சனி, 26 மார்ச், 2011

ஆம் எம்தோழன் பிரபாகரன் பாசிஸ்டுதான்


 "சண்டை முடிஞ்ச பிற்பாடு எல்லாப்படைகளும் பாசறை திரும்பின. அப்போது தலைவர் என்னிடம் வந்து தம்பி வா நாம் சண்டை நடக்கும் இடத்தை பார்த்துவிட்டு வருவோமென கதைத்தனம். நானும் சரியென்று போகத்தலைப்பட்டனம். சண்டை நடந்த இடத்தை நாங்கள் பார்வையிட்டபோது திடுமென பத்து சிங்களச் சிப்பாய்கள் அவ்விடத்தில் வந்து ஏகே 47 துப்பாக்கியால் சுட ஆரம்பித்துவிட்டார்கள். தலைவர் என்னை மறைந்து கொள்ளச் சொல்லிவிட்டு திடுமென பாய்ந்து சென்று அந்த பத்துபேரையும் தமது இருகைகளால் வளைத்து இறுகப் பிடித்துக்கொண்டார். அந்த பத்து சிங்கள சிப்பாய்களும் சிங்களத்தில் விடுங்கோ விடுங்கோவென கத்திக்கொண்டே திமிறினார்கள். அதைக் கண்டு அண்ணன் சிரித்தவாறு ஒருவன் தலையைப் பார்த்து பூ என ஊதினார். அவன் தலை அப்படியே பறந்துபோனது. முண்டம் மட்டும் திடுமென தலைவர் காலடியிலே விழுந்தது.
தலைவர் மெல்ல புன்னகைத்தபடியே என்னைப் பார்த்தார். தம்பி நீ ஆட்களை கொன்றிருக்கிறாயா என்று கேட்டார். இல்ல தலைவரே என்றேன். ம் மூச்சைப்பிடித்து இவர்கள் தலைகளை ஊதித்தள்ளு என்றார். நானும் புஸ் புஸ்ஸென்று பாம்புபோல ஊதிப் பார்த்தேன், வெறும் காத்துதான் வந்தது. வெறுங்காத்துதான் வருது என்று தேவர்மகன் ரேவதிபோலச் சொன்னேன். தலைவர் வெடிச்சிரிப்பு சிரித்துவிட்டு மற்ற ஒன்பது சிங்கள சிப்பாய்களின் தலைகளையும் புஸ் புஸ்ஸென்று ஊதித்தள்ளினார். அத்தனை உடல்களும் திடும் திடுமென நவகிரகங்கள் போல தலைவர் காலடியில் வீழ்ந்து கிடந்தது. அப்போது தூரத்தில் தம்பிகள் கிபீர் விமானங்கள் வரும் எச்சரிக்கை மணியை ஒலித்தார்கள். அங்கு மறைய இடம் ஏதுமில்லை. எனவே உடனடியாக அவ்விடத்தை காலி செய்தாகவேண்டும்.
தலைவர் சுற்றும் முற்றும் பார்த்தார். உடனே, பொடியாள் என்று என்னை செல்லமாய் அழைத்து அப்படியே என்னை முதுகில் உப்புமூட்டை தூக்கிக்கொண்டு வலதுகாலை கீழே உந்தித்தள்ளினார். நான் தலைவரே நான்போய் எப்படி உங்கள் முதுகில் என்று சொல்லி ஆனாலும் அவர் பேச்சைத் தட்டாமல் உப்புமூட்டை ஏறிக்கொண்டு அவரையே உற்றுப் பார்த்தேன். அவர் அப்படியே வானில் பறக்க ஆரம்பித்தார். தலைவா தலைவா என்று நான் கண்களில் கண்ணீர் வடிய அரற்ற ஆரம்பித்தேன். இலங்கை அரசின் கிபீர் விமானங்கள் வரும்போது நாங்கள் மேகக்கூட்டத்தில் பறந்துகொண்டிருந்தோம். நான் அப்படியே வியந்துபோய் மேலேயிருந்து ஒரு கிபீர் விமானத்தின்மீது புளிச்சென்று காறித்துப்பினேன். அந்த எச்சில் அப்படியே விமானத்தின் முன்கண்ணாடியில் விழுந்தது. அந்த விமானி சிறிதுநேரம் அப்படியே சிறிதுநேரம் கண்தெரியாமல் திகைத்து நின்றான். தலைவர் ஹாஹாவென வெடிச்சிரிப்பு சிரித்து சரியான பொடியள் நீ என்று சொன்னார். பின்பு நான் பத்திரமாக வீடுவந்து சேர்ந்தபிறகு இதைப்பற்றி உடனே எல்லாரிடமும் சொல்லத்தொடங்கினேன். அதற்கு தோழர்கள் அ.மார்க்சும் சுகனும் இனிமே எல்லாம் அப்படித்தான் என்றார்கள்”.
வெளிவரப்போகும் சோபாசக்தியின் பெயரிடப்படாத சுயசரிதையின் கொரில்லா அனுபவங்கள் மற்றும் பிரபாகரன் என்ற தலைப்பில் வந்த முதல் பகுதியில் வெளியாகவிருக்கும் சுயானுபவங்கள். ('நான் அப்படிச் சொல்லலை, புலிகள் சாதி பாக்கலை, சாதி வளர்க்கலை' என்று டகால் பல்டி அடித்திருக்கும் சோபாசக்தி அடுத்து இப்படித்தான் எழுத முடியும்.) நிற்க.
communistsஜான் ஓஸ்பார்ன்- ஆங்கில நாடக இலக்கியங்களில் இவருக்கு தனி இடம் உண்டு, 1950களில் இவரின் தனிநபர் கதாபாத்திரங்களை சுற்றிலும் நடக்கும் நாடகங்கள் மிகவும் பிரசித்தம். ஒரே ஒரு வீட்டிற்குள் நடக்கிற வெறும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை மட்டுமே முதலீடாகக் கொண்டு இவர் எழுதிய நாடகங்கள் பரந்தளவிலான மக்களின் கவனத்தைப் பெற்றன. இவர் ஒரு கோபக்கார இளைஞன் என்று அழைக்கப்பட்டதற்கேற்ப இவரின் அனைத்து கதாபாத்திரங்களும் காலங்காலமாக பின்பற்றப்பட்டுக்கொண்டிருந்த அலங்காரமான உரையாடல்களை (இந்த உரையாடல்கள் எப்படியிருக்கும் என்று உங்களுக்குத் தெரியவேண்டுமானால் உடனே அண்ணன் வைகோவும், நாஞ்சில் சம்பத்தும் பேசுவதை கேட்குமாறு கேட்டுக்கொள்கிறேன்) தவிர்த்துவிட்டு சாதாரண உரைநடையில் கிண்டலும் குத்தலுமான உள்ளுர் மொழியில் பேச ஆரம்பித்தன. இவரின் முக்கிய கதாபாத்திரம் அனைத்து கதாபாத்திரங்களையும் கோபம் கலந்த மொழிகளில் வாங்கு வாங்கென்று வாங்கி போட்டுத்தாக்கும் (இதற்கு உதாரணம் வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் ஒரு கவிஞர் தண்ணியைப் போட்டுவிட்டு மற்றவர்களைத் திட்டுவதைப் பார்க்கவும்).
ஜான் ஓஸ்பார்ன் கோபத்தில் திரும்பிப்பார் என்றொரு நாடகத்தை எழுதியுள்ளார். இது 1956 ஆம் ஆண்டு மேடையேற்றப்பட்டது. இந்த நாடகம் அவரின் அனைத்து நாடகங்களும் எப்படியிருக்கும் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம். சரி, இனி இந்த நாடகத்தின் கதையைப் பார்ப்போம். முக்கியமாக இந்த நாடகம் ஒரு நபரைச் சுற்றியே பின்னப்பட்டுள்ள கதை என்பதால் நமக்கு இந்த நாடகத்தின் கதாநாயகன் (கதைநாயகனெல்லாம் ஓஸ்பார்னின் விடயத்தில் கிடையாது) பெயர் மட்டும் தெரிந்தால் போதும், அந்தளவிற்கு அவர் கதாநாயகனுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். மற்ற பாத்திரங்களின் பெயர் தேவையில்லை. இந்நாடகத்தின் கதாநாயகன் ஜிம்மி போர்டர் வேறொருவருமில்லை. அது ஓஸ்பார்ன்தான். போர்டர் மிட்லேண்டில் நகரத்திலுள்ள ஒரு வீட்டில் தனது மனைவி மற்றும் நண்பனோடு வாழ்ந்து வருகிறான். பல தொழில்கள் நடத்த முயற்சி செய்தும் ஒன்றும் பலிக்காமல் இறுதியாக இனிப்புக்கடை ஒன்றை தனது நண்பனோடு நடத்தி வருகிறான்.
தினமும் தனது மனைவியை பாடாய் படுத்துகிறான். நண்பனோடு கட்டி புரண்டு தனது வீட்டிற்குள்ளேயே சண்டையிடுகிறான். மனைவியிடமும் தனது நண்பனிடமும் தான் பாலியல் உறவுகொண்ட (நம்மாளு பதினாலு வயசுலேயே பழுத்திட்டாரு) பெண்களை வரிசைப்படுத்தி பெருமையடிக்கிறான் (சோபாசக்தி நினைவிற்கு வந்தால் நிர்வாகம் ஜவாப்தாரி ஆகாது). அவனிடம் திட்டு வாங்காத ஆட்களே இல்லை. அந்த ஊரின் பிஷப் முதல் பத்திரிக்கைவரை அத்தனையையும் வசவு கொளுத்தி எடுக்கிறான். அந்த ஊரின் தேவாலயத்தில் மணியடித்தால் அதை திட்டுகிறான்; பொண்டாட்டி துணிக்கு இஸ்திரி போட்டால் அவளைத் திட்டுகிறான்; ஞாயிற்றுக்கிழமை செய்தித்தாளுக்கு திட்டு; அதில் வெளியாயிருக்கும் செய்திகளுக்கு திட்டு; செய்தியில் வரும் மக்களின் மதச்சடங்குகளுக்கு திட்டு; செய்தித்தாளை உரத்துப்படிக்கும் நண்பனுக்கு திட்டு; நண்பனுக்கும், தனக்கும் செய்தித்தாள் படிக்கும்போது தேநீர் போட்டுத்தந்த மனைவிக்கு திட்டு; போட்டுத் தரவில்லையென்றால் அதற்கும் திட்டு; அவளைப் பெற்ற பாவத்திற்கு அவளின் அப்பா, அம்மாவிற்கு ஏகத்திட்டு; அவளின் தம்பிக்கு உருப்படாத பய என்று திட்டு (தம்பி பின்பு அமைச்சராகி தான் உருப்படவே போறதில்ல என்று நிரூபித்தது வேற கதை). சும்மா வசவு மன்னன். சுருக்கமாகச் சொன்னால் நம்ம லீனா மணிமேகலை கவிதைபோல அந்தப்பய இந்தப்பய கதைதான் (அண்ணன் அ.மார்க்சு பொறுத்தருள்வாராக).
இப்படியாக கதை சென்றுகொண்டிருக்கும்போது லீனாமணிமேகலை சார்பாக அ.மார்க்சு நடத்திய கூட்டத்திற்கு மகஇக சென்றதுபோல் ஒரு பிரேக். போர்ட்டரின் மனைவியின் நண்பி (பெயர் ஹெலெனா) ஒருவள் ஒரு வேலை விடயமாக இவர்கள் வீட்டிற்கு வந்து ஒருநாள் தங்குகிறாள். தங்கியதோடு மட்டுமல்லாமல் நம்ம போர்டரை தங்க வெச்சது குத்தமா என்று கேட்க வைக்கிறாள். வந்த ஹெலெனா தனது நண்பிக்கு பெண்ணியமெல்லாம் சொல்லிக் குடுத்து கணவனுக்கு எதிராகத் திருப்புகிறாள். அந்த நேரம் பார்த்து ஜிம்மியின் இன்னொரு நெருங்கிய நண்பனின் அம்மாவிற்கு உடம்பு சரியில்லாமல்போக அவளைப் பார்க்க லண்டன் வருமாறு ஜிம்மி தனது மனைவியை அழைக்கிறான். அதற்கு அவள் முடியாது என்று சொல்லிவிட்டு தனது தோழியோடு (நண்பிடா…) தேவாலயத்திற்கு சாமிகும்பிட சென்று விடுகிறாள். ஜிம்மி கோபத்தோடு சென்றுவிடுகிறான். திரும்பவருவதற்குள் நம்ம ஹெலெனா அவளை இந்தப்பயலோடு எப்படி குடித்தனம் பண்ற என்று கேட்டு அவள் அப்பா வீட்டிற்கு செல்லுமாறு வலியுறுத்துகிறாள். அதற்கு முன்பாகவே ஹெலெனா தனது தோழியின் அப்பாவிற்கு அவரது மகள் கணவனிடம் சிக்கி அல்லல் படும் விடயங்களை சொல்லி கடிதம் எழுதிவிடுகிறாள்.
அவளது அப்பா ஒரு ராணுவ கேணல். அவரும் உடனடியாக திரும்பிவந்து மேஜர் சுந்தரராஜன் மாதிரி, என் மகளே, மை டாட்டர், நாம போலாம்மா போலாம், லெட்ஸ் கோ என்று சொல்லி தனது மகளை புகுந்தவீட்டில் இருந்து அவள் கணவன் வரும்முன்பே அழைத்துச்சென்று விடுகிறார். இந்த விடயங்களை தமிழ்தேசியர்கள் புகுந்த கேள்விகேட்கும் கூட்டத்தில் அகப்பட்டுக்கொண்ட அ.மார்க்சு மாதிரி அமைதியாக முகத்தை வைத்துக்கொண்டு கவனிக்கிறான் ஜிம்மியின் நண்பன். சரி நம்ம நண்பன் வந்தால் நமக்கு கும்மாங்குத்து உண்டு என்று சொல்லிவிட்டு நானும் போறேன்பா என்று சொல்லிவிட்டு அவனும் இடத்தை காலி செய்து விடுகிறான். இப்போது காரணமேயில்லாமல் ஒரு சொத்தைக்காரணத்தை சொல்லிவிட்டு நமது ஹெலெனா மட்டும் இருக்கிறாள். ஜிம்மி லண்டனில் இருந்து திரும்பி வருகிறான் (அதேநேரத்தில் அவன் பார்க்கச் சென்ற நேரத்தில் அந்தக்கிழவி வேறு மண்டையைப் போட்டு விட, தலைவர் மிகவும் சோகத்தில் திரும்பி வருகிறார்). பார்த்தால்... இங்கு மனைவி இல்லை... மனைவியின் தோழியிருக்கிறாள். விசாரித்தால் நரேந்திரமோடி மாதிரி ஆமாம் நான்தான் உன் பொண்டாட்டிய அனுப்பினேன், அதுக்கு இன்னாங்கிற நீஸ அப்படி என்று ஓபன் ஸ்டேட்மெண்ட் வேற விடுகிறாள் அவள்.
நம்மாளு ஏற்கனவே கோபக்காரரு... இதில இதுவேற... உன்னை அடி வெளுத்திருவேண்டி என்று சொல்லி அடிக்க கையைக் கூட ஓங்குவதற்கு முன்பாக விட்டா பாருங்க அவ ஒரு அறை. அப்புறம் நடப்பதுதான் கதையின் முக்கிய திருப்பம். இறுதியாக அடிக்க வந்த கைகள் அணைக்க... இருவருக்கும் காதல் முகிழ்த்து முத்தமிடுகிறார்கள். இருவரும் கணவன் மனைவியாக குடித்தனம் வேறு நடத்த ஆரம்பிக்கிறார்கள். ஒருநாள் அப்பாவோடு கோபித்துக்கொண்டுபோன ஒரிஜினல் மனைவி வீடுதிரும்பி வந்து பார்த்தால் இவர்கள் இப்படி அப்படியாக இருக்கிறார்கள். கண்ணீர், கதறல், அழுகை, ஆறுதல்... இறுதியாக உண்மையான கணவனும் மனைவியும் ஒன்றிணைகிறார்கள். மனைவியின் தோழி தவறை உணர்ந்து அல்லது தவறை உணர்வதுபோல நடித்து திரும்பிச் செல்கிறாள். திரை விழுகிறது.
என்ன கதை நம்ம திரைப்பட இயக்குநர் சாமி கதைபோல இருக்குது என்று நினைக்கிறார்களா? பொறுமை. இது மிகவும் பிரசித்தபெற்ற ஓஸ்பார்ன் என்ற எழுத்தாளரின் சுயசரிதை என்று வேறு சொன்னேன். நீங்கள் கேட்கலாம். ஓஸ்பார்ன் என்ன சோபாசக்தியின் முந்தைய பிறவியா என்று. நினைவில் இருக்கட்டும் சோபாசக்தி, அனைத்துலக வாசகப் பெருமக்களிடமும் தமிழச்சி விவகாரத்திற்கு பிறகாக ‘ஆமாண்டா நான் பொம்பள பொறுக்கித்தாண்டா’ (நமக்கு அவரளவிற்கு தத்துவார்த்த அறிவில்லாத காரணத்தினால், அவரின் அரசியல் கோட்பாடுகளிடம் பெற்ற சுடரின் வெளிச்சத்தில் பெற்ற அறிவை அண்ணன் பாமரன் பாணியில் எளிமைப்படுத்திய சொற்றொடர் இது) என்று ஒத்துக்கொண்டவர். அதை பின்பற்றப்போவதாகவும் பீதியை கிளப்பி இருப்பவர். அதுபோல இருக்கிறாரே இந்த ஓஸ்பார்ன் என்று நீங்கள் கேட்பது நியாயமானதுதான். ஆனால் விடயம் எதுவானாலும் ஓஸ்பார்னின் வாழ்க்கை பிரதிபலிப்புதான் இந்த நாடகம். அவரின் பிரதிபலிப்புதான் நமது ஜிம்மி போர்ட்டர்.
இந்தக்கதையை இப்படியே கேட்டால் இது ஒரு மோசமான கதை என்றும் அல்லது ஒரு ஆணாதிக்கவாதியின் கதை என்று நீங்கள் முடிவுக்கு வரலாம். ஆனால் அது உண்மையல்ல. அப்படி நீங்கள் அவரை ஆணாதிக்கவாதியாகப் பார்த்தால் நீங்கள் ஒரு சரியான விமர்சகர் அல்ல என்று உண்மையில் சமூகம் உங்களைப் பழிக்கும். ஏனெனில் ஒரு விடயத்தை விமர்சிக்கும்போது விமர்சகன் கைக்கொள்ளவேண்டியது வரலாற்றியல் பொருள்முதல்வாதம் என்ற கோட்பாடு. தோழர் ந.தர்மராஜ் (இவர் ஓர் ஆங்கிலப் பேராசிரியர் என்பது உபரித்தகவல்) ரசியா சென்று மொழிபெயர்ப்புப்பணியில் ஈடுபட்டபோது மார்க்சிய நோக்கில் ஷேக்ஷ்பியர் என்ற நூலை மிகவும் விரும்பி மொழிபெயர்த்ததாக சொல்கிறார். முடிந்தால் வாசித்துப்பாருங்கள், மதுரை பாரதி புக்ஹவுஸ் புத்தகக்கடையிலும் நியுசெஞ்சுரி புத்தக்கடையிலும் கிடைக்கும். அந்தப் புத்தகம் ஷேக்ஷ்பியரை ஒரு முற்போக்காளனாக காட்டியிருக்கும். பாட்டாளி வர்க்கம் உருவாகாத காலங்களில் நிலவுடமைக் காலங்களில் இங்கிலாந்தின் முற்போக்கு வடிவம் பற்றி மிகச்சிறப்பாக விமர்சிக்கும் விவரிக்கும் புத்தகம் அது.
இப்போது நாடகத்திற்கு வருவோம். 1950களில் இங்கிலாந்து பாட்டாளிவர்க்கம் உலகை முன்கொண்டு செல்ல பல காரணங்கள் இருந்தும் சோப்ளாங்கியாக இருந்து அயர்லாந்து தேசியஇன விவகாரத்தில் விக்டோரியா காலத்திலேயே கார்ல் மார்க்சிடம் குட்டு வாங்கிய வர்க்கம். அந்த வர்க்கக்கண்ணோட்டம் இந்த நாடகத்தை நாம் விமர்சிக்கும்போது மிகவும் முக்கியம், அவசியம். இப்போது நாம் நாடகத்தை வரலாற்றியல் பொருள்முதவாதக் கண்ணோட்டத்தின்படி அணுகலாம். ஜிம்மி ஒரு பாட்டாளி வர்க்கத்தைச் சேர்ந்தவன். அவன் மனைவி ஒரு மேல்தட்டு மத்தியதரக்குடும்பத்தைச் சேர்ந்தவள். அதுபோக ஜிம்மி பல்கலைக்கழக படிப்பை வறுமையின் காரணமாக பாதியில் கைவிட்டவன். அவன் இச்சமூகத்தின்மீதான வெறுப்பை பல்வேறுவழிகளில் வெளிப்படுத்துகிறான். அதில் ஒன்றாக மேல்தட்டுக்குடும்பங்களின் மீதான வெறுப்பு அவன் மனைவிமீது திரும்புகிறது. அதுபோக நீங்கள் பாலியல் ஒழுக்கம் பற்றிக் கேட்கலாம். பாட்டாளி வர்க்கத்திற்கு அதுபற்றிய மிகப் பெரியளவு பிரக்ஞையெல்லாம் கிடையாது. ஆனால் அது மேம்பட்ட உறவை நிலைநாட்டுவதாய் இருக்குமேயொழிய புகைவண்டி நிலையத்தில் அடிவாங்குவதில் முடிவதாய் இருக்காது. இதுபற்றி மேலும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் தத்துவார்த்தரீதியாக ஏங்கெல்ஸ் மற்றும் பெரியாரையும், நடைமுறை ரீதியில் ஏதேனும் சந்தேகமிருந்தால் ரசியாவின் ஒருகோப்பை தண்ணீர்த் தத்துவத்தையும் அல்லது தொழிற்சாலைகளில் பாட்டாளி வர்க்கத்தினரின் வாழ்க்கை முறையையும் கவனித்துப் பார்க்கவும்.
ஓஸ்பார்ன் தன்மீதும் தன்கோபத்தின்மீதும் ஒரு இரக்கபார்வை பார்க்குமாறு இந்த நாடகத்தின் மூலம் மக்களை இரஞ்சுகிறான். தன்கோபத்திற்கு வரலாற்றுக் காரணம் உண்டென்று சொல்கிறான். நான் எல்லோரையும் வெறுக்கவில்லை என்று மன்றாடுகிறான். பசியிலும் பட்டினியிலும் கிடந்த எங்கள்மீது இந்த திமிர் பிடித்த பணக்கார வர்க்கத்தின் பிரதிநிதிகள் எப்படியெல்லாம் கிண்டல் மொழிகளைக் கொட்டினார்கள். இவர்களை நாங்கள் திட்டக்கூடாதா என்று எதிர்கேள்வி கேட்கிறான். நீங்கள் வரையறுத்தபடிதான் நாங்கள் இவர்களை பழிக்குப்பழி வாங்கவேண்டுமா? இது என்ன நியாயம் என்று கேட்டு தட்டுத்தடுமாறி மேலேறி வரும் பாட்டாளிவர்க்கமும் அதன் பிரதிநிதிகளும் பணக்கார வம்சத்தை அவர்களுக்குத் தெரிந்த வரையில் தெரிந்த வகையில் பழிவாங்குகிறார்கள். அதில் உதிரித்தன்மையும், அமைப்பாக்கப்படாத பாட்டாளி வர்க்கத்தின் அனைத்துப்பண்புகளும் வெளிப்படுகிறது. பேராசான் மாவோ தலைமையிலான சீன பொதுவுடமைக்கட்சியில் உதிரியாகயிருந்த தோழர் ஓருவர் பின்பு மத்தியக்குழு உறுப்பினர் ஆனதும் இன்றை இந்திய மாலெ இயக்கங்களில் உதிரிப்பண்புடையவர்கள் பின்னாட்களில் மக்களுக்காக தமது இன்னுயிரை ஈந்து வீரச்சாவெய்திய கதையும் உண்டு.
இப்படித்தான் எதைப் பார்த்தாலும் வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தோடும் இயங்கியல் நோக்கிலும் காண வேண்டும் என்று மார்க்சிய மூலவர்கள் கூறுகிறார்கள். வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம் என்றால் என்ன என்று அய்யந்திரிபுற புரியாதவர்களுக்கு எளிமைப்படுத்தி விளக்கவேண்டுமென்றால் பச்சைக்குழந்தையை பறக்கச் சொல்லக்கூடாது, வயதான தாத்தாவை தவளச் சொல்லக்கூடாது (மேலும் விளக்கங்கள் வேண்டுமென்றால் மார்க்சிய பாலபாடம் பற்றி மார்க்சியம் அனா ஆவன்னா என்ற தலைப்பில் தோழர் தியாகு எழுதிய புத்தகத்தை வாசித்தால் எளிதாக புரிபடும்). மேலே சொன்ன நாடகத்தை அண்ணன் அ.மார்க்சும் படித்திருப்பார், அதை வரலாற்றியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தின் வெளிச்சத்தில் பார்த்திருப்பார். அந்தப் பார்வையில் எழுதியதுதான் அவர் எழுதிய பெரும்பாலான கட்டுரைகள். அப்படித்தான் இந்த அ.மார்க்சு போன்ற எழுத்தாளர்கள் அனைவரும் தம்மை சூரப்புலிகளாக காட்டிக்கொண்டது. உண்மையில் இவர்களின் இந்த பார்வை பாட்டாளிவர்க்கம் இவர்களுக்குப் போட்ட பிச்சை. ஆனால் இவர்கள் ஏதோ இதை தாமே கண்டுபிடித்ததாக தம்பட்டம் அடித்துக்கொள்கிறார்கள்.
சரி விடுங்கள், மீண்டும் கதைக்கு வருவோம். இப்படி தனிநபர் ஒருவரின் குறைகளையே மார்க்சிய வெளிச்சத்தில் கண்டு விளக்கம் அளிப்பவர்கள் ஏன் மகத்தான ஈழப்போராட்டத்தை முன்னெடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளை மட்டும் பாசிஸ்டுகளாக முத்திரை குத்துகிறார்கள் என்பதுதான் நமது கேள்வி. தவறுகளோடு கூடிய பாட்டாளி வர்க்கத்தைக் கொண்ட அந்த அணி எப்படியும் பாரிஸ் கம்யூனில் தோல்வியைத் தழுவும் என்று தெள்ளதெளிவாகத் தெரிந்தாலும் பேராசான் மார்க்சு அந்த முளைவிடும் பிரெஞ்சு பாட்டாளி வர்க்கத்தை அள்ளியணைத்து அரவணைத்துக் கொண்டான். அமைப்பாக்கவேபடாத ஸ்காட்லாந்து தேசிய இனத்தை உச்சிமோர்ந்தான் எம்தோழன் மார்க்சு. தனது மற்றும் ரசிய பொதுவுடமைக்கட்சி என்ற மகத்தான கட்சியின் சீரிய தலைமையின் கீழ் இருந்தும் எப்போதும் நீங்கள் எம்மை பிரிந்து செல்லலாம் என்று விடுதலை உணர்வை ரசியாவின் கீழிருந்த தேசிய இனங்களுக்கு ஊட்டினான் எம் பேராசான் லெனின். அமைப்பாக்கப்படாத பாட்டாளி வர்க்கமாக தத்தக்கா புத்தக்கா என்று நடைபோட்ட பாரிஸ் கம்யூன் புரட்சியாளர்களை “ஆகா துப்பாக்கியை தோள் மாற்றுவதுபோல முதலில் நிலவுடமை அழித்து, பின்பு தம்மோடு இருந்த முதலாளி வர்க்கத்தை அழிக்க முனைந்தார்கள். பின்பு சிலநாட்களுக்கு அந்த இரண்டையும் விரட்டி உலகின் முதல் பாட்டாளிவர்க்க ஆட்சியை (தோழன் லெனினுக்கு இதன்மீது கோடி விமர்சனங்கள் இருந்தாலும்) கொணர்ந்தார்கள்" என்று சிலாகித்தான் தோழன் லெனின். இன்னும் கோடி கோடி தவறுகளோடு எழுந்த அத்தனை தேசிய இனங்களையும் உச்சிமோந்து ஏற்றுக்கொண்ட பொதுவுடமை தலைவர்களின் உதாரணங்கள் வேண்டுமா? கீற்றுவின் செர்வர் தாங்குமா அத்தனையும் சொன்னால்?
ஆனால் ஈழத்தில் என்ன நடந்தது தோழர்களே? கோபத்தோடு திரும்பிப்பார்த்த ஓஸ்பார்ன் என்ற தனிமனிதனின் தவறுகளை ஒரு சமூகத்தின் தவறுகளாக, ஒரு வர்க்கத்தின் வளர்ச்சிப்போக்கில் நடக்கும் தவறுகளாக, பிசிறுகளாக, இதெல்லாம் இல்லாம எப்படி ஒரு மனிதனும் இயக்கமும் வளரமுடியும் என்று அகமுரண்களாக கண்டவர்கள் புலிகளின் வளர்ச்சிப்போக்கின் சில சில நடைமுறை சிக்கல்களை புறமுரண்களாக கண்டது மார்க்சியமா என்று கேட்டால் நம்மை நீ மனித உரிமையை மதிக்கவில்லை என்று குற்றஞ்சாட்டுவார்கள்.
இந்தியாவில் மிகவும் ஒப்பீட்டளவில் வலுவாகயிருக்கும் பாட்டாளிவர்க்கத்தை உரைகல்லாக கொண்டு மேத்யூ அர்னால்டு உரைகல் முறையின்படி ஈழத்தின் தேசியக்கோரிக்கையையும் அதற்காகப் போராடும் ஒரு தேசிய இயக்கத்தையும் இந்திய அறிவாளிகளும் சர்வதேச சமூக விஞ்ஞானிகளும் அளவிட்ட கொடுமையை நாம் எங்கு கொண்டுபோய் அழுது தீர்ப்பது? இந்த ஊர் அ.மார்க்சுகளை திருத்த எம்பேராசான் மார்க்சுதான் வரவேண்டும். பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளி துள்ளிக் குதித்தானாம் என்று எம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள். ஆனால் ஈழத்தில் நடந்தது என்னவென்றால் மார்க்சிய கிழடுகள் இல்லாததால் புலிகள் என்ற பொடியன்கள் துள்ளித் குதித்தார்கள், பெரும்பான்மை தேசிய இனத்தின் கொடுங்கோன்மைக்கெதிராக. பிள்ளைகளை பற பற என்றால் எப்படித் தோழர்களே? பிள்ளைகள் தவழும், பின்பு நடக்கும், பின்பு ஆகாயவிமானம் கண்டுபிடித்து பறக்கும். ஆனால் நீங்கள் பற பற என்றீர்கள்? கொலைகாரக்கூட்டம் எப்படி சோசலிசக் குழந்தையை கொத்தித்தின்ன வந்தபோது தோழன் ஸ்டாலின் (ஒரு சில நடைமுறைத் தவறுகளின்மீது நமக்கு விமர்சனங்கள் இருந்தாலும்) பதைபதைத்துக் காத்தானோ அதைப் போல ஈழக்குழந்தையை தோழன் பிரபாகரன் காத்தான், இன்று பின்னடைவிற்கு உள்ளாகியிருக்கிறார்கள்.
prabakaran_234சரி சரி பற பற என்றீர்கள். உங்கள் அர்த்தப்படி பிள்ளை செத்துவிட்டதாய் வைத்துக்கொள்வோம். எங்கே நீங்கள் பறந்துகாட்டுங்கள் பார்ப்போம் என்று நாங்கள் உடனடியாக பறக்கச்சொன்னால் அது இயங்கியலுக்கு முரணாகாதா? வெறும் எண்பதுகளில் உருவான ஒரு விடுதலை இயக்கம் (உங்கள் மொழியில் சொல்வதென்றால் குட்டி முதலாளிகளின் இயக்கம், தேசிய முதலாளிகளின் இயக்கம் என்றும் கூட வைத்துக்கொள்ளுங்கள்) தளப்பகுதிகள் பல கண்டு நாடாக விருட்சமடைந்து நின்றதே. நீங்கள் இந்தியாவிலும், இலங்கையிலும் பொதுவுடமை இயக்கங்கள் கட்டி எட்டு தசாப்தங்கள் ஆகின்றது. இன்னும் ஏன் நீங்கள் தளப்பகுதிகளை நோக்கி முன்னேறவில்லை என்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் தோழர்களே? அந்தக் கேள்விதான் இயக்கவியலுக்கு முரணாகயிருக்காதா? கேள்வியே தவறானதாகயிருக்காதா? முதலில் ஈழத்திற்கு இன்றைய நிலைக்கு, எதிரி வகுத்த சூழலுக்கு அதுதான் பாட்டாளி வர்க்கம் அல்லது விடுதலைப்புலிகள்தான் ஈழத்தின் பாட்டாளிவர்க்க உருவம் என்று குறைகளை வளர்ச்சிப்போக்கோடு நீங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டாமா? அதுதான் இயங்கியல்; அதுதான் வரலாற்றுப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டம். இல்லையேல் மாவோவின் மொழியில் சொல்வதென்றால் நீங்கள் செங்கொடிக்கெதிராக செங்கொடியை உயர்த்துகிறீர்கள் என்று நாங்கள் சொல்லலாமா?
அ.மார்க்சு போன்றவர்கள் கிண்டல் செய்கிறார்கள், புலிகளை ஆதரிப்பவர்கள் பிரபாகரனின் துதிபாடிகள் என்று. ஆனால் உண்மையைச் சொல்வதென்றால் அவர்கள்தான் ஜான் டன் என்ற கவிஞன் தன்கவிதையில் சொல்வதுபோல் ஒரு எக்ஸ்டெசி நிலையில் ஒரு பரமானந்தா நிலையில் இருக்கிறார்கள். ஒன்று பாராட்டித் தீர்ப்பது. உதாரணமாக சோபாசக்தியின் தூற்று.கொம்மின் அத்தனை வரிகளையும் அ.மார்க்சால் தூள்தூளாக உடைத்தெறிய முடியும். ஆனால் செய்யமாட்டார். ஏனென்றால் அவர் ஒரு முன்தீர்மானிக்கப்பட்ட மனநிலையோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார், சோபாசக்தியை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிப்பது என்று. எனவே மௌனம் காக்கிறார். அது காரிய மௌனம், கள்ள மௌனம். மற்றொரு உதாரணமாக புலிகளை எதிர்ப்பது என்ற பரமானந்த நிலையில் இருக்கிறார். எனவே வரலாறு, காலம், சூழல் போன்ற எதையும் கருத்தில் கொள்ளமாட்டார். மாறாக அர்ரம் என்றால் குர்ரம் என்பதுபோல் பேசுவார். வசைமாறி தூற்றுவார். பாசிஸ்டு என்பார். இவர்கள் சுயகாரணங்களுக்காக எதிர்ப்பையும், விருப்பையும் காட்டுபவர்கள். இயங்கியல் அல்லது வரலாற்று நோக்கில் பிரச்சனைகளை அணுகாதவர்கள். தலைவர்களையும், அவர்களின் நடவடிக்கைகளையும் வழிபாட்டுமுறைக்குள் புகுத்திக்கொண்டு நிறையையோ குறையையோ காண்பவர்கள். தவழும் குழந்தைகளை நடக்கச்சொல்பவர்கள், வயோதிகர்களை தவழச்சொல்பவர்கள். மாவோவின் மொழியில் சொல்வதென்றால் அதிசனநாயகவாதிகள், தற்குறிகள். தெரியாமல் செய்தால் அவர்கள் அதிசனநாயகவாதிகள், தற்குறிகள் மற்றும் கலைப்புவாதிகள். மாறாக தெரிந்தே செய்தால் அவர்கள் அயோக்கியர்கள்.
தோழர் பிரசண்டா சொன்னார், வர்க்க சமூகத்தில் பாட்டாளிவர்க்க கட்சியாகயிருந்தாலும் எல்லாருக்கும் பயணிக்க குதிரை கிடைக்காது என்று. எவ்வளவு உத்தமமான வார்த்தைகள் அவை. நடைமுறைகளை, நடைமுறைச்சிக்கல்களை தெள்ளத்தெளிவாக விளக்கிச்சொல்லும் வார்த்தைகள். அடேய் இது வர்க்கச்சமூகம், இதில் வளரும் இடது இயக்கங்களும் வெள்ளையரசு எதிர்ப்பு இயக்கங்களும் குறைகளோடுதான் வளரும் என்று பளீரென்று சொல்வதுபோல் உரைக்கும் வார்த்தைகள். வர்க்க வேறுபாடுகள் கூர்மையடையும்போது நடுநிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னான் பேராசான் கார்ல் மார்க்ஸ். பாட்டாளிவர்க்கம் வர்க்க உணர்வடையாத இலங்கையில் தேசியப்பிரச்சனையே பிரதான பிரச்சனை, மூலவுத்திரிதியில் தீர்க்கப்படவேண்டிய பிரச்சனை. தேசிய வேறுபாடு கூர்மையடைந்தபின்பும் இன்னும் வளர்ச்சிப்போக்கில் உறுதியாக நிகழும் நடைமுறை பிசுறுகளை அய்யய்யோ தவறு அம்மா தவறு என்று கதறி அழுதால் அது உண்மைக்காக அழுவதல்ல, மாறாக சுயநலன்களுக்காக அழுவது, எதிரியின் நலனுக்காக அழுவது. அந்தக் கண்ணீர் டிராட்சிகியின் கடைசிநேரக்கண்ணீர், டெங்சியோ பிங் மற்றும் குருச்சேவ் கும்பலின் சமாதான சகவாழ்வுக்கான கதறல் (இன்றெமக்கு வேண்டியது சமாதானமே என்ற புத்தகம் ஞாபகம் வருகிறதா?).
உண்மையான தோழர்கள் வேண்டிய சமாதானத்திற்கும், போர்நிறுத்தத்திற்கும், இவர்கள் வேண்டுகிற சமாதான உறவு, சமாதான சகவாழ்வு, சமாதான மாற்றத்திற்கான (டெங் கும்பலின் பெருங்காயம்தான், சர்வரோக நிவாரணிதான்) வேண்டுகோள்களுக்கும் பாரதூரமான வேறுபாடுகள் உண்டு. இந்தப் புரிதல் இல்லையென்றால் நீங்கள் இயங்கியலுக்கு எதிரானவர்கள். தீர்க்கமான விமர்சனவாதிகளல்ல. ஒரு இயக்கத்தை விமர்சனம் செய்யும் அருகதையை இழக்கிறீர்கள். வர்க்க முரண்பாட்டின் கேந்திரக்கண்ணியை புரிந்துகொள்ளாதவர்களாக இருக்கிறீர்கள். வரலாறு உங்களைப் பழிக்கும். அ.மார்க்சு போன்ற தெரிந்தே கள்ளமௌனம் காக்கும் நண்பர்களை, அண்ணன்களை வரலாறு குப்பைத்தொட்டியில் தூக்கியெறியும்.
பெரும்தாவலில் பெருமளவிற்கு மக்களை எம் பேராசான் மாவோ கொன்றதாக குற்றஞ்சாட்டினார்கள். மாவோ சொன்னார் மனிதகுலத்தின் ஒரு பாதி அழிந்தாலும் மறுபாதி மகிழ்வோடு இருக்கும் என்றார். அவரை கொடுங்கோலன் என்றார்கள். எம் அருமைத்தோழன் ஸ்டாலின் விவசாயிகளை நகர்ப்புற பாட்டாளிவர்க்க நலனுக்காக கொன்றழித்தார் என்று குற்றஞ்சாட்டினார்கள். வளரும் சோசலிசக் குழந்தையைக் காக்க பகைவர்களை கேஜிபியின் உதவியால் அழித்தொழித்த எம்தலைவன் ஸ்டாலினை பயங்கரவாதியென்றார்கள். முதலாளி வர்க்கத்தின் கல்லாவை காலியாக்கிய எம்பேராசான் லெனினை கொடுங்கோலன் என்றார்கள். தோழன் ஹோசிமின்னை ரத்தவெறிபிடித்த ஓநாய் என்றார்கள். நேபாளத்தில் ஆயிரக்கணக்கில் அப்பாவி நேபாளியர்களை கொன்று குவித்ததாய் சொல்லி தோழன் பிரசண்டாவை கொலைகாரன் என்றார்கள். வர்க்க எதிரியின் ரத்தத்தில் கைநனைக்காதவன் பொதுவுடமைவாதியல்ல என்று சொன்ன எம் தோழன் சாரு மஜூம்தாரை குட்டிமுதலாளித்துவ அராஜகவாதி என்றார்கள். லெனின் கொடுங்கோலன் என்றால், ஸ்டாலின் பயங்கரவாதியென்றால், பேராசான் மாவோ கொலைகாரன் என்றால் எம் அன்புத்தோழன் சாரு மஜூம்தார் குட்டிமுதலாளித்துவ அராஜகவாதியென்றால் எம்தோழன் பிரபாகரனும் பாசிஸ்டுதான். ஆம் எப்படி எம் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரிகள், சர்வாதிகாரிகள் என்பதில் பெருமைப்பட்டார்களோ, நாங்கள் பெருமைப்படுகிறோமோ அதுபோல எம்தோழன் பிரபாகரனும் சர்வாதிகாரிதான், பாசிஸ்டுதான். அதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம்.
இறுதியாக சோபாசக்தி தனது சுயசரிதையின் மேல் சொன்ன பத்தியை எப்படி முடிப்பார் என்று தெரிந்து கொள்ள ஆர்வமாகயிருக்கிறதா? பிடித்திருந்தால் முதல் பத்தியில் சொன்னதுபோல எழுதி ‘பாஸ் நீங்க வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்’என்றும்; ‘சார் நீங்க எங்கேயோ போயிட்டீங்க’ என்றும் பாராட்டுவார். பிடிக்கவில்லையென்றால் எப்படி எழுதுவார் என்று நான் சொல்ல வேண்டியதில்லை. அவரின் இணையதளத்தை தினமும் படித்தாலே தெரிந்து கொள்ளலாம். மிளகாய்ப்பொடி தண்டனைதான்.
- சார்லசு அன்ரனி

வெள்ளி, 18 மார்ச், 2011

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்போதைய நிலை என்ன?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பானது ஏராளமான சோதனைகளையும் தடைகளையும் கடந்துதான் தனது போராட்டத்தை நடாத்தி வந்தது. ஈழப் போராட்டத்தில் ஒரு கட்டத்திலே தனித் தலைமைச் சக்தியாக தன்னை மாற்றியமைத்துக் கொண்டு – உறுதி தளராத நோக்கத்துடன் – முழு வீச்சுடன் போராட்டத்தை முன்னெடுத்தது.
இவ்வமைப்பானது போரியல் ரீதியில் பல இக்கட்டான காலங்களைக் கடந்து வந்துள்ளது. முக்கிய தளபதிகளின் இழப்பு, இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக் காலம், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிலவிய ஆயுத தளபாடப் பற்றாக்குறை, ஜெயசிக்குறு இராணுவ நடவடிக்கைக் காலம் என்று பல்வேறு காலங்களில் ஏற்பட்ட போரியல் நெருக்கடிகளைக் கடந்து இயக்கம் தன்னைக் காத்துக் கொண்டது.
விடுதலைப் புலிகள் அமைப்பானது தன்னைப் பாதுகாத்து வளர்த்துக் கொள்வதும், அதனூடாக ஈழப்போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதும் என்றளவில் பலவித சவால்களைச் சந்தித்துள்ளது. பல்வேறு காலகட்டத்தில் இயக்கத்துள் பிளவுகள், துரோகங்கள் என்பன நடந்துள்ளன. ஆனால் ஒவ்வொரு முறையும் தனக்கேயுரிய பாணியில் அந்தச் சவால்களைக் கடந்து இயக்கம் மீண்டு வந்தது.
இவையெல்லாவற்றையும் விட முள்ளிவாய்க்காலில் ஏற்பட்ட பேரழிவு என்பது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் ஈழத் தமிழினத்துக்கும் பேரிடியாகவே  அமைந்தது. இயக்கம் நெருக்கடிகளிலிருந்து மீண்ட பழைய சம்பவங்களை எடுத்துக்காட்டி, அவற்றைப்போல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவிலிருந்தும் இயக்கமும் தமிழினமும் மீண்டுவரும் என்று பத்தோடு பதினொன்றாகச் சொல்லிவிட முடியாது.
முள்ளிவாய்க்கால் பேரழிவென்பது மனித குலத்திலேயே ஒரு பெருந்துயரம். பல நாடுகளின் ஒன்றிணைந்த ஆதரவிலும் வழிநடத்தலிலும் சிறிலங்கா அரசு நடத்தி முடித்த மனித வேட்டையே அது. அப்பெரிய இராணுவ இயந்திரத்தை எதிர்த்து அவ்வளவு காலம் தீரமுடன் சமராடிய விடுதலைப் புலிகளினதும் அவர்களுக்குப் பக்கபலமாக நின்ற மக்களினதும் வீரமும் தியாகமும் அளவிட முடியாது. இருந்தபோதும் அளப்பெரிய இராணுவப் பலத்தால் எல்லாம் நாசமாக்கப்பட்ட நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பும் எமது தாயகத்தில் வாழும் மக்களும் பேரிடருக்குள் சிக்கியுள்ளதை யாரும் மறுக்க முடியாது.
இந்நிலையில், ஆயிரக்கணக்கான போராளிகள்  இன்னமும் காடுகளுள் உறைந்துள்ளார்கள், பல படையணிகள் இன்னமும் செயற்பாட்டிலுள்ளன, கடும் பயிற்சியெடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றவாறு பல கதைகளைச் சிலர் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அவையனைத்தும் அப்பட்டமான கட்டுக்கதைகள் என்பதில் ஐயமில்லை.
ஆனால், முள்ளிவாய்க்காலோடு முடிந்துவிட்டதாகச் சொல்லப்படும் விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் தம்மைக் கட்டியெழுப்பும் என்ற நம்பிக்கை தமிழர்களுக்குண்டு. அவ்வாறு கட்டியெழுப்பி எமது விடுதலைப் போரை வீச்சோடு முன்னெடுக்க வேண்டுமென்ற அவாவுமுண்டு.
இன்றைய நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கியுள்ளதென்பது தெளிவாகத் தெரிகின்றது. தாம் தான் இயக்கம் என்று சொல்லிக்கொண்டு தவறான பேர்வழிகள் சிலர், புலம்பெயர் தமிழரிடத்தில் குழப்பங்களை ஏற்படுத்தும் வண்ணம் செயற்பட்டு வருகின்றமையை நாம் கண்கூடாகவே பார்க்கின்றோம்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் முன்னர் இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டுச் செயற்பட்ட சிலர் குழப்பங்களுக்கு அடிகோலாக அமைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. தலைவர் வரும்போது கணக்கு காட்டுகின்றோம் அதுவரை எம்மிடம் தமிழ் மக்களோ, போராளிகளோ அல்லது பொறுப்பாளர்களோ கணக்கு கேட்கமுடியாது என்ற வகையில் இவர்கள் செயற்படுவது கவலையானதாகும்.
தாயகத்தில் தொடர்பில்லாத நிலையில் கூட்டுமுயற்சியற்ற – தனிநபர் வழிகாட்டல்களும் எழுந்தமான முடிவுகளும் எமது போராட்டத்தைச் சீரிய வழியில் முன்னெடுக்கா என்பதே உண்மை.
இந்நிலையில் ஏற்கனவே பல்வேறு பணி நிமித்தமாக தாயகப்பகுதியை விட்டு வெளியே அனுப்பப்பட்ட போராளிகளோடு, இறுதிவரை களத்தில் நின்று தப்பி வந்த போராளிகளும் இணைந்து தம்மாலான செயற்றிட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்பதை ஊகிக்க முடிகின்றது.
பல்வேறு படையணிகளைச் சேர்ந்த போராளிகளும் துறைசார் பொறுப்பானவர்களும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கான தலைமைச்செயலகம் என்ற கட்டமைப்மைப்பை ஏற்படுத்தியுள்ளனர். அவ்வாறானவர்களில் துறைப்பொறுப்பாளர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் ஊடகங்கள் வாயிலாக வெளிவருவதை நாம் காண்கின்றோம்.
இவர்களின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் தற்கால உலக ஒழுங்குக்கு ஏற்றாற்போல் எமது போராட்டத்தை முன்னெடுக்கும் வகையில் முதிர்ச்சித் தன்மையோடு அமைந்திருப்பதை ஓர் அவதானிப்பாக நாம் கண்டுகொள்ளலாம். இவர்களின் செயற்பாடுகளும் அறிக்கைகளும் புலிகளின் இருப்புப் பற்றிய நம்பிக்கையையும் அவர்களின் வழிநடத்தல் பற்றிய நம்பகத்தன்மையையும் தருகின்றன.
இயக்கத்தைத் தக்கவைத்தல், கட்டியெழுப்பல் என்பதோடு எமது போராட்டத்தை முன்னெடுப்பதற்காக தற்காலத்தில் சாத்தியமான வழிமுறைகளில் முயன்றுவரும் இவர்களின் முயற்சியில் வெற்றிபெற்று எமது போராட்டம் வீச்சோடு பயணிக்க வேண்டுமென்பதே அனைத்துத் தமிழ்மக்களினதும் விருப்பாகும்.
ஆயிரமாயிரம் வீரர்களின் தன்னலமற்ற தியாகத்தாலும், மக்களின் உறுதியான ஆதரவாலும் கட்டி வளர்க்கப்பட்ட இயக்கம் அழிந்துபோகாது என்பதோடு தலைவரினால் வளர்க்கப்பட்டுப் புடம்போடப்பட்ட போராளிகளும் தளபதிகளும் நெறிதவறவோ சோர்ந்து ஒதுங்கிவிடவோ மாட்டார்களென்ற நம்பிக்கையுண்டு.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தால் மட்டுமே எமது மக்களை ஒருகுடையின் கீழ் செயற்பட வைக்க முடியும் என்ற யதார்த்தத்தை புரிந்துகொண்டு, சமாந்தரமான தளங்களில் முன்னெடுக்கப்படுகின்ற தமிழீழ மக்களின் விடுதலைக்கான பல்வேறான செயற்றிட்டங்களுக்கும் இயன்ற பங்களிப்பை செய்வதும் உதவிகளைச் செய்வதும் தமிழரின் கடமையுமாகும்.
- ஈழநேசன் ஆசிரியர்பீடம்

வியாழன், 17 மார்ச், 2011

அன்புத்தோழர் அ.மார்க்சுக்கு... அரசியலை ஆணையில் வைப்போம்!!

அன்புத்தோழர் அ.மார்க்சுக்கு
வணக்கம் நலமாகயிருக்கிறீர்களா? உங்களை மதுரைக்கூட்டத்தில் பார்த்தது. சுமார் ஏழு அல்லது எட்டு வருடங்கள் இருக்கும். அழகிய புன்சிரிப்பொன்றை உதிர்த்து வணக்கம் சொன்னீர்கள். பின்பு காலச்சக்கரம் என்னை வெளிப்படையான அரசியல் வாழ்விலிருந்து தலைமறைவு வாழ்க்கைக்கு அழைத்துச்சென்றது. நான் தலைமறைவு அரசியலை கைக்கொண்டிருந்தபோது எமது கட்சியான இந்திய பொதுவுடமைக்கட்சி (மாவோயியர்)- ன் மத்தியக்குழு உறுப்பினர் ஒருவருக்கு புதிதாக வந்த புத்தகங்களை படித்து அதில் முக்கியமான புத்தகங்களை பரிந்துரைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். ஒவ்வொரு மாதமும் நான் பரிந்துரைக்கும் புத்தகங்களில் தங்களது எழுத்துக்கள் தவறாது இடம்பெற்றிருக்கும்.
அந்தத் தோழர் “ஆகா என்ன தோழர்? நீங்கள் தோழர் அ.மார்க்சின் ரசிகர் ஆகிவிட்டீர்கள் போல” என்று செல்லமாக கிண்டல் செய்வார். அதற்கு நான் நீங்கள் அனைத்து விடயங்களையும் இயக்கவியல் பொருள்முதல்வாத வெளிச்சத்தில் காண்பதாக பதிலுரைத்தேன். அது உண்மைதான் நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும் இயக்கவியல் பொருள்முதல்வாத வெளிச்சத்தில் கண்டுணர்ந்தே பதிலுரைத்தீர்கள். தோழரே இன்னும் நிறைய விடயங்கள் என்னை உம்மிடமும் உங்கள் எழுத்திடமும் இழுத்துச் சென்றன. சமீர் அமீனைப்பற்றி உங்களிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். புதிய சனநாயகப்புரட்சி வெற்றிபெறாத நாடுகளின் பொதுவுடமைத்தோழர்களின் இலக்கியங்களில் இருந்து நாம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று நீங்கள் சொன்னவிதம் என்னை தோழர் அந்தோணியா கிராம்சியின் சிறைக்குறிப்புகளை ஆழ்ந்து வாசிக்கவைத்தது. அதன்பின்பாகவே நான் கட்சிக்குள் அக்கபக்கமான அரசியல் ஆயுதபோராட்டங்களோடு பண்பாட்டுப் போராட்டமும் கைக்கொள்ளப்படவேண்டும் என்று கோரிக்கை விடுத்தேன். சாதாரணதொரு கீழ்மட்ட ஊழியராக இருந்தாலும் எனக்கும் கட்சி செவிமடுத்து சீர்செய் இயக்கம் விரைவில் வருமென உறுதியளித்து அதை விரைவில் செயல்படுத்தவும் செய்தது.
இன்னமும் நான் டிராட்சிகியின் எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன். அவர் ரசிய பொதுவுடமைக்கட்சியினால் துரோகியென அழைக்கப்படும் வரை அவரின் எழுத்துக்கள் கட்சித்தோழர்களால் வாசிக்கப்பட்டதுதானே, ரசியக்கட்சியால் அங்கீகரிக்கப்பட்டதுதானே. அதை ஏன் நாம் வாசிக்கக்கூடாது அதை ஏன் விமர்சனத்துக்கு உள்ளாக்கி செயல்படுத்தக்கூடாது என்று கேள்வி எழுப்பினேன். கட்சி டிராட்சிகியின் இலக்கியங்களை நான் வாசிப்பதில் ஏதும் பிரச்சினையில்லை என்று என்னை வாசிக்கச்சொன்னது. உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? இதுவும் உங்கள் எழுத்தின்மூலம் நான் பெற்ற ஊக்கம்தான். இன்னும் நிறைய இருக்கிறது தோழரே உங்களைப்பற்றியும் உங்கள் எழுத்து என்மீது ஏற்படுத்திய பாதிப்பு பற்றியும் கூற. என்(ம்) உயிர்த்தோழன் நவீன்பிரசாத் புயல்காற்றுக்கெதிராய் குன்றென நின்று எம்மைக்காத்து வீரச்சாவெய்தியபோது, அந்த உண்மையறியும் குழுவிலே நீங்கள் நின்றீர்கள். இன்னொரு அப்பாவி பழங்குடித்தோழனுக்கு என்ன ஆனதோ என்று நாங்கள் திகைத்து நின்றபோது நீங்களே எம்தோழனை உயிரோடு மீட்டீர்கள்.
கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரோடு நான் முதன்முதலில் மாற்றுப்பாலினத்தவரைப் பற்றியும் ஓரினச்சேர்க்கையாளர்கள் பற்றியும் அவர்கள் மீதான நேபாள மாவோவியர்களின் மிகவும் பிற்போக்கான நிலபிரபுத்துவ பார்வை பற்றியும் பேசியதற்கு உங்கள் எழுத்துக்களை நான் வாசித்ததுதான் காரணம் தோழரே. என்னிடம் மத்தியக்குழு உறுப்பினர் அதன்பின்பாக உங்கள் அரவாணித் தோழரை கட்சியில் இணைக்கமுடியுமா என்று ஆர்வத்தோடு கேட்டார். உமக்கும் தோழர் மருதய்யனுக்கும் இடையிலான விவாதத்தைப் பற்றியும் அதில் தங்களது எழுத்துக்கள் பற்றியும் தமிழ்நாடு மார்க்சிய லெனினியக்கட்சியின் மூத்த தோழர் சிலாகித்தது இன்னமும் என் நினைவில் நிற்கிறது தோழரே. உம் தந்தைபற்றி அறிந்தபோது இன்னமும் பூரித்துப்போனேன். மீன்குஞ்சிற்கு நீந்த கற்றுத்தரவேண்டியதில்லை என்று நினைத்து மகிழ்ந்தேன்.
இன்னும் நிறைய இருக்கிறது தோழரே. பக்கங்கள் தாளாது. நீங்கள் ஒரு பத்திரிக்கையில் பேட்டியளித்தபோது மகிழ்வுந்தின் முன்பிருந்து புகைப்படத்திற்கு முகமளித்தீர்கள். நான் ஒரு மாநிலக்குழு உறுப்பினரிடம் என்ன அ.மார்க்சு மகிழ்வுந்து வாங்கி விட்டாரா? எப்படி அவ்வளவு பணம் அவரிடம்? தெரிந்திருந்தால் நிதி வாங்கியிருக்கலாமேவெனச் சொன்னபோது அந்தத் தோழர் அது அவரின் மகிழ்வுந்தாகயிருக்காது அவர் பொருளாதாரரீதியாக மிகவும் சிரமப்படுகிறார் என்று தகவல் என்று சொன்னார். உங்களோடு எமக்கு கொள்கைரீதியாக சில அக முரண்பாடுகள் இருந்தாலும் இணைந்து செயலாற்றுவதில் எந்தச் சிக்கலுமேயிருந்ததில்லை. அதிலும் உங்களின் நுண்ணறிவு மற்றும் விசாலமான மார்க்சிய அறிவு எம்மை எப்போதும் வியப்பில் ஆழ்த்தியது.
இப்போது நான் கட்சியிலிருந்து வெளியில் வந்துவிட்டு ஒரு கூலித்தொழிலாளியாக என் வாழ்க்கையை ஒரு தொழிற்சாலையில் கழித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இன்னமும் உங்கள் எழுத்தின்மீதான விமர்சனங்கள் ஆவல்கள் அப்படியே இருக்கிறது. சரி தோழரே. இப்போது எப்படியிருக்கிறீர்கள்? உடல்நலம் எப்படியிருக்கிறது? இணையதளங்கள் உங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல பக்கங்களை ஒதுக்க ஆரம்பித்துவிட்டன. முக்கியமாக விடுதலைப்புலிகளின் சமீபத்திய பாரிய தோல்விக்குப்பிறகு (நான் இதை அலையிறக்கம் என்றே அழைக்க விரும்புகிறேன், உங்களுக்கு மாற்றுக்கருத்து இருப்பினும்) உங்கள் நடவடிக்கைகள் மிகவும் விமர்சனத்துள்ளாக்கப்பட்டுவிட்டன. எமக்கும் உம்மீதும் உம் சமகால நட்புறவுகள் பற்றியும் சில அகமுரண்களும், விமர்சனங்களும் உண்டு. அதுபற்றி உங்களோடு பேசவேண்டுமென்பது என் நெடுநாள் ஆசை. முன்னாள் மாலெ தோழரான உங்களுக்கு விமர்சன, சுயவிமர்சனங்கள் ஒன்றும் புதிதானவையில்லை. பொறுமையோடு என் எழுத்துக்களை வாசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.
1. நீங்கள் சமீபத்தில் இலங்கை சென்றுவந்து அது தொடர்பாக குமுதம் தீராநதியில் தொடர்கட்டுரை எழுதினீர்கள். அதில் புலிகள் பற்றி நீங்கள் விமர்சித்தது பற்றியோ அதன் பாரிய தாக்கங்கள் குறித்தோ நான் பேசவிரும்பவில்லை. அதுபற்றி எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் அதுபற்றி பின்னாட்களில் பேசுவோம். ஆனால் நீங்கள் இலங்கைக்கு வெறும் இலக்கிய உரைமட்டும் தான் ஆற்றச்சென்றதாகச் சொல்லமுடியாது. அரசியல் தொடர்பின்றி நீங்கள் அங்கு செல்லமுடியாது. நீங்கள் ஊரறிந்த மனித உரிமைப்போராளி. பின்பு எப்படி உங்களை இலங்கை அரசு உள்ளே அனுமதித்தது? தோழர் அங்கையற்கண்ணி கைது செய்யப்படுகிறாரெனில் அவரைவிட மனித உரிமை அரங்கில் முன்னிற்கும் நீங்கள் ஏன் இலங்கை அரசால் கைதுசெய்யப்படவில்லை?
அப்பாவி தமிழர்களின் இன்னல்களைவிட அவர்களின் மனித உரிமைகள் பாதிக்கப்படுவதைவிட ‘செத்துப் புதைக்கப்பட்ட’ புலிகளின் சோ கால்டு அடாவடித்தனத்தைத்தான் நீங்கள் பேசுவீர்கள் என்று இலங்கை அரசு நம்பியது காரணமாகயிருக்குமோ? இலங்கை இனவெறி அரசு அப்பாவித்தமிழர்களை கொன்று குவிப்பதை நீங்கள் அங்கு பேசுவீர்கள் என்று இனவெறி அரசு நம்பினால் அவர்கள் எப்படி உங்களை உள்ளே அனுமதித்திருப்பார்கள் தோழரே? வர்க்கவேறுபாடுகள் கூர்மையடையும்போது நடுநிலைமை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று பேராசான் மார்க்சு சொன்னார். அங்கு தேசிய வேறுபாடு கூர்மையடைந்து நிற்கிறது. மக்களை காத்தே ஆகவேண்டும் என்ற நிலை. சட்டாம்பிள்ளை இலங்கை அரசு அவர்களை அடைத்து வைத்துள்ளது. அதை எதிர்த்து மனித உரிமைப் போராளியான நீங்கள் குரல் எழுப்புவீர்கள் என்று இலங்கை அரசு கருதியிருந்தால் உங்களை உள்ளே விட்டிருக்குமா? என்றாவது நீங்கள் உங்களை ஏன் இலங்கை அரசு உள்ளே சென்று அனைத்து இடங்களையும் பார்த்துவர அனுமதித்தது என்று சிந்தித்திருக்கிறீர்களா? இயக்கவியல் பொருள்முதல்வாதம் இங்கே என்ன சொல்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? அதுபற்றி ஆற அமர சிந்தித்திருக்கிறீர்களா? தமிழகத்தில் எம்தோழன் நவீன்பிரசர்த் வீரச்சாவெய்தியபோது அதுபற்றி உங்கள் குழு சென்றபோது அதுபட்ட இன்னல்களை, நான் தலைமறைவாயிருந்தபோது என்னிடம் சொன்னார்கள். இங்கேயே இந்தக் கதியென்றால் இலங்கையின் நிலை பற்றிச்சொல்லித் தெரியவேண்டியதில்லை. அப்புறம் எப்படி உங்களை உள்ளே விட்டார்கள்? எங்கேயோ இடிக்கிறதே தோழரே!
புலிகளின் தவறுகளை மார்க்சிய வெளிச்சத்தில் ஆய்வுசெய்த என் அன்புத்தோழன் அ.மார்க்சு எப்படி இந்த விடயத்தை விசாரிக்க மறந்தார்? நான் நீங்கள் வேண்டுமென்றே மறந்ததாகவோ அல்லது உங்கள் தற்போதைய புதிய நண்பர்குழாம் இலங்கை அரசிடம் உறவாகயிருப்பதால் உங்களைப்பற்றி இல்லாதது பொல்லாதது எல்லாம் சொல்லியிருப்பார்கள், அதனால் இலங்கை அரசும் அ.மார்க்சு நம்ம ஆளு என்று அனுமதித்திருப்பார்கள் என்றோ சொல்லமாட்டேன். ஏனென்றால் எனக்குத் தெரியும் எம் அன்புத்தோழன் அ.மார்க்சு பற்றி. ஆனால் நீங்களே உங்களை சுயவிமர்சனத்துக்கு உட்படுத்துங்கள் தோழரே. வர்க்கநெருப்பில் புடம்போடுங்கள். தெள்ளத்தெளிவாய் உண்மை தூலமாய் புலப்படும்.
2. இப்போது சோபாசக்தியைப் பற்றிப் பேசுவோம். அவர்மீது ஒழுக்கரீதியான குற்றச்சாட்டுக்கள் எழுப்பியிருக்கிறார்கள். அதுபற்றி நான் உரையாடவேண்டிய தேவையில்லை. ஏனெனில் எனக்கு அதுபற்றி சோபாசக்தியிடமும் தமிழச்சியிடமும் சில மனத்தாங்கல்களும் கடுமையான விமர்சனங்களும் உண்டு. அதுபோக ஒழுக்கம் பற்றிய புரிதலில் உங்களோடு எம் கருத்துக்கள் பெரும்பாலும் ஒத்துப்போகும். அதுபற்றி பிறிதொருமுறை பேசுவோம். ஆனால் இப்போது சொல்லுங்கள். சோபாசக்தியின் மீது மக்கள் கலை இலக்கிய கழகத்தோழர்கள், அவர் இலங்கை அரசின் கைக்கூலிகளிடம் பணம் வாங்கியதாக குற்றஞ்சாட்டினார்கள். அதற்கு சோபாசக்தி அந்தக் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து தோழர் மருதய்யனுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில் அவர் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் வாங்கியதாக வினவு வைத்த குற்றச்சாட்டை நிரூபிக்கவேண்டும் என்றும் அதற்காக பகிரங்க விசாரணையொன்றை ஏற்பாடு செய்யவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். நியாயமான கோரிக்கைதான். பகிரங்க விசாரணை தேவைதான். ஆனால் இந்த விடயத்தில் முக்கியமானதொன்று நாம் தெரிந்துகொள்ளவேண்டும். இது பாலியல் பலாத்கார வழக்கு போன்றது. பெண்ணைப் பார்த்து எங்கே நிரூபி என்று சொன்னால் கணக்குத் தீர்ந்தது, உறுதியாக நிரூபிக்க முடியாது. இதில் ஆயிரம் வழக்குகளில் ஒன்று தவறாகப் போகவும் எந்தத்தவறும் செய்யாத ஆண்களுக்கு எதிராகப் போகவும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற சிக்கலான பிரச்சனை இது.
சோபாசக்தியின் விவகாரத்திலும் இதைப்போலவே மகஇகவினர் நிரூபிக்கமுடியாது, வாயைக்கொடுத்து மாட்டிக்கொண்டார்கள் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் பாருங்களேன் தோழரே. ஏதோ பழமொழி சொன்னதுபோல் மகஇக சொன்ன குற்றச்சாட்டை நிரூபிக்கும் வண்ணம் சோபாசக்தியின் பயணவிவரம், சொந்த இணையதளம், பெரும்குடி மற்றும் இன்னபிற செலவுகள் போன்றவைகள் இடிக்கிறதே தோழரே. நீங்களே பணவிடயங்களில் சிரமப்படும்போது என்னைப்போன்ற பச்சைக்குழந்தையான அவருக்கு மட்டும் எப்படி பணம் கொட்டோகொட்டென்று கொட்டுகிறது தோழரே. இந்த மகஇக தோழர்கள் கேட்ட கேள்வியில் விடயம் இருக்கிறமாதிரி தெரிகிறதே. ஆனால் அதற்கு சோபாசக்தியின் பதில், கணக்குவழக்கை காட்டினால் கடனைக்கட்ட வேண்டுமாம். இது சரியான பேச்சா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும். பகிரங்க விசாரணையை நீங்கள்தான் முன்னின்று ஏற்பாடு செய்யவேண்டும். மகஇகவையும் அழைப்போம். சோபாசக்தியையும் அழைப்போம். நீங்களே அவரிடம் கணக்கை பொதுமக்களிடம் ஒப்படைக்கச்சொல்லுங்கள். சரி பார்ப்போம்.
எனக்கென்னமோ சோபாசக்தியின் கணக்குவழக்குகள் நமது மார்க்சிய கணக்கு வழக்குப்படி இடிப்பதாகத்தான் படுகிறது. எனக்கே இடிக்கிறது என்றால் உங்களுக்கு சத்தியமாக இடிக்கும். ஏனெனில் உங்களின் நுண்ணறிவின்மீது எனக்கு நம்பிக்கையுண்டு. (பகடி செய்வதாக நினைக்க வேண்டாம்). சந்தேகமிருந்தால் நீங்கள் எழுதிய மாவோயிசத்தைப் பற்றிய புத்தகத்தை வாசிக்கவும். சத்தியமாக என்னைப் பலவழிகளில் மாற்றிய புத்தகமது. முக்கியமாக நான் உங்கள் ரசிகனாக மாறியது அந்த புத்தகத்தை வாசித்ததிலிருந்துதான். இந்தமுறை வாய்தாவிற்கு தோழர் மருதய்யனையும் தோழர் வீராச்சாமியையும் அழைப்போம். ஏனெனில் எனக்கு அவர்கள்மீது நீங்கள் வைத்த குற்றச்சாட்டு தொடர்பாக மாற்றுக்கருத்து ஏதுமில்லை. ஏனெனில் அறிவார்ந்த கூட்டமென்றால் மகஇகவினர் தலைவர்களையும், அடிதடிக் கூட்டமென்றால் அடிமட்ட தோழர்களை அனுப்புவதும் அவர்களின் புதிய பண்பாடு.
சோபாசக்தி இப்படி செலவுசெய்வதற்கு பணம் எப்படி கிடைக்கிறது என்று கணக்கு கேக்கலாம். உண்மையிலேயே அவர் சரியான கணக்குவழக்கை ஒப்படைத்தால் அவருக்கு கடன் இருந்தால் உங்கள் தலைமையிலேயே பணம் வசூலித்துக் கொடுக்கலாம். நாம் மாலெக்காரர்கள். உண்டியல் பிடிப்பது ஒன்றும் பெரிய விடயமில்லை. சோபாசக்தியால் கணக்கை நிரூபிக்க முடியவில்லையென்றால் இலங்கை அரசிடமோ அல்லது இலங்கை அரசின் கைக்கூலிகளிடமோ பணம் வாங்கிக்கொண்டுதான் புலிகளைப் பற்றி எழுதுகிறார் என்பது நிரூபிக்கப்பட்டால் (புலிகள் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் அவர்களை விமர்சிப்பது என்பது வேறு, இலங்கை அரசிடமோ அல்லது அவர்களின் கைக்கூலிகளிடமோ பணம் வாங்கிக்கொண்டு விமர்சிப்பது என்பது வேறு) அவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் அல்லது தண்டனை கொடுக்கலாமா வேண்டாமா என்பதை நீங்களே முடிவுசெய்யுங்கள். அவர் மனந்திருந்தி மன்னிப்புக்கேட்டால் மன்னித்து விட்டுவிடலாம். அப்படியும் அவர் அடம்பிடித்தால் அவருக்குத் தண்டணையைக் கொடுக்கலாமா? அல்லது கொடுக்க வேண்டாமா? என்பது பற்றிய அனைத்து கலந்துரையாடல்களையும் உங்கள் பொறுப்பிலேயே விட்டுவிடலாம்.
அப்படி அவருக்குத் தண்டணை கொடுப்பதை நீங்கள் உறுதி செய்தால் (பணம் வாங்கிக்கொண்டு செயல்படும் துரோகி என்று உறுதிசெய்யப்பட்டால்), அதையும் தோழர்களையே செய்யச் சொல்வோம். (எம் மாலெ சகலபாடியான மகஇகவிற்கு இதில் மாற்றுக்கருத்து ஏதும் இருக்காது.) இவர்களுக்கு (புலிகளை விமர்சிப்பது என்ற விவகாரத்தில் மகஇகவிற்கும் சோபாசக்திக்கும் பெரிய வேறுபாடு இல்லையென்பதால்) அதில் உடன்பாடு இல்லையென்றால் நீங்களே அந்தக் காரியத்தை முன்னின்று செயல்படுத்துங்கள். ஈடு செய்யமுடியாத அல்லது ஈடு செய்யவேண்டிய இழப்புதான் என்று இலங்கை அரசு எழுதிவிட்டுப் போகட்டும். செய்வீர்களா தோழரே? (மாவோவின் “இது கொடூரமானது, இது நல்லது” என்ற கட்டுரை நினைவிற்கு வருகிறதா?). இது குற்றஞ்சாட்டிய மகஇகவிற்கும் அப்படியே பொருந்தும். தவறுசெய்தால் அதற்கு சுயவிமர்சனம் ஏற்றுக்கொள்வதில் மகஇகவிற்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது என்பதில் எனக்கு இன்னமும் நம்பிக்கையிருக்கிறது.
எனக்கு தனிமனித விமர்சனங்களில் அதிலும் அரசியலுக்கு அப்பாற்பட்ட விமர்சனங்களில் நமது மாலெ மொழியில் சொல்வதென்றால் மயிர் பிளக்கும் விவாதங்களில் நம்பிக்கையில்லை. தனிப்பட்ட விமர்சனங்கள் ஓரளவிற்கு தேவையென்றாலும் அது அரசியலை அடிப்படையாகக் கொண்டு மார்க்சிய மெய்யறிவோடு ஆய்வு செய்யப்பட வேண்டும். அரசியலற்ற தனிப்பட்ட விமர்சனங்கள் பொழுதுபோக்கு சொற்றொடர்களாகவே அமையும். எனவே அரசியலை ஆணையில் வைப்போம். நடந்த சம்பவங்களை மார்க்சிய நுண்ணொளியில் ஆய்வு செய்வோம். தவறுகளை களைந்துகொள்வோம். எமக்கு நம்பிக்கையிருக்கிறது. நீங்கள் எமது கேள்விகளுக்கு பதிலுரைப்பீர்கள். சோபா பற்றி பேசும்போது சிறிதளவு உணர்வுவயப்பட்டு நான் எழுதியிருப்பதாகக் கருதுகிறேன். ஆனால் எம் தோழன் அ.மார்க்சு அதைப் புரிந்துகொள்வார். புன்னகையோடு தமது தவறுகளை ஒப்புக்கொள்ளவும், திருத்திக்கொள்ளவும் அடுத்தவர்கள் தமது தவறுகளை திருத்திக்கொள்ள உதவவும் அ.மார்க்சிற்கு பாட்டாளி வர்க்க மனம் உண்டு. ஏனெனில் அவர் எம் தோழர். அந்தோணியின் புதல்வர்.
புரட்சி நீடுழி வாழ்க
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
சந்திரசேகர ஆசாத்
நாகர்கோயில்
(பின்குறிப்பு்: பலபேர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் நீங்கள் இப்போதெல்லாம் சில கட்டுரைகளுக்கு பதிலளிப்பதில்லையாம். இந்தக் கட்டுரைக்கு பதிலளிக்கவில்லையெனில் உங்கள் வீட்டிற்கு வந்து செல்லமாக மிரட்டி பதிலை எழுதச் சொல்லி வாங்கும் உரிமை எமக்கு உண்டு என்று சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.)

சாபக் குருதியால் நனைந்த சிவப்பு நிலம் - இசைப்பிரியா பற்றிய ஞாபகக் குறிப்புக்கள்

என்ட கண்ணீர் இவங்கள விடுமே? என்ட சாபம் இவங்கள விடுமே? என்கிற வார்த்தைகளால் பிள்ளைகளைக் குறித்து ஈழத்து தாய்மார் தந்தைமார் இடும் சாபம் நெஞ்சை எந்தளவு வலிக்க வைக்கிறதோ அந்தளவு குற்றம் இழைத்தவர்களின் மீது அந்த வார்த்தைகள் சாபமாகவும் விழுகின்றன. காணாமல் போனவர்கள் குறித்து தாய்மார்களும் தந்தைமார்களும் ஒட்டுமொத்த உறவகளும் நாளும் பொழுதுமாக துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் சாபங்கள் வதை நடந்த சமகாலத்திலேயே பழி வாங்குவதைப்போல சம்பவங்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில் இசைப்பிரியா குறித்த காட்சிகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கை அரச படைகளும் அதன் அரசனான மகிந்தராஜபக்ஷவும் எத்தகைய போர் குற்றவாளிகள் என்பதை கடந்த சில மாதங்களாக வெளிவரும் பல காணொளிகள் நிரூபித்து வருகின்றன.
இரத்தம் நனைந்த நிலத்தில் கொல்லப்பட்ட போராளிகள் பற்றிய முதல் காணொளி வெளியாகி இலங்கை அரசின் யுத்தக் கொடுமைகளையும் குற்றங்களையும் அம்பலமாக்கியது. அந்தக் காணொளியில் போராளிகள் நிர்வாணமாக்கப்பட்டு கைகளும் கண்களும் பின்பக்கமாக கட்டப்பட்டு ஒவ்வொருத்தராக இருத்தப்பட்டு சுட்டுக் கொல்லும் கொடுமைமிகு யுத்தக் குற்றத்தை இலங்கைப் படைகள் செய்திருந்து அம்பலமானது. அந்தக் காட்சியில் கொல்லப்பட்ட போராளிகள் பின்பக்கமாகவே காட்டப்பட்டனர். எனது பிள்ளை எங்கோ இருக்கிறது. என் பிள்ளை திரும்பி வரும் என்று காத்திருந்த பல பெற்றோர்களை அந்தக் காணொளி மீண்டும் அலைத்தது. ஒவ்வொரு உறவுகளும் இது என் உறவாக இருக்குமோ அல்லது என் உறவுக்கு இப்படி என்ன நடந்ததோ? என்று தங்களுக்குள் துடித்தார்கள்.
தமிழர்களை கொன்று போட்டபடி இரத்தம் வழியும் வாயால் நாங்கள் சனங்களை கொல்லவில்லை. நாங்கள் பயங்கரவாதிகளை மட்டுமே கொன்றோம் என்று சொல்லிக் கொண்டு மாபெரும் படுகொலையை நிகழ்த்தி ஒரு மனித இனத்தை பெருந்துயருக்கு ஆளாக்கிய இலங்கை அரசும் அதன் அரசன் மகிந்தராஜபக்ஷவும் அதன் தளபதிகளும் இந்தக் காணொளியையும் மறுத்தார்கள். தங்கள் படைகள் இல்லை என்றும் தங்கள் படைகள் மனிதாபிமான யுத்தத்தையே நடத்தினர் என்றும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். யுத்த களம் ஒன்றில் சரணடைந்த போராளிகளை அல்லது படைதரப்பை எப்படி கையாள வேண்டும் என்கிற யுத்த விதிகளை மீறி இலங்கைப் படைகள் யுத்த களங்களில் செய்த கொடுமைகள் மிகவும் பயங்கரமானவை. வெளியில் இன்னும் அறியப்படாத கொடுமைகளும் இருக்கின்றன. நிருவாணமாக, கண்களை கட்டி, கைகளை கட்டி, பின்பக்கமாக கொன்று அவர்களின் இரத்தத்தால் நிலத்தை கழுவ வேண்டும் என்பதைப் போன்ற கொடுமையான விருப்பங்கள் இலங்கைப் படைகளுக்கு இருக்கின்றன. இப்படிப்பட்ட படைகளின் வேறு பல கொடுமையான விருப்பங்களும் தொடர்ந்து அம்பலமாகி வருகின்றன.
தலைவரின் மகள் துவாரகா கற்பழித்து கொல்லப்பட்டார் என்று குறிப்பிடப்பட்டு வெளியான படம்தான் இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரத்தைக் வெளிக்காட்டியது. துடிதுடித்து வன்மமாக கொல்லப்பட்டிருக்கிறார் என்பதையும் வன்புணர்வு செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார் என்பதையும் அந்தக் காணொளி தெளிவாக்கியிருந்தது. குறித்த படம் தலைவரின் மகள் துவாரகாவின் உடையதல்ல அந்தப் படத்தில் இருப்பவர் ஊடகப் போராளி இசைப்பிரியா என்ற விடயம் பின்னர் தெரியவும் வந்திருந்தது. இசைப்பிரியா எங்கிருக்கிறார்? அவர் எங்கேனும் சரணைடைந்து இருக்கிறாரா? என்று காத்திருந்தவர்களுக்கு அவர் இல்லை; அவர் எப்படிக் கொடுமையாக கொல்லப்பட்டிருக்கிறார் என்ற செய்தியுடன் துயரம் பீறிடும் பயங்கரக் காட்சி வெளிவந்தது.
அதன் பிறகு வெளியான ஒரு காணொளித் தொகுதியில் மேலும் பல போராளிகளும் பொதுமக்களும் சிறுவன் ஒருவனும் சித்திரவதைக்காக கைது செய்யப்பட்டிருக்கும் காட்சி வெளியானது. அந்தக் காட்சியில் அனைவரும் பொதுமக்கள் உடையில் காணப்பட்டார்கள். அந்தக் காட்சியில் சிலரை அவர்களின் உறவுகள் இனங்காணங்கண்டிருந்தார்கள். யுத்தகளம் ஒன்றில் அந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பதை அவர்கள் கைதிகளாக இருத்தப்பட்டிருக்கும் சூழல் காட்டுகிறது. தென்னை ஓலைகளை பாதுகாப்பு வேலிகளுக்காக இலங்கைப் படைகளும் போராளிகளும் பயன்படுத்துவார்கள். அந்த தென்னை ஓலைகளில்தான் அந்தத் தமிழர்கள் இருத்தப்பட்டிருந்தார்கள்.
மண் தடுப்பு அல்லது பெரிய பதுங்குகுழி போன்ற சூழலாகவும் தெரிகிறது. அவர்கள் யுத்த களம் ஒன்றில் கைதிகளாக  பிடிபட்ட நிலையில்தான் இருந்தார்கள் என்பதையும் பெரும் ஆபத்தை எதிர்கொண்டு விட்டார்கள் என்பதையும் அந்தக் காணொளி வெளிப்படுத்தியது. அவர்களின் கண்களில் கொலையின் கொடும் பயம் உறைந்திருந்தது. எதுவும் செய்யாத எதையும் அறியாத அந்தச் சிறுவனும் கொலைப் பலிக்கு அஞ்சியபடி இருக்கிறான். அவர்களுக்கு பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாத நிலையில் சிலரை இனங்கண்ட உறவுகள் அவர்கள் இன்னும் மீளவில்லை என்று சொல்லியுள்ளார்கள். பொதுசனக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் அந்தக் காணொளியில் இருப்பதாக இனங்காட்டியிருந்தார். சிலர் இனங்காட்ட அஞ்சியிருக்கிறார்கள்.
இதே காணொளித் தொகுதியில் இசைப்பிரியாவின் படமும் இருந்தது. மண்மூட்டைகளில் தலை வைத்தபடி இருக்கிற இந்தக் காட்சியில் இசைப்பிரியாவின் அருகில் இன்னொரு பெண்ணும் கொல்லப்பட்ட நிலையில் கிடக்கிறார். இசைப்பிரியா  வெள்ளைத் துணியால் போர்த்து மூடப்பட்டிருக்கிறார். மற்றைய பெண்ணைப் இனங்காண முடியாதிருக்கிறது. இந்த விவரணப்படத்தில் நீளமான நேர்காணலை வழங்கும் இராணுவ அதிகாரி தங்கள் படைகள் யுத்தகளத்தில் எப்படி செயல்பட்டார்கள் என்பதையும் சரணடைந்த போராளிகளை கொலை செய்ய அவர்களுக்கு மேலிடத்தில் இருந்து எப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் எப்படி கொலைகளைச் செய்தோம்; எப்படி சித்திரவதைகளைச் செய்தோம் என்றும் தன் அனுபவங்களை பகிர்ந்துள்ளார். முகம் மறைப்பட்ட நிலையில் குறித்த இராணுவ உயரதிகாரி தன் நேர்காணலை வழங்கியிருக்கிறார்.
00
அந்தக் கொடும் களம் எப்படி இருக்கும் என்பதை இந்த முகங்கள் நமக்குச் சொல்லுகின்றன. அந்த மனிதர்களின் இறுதி வார்த்தைகள் எப்படி இருக்கும் என்பதை இந்த காட்சிகள் சொல்லுகின்றன. மரணமும் கொடிய மிருகங்களும் அந்தத் தமிழர்களை கொடுமையாக வதைத்துக் கொன்றிருக்கிறது. இசைப்பிரியாவை போன்ற அந்த மனிதர்களின் பின்னால் நீளமான குளிர்ச்சியான வலிமை மிகுந்த பல இரகசியங்கள், கனவின் ஏக்கங்கள், வாழ்வின் இலட்சியத்தின் தாககங்கள் கிடக்கின்றன. இந்தப் பதிவில் இசைப்பிரியா பற்றிய சில ஞாபகங்களை பதிவு செய்ய நினைக்கிறேன். இசைப்பிரியாவின் சூழலில் வாழ்ந்த அவருடன் பணியாற்றிய அவருடன் நெருங்கியிருந்த பலர் இன்று அவர்களைக் குறித்து எதுவும் பேச முடியாதிருக்கிறார்கள் என்பதையும் அவசியம் குறிப்பிட வேண்டும்.
1981இல் மே மாதம் 02ஆம் திகதி பிறந்த இசைப்பிரியாவின் இயற்பெயர் சோபனா. 1998இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவில் அடங்குகிற ஊடகத்துறையான நிதர்சனபிரிவுப் போராளியாக இருந்தார். நீண்ட காலமாக நிதர்சனப் பிரிவிலேயே இருந்திருக்கிறார். விடுதலைப் புலிகளின் ஊடக வெளியீடாக வெளிவரும் காணொளி வெளியீடான ஒளிவீச்சுத் தொகுப்பு பெரும்பாலானவற்றை இசைப்பிரியாவே அறிமுகம் வழங்கி தொகுத்தளித்திருக்கிறார். இளம் அறிவிப்பாளராக அந்த ஒளிவீச்சுக்களில் அறிமுகமாகிய இசைப்பிரியா ஈழத் தமிழர்களுக்கேயுரிய முறையில் வீடியோ சித்திரங்களை அறிமுகப்படுத்துபவர். ஈழ மக்களின் கனவுகள், ஏக்கங்கள், மண்ணுடன் மண்ணான வாழ்வுகள், இடம்பெயர் அலைச்சல்கள், நிலப்பிரிவுகள், மனிதத்துயரங்கள், போர்க்கொடுமைகள், போர்க்களங்கள், போர் வெற்றிகள், இலட்சியக் கருத்துக்கள் என்று விடுதலைப் போராட்டத்தின் அன்றைய காலத்து காட்சிகளை ஒவ்வொரு மாதமும் கொண்டு வரும் ஒளிவீச்சை குறித்த தன்மைகளை அதற்கு ஏற்ப அறிமுகப்படுத்தி இசைப்பிரியா வழங்குபவர்.
விடுதலைப் புலிகளின் நிதர்சனம் பிரிவு வளர்ச்சி பெற்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியாக பரிணமித்தது. அப்பொழுது தேசியத் தொலைக்காட்சியின் செய்திப் பிரிவுப் பொறுப்பாளராக இசைப்பிரியா கடமையாற்றினார். போராளிகளின் ஊடகப் பிரிவில் மாதாந்தமாக ஒளிக்காட்சிகளை தொகுத்து வழங்கி வந்த நிதர்சனம், ஒரு தேசிய தொலைக்காட்சியாக உருவாகிய வேளையில் செய்திப்பரிவில் இருந்த பணிகளை செம்மையாக இசைப்பிரியா செய்திருக்கிறார். ஊடகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவர் ஈழப் போராட்டத்தில் இணைந்த பின்னர் தன்னை ஒரு ஊடகப் போராளியாக்கி போராட்டத்திற்கு உன்னதமான பங்களித்தார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட இசைப்பிரியா வேம்படி இந்து மகளிர் பாடசாலையில் உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கல்வி கற்றிருந்தார். 1996இல் இடம்பெயர்ந்து மல்லாவி மத்திய கல்லூரியில் கல்வியை தொடர்ந்து கற்றிருந்தார். பின்னர் உயர் தரக் கல்வியை கற்றுக் கொண்டிருந்தபொழுது அதனை இடை நிறுத்தி ஈழப் போராட்டத்தில் இணைந்து கொண்டார். ஈழத்தின் அழகி என்று சொல்லத்தக்க வகையில் ஈழப் பெண்களின் அழகின் குறியீடான தோற்றத்தைக் கொண்டவர். மென்மையும் இரக்கமும் குளிர்ந்த இலட்சியப் பாங்கும் கொண்ட இசைப்பிரியா ஈழத்து மக்களுக்கு நடந்த அநீதிகளை கண்டு போராட வேண்டும் என்று தன் இளவயதில் போராட்டத்தில் இணைந்தவர்.
தமீழீழத் தேசியத் தொலைக்காட்சியில் அவர் வகித்த பங்கு முக்கியமானது. தொலைக்காட்சியின் தொடக்க கால செய்திப்பரிவுப் பொறுப்பாளராக இருந்த இசைப்பிரியா பின்னர் ஒரு படைப்பாளியாக மாறி தேசியத் தொலைக்காட்சிக்கு பல்வேறு படைப்புக்களை தந்திருக்கிறார். இசைப்பிரியா என்றதும் எனக்கு ‘துயிலறைக்காவியம்’ என்ற விவரண நிகழ்ச்சிதான் ஞாபகத்து வருகிறது. அங்கு பணிபுரிந்த ஒவ்வொரு படைப்பாளிகளின் பின்னாலும் அவர்களின் பெயர்கள் அடைமொழியாக இருக்கும். இசைப்பிரியா குரல் கொடுத்து ஒலிபரப்பாகி வந்த துயிலறைக் காவியம் என்ற நிகழ்த்து அந்த நிகழ்ச்சியை எழுதுபவரைவிட இசைப்பிரியாவின் குரலையே அதிகமாய் நினைவுபடுத்துகிறது. மிக இயல்பான எதார்த்தமான நவீனத் தன்மை மிக்க வாசிப்பும் குரலும் அந்த நிகழ்ச்சியை மிகவும் பெறுமதியாக்கியது.
இசைப்பிரியாவின் குரலில் ஒலித்த அந்த ‘துயிலறைக்காவியம்’ என்ற நிகழ்ச்சி மாவீரர்களைப் பற்றியது. துயிலறைக்கடிதங்கள் போல கடித அமைப்பில் உருவாக்கப்படும். மாவீரர் ஒருவரது வரலாறு குறித்து பதிவு செய்யும் அந்த நிகழ்ச்சியில் மாவீரர்களைப் பற்றி அவர்களது பெற்றோர் நண்பர்கள், சகபோராளிகள், பொறுப்பாளர்கள், தளபதிகள், தலைவர் என அனைவரும் சாட்சியமாக பதிவு செய்வார்கள். செவ்வாய்கிழமைகளில் அந்த நிகழ்ச்சி ஒலிபரப்பாகும். ஈழக் கனவுக்காக போராடி வீழ்ந்த போராளிகளுக்கு அஞ்சலியாகவும் பதிவாகவும் நினைவுபடுத்தலாகவும் முக்கியம் பெறும் அந்த நிகழ்ச்சியில் இசைப்பிரியாவின் குரல் மிகத் தனித்துவமாக ஒலித்திருக்கிறது.
கவிதைகளை விபரணச் சித்திரங்களாக்குகிற வேலைகளில் அவர் ஈடுபட்டார். புதுவை இரத்தினதுரை, செந்தோழன், ஆதிலட்சுமி சிவகுமார், வீர போன்றவர்களின் கவிதைகளை இப்பிடி விவரணங்களாக்கியிருக்கிறார். என்னிடமும் கவிதை ஒன்றை கேட்டார். தருகிறேன் என்று சொல்லி வாரக் கணக்காகி மாதக் கணக்கில் காலம் நீண்டு கொண்டு போனது. ‘தீபச்செல்வன் என்ன மாதிரி கவிதை தருவிங்களே?’ என்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்டபார். இசைப்பிரியாவைக் காணும் பொழுதுதெல்லாம் ‘எழுதித் தருகிறேன் எழுதித் தருகிறேன்’ என்று சொல்லிக் கொண்டிருந்தேன். பின்னர் நீளமாக அன்றைய சூழலை வைத்து ஒரு பிரதி எழுதிக் கொடுத்தேன். சில நாட்களில் அதற்கு குரல் கொடுத்து படத் தொகுப்பாக்கம் செய்திருந்தார்.
தேசியத் தொலைக்காட்சியில் அவர் பல வேலைகளை செய்திருக்கிறார். வெறுமனே குரல் கொடுப்பதற்கு அப்பால் அவற்றை படத் தொகுப்பு செய்வது, படைப்பது, பிரதிகளை எழுதுவது, காட்சிப் பிடிப்புக்களை இயக்குவது, காட்சிகளை தேடிப் பெறுவது, கமராக்களை கையாள்வது என எல்லாத் துறையிலும் அறிவுபூர்வமாகவும் நுட்பமாகவும் இயங்கினார். நாளுக்கு நாள் ஒவ்வொரு துறையிலும் அவர் வளர்ச்சி பெற்று வந்தார். படத்தொகுப்பாக்கம் செய்வது போன்ற கணினி ரீதியான அறிவை பெற்றுக் கொள்ள இசைப்பிரியாவிடம் இருந்த ஆர்வமே முக்கிய காரணம். அன்றைய நாட்களில் பெண் படைப்பாளிகளின் தொலைக்காட்சித் தயாரிப்புக்கள்தான் மிகச் சிறந்தவை என்கிற அளவுக்கு நல்ல அபிப்ராயம் இருந்தது. அதற்குள் இசைப் பிரியா போன்ற ஊடகப் போராளிகளின் அர்பணிப்பும் இலட்சியப் பாங்கும் கொண்ட பணிதான் காரணமாக இருந்தது.
செய்தித் தொகுப்பாளராகவும் செய்தி எழுதுபவராகவும் பணியாற்றிய இசைப்பிரியா உதிரிகளாக பல நிகழ்ச்சிகளுக்கு குரல் வழங்கியிருக்கிறார். நடனத்திறமையும் கொண்டவர். நேர்காணல்களிலும் ஈடுபட்டிருக்கிறார். கலைஞர்களை சந்திக்கும் நிகழ்ச்சிகளையும் ‘சாலை வழியே’ என்ற அபிப்பிராய நிகழ்ச்சிகளையும் செய்திருக்கிறார். ‘இராஜகுமாரியின் கனவு’ என்ற குறும்படத்தை தயாரித்தும் இருக்கிறார்.
இசைப்பிரியாவை அதிகம் வெளி உலகிற்கு அல்லது ஈழத் தமிழ் மக்களுக்கு வெளிக்காட்டியவை அவரது முகம், குரல், நடிப்பு என்பனவைதான். தொலைக்காட்சியில் ஆவண வீடியோத் தொகுப்பில் அவர் அறிவிப்பாளராக படைப்பாளியாக இருந்து செம்மையாக இயங்கியதுடன் ஈழப் படங்களிலும் பாடல்களிலும் நடித்த பொழுது அவர் இன்னும் பேசப்பட்டார். இசைப்பிரியா பெரும்பாலான ஈழப்பெண்களின் முகபாவமும் மனமும் கொண்டவர். அவரது நடிப்புக்களில் அந்தத் தன்மைகள் அப்பட்டமாக வெளிப்பட்டுக் கிடக்கும். இசைப்பிரியா நடித்த படங்களில் ‘ஈரத்தி’ என்ற நீளப் படமும் ‘வேலி’ என்ற குறும்படமும் முக்கியமானது.
ஈரத்தி படத்தில் முழுக்க முழுக்க ஈழத்து சாதாரண பெண்ணைப்போல வருகிறார். ஈழத்துப் பெண்களுக்கு இருக்கிற குணங்களை மிக இயல்பாக பிரதிபலித்திருப்பார். அந்தப் படத்தில் இவரது சகோதரியாக வருகிற போராளியுடனான உரையாடல்கள், தம்பியாக வருகிற பாத்திரத்துடனான உரையாடல்கள், அம்மாவுடனான உரையாடல்கள், காதலனுடனான உரையாடல்கள் என்பன மனதை விட்டகலாது நிற்கின்றன. ஈரத்தி படம் பலவகையிலும் முக்கியமான படம் என்று அந்தப் படம் வெளியாகிய நாட்களில் எழுதிய குறிப்பில் எழுதியிருந்தேன். அந்தப் படத்தை இயக்கியது, திரைக்கதை எழுதியது, படப்பிடிப்பு செய்தது, படத் தொகுப்பு செய்தது எல்லாமே பெண் போராளிகள்தான். அத்தோடு படத்தின் சிறப்புக்கு இசைப்பிரியா போன்ற போராளிகளின் நடிப்பும் முக்கிய அம்சமாக அமைந்திருக்கிறது.
இசைப்பிரியா நடித்த ‘வேலி’ படமே என்னை அதிகம் பாதித்த படம். அந்தப் படத்தையும் முல்லை யேசுதாசனின் ‘துடுப்பு’ படத்தையும் குறித்து இரண்டு பெண்ணியக் குறும்படங்கள் என்று வீரகேரிப் பத்திரிகையின் நிறப்பிரிகை பகுதியில் எழுதியிருந்தேன். அதைப் பார்த்த இசைப்பிரியா ‘எங்கட படத்தைப் பற்றி வீரகேரியில எழுதியிருந்தியள் நன்றி’ என்றார். ‘நல்லா இருந்தது சந்தோசமாயிருந்தது. நிமலாக்கவும் சொல்லச் சொன்னவா’ என்று சொல்லி மகிழ்ச்சியடைந்தார். வேலி படத்தில் இசைப்பிரியாவின் லட்சுமி என்ற பாத்திரம் கொண்டு வருகிற பிரக்ஞையும் கதையும் ஈழத்தின் நிகழ்காலத் துயரத்தை எடுத்துப் பேசுபவை.
வேலி படத்தில் முற்றிலும் வேறுபட்ட பாத்திரத்தில் இசைப்பிரியா நடித்தார். இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிக்கு காணி பார்க்கச் சென்ற கணவனை இராணுவம் கொலை செய்து மலக்குழிக்குள் போட்டுவிட எலும்புக்கூடு மட்டும் மிஞ்சி விடுகிறது. ஒரு பெண் குழந்தையுடன் தனித்து வாழும் பொழுது ஏற்படும் சமூக ஊடாட்டங்களே தொடர்ந்து கதையாகிச் செல்கிறது. யுத்தம் காரணமாக கணவர்களை பறிகொடுத்து தவித்துக் கொண்டிருக்கிற ஆயிரம் ஆயிரம் பெண்களின் குறியீடாக வருகிறார் இசைப்பிரியா. வசனங்களை பேசும் விதமும் உணர்வுகளை முகத்தில் வெளிக்காட்டும் விதமும் ஈழப் பெண்களின் நிகழ்கால உணர்வை காட்டுகின்றன. ஈழப் பெண்களுக்கேயுரிய வலிமையையும் மிடுக்கையும்கூட இந்தப் படத்தில் இசைப்பிரியா அதிகம் வெளிக்காட்டுவார். அந்தப் படத்தில் வரும் இசைப்பிரியா போன்ற பாத்திரம் வகிக்கிற பல பெண்களை நான்  பார்த்திருக்கிறேன். சமூகத்தின் வசைகளுக்கும் பழிப்புக்களுக்கும் எதிராக கடுமையாக போராடுகிறார்கள்.
வேலி படத்தில் அகழ்விழி என்ற பெண் போராளியின் கமராவில் இசைப்பிரியா மிகவும் அழகாக இயல்பாக படம் பிடிக்கப்பட்டிருக்கிறார். ஈழத்தின் அழகி என்கிற அளவில் அவரை காட்டுகிற கோணங்களும் அளவுகளும் அமைந்திருக்கின்றன. இயல்பாக பாத்திரங்களுக்கு ஏற்ப அதன் உணர்வுகளை பிரதிபலித்து வாழ்பவர் இசைப்பிரியா. இப்பிடி இசைப்பிரியா ஒரு ஊடகப் போராளியாக பல வகையில் முக்கியம் பெற்றிருக்கிறார். பல பாத்திரங்களை வகித்திருக்கிறார். கனவுக்காக இலட்சியத்திற்காக ஊடகப் பிரிவில் முழுமையாக இயங்கி தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.
சரி, பிழைகளை நேருக்கு நேராக சுட்டிக் காட்டும் தன்மையும் நறுக்கென்று எதனையும் மனந்திறந்து பேசும் தன்மையும், எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் தன்மையும் இசைப்பிரியாவின் இயல்புகள் என்று என்னிடம் சொல்லிய முன்னாள் பெண்போராளி ஒருவர் எல்லோரையும் மதித்து நடந்து கொள்வதும், தனது கடமைகளில் கண்ணாக இருப்பதும் அவரது இயல்புகள் என்றும் குறிப்பிட்டார். இலட்சியத்தில் கொள்கையில் கனவில் புரிதலும் குளிர்ச்சியும் வலுவும் கொண்டவர் இசைப்பிரியா.  
வன்னிப் போரின் இறுதிக் களத்தில் அவர் சரணடைந்த பொழுது அவரை இராணுவம் மிகவும் கொடுமையாக சித்திரவதை செய்திருக்கிறது; வன்புணர்வுக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஒரு தாயாக அவர் கருவுற்று குழந்தையை சுமந்திருந்த நிலையில்தான் இப்படி வன்முறையால் சிதைத்துக் கொல்லப்பட்டார். இசைப்பிரியாவுடன் அவரது கருப்பையில் இருந்த குழந்தையையும் அவர்கள் கொன்றிருக்கிறார்கள். பல ஈழப் பெண்களுக்கு நடந்த துயரக் கொடுமை இசைப்பிரியாவுக்கும் நடத்திருக்கிறது. அது போல பல ஆண் போராளிகளும் பொதுமக்களும் இப்பிடி சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்ட்டிருக்கிறார்கள். வாக்குறுதிகளின் பின்னர் சரணடைந்த பல போராளிகள் இப்படி வதைக்களத்தில் கொல்லப்பட்டனர். மிகவும் பரிதாபகரமாக இரக்கமற்ற வகையில் சரணடைந்த போராளிகளை கொன்ற குருதியால் நமது நிலம் நனைந்து சிவந்து போயிருந்தது.
எல்லாச் சாபங்களும் எல்லாக் கண்ணீரும் எல்லா குருதிகளும் மகிந்த ராஜபக்ஷவை பாவமாக தொடர்கிறது. இந்த ஈழத் துயரம் மகிந்த மற்றும் அவரது வாரிசுகள் முதல் அவரது படைகள் வரை சந்ததிகளைக் கடந்து பழி தீர்க்கிற கொடும் சாபமாகி விட்டது. எல்லா விதமான அநீதிகளைக் கண்டும் ஈழத் தாய்மார்கள் நெஞ்சில் அடித்து அழுது திட்டினர். மகிந்தராஜபக்ஷ ஈழப் போராளிகளுடன் நடத்தியது நேரடியான போர் அல்ல என்பதையும் தந்திரம் நிறைந்த பல வழிகளில் போராளிகளை அழித்து ஈழப் போராட்டத்தை முடக்க பல குற்றங்களை இழைத்துள்ளார் என்பதும் ஈழத் தமிழர்களின் இருப்பையும் பிரக்ஞையும் இல்லாமல் செய்ய முற்பட்ட கொடுங்கோல் வேலை என்பதையும் குருதியால் நனைந்த ஈழ நிலம் அம்பலப்படுத்திக் கொண்டேயிருக்கிறது.
- தீபச்செல்வன் ( deebachelvan@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

செவ்வாய், 15 மார்ச், 2011

ஜப்பான் ஆழி பேரலையில் மரணமடைந்த ஜப்பானியர் மரணத்தை தமிழர்களாய்   மகிழ்வோடு கொண்டாடுவோம்.   
                                                                              மலேசியாவில் சயாம் ரயில் பாதை போட ஒரு லட்சத்து அய்ம்பதயிரம் தமிழர்கள் ஜப்பானியரின் நேரிடையான படுகொலை .முள்ளிவாய்கால் படுகொலையில் மறைமுகமான ஜப்பான் பங்கு  இனி மேல் மனிதாபிமானம் நமக்கு தேவை இல்லை.இன படுகொலை இறந்து போன நமது உறவுகளை நம் உயிர் உள்ள வரை நினைவு கூர்வோம.நமது அடுத்த தலைமுறை விடுதலை காற்றை சுவாசிக்க உணர்வோடு போராடுவோம் தமிழ்நாட்டு விடுதலைக்கான பாதையை கண்டு பயணப் படுவோம் . அதுவே ஈழ விடுதலைக்கு உண்மையான ஆதரவாக அமையும்.குரல் வழி அதரவு காற்றில் விழும் சருகின் பயன் மட்டுமே.நமது விடுதலைக்கான பேரோலம் இந்திய நாய்களின் செவிட்டில் அறையட்டும்.ஈழத்துக்கு அதரவு அடிமையின் அதரவு அல்ல விடுதலை நாட்டின் அங்கீகாரம்.விடுதலையை அவர்கள் பெற்று விட்டார்கள் .நாட்டுக்கான கருத்து அவர்களுக்கு உருவாகி விட்டது.நாம் இன்னும் இந்திய அடிமைகள் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

திங்கள், 14 மார்ச், 2011

முத்துக்குமாரும், முக‌மது பௌ அசிசியும் - துனீசிய‌ மாவீர‌னின் நினைவுக‌ள்


த‌ன்னை துனிசியாவிற்காக‌ தற்கொடை செய்த‌ அந்த‌ நாளிலிருந்து முக‌மது பௌ அசிசியும் துனிசிய‌ ம‌க்க‌ளின் நாய‌க‌னான். இவ‌ன‌து த‌ற்கொடையே மக்களின் தொடர்ச்சியான போராட்டத்திற்கும், அதிப‌ர் சீன் அல் அபிதைன் ப‌த‌வி விலகி நாட்டை விட்டே ஓடுவ‌த‌ற்கும் கார‌ண‌மாயிற்று.
அவனுக்கு‌ வேலை கிடைக்காத‌ கார‌ண‌த்தால், அரசின் அனும‌தி இல்லாம‌ல் காய்க‌றிக‌ள், ப‌ழ‌ங்க‌ள் விற்று த‌ன‌து வாழ்க்கையை ந‌ட‌த்தி வ‌ந்தான் (நம்ம ஊர் தள்ளுவண்டி வியாபாரிகள் போல).
த‌ன்னைத் தானே எறித்துக் கொண்டு இற‌ந்தபோது திரு.பௌ அசிசிக்கு வ‌ய‌து 26. பி.பி.சி. தொலைக்காட்சிக்கு அவ‌ர‌து தங்கை சாமியா அளித்த‌ நேர்காணலில், இற‌ப்ப‌த‌ற்கு முன்ன‌ர் முக‌மது இருந்த‌ ம‌ன‌நிலையையும், எப்ப‌டி அவ‌ர் துனிசிய‌ ம‌க்க‌ளின் நாய‌க‌னானார் என்றும் விள‌க்குகின்றார்.
“ஒவ்வொரு முறை ப‌ழ‌ங்கள், காய்கறிகள் வாங்கும் போதும், விற்கும் போதும் அர‌சு அலுவ‌ல‌க‌ங்க‌ளில் இருப்போர்க‌ள் மொக‌ம்ம‌திட‌ம் ப‌ல‌முறை கையூட்டு வாங்கி அவனைத் தொந்த‌ர‌வு செய்துள்ளார்க‌ள். அன்று அவன் த‌ன்னைத் தானே எரித்துக்கொண்ட நாளன்றும் கூட‌‌ எங்க‌ளிட‌ம் ந‌ன்றாக‌த் தான் பேசினான். அன்றும் வ‌ழ‌க்க‌ம் போல அர‌சு அதிகாரிக‌ள் அவ‌னிட‌ம் கையூட்டு கேட்டுள்ளார்கள். அவ‌ன் த‌ர‌ம‌றுத்ததால், இவனிட‌ம் இருந்த‌ ப‌ழ‌ங்கள், காய்கறிகளை எல்லாம் அவ‌ர்கள் ப‌றித்துக் கொண்டார்க‌ள். அவ‌ர்க‌ளில் ஒருவ‌ன் அவனிடமிருந்த‌‌ எடைக்க‌ருவியையும் கேட்டான். அதை முக‌மது கொடுக்க‌ ம‌றுத்த‌தால் அவ‌ன் முக‌ம‌தை அடித்து துன்புறுத்தினான். அவ‌னுட‌ன் இருந்த‌ மூன்று அதிகாரிக‌ளும் சேர்ந்து முக‌ம‌தை தாக்கினார்க‌ள்.
முகமது அவ‌ர்களிடம் க‌ண்ணீர் விட்டு கெஞ்சிப் பார்த்தும் எந்த‌ ஒரு ப‌ய‌னும் கிட்டவில்லை. அவ‌ர்க‌ள் முகமதைத் தொட‌ர்ந்து அடித்து விட்டு, அவனது பொருட்க‌ளை எல்லாம் எடுத்துச் சென்று விட்டார்க‌ள். இத‌ன் பின்ன‌ர் முக‌மது ந‌க‌ர‌த்திலுள்ள‌ அர‌சு அலுவ‌ல‌க‌த்திற்கு சென்று த‌ன‌து பொருட்க‌ளை திருப்பி‌த்தருமாறு கேட்டிருக்கின்றான். அவ‌ர்க‌ள் ம‌றுத்து விட, அவ‌ன் அவ‌ர்க‌ளின் த‌லைமை அதிகாரியைச் சென்று ச‌ந்தித்து த‌ன‌து பொருட்க‌ளை திருப்பித்த‌ருமாறு கேட்டிருக்கின்றான். ஆனால் அங்கேயும் தோல்வியே அவ‌னுக்குப் ப‌ரிசாக‌ கிடைக்க‌, ம‌ன‌ம் த‌ள‌ராம‌ல் அந்ந‌க‌ர‌ ஆளுந‌ரைச் சென்று ச‌ந்திக்க‌ முய‌ன்ற‌ அவ‌னை காவ‌ல் துறை அதிகாரிக‌ள் தடுத்துள்ளார்க‌ள். அவ‌ர்க‌ளிட‌ம் க‌ண்ணீர் விட்டு த‌ன‌து நிலையை விள‌க்கிக் கூறியுள்ளான். ஆனால் அவ‌ர்க‌ள் யாரும் இவ‌ன‌து நிலையை காது கொடுத்துக் கேட்க‌க்கூடத் தயாராக‌ இல்லை. அவ‌ன‌து க‌ண் முன்னே எல்லாக் க‌த‌வுக‌ளும் அடைக்க‌ப்ப‌ட்ட‌ன. அதன்பிறகுதான் அவ‌ன் ம‌ர‌ண‌த்தை ஒரு வாய்ப்பாகப் ப‌ய‌ன்ப‌டுத்தி அவ‌ர்க‌ளிட‌ம் பேச‌ முய‌ன்றான் (அது அவர்களைச் சென்றடைந்ததோ இல்லையோ, மக்களிடம் சரியாகச் சென்றடைந்தது). வெளியே சென்று க‌ல்லெண்ணெய்(Petrol) வாங்கி  வ‌ந்து த‌ன்னைத் தானே எரித்துக்கொண்டான்.
இது ந‌ட‌ந்து ச‌ற்று நேர‌த்தில் எங்கள‌து அண்டை வீட்டார் வ‌ந்து முக‌மது த‌ன்னைத் தானே எரித்துக்கொண்ட‌தாக‌வும், உடலின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு ஆப‌த்தான‌ நிலையில் இருப்ப‌தாக‌வும் என்னிட‌ம் கூறினார்கள்.
எங்க‌ளுக்கு அது பேர‌திர்ச்சியாக‌ இருந்த‌து. முக‌மது இற‌ந்த‌தில் இருந்து அவ‌னை எண்ணி நாங்க‌ள் அழுது புல‌ம்பிக்கொண்டிருக்கின்றோம். அவ‌ன‌து இழ‌ப்பு எங்க‌ள் குடும்ப‌த்திற்கு பேரிழ‌ப்பாகும். ஏனென்றால் எங்க‌ள் குடும்ப‌த்தில் யாருக்கும் எந்த‌ ஒரு வேலையும் இல்லை (துனிசியா வேலையில்லா திண்டாட்ட‌த்தின் உச்ச‌நிலையில் இருக்கின்ற‌து). எங்க‌ளுக்கு உதவவும் யாரும் இல்லை. முக‌மது இற‌ந்துவிட்டான் என்ப‌தை எங்க‌ள் குடும்ப‌த்தில் யாராலும் இன்னும் ந‌ம்ப‌முடிய‌வில்லை.
ஆனால் இதை எல்லாம் விட‌ முகமதின் புகைப்ப‌ட‌ம் தாங்கிய‌ ப‌தாகையை கையில் ஏந்திக் கொண்டு ஆயிர‌க்க‌ண‌க்கான‌ ம‌க்க‌ள் அவ‌ன் பெய‌ரை உச்ச‌ரித்துக் கொண்டும், அழுது கொண்டும் செல்வது எங்களுக்கு இன்ன‌மும் ஆச்ச‌ர்யமான‌ ஒரு நிக‌ழ்வாக‌ இருக்கின்ற‌து. இது ஒரு மிகப்பெரிய மக்கள் போராட்டமாக மாறி உள்ளது. இத‌ற்கு முன்ன‌ர் துனிசியாவில் இப்படி ஒரு போராட்ட‌ம் ந‌டைபெற்ற‌தில்லை. முக‌ம‌தினால் இளைஞ‌ர்க‌ள் எல்லாம் ஒன்றாக‌ இணைந்து போராடுவ‌தை நான் என் கண்முன்னே காண்கின்றேன்”
……..
மாவீர‌ன் முத்துக்குமார்
முத்துக்குமார் சனவரி 29, 2009 அன்று ஈழத்திற்காக தீக்குளித்து தனது உயிரை ஈகம் செய்தான். அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள் நம் எல்லோருக்கும் தெரியும். முக‌மது பௌ அசிசியும் சனவரி 24, 2011 அன்று நாட்டிலுள்ள வேலையில்லா பிரச்சனைக்கு எதிராகத் தீக்குளித்து தனது உயிரை ஈகம் செய்தான். இதைத் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் முக‌மதின் படம் தாங்கிய பதாகைகளைக் கையில் ஏந்தி வீதிக்கு வந்து போராடினார்கள். துனிசிய அதிபர் நாட்டிலிருந்து தப்பி ஓடும் வரை போராட்டம் தொடர்ந்தது. (ஆப்பிரிக்கர்கள் படிப்பறிவில்லாதவர்கள், நாகரிகமல்லாதவர்கள் என்று இன்றும் சிந்திந்துக் கொண்டிருக்கும் தமிழக மக்களே தயை கூர்ந்து யோசித்துப் பாருங்கள் நீங்கள் யார் என?)
ஓர் ஈகம் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு சான்று. முத்துக்குமாரின் தியாகத்தைத் தொடர்ந்து மிகத் தீவிரமானப் போராட்டங்களை முன்னெடுத்து பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைக் காப்பாற்றி இருக்க வேண்டிய வரலாற்றுக் கடமையை நாம் செய்யத் தவறிவிட்டோம் என்பதை நாம் உணர வேண்டிய தருணமிது.

மூலச்செய்தி: http://www.bbc.co.uk/news/world-africa-12241082

மொழிபெயர்ப்பு. ப.நற்றமிழன்

புதன், 9 மார்ச், 2011

MESSAGE FROM MS. IROM SHARMILA CHANU



The Civil Society Submit 2010
Bangalore, 24 - 26 January

The tranquillity or disorderliness of a society is dependent on the relationship between the civil society and it Rulers. Just like the relationship between the King and the Queen bees on the one hand and their numerous offspring on the other. The offspring builds a hive in accordance to the directives of the Rulers. And they all settle together happily inside the hive with plenty of food, honey and in the safety of a secured shelter.

But this pristine peace is not eternal. As the offspring matures and assumes multiple roles, contestation and competition crops up. One tries to outsmart the other right beside the much coveted Couple. The harmony of the hive is disturbed. The inevitable intermittent fractional fighting leads to dilapidation of the hive and ultimately ruins the bees.

The role of civil society within a nation, much like the offspring bees, is enormous.  They are the very back bone of the nation. The capacity to stand united by overcoming our narrow sectarian interest, by realizing the common good in building up a just social order and by our commitment to work hard to achieve this higher goal is the only way to bring about emancipation in our society. These virtues alone can make our dream of Justice - social, economic and political - come true. This alone can abolish starvation and poverty that has been chronically plaguing our society.

I am of the firm belief that it will also heighten Nature's Beauty. And Her Beauty will ultimately harmonise with mankind's well being. And in the same manner as honey contributes towards our well being and wax enhances the beauty of our cloths, an organically-evolved value-based civil-society can bring about a Civilized Universe wherein all our fundamental rights and basic freedoms can be realised in its true sense.

My warmest regards to each and every one of you who have contributed toward sustaining this hope for a just-world order! From the confines of my hospital bed in Imphal I wish the Civil Society Submit 2010 a Grand Success!

A copy of the original letter written by Ms. Irom Sharmila Chanu




Ms. Irom Shramila Chanu has been on a hunger strike since November 2000 demanding the repeal of the Armed Forces (Special Powers) Act, 1958. The Act not repealed, she was arrested for attempting to commit suicide, detained in isolation, under judicial custody and forced fed for 10 years!

திங்கள், 7 மார்ச், 2011

கியூபக் கண்ணீரில் ஒரு மூடுதுணி

பிடல் காஸ்ட்ரோ ஒரு மாபெரும் புரட்சியாளர் என்பதிலோ, அவர் கடந்த அறுபது ஆண்டுகளாக அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ஒரு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்து வருகிறார் என்பதிலோ எவருக்கும், எக்காரணம் கொண்டும், எக்காலத்திலும், சந்தேகமிருக்க அவசியமில்லை. பிடல் காஸ்ட்ரோவுக்கு எமது சிரம் தாழ்ந்த செவ்வணக்கம் உரித்தாகிறது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் இதனை விரித்து எழுதுவது இல்லை. பிரச்சினை, கியூபாவின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான கிரன்மா இன்டர்நேஷனல் இதழில், 2011 மார்ச் 2-3 திகதிகளில் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோ எழுதிய லிபியா குறித்த இருபகுதிகளிலான அவரது கட்டுரை (NATO's Inevitable War : Fidel Castro Ruz : Granma International : March 2 and 3 in Two parts, 2011) குறித்தது. அந்தக் கட்டுரை மன்த்லி ரெவியூ, கவுன்டர் பன்ச், கியூபா டுடே உள்பட அநேகமாக புகழ்வாய்ந்த உலகின் மிகப்பல இடதுசாரி இணையங்களிலும் மறுபதிப்பாக வந்திருக்கிறது. 
உலகின் மரபார்ந்த கம்யூனிஸ்ட் கட்சிகளின் லிபியா குறித்த பார்வைகளில், இன்றைய நிலையில் பிடல் காஸ்ட்ரோவின் பார்வையே பாதிப்புச் செலுத்துகிறது. பிடலின் லிபியா பற்றிய கட்டுரையை, அதனது முக்கியமான பல பகுதிகளை தவிர்த்துவிட்டு, தேர்ந்தெடுத்த பகுதிகளை மட்டும் சுருக்கமாக மொழிபெயர்த்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ தமிழ்நாளேடான தீக்கதிர் (அரபு மக்களின் எழுச்சியும், அமெரிக்காவின் எரிச்சலும் : 06 மார்ச் 2011) வெளியிட்டிருக்கிறது. 
moammar_gaddafi_mubarak
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் லிபியா குறித்து இரண்டு விஷயங்களை வலியுறுத்திய சுருக்கமான அறிக்கைகளையும் வெளியிட்டிருக்கிறது. லிபியாவில் நேட்டோவின் தலையீட்டைத் தடுக்க வேண்டும் என்பது ஒரு விடயம், லிபியாலில் அகப்பட்டிருக்கும் இந்தியர்களை மீட்க இந்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பிறிதொரு விடயம். இதுவன்றி வேறேதுவும் அந்த அறிக்கைகளில் இல்லை. 
எதேச்சாதிகரிகளுக்கு எதிரான அனைத்து மத்தியக் கிழக்கு மக்களது எழுச்சிகளையும் ஆதரித்து வரும் மத்தியக் கிழக்குக் கம்யூனிஸ்ட் கட்சிகளான எகிப்து, துனீசிய கம்யூனிஸ்ட் கட்சிகள் முதன்மையாக கொடுங்கோலன் கடாபிக்கு எதிரான மக்கள் எழுச்சியை வரவேற்றிருக்கிறது. துனீசிய கம்யூனிஸ்ட் கட்சி அதனுடன் நேட்டோ தலையீட்டையும் நிறுத்துமாறு கோரியிருக்கிறது. பிரெஞ்சுக் கம்யூனிஸ்ட் கட்சியும், அவுஸ்திரேலிய கம்யூனிஸ்ட் கட்சியும் முதலாக கடாபிக்கு எதிரான மக்கள் எழுச்சியை வரவேற்றுவிட்டு, அப்புறமாகத்தான் நேட்டோ பற்றிப் பேசுகிறது. 
பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சி (Communist Party of Great Britain : Weekly Worker : 03 March 2011), கடாபியை வெளிப்படையாக ஆதரிக்கும் டேனியல் ஒர்ட்டேகாவினதும், சேவாசினதும் நிலைபாட்டைக் கடுமையாகக் கண்டித்திருப்பதுடன், கடாபியின் படைகளுடன் சேர்ந்து பாட்டாளிவர்க்கம் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவேண்டும் என சேவாஸ் சொல்லாதுததான் மிச்சம் என நக்கலாகவும் குறிப்பிட்டிருக்கிறது. அதே வேளை ஏகாதிபத்தியத் தலையீட்டையும் அது மறுத்திருக்கிறது. கொடுங்கோலன் கடாபியை எதிர்த்துப் போராடும் லிபியப் புரட்சியாளர்களை அது ஆதரித்திருக்கிறது. 
தனது அல்ஜிஜீரா தொலைக்காட்சி உரையாடலில் லிபியாவின் மக்கள் எழுச்சி குறித்து வரவேற்றிருப்பதோடு (A New Beginning? : Riz Khan in conversation with Tariq Ali : Alzazaeera Documentary : 02 March 2011), எதேச்சாதிகாரியான கடாபி குறித்து படுநக்கலான ஒரு புனைவையும் எழுதியிருக்கிறார் உலகின் மிகமுக்கியமான மார்க்சியக் கோட்பாட்டாளரும், நியூ லெப்ட ரிவியூ ஆசிரியர் குழு உறுப்பினருமான தாரிக் அலி. அமெரிக்க மனித உரிமையாளரான நோம் சாம்ஸ்க்கி லிபிய எழுச்சியை அங்கீகரித்திருப்பதோடு, அமெரிக்க-மேற்கத்தியத் தலையீட்டை நிராகரிக்கும் அவர், ஐக்கியநாடுகள் சபை இதில் தலையிட வேண்டும் எனவும் கோரியிருக்கிறார். 
லிபியாவின் மக்கள் எழுச்சி பற்றியும் கடாபி பற்றியும் எந்த மதிப்பீடும் இல்லாமல் பொத்தாம் பொதுவாக லிபியா மக்கள் தமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என அருள்வாக்கு வழங்கியிருக்கின்றன இரு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள். 
பிடல் காஸ்ட்ரோ, தனது கட்டுரையில் மேற்கத்திய ஊடகங்கள் எவ்வாறு உலகின் பிரச்சினைகளைத் தனக்குச் சாதகமாகக் குழப்புகிறது என்பதனையும், அது எவ்வாறு உலக அல்லது லிபிய அல்லது மத்தியக் கிழக்கு மக்களை சூழ்ச்சித் திறத்துடன் (manipulation) கையாள்கிறது என்பதனையும் அவர் விரிவாகப் பகுப்பாய்வு செய்கிறார். எகிப்திய துனீசிய மக்கள் எழுச்சிகளுக்கும் கடாபிக்கு எதிரான கிளர்ச்சிகளுக்கும் இருக்கும் வித்தியாசங்களாகச் சில விஷயங்களை முன்வைக்கிறார். தமது பொருளியல் ஆதிக்கத்தின் பொருட்டும் - தற்போது மனித உரிமை என்பதன் பொருட்டும் அமெரிக்க - மேற்கத்திய - நேட்டோ ராணுவக் கூட்டமைப்பு எவ்வாறு வரலாறு முழுவதும், ஸ்பெயின், வியட்நாம், அங்கோலா, ஈராக், ஆப்கான என அந்த நாடுகளைச் சுடுகாடுகளாக ஆக்கின என்பது குறித்த தனது தீர்க்கதரிசனங்களை முன்வைக்கிறார். லிபியாவின் தலைமை குறித்துத் தான் எதுவும் சொல்லவிரும்பவில்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறார். லிபியா குறித்து இடதுசாரிகள் இன்று செய்ய வேண்டியது என்ன என்பது குறித்த ஒரு முன்மொழிவையும் அவர் அறுதியாக முன்வைக்கிறார். 
II 
கை டெபோர்ட், ழான் போத்ரிலார், நோம் சாம்ஸ்க்கி என ஊடகங்களின் பாரபட்சம், பிம்ப ஆதிக்கம், நகல் போலி உலகம் என தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்கள். தமிழகத்தில் சன், ஜெயா தொலைக்காட்சிகள் பற்றி அறிந்தவர்களுக்கு, அதனது பிம்பத் தொகுப்பு பற்றி அறிந்தவர்களுக்கு நாம் முன் சொன்ன மூவர் குறித்தெல்லாம் விலாவரியாக விளக்கிக் கொண்டு இருக்கத் தேவையும் இல்லை. ஊடகங்களால் உருவாக்கப்படும் கருத்துலகம் என்பதனை தத்தமது அரசியல் விவாதங்களின் தர்க்கமுறையாகப் பாவிப்பதும், தாம் அடையவிரும்புகிற எல்லைக்கான ஆதாரங்களை அதனின்றும் பெருவது என்பதும் வழமையாக இருந்து வருகிறது. 
இடதுசாரிகள் மேற்கத்திய ஊடகங்களால் உருவாக்கப்படும் பொய்கள் குறித்து அதிகமும் கூறிவந்திருக்கிறோம். இணக்கத்தை உற்பத்திசெய்தல் (Mnaufactering Consent :1988) எனும் தனது நூலில் நோம் சோம்ஸ்க்கி இது குறித்து குறிப்பான அமெரிக்கச் சூழலிலான ஆய்வுகளையும் செய்திருக்கிறார். 
2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி தகவல் யுத்தத்தில் நாம் தோற்றுக் கொண்டிருக்கிறோம், கதார் நாட்டு தொலைக்காட்சிச் சேவைலயான அல்ஜிஜீரா பெற்றி பெற்றிருக்கிறது எனக் கவலையுடன் அறிவித்திருக்கிறார் ஹிலாரி கிளின்டன் (Hillary Clinton: We're Losing the War : Alexander Cockborn : Counter punch : 4-6 March 2011). இன்று இணையதளத்தைப் பயன்படுத்தி எவரும் அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்கள் தவிர்த்த பிற ஊடகங்களையும் அறிந்து கொள்ள முடியும். லிபியா குறித்து அறிந்து கொள்ள நினைக்கிற ஒருவர், இன்று நியூயார்க் டைம்ஸ், வாசிங்டன் போஸ்ட், சிஎன்என், பாக்ஸ் நியூஸ் போன்ற அமெரிக்க ஊடகங்களையும், தி டைம்ஸ், தி டெலிகிராப், ஸ்கை, பிபிசி போன்ற மேற்கத்திய ஊடகங்களையும் மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை. 
அமெரிக்காவில் டெமாக்ரஸி நவ், பிரித்தானியாவில் த கார்டியன், எகிப்தில் அல் அஹ்ரம், கதாரில் அல்ஜஜீரா போன்ற மாற்று ஊடகங்களையும் ஒருவர் கண்ணுறமுடியம். அமெரிக்க-மேற்கத்திய அதிகார மையங்களுக்கு எதிரான, உண்மைக்கு அருகிலான தகவல்களைத்தான் நான் பின்குறிப்பிட்ட ஊடகங்கள் அனுதினமும் முன்வைத்து வருகின்றன. லிபியாவில் என்ன நடக்கிறது என்கிற குழப்பம் அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்களோடு, நான் பின்னர் குறிப்பிட்ட பிற ஊடகச் செய்திகளையும் கவனித்து வருகிற எவருக்கும் வருவதற்கான சாத்தியமேயில்லை. 
தகவல்களை நாம் இருவகைகளில் புரிந்து கொள்ளலாம். முன்கூட்டியே தயாரித்து வைக்கப்பட்ட, கருத்தியல் முடிவுகளின் அடிப்படையில் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வது முதலாவது முறை. நடந்ததை நடந்தவாறு புரிந்து கொண்டு, புறநிலைநீதியான மதிப்பீட்டுக்கு வருவது பிறிதொரு முறை. முதலாவது அணுகுமுறை உலகைப் புரிந்துகொள்வதிலும் வியாக்யானப்படுத்துவதிலும் தொடர்ந்து தோல்வியையே சந்தித்து வருகிறது. 
லிபியாவில் இன்று உண்மையில் என்னதான் நடக்கிறது? லிபியப் பிரச்சினையில் முதல் முரண்பாடாக இருப்பது, ஏகாதிபத்தியத்திற்கும் லிபிய அதிபரது கொள்கைக்கும் இருக்கும் முரண்பாடா? அல்லது 42 ஆண்டுகளாகத் தனது குடும்ப அதிகாரத்தை வைத்திருக்கும் எதேச்சாதிகாரியான கடாபிக்கும், அவரைப் பதவி விலகக் கோரும் - பிரதிநிதித்துவ ஜனநாயகத்தைக் கோரும் - வெகுமக்களின் ஜனநாயகக் கோரிக்கைக்கும் இருக்கும் முரண்பாடா? இதனைப் புரிந்து கொள்வதில் மேற்குலகிலும்-அமெரிக்காவிலும்-மத்தியக் கிழக்கிலும் வாழும் இடதுசாரிகளுக்கும் மார்க்சியர்களுக்கும் எந்தவிதமான மயக்கங்களும் இல்லை. கடாபிக்கு எதிர்நிலையிலும், அவருக்கு எதிரான மக்கள் எழுச்சிக்கு ஆதரவாகவும்தான் அவர்கள் இருக்கிறார்கள். 
இன்றைய நிலையில் கடாபியே கோரிக் கொள்கிற மாதிரி - அவரது நோக்கில் முதலாளித்துவம் தவிர்த்த, கம்யூனிசமும் அல்லாத மூன்றாவது பாதை அல்லது இஸ்லாமிய சோசலிசம் - அவரைச் சோசலிஸ்ட் எனவோ, இடதுசாரி எனவோ, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் எனவோ அவரைக் கருதுகிற எவரும் இங்கு இல்லை. சமவேளையில் இன்னொன்றையும் இவர்கள் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள். அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்தியங்கள் தமது எண்ணெய்வள ஆதிக்கத்தின் பொருட்டு லிபியாவில் ராணுவத்தை இறக்கித் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட அவை தருணம் பார்த்திருக்கின்றன என்பதனையும், அதற்கான வழிவகைகளை ஆராய்ந்து கொண்டிருக்கின்றன எனவும் இவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். 
குறிப்பாகச் சொல்வதானால், மத்தியக் கிழக்கு மக்களும், லிபிய மக்களும் தமது பட்டறிந்த சொந்த அனுபவங்களில் இருந்து போராட எழுந்திருக்கிறார்களேயல்லாது, அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்கள் எதுவும் அவர்களது எழுச்சிகளைத் தூண்டவும் இல்லை, அவர்களது எழுச்சிக்கான கருத்துருவாக்கத்தில் அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இதற்கு மிக வலுவான சான்றாக இருப்பது, அமெரிக்காவின் மாமன்-மச்சான்கள் ஆள்கிற சவுதி அரேபியாவில் மக்கள் தமது ஜனநயக உரிமைகளுக்காகத் தெருக்களில் இறங்கிவிட்டார்கள். சவுதி மன்னர் அனைத்துவிதமான ஆர்ப்பாட்டங்களையும் தடைசெய்துவிட்டு நடுங்கிப்போய் அரண்மனைக்குள் பிதற்றிக்கொண்டிருக்கிறார். 
III
 எகிப்துப் பிரச்சினையில் கியூபப் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோவுக்கு எந்தவிதமான குழப்பங்களும் இல்லை (The Revolutionary Rebellion in Egypt : We support the valiant Egyptian people and their struggle for political rights and social justice : Fidel Castro Ruz : Granma International: 13 February 2011). வீரஞ்செறிந்த எகிப்திய மக்களையும், அவர்களது அரசியல் உரிமைகளுக்கும், சமூக நீதிக்குமான அவர்களது போராட்டத்தை ஆதரிக்கிறோம் என மிகத் தெளிவாக எகிப்து குறித்த தனது கட்டுரையில் பிடல் காஸ்ட்ரோ பிரகடனம் செய்கிறார். எகிப்திய அரசியல் தலைமையின் அரசியல் தன்மை பற்றியும், மக்கள் எழுச்சிகளின் நோக்கு மற்றும் அரசியல் தன்மைகள் பற்றியும் இக்கட்டுரையில் பிடல் காஸ்ட்ரோ திட்டவட்டமான சொற்களில் தெளிவுபடுத்துகிறார். ஆனால் லிபியா பற்றிய கட்டுரையில் லிபியாவின் அரசியல் தலைமை குறித்துக் கருத்துச் சொல்வதிலிருந்து தவிர்த்துக் கொள்கிறேன்(abstained)’ என்கிறார் பிடல் காஸ்ட்ரோ. அதுபோலவெ அந்த மக்கள் எழுச்சியின் தன்மையும் நோக்கும் பற்றி எதனையும் அவர் சொல்வதில்லை. மாறாக இதுபற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்கிறார். 
obama_gaddafiகடாபியினது அரசியல் தலைமைத்துவம் லிபியாவில் கல்வி, மருத்துவநலம், உற்பத்தி போன்றவற்றில் சாதித்திருப்பவை குறித்து அவர் பட்டியலிடுகிறார். லிபியாவில் உணவுத் தட்டுப்பாடோ வறுமையோ இல்லை என்கிறார். லிபியக் குடிமகனின் வாழ்காலம் ஆப்ரிக்கக் கண்டத்திலேயே அதிகமானது என்பதனையும் குறிப்பிடுகிறார். இன்றைய லிபியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 21 சதவிதமாக இருக்கிறது என்றாலும், பிடல் காஸ்ட்ரோ சொல்கிற தரவுகள் எவற்றையும் நாம் மறுக்க வேணடியதும் இல்லை. ஓரு நாட்டின் வளமையை அல்லது வல்லமையை மதிப்பிடுவதற்கு இவை மட்டுமே போதுமானது இல்லை. அந்த நாட்டில் அரசியல் ஜனநாயகம் இருக்கிறதா, சிவில் சமூக நிறுவனங்கள் இயங்குகிறதா, தொழிற்சங்கங்கள் இயங்க வாய்ப்பிருக்கிறதா, அதிகாரவர்க்கம் பிரதிநிதித்துவ அடிப்படை கொண்டிருக்கிறதா, ஊடக சுதந்திரம், கலைஞர்களுக்கான சுதந்திரம் போன்றவைகள் அங்கு இருக்கின்றனவா எனும் கேள்விகள் அனைத்தும் மிகமுக்கியமானவை. இலத்தீனமெரிக்க வரலாற்றாசிரியரான எடுவர்டோ கலேனியாவின் சொற்களில் சொல்வதானால், சுதந்திரமும் சமூகநீதியும் ஒன்றிணைந்தது. ஓன்றில்லாமல் பிறிதொன்று இல்லை. மேலாக, மத்தியக் கிழக்கு-வட ஆப்ரிக்க வெகுமக்களின் இந்த எழுச்சி, அந்தப் பிதேசங்களின் சர்வாதிகாரிகள், முடிமன்னர்கள், குடும்ப ஆட்சி போன்றவற்றுக்கு எதிரான எழுச்சிகள். அரசியல் ஜனநாயகம், பிரதிநித்துவ அடிப்படை, மனித உரிமைகள், சமூகநீதி போன்றனவே இந்த மக்களைப் போராட உந்தியிருக்கும் அடிப்படைகள். 
கடாபி 42 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கிறார். அவருக்கு மிகமிக விசுவாசமான 15,000 பேரைக் கொண்ட ஆயுதப்படைப்பிரிவு, அவரது இளையமகனின் பெயரால், கமிஸ் பிரிவு என அழைக்கப்படுகிறது. அந்தப் படைப்பிரிவே இன்று மக்களை ஒடுக்குவதில் முன்னணிப்படையாக உள்ளது. அவரது இரண்டாவது மகனான சையிப் அரசிலோ அல்லது படைப்பிரிவிலோ எந்தப் பொறுப்புகளும் கொண்டவர் இல்லை. அவரது நிர்வாகத்தில் பில்லியன் டாலர்கள் பெறுமதியிலான அறக்கட்டளைகள் இயங்குகின்றன. இலண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிகஸ் அமைப்புக்கு அவரது பெயரிலான அறக்கட்டளை வழங்கிய நன்கொடைகள் தொடர்பாக அதனது நிர்வாகி பதவி விலகியிருப்பது அதற்கான சிறிய சான்று. அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்களில் தனது தந்தையின் சார்பாகவும், லிபிய அரசின் சார்பாகவும் அவர்தான் இன்று பேசுகிறார். கிளரச்சியாளர்களை நோக்கி லிபியா இரத்தக்க கடலாக ஆகும் எனக் கர்ஜித்தவர் அவர்தான். கடாபியை இந்தக் காரணத்தினால்தான் அவர் அதிகாரத்தினின்று வெளியேற வேண்டும் எனக் கிளர்ச்சியாளர்கள் கோருகிறார்கள். 
கடாபி அதிகாரத்திலிருந்து விலக வேண்டும் எனக் கோரும் லிபியப் புரட்சியாளர்கள் கோரிக்கை, பலவிதங்களில் எகிப்து துனிசீயப் புரட்சியாளர்களின் கோரிக்கையை ஒத்தது. அவர்கள் முபாராக்கையும் பென் அலியை மட்டுமே விலகச் சொல்லவில்லை. அவர்கள் உருவாக்கிய அமைப்பை முற்றிலும் கலைக்கவெனவே அவர்கள் தொடர்ந்து போராடுகிறார்கள். விளைவாகவே முபாராக்கின், பென் அலியின் அரசியல் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் விரட்டப்பட்டு, புதிய பிரதமந்திரிகளை அவர்கள் அமர்த்தியிருக்கிறார்கள். யேமானிலும் பெஹ்ரைனிலும், ஜோர்தானிலும் இதுவே கிளர்ச்சியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது. காரணம் யாதெனில், இந்த ஆட்சியாளர்களால் பல பத்தாண்டுகளாக ஒடுக்கப்பட்ட மக்களாக இந்தப் பிரதேசத்தின் மக்கள் இருக்கிறார்கள். முவம்மர் கடாபி தொடர்ந்து 42 ஆண்டுகளாக எதேச்சாதிகாரியாக, குடும்ப அதிகாரத்தை நிலைநாட்டியவராக, சிவில் சமூக அலகுகளை நிராகரித்தவராக, ஊடக சுதந்திரத்தை மறுத்தவராக, தொழிற்சங்கங்களை, அரசியல் கட்சிகளை தடை செய்தவராகத்தான் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறார். 
எழுபதுகளின் இந்திய அவசரநிலைக் காலத்தையும், இநதிராகாந்தியின் மகன் சஞ்சய்காந்தியின் வெறியாட்டங்களையும் ஞாபகம் கொள்ள முடியுமானால், இன்று கடாபியின் இரண்டாவது மகன் சையிப் எந்த அரச அல்லது படைத்துறை அதிகாரமும் இல்லாமல் பெற்றிருக்கும் அதிகாரத்தையும் ஆணவத்தையும், அதனை கடாபி அங்கீகரித்திருப்பதையும் ஒருவர் உணரமுடியும். 
அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு உள்ளான ஈராக்கியக் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட, லெபனானிய கம்யூனிஸ்ட் கட்சியோடு பிற மத்தியக் கிழக்கின் இடதுசாரிகளும் அங்கீகரித்திருக்கும் இத்தகைய பகுப்பாய்வை பிடல் காஸ்ட்ரோவும், சேவாசும், ஒர்ட்டேகாவும், இந்தியாவின் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் வந்து அடையமுடியாமல் இருப்பதற்கான காரணம்தான் என்ன? 
இத்தகைய நிலைபாட்டை அவர்கள் வந்து அடைவார்களானால் அப்போது தேசிய சோசலிசம் என்பதன் பெயரால் நடைபெறும் ஒற்றைக் கட்சி அதிகாரத்தைப் பற்றியும் தியானென்மென் சதுக்க மனிதஉரிமைப் படுகொலைகள் பற்றியும் அவர்கள் பேச வேண்டியிருக்கும். கியூப சமூகம் குறித்த விமர்சனங்களைக் கொண்ட ஜேம்ஸ் பெட்ராஸ், எடுவர்டோ கலியானோ போன்றவர்களின் விமர்சனங்களையும் அவர்கள் செவிமடுக்க வேண்டியிருக்கும். இலங்கைப் பிரச்சினையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்குத் துரோகமிழைத்த கியூபாவின் வெளிநாட்டுக் கொள்கை குறித்தும் அவர்கள் பேசவேண்டியிருக்கும். 
சர்வதேசியம் என்பது ஒடுக்கப்பட்டவர்களுடனான சர்வதேசியமா அல்லது ஒடுக்கும் தேசத்துடனான சர்வதேசியமா என்கிற அடிப்படைக் கேள்வியையும் அவர்கள் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். 
ஸ்டாலினிய வகையிலான இடதுசாரித் தேசிய சோசலிசம் மட்டுமல்ல, பிறவகையிலான ஒடுக்குமுறை தேசிய சோசலிசங்களும் காலாவதியாகிவிட்டன என்பதனையும் அவர்கள் ஒப்ப வேண்டியிருக்கும். இந்த நிலைபாடு அவர்கள் இதுவரை பேசிவந்த, இப்போதும் பேசிக் கொண்டிருக்கிற நிலைபாடுகளுக்கு எதிராக இருக்கும். இந்தக் கருத்தியில் நிலைபாட்டிலிருந்தே அவர்கள் கடாபி எனும் கொடுங்கோலன் குறித்தும், லிபிய மக்களின் எழுச்சியின் தன்மை குறித்தும் எந்தவிதமான கருத்தும் சொல்லாது தவிர்க்கிறார்கள். 
பிடல் காஸ்ட்ரோ அமெரிக்க-மேற்கத்திய ஊடகங்கள் மக்களை சூழ்ச்சித் திறத்துடன் குழப்புதாகப் பேசும் எடுகோளுக்கான புள்ளி, புரட்சியாளர்கள் தமது நோக்குகளாக - குறிப்பாக நேட்டோ நாடுகளின் தலையீடு மற்றும் விமானங்கள் பறக்காத வான்வெளியை (no-fly-zone) குறித்து உண்மையில் என்ன சொல்கிறார்கள் என்பது தெளிவாக இல்லை என்பதோடு, அதனை ஏகாதிபத்திய ஊடகங்கள் தமக்குச் சாதகமாகப் பாவிக்கின்றன எனச் சொல்கிறார். இது மிகவும் முக்கியமான ஒரு மதிப்பீடு. அது அப்படித்தான் இருக்கிறது. 
லிபியாவின் இரண்டாவது பெரிய நகரும் விடுதலை செய்யப்பட்ட பிரதேசமுமான பெஞ்சாயை மையமாகக் கொண்டு இயங்கும் இடைக்கால நிர்வாக அமைப்பின் தலைவரும், அதனது அதிகாரப் பூர்வப் பேச்சாளரும், இவர்களது ராணுவப் பிரிவின் தலைவரும் இது குறித்து தமது கருத்துக்களைச் சொல்லி இருக்கிறார்கள். எந்தவிதமான வெளிநாட்டுத் தலையீடும் எமக்குத் தேவையில்லை. எமது பிரச்சினையை நாம் பார்த்துக் கொள்வோம் என்கிறார் இடைக்கால நிர்வாகத்தின் தலைவர். இடைக்கால நிர்வாகத்தலைவரின் கருத்தையே பிரதிபலித்திருக்கிறார் அதிகாரபூர்வப் பேச்சாளர். படைத்துறைத் தலைவர் இவைகளிலிருந்து வித்தியசமாக இந்தப் பிரச்சினையை முன்வைக்கிறார். லிபியாவுக்குள், நிலத்தில், எந்தவிதமான அந்நியப் படைகளும் நிலைகொள்ளாமல், கிளர்ச்சியாளர்கள் மீது விமானம் மூலம் குண்டுவீசிக் கொல்வதைத் தடுப்பதற்காக சர்வதேசிய நாடுகள் விமானம் பறக்காத வான்வெளியை உருவாக்க வேண்டும் என அவர் கோருகிறார் (Libya : wikipeida : as on 06 March 2011
அரசியல் முடிவும், களத்திலுள்ள ராணுவத் தாக்குதலின் தன்மையை எதிர்கொள்வது குறித்த தந்திரோபாயமும் எதிர்கொள்ளும் முரண் இது. என்றாலும், மூவருமே ஒரு விதத்தில் ஒத்த கருத்தையே கொண்டிருக்கிறார்கள். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, லிபியாவில் அமெரிக்க-மேற்கத்திய படைத்துறைத் தலையீடு என்பது மிகப்பெரும் பேரழிவையும், நீண்ட கால அழிவையும் தரும் என்பதனை அவர்கள் உணரந்திருக்கிறார்கள். அந்த வகையிலேயே அத்தகைய தலையீட்டை, படைத்துறையின் நிலம்சார் இருப்பை அவர்கள் நிராகரிக்கிறார்கள். அதே வேளையில், நூற்றுக்கணக்கிலான போர்விமானங்களையும், குண்டுவீச்சு உலங்கு வானூர்திகளையும் கொண்ட கடாபியின் ராணுவத்தை, அவர்கள் வான்மூலம் தாக்குதல் தொடுத்தால் தம்மால் தொடர்ந்து நின்றுபிடித்துப் போராட முடியுமா என்ற கேள்வியும் அவர்களிடம் இருக்கிறது. 
விமானப் பறப்பற்ற வான்வெளியை உருவாக்குவது என்பது ஒரு ராணுவ நடவடிக்கை என்பதனை அமெரிக்காவும் மேற்குலகும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றன. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் ஒப்புதலுடன்தான் அது நடைபெறவேண்டும் என பிரான்ஸ் சொல்கிறது. கடாபியும் அவரது குடும்பத்தினரதும் பயணங்களையும் சொத்துக்களையும் முடக்குவதோடு பொருளாதாரத் தடைவிதிப்பையும் ஆதரித்த ரஸ்யாவும் சீனாவும் இந்தத் திட்டத்தனை மறுக்கின்றன. 
லிபிய அரசு விமானம் மூலம் குண்டுவீசி மக்களைக் கொல்கிறது என்பது உண்மையா? அதற்கான ஆதாரங்கள் எதனையும் தம்மால் காணமுடியவில்லை என அறிவித்திருக்கிறது ரஸ்ய அரசு. தாம் வெகுமக்களின் மீது குண்டுவீசிக் கொல்லவில்லை என அறிவித்திருக்கும் லிபிய அரசு, பயங்கரவாதிகளை (கிளர்ச்சியாளர்களை) அச்சுறுத்துவதற்காக நாங்கள் விமானத்திலிருந்து குண்டுகளைப் போடுவது உண்மைதான் எனவும், அவர்களைக் கொல்வதற்காக அதனை வீசவில்லை எனவும் அறிவித்திருக்கிறது. பயங்கரவாதிகள் கையில் ஆயுதங்கள் போய்ச்சேராமல் இருப்பதற்காக, ஆயுதக் கிடங்குகளை விமானக் குண்டுவீச்சின் மூலம் அழிக்கிறோம் எனவும் அறிவித்திருக்கிறது. லிபிய அரசு விமானக் குண்டுவீச்சுக்களை நிகழ்த்துகிறது என்பது நிதர்சனமாகத் தெரிகிறது. அது நிராயுதபாணியான வெகுமக்களின் மீது வீசப்படுகிறதா என்பதுதான் பிரச்சினைக்குரியதாக இருக்கிறது. 
வெகுமக்களின் மீது வீசப்படுவது உறுதிப்படுத்தப்பட்டால் அப்போது ரஸ்யா-சீனா உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிலைபாடு எத்தகையதாக இருக்கும் எனும் கேள்வி இப்போது முக்கியமான கேள்வியாக இருக்கும். அதுவரையிலும் உள்நாட்டு ஆயுதக் கலவரங்களை ஒரு அரசு அடக்கும்போது பிற அன்னியநாடுகள் தலையிடுவது என்பது சர்வதேசியச் சட்டங்களுக்கு உட்பட்டது அல்ல எனவும், ஈராக், ஆப்கானிய யுத்தங்களில் அமெரிக்க-மேற்கத்திய ராணுவத் தலையீடுகளை மத்தியக் கிழக்கு வெகுமக்கள் எதிர்த்தார்கள் எனவும், இவ்வாறான சூழலில் தமது தலையீடு எதுவித விளைவுகளைத் தரும் எனும் தயக்கத்தில் அமெரிக்க மேற்கத்திய அரசுகள் இருப்பதாலேயே அவை தயங்கிக் கொண்டிருப்பதாகவும் பிபிசி-அல்ஜிஜீரா என வேறுபட்ட பார்வைகள் கொண்ட ஊடகங்களின் பகுப்பாய்வுகள் சொல்கின்றன. என்றாலும், அமெரிக்காவும் பிரித்தானியாவும் ஏதேனும் ஒரு வகையில் கிளர்ச்சியாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்துக் கொண்டேயிருக்கின்றன. 
பிடல் காஸ்ட்ரோ இத்தகைய தலையீடுகள் நிச்சயமாக மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கப் போவதில்லை என்கிறார். ஸ்பெயின் முதல், வியட்னாம் ஈராக, அங்கோலா, ஈராக், ஆப்கான் வரை அவர் சொல்கிற ஆதாரங்களை எவரும் மறுக்கவியலாது. 
இந்த மிகப்பெரும் சிக்கலான முரணில் தீர்மானிப்பவர்களாக யார் இருக்கப் போகிறார்கள்? முடிவுகளை எடுக்கப் போகிறவர்களாக யார் இருக்கப் போகிறார்கள்? நிச்சயமாக ஒடுக்குமுறைக்கு உள்ளான லிபிய மக்களும், ஒடுக்குமுறையாளனான கடாபியும்தான் இருக்கப் போகிறார்கள்? இவர்கள் எடுக்கப்போகும் முடிவுகள் இவர்களது இருத்தலுக்கான முடிவுகள். இந்த முடிவுகளுக்கு ஒப்பவே பிரச்சினைகள் பரிமாணம் பெறும். எனில் இவர்கள் எடுக்கும் முடிவுகளில் எவரின் சார்பாக இடதுசாரிகள் நிற்க வேண்டும் என்புதுதான் இன்றுள்ள முக்கியமான கேள்வி. 
ortegaqaddaficastroகடாபி இன்றைய நிலையில் ஏகாதிபத்திய எதிர்ப்பாளர் என்பதும், மத்தியக் கிழக்கு நிலைமையில் அவர் இன்று ஒரு இடதுசாரிப் பாத்திரமோ அல்லது முற்போக்கான பாத்திரமோ வகிப்பார் எனக் கருதுவதும் ஒரு நகை முரண். 
வெகுமக்கள் கிளர்ச்சியாளர்களை அவர் பயங்கரவாதிகள் என்கிறார். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் என்கிறார். முழு மத்தியக் கிழக்கு மக்கள் கிளர்ச்சிகளையும் அவர் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் பயங்கரவாதம் என்கிறார் (Gadaffi seeks UN probe in to Unrest : Alzazeera : 06 March 2011). தான் தோற்றால் லிபியாவில் 15 இஸ்லாமிய பயங்கரவாத பிரதேசங்கள் அமையும் என்கிறார். நான் இதுவரை உங்கள் நண்பனாகத்தானே இருந்தேன். உங்களது யுத்தத்தை நான் நடத்துகிறபோது ஏன் இதனை நீங்கள் எதிர்க்கிறீர்கள் என்கிறார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கோடு பேசும்போது காஷ்மீரில் நீங்கள் செய்வது போலத்தானே நான் லிபியாவில் செய்கிறேன், என்னை ஆதரியுங்கள், எனது எண்ணெய் வளத்தை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் தருகிறேன் என்கிறார். இவருக்கு ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பாளனின் முகத்தை வழங்குவது முற்றிலும் யதார்த்தத்துக்குப் புறம்பானதாகும். 
மத்தியக் கிழக்கு மக்கள் எழுச்சிகள் நிச்சயமாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எழுச்சி அல்ல. அமெரிக்க-மேற்கத்திய ஏகாதிபத்தியங்களக்கு ஆதரவானதும் அல்ல. அது பிடல் காஸ்ட்ரோ - லிபியா நீங்கலாக - சரியாக மதிப்பிடுவது போல அது ஜனநாயகத்துக்கும் சமூகநீதிக்குமான எழுச்சி. இது விடயத்தில் நாம் பிற மத்தியக் கிழக்கு மக்களோடு நிற்பது போலவே, திட்டவட்டமாக லிபிய மக்களின் பக்கம் நின்று, கடாபியை எதிர்த்துக் குரல் கொடுக்க வேண்டும். 
பிற விளைவுகள், கடாபியினது நகர்வுகளைப் பொறுத்தே அமையும், அமெரிக்க-மேற்கத்தியத் தலையீடுகளை இன்று நிராகரிக்கிற லிபியக் கிளரச்சியாளர்கள், தம்மீது விமானத் தாக்குதல்களை நிகழ்த்தி கடாபி கொல்வாரானால், ஆயுத வழியில் அதனைத் தாக்குப் பிடிக்க முடியாத அவர்கள், அப்போது உலகத் தலையீடுகளை, அது ஐக்கிய நாடுகளின் ஒன்றினைந்த அல்லது அமெரிக்க-மேற்கத்தியத் தலையீடே என்றாலும் அதனை அவர்கள் ஏற்பார்களா என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 
இன்று எந்த அமெரிக்க-மேற்கத்திய ஆயுதங்களைப் பாவித்தபடி, அவர்களது நண்பனாகத் தோற்றம் காட்டியபடி, கடாபி லிபிய மக்களைக் கொல்கிறாரோ, அதே ஆயுதங்களைத் தம்மைக் காத்துக் கொள்வதற்காக லிபிய மக்கள் ஏற்பார்களானால் எவரே அவர்களைத் தடுக்க முடியும்? லிபிய மக்கள்தான் தமது தலைவிதியைத் தீர்மானிப்பார்கள் எனில், அதற்குப் பின் வரும் காலங்களின் தலைவிதியையும் அவர்கள் தான் தீர்மானிப்பார்கள். இதற்கான நம்காலத்திய சாட்சி, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொம்மை ஆட்சிக்கு எதிராக ஈராக்கின் சகலபகுதிகளிலும் கிளர்ந்து எழுந்திருக்கிற மக்கள் போராட்டங்கள். 
சதாமுக்கு எதிராகப் போராடிய ஈராக்கிய மக்கள், அதன் மீதான அமெரிக்க-மேற்கத்திய ஆக்கிரமிப்பின் போது அதனை எதிர்த்துப் போராடிய ஈராக்கிய மக்கள், இன்று அதனது சார்பான ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். 
IV
லிபியாவில் நேட்டோவின் தவிர்க்கவியலாத் தாக்குதல் திட்டத்தினை முறியடிப்பதற்காக, அது நிகழும் முன்னாலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் பிடல் காஸ்ட்ரோ. அந்த வகையில் வெனிசுலாப் புரட்சியாளரான சேவாசின் பேச்சுவார்த்தை முயற்சியை நாம் ஆதரிக்க வேண்டும் என்கிறார். 
அதற்கான சாத்தியம் மத்தியக் கிழக்கு நிலைமையில் இல்லை. லிபியப் புரட்சியாளர்களைப் பொறுத்து இதனை நிராகரித்துவிட்டார்கள். 2011 பிப்ரவரி 15 ஆம் திகதி லிபிய அரசினால் கைதுசெய்யப்பட்ட ஒரு மனித உரிமை வழக்குரைஞரை விடுதலை செய்வதற்காகப் போராடிய வெகுமக்களின் மீது காவல்துறையை ஏவிவிட்டு இரண்டு பேரைக் கொலை செய்தார் கடாபி. அன்று கொல்லப்பட்டவர்களின் சவ ஊர்வலம் நடந்துபோது அந்த ஊர்வலத்தின் மீதும் தாக்குதல் தொடுத்தனர் கடாபியின் காவல் படையினர். தனது ஆட்சியின் கீழான அனைத்துப் போராட்டங்களையும் கடாபி ஆயுத முனையிலேயே எதிர்கொண்டிருக்கிறார். அவர் ஆயுத முனையிலேயே எவரையும் தான் வெல்லமுடியும் எனக்கருதிச் செயல்படுகிறார். 
இப்போது எதுவேனும் முன்னெடுப்பு இருக்குமானால் அது எவ்வாறு கடாபி தனது அதிகாரத்திலிருந்து வெளியேறுவது என்பது குறித்ததாகத்தான் இருக்க முடியும். அவரை அதிகாரத்தில் தொடர்ந்து இருத்தி வைத்துக் கொண்டு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதாக அது இருக்காது என்பதனை புரட்சியாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருக்கிறார்கள். 
அரபு நாடுகளின் கூட்டமைப்பு சேவாசின் முன்மொழிவை வரவேற்றிருக்கிறது. அமெரிக்கா-பிரித்தானியா போன்றன நிராகரித்திருக்கிறது என்பதனையும் தாண்டி, இதில் இறுதிக் குரலாக இருக்கப்போவது புரட்சியாளர்களின் குரலாகத்தான் இருக்கப் போகிறது. 
பிடல் காஸ்ட்ரோ, சேவாஸ், டேனியல் ஒர்ட்டேகா போன்றோர் இப்பிரச்சினையில், ஏகாதிபத்திய எதிர்ப்பு எனும் முகாந்திரத்தை மிக விரிவாகத் தமது அறிக்கைகளிலும் எழுத்துக்களிலும் முன் வைத்து, முவம்மர் கடாபியின் சார்பு நிலையில் இருந்துதான் பேசுகிறார்கள். லிபியப் புரட்சியாளர்களின் நிலைமையில் இருந்து, அவர்களது சார்பு நிலைகளிலிருந்து அவர்கள் பேசவில்லை. இலங்கைப் பிரச்சினையிலும் சேவாஸ் மகிந்தாவின் யுத்தம் பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்றுதான் வர்ணனை செய்தார். விடுதலைப் புலிகள் எனும் அமைப்பையும் ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினையையும் அவரால் வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியவில்லை. இப்போதும் போராடும் சக்திகளின் குணம் குறித்த தமது சம்சயங்களை எழுப்பியபடிதான் பிடல் காஸ்ட்ரோவும் ஒருவகையிலான கடாபி ஆதரவு நிலைப்பாட்டை முன்வைக்கிறார். 
லிபிய நிலைமை பல்வேறுவிதங்களில் ஈழ நிலைமைகளுடன் ஒப்பிடத் தகுந்த பண்புகள் கொண்டிருக்கிறது. கடாபி புரட்சியாளர்களுக்கு எதிரான தனது போரை பயங்கரவாதத்திற்கு எதிரானது என்கிறார். மகிந்தாவும் அவ்வாறுதான் இன்று வரை சொல்கிறார். ஏகாதிபத்தியவாதிகளுடன் குலவிக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது தான் ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் வேஷம் கட்டுகிறார் கடாபி. மகிந்த ராஜபக்சே., இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்கிக் கொண்டு, அமெரிக்க-மேற்கத்திய முதலீடுகளையும் வரவேற்றுக் கொண்டு, அவ்வப்போது அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாளராகவும் முகம் காட்டுகிறார். 
போராளிகளின் மனித உரிமைகள் சார்ந்தும் நமக்குச் சில படிப்பினைகளை மத்தியக் கிழக்கு அனுபவங்கள் கொண்டிருக்கிறது. இவை அனைத்தும் மக்கள்திரளின் எழுச்சிகள். இவை எவற்றின் மீதும் எவரும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை எவரும் சுமத்த முடியாது. ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது அமெரிக்க-மேற்கத்திய அரசுகளோ அல்லது மனித உரிமை அமைப்புக்களோ அல்லது இடதுசாரிகளோ, தாராளவாதிகளோ எவரும் இந்த எதிர்ப்பு இயக்கங்களின் மீது மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களையோ, பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களையோ வைக்கமுடியாது. புரட்சியின் தார்மீக அறங்கள் கடைபிடிக்கப்பட்ட போராட்டங்கள் இவை. துரதிருஷ்டவசமாக, ஈழ விடுதலைப் போராட்டத்தில், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீது ஐக்கிய நாடுகள் சபை அமைப்பினாலும், உலகின் மனித உரிமைகள் அமைப்புக்களாலும், உலக அரசுகளாலும், இடதுசாரிகளாலும், தாராளவாதிகளாலும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள், ஜனநாயக மறுப்பு சார்ந்த விமர்சனங்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன. ஓருவகையில் ஈழவிடுதலைப் போராட்டத்தை, அதனது தார்மீகத் தன்மையை இப்பிரச்சினைகள் பின்தள்ளின எனவே சொல்ல வேண்டும். பின்வரும் விடுதலை அமைப்புக்கள் பொருட்படுத்த வேண்டிய மீள்பரிசீலனையாகவே நாம் இதனை முன்வைக்கிறோம். 
மாபெரும் இலத்தீனமெரிக்கப் புரட்சியாளனான சேகுவேரா பிடலுக்கு ஒரு பாடல் எனும் தனது கவிதையில் இவ்வாறு கூறுகிறான்-
எம் வழியில் ஈய ரவை குறுக்கிடுமேயானால்
நாம் கேட்பதெல்லாம் எமது கெரில்லா எழும்புகளை மூட
அமெரிக்க வரலாற்றுத் திசைவழியில்
கியூபக் கண்ணீரில் ஒரு மூடுதுணி
வேறெதுமில்லை.
மாபெரும் புரட்சியாளரான பிடல் காஸ்ட்ரோவிடம் மீளவும் இப்படிக் கேட்பதற்கான தகுதி, 2011 பிப்ரவரி 15 ஆம் திகதி லிபியாவின் பெஞ்சாய் நகரில், மனித உரிமை வழக்குரைஞர் பாதி தெர்பிலின் விடுதலைக்காகப் போராடி, கடாபியின் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்ட நிராயுதபாணிகளான அந்த இரு போராளிகளுக்கும் இருக்கிறது எனவே நாம் கருதுகிறோம்.
- யமுனா ராஜேந்திரன் ( rajrosa@gmail.com)