பெரியார் குறித்துப் பல வகையில் திறனாய்வுகள் வெளிவந்து கொண்டுள்ளன. பெரியார் ஒரு தனி மாந்தர் அல்லர். அவர் ஓர் இயக்கமாகச் செயல்பட்டவர். அவர் மேற்கொண்டு செயல்பட்ட இயக்கத்திற்கென கொள்கை நோக்கங்கள் உண்டு. அக் கொள்கை நோக்கங்களை ஏற்றுக் கொண்டு செயல்படுகிற தேவை தமிழகத்திற்கு இன்றும் இருக்கிறது.
ஆனால் பெரியார் பேசிய அல்லது வரையறுத்த கொள்கைகளும் அக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த அவர் வகுத்த செயல் திட்டங்களும் போதுமானவைதாமா? அவற்றைத் தொடர்ந்து முன்னெடுப்பதாலேயே தமிழகத்தை முழு உரிமை பெற்ற தேசமாக மாற்றிவிட முடியுமா? என்றால் "இயலாது' என்பதே விடையாகப் பெற வேண்டியிருக்கிறது.
அப்படியானால் பெரியாரின் கொள்கையில், செயல் திட்டங்களில் எல்லாம் என்னவகையில் நிறைவு இருக்கிறது, என்ன வகையில் பேதைமை இருக்கிறது என்பது குறித்த ஆய்வு தேவைப்படுகிறது.
அவை பற்றி சுருக்கமான ஆய்வே இக்கட்டுரை:
தமிழ்க் குடியைத் தாழாது உருற்றும் நோக்குக் கொண்டெழுதிய திருவள்ளுவர் தொடங்கி பல்வகை வினை முயற்சிகள் தமிழகத்தில் உண்டு. இருப்பினும் ஆரிய ஆளுமையை நேரடியாகவும் திரைமறைவாகவும் மறுத்தவர் எழுந்து போராட இயலாமையால் முடங்கிப் போன பதிவுகளே அதிகம்.
சில வேளைகளில் ஆரிய ஆளுமை எதிர்ப்புகள் சாக்கிய சமய மீட்டுருவாக்கக் கருத்தியலோடு இணைந்தே இருந்தன; எனவேஅவை தமிழியத் தளமின்றி அலைந்தன. சைவ சமயக் கருத்துடையவர்களோ சமயக் கருத்தினின்று மீளாததோடு, ஆரியத்தின் அடிநோகாமல் அரட்டவே செய்தனர். சமயம் சாராத கருத்து கொண்ட சிலரும் தமிழியத்தில் ஊன்றாமல் தாங்கள் பெருஞ் செயலுக்குத் தளமின்றி காற்றாய் அலைந்தனர். இந்நிலையில், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெரியாரின் செயற்பாடுகள் அதன் முன்பு செயலாற்றிய பலரின்செயற்பாடுகளையும் விஞ்சியிருந்தன. ஆரியத்தின் அடிசாய்க்க ஓங்கி அறைந்தன. அரண்டு போனது ஆரிய வெறிக் கூட்டம். "ஆம், "பெரியார் நம்மிடைப் பிறந்திராவிட்டால் நரியார் நாயகம் இங்கே நடந்திடும்'' என்று பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் குறிப்பிடும் நிலையில் பெரியாரின் உழைப்பு இருந்தது.
"அவர் பேசிய பேச்சுக்களை ஏதென்சு நகரைச் சுற்றி வந்த சாக்ரடீசும் பேசியிருக்க முடியாது. உலகப் பெரும் பேச்சாளர் என்று பெயரெடுத்த மெக்கசுதனீசும் பேசியிருக்க முடியாது. அவர் சுற்றிய தொலைவைக் கிரேக்க மாமன்னன் அலெக்சாண்டரும் சுற்றியிருக்க முடியாது. அவர் பிரெஞ்சு மாமறவன் நெப்போலியனை விடப் போரிட்டார். உருசிய இலெனினைவிடப் பொதுமக்களை நேருக்கு நேராகக் கண்டு பேசினார். குருஷேத்திரப் பாரதப் போரை விட ஆரியத்தின் மேல் அவர் தொடுத்த போர் மிக பெரியது; கடுமையானது. வேறு எவரும் தொடுக்க அஞ்சியது; நினைத்துத் தொடை நடுங்கியது.'' என்ற பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் கருத்தினடிப்படையில் பெரியாரின் பெரும் பணிகள் பெருமைக்குரியன.
பலரும் பொதுப்பட இக்கால் அறியப் பெற்றிருக்கிற வகையில் பெரியார் கடவுள் மறுப்புக் கருத்துக்காகவே பெரும் பொழுது உழைத்தவர் அல்லர். அவரின் முனைப்பு பல்துறை சார்ந்தது. இடஒதுக்கீடு தொடங்கி, சாதி ஒழிப்பு நோக்கிய வகுப்புவாரித்துவம், இந்தி எதிர்ப்பு, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை எதிர்ப்பு, முதலாளிய எதிர்ப்பு, இனவிடுதலை, தமிழ்நாட்டு விடுதலை என அவர் ஏற்றுக் கொண்ட கொள்கைகளுக்காகன செயல்கள் விரிந்தன.
அவர் எடுத்துச் செயலாற்றிய போராட்டங்கள் பிறர் எவரும் அந்தக் காலத்தில் எடுத்துப் போட அஞ்சியவை. பிள்ளையார் உருவ பொம்மை உடைப்பு, இராமன் பட எதிர்ப்பு, கருவறை நுழைவுப் போராட்டம், வடநாட்டான் கடை மறியல், இந்தியக் கொடி எரிப்பு, தமிழ்நாடு நீங்கலாக இந்தியப் பட எரிப்புப் போராட்டம் என எதிரியின் குலை நடுங்கியப் போராட்டங்களாக அவரின் போராட்ட நிகழ்வுகள் இருந்தன.
இந்தியா விடுதலை பெற்ற நாளைப் பொதுவுடைமைக் கட்சிகள் உள்ளிட்டு நகர மன்றத் தலைவரானார். அத்தலைவர் பதவியிலிருந்து விலகித் தனது 40 ஆம் அகவையில் "காங்கிரசு' கட்சியில் இணைந்து செயலாற்றினார். 50 ஆம் அகவையிலும் 53 ஆம் அகவையிலும் வெளிநாடுகளுக்குச் சென்று வந்தார்.
திராவிடர் கழகத்தினர் தங்களது "தோழர்கள்' என அழைத்துக் கொள்ள வேண்டும் என அறிவித்தது, சமவுடைமைக் கருத்தை, வலியுறுத்திப் பரப்பல் செய்தது. 1947 சூலை 1 ஆம் நாளைத் "திராவிட நாடு பிரிவினை நாள்' என அறிவித்துக் கொண்டாடச் செய்தது, வடநாட்டார் ஒருவர் ஆளுநராக அமர்த்தப்பட்டதை எதிர்த்துக் கறுப்புக்கொடி பிடித்துப் போராடியது, 1950 சனவரி 26 ஆம் நாளையும் துக்க நாளாக மேற்கொள்ள அறிவுறுத்தியது, தொடர் வண்டி நிலையப் பெயர்ப் பலகைகளில் இந்தியை அழித்தது, இந்திய அமைப்புகளின் தொழில் நிறுவனங்களை மறுத்து திராவிட விவசாயத் தொழிலார் சஙகம், தென் பகுதி இரயில்வே மென் யூனியன் அமைத்தது, சாதிக்குப் பாதுகாப்பாக உள்ள சட்டப் பகுதிகளை எரித்துப் பத்தாயிரம் பேர் சிறைப்பட்டது, 3000 பேர் தண்டனைப் பெற்றது என்பனவெல்லாம் வரவேற்றுப் பள்ளு பாடி ஆர்ப்பரித்தபோது கிடைத்தது விடுதலை இல்லை என்றும், இந்திய விடுதலை நாள் திராவிடருக்குத் துக்க நாள் என்றும் வீறுரைத்தார் பெரியார்.
தமிழகத்தில் முதல் முதல் தமிழகத்தில் மே நாள் நிகழ்ச்சியை நடத்தியவரும், பொதுவுடைமைக் கட்சி அறிக்கையை முதன் முதலில் தமிழில் பெயர்த்து வெளியிட்டவரும் பெரியாரே ஆவார். அதேபோல் திருக்குறளைத் தீண்டாமல் விட்டொழிக்கும் முயற்சியை ஆரியம் செய்த காலத்தில் "திருக்குறள் மாநாடு' நடத்தியவரும் பெரியாரே. பெரியார் எடுத்த வலுவான அரசியல் போராட்டங்கள். பேராயக் கட்சியில் ஈடுபடத்தொடங்கியது முதல் தம் வாழ்நாள் இறுதி வரையிலான பெரியாரின் அறுபத்தி ஐந்து ஆண்டுக்கால அரசியல் போராட்ட வாழ்க்கை மே நாள் நிகழ்ச்சியை நடத்தியவரும், பொதுவுடைமைக் கட்சி அறிக்கையை முதன் முதலில் தமிழில் பெயர்த்து வெளியிட்டவரும் பெரியாரே ஆவார். அதேபோல் திருக்குறளைத் தீண்டாமல் விட்டொழிக்கும் முயற்சியை ஆரியம் செய்த காலத்தில் "திருக்குறள் மாநாடு' நடத்தியவரும் பெரியாரே.
"புரட்சி குடியரசு, பகுத்தறிவு, இரிவோல்ட், விடுதலை உண்மை என இதழ்கள் நடத்தி அவர் எழுதிக் குவித்தவை ஏராளம். தாமாக நடத்திய இதழ்கள் அல்லாமல் திராவிடன், சண்ட மாருதம், புதுவை முரசு, நகரத்தூதன், திராவிட நாடு, தனி அரசு, பொன்னி முதலான ஏடுகளிலும் அவரின் எழுத்துக்கள் வெளிவந்தன.
அவர் காலத்திலேயே அவர் எழுதி வெளிவந்த நூல்கள் நூற்றுக்கும் மேலானவை. 28 ஆம் அகவையில் காங்கிரசு கட்சியின்
நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்து ஈடுபடத் தொடங்கியவர், தமது 35 ஆம் அகவையில் ஈரோடு என்பது தமிழ்நாட்டின் வரலாற்றையே ஒரு பெரும் திருப்புமுனைக்கு கொண்டு வந்தது என்று கூறினால் அது மிகையல்ல. ஆரியப் பார்ப்பனியத்தை எதிர்த்த பெரும் முயற்சிகள் பெரியாருக்கு முன்பே மிகப் பலராலும் தொடங்கப்பட்டன.
ஆரியத்தைச் சமண புத்தக் கருத்தியலிலிருந்து எதிர்த்தது, சைவக் கருத்தியலிலிருந்து எதிர்த்தது என்பனவெல்லாம், எல்லைக்குட்பட்டவையே. இராமலிங்கரும், அயோத்திதாசப் பண்டிதரும் ஆரியத்தை எதிர்த்தார்களேயானாலும், அவர்கள் நின்றொளிர்ந்தக் கோட்பாடு வெவ்வேறானவை.
அயோத்தி தாசரின் இலக்கு அடி நிலை மக்கள் உயர்வுக்கான எண்ணம் கொண்டது, இராமலிங்கரின் இலக்கு அனைவர் மேலும் சமன்மையான அன்பு செலுத்த வேண்டுமெனக் கூறியது. இருக்கிற சமூக அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு அனைவரிடம் அன்பு செலுத்துவது என்பது, ஆண்டைகளையும் ஆளுமை வகுப்பையும் காப்பாற்றுவதே ஆகும். சமூக மாற்ற நோக்கம் இல்லாமல், சமூக ஆதிக்கங்களை அறுத்தெறிகிற இலக்கு இல்லாமல் சமன்மையைப் படைக்க முடியாது; சாதியை ஒழிக்க முடியாது; ஆரியப் பார்ப்பனியத்தை அடி சாய்க்க முடியாது.
அவ்வாளுமைப் போக்குகளை எதிர்த்துவிடுதலைப் பெற்ற உழைக்கும் மக்களின் அரசை அமைக்கிற நோக்கோடு போராடுவதே விடுதலைக்கு வழிவகுக்கும். அத்தகைய கருத்துக்களில் அக்கறைக் கொண்டவராகச் செயற்பட்டவராகவே பெரியார் இருந்தார். இருப்பினும், அவரின் போராட்ட இலக்குகள் தெளிவானவையாகவும், வழிமுறைகள் இலக்கு நோக்கி நகரக் கூடியவையாகவும், இருந்தனவா என்பதைச் சற்று ஆய்வோடு அணுகியாகவேண்டும்.
1938 இல் மறைமலையடிகள் தலைமையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் இயற்றப்பட்ட தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கைத் தீர்மானத்தை வழிமொழிந்து பேசினார் பெரியார்.
அன்றைய தனித் தமிழ்நாடு கோரிக்கை ஒரு முழக்கமாக 1938 இல் முன் வைக்கப்பட்டாலும் தொடர்ந்து பெரியார் வலியுறுத்தி முழங்கவே செய்தார். முதலில் தமிழ்நாடு தமிழருக்கே என முழங்கத் தொடங்கிய பெரியார் சில காலங்களிலேயே திராவிட நாடு திராவிடருக்கே என மாற்றி பேசத் தொடங்கினார்.
அவருடன் இணைந்து செயல்பட்ட கி.ஆ.பெ. விசுவநாதம், அண்ணல் தங்கோ போன்றோர் தமிழ்நாடு தமிழருக்கே என்பதே சரி என்று கடுமையாக வலியுறுத்தியும், அவ்வாறு தமிழ்நாடு விடுதலைக் கருத்தன்றி, திராவிட நாடு என்று முழங்கினால் தாங்கள் விலகி விடுவதாக அறிவித்து விலகிய போதும் பெரியார் திராவிட நாடு எனும் கருத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டார்.
மேலும் அதன் விடுதலை என்பது குறித்தும் அவர் தெளிவாகப் பேசிடவில்லை. 1940 இல் நடைபெற்ற தென்னிந்திய நலவுரிமைக் கழகத்தின் திருவாரூர் மாநாட்டில், "திராவிடர்களுடைய கலை, நாகரிகம், பொருளாதாரம் ஆகியவை முன்னேற்றமடைவதற்கும், பாதுகாப்பதற்கும் திராவிடர்களின் தேசமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திரியின் நேர் பார்வையின் கீழ் ஒரு தனிநாடாகப் பிரிக்கப்பட வேண்டும்.'' என்று தீர்மானம் இயற்றிப் பரப்புரை செய்தவர், 1944 தென்னிந்திய நலவுரிமைக் கழகம் திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றப்பட்ட சேலம் மாநாட்டில், "திராவிடர் கழகத்தின் முக்கிய கொள்கைளில் திராவிட நாடு என்ற பெயருடன் நம் சென்னை மாகாணம் மத்திய அரசாங்க நிர்வாகத்தின் ஆதிக்கம் இல்லாததும் நேரே பிரிட்டீசு செக்ரட்டரி ஆப் ஸ்டேட்டின் நிர்வாகத்திற்குக் கட்டுப்பட்டதுமான ஒரு தனி நாடாகப் பிரிக்கப்பட வேண்டியது என்ற கொள்கை முதற் கொள்கையாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.'' என்று தீர்மானம் இயற்றிப் பரப்புரை செய்தார்.
தொடர்ந்து 1945 இல் திருச்சியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில்: "திராவிட நாடும், திராவிட நாட்டு மக்களும் திராவிட நாட்டவரல்லாத அந்நியர்களின் எந்த வகையான சுரண்டல்களிலிருந்தும் ஆதிக்கத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டுக் காப்பாற்றப்பட வேண்டும். திராவிடரின் விடுதலைக்குப் போரிட திராவிட விடுதலைப் படை அமைக்க வேண்டும்.'' என்று தீர்மானம் இயற்றினார்.
ஆனால், மொழி வழி மாநிலப் பிரிவுகளுக்குப் பிறகு பெரியாருக்குத் திராவிட நாடு குறித்த கருத்தியல் பின்னடைவு ஏற்பட்டது. எனவே, "கன்னடருக்கும், மலையாளிக்கும், இனப்பற்றோ சுயமரியாதையோ இல்லை; மத்திய ஆட்சிக்கு அடிமையாக இருப்பது பற்றி அவர்களுக்குச் சிறிதும் கவலை இல்லை. சென்னை மாகாணத்தில் 7 இல் ஒரு பாகத்தினராக இருந்து கொண்டு, தமிழ் நாட்டில் அரசியல், பொருளாதாரம், உத்தியோகம் முதலியவற்றில், 3 இல் 2 பாகத்தை அடைந்து கொண்டு, இவை கலந்திருப்பதால் நம் நாட்டைத் தமிழ்நாடு என்றுகூட சொல்வதற்கு இடமில்லாமல் தடுத்து ஆண்டு கொண்டிருக்கிறார்கள். அதனால் இவர்கள் சீக்கிரம் பிரியட்டும் என்றே கருதி வந்தேன்... திராவிட நாடு என்பது இனித் தமிழ்நாடு என முழு சுயேச்சை விடுதலைக்குப் பாடுபட வேண்டும்'' என்ற முடிவுக்கு வந்தார்.
"இனியாவது, "தமிழ்நாடு தமிழருக்கே' என்று ஆரவாரம் செய்யுங்கள்! உங்கள் கைகளில் "தமிழ்நாடு தமிழருக்கே!' எனப் பச்சைக் குத்திக் கொள்ளுங்கள். உங்கள் வீடுகள் தோறும் தமிழ்நாடு தமிழருக்கே என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள், நம் வீட்டுக்குள் அன்னியன் புகுந்து கொண்டதோடு அல்லாது, அவன் நம் எசமான் என்றால், நமக்கு இதைவிட மானமற்றத் தன்மை, இழி தன்மை வேறு என்ன எனச் சிந்தியுங்கள்... புறப்படுங்கள்! தமிழ்நாட்டுக்குப் பூட்டப்பட்ட விலங்கை உடைத்துச் சின்னாபின்னமாக்குங்கள். தமிழ்நாடு தமிழருக்கே!'' என்று நெருப்பு தெறிக்கக் (குடியரசு 23.10.1933 விடுதலை 3.12.1957) எழுதினார் பெரியார்.
தமிழகத்தின் அடிமை நிலை பற்றியும் அந்த அடிமை நிலைகளிலிருந்து விடுதலை பெறுவது எவ்வாறு என்பன குறித்தும் முடிவு கூறிய அவரின் வரிகளில் இருந்த தெளிவு அதற்கான வழிமுறைகள் என்னென்ன, எப்படி என்பதில் இல்லை.
தமிழகம், மொழியால், இனத்தால், அரசியலால், பண்பாடு சார்ந்த வாழ்வியலால், பொருளியலால், வரலாற்றால், பண்பாட்டால், பல்வேறு முடியும்; வரலாற்றை மீட்க முடியும்; பண்பாட்டைக் காக்க முடியும். பொருளியலைத் தீர்மானிக்க முடியும். எனவே, தமிழகத்தில் உரிமை பெற்ற முழு அரசாட்சியை நிறுவுவதே முதன்மை இலக்குப் பணியாகின்றது. பிற அனைத்துச் செயல்பாடுகளும் அந்த இலக்கு நோக்கிய இடைநிலைப் பணிகளாகவே இருக்க முடியும்.
இங்கு இலக்கு இன்னது என்கிற வெளிச்சமான அறிவிப்பும் விளங்குதலும் இருந்தால் தான் இடைநிலைப் பணிகள் அந்த இலக்கு நோக்கி நகர முடியும். அதேபோல் இலக்கு நோக்கிச் செயல்படுவதற்குரிய நீண்ட கால, குறுகிய காலத் திட்டமிடுதலும் தேவை. போராட்ட வழிமுறைகளும் தேவை.
அவற்றையெல்லாம் அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டு அடிமைப்பட்டுக் கிடக்கிறது. தாய்மொழி தமிழில் தமிழர்கள் கல்வி பெற வழி இல்லை; வேலை நடைமுறை இல்லை; ஏன் கடவுள் வழிபாடு கூட தமிழில் செய்ய சமூக அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு அனைவரிடம் அன்பு செலுத்துவது என்பது, ஆண்டைகளையும் ஆளுமை வகுப்பையும் காப்பாற்றுவதே ஆகும். சமூக மாற்ற நோக்கம் இல்லாமல், சமூக ஆதிக்கங்களை அறுத்தெறிகிற இலக்கு இல்லாமல் சமன்மையைப் படைக்க முடியாது; சாதியை ஒழிக்க முடியாது; ஆரியப் பார்ப்பனியத்தை அடி சாய்க்க முடியாது. பெரியார் திட்டமாக வைத்தாரா பேசினாரா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
ஒரு தேச விடுதலைப் போராட்டத்தை முன்னெடுக்கிற கட்சிகளோ, அல்லது அதன் தலைமைகளோ இயலவில்லை. அதுபோல் தமிழர்கள என்பதால் இந்திய ஆட்சி அதிகாரப் போக்கால் இரண்டாந்தர நிலைக்குத் தள்ளப்படும் கொடுமை. தமிழக வரலாற்றைக் காக்க, மீட்கிற வழி இல்லை. அரசியல் வழி உரிமை பெற்ற அரசாகத் தமிழக அரசு இல்லை. இந்திய மற்றும் வல்லரசிய ஆட்சியர்களின் கைப்பாவையாக எடுபிடி அரசாகவே செயல்படுகிறது தமிழக அரசு. எனவே அந்த அரசு ஆட்சியர்களின் ஆளுமை வெறித்தனத்திற்கேற்பவே தமிழக உரிமைகளை இந்தியாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறது.
பொருளியலால் தமிழகத் தண்ணீர் முதல் தொழில், உழவு, மீன் பிடிப்பு என எவையுமே தமிழகத்திற்குரியனவாக இல்லை. எல்லாம் வெளிநாட்டுக் கொள்ளை நிறுவனங்களின் கையில் ஆட்பட்டிருக்கின்றன. இந்திய மார்வாடிகளின் கையில் அடங்கிக் கிடக்கின்றன. இந்நிலையில் தமிழக மக்களின் உரிமை என்பன எவை? எந்தச் சிக்கலைத் தீர்ப்பதன் வழி பிறச் சிக்கல்களைத் தீர்க்க முடியும்.
தமிழகம் முழு அரசுரிமை பெற்ற ஆட்சி செலுத்துகிற போதுதான், அந்த அரசால் மொழியைப் பேண அப்போராட்ட இலக்கிலும் அதற்கான செயல் திட்டத்திலும் தெளிவுற இருக்கிற போதே அந்த இலக்கைச் சென்றடைய முடியும். அது மட்டுமல்லாமல், ஆளுமை அரசு என்கிற உள்முறைக் கருவியை, அதன் செயல்களை அமைதியான செயல்முறையில் கருத்துப் பரப்பலில் மட்டுமே வென்றுவிடமுடியாது.
சோவியத்து ஒன்றியப் புரட்சியாகட்டும், சீனப் புரட்சியாகட்டும், வியட்நாம் விடுதலைப் போராட்டமாகட்டும், கியூபா விடுதலைப் போராட்டமாகட்டும், அவையெல்லாம் போர்ப்படை எழுச்சியோடு இணைந்த செயல் திட்டமிடல் இல்லாமல் நிறைவேறி விடவில்லை. ஆனால் 1938 இலேயே தமிழ்நாடு தமிழருக்கே என முன் மொழியப் பெற்றாலும், இடையிடையே அதன்தேவை குறித்துப் பல நிலைகளில் பெரியாரால் பேசப்பட்டாலும் அதற்கான வரையறுத்த அரசியல் தெளிவையோ, திட்டமிடலையோ, போராட்டச் செயல் திட்டத்தையோ அவர் கொண்டிருக்கவோ, உருவாக்கவோ இல்லை.
மேலும், தமிழ்நாடா திராவிட நாடா என்பதில் வரலாற்றில் ஆய்வியலான வரையறுப்பு அவரிடம் இல்லை. தெலுங்கு, கன்னடம், மலையாள இனத்தவரையும் இணைத்துக் கொண்டு திராவிட நாடு கேட்டும், பின்னர் மாநிலமாக அவர்கள் பிரிந்து போன பின் தமிழ்நாடு எனவலியுறுத்தியும் வந்தவர் தொடர்ந்து தமிழரைத் திராவிடர் இனத்தினர் என்பதனான அடையாளத்திலேயே குறிப்பிட்டு வந்தார். தமிழர்கள் என்று குறிப்பிட்டால் பார்ப்பனர்களும் வந்து புகுந்து விடுவார்கள் என்று சொல்லி அவர் குழம்பியும் இருந்தார்.
1957 இல் இந்தியஅரசு மாநில எல்லைப் பகுப்புகளை நடத்தி முடித்தப் பின் அதனால் இழைக்கப்பட்ட ஏய்ப்புக்களைக் கண்டித்து வலுவானபோராட்டங்களை முன் வைத்தார் பெரியார். அப்போராட்ட வழியில் அவரின் பேச்சுகளும் எழுத்துகளும் வீறார்ந்தநிலையில் இருந்தன. மலையாளம், ஆந்திரம், கர்நாடகம், பிரிந்து போய் அவற்றுக்கெனத் தனிச் சட்ட சபைகள் அமைத்துக் கொண்டன. நமக்கும் அவற்றுக்கும் சம்பந்தமில்லை. என்றைக்காவது நம் நாடு பிரிந்துதான் தீரும். பலரின் உயிர்த் தியாகத்தின் மூலம் தான் பிரிக்க முடியும். நம் நாட்டைப் பிரிக்கவும், பொதுவாக இந்திய நாட்டைப் பற்றியும் சென்னையிலுள்ள சட்ட சபையில் பேசி ஒன்றும் செய்ய முடியாது.
"நேரு அவர்கள் விட்டுச் சென்ற காரியம் வெற்றி பெற பொது மக்களாகிய நீங்களும் கண்ணை மூடிக் கொண்டு காங்கிரஸ் கொள்கையை ஆதரிக்க வேண்டும். காங்கிரசுக்கு நாட்டில் இருக்கும் எதிர்ப்புச் சக்திக்கு ஆதரவு தரக் கூடாது'' (விடுதலை 28.5.1964) என்றும்,"இந்தி ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க எரிநெய்யும், தீப்பெட்டியும் கத்தியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று என் கழகத் தொண்டர்களுக்கு நான் கட்டளை இட்ட பின்னர்தான் போராட்டம் அஞ்சி அடங்கிவிட்டது.'' (தென்மொழி 1965) என்றும் பெரியார் கூறியதிலிருந்து அவர் வைத்திருந்த தமிழக விடுதலைக் கருத்தோடு அவரே முரணாகப் பேசியிருந்தது தெளிவாகும்.
ஒரு வழித்தடம் நோக்கி மக்களை அழைத்துச் செல்லுகிற தலைமைப் பொறுப்பினரும் இயக்கமும் அதன் இலக்கு நோக்கிச் செயற்பாடுகளை வைக்காமல், திசை திரும்பிப் பேசவோ, செயல்படவோ, செய்பவர்களானால் அந்த இலக்கில்தான் சிதைவு ஏற்படும்.
"அடைந்தால் திராவிட பாக்கிசுத்தான் கிடைப்பதற்கு முதலில் எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் பிறகு என்ன ஆனது? ஒரு கத்தியை! வெட்டு! என்றான்... இராசகோபாலாச்சாரியாரின் சட்டையை எல்லாம் கிழித்து விட்டார்கள்; இந்தியை எதிர்த்த மாணவர் எழுச்சிகளைப் பெரியார் கடுமையாகச் சாடியது கொள்கை அளவில் எதிரான நிகழ்வேயாகும். மேலும் இந்தியத்தை அதன் தேர்தல் கட்சியான காங்கிரசைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய சூழலிலும், நேருவின் மறைவின் போதும் காங்கிரஸ் கொள்கையை ஆதரிக்க வேண்டும் என்று பெரியார் கூறியது எவ்வகையிலும் முரணானதே. நாடு; இல்லையேல் சுடுகாடு' என்று பேசியவர்கள், "திராவிட நாடு பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே உள்ளன. நாங்கள் தாம் கைவிட்டு விட்டோம்'' என்றும், "பின்னர் மத்தியில் கூட்டாட்சிசட்டை மேலெல்லாம் தார் ஊற்றிவிட்டார்கள். பிறகு பாக்கிசுத்தான், வந்தே விட்டது. அதேபோல் திராவிட நாட்டை வாங்க முடியும். என்னிடம் திட்டமெல்லாம் இருக்கிறது. (விடுதலை 30.7.1957) என்றவாறெல்லாம் எழுதிய பெரியார் இந்திய அரசை எதிர்த்துப் பெருந்திட்டமிட்டுப் போராடவில்லை.
இதற்கிடையில் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறி தி.மு.க. உருவெடுத்த பின்னர், தி.மு.க.வின் இரண்டகத் தன்மையை எதிர்ப்பதற்காகக் காமராசரையும், காங்கிரசையும் ஆதரிக்கத் தொடங்கினார் பெரியார். அதனால் முற்றும் முழுமையான இந்திய எதிர்ப்பு அவரிடம் முதன்மைப் படாமல் போனது.
1965 இல் மாணவர்களிடையே தன்னெழுச்சியாக நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைத் தன்வயப்படுத்தவும் தணித்து அடக்கவும் தி.மு.க. ஒரு பக்கம் தமிழகத்தை ஏய்த்தது என்றால், பெரியார் அப்போராட்டத்தை ஏற்காமல் மறுத்தும், இழித்தும் பேசிய வகையில் தமிழ்த் தேசிய உருவெழுச்சிக்குத் தடையாகவே அச்சூழலில் இருந்தார். மாநிலத்தில் சுயாட்சி'' என்றும் அதன் பின்னர் "நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக' என்று இப்போது "இந்திய அரசின் கொள்கையே தமிழக அரசின் கொள்கை' என்பதாகவும் எப்படியெல்லாம் இலக்குகளைமாற்றிக் கொண்டே வந்து இறுதியாக எது எதிர்க்கப்பட வேண்டியதோ அதனோடேயே கரைந்து போனதாகவே தி.மு.க. மாறிக் கிடப்பதுவே அதற்குச் சரியான எடுத்துக் காட்டு.
அதுபோலவே பெரியாரின் முயற்சிகளில் செயல் திட்டங்களில் ஏற்பட்ட சில வகை நடைமுறைத் தெளிவின்மைகள் இலக்குக்குப் பின்னடைவைக் கொடுத்தன. ஆக அப்பின்னடைவுகளே இன்று திராவிடர் கழகத்தை முற்றிலுமாக ஓர் இலக்கு நோக்கமற்ற இயக்கமாக மாற்றி இருப்பதற்கான காரணமாக உள்ளன. இந்தியை எதிர்த்த மாணவர் எழுச்சிகளைப் பெரியார் கடுமையாகச் சாடியது கொள்கை அளவில் எதிரான நிகழ்வேயாகும். மேலும் இந்தியத்தை அதன் தேர்தல் கட்சியான காங்கிரசைக் கடுமையாக எதிர்க்க வேண்டிய சூழலிலும், நேருவின் மறைவின் போதும் காங்கிரஸ் கொள்கையை ஆதரிக்க வேண்டும் என்று பெரியார் கூறியது எவ்வகையிலும் முரணானதே.
அதேபோல் தொடக்கத்தில் விடுதலைப் போராட்டத்தை உயிர்த் தியாகம் செய்து கடுமையாகப் போராடி நடத்த வேண்டும் என அறிவித்த பெரியார், பின்னாட்களில் அப்படியான எந்த செயல்களையும் ஏற்கவில்லை. சட்டங்களுக்குட்பட்ட நிலையிலேயே அறிவிப்புகளும் போராட்டங்களும் செய்யலானார்.
"எனது 30 வருடப் பொதுத் தொண்டில் ஒரு செயல் கூட ஒரு போராட்டம் கூட நான் மறைவாய் நடத்தினது கிடையாது. நடத்த அனுமதித்ததும் கிடையாது. என் மீது பொது வாழ்வில் ஏறத்தாழ 20 வழக்குகள் நடந்திருக்கும். ஒன்றுக்குக் கூட நான் எதிர் வழக்காடி இருக்க மாட்டேன். ஒப்புக் கொள்ளவும் தயங்கி இருக்க மாட்டேன்.'' (விடுதலை 26.7.1957) என்றும்,
"பொருளியல் சமத்துவம் என்பது கொள்கையாக இருந்தாலும், மக்களே மக்களிடமுள்ள பொருளைக் கவரும்படிச் செய்வது பொருளியல் வேறுபாட்டை விடக் கேடான செயலாகும். ஆதலால் சட்டம் செய்து அரசேபங்கிட்டுக் கொடுக்கும்படி செய்ய வேண்டும்.'' (விடுதலை 1960)என்றும் பெரியார் கூறிய வழித் திட்டங்கள் புரட்சிக்கான தளத்தில் எந்த வகையில் இலக்கு கொண்டவை என்பதைச் சொல்லி விளங்க வேண்டியதில்லை.
ஆளுகிற ஆண்டை அரசை வீழ்த்தாமல் நாம் விரும்புகிற மக்கள் அரசைப் படைக்க முடியாது. இருக்கிற ஆண்டை அரசு சாதியைக் காப்பாற்றுகிற அரசு, மதவெறிக்கு வழிகோலும் அரசு, வல்லரசியப் பார்ப்பனியப் பண்பாட்டுக்கு வித்தான அரசு, வெளிநாட்டு, மார்வாடிகளின் முதலாளிகளின் கொழுப்புக்கு அரணாகவுள்ள அரசு, ஆக அத்தகைய அரசு அவ்வகை நலன்களையெல்லாம் காப்பாற்றுவதற்கும், அவற்றுக்கெதிரான மக்கள் போராட்டங்களை நசுக்குவதற்குமே காவல்துறையும், படைத் துறையையும், சட்டத் திட்டங்களையும் பரப்பல் ஊடகங்களையும் பயன்படுத்துகின்றன.
எனவே அரசுக்கு எதிரான மக்கள் விடுதலைக் கருத்துக்களையும், போராட்டங்களையும் நசுக்கும் அரசின் முயற்சிகளை மறுக்கிற வகையில் அதன் ஆளுமைப் போக்கை, பொய்ம்மையைத் தூக்கி எறிகிற வகையில் மக்கள் விடுதலை இயக்க கருத்து வலுவுள்ளதான நிலையில் கட்டி எழுப்பப்பட வேண்டும்.
வலுவான புரட்சி இலக்கு கொண்ட அவ்வியக்கங்களே காலஊழியில் மக்களிடையே காலூன்றி ஆண்டைகளை எதிர் கொண்டு போராடி வெல்ல முடியும்.
அத்தகைய ஆண்டை அரசை வீழ்த்துகிற திட்டம் பெரியாரின் போராட்ட வழித்தடத்தில் செய்யப் பெறவில்லை என்பதை உணர்தல் வேண்டும். உடனடியாகக் கருவிப் புரட்சி செய்கிற அளவில் குமுகம் இல்லை என்றோ, குமுகச் சீர்திருத்தப் பணயமே நிறைய இருக்கிற போது, கருவிப் புரட்சிக்காகத் திட்டமிட வேண்டுமென்பது சரியில்லை என்றுமாகக் கூட பெரியார் சொல்லவில்லை.
தேர்தல் சட்டமன்றமும் நாடாளுமன்றமும் பொறிக்கத் தின்னப் பயன்படுகின்ற இடமாக இருப்பதைக் கடுமையாகப் பெரியார் சாடிய போதும் தேர்தல் புறக்கணிப்பு என்பதைப் பெரியார் வலியுறுத்தவில்லை. அத்தோடு மட்டுமல்லாமல் ஏதேனும் ஒரு கட்சிக்கு, குறிப்பாகத் தமிழக ஆளுங் கட்சிக்கு ஆதரவாகத் தொடர்ந்துகுரல் எழுப்பவே செய்தார் என்பதையும் கவனித்தாக வேண்டும்.
எனவேதான் பெரியார் பல நிலைகளில் தேவையான கருத்துக்களை முன்மொழிந்தாலும் அவை நடைமுறைக்கேற்ற நிலையில் அல்லாமல் குழப்ப நிலை ஏற்பட திரித்துப் பேச, திரித்து நடக்க ஏற்றதாக மாறிப்போனது. முழுமையான வரையறையற்ற அவரின் சில சிந்தனை வெளிப்பாடுகள் தமிழகத்தை இன்றுவரைக் குழப்பி வைத்திருக்கின்றன என்பதைப் பெரியாரின் செயல்களை நுணுகிப் பார்க்கையில் அறிய முடியும். மற்றபடி இதையெல்லாம் ஆக்க வழியில் அணுகாமல் பெரியாரை வேறு சில வகையில் அவரின் தாய்மொழி தமிழ் இல்லை என்பதாகவும் அவர் தாழ்த்தப்பட்டோர் விடுதலைக்குப் பணி செய்யவில்லை என்பதாகவும் கொச்சைப்படுத்துவதும் இழித்துறைப்பதுமான கருத்துக்கள் தமிழ்ச் சமூகப் பொறுப்பற்றவை என்பதோடு அவை தமிழகத்திற்கு தமிழக மக்களுக்கு கேடு விளைவிப்பவை என்றும் தெளிதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக