இராணுவ காவலரண்களை வேவு பார்த்தார். இராணுவத்தின் பாதுகாப்பு நிலைகளை விரைவாக தாக்குவதற்கான புதிய மூலோபாயத்தை வகுத்து அதனடிப்படையில், இருபத்துநான்கு காவலரண்களைத் தாக்கியழிப்பதற்கான திட்டத்தை வகுத்து பயிற்சிகளை வழங்கினார்.

இத்தாக்குதலுக்கு செல்வதற்கு முன் போராளிகளை சந்தித்த தலைவர் அவர்கள் �புதிய மூலோபாயத்திட்டத்தில் தாக்குதலை ஒன்றை செய்யப் போகின்றீர்கள் இத்தாக்குதல் வெற்றி எதிர்காலத் தாக்குதல்களிற்கு அடிப்படையாக அமையும்� என்று கூறி வாழ்த்தியனுப்பினார். தாக்குதல் திட்டத்தின்படி இரகசிய நகர்வை மேற்கொண்டு நகர்ந்த அணிகள், எதிரியின் காவலரணுக்கு மிக அண்மையாகச் சென்று தாக்குதலை தொடங்கின. தாக்குதல் ஆரம்பித்த வேகத்திலேயே வேகமாக காவலரண்களை ஊடறுத்து பின்பக்கமாகச் சென்று இராணுவத்தை அழித்து ஆயுதங்களையும் கைப்பற்றினர். அத்தாக்குதல் உத்தியானது, குறைந்த இழப்புடன் விரைவாக எதிரியைத் தாக்கியழிப்பதற்கான மூலோபாய வெற்றியையும் நம்பிக்கையும் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து பல மாவட்டங்களிலும் நடந்த பல தாக்குதல் வெற்றிகளுக்கு அந்த உத்தி அடிப்படையாக அமைந்தது. 1991ம் ஆண்டு கரைநகர் பொன்னாலை பிரதான பாதையில் அமைந்திருந்த காவலரண்களை தாக்கியழித்த சமர் இன்னுமொருவகையான புதிய தாக்குதல் உத்தியாகும். ஏனெனில் காவலரண் வீதியில் அமைந்திருந்தது.

வீதியின் இரண்டு பக்கமும் கடல். தாக்குதலை மேற்கொள்ள எந்த விதமான காப்பும் மறைப்பும் இல்லாத குறைந்த தண்ணீர் உள்ள கடற்பிரதேசம், அக்காவலரணை தாக்கி அழிக்க வேண்டும் என முடிவெடுத்து மேஜர் கிண்ணியின் தலைமையில் வேவு பார்த்து, தண்ணீருக்குள்ளால் காவலரணின் பின்பக்கமாக அணிகளை நகர்த்தி வெற்றிகரமாகத் தாக்குதலை செய்து முடித்தார். எப்போதுமே சவாலான சண்டைகளை தேர்ந்தெடுத்து வெற்றி கொள்வதும் இறுக்கமாக போர்க்களங்களில் செயற்பட்டு வெல்வதும் இவருடைய குணாதிசயங்களில் ஒன்று.

அதன் பின்னர் 1992 ன் ஆரம்பகாலப்பகுதியில் பூநகரி முகாமின் முன்னணி காவலரண்களில் அறுபத்து நான்கு காவலரண் தாக்கியழித்த தாக்குதல், அதனைத் தொடர்ந்து 1992 ன் பிற்காலப்பகுதியில் பலாலி வளலாய் பகுதியில் 150 காவலரண்களை அழித்த தாக்குதல் போன்றவற்றை தலைமையேற்றுச் செய்தார். குறிப்பாக 1992 ம் ஆண்டு பயிற்சித் தேவைகளுக்காக தலைவரிடம் ரவைகள் வேண்டும் என தளபதிகள் கேட்டபோது �சண்டைகளுக்கு மட்டுமே ரவைகள் இருக்கு, இப்ப உங்களுக்கு தேவையான ரவைகள் இராணுவத்திட்ட இருக்கு, அங்க போய் எடுங்கோ என கூறினார்� இதுவே பலாலி � வளலாயில் இருந்த 150 காவலரண்களை அழித்து ஒன்றறை இலட்சத்திற்கும் மேற்பட்ட ரவைகள் பல ஆயுத, வெடிபொருட்களையும் கைப்பற்றி அடிப்படையானது.

காவலரண்களை உடைத்துக் கொண்டு உட்சென்று பின்பக்கத்தால் தாக்குதலை நடாத்தும் முறை, தரையால் படைகளை நகர்த்தும் சமநேரத்தில் கடலாலும் படைகளை நகர்த்தி எதிரியின் விநியோகம், ஆதரவுப்படைகளை அனுப்பும் வழிகளை தடுத்தல் கட்டளைமையங்கள் தகர்த்தல், தரைவழித் தாக்குதல் படையணிகள் உள் நுழைவதற்காக காவலரண்களை பின்பக்கத்தால் தகர்த்து பாதையேற்படுத்தல் என்பவற்றை உள்ளடக்கிய ஈரூடக தாக்குதல் முறை மூலம் எமது தாயகத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை அழித்தொழிக்க முடியும் என்ற உத்தியை தனது முன்னுதாரணமான செயற்பாட்டினூடாக வெளிப்படுத்தினார். 1990 ஆண்டு ஈழப்போர் - 02 ஆரம்பித்திலிருந்து 1992 ம் ஆண்டு வளலாய் தாக்குதலை வரை தலைவரின் இராணுவ சிந்தனைக்கு உரியவடிவமும் அதற்கு பொருத்தமான மூலோபாயங்களையும் உத்திகளையும் வகுத்து பல பாதுகாப்பு, வலிந்த தாக்குதல்களை செய்து விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தை மேன்மைப்படுத்தினார்.

இதுவே இவரை விடுதலைப்புலிகளின் இராணுவப்பிரிவின் துணைத்தளபதியாக 1992 ம் ஆண்டு தலைவர் நியமிக்க காரணமாகியது. யாழ்தேவி முறியடிப்புத் தாக்குதல் பின்னர் 1993 ல் பூநகரி முகாம் வேவு நடவடிக்கைகளை விசேட வேவு அணியை வைத்து செய்து முடித்தார். தொடர்ந்து அதை கைப்பற்றுவதற்கான தாக்குதல் திட்டத்தை வகுத்து, அணிகளை ஒன்றிணைத்து பயிற்சிகளையும் அதற்கான ஏனைய ஒழுங்குபடுத்தல்களை தயார்ப்படுத்துவதில் தீவிரமாக செயற்படடுக்கொண்டிருந்தார். இச்சமயத்தில் யாழ் குடாநாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்குடன், ஒரேயொரு போக்குவரத்து பாதையாக இருந்த கிளாலி கடற்கரை பாதையை மூடுவதை இலக்கு வைத்து ஆனையிறவிலிருந்து இராணுவம், �யாழ்தேவி� என்ற இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளப்போகின்றது என்ற செய்தி கிடைக்கின்றது.

தலைவரின் ஆலோசனைக்கமைவாக, தயார்ப்படுத்துவதற்கு கிடைத்த குறுகிய நேரத்தில் தந்திரோபாயத் தாக்குதல் திட்டத்தை வகுத்து, இராணுவத்தின் நகர்வை தடுப்பதற்கான தாக்குதலை மேற்கொண்டார். இராணுவத்திற்கெதிரான தாக்குதல் மிக மூர்க்கத்தனமாக நடைபெற்றுக்கொண்டிருந்தபோது களமுனையிலிருந்து தொடர்களில் சிக்கலடைந்தது.
இச்சமயத்தில் நேரடியாக களமுனைக்குச் சென்று தாக்குதலை வெற்றி நோக்கி வழிநடத்தியபோது காலில் காயமடைந்தார். இந்த நடவடிக்கையில் படுதோல்வியுடன் இராணுவம் பின்வாங்கியது. காயத்திலிருந்து மீண்டாலும் காலில் பாதிப்பிருந்தது. அப்படியிருந்தும் மீண்டும் தனது இராணுவப் பணிகளைத் தொடர்ந்தார். மண்டைதீவு தாக்குதலுக்கான வேவு, கொக்குத்தொடுவாய் 05 முகாம்களின் தாக்குதலுக்கான வேவு நடவடிக்கை மற்றும் தாக்குதலுக்கான களத்தலைமை, முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதல், சூரியகதிர் ஒன்று தாக்குதல் நடவடிக்கை என பல இராணுவ நடவடிக்கைகளில் பங்கு கொண்டார்.

முல்லைத்தீவு முகாம் வலிந்ததாக்குதல் 1996ம் ஆண்டு யாழ் குடாநாட்டிலிருந்து தந்திரோபாய ரீதியில் பின்வாங்கி வன்னி பெருநிலப்பரப்பிற்குள் புலிகள் வந்த தருணத்தில் விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமை தொடர்பான பல வினாக்கள் முன்வைக்கப்பட்டன. சிங்களப்படைகள் விடுதலைப்புலிகளை விரைவில் அழித்துவிடுவோம் என மார்தட்டிக் கொண்டிருந்தவேளை விடுதலைப்புலிகளின் இராணுவ வலிமையை மீளநிரூபித்து இராணுவ வெற்றியினூடாக சிங்களத்திற்கு பதில் சொல்ல தீர்மானித்த தலைவர், முல்லைத்தீவு முகாமை அழிக்க முடிவெடுத்தார். இத்தாக்குதல் நடவடிக்கையை தளபதி பால்ராஜ் அவர்களிடம் பொறுப்பைக் கொடுத்து தாக்குதலுக்கான மூலோபாயத்தையும் வகுத்துக்கொடுத்தார். தலைவரின் சிந்தனைக்கமைவாக அத்தாக்குதல் வெற்றிக்காக கடுமையாக உழைத்தார். துல்லியமான திட்டமிடலுடன் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது.

வேகமாக கடற்கரைப்பகுதி முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்பது பிரதான திட்டங்களில் ஒன்று. அதன்படி வெற்றிகரமாக நடைபெற்றதுடன் 122 கனரகப் பீரங்கிகளும் கைப்பற்றப்பட்டன, இருப்பினும் கடற்கரைப் பிரதேசத்தை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. கடற்கரையில் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே தம்மால் உதவியை பெற முடியும் என்பதால் தேவாலயம் அமைந்திருந்த கடற்கரைப் பகுதியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இராணுவம் கடுமையாகப் போரிட்டது.

அப்பகுதியை கைப்பற்றும் நோக்குடன் தாக்குதல் நடவடிக்கைகள் முனைப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளை அளம்பிலில் இராணுவத்தை தரையிறக்கி, முகாமிற்குள் போரிட்டுக் கொண்டிருக்கும் படையினருக்கு உதவ இராணுவம் முயன்றது. இச்சந்தர்ப்பத்தில் களத்திற்கு வந்து நிலைமையை மதிப்பிட்ட பால்ராஜ் அவர்கள் தலைவரிடம் நிலைமையும் உடனடித்திட்டத்தையும் தெரிவித்தார். தலைவர் அவர்கள் தளபதி பிரிகேடியர் பானு அவர்கள் தலைமையில் மேலதிக அணியை அனுப்பி வைத்தார். அத்திட்டத்தின்படி தேவாலயத்தின் முன்பக்கமாக நிலையெடுத்திருந்த படையினர் மீது விடுதலைப்புலிகளிடம் இருந்த டாங்கியால் தாக்குதலை ஆரம்பிக்க எதிரி நிலைகுலைந்தான், இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திய படையணி எதிரியின் பகுதியில் உள்நுழைந்து தாக்குதலை மேற்கொண்டு, கடற்கரையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, முகாம் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றது. அத்துடன் அளம்பிலில் தரையிறங்கிய இராணுவமும் எதிர்த்தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் பாரிய இழப்புகளுடன் கடல்வழி தப்பி ஓடியது.

சத்ஜெய முறியடிப்புப் தாக்குதல் முல்லைத்தீவு படைமுகாம் வீழ்ச்சியை தொடர்ந்து ஆனையிறவில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவம் சத்ஜெய ஒன்று இராணுவ நடவடிக்கை மூலம் பரந்தன் பகுதியை கைப்பற்றியது. முன்னேறிய சிங்களப்படையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கைக்கான தலைமையை தலைவர் பால்ராஜ் அவர்களிடம் கொடுத்தார். உடனடியாகப் படையணிகளை வேகமாக நிலைப்படுத்தினார். அத்துடன் இராணுவம் எமது நிலைகளை உடைத்து நகர்ந்தால் உடையும் பகுதியில் உள்ள படையணிகளை மட்டும் மீள் ஒழுங்குபடுத்தி, காவலரண்களை மீளக் கைப்பற்றினால் உடைத்த பாதையால் உள்வரும் இராணுவம் எமது பிடிக்குள் அகப்படும் இதனால் எதிரிக்கு பாரிய இழப்பை ஏற்படுத்த முடியும் என்ற திட்டத்தை வகுத்து, படையணிகளுக்கு விளக்கி, பயிற்சி கொடுத்து தயார்நிலையில் வைத்திருந்தார்.

சிங்களப்படை சத்ஜெய இரண்டு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. ஏ-09 பாதைக்கு வலதுபக்கமாகவும் இடதுபக்கமாகவும் தாக்குதலை தொடங்கிய இராணுவத்தின் தாக்குதல் முனையாக ஏ-09 பாதைக்கு வலதுபக்கம் பிரதானப்பட்டிருந்தது. டாங்கிகளுடன், துருப்புக்காவிகளில் இராணுவத்தை நகர்த்தி முன்னேறிய இராணுவம் விடுதலைப்புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து உள்நகர்ந்தது. நிலைமையை உணர்ந்த தளபதி, லெப்.கேணல் தனம், லெப்.கேணல் ராகவன் தலைமையில் அணிகளை மீள்ஒழுங்குபடுத்தி இரண்டு பக்கத்தாலும் எமது காவலரண் பகுதியால் தாக்குதலை தொடுத்து மீண்டும் பாதுகாப்பு நிலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, இராணுவம் பாரிய இழப்பை சந்தித்துப் பின்வாங்கியது.

விடுதலைப்புலிகளின் காவலரண்களுக்கு முன்பக்கமாகவும் பின்பக்கமாகவும் டாங்கிகள் அழிக்கப்பட்டு இருந்தது இந்த தாக்குதல் தந்திரோபாய, மனோதிட வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும். கிளிநொச்சி நகர் வலிந்த தாக்குதல் ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்த இலங்கை இராணுவம் மாங்குளத்தை அண்மித்துக் கொண்டிருந்தது.
அதேவேளை கிளிநொச்சியில் உள்ள இராணுவத்துடன் இணைந்து கொள்ள குறிப்பிட்ட தூரமே இருந்தது. இந்த நேரத்தில் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்ற தலைவர் முடிவெடுத்தார். இத்தாக்குதல் திட்டத்தில், கிளிநொச்சி நகரப்பகுதியை கைப்பற்ற வேண்டுமாயின் இராணுவத்திற்கு உதவி வருவதையும் இராணுவத்தின் பின்வாங்கி செல்வதையும் தடுக்க வேண்டும் என்பது பிரதான திட்டமான இருந்தது. எனவே பரந்தனுக்கும் கிளிநொச்சி நகரத்திற்க்குமிடையில் ஊடறுத்து மறிப்பு நடவடிக்கையை செய்யும் பொறுப்பை பால்ராஜ் அவர்களிடம் ஒப்படைத்த தலைவர் �உனது நடவடிக்கை தாக்குதலின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கப்போகின்றது. அத்துடன் இது உனக்கு ஒரு பரீட்சார்த்த தாக்குதல் நடவடிக்கையும் கூட� என தெரிவித்தார்.

தாக்குதல் நடவடிக்கையை பொறுப்பொடுத்த தளபதி மிகத்துல்லியமாகத் திட்டமிட்டு கடுமையாக பயிற்சிகளைக் கொடுத்து படையணிகளைத் தயார்ப்படுத்தினார் ஏனெனில் காவலரண்களை ஊடறுக்கின்ற சமநேரத்தில் கிளிநொச்சியிலிருந்து எதிரி ஓடாமலும் பரந்தனிலிருந்து எதிரியின் ஆதரவு கிடைக்கமாலும் இருக்கக்கூடிய வகையில் அணிகளை நிலைப்படுத்தி தாக்குதலுக்கு முகங்கொடுக்கின்ற அதேவேளை, அணிகளை நிலைப்படுத்தும் பகுதிக்கிடையில் இருக்கும் மினிமுகாம்கள், சிக்குப்படும் படையினரை அழித்து அப்பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தயார்நிலையில் நிற்க வேண்டும். மற்றும் கிளிநொச்சி வெற்றியின் பிரதான பங்கு இவரது நடவடிக்கையில் தங்கியிருந்தது.
தாக்குதல் தொடங்கியவுடனேயே ஏ-09 வீதிக்கு அருகில் அதாவது களத்தில் மையத்திற்கு சென்ற பால்ராஜ் அவர்கள் அங்கிருந்து தாக்குதலை நெறிப்படுத்தினார். ஆனையிறவு பரந்தன் பகுதியிலிருந்த இராணுவத்தினர் கிளிநொச்சியில் சிக்குண்ட படையினருக்கு உதவ பல புதிய படையணிகள் டாங்கிகள் சகிதம் கடும் முயற்சியை மேற்கொண்டனர்.

முயற்சிகள் எதுவும் பலனளிக்காது போனது. மற்றும் தளபதி பால்ராஜ் தங்களிற்கு பின்னால் வந்து மறித்து நிற்கின்றார் அதனால் உதவி கிடைக்கவில்லை. இச் செய்தி கிளிநொச்சி நகரப்பகுதியில் சண்டையிட்ட சிங்களத்தளபதிகளுக்கு கிடைக்கின்றது. திகைத்த தளபதிகள் தப்பியோடுவதைத்தவிர வேறு வழியில்லை என்று முடிவெடுத்தனர். இராணுவம் எந்த வித ஒழுங்குபடுத்தலுமின்றி தப்பியோட தொடங்கியது. அங்கு ஓடும் இராணுவத்தை தடுக்கும் நோக்குடன் நிலைப்படுத்தப்பட்ட அணிகளின் உக்கிர தாக்குதலை எதிர்கொண்டது. இத்தாக்குதலை எதிர்பார்க்காத இராணுவம் முன்செல்பவர்கள் சாகச்சாக தப்பியோடும் முயற்சியில் மட்டும் ஈடுபட்டனர். குடாரப்பு ஊடறுப்புத்தாக்குதல் வத்திராயன் பெட்டிச் சண்டையைப்பற்றி தளபதி கூறும் போது �ஆனையிறவுக்கான சண்டையை நீதான் நடத்தப்போகிறாய், நீ சண்டியன், எத்தனையோ சோதனைகளை உனக்குத் தந்திருக்கிறேன் இது நான் உனக்கு வைக்கின்ற பெரிய சோதனை இதற்கான பரீட்சார்த்தத்தை ஏற்கனவே கிளிநொச்சியில செய்து பாத்திட்டேன். எனவே நீ இதையும் வென்று தருவாய் என நம்பிறேன் 1500 பேருடன் தரையிறங்கி கண்டி வீதியை மறிச்சு விநியோகத்தை தடுத்து நிறுத்து, ஆனையிறவு தானாக விழும்.

சூசை உன்னை கடலால் இறக்கி விடுவான் நீ தரையால் தான் திரும்பி வரவேண்டும்� என்ற தலைவரின் திட்டத்தை நிறைவேற்றி ஆனையிறவின் வெற்றிக்கு வழிவகுத்தார். வத்திராயன் பெட்டிச் சண்டை என்பது தமிழ்மக்களின் வீரத்தின் வெளிப்பாடு உலக வரலாற்றில் முதன்மைத் தரையிறக்கச் சண்டையாக பதிவு செய்யுமளவிற்கு, உலக இராணுவ வல்லுனர்களையே வியக்க வைத்தது குடாரப்பு தரையிறக்க தாக்குதல் நடவடிக்கை ஆகும். இலங்கை இராணுவத்தின் ஆகாய விமானங்கள், நவீன கடற்படை, கனரக ஆயுதங்கள், டாங்கிகள் போன்றவற்றைக் கொண்ட பலம் வாய்ந்த 40,000 சிங்களப்படைகளின் நடுவே 1500 போராளிகளுடன் 34 நாட்கள் எதிரியை ஊடறுத்து நின்று துவம்சம் செய்தனர். சிங்களத்தின் முக்கிய இராணுவத்தளபதிகளையும் அவர்களின் தந்திரோபாயங்களையும் வெறும் இலகு, கனரக ஆயுதங்கள் மற்றும் ஆட்லறி பிரங்கிகளின் ஆதரவுச்சூட்டுடன் மட்டும் எதிர்கொண்டு வெற்றி பெற்று, தமிழ்மக்களின் போரிடும் ஆற்றலின், துணிச்சலின், வீரத்தை சர்வதேசம் வியக்கும் வகையில் வெளிப்படுத்தினார்.

இது தமிழ்மக்களின் வீரத்திற்கும் போர்க்குணத்திற்கும் கிடைத்த மகுடமாகும். சுனாமி ஆழிப்பேரலையின் போது 2004 ம் ஆண்டு வாகரையில் அமைந்திருந்த கடற்கரை முகாமில் இருந்தார். திடீரென கடல் உள்வாங்கப்பட்டு அலைகள் உயர்ந்து வேகமான வருவதை பார்த்த பால்ராஜ் அவர்கள், ஏதோ ஆபத்து வரப்போகின்றது என்பதை உணர்ந்து, உடனடியாக வானத்தை நோக்கிச் சுடுமாறு போராளிகளிடம் சொன்னார். திடீரென துப்பாக்கிச் சத்தத்தை கேட்ட மக்கள் பலர் வீட்டுக்கு வெளியே வந்து பார்க்க கடல் உள்நோக்கி வருவதை கண்டு ஓடித்தப்பினர் இதனால் பலர் காப்பாற்றப்பட்டனர்.

அதேவேளை கடற்கரையில் உள்ள முகாமில் நின்ற அவர் கடல் அலைகளுடன் கடுமையாக போராடி உயிர்தப்பினார். அத்துடன் உடனடியாக போராளிகளை ஒழுங்குபடுத்தி சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உடனடி உதவிகளை செய்தார். பால்ராஜ் அவர்களின் தலைமைத்துவப் பாங்கு பால்ராஜ் அவர்கள் எப்போதும் களமுனையில் ஒவ்வொரு காவலரணுக்கும் சென்று போராளிகளிற்கு சண்டையிடும் முறையை சொல்லிக்கொடுப்பார், அடிக்கடி அவர்களை சென்று சந்தித்து அவர்களது தேவைகளை நிறைவேற்றி வைத்து போராளிகளை எப்போதும் உச்ச மனோதிடத்துடன் வைத்திருப்பார். இதனால் பால்ராஜ் அவர்கள் சண்டையை பொறுப்பெடுக்கின்றார் என்றால் போராளிகளிற்கிடையே தனித் தெம்பு ஏற்படுமளவிற்கு நம்பிக்கையான தளபதியாக விளங்கினார். திட்டமிட்ட சண்டைக்கான வேவு நடவடிக்கையை முழுமைப்படுத்த முன் வேவுகள் அனைத்தையும் நேரடியாக பார்த்தே தலைவரிடம் சண்டைத்திட்டத்தை கொடுப்பார். குறிப்பாக அவரது கால் சீராக இயங்காத போதும் கைத்தடியுடன் எதிரியின் முட்கம்பி வரை சென்று இந்த இடம் சண்டைக்கு பொருத்தமானதா? என முடிவெடுப்பது அவரது வழக்கம்.

சிலர் அவரிடம் ஏன் நீங்கள் போய் பார்க்கிறீர்கள் நாங்கள் பார்த்து வருகிறோம் என்றால் அதற்கு அவர் �சண்டையை தலைமைதாங்கும் போது தாக்குதலிடங்களும் தாக்குதல் பிரதேசம் தொடர்பான பூரண விளக்கம் மற்றும் நிலவரம் தெரிந்தாலே சண்டைக்கான கட்டளையை துல்லியமாக வழங்கலாம், அடுத்தது நான் நினைப்பதைப்போல ஒவ்வொரு தாக்குதல் இடமும் தெரிவுசெய்யப்பட்டிருக்கின்றதா! என எனக்கு தெரியவேண்டும். பாரிய படையை கொண்டு செல்லும் பாதையில் என்னை கொண்டு செல்ல முடியாது என்றால் எப்படி படையணிகளை சரியாக கொண்டு செல்வீர்கள்? அத்துடன் நான் உறுதிப்படுத்தி முடிவுகளை தலைவருக்கு சொல்லவேண்டும் எனவே நானும் பார்க்கவேண்டும்� என்பதே போர் அனுபவமும், போரியலில் மாற்றத்தையும் ஏற்படுத்திய தளபதியின் பதிலாக இருக்கும். தளபதி பால்ராஜ் அவர்களைப்பற்றி அவருடைய பல தாக்குதல்கள் பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

தேசியத்தலைவர் அவர்களால் என்னையும் விஞ்சிய போராளி என்று பாராட்டப்பட்ட தளபதி, உலக இராணுவ வல்லுனர்களின் தந்திரோபாயங்களை எல்லாம் வத்திராயன் பெட்டிச்சண்டையில் நிர்மூலமாக்கியவர் மற்றும் பால்ராஜ் ஒரு இடத்தில் வந்து இருந்திட்டால் அவரை வீழ்த்துவது அல்லது அப்புறப்படுத்துவது கடினம் என சிங்களப்படைகளின் மனோதிடத்தையே பலவீனப்படுத்திய தளபதி, போர்க்கலை வல்லுனர் தளபதி பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள்.

இந்நினைவு நாளில் தமிழ்மக்களின் கவனத்திற்காக�.

தழிழீழ விடுதலைப்புலிகளின் போரியல் வரலாற்றில் பல வீரத்தளபதிகளும் பல்லாயிரக்கணக்கான போராளிகளும் வீரச்சாவடைந்துள்ளனர். பல வியக்கத்தக்க மகத்தான போரியல் சாதனைகளை விடுதலைப்புலிகள் இயக்கம் சாதித்தது. போர்க்குணம் மிக்க தமிழினத்தின் வெற்றிகளே இவையாகும். ஆனால் முள்ளிவாய்க்கால் பின்னடைவு என்பது சர்வதேச நாடுகள் வழங்கிய தொழில்நுட்ப உதவி, ஆயுத வெடிபொருள் உதவி, மறைமுக இராணுவ உதவி மற்றும் புலனாய்வு உதவிகளின் விளைவாகவும், பூகோள அரசியல் போட்டி காரணமாக சிங்களத்திற்கு கிடைத்த உதவிகளின் அடிப்படையிலும் ஏற்பட்ட பின்னடைவே அன்றி, சிங்களம் தனித்து நின்று விடுதலைப்புலிகளை அழிக்கவில்லை. அவர்களால் அழிக்கவும் முடியாது. மேற்குறிப்பிட்ட காரணங்கள் அனைத்தையும் தாண்டி இப்பின்னடைவின் அடிப்படை வெடிபொருள் விநியோகம் தடைப்பட்டமையும் மலிந்து போன துரோகத்தனங்களுமே ஒழிய வேறு ஒன்றுமல்ல.

தாயக விடுதலையையும், தமது உயிர்களை விடுதலைக்காக நம்பிக்கையுடன் அர்ப்பணித்த பல்லாயிரக்கணக்கான மாவீரர்களின் கனவுகளையும், மக்களின் பேரிழப்புகளையும் மனதில் நிறுத்தி நம்பிக்கையிழக்காமல், எம்மால் முடியும்! எமது அரசியல் விடுதலைக்காக இறுதிவரை உழைப்போம் என சிந்தனையில் நிறுத்துவதே இந்நாளில் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களிற்கும் மற்றும் மாவீரர்களிற்கும் கொல்லப்பட்ட அப்பாவிப் பொதுமக்களிற்கும் ஆத்மார்த்தமாக வழங்க வேண்டிய வாக்குறுதி.