மும்பையில் 21 பேர் குண்டுவெடிப்பில் பலியானதை தொடர்ந்து ஒளிபரப்பி இந்தியாவில் வாழும் 120 கோடி மக்களுக்கும் , கொல்லப்பட்டது நம் இந்திய உறவுகள் என்ற உணர்வை எற்படுத்துகிற தமிழக மற்றும் தென்னிந்திய வட இந்திய தொலைக்காட்சிகளுக்கு ஏனோ இலங்கை கடற்படையினரால் நம் தமிழர்கள் 600 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட போது இவ்வுணர்வு எங்கே போனது ! (பாசாங்கு தறுதலைக்கு நடந்த பாராட்டு விழாவை நேரடியாய் ஒளிபரப்பவும்,சாமியாருக்கும் நடிகைக்கும் மான நல்ல உறவை காட்டவும்,ஈழத் தமிழர்களை கொல்ல உதவிய ஏர்டெல நிறுவனம் நடத்தும் மலையாளிகள் மட்டுமே கலந்து கொள்ளும் தமிழ் பாட்டுப் போட்டிகளை காட்டவும் ,பேயா பிசாசா என்று பீதிகள் வர பேதைகள் விவாதிக்க பெருச்சாளி தீர்ப்பு சொல்ல ,இரவு படுக்கையில் இளங்காளையாய் செயல்பட இரகசிய கேள்வி நடத்தும் இலட்சிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி நாசமாய் போகும் தமிழ் தொலைக் காட்சிகள் இந்திய தொலைக்காட்சிகளின் இந்தி உணர்வை புரிந்து கொண்டால் சரி.)
--
பாலாஜி ,
கோவை .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக