புதன், 14 டிசம்பர், 2011

தமிழரசன் வாழ்கை குறிப்பு


தோழர்களே!
சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!
தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!


அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு.

கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார்.

இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சாரும் மஜும்தாரின் அறைகூவலான ’’ மக்கள் விடுதலை” எனும் முழக்கத்தினை ஏற்று மாணவராக இருந்தபோதே அவ்வியக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.

ML இயக்கத்தின் மாபெரும் முன்னோடி AMK என்கிற கோதண்டராமன் அவர்களுடன் இணைந்து ”மக்கள் போர்க்குழு” உறுப்பினராகப் பணியாற்றினார்.

1975-ல் அரசு இவரை அரியலூரில் கைது செய்து சிறையில் அடைத்தது. சிறையிலிருந்து தப்ப முயன்று பிடிபட்டார். பலமுறை முயன்று ஒவ்வொரு முறையும் காவல் துறையினரிடம் பிடிபட்டார்.
1984-ல் 9 ஆண்டு சிறை வாழ்வை முடித்துக் கொண்டு வெளிவந்த அவர் மீண்டும் AMK (எ) கோதண்டராமனுடன் தொடர்பு கொண்டார். அவருடன் இந்திய விடுதலையிலிருந்து தமிழக விடுதலை குறித்து தொடர்ந்து விவாதித்து வந்தார்.
1984-ல் மே மாதம் 5-6ம் தேதிகளில் கட்சி ஒரு மாநாடு ஏற்பாடு செய்தது. ”இந்தியாவில் தேசிய இனங்களின் விடுதலை” மற்றும் ”தமிழீழ விடுதலை ஆதரவு மாநாடு” எனும் தலைப்பில் மாநாடு பென்னாடத்தில் நடந்தது.
மாநாட்டுக்குப் பின் ML அமைப்பிலிருந்து தமிழ்நாடு கிளை அமைப்பினர் வெளியேற்றப்பட்டனர். திருச்சி – தென்னார்காடு உள்ளிட்ட சில மாவட்ட ML தோழர்கள் 64 பேர் கொல்லிமலையில் கூடினர். அக்கூட்டத்தில் தாங்கள் இனி தனித்து இயங்குவது என முடிவு செய்தனர். கூட்டத்திற்கான அனைத்து முன்முயற்சிகளையும் தமிழரசன், சுந்தரம், புதுவை தமிழ்ச்செல்வம், தர்மலிங்கம் போன்றோர் செய்தனர்.
இப்படியாக ML இயக்கத்திற்குள்ளான கருத்து மோதல்களை அமைப்பு வடிவில் பிளவு படுத்திய முதல் தோழர் தமிழரசனே.

1985-ல் பெரம்பூர் மாவட்டம் மீன்சுருட்டியில் ”தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்” நடத்திய கருத்தரங்கில் ”சாதி ஒழிப்பின் தேவையும், தமிழக விடுதலையும்” எனும் பொருள்பட ஓர் அறிக்கையை தமிழரசன் முன்வைத்தார்.
டெல்லியில் நடந்த அகில இந்திய அளவிலான ML குழுக்களின் ஓர் கருத்தரங்கில் தமிழகத்திலிருந்து தோழர் புதுவை தமிழ்ச்செல்வன், புலவர் கலியபெருமாள் இருவரும் கலந்து கொண்டு தாங்கள் ”தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி” என பங்கு கொண்டனர்.

தமிழரசன் ”தமிழ்நாடு விடுதலைப் படை” எனும் பெயரில் இயக்கம் கட்டி இயங்கத் தொடங்கினார். சாதி ஒழிப்பிற்கான தேவை குறித்தும் தமிழக விடுதலை குறித்தும் தமிழகம் முழுக்கச் சுற்றி பல்வேறு தோழர்களையும், தாழ்த்தப்பட்ட அமைப்புகளையும் ஒருங்கிணைக்கும் பணியை மேற்கொண்டார்.

தமிழக விடுதலைக்கும், சாதி ஒழிப்பிற்கும் ஆயுதமேந்தும் அரசியல் குறித்து கருத்துப் பரப்புரையும், செயல் திட்டங்களையும் வகுத்துச் செயல்பட்டார். புதிய ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் சாதி ஒழிப்பு ஒரு முகாமையான பங்கை வகிக்கின்றது என்பதை முன்வைத்து செயலாற்றினார்.

பல்வேறு போராட்டங்களை கருவியேந்துதல் வழி செயல்படுத்திய தமிழரசன் தமிழகத்தின் தலையாய பிரச்சனையான காவிரி ஆற்று நீர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டி ஒரு திட்டம் தீட்டினார்.

அதை செயல்படுத்த தேவைப்படும் பொருளியல் ஈட்டல் நடவடிக்கை மேற்கொண்டபோது பொன்பரப்பியில் உளவுத்துறையின் சதியால் காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டார். தமிழரசனுடன் தர்மலிங்ம், ஜெகநாதன், பழனிவேல், அன்பழகன் போன்ற தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைமைக் குழுவினர் ஐந்து பேரும் படுகொலை செய்யப்பட்டனர்.

இவரது இறப்பிற்குப் பின் தோழர் பொழிலன் உள்ளிட்ட சில தோழர்கள் தமிழ்நாடு விடுதலைப் படை என மீண்டும் செயல்பட்டனர்.

இதனால் கொல்லிமலை கூட்டத்தில் பிரிந்து சென்ற தோழர் சுந்தரம் ”தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி” எனும் பெயரில் செயல்பட ஆரம்பித்தார்.

தமிழக மக்கள் விடுதலைக்கான போரில் தனது உயிரை ஈந்த தமிழரசன் உள்ளிட்ட தோழர்களின்  முகாமைக் குறிக்கோளான சாதியொழிப்பை நெஞ்சிலேந்திப் போராட அனைவரும் சூளுரைப்போம்!

தோழர்களே

சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்!
தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்!

திங்கள், 31 அக்டோபர், 2011

பிரபாகரன் கடல்வழியாகத் தப்பினால் பிடிக்க உதவுவேன்: அமெரிக்க தெரிவித்தது:



இறுதிப்போரில் தேசிய தலைவர் இலங்கையை விட்டு தப்பிச் சென்றால் அவரைப் பிடிக்க தான் உதவுவேன் என்று அமெரிக்க என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 2009ம் ஆண்டு மே 15 நாள் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது தலைமைச் செயலகத்துக்கு அனுப்பிய பாதுகாப்பான கேபிள் செய்தி ஒன்றை இடைமறித்துள்ள விக்கி லீக்ஸ் இத் தகவலை வெளியிட்டுள்ளது. ரோபேட் ஓ பிளேக் உடன் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளார். அதில் தாம் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு வழங்குவதாகவும் ஆனால் தேசிய தலைவர் பிரபாகரன் மற்றும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் திரு பொட்டு அம்மானுக்கும் தாம் மன்னிப்பு வழங்கத் தயாராக இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இக் கலந்துரையாடல் அமெரிக்க தூதரகத்தால் சரியான முறையில் டைப் செய்யப்பட்டு அதன் நகல் தலைமைச் செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. (ஆதாரம் இணைப்பு)

இதன்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இலங்கையை விட்டு தேசிய தலைவர் தப்பிச் சென்றால் தாம் அதனைக் கண்காணித்து தகவல்களை உங்களுக்கு சொல்லட்டுமா என்ற விண்ணப்பமும் அமெரிக்க தரப்பால் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது அமெரிக்க ஒரு நாட்டை வேவு பார்க்க பயன்படுத்தும் செய்மதி அல்லது ஆளில்லா விமனம் போன்ற உதவிகளை அந் நாடு இலங்கைக்கு வழங்கத் தயாராக இருந்திருக்கிறது என்பது இதன்மூலம் தெள்ளத்தெளிவாகிறது. அமெரிக்கா பல்லாயிரம் மயில்களுக்கு அப்பால் இருப்பதால் ஆளில்லா விமானம் சாத்தியமாகது. எனவே செய்மதி மூலம் முள்ளிவாய்க்காலை கண்காணித்து அங்கிருந்து புலிகளின் தலைவர்கள் தப்பிச் சென்றால் ஆதனை இலங்கைக்கு பரிமாற அமெரிக்கா தயாராக இருந்திருக்கிறது. ஆனால் அதே மே மாதம் 2009ம் ஆண்டு இலங்கை மனித உரிமைகளை மீறுவதாகவும் அமெரிக்கா பாட்டுப்பாடியுள்ளது.

அதுமட்டுமல்லாது பசுபிக் பிராந்தியத்தில் உள்ள தமது கப்பல் படைக்குச் சொந்தமான கப்பல் ஒன்றை அனுப்பி காயப்பட்ட பொதுமக்களையும் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களை வெளியே எடுக்கவும் தாம் தயார உள்ளதாக இரகசிய சமிஞ்சைகளையும் அது வெளியிட்டது. பின்னர் நடந்த சந்திப்பு ஒன்றில் கோத்தபாய ராஜபக்ஷ தேசிய தலைவருக்கும் பொட்டு அம்மானுக்கும் மன்னிப்பு வழங்க விரும்புவதாகவும் அவர்கள் இருவரையும் தாம் காப்பாற்ற நினைப்பதாகவும் தன்னிடம் தெரிவித்தார் என ரோபேட் ஓ பிளேக் குறிப்பிடுகிறார். முதலில் தேசிய தலைவர் மற்றும் பொட்டு அம்மான் கொல்லப்படவேண்டும் என நினைத்த கோத்தபாய பின்னர் அவர்கள் தப்பிக்கவைக்க நடவடிக்கைகளை எடுத்தார் என்கிறார் ரோபேட் ஓ பிளேக் அவர்கள்.

அதாவது ஒரு சிறிய வட்டத்துக்குள் அகப்பட்ட பல புலிகளின் தலைவர்களை அமெரிக்காவின் உதவியுடன் சரண்டையச் செய்து அவர்களை உயிரோடு பிடிக்கும் நோக்குடனேயே கோத்தபாய செயல்பட்டுள்ளார் என்பது அவர் 2வதாக கலந்துகொண்ட பேச்சுவார்த்தைகளின் குறிப்புகளில் இருந்து தெள்ளத்தெளிவாகப் புலப்படுகிறது. ஆனால் சரணடைவு முயற்சிகள் என்ன நடந்தது என்பது மக்களுக்கு நன்கு தெரியும். வெள்ளைக்கொடியுடன் சென்ற இரண்டாம் நிலை தலைவர்கள் கொல்லப்பட்டது யாவரும் அறிந்ததே. எனவே தேசிய தலைமை என்ன முடிவெடுத்திருப்பார்கள் என்பதும் தமது தாக்குதல் வியூகங்களை எவ்வாறு வழிநடத்தியிருப்பார்கள் என்பதனையும் நாம் சொல்லத்தேவை இல்லை. இவர்களை நம்பி அங்கே எந்தக் காய் நகர்த்தல்களும் இடம்பெற்றிருக்காது. போர் முடிவுற்ற பின்னர் முள்ளிவாய்க்காலில் பேரழிவு இடம்பெற்றதாக அமெரிக்கா தெரிவித்ததும், செய்மதிப் புகைப்படங்களைக் காண்பித்ததும் அமெரிக்காவின் ரெட்டை நிலையை உணர்த்தி அதன் முகமூடியையும் கிழித்துள்ளது.

ஆனால் சம்பந்தன் ஐயா தொடக்கம் சில தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்கள் குறித்து அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கை என்ன ? இல்லை தமிழர்கள் போராட்டம் சுயநிர்ணய உரிமை குறித்து அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை என்ன எனத் தெரியாத இவர்கள் என்ன பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போகிறார்கள் என்று தெரியவில்லை. வல்லரசான அமெரிக்க கூப்பிட்டால் உடனே சென்றிவிடவேண்டும் என பாடப் புத்தகத்தில் படித்துவிட்டார்கள் போலும் !

செவ்வாய், 4 அக்டோபர், 2011

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீ பரவட்டும்...!

இளங்கோவன்



பேரறிவாளன் உள்ளிட்டோர் மீதான தூக்குத்தண்டனைக்கு எதிரான தமிழ்த்தேசத்தின் எழுச்சி மரணதண்டனைக்கு எதிரான கிளர்ச்சியாக பரிணமிக்க வேண்டிய வேளை இது.
சட்டமும் நீதியும் நவீனக் கோட்பாடுகள் பலவற்றால் வளம்பெற்றிருக்கும் இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதியில் மரணதண்டனை என்பது ஐயத்திற்கிடமின்றி கொடுங்குற்றம்தான்.
'சட்டம் வலிமையான வர்களுக்கு வளைந்து கொடுக்கும் ஏழைகளைக் கண்டால் எட்டி உதைக்கும்'. என்ற அண்ணல் அம்பேத்கரின் பார்வையோடு மரணதண்டனைத் தீர்ப்புகள் பெரும்பாலும் ஒத்துப்போகின்றன. இந்தியாவில் ஆகஸ்ட் 2004 இல் தூக்கிலிட்டு கொல்லப்பட்ட தனஞ்செய் சட்டர்ஜி “நீதி பணம் படைத்தவர் களுக்கானது இன்னொருமுறை நான் பிறக்க நேரிட்டால் ஒரு பணக்காரனாகப் பிறக்க விரும்புகிறேன்'' என்று சாவதற்கு முன் சொன்ன சொற்கள் இதனை உறுதிசெய்கின்றன. ஒரு பள்ளிச்சிறுமியைக் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்திக் கொலை செய்ததாக அவர்மேல் குற்றம்சாட்டப்பட்டு இந்தத் தூக்கு வழங்கப் பட்டது.
1991 ஆம் ஆண்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு ஒரு வாழ்நாள் தண்டனையை அதாவது சற்றேறக் குறைய 14 ஆண்டுகளை கழித்த பின் அந்த ஏழை மனிதன் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டான்.
பாலியல் வல்லுறவு வழக்குகளில் செய்யப் படுகிற மரபணு ஆய்வு தனஞ்செய் வழக்கில் செய்யப்படவில்லை என்றும் தக்க சட்ட உதவி தனஞ்செய்க்குக் கிடைக்கவில்லை என்றும் அவ்வாறு கிடைத்திருந்தால் தீர்ப்பு வேறாக இருந்திருக்க வாய்ப்புகள் உண்டு என்றும் தனஞ்செய் தரப்பில் தூக்கு நாளுக்கு முந்தைய நாள் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்ட செய்திகள் ஏதும் நீதிமன்றங்களின் காதுகளில் விழவில்லை. இறுதியாக 2004 ஆகஸ்ட் 14 இல் அந்த ஏழைச்சிறையாளியை தூக்கிலிட்டு தன் பணியை முடித்துவிட்டு அவர்பொருட்டு இறைவனிடம் பிரார்த்தனைபுரிந்துவிட்டு அந்த 72 அகவைக் கிழவரான தூக்கிலிடும் பணியாளர் தீரா மன உளைச்சலுடன் ஒதுங்கிக்கொண்டார்
எண்ணாயிரம் மனிதர்களை கழுவிலேற்றிப் பதைக்கப் பதைக்கக் கொன்ற மரபு நம்முடையது. எளிய திருட்டு வழக்குக்கு கோவலனை நேரிய விசாரணை ஏதுமின்றிக் கொன்ற நீதி தமிழர் நீதி. கணைக்கால் இரும்பொறை மன்னனுக்கே ஒரு குவளைத்தண்ணீர் தரத் திமிர்பேசிய சிறைப்பண்பாடு சங்கத்தமிழர் பண்பாடு. மூத்த தமிழ்க்குடிக்கு மனித உரிமை, மரணதண்டனை ஒழிப்பு என்பதெல்லாம் புரியவே புரியாத விந்தைகள் என்பதை நாம் அறிவோம்.
ராசீவ் காந்தி படுகொலை சிறப்புப் புலனாய்வுக் குழுத்தலைவர் கார்த்திகேயன் “என்றாவது மரணதண்டனை இந்தியாவில் ஒழிக்கப்படும்'' என்று தன் அவாவை வெளிப்படுத்துகிற அதே காலத்தில் "சிறைக்குள் புகுந்து ராசீவ் கொலை சிறையாளிகளைக் கொன்றிருக்க வேண்டும்' என்ற ஈவிகேஎஸ் இளங்கோவனின் சீறலும் வெளிப்படுகிற காரணம் நமக்குத் தெரிகிறது.
ஒரு துளிக் கண்ணீரிலும் ஒரு துளிச் செந்நீரிலும் ஏன் ஒரு துளி விந்திலும் கூட அரசியல் கலந்தோடும் காலம் நமது காலம். பேரறிவாளனுக்கும் முருகனுக்கும் சாந்தனுக்கும் உருகி யோடும் தமிழ் மனச்சான்று அப்சல் குருவுக்கும் நாளை கசாப்புக்கும் உருகியாகவேண்டும். இது மனிதநேயச் சிக்கலில்லை என்றும் நீதி குறித்த நாகரிக சமூகத்தின் பார்வைச் சிக்கல் என்றும் நாம் உணர்ந்தே இருக்கிறோம். ஆனால், மனிதநேயப் பார்வையின் ஈரம் கூடச் சுரக்காத நெஞ்சில் மனித உரிமைக்கான ஆழ்ந்த போர்க்குணம் உருவாவ தில்லை.
130நாடுகளுக்கும் மேலாக நேரடியாகவோ, மறைமுகமாகவோ தடைசெய்யப்பட்ட ஒரு தண்டனைக்கு நாம் எதிராகப் போர்க்கொடியை உயர்த்துகையில் மரணதண்டனைக்கு ஆதரவான வர்களால் எந்த வெட்கமும் இன்றி அரசியல் அம்மண ஆட்டம் களத்தில் தொடங்கப்படுகிறது. வாருங்கள் அனைவரும் வாருங்கள் மரணதண்டனை குறித்த உணர்ச்சிப்பெருக்கற்று அறிவார்ந்த விவாதங்களைத்தொடங்குவோம்.
“அரிதிலும் அரிதான வழக்குகளில்'' மரண தண்டனை வழங்கப்படலாம் என்ற இந்திய நீதித்துறையின் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருது கோள் வேண்டும் பொழுதெல்லாம் வளைத்துப் பொருள்கொள்ளத்தக்க ஒரு ரப்பர் கூற்றாக மாறி நெடுநாட்களாகிவிட்டன. இதனை உலக மன்னிப்புக்கழகம் உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் உறுதிசெய்த கவலை தோய்ந்த பரிந்துரைகள் நிறையக்கிடக்கின்றன.
“அரிதிலும் அரிதான வழக்குகளில்'' என்ற சொற்றொடரில் எந்த வழக்கையும் எளிதாக இணைத்துப் பொருள்சொல்ல நீதிமான்கள் மலிந்து கிடக்கும் சூழலில் மரணதண்டனைக்கு எதிரான இயக்கத்தின் அறம்சார்ந்த அடிப் படைகள் வலுப்படட்டும்.
மரணதண்டனை என்பது திரும்பப்பெற முடியாத தீவினை மரணதண்டனை என்பது தண்டனை அல்ல கொலை. மரணதண்டனை என்பது குற்றவாளி திருந்தும் வாய்ப்பைத் தடுக்கும்நோக்குகொண்டது.
மரணதண்டனை என்பது கண்ணுக்கு கண் பல்லுக்குப் பல் என்பது போன்ற பழிவாங்கும் செயல்பாட்டை ஒத்தது. மரணதண்டனை மனிதரின் வாழ்வுரிமைக்கு எதிரானது. மரண தண்டனை ஒருபோதும் குற்றங்களைக் குறைப்பதில்லை.
இக்கூற்றுகள் எல்லாம் தொடர்ந்த தருக்கங் களில் நிறுவப்பட்டும் இன்று மரணதண்டனை தொடர்வதன் காரணம் எளிமையானதன்று.
ஈவிகேஎஸ் இளங்கோவன் நிகழ்த்தும் சாகச அரசியல் வித்தைகளைப் போன்று அது விளையாட்டானதும் அன்று.
காலங்காலமாய் அரசியற்சமூகத்தில் நிலவுகிற பகைவன்மத்தின் வேர்கள் ஆழப் பரவியிருக்கும் ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தின் அரசியற் போர்க்களத்தில் மரணதண்டனை ஒரு கூரிய போர்வாள்.
ராசீவ் காந்தியின் கொலைவழக்கு ஆதாரங் களில் நுழைந்து நுழைந்து செல்லும் எந்த ஒரு எளிய வாசகரும் அனைத்து ஆதாரங்களும் காங்கிரசை நோக்கிக் கைகாட்டுவதையும் அவற்றின் சுட்டுவிரல் ராசீவ் காந்தியைக் கொடூரமாக கொன்ற கொலையாளியாக சோனியா காந்தியை முதல் குற்றவாளியாகக் கருதச் செய்வதையும் உய்த்துணரமுடியும்
காவு கொடுக்கப்படுகிற மெலிந்த ஆடுகள் நம் குருதி வெறியைத் தணிக்கின்றன. பீறிட்டுக் கிளம்பும் ஆடுகளின் குருதியில் பொதுச் சமூகத்தின் மூச்சுக்காற்று குமிழியிட்டு மறைகிறது. ஒரு பெருமூச்சு மேலெழும்புகிறது.
அப்பாவிகளின் உயிர்களை ஒரு வெறிக்கடியில் குடித்தபிறகு அரசியல் ஓநாய் இளைப்பாறுகிறது. ஆகப்பெரிய புத்தகங்களில் ஒரு பெருங்கதையின் முடிவுரையை எழுதிமுடித்தபின் அடுத்த வேட்டைக்கு அது கிளம்புகிறது.
அரசியல் கயிற்றில் ஆடும் பொம்மைகளாய் தூக்குதண்டனைச் சிறையாளிகளாக பேரறி வாளன் சாந்தன் முருகன் ஆகியோர் முகங்கள் தென்படுகின்றன.
சொந்தவலியிலிருந்து இன்னபிறரின் வலியை அறிந்து கிளர்வதே மக்கள் அரசியலின் அறம்.
சதாம் உசேனைத் தூக்கிலேற்றிய அமெரிக்க அறம், பேரறிவாளன் உள்ளிட்டோரைத் தூக்கி லேற்றத் துடிக்கும் இந்திய அறம் என எல்லாவற்றையும் எதிர்கொள்ளும் தினவோடும் திமிரோடும்தான் இருக்கிறோம்.
நமது மானுட அறத்தின் திருப்பெயரால் சொல்கிறோம்.
மரணதண்டனை ஒழியட்டும்!
அப்பாவிகளுக்கு மட்டுமல்ல! குற்றவாளிகளுக்கும் சேர்த்தே சொல்கிறோம் !
மரணதண்டனை ஒழியட்டும்!
குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் மனப்பிறழ்வு மனிதர்களுக்கும், கயர்லாஞ்சிப் படுகொலைக்குக் காரணமான ஆதிக்கச்சாதி வெறியேறிய மனிதர்களுக்கும் நாம் கற்பிக்கவேண்டிய மானுட அறம் நிறைய உள்ளது.
எந்த உணர்ச்சிக் கலப்பும் இல்லாத அறிவார்ந்த சொற்களால் ஆன இம்முழக்கத்தை முன்னெடுப் போம்!
மரணதண்டனை ஒழியட்டும்! மானுட அறம் வெல்லட்டும்!

நமக்களிக்கப்படும் தண்டனைகளே நாம் ஏந்தும் கருவிகளை தீர்மானிக்கின்றன!


இந்தியா நம் எதிரி நாடு! இந்தியர்கள் அனைவரும் நம் எதிரி! இந்திய விடுதலை நாள் நம் துக்க நாள்! எனும் முழக்கத்தோடு தமிழ் நாட்டை வென்றெடுக்க களத்தில் முனைப்புடன் செயலாற்றும் நாம், தோழர்களின் மரணத்தின் மூலமாக பல்வேறு அச்சுறுத்தல்களை இவ் ஏகாதிபத்திய அடிவருடிகள் வரலாற்றின் வழி எங்கும் பொதுமக்களுக்கு நிகழ்த்திக் காட்டிக் கொண்டே வருவதின் மூலமாக தேசிய இன விடுதலைக் கருத்தியலை பொதுமக்களின் மனம் நாடாமல் செய்யும் கருவியாகப் பயன்படுத்தி வருவதைக் காணலாம். அவற்றில் முதன்மையான தாக போலி மோதல் படுகொலையும், அரசப் பயங்கரவாதத்தின் மற்றொரு வகையான தூக்கு தண்டனையும் ஆகும்.
தற்போது போலி மோதல் படுகொலைக்கெதிராக பல்வேறு மனித உரிமை இயக்கங்களும், வழக்கு மன்றங்களும் தலையிட்டு போராடி கண்டிப்பதால் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் அந்தப் பூதம் எப்போது அரசதிகாரத்திற்கு தேவைப்படு கிறதோ அப்போது திடீரெனக் கிளம்பும். இது இவ்வாறிருக்க தற்போது உலகில் 136 நாடுகளில் தூக்குத் தண்டனையை நிறுத்தி விட்டாலும், இன்னமும் ஏகாதிபத்தியமும், அதன் அடிவருடி களும், அவர்களுக்கெதிராக பொதுமக்களும், போராளிகளும் கிளர்ந்தெழும்போது அவர்களை அச்சுறுத்தி அடக்குவதற்கு தூக்கு எனும் அரசப் படுகொலையை பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு செய்யப்படும் கொலைகளில் ஒரு சிலவற்றின் உண்மைகளை அன்றைக்கு எவ்வாறு யார் யார் பார்த்தனர் என்றும் இன்று எவ்வாறு யார் யார் பார்க்கின்றனர் என்றும் பார்த்தோமானால் மிகவும் பிரமிப்பாகவும், தூக்கிலிடும்போது பயங்கரவாதியாக சித்தரிக்கப்பட்டு தூக்கிலிடப்படுவார்கள்.
அதே நிகழ்வு காலம் மாறும்போது அவர் இன்றைய அரசு அமைப்பதற்கான போராளியாகவும் ஈகியர்களாகவும் வரலாற்றுப் பாட நாயகர்களாகவும் போற்றப்பட்டு கற்பிக்கப்படுவார்கள்.
ஆனால் அவ்வாறு போற்றப்படுகிற அந்த நாயகர்களின் வழியில் நாளைய அரசமைப்பதற்கும் பொதுமக்களின் உரிமைகள் பாதுகாத்து நிலைநிறுத் தப்பட வேண்டுமென்பதற்காகவும் இன்று அரச பயங்கரவாதிகள் உண்மையானவர்களைப் பயங்கர வாதிகளாகவும், தீண்டத்தாகதவராகவும் பொதுமக் களிடமிருந்து பிரித்து முந்தைய ஏகாதிபத்தியம் என்ன செய்ததோ அதையே இவர்களும் செய்கின்றனர்.
எடுத்துக்காட்டாக இந்திய ஒன்றியத்தின் விடுதலைப் போரில் தனது இளம் வயதில் ஈடுபட்டு வெள்ளை அதிகாரியை தனது துமுக்கியால் சுட்டு வீழ்த்தி தனது 23ம் அகவையில் ஏகாதிபத்திய தூக்கு கயிறை முத்தமிட்ட தோழர்கள் திருவாளர்கள் பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகியோர் இன்று இந்திய ஒன்றியத்தில் ஒப்பற்ற விடுதலை வீரராகவும், உலகப் போராளிகள் போற்றப்படும் போராளியாகவும், போற்றப்படுகிறார்கள்.
ஆனால் இன்று ஈழத்தில் தங்கள் இன வழி தேசியத்திற்காக தனது வாழ் நாளை அர்ப்பணித்து போராடி வந்த தோழர்கள் சாந்தனும், முருகனும், தாயக தமிழகத்தில் எவ்வித அசம்பாவித சம்பவத் திலும் ஈடபடா நோக்குடன் தனது தலைமைக் கட்டளையை ஏற்று தமிழகம் வழியாக வெளிநாடு செல்ல வந்த சாந்தனும், பெயர் குழப்பத்தினாலும் (திருச்சியில் இறந்த சாந்தன் எனும் போராளியின் செயல்களையெல்லாம் இவர் மீது சுமத்தி சென்னை போன்ற ஒரு பெருநகரில் பழக வேண்டும் என்பதற்காக பயிற்சி யெடுக்க சென்னை வந்த முருகனும், திராவிட கழக மரபில் வந்து இயற்கையிலேயே தமிழ் தமிழர் ஆதரவாளராக வளர்ந்த ஒரே காரணத்திற்காக தமிழ்நாட்டு இளைஞர் தோழர் பேரறிவாளனும் சோனியாவின் கணவன் இராசீவ் காந்தி கொலை வழக்கில் சிக்க வைக்கப்பட்டு தூக்கு தண்டனை வழங்கப்பட்டு மொத்தமாக 21 ஆண்டுகளாக தனிமைச் சிறை கொட்டடியில் அடைத்து சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு சிறையில் வாடி வருகின்றனர். இந்திய ஒன்றியத்தின் குடியரசு தலைவர்களான திருவாளர்கள் கே.ஆர். நாராயணன், ஏ.பி.சே. அப்துல் கலாமாலும் தூக்குத் தண்டனையை உறுதி செய்து நடுவணரசு சிபாரிசை புறக்கணித்து தூக்குத் தண்டனையை மறுபரிசீலனை செய்யுமாறு திருப்பியனுப்பியதால் 2வது முறையாக ஏ.பி.சே. அப்துல் கலாமை குடியரசு தலைவராக தேர்ந் தெடுக்க வேண்டுமென பொதுமக்கள் விரும்பினாலும்,
எங்கு அவர் வந்தால் தங்களது ஆசை நிராசை ஆகிவிடுமோ என்று கருதி மராட்டிய மாநிலத்தி லிருந்து தங்கள் சொல்லைத் தட்டாத திருமதி பிரதீபா பாட்டீலை இந்திய ஒன்றியத்தின் முதல் மகளாக்கி அவரின் மூலம் தங்களின் ஆசையான நம் தோழர் களின் உயிரை சட்டத்தின் மூலம் தூக்கு தண்டனையை நிறைவேற்ற ஆணை பிறப்பிக்கச் செய்து விட்டு அமெரிக்கா சென்று ஓய்வெடுத்துள்ளார்கள் தாய் சோனியாவும், மகன் இராகுலும். நாமோ தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்து தூக்கு தண்டனையை நிறுத்தச் சொல்லியும், தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றச் சொல்லியும் கூக்குரலிடுகிறோம்.
கண்ணாடி மாளிகையில் இருக்கும் அவர்களுக்கு நம் கூக்குரல் எங்கே கேட்கப் போகிறது. மேலும் நம் எதிர்ப்பலையைக் கண்டு எங்கு திருவாளர், கலைஞர் அவர்களுக்கும் அவரது குடும்பத்திற்கும் இன்று நேர்ந்துள்ள கதி நாளை நமக்கும் நம் தோழி குடும்பத்திற்கும் நேர்ந்துவிடக் கூடாது எனக் கருதி, பல்வேறு சட்ட நிபுணர்களும் தூக்கி நிறுத்த, இரத்து செய்ய தமிழக மக்கள் மன்றத்திற்கு அதிகாரம் உள்ளது என பல சட்டப் பிரிவுகளையும், பல முன் மாதிரிகளையும் கூறியப் பிறகும், செவிடன் காதில் ஊதிய சங்காக தமிழக மக்கள் மன்றத்தின் விதி எண் 110 ன் கீழ் தனக்கு அதிகாரமில்லை எனும் பார்ப்பனிய நயவஞ்சகத்தோடு அறிவிக்கிறார் மாண்புமிகு செல்வி செயலலிதா அவர்கள்.
ஆனால் மறுநாளே நமது தோழி செல்வி செங்கொடி ஏற்றிய பெரு நெருப்பில் எங்கு நாம் எரிக்கப்பட்டு விடுவோமோ எனப் பயந்து சட்டமன்றத்தில் ஒப்புக்கு ஒரு தீர்மானம் போட்டு அனுப்பி விட்டு என் கடமை முடிந்து விட்டது என உட்கார்ந்து விட்டார். ஏனெனில் கடந்த காலங்களில் போட்ட தமிழக மக்கள் மன்றத் தீர்மானத்தின் மதிப்பு தெரியாதவரா அவர்.
ஆனால் அத் தீர்மானத்தை விட அமைச்சரவை தீர்மானம் மிக முக்கியம் என பல நிபுணர்கள் கூறிய போதிலும் அதைப் பற்றி இன்றுவரை வாய் திறக்க வில்லை. நாமும் ஒற்றை சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் விடிவு கிடைத்து விடும் என்றெண்ணி, அவரவர் வேலையைப் பார்க்கக் கிளம்பி விட்டோம். இது போதாதா பார்ப்பன பனியா கும்பலுக்கு.
சரி கண்ணாடி மாளிகையில் மயக்கத்திலிருக்கம் கோமாளிகளிடமிருந்து நம் கண் முன்னே சாவின் விளிம்பில் இருக்கும் தோழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் உயிரையுமாகட்டும், அல்லது இனி வரும் காலங்களில் நம் தோழர்களின் உயிரை எடுக்க எவரும் எண்ணாமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டுமென சிந்தித்த வேளையில் கிடைத்த ஓர் தகவல் என்னவெனில்,
தோழர்கள் பகத்சிங், சுகதேவ், இராசகுரு ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்ற வெள்ளைய ஏகாதிபத்தியம் நாள் குறித்த செய்தி கேட்டவுடன் அவர்களின் உயிரை மீட்டெடுக்க நாட்டின் பல்வேறு மூலை முடுக்குகளிலிருந்து கிளம்பிய மக்கள் பெரு வெள்ளம் ஏகாதிபத்திய அடக்கு முறைக் கருவிகளால் பலமான கருவியான சிறைக் கொட்டடி மதில் சுவர்களை தகர்த்து கொட்டடி இரும்புப் பூட்டுகளை சிதறடிக்கப் போகிறது எனும் செய்தி ஏகாதிபத்திய காதுகளை எட்டியவுடன், உடனே அவசர அவசரமாக தோழர்கள் மூவரையும் நயவஞ்சகமாகக் குறித்த நாளுக்கு முந்தைய மார்ச் 23ம் நாளில் தூக்கின் மூலம் கொலை செய்யப்பட்டனர். இது அன்று அவர்களுக்கு தண்டனை நமக்கு கொலை.
அதேதான் இன்று தோழர்கள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் நிலையிலும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் நாம் சிறிது ஏமாந்தாலும் ஏமாற்றப்படுவோம். அதனால் தோழர்களே சிறைக் கொட்டியை நோக்கி பயணித்து அதன் மதில் களையும், திமிர்களையும் தகர்த்தெறிந்து நம் தோழர்களைக் காப்போம்.
சரி இது வன்முறை செயல் என்று சில அதி மேதாவிகள் பொய் அரசியல் பேசலாம். ஆனால் வரலாற்றின் அடிப்படையில் அது வன்முறையா என்றால் இல்லை. ஏன் இல்லை என்றால், இதை நாம் சொல்லவில்லை இந்திய ஏகாதிபத்திய மகாத்மா என்று போற்றப்படுகிற கரம்சந்த் மோகன்ராம் காந்தி அவர்கள் சொல்கிறார்கள். இதோ அவர் கூறுவதைப் பார்ப்போம்.
1942ம் ஆண்டு நடைபெற்ற ஆகத்துப் புரட்சிக்கு முன்பு தனது ஏடான அரிசனில் அகிம்சையின் தந்தை எனும் திருவாளர் காந்தி அவர்கள் திருவாய் மலர்ந்தது என்னவென்றால், முடிந்தவரை இப்போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தவே நான் முயற்சிப் பேன். ஆனால் பிரிட்டிசு அரசை இப்போராட்டம் கவரத் தவறினால் அதன்பின் இந்தியாவில் நடைபெறுகின்ற காரியங்களுக்கு நான் பொறுப்பல்ல என்கிறார். அதே ஏட்டில் அவர்களின் மாணவரான திரு. கிசோரிலால் மக்ரூவாலா என்பவர் சதி செயல்களும், பாலங்களை தகர்ப்பதும், தந்தி தபால் தொடர்புகளை துண்டிப்பது சாத்வீக போராட்டத் திற்கு உட்பட்டது தான் என்று எழுதுகிறார்.
ஆகத்து 7ல் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் திருவாளர் காந்தி அவர்கள் அரசு என்னை முன் கூட்டியே கைது செய்தால் பலாத்கார செயல்கள் நாடு தழுவிய அளவில் வெடித்தெழும். வன்முறை புரட்சி ஏற்பட்டால் நான் அதைக் கட்டுப்படுத்த மாட்டேன் என்றும் மேலும் நியூசு(ஸ்) கிரானிக்கல் எனும் பத்திரிகையில் பொதுமக்கள் இயக்கத்தில் வன்முறை போராட்டங்கள் உட்பட்டவைதான் அங்கீகரிக்கப்பட் டவைதான் என உறுதிபட கூறுகிறார்.
மேலும் காந்தியின் நெருங்கிய நண்பர் பட்டாபி சீத்தாரமையா ஆந்திர சுற்றறிக்கை எனும் ஓர் அறிக்கையை அனைத்து மாநிலத்திற்கும் அனுப்பி அதில் கூறப்பட்டுள்ள போராட்ட வழிமுறைகளான தந்தி கம்பிகளை அறுக்கவும், தபால் நிலையங்களை கைப்பற்றவும், தண்டவாளங்களையும், பாலங்களை யும் வெடி வைத்து தகர்க்கவும் எனவும், அதை அனுமதிக்குமாறும் காங்கிரசு தலைவர்களுக்கு அனுப்பினார்.
ஆகத்து 8 அன்று காந்தி கைது செய்யப்பட்டவுடன் கோவை விமான நிலையம் கொளுத்தப்பட்டன. காவல் நிலையங்கள் தாக்கப்பட்டன. தாலுகா அலுவ லகங்கள், தொடர் வண்டி நிலையங்கள் கைப்பற்றப் பட்டன. வழக்கு மன்றங்கள் கைப்பற்றப்பட்டு வெள்ளைய நடுவர்கள் துரத்தப்பட்டனர். போராட்ட வீரர்களே நடுவர்களாக அமர்ந்து வெள்ளை நடுவர்கள் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரித்தனர். வீடுகள் தோறும் வெடிகுண்டுகள் தயாராயின.
கொல்லு பட்டறையில் துமுக்கிகள் தயாரிக்கப் பட்டு போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டன. தந்திக் கம்பங்கள் தபால் அலுவலகங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பெருமைமிகு சென்னை உயர்நீதிமன்ற வழக்கு மன்றத்தில் வெடிகுண்டு வீசப்பட்டது. அவை எல்லாவற்றிற்கும் மேலாக சிறைக் கொட்டடி மதில்கள் உடைக்கப்பட்டு கொட்டடி இரும்புக் கம்பிகள் தகர்க்கப்பட்டு போராட்டக்காரர்கள் விடுவிக்கப்பட்டனர்.
ஆக ஒரு இன விடுதலைப் போராட்டத்தில் பொய்யான நவீன பார்ப்பனர்கள் பேசும் அகிம்சை வழிப் போராட்டத்தினால் நம் தேச விடுதலையும் கண் முன் உள்ள தோழர்களையும், இனிவரும் தோழர்களையும் காக்க முடியாது. அவ்வாறு காக்கத் தவறினால் நம் போராட்டத்தை நடத்தவோ, இலக்கை அடையவோ முடியாது.
ஆகவே தோழர், தமிழரசன் வழிகாட்டியுள்ளார் என்று கூறி தீவிரவாதியாக சித்தரிக்கப்படுவதிலிருந்து தப்பிக்க ஓர் வழியை மகா ஆத்மா வழங்கி உள்ளது. ஆகவே மேலே அவர் காட்டிய சிறை உடைப்பு தகர்ப்புப் போராட்டத்தினால் நமது நாட்டை நமதாக்கி, நம் விடுதலைப் பூட்டை நாமே திறப்போம்.
தோழர்களே! விடுதலை என்பது கெஞ்சி பெறுவதில்லை. மிஞ்சி பெறுவது எனும் தொடரை நெஞ்சிலேற்றி விடுதலை கனலை மூட்டுவோம்! மூன்று தமிழர் உயிரை மீட்போம்!

மூன்று தமிழர்களைக் காப்பதே முதல் வேலை!



  இந்தியப் பேராதிக்கத்தின் இரத்த வெறி இன்னும் அடங்கவில்லை. ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததின் ஈரம் கூட இன்னும் காயவில்லை. அதற்குள் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூன்று தமிழர்களையும் தூக்கில் போட துடித்துக் கொண்டிருக்கிறது இந்தியா.
செய்யாத குற்றத்திற்காக 21 ஆண்டுகள் தனிமைச் சிறைக் கடுங்காவலில் சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இது போதாது இவர்களை தூக்கில் போட்டு கொன்றால் தான் எங்கள் வெறி அடங்கும் என்பது காங்கிரஸ் காரர்கள் வேறு வெறிக் கூச்சல் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் தமிழர்கள். ஈழ விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாக செயல்பட்டார்கள் என்பதை தவிர இம் மூவரும் வேறு என்ன குற்றம் செய்தார்கள்?
ராஜீவ்காந்தி கொலைக்கும் இம்மூவருக்கும் நேரடியான எந்த சம்பந்தமும் இல்லை. ராஜீவ் காந்தி படுகொலைத் திட்டம் சிவராசன், தனு, சுபா ஆகிய மூன்று பேரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அந்தளவிற்கு கொலைத் திட்டம் மிகவும் ரகசியமாக பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்று சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனைக் கொடுத்த நடுவர்களே தங்களின் தீர்ப்புரையில் மாறி மாறி குறிப்பிட்டுள்ளனர். ஆக வழக்குப்படி ராஜீவ் காந்தி கொலை இம்மூவருக்கும் தெரியாத ஒரு நிகழ்வு. இந்நிலையில் இவர்கள் எப்படி குற்றவாளியாக இருக்க முடியும்?
அடுத்து தடா சட்டத்தின் கீழ் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டது தவறு என்று உச்சநீதிமன்றம் அறிவித்த நிலையிலும், அன்றைய அரசு தடா சட்டத்தையே திரும்பப் பெற்று விட்ட சூழலிலும், தடா சட்டிடத்தின்அடிப்படையில் பெறப்பட்ட வாக்குமூலத்தை வைத்தும், இதன் வழி ஜோடிக்கப்பட்ட சாட்சிகளை வைத்தும் அதே நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கியிருப்பது நீதியா?
குறிப்பாக பேரறிவாளன் மீது சுமத்தப்பட்ட வழக்கு என்பது சட்ட அறிவு இல்லாத சாதாரண மக்களால் கூட ஏற்க முடியாதது. இராஜீவ் காந்தியை கொலை செய்ததற்கான "பெல்ட் பாம்' செய்வதற்கு பேரறிவாளன் உதவியாக இருந்தாராம். இதற்கு ஆதாரம் பெட்டிக் கடையில் 9 வோல்ட் பேட்டரி வாங்கினார் என்பதும் இவர் மின்னனுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் பட்டயப் படிப்பு படித்தவர் என்பதும்தான் இதற்கு ஆதாரம். இதற்காகத்தான் இவருக்குத் தூக்குத் தண்டனை.
இதில் கொடுமை என்னவென்றால், இராஜீவ் கொலை வழக்கை விசாரித்த தலைமைப் புலனாய்வு அதிகாரியான இராகோத்தமன், பணிஓய்வு பெற்ற பிறகு அவர் எழுதிய நூலிலும், அவர் கொடுத்த பேட்டியிலும், அவர் சொன்னஉண்மைஎன்னவென்றால், “இராஜீவ் கொலை வழக்கில் எங்களால் (சிபிஐ) கண்டு பிடிக்க முடியாதது எதுவென்றால் இராஜீவ் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட "பெல்ட் பாம்மை யார் செய்தார்கள் என்று இறுதிவரை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை' என்று கூறியிருக்கிறார்.
ஆக "பெல்ட் பாம்பை' யார் செய்தார்கள்? யாரிடமிருந்து வாங்கப்பட்டது? அதில் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று எதுவுமே தெரியாத நிலையில் நீதிமன்றத்திலும் இதுகுறித்து ஆவணப்படுத்தாத நிலையில், பேரறிவாளன் பெல்ட் பாம் செய்வதற்கு உதவினார் என்று கொட்டடையில் அடைத்து வைத்திருப்பது எவ்வளவு பெரிய கொடுஞ் செயல்.
இராஜீவ் கொலையில் உள்நாட்டு வெளிநாட்டுச் சதி இருக்கிறது. குறிப்பாக சந்திராசாமிக்கும், சோனியாகாந்திக்கும் மற்றும் அமெரிக்காவுக்கும் தொடர்பு இருக்கிறது என்று அழுத்தமான வாதங்கள் தொடர்ந்து முன் வைக்கப்பட்டது. இதை மூடி மறைக்க அன்றைய நரசிம்மராவ் அரசு ஜெயின் ஆணையம் ஒன்றையும் உருவாக்கியது. விசாரணை நடத்திய ஜெயின் ஆணையம், இவ்வழக்கை விரிவாக விசாரிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. அதன்படி இந்திய அரசு பல் நோக்கு விசாரணை அமைப்பை ஒன்றை நிறுவி விசாரிக்கப்பட்டு தடா நீதிமன்றத்தில் மூடி சீலிடப்பட்டு அறிக்கை முன்வைக்கப்பட்டது. இன்றுவரை சீல் திறக்கப்படவும் இல்லை, பல் நோக்கில் ஒரு நோக்கும் தெரியவில்லை.
மேலும் ராஜீவ் கொலை வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை ஜெயின் கமிசன் பிரதமர் அலுவலகத்திலும் கோரியது. ஆனால் பிரதமர் அலுவலகம் தர மறுத்ததோடு நில்லாமல், ஆவணங்கள் அனைத்தும் காணாமல் போய் விட்டது என்று மடல் வேறு கொடுத்திருக்கிறது. இறுதியாக வைத்த வர்மா கமிசன் அறிக்கையும் காணவில்லை. இதன் போக்கு ராஜீவ் கொலை விசாரணை முழுமையாக இல்லை என்பதும், பல உண்மைகள் மூடி மறைக்கப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை.
சிபிஐ 26 பேர்களை பொய்யாக இராஜீவ் கொலையில் இணைத்தது. 28.1.1998 ஆம் ஆண்டு தடா சிறப்பு நீதிமன்றம் 26 பேருக்கும் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றதில் 22 பேர்களுக்கு தூக்கை இரத்து செய்தது. இதில் 19 பேர்களை எந்தக் குற்றமும் செய்யாதவர்கள் என்று தீர்ப்புக் கூறி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்தது. இராபட் பயாஸ், இரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய மூவருக்கு ஆயுள் தண்டனையும், நளினி, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய நால்வருக்கும் தூக்கு என்றும் தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பில் மூன்று நீதிபதிகள் பங்கேற்றனர். இம்மூவரும் ஏகமனதாக தீர்ப்பளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நளினிக்கு தூக்கு தண்டனை கூடாது என்று நீதிபதி கே.டி. தாமசும், இராபட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகிய மூவரும் குற்றமற்றவர்கள், அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என நீதிபதி வாத்வா அவர்களும் தங்களின் தீர்ப்புரையில் கூறியுள்ளனர். இருந்த போதிலும் பெரும்பான்மை அடிப்படையில் அனைவருக்கும் தண்டனை உறுதி செய்யப் பட்டது. ஆக 26 பேருக்கான தூக்கை 4 பேராக குறைத்ததும், அதிலும் மாறுபட்ட தீர்ப்புரைகளும் எதைக் காட்டுகிறது என்றால் வழக்கில் சிறிதளவும் உண்மை தன்மை இல்லை என்பதையும் கொல்லப்பட்டவர் இந்தியாவின் பிரதமர் என்பதால் யாருக்காவது தண்டனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கில்தான் நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
வாதத்திற்காக ஒருவேளை இம்மூவரும் இராஜீவ் கொலைக்கு மறைமுகமாக உதவினார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இதற்கான தண்டனையாக இவர்கள்இதுவரை சிறையில் இருந்த 21 ஆண்டுகள் அதாவது இரண்டு ஆயுள் தண்டனை போதாதா? இவர்கள் கணக்குப்படி குற்றவாளிகளான இம்மூவரும் 21 ஆண்டுகள் சிறையில் இருந்தும் இன்னும் திருந்தவே இல்லையா? அல்லது இவர்கள் திருந்தவே மாட்டார்களா? அப்படியானால் உங்கள் சிறை குற்றவாளிகளை திருந்துவதற்கு வாய்ப்பளிக்காதா?
இந்தியாவின் தேச பிதாவாக அழைக்கப்பட்ட காந்தியின் கொலை வழக்கில் நாதுராம் கோட்சேவுடன் இணைந்து காந்தி கொலையில் பங்கு கொண்ட கோபால் கோட்சே என்பார் ஆயுள் தண்டனைப் பெற்று 16 ஆண்டுகளில் விடுதலையாகி விட்டார். வெளியில் வந்த கோபால் கோட்சே ஆங்கில டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், "காந்தியைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவுமில்லை. இதற்காக யாரிடமும் நான் மன்னிப்புக் கேட்கவுமில்லை' என்று கூறியுள்ளார். ஆக காந்தியைநான் கொன்றதற்காக வருத்தப்படவில்லை என்று வெளிப்படையாக தெரிவித்த கோபால் கோட்சே 16 ஆண்டுகளில் விடுதலை. நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை, நாங்கள் நிரபராதிகள் என்று கூறுபவர்களுக்கு 21 ஆண்டுகள் தண்டனை முடிந்தபிறகு இப்போது தூசு தட்டி எடுத்து தூக்கில் போட துடிக்கிறார்கள் என்றால் அதற்குக் காரணம் தமிழின விரோத போக்குதானே?
சிறிதளவும் உண்மையில்லாத குற்றத்திற்காக சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கில் போட வேண்டும் என்பதின் நோக்கம் மிகவும் கேடானது. இது இந்தியப் பார்ப்பனிய ஆதிக்க வெறியின் வெளிப்படையான செயல். சிங்கள வெறியன் இராஜபக்சேவின் விருப்பமும் இதுதான்.
எனவே இந்தியாவின் இத்தகைய போக்கு தமிழ்த் தேசிய இனத்தின் மீது நடத்தப்படும் ஒடுக்கு முறையே! மூன்று தமிழர்களைப் பாதுகாப்பதுஎன்பது மூன்று உயிர்களை பாதுகாப்பது என்ற பொருள் மட்டுமல்ல. தமிழ்த் தேசியத்தின் உரிமையை மீட்பதற்கான நடவடிக்கையாகவே நாம் கருதவேண்டும். இதுதமிழ்த் தேசிய இனத்திற்கு விடப்பட்ட சவால். எனவே மூன்று தமிழர்களை பார்ப்பதுமுதன்மை வேலையாக்குவோம்!

வியாழன், 22 செப்டம்பர், 2011

சிசுக்கள் வேகும் அடுப்பு...!



ம்புழுதி மூடி வளரும் கூடாரத்தில்
அடுப்புக்கள் எரியாத ஊரில்
ஏனைய இரண்டு குழந்தைகளும்
உணவுப் பாத்திரங்களை அறியாது அழுதழுது தூங்கினர்
தலைவன் முடகம்பிகளால்
கட்டப்பட்டு யுத்தப் பாவத்தை தின்கிறான்
தலைவி துயரம் துடைக்க முடியாத
பசிக் கூடாரத்தை சுமக்கிறாள்
வன்புணர்வுக் கோடுகள் நிரம்பிய சீருடைகளும்
துவக்குகளும்
இரும்புத் தொப்பிகளும்அவளைப் புணர்ந்து
பசி தீர்த்த இரவில்
குழந்தைகள் பசியோடு உறங்கினர்
இரவில் பிறந்த சிசுக்களைக் கொன்று
நெருப்பு தகித்தாறாத
அடுப்பில் புதைத்தாள்
தொப்புகள் கொடிகளை அறுத்து
பன்னிக்குடங்களை உடைத்தாள்
இரத்தம் பெருக்கெடுக்க
அவள் இரத்தக் கூடாரத்துள் கிடந்தாள்
குழந்தைகள் பசியின்றி உறங்கினர்
குருதிக் கடல் நிலத்தின் பெருங்காற்று
பெருநிலத்தின் கடலில் கொட்டிய குருதி
உப்பு வயல்களில் தேங்கிக் கிடக்கிறது
வெடிகளை அதிர்ந்து புகை எழும்பி
உயிர் கரைந்த நாட்களில்
வேழினியின் தந்தை
உப்பு வயல்களில் உயிர் கொட்டி விறைந்திருந்தார்
வேழியின் கண்களில் நீங்காதிருக்கின்றன
உப்பு வயல்களில் நகர்ந்த
வியர்வைகளும் குருதிகளும்
நிலத்திற்காய் கொட்டிய குருதி
காயாமல் பிசுபிசுக்கிறது
வேழியின் கண்களை நிலம் கொள்ளையிடும்
கைகள் குத்துகின்றன
அன்றெமது நிலத்திற்காய்
இதே தெருவில் பறறைகளினூடே
வெடிகளை சுமந்து சென்றவர்கள் நகரும் பொழுது
குருதி பெருக்கெடுத்துக் கொட்டியது
இன்றெம் நிலத்தில்
மிகக் கொடும் கைகள் விளைந்திருக்கின்றன
நிலம் அள்ளும் கைகளின் நகங்கள்
உப்பு வயல் கடல் நிலத்தில்
வளர்ந்து கண்களையும் முகத்தையும் குத்துகின்றன
அன்றெமது கொடி பறந்த தடிகளில்
நிலத்துயரம் பறக்கிறது
வெடி சுமந்து சென்றவரின்
தாங்கியில் வேறுகதைகள் எழுதப்பட்டுள்ளன
உப்பு வயல்களில் முளைத்து
இன்னும் உயிரோ கிடந்து
துடிக்கிற வார்த்தைகள் பிடுங்கப்படுகிறது.
நிலம் அள்ளித் தின்ற கைகள்
எப்பொழுதும் தெருவால் செல்பவர்களை மிரட்டுகின்றன
கனவின் குருதி வயல்களில் உயிர்கள் மணக்கின்றன
உப்பு வயல்களில் மீண்டும் மீண்டும்
முளைக்கின்றன வெடி சுமந்தவர்களின் முகங்கள்
இந்தக் கடல் நிலம் அடிமையாக்கப்பட்டதை
வேழினி தாங்க முடியாது துடிக்கிறாள்
எப்பொழுதும் காதுகளை நிரப்பியபடியிருக்கும்
குருதிக் கடல் நிலத்தின் பெரும் உப்புக்காற்று
வெடி சுமந்தவர்களின் கதைகளை கூவியபடியிருக்கிறது

புதன், 10 ஆகஸ்ட், 2011

சோபாசக்தி எனக்கு அப்பா மாதிரி ஆனால் அப்பா இல்லை

ஈழப்போராட்டம் தொடர்பாக நேர்மையான எதிரிகளுடன் வாதம் செய்வதில் எந்த சிக்கலுமில்லை. சுசீந்திரன், சோபாசக்தி என்று ஒரு புலியெதிர்ப்பு கோஸ்டி எடுக்கிற வாந்தியை சிந்தாமல் சிதறாமல் அப்படியே விழுங்கி திரும்ப அப்படியே அதை வாந்தியா எடுத்தா எப்பிடி இருக்கும். ஆதவன் தீட்சண்யா அந்த வகையறா.. இது ஒரு வெத்துவேட்டு கும்பல்.
இந்த எழுத்துக்களை படித்தால் எங்கள் ஊர் என்றால் ஒரு பக்கெட் "பனடோல்" தமிழ்நாடென்றால் 1000 ருபாவுக்கு அஞ்சால் அலுப்பு மருந்து வாங்கிப் பூசினாலும் தீராத தலைவலி வரும். இந்த புலியெதிர்ப்பு கும்பல் தமிழீழ அரசியல் களத்திலிருந்து எப்போதோ காலாவதியானவர்கள். (expired )
தற்போது மே 18இற்கு பிறகு ஒரு கும்பல் புறப்பட்டிருக்கிறது. அந்த பாசறையிலிருந்து வந்திருப்பவர்தான் யோ.கர்ணன். அதாவது காலச்சுவடுவில் பாசிசத்திற்கெதிரான - அதாவது புலிகளுக்கு எதிரான "முகமூடி" கட்டுரை எழுதியவரும் தற்போது தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரை, படைப்பாளிகளை துணைஇராணுவக்குழுவினரின் துப்பாக்கிகளின் துணையுடன் மிரட்டி வருபவருமான முன்னாள் புலிகளின் தொலைக்காட்சி பணிப்பாளரான கருணாகரனின் கருத்து "பினாமி". கருணாகரனின் குமட்டலை வாந்தியாக எடுப்பது தற்போது யோ.கர்ணணின் வேலை. அதுதான் இந்த கதை "பிரகாரன் துவாரகா"

நான் எழுத்தாளராக இல்லாவிட்டாலும் ஒரு நேர்மையான வாசகனாக சொல்கிறேன். இந்தக் கதை வக்கிரத்தின் உச்சம். யோ.கர்ணனின் 4 சிறுகதைகளை படித்தவன் என்ற முறையில் அவரது எழுத்து குறித்து இந்த இடத்தில் ஒரு குறிப்பு. மிகவும் தட்டையான எழுத்து முறை. மிகவும் பலவீனமான உத்திகளை கைக்கொண்டு அவர் அமைக்கும் சட்டகம் கதைகளின் உள்ளீட்டை அழகியல் ரீதியாக சிதைக்கின்றன. அத்தோடு வக்கிரமான அரசியலும் சேரும்போது அது படைப்பா என்ற கேள்வி வாசகன் முன் தோன்றுவதை தவிர்க்கமுடியவில்லை.
‎"யோ.கர்ணன் என்ற பன்னியும் (பன்றி) கருணாகரன் என்ற சொறி நாயும்.." என்ற தலைப்பில் நண்பர் ஒருவர் ஒரு சிறுகதை எழுதி அனுப்பியிருக்கிறார். ஆச்சரியப்படுத்துற வகையில் நல்ல உத்திகளுடன் தேர்ந்த நடையுடன் எழுதப்பட்டுள்ள ஒரு பின்நவீனத்துவ பாணி சிறுகதை அது.
யோ.கர்ணன் என்ற பன்னிக்கும் கருணாகரன் என்ற நாய்க்கும் இடையிலான உரையாடலாக அந்தக் கதை எழுதப்பட்டிருக்கிறது. நாய்களுக்கும் பன்னிகளுக்குமிடையிலான வாழ்வியற் பிரச்சினைகளை, உளவியல் முரண்பாடுகள், இரைக்காக நடக்கும் போராட்டங்கள், கழுத்தறுப்புக்கள் என்று விரியும் பாத்திரங்களின் உரையாடல் முடிவில் ஜோர்ஜ் ஓவலின் 'விலங்குப்பண்ணை" முடிவைப்போல் எது பன்னி, எது நாய், யாருக்கு சொறி பிடித்திருக்கிறது, யார் சேற்றில் விழுந்து புரள்வது என்று அடையாளம் காண முடியாமல் - தெரியாமல் கதை முடிவடைகிறது. இதை எங்காவது பிரசுரிக்க முடியுமா? என்று என்னை கேட்டுள்ளார்.
"பிரபாகரன் -துவாரகா" கதையை பிரசுரித்தவர்களிடம் அனுப்ப வேண்டியதை மாறி எனக்கு அனுப்பியிருக்கிறார் நண்பர். ஒரு கதைதானே என்று எங்காவது பிரசுரிக்கலாம் என்றால் சில நிபந்தனைகளை எழுதியிருக்கிறார். அதுதான் திகிலூட்டுகிறது.
அதாவது இன்னும் 10 சிறுகதைகள் எழுதியிருக்கிறாராம். அதையும் சேர்த்து பிரசுரிக்க வேண்டுமாம். உதாரணத்திற்கு சில தலைப்புக்கள்.
01. சோபாசக்தி எனக்கு அப்பா மாதிரி ஆனால் அப்பா இல்லை. (இங்கு சோபாசக்தி என்பவர் ஒரு வெள்ளாள சாதித்திமிர் பிடித்த நகைக்கடை முதலாளி)
02. ஆதவன் தீட்சண்யாவின் நான்காவது மனைவியின் அ.மார்க்சுக்கு எதிரான வல்லுறவு குற்றச்சாட்டுக்கள். (இங்கு ஆதவன் தீட்சண்யா என்பவர் அப்பாவி பிராமணர்)
03. சுசீந்திரனின் உள்ளாடையும்..... (ஒரு பெண் எழுத்தாளரின் பெயர் அதனால் தவிர்த்துக் கொள்கிறேன்) உள்ளாடையும். (இங்கு சுசீந்தரன் எல்கேஜி மாணவன்)
மிகுதி தலைப்புக்களை இங்கு போடும் தைரியம் எனக்கில்லை. ஆனால் தைரியமாக நண்பர் கதைகளை இரவிரவாக எழுதி முடித்திருக்கிறார். யோ.கர்ணணின் கதை தந்த தைரியம் என்று குறிப்பு வேறு தனியாக எழுதி வைத்திருக்கிறார்.
ஏதோ ஓரளவிற்கேனும் அமைப்பியல், பின்நவீனத்துவம், மிகையதார்த்தம் போன்ற கூறுகளில் தேர்ச்சி உள்ளவனாக யோ.கர்ணனின் கதையும் சரி இப்போது நண்பர் எழுதிய 10 கதைகளும் சரி என்ன வகையானது என்று எனக்குப் புரியவில்லை.
சோபாசக்தி தொடங்கிவைத்த இந்தப்போக்கு யோ.கர்ணனின் கதையில் உச்சத்தை எட்டியிருக்கிறது. தனி மனித வக்கிரங்களை வெளிப்படையாகவே உத்தி என்ற போர்வையில் படைப்பில் பிரயோகிப்பது.
ஏதோ ஓரளவிற்கேனும் உளவியல் குறித்து தேர்ச்சியுள்ளவனாக யோ.கர்ணனின் இந்தப் போக்கு பெரும் கவலையளிக்கிறது. அவர் ஒரு நல்ல உளவியலாளரிடம் உளவள ஆலோசனை பெறுவது நல்லது. அதற்குப் பிறகு திறந்தமனதுடன் மிக இயல்பாக எந்த முன்முடிவுகளும் இன்றி படைப்புக்களை எழுத முன்வரவேண்டும்.
ஒரு சிறந்த படைப்பின் அடிப்படை என்பது, பாத்திரங்களை அதன்போக்கில் செல்ல அனுமதிப்பது. அவை மிக இயல்பாக ஒரு முடிவை எய்தும். எதையும் வலிந்து திணிக்கக்கூடாது. தலைப்பில் இருந்து கதையின் போக்கு, முடிவு எல்லாவற்றையும் இங்கு யோ.கர்ணன் முன்பே தீர்மானித்துவிட்டார். இந்த முன்முவுவுகளே அந்த படைப்பை முற்றாக நீர்த்துப்போக செய்து விட்டது.
யோ.கர்ணனின் "தேவதைகளின் தீட்டுத் துணி" தொகுதியை நான் இன்னும் படிக்கவில்லை. இதை 1000வது தடவையாக பதிவு செய்கிறேன் என நினைக்கிறேன். ஏனென்றால் நான் தமிழீழ விடுதலைப்போராட்டம், அதன் தலைமை குறித்து சில முன்முடிவுகளுடன் இருக்கிறேன். அதற்கு எதிராக எழுதப்பட்டதாகச் சொல்லும் ஒரு பிரதியை இந்த முன்முடிவுகளுடன் அணுகுவது ஆரோக்கியமான ஒன்றல்ல.
ஒரு வாசகனாக நான் இந்த அறத்தை கடைப்பிடித்திருக்க ஆனால் படைப்பாளியோ தீர்மானமான முன்முடிவுகளுடன் பிரதியை எழுதி முடித்திருக்கிறார். முன்னுரை அதைவிட தீர்மானமான முடிவுகளுடன் எழுதப்பட்டுள்ளது. அவரே திருப்பி எழுதிய மதிப்பீடும் முடிவை இறுதியானதாகவே அறிவிக்கிறது.
யோ.கர்ணின் பிரதி பற்றிய மதிப்பீட்டில் சோபாசக்திக்கான அங்கீகாரத்தை கோர முற்படும்போதே "எல்லாம்" - எல்லாமும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டன.
பின்குறிப்பு: யோ.கர்ணனின் "பிரகாரன் துவாரகா" கதையை ஒரு படைப்பாக ஏற்றுக்கொள்வதில் எந்தப் பிரச்சினையுமில்லை. ஆனால் அந்த அங்கீகாரத்தை கோருபவர்கள் எனது நணபனின் 10 சிறுகதைகளையும் அங்கீகரித்தால் சந்தோசப்படுவேன். அப்படியே எங்களைமாதிரி அரைகுறைகளும் அப்படியே இதன்வழி "புனைவு"'களை எழுதி எழுத்தாளர் பட்டமும் வாங்கிவிடலாம். அதற்காகவாவது யோ.கர்ணணின் கதையை அங்கீகரிக்க கோருகிறேன்.
(பேஸ்புக்கில் வெளியானது)

சோபாசக்தியின் கலைந்து போன தலித் வேடம்


தலித் என்ற சொல்லுக்கு ஒடுக்கப்பட்டவர்கள் அல்லது அழுத்தப்பட்டவர்கள் என்று என்னதான் பொருள் இருந்தாலும் நடைமுறையில் இந்திய சமூகத்தில் உணர்வு மட்டத்திலே தலித் அடையாளம் ஒருவருக்கு என்றைக்கும் உவப்பான அல்லது உயர்வைத் தருகிற ஓர் அடையாளம் அல்ல. சாதி இந்துக்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத சொல்லப்போனால் கூடுதல் திறனுடன் (முதலாளித்துவ கல்வியில் தொடங்கி அனைத்து துறைகளிலும்) இருந்தும், தலித் என்பதற்காகவே ஒடுக்கப்பட்டவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டோம் என்றால் அது புராண காலத்து சம்புகனில் தொடங்கி, நந்தன், அம்பேத்கர் தொடர்ச்சியாக தடகள வீராங்கனை சாந்தி வரை மிக நீண்டதாக அனைத்து தலித்துகளையும் உள்ளடக்கியதாக இருக்கும்.
சாதி அடையாளம் ஆதிக்க சாதியினருக்கு வேண்டுமானால் பெருமிதமாக இருக்கலாம்; தலித் மக்களுக்கு ஒரு நாளும் இல்லை என்ற கண்ணோட்டம் காலங்காலமாக இருந்து வந்தது. ஆனால் இந்த மேல்நிலையாக்க உளவியலை உடைத்தெறிந்து தலித் அடையாளம் எதிர்ப்பின், சாதி ஒழிப்பின் ஒரு வழி என்று இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புதியதொரு கண்ணோட்டம் வெளிப்பட ஆரம்பித்தது. அதே நேரத்தில் அறிவுஜீவி உலகத்தில் துரோகிகளும், எத்தர்களும், ஊரை ஏய்த்துப் பிழைப்பவர்களும் தலித் அடையாளத்தை தங்களுக்கு வசதியானதொரு முகமூடியாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்தனர். தவறுகளிலிருந்து தப்பித்துக்கொள்ளவும் அல்லது விமர்சிப்பவர்களிடமிருந்து கரிசனத்தைப் பெறுவதற்கும் தலித் முகமூடி இவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கிறது. விமர்சகர்களை நிலைகுலைய வைக்கும் தந்திரமாக தனக்கு முன்னால் தலித் அடையாளத்தை நிறுத்தி, அதன்பின்னால் ஒளிந்துகொள்ளும் ரவிக்குமார், ஆதவன் தீட்சண்யா போன்ற எழுத்தாளர்கள் இதற்கு நல்ல உதாரணம். இதுபோல அரசியல் களங்களிலும் பல டுபாக்கூர் தலைவர்களை நாம் பார்க்கலாம்.
aadhavan_dheetchanya_526
90களில் இந்திய அறிவுலகில் நிகழ்ந்த வரவேற்கத்தகுந்த மாற்றம் என்னவெனில் தலித் இலக்கியத்துக்கும், தலித் எழுத்தாளர்களுக்கும் கிடைத்த பரவலான அங்கீகாரம். அதுநாள் வரை பார்ப்பன மற்றும் சாதி இந்துக்களின் மொழி வழக்கில், நாகரிகம், பண்பாடு குறித்த - அவர்கள் போட்டுவைத்த சட்டகங்களுக்கு உள்ளாக மட்டுமே இயங்கி வந்த அறிவுலகம், தலித் எழுத்தாளர்களின் வருகைக்குப் பின் புத்தெழுச்சி பெற்றது. ஆதிக்க சாதி கட்டமைத்த ஒழுங்குகளை எல்லாம் தலித் இலக்கியம் புறந்தள்ளியது. இலக்கியத்தில் மீறல்களை மேற்கொள்ள விரும்பியவர்களுக்கான ராஜபாட்டையை தலித் இலக்கியம் அமைத்துக் கொடுத்தது. அதேநேரத்தில் பின்நவீனத்துவம், கட்டுடைப்பு என்று எழுதிவரும் எழுத்தாளர்களுக்கு, அவர்களது வலதுசாரி முகத்தை மறைக்கும் வசதியான முகமூடியாக தலித் அடையாளமும், தலித் இலக்கியமும் அமைந்துவிடுகிறது.
இவர்களது பொறுக்கித்தனங்களுக்கு எல்லாம் மிகக் கேவலமாக தலித் மக்களின் வாழ்க்கையை மேற்கோள் காட்டுகிறார்கள். கணவனை இழந்த பெண்கள் வேறு ஆண்களை தேடக்கூடாது என்று சாதி இந்துக்கள் பெண்களை ஒடுக்கும் இந்திய சமூகத்தில், தலித் பெண்கள் வெகு இயல்பாக கணவனின் தம்பியையோ வேறு ஆணையோ திருமணம் செய்துகொள்கிறார்கள். கணவன்/மனைவி நோய்வாய்ப்பட்டு, படுத்த படுக்கையிலிருந்தால், மற்றவர் 'களவு' கொள்வது அடித்தட்டு மக்களிடம் மிகவும் இயல்பான ஒன்று. இந்து மதம் திணிக்கும் கற்பை நிராகரிப்பவர்களாக, காமத்தை பசிபோல் இயல்பானதொரு தேவையாக பார்க்கும் குணம் ஒடுக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ளிட‌ம் இருக்கிற‌து. இதை 'பின்நவீனத்துவ' எழுத்தாளர்கள் - நேரத்திற்கு ஒரு பெண் தேடும் தங்களது பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ள - பாலியல் சுதந்திரம் என்பதாகத் திரித்து, பெண்களை பாலியல் பண்டமாக மாற்றுகிறார்கள்.
கடுமையான உடலுழைப்பில் ஈடுபடும் தலித் மக்கள் தங்களது உடல் வலியைப் போக்கிக் கொள்ள கள்ளும் சாராயமும் குடிக்கிறார்கள் என்றால், உடல் நோக எந்த வேலையும் செய்யாத இந்த எழுத்தாளர்கள் 'குடிக்கலாச்சாரம் தான் நமது கலாச்சாரம்' என்று தங்களது குடி, கூத்திற்கு கொள்கை விளக்கம் அளிக்கிறார்கள். இதை பாட்டாளி வர்க்கப் பண்பாடு என்று பரப்புரை வேறு செய்து கொள்கிறார்கள்.
தலித் மக்கள் கைக்கொள்வது பாலியல் சுதந்திரம் அல்ல, பாலியல் தேர்வு சுதந்திரமே... அது தனக்கான துணையை தேடிக் கொள்ளும் உரிமை மட்டுமே. வரைமுறையற்று பாலியல் இச்சைகளைத் தீர்த்துக் கொள்ளுவதை தலித் சமூகம் மட்டுமல்ல, எந்த சமூகமும் அங்கீகரிப்பதில்லை (இது பற்றிய ரசிய இலக்கியங்களைப் படித்தால் மேலும் சிறப்பான புரிதல் வாசகர்களுக்குக் கைவரும்). ஆனால், குடி மற்றும் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் கூத்தடிப்பதற்கு அ.மார்க்ஸ், சாரு நிவேதிதா, சோபாசக்தி போன்றவர்கள் தலித் மக்களின் வாழ்க்கையை மிகக் கேவலமாக பயன்படுத்துகிறார்கள் (அவ்வாறு இருப்பது அவர்களின் பாலியல் உரிமை என்றாலும் அதை தலித் மக்களின் பண்பாட்டில் இருந்து அவர்கள் கைக்கொள்வதாக சொல்வதில்தான் நமக்குப் பிரச்சனை இருக்கிறது). இப்படியாக அவர்கள் தங்களது அரிப்புக்கு தலித் மக்களை இழிவுபடுத்துகிறார்கள்.
ஆதிக்க சாதியைச் சேர்ந்த சோபாசக்தியும், சாரு நிவேதிதாவும் இன்னும் ஒரு படி மேலே போய் தங்களது பொறுக்கித்தனங்களுக்கு பாதுகாப்பு அரணாக, அரசியல்ரீதியாக தங்களை தலித்துகளாகவே அடையாளப்படுத்துகிறார்கள். குடி, கூத்திற்கு தலித் மக்களை இழுக்கும் சாருவும், சோபாவும், தலித் மக்களின் உயர் பண்புகளான உழைத்து வாழ்தல், நேர்மை ஆகியவற்றைக் கடுகளவும் பின்பற்றுவதில்லை. சோபாசக்தி எந்த வேலையையும் செய்யாமல், சிங்கள அதிகார வர்க்கத்திடம் நக்கிப் பிழைக்கும் என்.ஜீ.ஓக்களிடம் காசு வாங்கிக் கொண்டு, வெளிநாட்டுப் பயணம், குடி, பாலியல் விடுதிகள் என உல்லாச வாழ்க்கை நடத்துகிறார். சாரு நிவேதிதா தனது சரோசாதேவி எழுத்துக்களில் மயங்கும் ஐ.டி. இளைஞர்களை சுரண்டிப் பிழைக்கிறார்.
மிகப் பெரிய 'புரட்சி'யாளர்களாக, கமுக்க அல்லது ரகசிய அமைப்பிலிருந்து வாழ்க்கையைத் தொடங்கியதாக சொல்லிக்கொள்ளும் இந்த உதிரிகள் அதிகார வர்க்கத்தின் அல்லது பிற்போக்கு இந்துமதத்தின் கைக்கூலியாக மாறும்போது என்னதான் கமுக்க நடைமுறைகளை செயல்பாடுகளை கடைப்பிடித்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் சறுக்கி விடுவார்கள். அப்படி இந்த உதிரியான நண்பர் சோதாசக்தி சறுக்கி வழுக்கி விழுந்து புட்டாணியை உடைத்துக்கொண்ட இடங்கள் மூன்று.
1. தமிழச்சி விவகாரத்தில் பாலியல் வல்லுறவிற்கு முயற்சித்து செருப்படி வாங்கியது.
2. இலங்கை அரசாங்கத்திடம் கையூட்டு பெற்ற விவகாரம்.
3. தலித் விவகாரம்
முதல் இரண்டு விவகாரங்களிலும் சோபாசக்தி வசமாக மாட்டிக் கொண்டார். தமிழச்சி விவகாரத்தில் ஆதாரம் எங்கே என்று சோபாசக்தி துள்ளிக் குதித்ததும், பின்பு தமிழச்சி வந்து செம சாத்து சாத்தியதும், அதற்குப் பிறகு தமிழ் இணைய உலகமே சோபாசக்தியைக் காறி உமிழ்ந்ததும் நடந்தது. கையூட்டு விவகாரத்தில் வினவிடம் ஆதாரம் கேட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதித்த சோபாசக்தி, 'யோக்கியமா இருந்தா வரவு செலவுக் கணக்கை வெளியிடு' என்று கீற்றில் கேட்டபோது, முன்னேயும் பின்னேயும் மூடிக்கொண்டு கமுக்கமாகிவிட்டார்.
சரி இப்போது சோபாசக்தியின் தலித் வேடக்கதை என்ன, அதுபற்றி அவருக்கும் முக்கியமாக நமக்கும் என்ன பஞ்சாயத்து என்பதைப் பார்த்துவிடுவோம்.
ஒரு பொதுவுடமை இயக்கத்தில் முக்கியமாக வாக்கு அரசியலில் இருக்கும் பொதுவுடமை இயக்கத்தில் புதிதாக இணையும் இளம் தோழர்கள் அதிலும் குறிப்பாக தலித் அல்லாத சாதியைச் சேர்ந்த தோழர்கள் தலித் மக்கள் மத்தியில் வேலை பார்க்கும்போது அவர்கள்படும் துன்பங்களைப் பார்த்து உணர்ச்சிவயப்பட்டு நாங்களும் தலித்துதான் என்று சொல்லிக்கொள்வார்கள். அவர்களிடம் நீங்கள் சாதியைக் கேட்டால் நான் பொதுவுடமைவாதி அல்லது சாதியற்றவன் என்று சொல்வார்கள். அதேபோல தம்முடன் பணிபுரியும் தலித் தோழர்களிடம் 'தோழர்களே நாம் மதம் சாதியைக் கடந்த பொதுவுடமைவாதிகள்' என்று சொல்லிக்கொள்வார்கள். இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. அவர்களைப் பொருத்தவரை எப்படி வர்க்கமிறக்கலை (ஏனைய உடமை வர்க்கத்திலிருந்து பாட்டாளி வர்க்கத்திற்கு) ஒரு பொதுவுடமைவாதி மேற்கொள்கிறானோ மேற்கொள்ளவேண்டுமோ அதுபோல சாதியிறக்கத்தையும் மேற்கொண்டு ஒடுக்கப்பட்ட சாதியாகவே உணருதல் என்ற நிலையை பொதுவுடமைவாதி தனது தொடக்கநிலையில் மேற்கொள்கிறான். எப்படி தாங்கள் சாதியிறக்கத்தை மேற்கொள்கிறார்களோ அதுபோல தலித் தோழர்கள் சாதியேற்றத்தை மேற்கொள்ளவேண்டும் (அதாவது தனது சாதியை மறக்கவேண்டும்) என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அப்படி எதிர்பார்ப்பது சரியான பலனைத் தராது.
ஒருவன் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவனாக இருப்பதில் அவமானப்படவேண்டும், அவன் சாதியை வெளியே சொல்ல வெட்கப்பட வேண்டுமேயொழிய ஒரு தலித் தன்னை தலித் என்று சொல்லிக்கொள்வதில் அவமானமோ வெட்கமோ படவேண்டியதில்லை. தான் பொதுவுடமை இயக்கத்தில் இருக்கிறோம் என்பதற்காக தனது தலித் அடையாளத்தை ஒளித்துவைத்துவிட்டு அதற்கு பொதுவுடமைமுலாம் பூசவேண்டிய தேவையுமில்லை. ஒடுக்குமுறை எதன்பெயரால் நடக்கிறதோ அதன்பேரால்தான் அதன் எதிர்ப்பும் இருக்கும்; இருக்கமுடியும். இதைத்தான் அயோத்திதாச பண்டிதர் நான் பறையனாய் பிறந்தேன், பறையனாகவே சாவேன் என்று உரக்கக் கூறினார். இந்த பின்னணியில் நாம் தலித் அடையாளத்தை ஆராய்ந்தோமென்று சொன்னால் நமக்கு ஒரு உண்மை தூலமாகப் புலப்படும். அது என்னவெனில் ஒருவர் தான் தலித் அல்லாதவராக இருந்துகொண்டு, 'நானும் தலித்துதான், ஏனென்றால் நான் என் சாதிஇந்து எண்ணத்தை விட்டு விட்டேன்' என்று சொன்னால், தெரியாமல் சொல்லும்போது அது அவரின் அரசியல் அறியாமையையும், தெரிந்தே சொன்னால் அது அவர் தன்னை தலித்தாக முன்னிருத்திக்கொண்டு தலித்தாக இருப்பதால் கிடைக்கும் ஆதாயங்களைப் பெறவிரும்புகிறார் என்றும் அர்த்தமாகும்.
தலித் மக்களுக்காக உழைக்கும் தலித்தல்லாதவர்கள் தமக்கான எல்லைகளை உணர்ந்திருக்க வேண்டும்; அந்த எல்லையோடு நிற்க வேண்டும். நானும் தலித்துதான் என்று பந்தியில் உட்கார்ந்து விடக்கூடாது. இல்லையென்றால், உழைக்கும் வர்க்கமான தலித் மக்கள் வீதியில் நிற்க, உழைப்பிற்கு சம்பந்தமில்லாத பார்ப்பன வர்க்கம் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் (மாவோயியக் கட்சியைத் தவிர) உட்கார்ந்த கதையாகிவிடும். சாதி உணர்வற்ற தலித்தல்லாதவர்களின் கடமை எதுவெனில், தலித் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்பதும், அதிகாரத்தைப் பெற உதவுவதும், அவர்களுக்குப் பக்கபலமாக பின்னே நிற்பதும்தான். இதை உணர்ந்தவராக பெரியார் இருந்ததால்தான், அவரைத் தலைவராக ஏற்றுக்கொள்ள ஆதிதிராவிடர்கள் முன்வந்தபோது, 'நான் உங்களுக்கான தலைவராக ஆக முடியாது. உங்களுக்கான தலைவரை நீங்கள்தான் தேட வேண்டும்' என்று கூறியதும், அப்படிப்பட்ட தலைவராக அம்பேத்கரைக் கண்டதும், அவரையே தலித் மக்களுக்குத் தலைவராக அடையாளம் காட்டியதும், தன்னுடைய தலைவரும் அம்பேத்கரே என்று வெளிப்படையாகக் கூறியதும் நடந்தது. அத்தகைய அறிவு நேர்மை பெரியாருக்கு இருந்தது. அவர் ஒருநாளும் நானும் தலித் என்றோ, உங்களுக்கும் நான்தான் தலைவராக இருப்பேன் என்றோ கூறியது கிடையாது.
தலித் இலக்கியத்தை தலித் எழுத்தாளர்கள்தான் எழுத வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தப்பட்டு வருவதும் எல்லோரும் அறிந்ததே. 'தலித் மக்களைப் பற்றி நானும் எழுதியிருக்கிறேன். தலித் இலக்கியத்தில் என் படைப்புகளையும் சேர்க்க வேண்டும்' என்று மறைந்த எழுத்தாளர் சுஜாதா பேசியபோது, தலித் எழுத்தாளர்களிடம் எழுந்த கடும் எதிர்ப்பு தமிழகம் அறிந்ததே.
தமிழகத்து எழுத்தாளர்களில் தனது குரு(டி)நாதரையும் ஒருசில எழுத்தாளர்களையும் தவிர ஒருபயலுக்கும் ஈழத்து அரசியலைப்பற்றி ஒரு எழவும் தெரியாது; அதுபற்றி எவனும் கதைக்கக்கூடாது என்று சண்டமாருதம் செய்து துள்ளுகின்ற, நானும் என் குடி(ரு)நாதரும்தான் ஈழ அரசியலின் ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்று சுயதம்பட்டம் அடிக்கின்ற அன்பர் சோபாவுக்கு, தலித் அரசியலிலே கரைகண்டவராக தன்னைக் காட்டிக்கொள்ளும் சோபாவுக்கு இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தலித் இயக்கங்களில் நடைபெற்ற மேற்சொன்ன அரசியல் உரையாடல்களை கவனிக்காமலிருந்திருக்க வாய்ப்பில்லை. தலித்துகளின் முன்னேற்றத்திற்காக தலித் அல்லாதவர் பாடுபடலாம். ஆனால் தலித்துகளின் விடுதலைக்காகவும், அந்த தேவைக்காகவும் உருவாக்கப்பட்ட அமைப்புகளில் என்னதான் தலித்துகளைப்போல வாழ்க்கைமுறையை ஒருவர் மாற்றிக்கொண்டாலும், தானே தலித்தாக உணர்ந்தாலும், அந்த சாதிஇந்து அல்லது உயர்சாதியைச் சேர்ந்தவர் தலைமையை தலித்துகளிடம் கொடுத்துவிட்டு அவர்களுக்குக் கீழே சாதாரண ஊழியராக வேலை செய்ய முன்வரவேண்டும். சும்மா நானும் தலித் மாதிரிதான் என்று சொன்னால் அப்புறம் அ.மார்க்சை ரவிக்குமார் 'நாங்க எங்க விடுதலையைப் பார்த்துக்கொள்கிறோம், நீ உன் வேலையைப் பாரப்பு' என்று சொன்னதுபோல் சொல்லவேண்டிவரும்.
சோபாசக்திஇதுபோன்ற அரசியல் விவாதங்களை சோபாசக்தி கேட்காதவரோ அல்லது இதுபற்றி தெரியாதவரோ அல்ல. அதுபோக சோபாவே தனக்கு நிறைய அரசியல் அறிவு இருப்பதாக ('தேசிய சுயநிர்ணயம் குறித்தும் ஆசியப் பொருளுற்பத்தி முறைமை குறித்தும் அமைப்பியல் குறித்தும் காஃப்கா குறித்துமா கீற்று என்னிடம் கேள்விகளைக் கேட்டுவிட்டது?' என்று தன் அறிவுபற்றி பெருமையடிக்கிற சோபாவால் இதுபற்றியென்ன... ஒரு சாதாரண அடிப்படையான அரசியல் பற்றிய கேள்விகளுக்குக்கூட பதிலளிக்கமுடியாது, அந்த அரசியல் அறிவுகூட இவருக்கு கிடையாது என்பதை நம்மால் நிரூபிக்க முடியும்.) தமுக்கு அடித்துக்கொள்கிறார். அதுபோக ஈழத்து தலித் எழுத்தாளர் டேனியலிலிருந்து தமிழகத்தின் தலித் (இந்த சொல்லாடலோடு தமிழவேளுக்கு முரண்பாடுகள் இருந்தாலும்) எழுத்தாளரான தமிழவேள்வரை இவர் பல இடங்களில் மேற்கோள் காட்டுகிறார். ஆனால், இந்த சோபாசக்திதான் தன்னை ஒரு தலித் என்று கட்டமைக்கும் அயோக்கித்தனமான வேலையையும் செய்கிறார். 
“50 வருஷத்திற்கு முன்பு வரை ஈழத்தில் தலித்துகள் மேலாடை போட இயலாது. பாட்டன் வேட்டி கட்ட இயலாது. கோயிலுக்குள் போக இயலாது. வெளியில் நின்று தேங்காய் உடைக்க இயலாது. தங்க நகை அணிய இயலாது. பாயாசம் வைக்க இயலாது. இது சட்டம். பொங்கல் நாள் தினத்தன்று காலையில் வைத்த ஆறிப்போன பொங்கலை நயினார்கள் சிறைக்குட்டிகளுக்குப் போடுவார்கள். இது தமிழர் விழாவா இல்லை சாதி இந்துக்களின் விழாவா? இதே கேள்வியைத்தான் இலக்கியத்திற்கும் பொருத்திப் பார்க்கிறேன். தலித்துகள் எழுத வரும்வரை தலித்துகளின் வாழ்க்கை தமிழ் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா? ஒரு கே.டானியலும் பூமணியும் வரும்வரை தமிழ் இலக்கியத்தில் தலித் மக்களின் இடம் என்ன? எதுவுமே இல்லையெனில் இந்தப் பாழாய்ப்போன தமிழ் இலக்கிய மரபுக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? (அழுத்தம் நம்முடையது) அப்படித் தப்பித் தவறி ஆதிக்க சாதியினர் தலித் மக்களைக் குறித்து எழுதிய தருணங்களெல்லாம் தலித்துகளைக் கேவலப்படுத்தியும் நையாண்டி செய்துமே தங்கள் பிரதிகளைக் கட்டமைத்திருக்கிறார்கள்." (http://vallinam.com.my/issue8/pathivu.html)
இது 'தமிழில் நவீன இலக்கியம் இருக்கிறதா?' என்ற தலைப்பில் இது சோபா வல்லினம் இலக்கிய சந்திப்பில் மலேசியாவில் பேசியது. அரசியலின் அடிப்படைகளை கரைத்துக் குடித்தாக தம்பட்டம் அடிக்கும் சோபாவின் வாயிலிருந்து மேலே சொன்ன வார்த்தைகள் வாய்தவறி வந்ததா இல்லை தண்ணியைப் போட்டபின்பு வந்ததா?. இதுமட்டுமல்ல அவர் போட்ட தலித் வேடத்திற்கு ஆதாரமாக இன்னும் பல கருத்துக்களை, சோபாவின் எழுத்துக்களை நம்மால் வைக்க முடியும். சரி இப்போது அவை என்னென்ன என்பதை நாம் பார்ப்போம்.
தோழர் கவின்மலர் எழுதிய அந்தோணியின் கதையே சோபாவின் தலித் வேடத்திற்கு முதலான ஆதாரமாக முன்வைக்கப்பட்டது. அது என்னவெனில்
“அல்லைப்பிட்டி...ஆம் அதுதான் அவனுடைய ஊரின் பெயர். மனித மனங்களின் கனவுகளையும் சேர்த்துப் புதைத்த தீவு அது. யாழ்ப்பாணத்திற்கு வடக்கே உள்ள அந்தத்தீவுதான் பிற வடபகுதி தீவுகளுக்கு நுழைவாயில். அது அந்தோணி பிறந்த ஊர். ஒருவேளை அவன் அந்த ஊரில் பிறக்காது போயிருந்தால் இந்தக் கதைக்கான அவசியமே வந்திருக்காது. அந்தோணிக்கு ஒரு அண்ணன், இரண்டு தம்பிகள், ஒரு தங்கை. அப்பா உள்ளூரில் உள்ள ஒரு ரௌடி. அடிக்கடி சிறைக்குப் போய்விடுவார். போலீஸ் அவரைத் தேடி வரும்போது அவர் இல்லையென்றால் அவன் அம்மாவைப் பிடித்துக்கொண்டு போய்விடும். இந்துக்கோவில்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே மரியாதை அளிக்கப்பட்டது. கிறிஸ்துவ தேவாலயத்தில் தனித்தனியாகத்தான் வெள்ளாளர்களும் தலித்துகளும் அமர்ந்தனர். பாடசாலைகள், ரேஷன் கடைகள் போன்றவை வெள்ளாளர் வாழும் பகுதியிலேயே இருந்தன. உள்ளுக்குள் வெதும்பினாலும் அது பற்றி தலித் குடும்பங்கள் பெரிதாக வெளியே காட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் வாழ்வாதாரத்தை தேடிக் கொண்டிருந்த அவர்கள் கல்வி குறித்தெல்லாம் கவலைப்படும் சூழ்நிலையில் இல்லை. புகழ்பெற்ற திரைப்படப் பாடலான “அல்லா அல்லா” பாட்டு மெட்டில் “அல்லா அல்லா அல்லைப்பிட்டி பள்ளா பள்ளா!” என்று வெள்ளாளர்கள் பள்ளர்களை வக்கிரமாகக் கேலி செய்து பாடுவதை அந்தோணி பார்த்திருக்கிறான். ஐந்தாம் வகுப்புவரை அந்தோணி அல்லைப்பிட்டியில் படித்தான். ஆறாம் வகுப்புக்கு வேலணை சென்றான். பள்ளியில் அந்தோணிக்கு நல்ல பெயர். கெட்டிக்காரனாக வருவான் என்று வாத்தியார்மார்கள் சொல்வதைக் கேட்கும்போது, ‘அப்பாடா! படிச்சு நல்ல வேலைக்குப் போய் வாழ்க்கையில் முன்னேறணும்’ என்று நினைப்பான். விடுதியில் தங்கித்தான் அவன் படித்தான்." (http://kavinmalar.blogspot.com/2010/11/blog-post.html)
கதையை போனபோக்கில் படிப்பவர்களுக்கு அந்தோணி ஒரு பள்ளர் சாதியைச் சேர்ந்தவர் என்றுதான் படும். லீனா மணிமேகலை சொல்வதுபோல் பிரதியின் ஜட்டியை கழட்டிப்பார்க்கும் எண்ணமெல்லாம் நமக்கு இல்லை என்றாலும் கதையின் ஜட்டியை கழற்றிப் பார்க்காமலேயே உள்ளே இருப்பது என்னவென்று இந்தக்கதையில் நன்றாகத் தெரியும். ஆனால் தோழர் கவின்மலர் என்னிடம் தொலைபேசியில் உரையாடியபோது நான் அவர் தலித் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை என்று சொன்னார், நல்லதுதான். அதுபோக அவர் இன்னொன்றும் சொன்னார் சோபாசக்தி கறுப்பாக இருப்பதால் அவரை தலித் என்று அனைவரும் நினைத்திருக்கலாம் என்று, அதுவும் நல்லதுதான்.
தோழர் கவின்மலர், சோபா தனக்கு வழங்கிய நேர்காணலை முன்வைத்து, தான் எழுதிய கதையில் வரும் அந்தோணி அல்லைப்பட்டியின் பள்ளர் சாதியைச் சேர்ந்தவர் என்று வாசிப்பவருக்குப் பட்டாலும், அதுபோல் அந்தோணி இல்லை என்றே வைத்துக்கொள்வோம். அவர் கருப்பாக இருப்பதால் அனைவரும் தலித் என்று தவறாக நினைக்க வாய்ப்பிருக்கிறது என்று தோழர் கவின்மலர் சொன்னதுபோலவே வைத்துக்கொள்வோம். ஆனால், தமிழீழ தேசியத் தலைவர் பெயரைக் குறிப்பிடும்போது 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' என்று வலிந்து எழுதும் (பிரபாகரன் வெள்ளாளர் இல்லை என்பது வேறு கதை) கவின்மலரோ, சோபாசக்தியோ ஒரு இடத்தில் கூட சோபாசக்தியின் வெள்ளாளப் பின்புலம் குறித்து எழுதவில்லையே ஏன்? அது என்ன பெரிய வாழ்க்கை வரலாறு? தலித்துகளின் முன்னேற்றத்திற்காக பாடுபடும் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதும்போது அவரின் சாதியப்பின்புலம் வேண்டுமென்றே கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டதா? அல்லது அவர் கேட்டுக்கொண்டபடியால் விடப்பட்டதா?
'நான் கன்னட பலிஜா நாயுடு குடும்பத்தைச் சேர்ந்தவன்' என்று வெளிப்படையாக பெரியார் அறிவித்ததுபோல், அந்தோணியின் கதையில் சோபாவின் பின்புலம் ஏன் அறிவிக்கப்படவில்லை? காரணம் எளிது... திட்டமிட்டு சோபா தலித் வேடம் போட்டு வருகிறார். அதை அவர் நண்பர்கள் தெரிந்தே மறைத்தார்கள். இப்போது வேடம் வெளிப்பட்டவுடன் இது அப்போதே எங்களுக்கு தெரியுமே என்று நாவினிக்க பொய்யுரைக்கிறார்கள்.
தனக்கு காஃப்காவைத்தெரியும், கத்தரிக்காயைத் தெரியும் என்று தம்பட்டம் அடிக்கும் சோபா, மேலே சொன்ன கருத்துக்களை சும்மாக்காச்சுக்கும் சொல்லிவிட்டேன் என்று சொல்லப்போகிறாரா? இல்லை திருந்தி ஆம் தலித்வேடம் போட்டேன் என்று ஒத்துக்கொள்ளப்போகிறாரா?
தலித் அரசியல் பேசினால் முக்கியமாக ஈழத்து புலத்திலிருந்து வந்த ஒருவர், அதுவும் புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர், தலித் அரசியல் பேசினால் அது நன்றாக எடுபடும் என்பது சோபாவின் பித்தலாட்ட மூளைக்கு நன்றாகத் தெரியும். உதாரணமாக தோழர் தமிழச்சி சொன்ன வார்த்தைகளை வாசகர்கள் நினைத்துப் பாருங்கள். அவர் சொல்கிறார்,
“என் கணவருடன் வரும்போதே சோபா முழுபோதையில் இருந்தார்; கைகளில் நடுக்கம் இருந்தது. பெரியாரின் கட்டுரைகளை நான் வலையேற்றுவதைப் பாராட்டினார். 'சாதிதான் தமிழ்ச்சமூகத்தில் முதலில் ஒழிக்கப்பட வேண்டியது. என்னைப்போல் ஒரு தலித்தாக இருந்தால்தான் அதன் வலி உங்களுக்கு இன்னும் அதிகமாகப் புரியும்' என்று பேசினார். தமிழகத்தில் சில தலித் எழுத்தாளர்கள் பெரியாரை விமர்சிக்கும்போது, பெரியாரைப் பின்பற்றும் ஒரு தலித் எழுத்தாளர் என்று தெரிந்தபோது அவர் மீதான மரியாதை அதிகமானது." (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087:2011-02-19-01-17-42&catid=1:articles&Itemid=264)
தலித் அரசியலுக்கு இந்த காலச்சூழல்களில் கிடைக்கும் அங்கீகாரம் மற்றும் அதன் வலிமையான பாரதூரங்களும் சோபாவுக்கு நன்றாகத் தெரியும் (பல ஆண்டுகள் ஒதுக்கி வைக்கப்பட்ட கோடானுகோடி தலித்துகள் அதிகாரத்திற்கு எதிராக எண்ணற்ற தியாகங்களோடும் அவமானங்களோடும் போராடி தற்போதைய பத்தாண்டுகளில் பெரும்பாடு பட்டு ஒடுக்குமுறைக்கெதிராக வென்றெடுத்த அங்கீகாரம் இது). அந்த அங்கீகாரத்தை அடித்தளமாகக்கொண்டு புகழை அடையவேண்டும் என்பதற்காக சோபா திருட்டுத்தனமாக எடுத்த அலாவுதீனின் அற்புத விளக்கே இந்த தலித் வேடம். லீனா எப்படி கார்ல்மார்க்ஸின் ஜட்டியைக் கழட்டினால் மகஇக தோழர்கள் கொதிப்பார்கள், அதுமூலமாக தன்னைப் பிரபலபடுத்திக்கொள்ளலாம் என்றும், அந்தப்பயல் இந்தப்பயல் என்ற எழுதினால் பெயர் கிடைக்கும் என்றும், பாலியல் கவிதைகளை (நான் பாலியல் கவிதைகளை எழுதக்கூடாது என்று சொல்லவேயில்லை, மாறாக இந்த கவிதாயினியின் கவித்துத்துவ ஆழ அகலத்தை நன்கு படித்துவிட்டுத்தான் சொல்கிறேன்) தளமாக பயன்படுத்திக்கொள்கிறாரோ, அதைப்போல சோபா தன்னை, தன்பெயரை பிரபலப்படுத்த பயன்படுத்திய உந்து பலகைதான் இந்த தலித் வேடம்.
இந்த தலித் அடையாளத்தை அவர்மேலே சொன்ன வல்லினம் அரங்கில் சொன்னதுபோல் பல இடங்களில் அதாவது பேசும்போது வெளிப்படையாகவும் (தோழர் தமிழச்சியிடம் மற்றும் பலரிடம்), எழுதும்போது பூடகமாகவும் கட்டமைக்கிறார். இல்லை நான் அப்படிப் பேசவில்லை, நான் ஒருமாதிரி பேசியதை அவர் வேறுமாதிரியாக பதிவு செய்து விட்டார் என்று சோபா கருதியிருந்தால் வல்லினத்திற்கு அவர் தனது மறுப்பை எழுதியிருக்கவேண்டும். வாசகர்கள் இது என்ன பெரிய விடயமா என்று கேட்கலாம். ஆனால் தலித் அரசியலில் தலித் அல்லாத ஒருவர் தானும் தலித் என்று காட்டிக்கொள்வது பெரிய விடயம் மட்டுமல்ல, மாபெரும் அயோக்கியத்தனம். சரி இனி இவர் எப்படி தனது கதைகளிலும் கட்டுரைகளிலும் தான் ஒரு தலித் என்னும் பிம்பத்தை பூடகமாக கட்டமைக்கிறார் என்பதை கட்டவிழ்த்துவிடுவோம்.
'விலங்குப்பண்ணை' என்ற தான் எழுதிய கதையில் வரும் ஒரு தலித் கிறித்தவ அந்தோணியோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்வதால் தானும் ஒரு தலித்துதான் என்னும் பிம்பத்தை உருவாக்குவார் சோபா. தலித் என்ற பிம்பம் மெல்ல மெல்ல ஆனால் மறைமுகமாக கட்டப்படும். அதாவது இயக்குனர் தரணி என்னதான் கதை குப்பையாக பிற்போக்குத்தனமாகதாக இருந்தாலும் தன் திரைக்கதையை விறுவிறுப்பாக அமைப்பதுபோல் இங்கு சோபா ஒரு சாதாரண கதையில் தானும் ஒரு பங்காளனாக, ஒரு பார்வையாளனாக நுழைந்து தன் எழுத்தின் மூலம் கதையின் விறுவிறுப்பைக் கூட்டுவார். கதையின் விறுவிறுப்பில் கதையின் ஊடே சோபா சொருகும் கத்தி வாசகர்களுக்கு உறைக்காது. வாசகனின் அடிமனதில் தான் ஒரு தலித்துதான் என்ற பிம்பத்தை அவரின் எழுத்து கட்டமைக்கிறது. அந்த கதையின் முக்கிய கதாபாத்திரம் என்ன சாதியைச் சேர்ந்தவர் என்பதைக்கூட சோபா வெளிப்படையாகச் சொல்ல மாட்டார். ஆனால் கதையின் வரும் இதர பாத்திரங்கள் அந்த முக்கிய பாத்திரத்தை திட்டுவது, அவரின் சாதியை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்திவிடும்.
மெல்ல அக்கதையின் முக்கிய கதாபாத்திரம் குறியீடாக மாறும். வாசகர் மனதில் அக்கதாபாத்திரம் குறிப்பிட்ட தலித் சாதியின் பிம்பமாக உருப்பெற்றவுடன் இவர், அதாவது கதையில் கதைசொல்லியாக வரும் கதாபாத்திரம் மெல்ல தன்னை அந்த தலித் சாதியைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரத்தோடு அடையாளப்படுத்திக்கொண்டு தானும் ஒரு தலித் என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொள்ளும். மெல்ல மெல்ல வெளிப்படையாக யாரும் கண்டறியாதவண்ணம் சோபா இந்த அடியறுக்கும் வேலையை செய்து முடிப்பார். இல்லையில்லை சோபாவின் கதையை வெறும் கதையாகத்தான் பார்க்கவேண்டும் என்று சொல்பவர்களுக்கு சோபா தனது கதையை ஒரு நீண்ட அரசியல் பிரச்சாரம் என்று சொன்னதை நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது.
உதாரணமாக மேற்சொன்ன கதையில் ஆரம்பமே கதைசொல்லியான ஜெ.அன்ரனி மற்றும் ம.அன்ரனி ஆகியோருக்கு இடையே இருக்கும் ஒற்றுமையோடுதான் ஆரம்பமாகும்.
"ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பத்திரெண்டாம் ஆண்டு நான் ஏழாவது வகுப்பில் பாஸாகி எட்டாம் வகுப்புக்குச் சென்றேன். சென்ற ஆண்டு இறுதிப் பரீட்சையில் சித்தியடையாத பழைய எட்டாவது வகுப்பு மாணவன் ஒருவன் இப்பொழுது எங்களுடன் மறுபடியும் எட்டாம் வகுப்பில் படிக்கத் தொடங்கினான். எங்கள் இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருந்தன. இருவரும் அதிக தலைமுடியுடன் காணப்பட்டோம். இருவரும் சீத்தைத் துணியில் தைக்கப்பட்ட பூப்போட்ட சட்டைகளும் ப்ளுரில் துணியில் காற்சட்டைகளும் அணிந்திருந்தோம். இருவருமே வேதக்காரர்கள். அதாவது A B C D எனப் பிரிக்கப்பட்டிருந்த எட்டாவது வகுப்பில் நான்கு பிரிவுகளிலும் நாங்கள் இருவர் மட்டுமே வேதக்காரர்கள். எல்லாவற்றையும்விட எங்கள் இருவரது பெயர்களும் ஒன்றாகவிருந்தன. நான் ஜெ.அன்ரனி, அவன் ம.அன்ரனி."
இப்படியாக இருவரும் ஒரே பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற பிம்பம் முதலில் வாசகர்கள் மனதில் கட்டப்படும். பின்பு கதையின் ஒரு இடத்தில் கதையின் முக்கிய கதாபாத்திரமான ம.அன்ரனியை ஆசிரியர் அவன் சாதியை பூடகமாகச்சொல்லி திட்டுவார்.
"ஒருமுறை பசி மயக்கத்தில் இருந்த ம.அன்ரனியை எட்டு ஸ்ரீ அடித்த அடியில் ம.அன்ரனி மயங்கி விழுந்துவிட்டான். இன்னொரு தடவை விஞ்ஞான டீச்சர் மிஸிஸ் கந்தையா பிடித்து அவனை உலுக்கி “ஏனடா நித்திரை கொள்ளவா இங்கே வருகிறாய்?” என்று கேட்டபோது ம.அன்ரனி மரமாய் நின்றிருந்தான். “போய் உங்கள் சாதித்தொழிலைப் பார், உனக்கு எதற்கு சயன்ஸ்?” என்று மிஸிஸ் கந்தையா கேட்டார். வகுப்பில் இருந்த எல்லோருடைய சாதி விபரங்களையும் மிஸிஸ் கந்தையா விரல் நுனியில் வைத்திருந்தார். எப்படி இந்த சாதி விபரங்களை திரட்டினார் என்பது தெரியவில்லை. விஞ்ஞான டீச்சர்! அவருக்க தெரியாத விதிகளா? பரிசோதனை முறைகளா? ஏதாவது ஆராய்ச்சி செய்து கண்டு பிடித்திருப்பார்."
இதுதான் சோபாவின் ஸ்டைல். யாருடைய சாதியையும் நேரடியாகச் சொல்லாமல் ஆனால் மக்கள் மனதில் படிந்திருக்கும் படிமங்கள் மற்றும் கதையில் அவர் உருவாக்கும் குறியீடுகள் மூலமாக முக்கிய கதாபாத்திரத்தின் சாதியைச்சொல்லி அந்த சாதியைச் சேர்ந்த முக்கிய கதாபாத்திரத்தோடு தன்னை அதாவது கதைசொல்லியை அடையாளப்படுத்திக்கொண்டு தான் தலித் என்ற பிம்பத்தை கட்டமைப்பார். இதற்கு உதவியாக அவரின் நிறமும் இருந்தது அவருக்கு வசதியாக இருந்தது.
சோபா சக்தி 2007 பாரீஸ் மாநாட்டிலும் தலித் வேடம் கட்டியிருக்கிறார். அந்த மாநாடு குறித்த புதிய மாதவி எழுதிய கட்டுரை சோபாவின் இணையத்திலேயே இருக்கிறது.
"தலித்துகள் அல்லாதவர்களும் கலந்து கொண்டு நம்மிடம் இப்போது சாதியம் இருக்கிறதா என்று அசட்டுத்தனமாக கேள்வி கேட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருப்பதை விமர்சித்த எழுத்தாளர் ஷோபாசக்தி ‘அடுத்த மாநாட்டில் தலித்துகள் மட்டுமே அழைக்கப்பட வேண்டும், தலித்துகள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்’ என்று கொஞ்சம் சூடாகக் கலந்துரையாடலில் சொன்னதும் ‘நானும் தலித் தான்’ என்று பசீர் சொன்னதும் ஈழ தமிழ்த் தேசியத்தில் இசுலாமியர்களுக்கான இடம் குறித்த அச்சத்தில் பசீர் போன்றவர்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வைத்தது." (http://www.shobasakthi.com/shobasakthi/?p=120)
மக்களின் பொதுப்புத்தியில் படிந்திருக்கும் அதாவது தலித்துகள்தான் தலித் அரசியல் பேசுவார்கள் என்ற பிம்பத்தை இதுமாதிரியான கட்டமைப்புகளின்மூலம் தட்டியெழுப்பி அதை தனது எதிர்காலத்திற்கு பயன்படுத்திக்கொண்டார் சோபா.
சோபாவின் பித்தலாட்டம் எந்தளவிற்கு தமிழகத்தில் சென்றடைந்திருக்கிறது என்பதை உரசிப்பார்ப்பதற்காக 'சோபாசக்தி என்ன சாதி தெரியுமா?' என்று பலரிடம் கேட்டபோது, 'சோபாசக்தி தலித்துதான்' என்று அவர்கள் அடித்துப் பேசியதும், உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டபோது, 'அப்படித்தானேப்பா அவரது படைப்புகள் இருக்கின்றன' என்று சொன்னதும், சோபாவின் வேடம் நன்றாகவே வேலை செய்திருக்கிறது என்பதை உணர்த்தியது.
'கார்ல் மார்க்சுக்கு கள்ள உறவு இருந்தது; அதை ஒப்புக்கொள்ள இந்த மகஇக மறுக்கிறதே' என்று ஒப்பாரி வைக்கும் சோபா இப்படி ஒரு ஏமாத்து வேலையை செய்ததன் காரணமென்ன? கார்ல் மார்க்சு அப்படி ஒரு உறவு வைத்திருந்தால் அதை ஒப்புக்கொள்வதில் பொதுவுடமைவாதிகளுக்கோ ஏன் கார்ல்மார்க்சுக்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை, ஏனெனில் மார்க்சியத்தின் புனிதம் ஒன்றும் மார்க்சின் ஆணுறுப்பில் வைக்கப்படவில்லை. ஆனால் தலித்வேடம் போட்டு மக்களின் கவனத்தை ஈர்த்த சோபாவுக்கும் குலுக்கல் நடனத்தால் ஒன்றுக்கும் உதவாத திரைப்படத்தை கரை சேர்க்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம் என்பதை சோபாவின் ரசிகக் கண்மணிகள்தான் சொல்லவேண்டும்.
தனது ஆதிக்க சாதிப் பின்புலத்தை மறைத்து, இடஒதுக்கீட்டுக்காக 'தலித்' என்று சாதிச் சான்றிதழ் வாங்கும் சராசரி மனிதர்களை விடக் கேவலமானவர் சோபா சக்தி. இவர் தனது தலித் வேடத்தை, நியாயமான ஒரு போராட்டத்தின் மீது சேறடிக்கப் பயன்படுத்தியிருக்கிறார். தலித் அரசியலை முன்வைத்து, புலிகளை சோபா விமர்சித்தபோது, 'பாதிக்கப்பட்ட ஒரு தலித் சொல்வது சரியாகத்தான் இருக்கும்' என்பதுபோல்தான் தமிழ் இலக்கிய உலகம் அதை எடுத்துக் கொண்டது. இன்றுவரை அ.மார்க்ஸ், சுகன், ஆதவன் தீட்சண்யா, சுசீந்திரன் உள்ளிட்ட புலி எதிர்ப்பாளர்களின் முதல் கோஷமே புலிகள் ஆதிக்கசாதியினர் என்பதுதானே! இந்த தலித் வேடத்துக்கான கூலியாகத்தானே, சோபா எந்த வேலையும் செய்யாமல் கோயில்மாடு போல் திரிய கொடுத்து வைக்கப்பட்டிருப்பது?
aadhavan_shobasakthi_600
இவரது தலித் வேடத்தைக் கலைத்து, இவர் ஒரு ஆதிக்க சாதி வெள்ளாளர் என்பதை இணையத்தில் பலர் அம்பலப்படுத்தியவுடன், 'தான் ஒரு தலித் இல்லை' என்று மிகவெளிப்படையாகச் சொல்கிறார். இதை இதற்குமுன் ஒருநாளும் சோபா பேசியதில்லை என்பதில் இருந்துதான் அவரது அயோக்கியத்தனம் வெளிப்படையாக பல்லிளிக்கிறது.
‘தலித்‘ எழுத்தாளர் தமிழவேளிடம் சோபா பற்றி பேசிக்கொண்டிருந்தேன். அவரும் சோபாவின் தலித் வேடத்தையும் கைக்கூலித்தனத்தையும் நன்றாகவே அறிந்திருந்தார், சோபாவின் மீது கடுமையான கோபத்திலிருந்தார். அவர் பாரதியின் வரிகளை கொஞ்சம் மாற்றிச்சொன்னார். “வேடங்கள் போடுபவரைக் கண்டால் மோதி மிதித்துவிடு பாப்பா, முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா“ என்று. அவர் சொன்னது பாப்பாவுக்கு மட்டுமல்ல... அதுபோக சோபாசக்திக்கு கலகக்காரன் என்று ஒரு பட்டப்பெயரை அவரது ரசிகக் கண்மணிகள் கொடுத்துள்ளார்கள். அது உண்மைதான். பொய் சொன்ன வாயிக்கு போசனம் கிடைக்காது என்று சொன்ன பழமொழியை தனது தலித் வேடத்தால் உடைத்து, பொய் சொன்ன வாயிக்கு போசனம் என்ன இலங்கை அரசின் சாராயமும் கிடைக்கும் என்று நிரூபித்த 'புர்ச்சி'கரமான கலகக்காரர் அவர்தான்.
பின்குறிப்பு- தோழர் கவின்மலரிடம் அவர் எழுதிய கதை பற்றிப் பேச நான் தொடர்புகொண்டபோது அவர் முதலில் நன்றாகப் பேசத் தொடங்கினார். தான் சோபாவை தலித் என்று எழுதவில்லை என்று மறுத்தார். பின்பு கோபமுற்ற அவர், இரண்டு குற்றச்சாட்டுக்களை வைத்தார். அது என்னவெனில் போன கட்டுரையில் நான் சோபாவை தரம் தாழ்ந்து எழுதியதாகவும், அதுபோக அனைவரும் கூட்டு சேர்ந்து சோபாவை தாக்குவதாகவும். போன கட்டுரை மக்கள்மொழியில் கிண்டலும் கேலியும் கலந்து எழுதப்பட்டது. நமக்கு தோழர் கவின்மலர் மீது மரியாதையும் தோழமையுணர்வும் எப்போதும் உண்டு. தோழர் கவின்மலர் வர்க்க மனச்சாட்சியோடு சோபாவின் கட்டுரைகளை வாசித்துவிட்டு பின்பு சொல்லட்டும் யார் தரந்தாழ்ந்து பேசுவது என்று. இரட்டை அர்த்த வசனங்களாலும் படுபச்சையான கொச்சையான வசவுகளாலும் நிரப்பப்பட்டதுதான் சோபாவின் கட்டுரைகள். அவரது கட்டுரைகளை அரசியல் கட்டுரைகள் என்று சொன்னால் அதுவும் இடதுசாரிப் பார்வையில் அமைந்த அரசியல் கட்டுரைகள் என்றால் பேராசான் மார்க்சு நாக்கைப் பிடுங்கிக்கொண்டு செத்துப்போவார். வேண்டுமென்றால் அவரது கட்டுரைகளை நாம் வறட்டுவாதக்கட்டுரைகள் என்று சொல்லிக்கொள்ளலாம்.
அதுபோக கவின்மலரின் இரண்டாவது குற்றச்சாட்டு நீங்கள் கூட்டு சேர்ந்து (அதாவது கீற்று மற்றும் என் போன்றவர்கள்) சோபாவை தாக்குவதாக. நாம் தோழர் கவின்மலரைப் பார்த்து கேட்கவிரும்புவது இது ஒன்றுதான். நீங்கள் எந்த விடயத்தில் சோபாவை ஆதரித்தாலும் பரவாயில்லை, ஆனால் தோழர் தமிழச்சி அவர்மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். இந்த விடயத்தில் நீங்கள் யார் பக்கம் நின்றீர்கள்? பாதிக்கப்பட்டு, மனதுக்குள் வைத்து வைத்து மருகும் எத்தனையோ கோடி அப்பாவி பெண்களைப் போலல்லாமல், தனக்கு நியாயம் வேண்டுமென்பதற்காக தன்னந்தனியாக இத்தனை நாட்கள் போராடியதோடு, செய்யாத தப்பிற்கு ஒரு பொறுக்கியால் கிடைத்த அத்தனை அவமானங்களையும் துணிச்சலோடு எழுதி நிற்கும் அந்த பெண்ணிற்கு துணையாக நின்றீர்களா? இல்லையே... சோபாசக்தியின் அருகில் நின்று கொண்டு - வீரப்பன் தேடுதல் வேட்டையிலே காவல்துறையால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அப்பாவிப்பெண்கள் நீதிகோரியபோது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டானே ஒரு கிழட்டு நாய் தேவாரம் - அவனைப்போல தோழர் தமிழச்சியிடம் சோபா ஆதாரம் கேட்டதற்கு ஒத்து ஊதத்தானே செய்தீர்கள்? பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் கேட்கும் தடித்தனம் சோபாசக்தி மாதிரியான பொறுக்கிகளுக்கு வேண்டுமானால் வரலாம், பெண்ணியம் பேசும் கவின்மலருக்கு...? இல்லை இதுதான் பாதிக்கப்பட்ட பெண்களிடம் நீங்கள் எப்போதும் கேட்க விரும்பும் கேள்வியா?
'சின்ன வயதில் இருந்தே பழக்கம், அதனால் அரசியலில் இருதுருவங்களாக இருந்தாலும் நட்பு தொடர்கிறது' என்று நீங்கள் சோபாவுடனான நட்பைப் பற்றி சொல்ல முடியாது. ஈழத்தில் பிறந்து, பிரான்சில் வாழும் சோபாசக்தியுடன் ஒத்த கொள்கையன்றி நட்புறவு கொள்வதற்கு வேறு காரணம் இருக்க முடியாது. சோபாசக்தியிடம் காணும் அத்தனை 'புரட்சிகர அம்சங்க'ளையும் நீங்கள் சாரு நிவேதிதாவிடமும் காண முடியும். பெரியார், பெண்ணியம், இந்து மத எதிர்ப்பு, பாலியல் சுதந்திரம், குடி இத்தனையையும் சாருவின் கட்டுரைகளில் இருந்தும் உருவியெடுக்கலாம். சோபாவைப் போலவே, சாருவும் தலித் வேடம் போட்டவர். மலம் அள்ளும் குடும்பத்தில் பிறந்ததாக பீலா விட்டவர். சோபாவின் 'புர்ச்சி'கரத்தன்மைக்கு ரசிகர் என்றால், அதே 'புர்ச்சி'கரத்தன்மை சாருவிற்கும் உண்டு என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இதுதான் பெண்ணியம், இப்படி பேசுவதுதான் பெண்ணியம் என்றால் நீங்கள் பேசும் பெண்ணியத்தில் எழவு விழ என்று எங்கள் ஊர் பாட்டிபோல்தான் எனக்கு சொல்லத்தோன்றுகிறது.
தோழர் கவின்மலர், ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். சோபாசக்தி அடிக்கடி தனது கட்டுரையில் ஒரு சீனப்பழமொழியை தன்னை எதிர்த்துப்பேசும் தனது முன்னாள் நண்பர்களுக்கு சொல்வார். “நீங்கள் எவ்வளவு தூரம் தவறான பாதையில் சென்றிருந்தாலும் திரும்ப வந்துவிடுங்கள்“ என்பதுதான் அது. அந்தப் பழமொழியே ஒரு பிற்போக்கானது. இருப்பினும் அந்தப் பழமொழியை நான் கொஞ்சம் மாற்றிச் சொல்ல விரும்புகிறேன். அன்புத்தோழர் கவின்மலர், "நீங்கள் எவ்வளவு தூரம் தவறான பாதையில் சென்றிருந்தாலும் திரும்ப வந்துவிடுங்கள், அல்லது நீங்கள் செல்லும் பாதை சரியென்றால் எம்மையும் அங்கு அழைத்துச் சென்றுவிடுங்கள்." ஏனெனில் நான் மாவோவின் ஆயிரம் பூக்கள் மலரட்டும் என்ற கருத்தில் அபார நம்பிக்கை வைத்துள்ளேன். அதே நேரத்தில் நீங்கள் ஒரு சமூகப் பொறுப்புமிக்க தோழர் என்பதையும், தோழர்களாக இருந்து துரோகிகளாக மாறியவர்களின் வரலாறுகள் மக்கள் மன்றம் முன்பாக கொட்டிக்கிடக்கிறது என்பதையும் உங்களிடம் நான் நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளேன்.
-     சார்லசு அன்ரனி ( charlesantony2010@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )

புதன், 20 ஜூலை, 2011

ஈழ எதிர்ப்பு - ஆதவன் தீட்சண்யாவின் ஆளும் வர்க்க சேவை மீ.த.பாண்டியன்

   
புது விசை ஜூன் 32 ஆவது இதழில் யோ.கர்ணன் எழுதிய‌ ‘துவாரகாவின் தந்தை பெயர் பிரபாகரன்’ எனும் தலைப்பிலும், அதே போல் ஆதவன் தீட்சண்யா எழுதிய ‘ஒரு பில்லியன் பிரார்த்தனைகளும் ஒற்றைச் சூடக்கட்டியும்’ எனும் தலைப்பிலும் இரண்டு சிறுகதைகள் வெளியிடப்பட்டிருக்கிறது.
     கர்ணனின் கதை ஈழத் தமிழ் நடையில் எழுதப்பட்டுள்ளது. மிக்சர் கம்பெனி வைத்திருந்த வீரப்பிள்ளை மகன் பிரபாகரனைப் பற்றிக் கதை சொல்லத் தொடங்கி, அவருக்கு ஒரு மகள் துவாரகா எனச் சொல்லி வேலுப்பிள்ளை பிரபாகரனை நினைவூட்டிப் பகடி செய்யும் கதை. "இலங்கையில் முப்பது வருடங்களாக நீடித்து வந்த உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அரசாங்கம் அறிவித்த கையுடன்" எனத் தொடங்கும் கதை, "விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, அவரது மகள் துவாரகாவை நினைவூட்டும் வகையில்" மிக்சர் கடை வீரப்பிள்ளை மகன் பிரபாகரன் தப்பி தமிழகத்திற்கு வந்து, பின்னர் தாய்லாந்து சென்று பிரிட்டனுக்கு விசா விண்ணப்பம் கொடுப்பதாகக் கதை. ஈழத்தில் அவரது மகளின் கைது விசாரணை மூலம், தப்பித்த பிரபாகரன் மிக்சர் கடை பிரபாகரன் என வெளிப்படுத்துவது. கதையில் கையாளும் மனிதர்களும், செய்திகளும் நெடுமாறன், சீமான், வைகோ என துணைச் செய்திகளும் முப்பது ஆண்டு காலம் நடந்து தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட ஈழ விடுதலைப் போராட்டத்தின் நாயகர்களை பகடி மூலம் கொச்சைப்படுத்துகிற செயலை இக்கதை எழுதியவர் செய்துள்ளார்.
ஆதவன் தீட்சண்யாஇறுதியில் மகள் துவாரகாவை தான் அகதியாக தஞ்சம் புகுந்துள்ள ஆஸ்திரேலியாவுக்கு அழைக்கிறார். ‘‘எங்கட நாட்டை விட்டுட்டு வர விருப்பமில்லை’ என பதில் தருகிறார் துவாரகா. கதையின் இறுதி வாசகமாக வீரப்பிள்ளை பிரபாகரன் சொல்வதாக "நாடும், மசிரும்" என முடிக்கிறார்.
 ஆதவன் தீட்சண்யாவின் கதை மாரிச்சாமி எனும் ஒற்றைக் கதாபாத்திரத்தை தமிழகத்தின் தமிழ்த்தேச இயக்கங்களை, உணர்வாளர்களை உருவகப்படுத்தி ஆதவனின் வழக்கமான கிண்டல், கேலிகள் ஊடே எளிமைப்படுத்தியுள்ளார். தமிழகத்தின் தமிழ்த்தேச, ஈழ ஆதரவாளர்களின் செயல்பாடுகள் ஆதவனை எரிச்சலூட்டியிருக்கலாம். இதன் வெளிப்பாடாக கிரிக்கெட் போட்டிக்கு வரும் இலங்கை அணிக்கு எதிராக மாரிச்சாமியை ஒரு கேலிக்கும், கிண்டலுக்கும் உரிய பொருளாக மாற்றுவதன் மூலம் ஈழத் தமிழர் ஆதரவு ஆர்வலர்களை, செயல்பாட்டாளர்களை, "இணைய தளத்திற்குள் ஈழம் அமைத்தே தீருவது எனப் போராடி வரும்" என இயக்கங்களை வரிசைப்படுத்துகிறார். இடையில் மாரிச்சாமி மருகுவதாய் "இலங்கையில் தொழில் நடத்துகிற அசோக் லேலண்ட், ஹிந்துஜா வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்தவில்லை" எனச் சுட்டிச் செல்கிறார். இணையத்துக்குள் இன்று ஈழத்திற்கு ஆதரவான குரல் அதிகரித்திருப்பதும், அது இதர கருத்தியலை ஏற்றுக் கொண்டுள்ள சிந்தனையாளர்களை, செயல்பாட்டாளர்களை எரிச்சலூட்டியுள்ளது என்பதும் தெரிகிறது. கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியில் களமிறங்கும் இலங்கை அணி தோற்றுப்போக மாரிச்சாமி பிரார்த்தனை செய்வதாகவும், போட்டியில் இலங்கை அணி தோற்றுப் போனது தனது சூடக்கட்டி பிரார்த்தனையால்தான் என மன நிறைவு கொள்வது போலவும் கதை முடிவுறுகிறது.
 இரண்டு கதைகளுமே  அரசியல் கிண்டல் சிறுகதைகள். கடந்த முப்பது ஆண்டுகளாக சிறிய அளவில் வடிவமெடுத்த ஈழ விடுதலைப் போராட்டம், இந்திய அரசின் தெற்காசிய அரசியல் நடவடிக்கையின் மையமாக மாற்றப்பட்டதும், இலங்கையை மையப்படுத்திப் போட்டி மையங்கள் இன்று உருவாகி உள்ளன என்பதும் வெளிப்படையான உண்மை. சுமார் 15 இயக்கங்கள், அதில் ஐந்து பிரதான அமைப்புகள் முன்னிருத்தப்பட்டும், முன்னெழுந்தும் வந்தன. இந்திய அரசின் ஆயுத உதவியுடன் இந்தியாவின் விரிவாக்க நோக்கத்தை நிறைவேற்ற வளர்த்து விடப்பட்டன. அரசியல் ரீதியாக இந்திய உளவு நிறுவனமான ‘இரா’  ஈழ அமைப்புகளுக்கிடையே போட்டியை உருவாக்கி, மோதலை உண்டாக்கி ஒருவரையொருவர் அழிப்பதில் இறங்கி, இறுதியில் சில அழிக்கப்பட்டன. எஞ்சிய இரு அமைப்புகள் ஈரோஸ், விடுதலைப் புலிகளுடன் இணைந்து போராட்டக் களத்தைச் சந்தித்தன. ஈழ இயக்கங்களின் தோற்றம், தலைமைகள், அரசியல் நிலைப்பாடுகள், இந்திய அரசுடனான உறவு, உட்பகை, அழிவு என விவரிக்கத் தொடங்கினால் மிகவும் விரிவானது. தியாகம், துரோகம் என இரு முனை விவாதமாகச் சுருக்க முடியாது.
1987க்கு முன், 1987க்குப் பின் எனக் காலக் கட்டத்தைப் பிரித்து அணுக வேண்டியுள்ளது. ஆம். இந்திய அமைதிப்படை இலங்கை சென்றதற்கு முந்தைய சூழல், பிந்தைய சூழல் எனப் பரிசீலிக்க வேண்டும். இந்திய அரசின் ‘இரா’ உளவுத் துறையின், அன்றைய பிரதமர் இராசீவ் காந்தியின் இராணுவ, வெளியுறவுத் துறை அதிகாரிகளின் பாத்திரம் என்ன? தெற்காசியாவின் பேட்டை ரவுடி இந்தியாவின் சதிச் செயலுக்கு எதிராகத் தாக்குப் பிடித்த  சக்திகள் எவை? நார்வே மூலம் தலையிட்ட  சர்வதேச சக்திகளின் பாத்திரம், இலங்கை, இந்திய, தெற்காசியப் பகுதியில் உள்ள இடதுசாரிக் கட்சிகளின் செயல்பாடுகள் என மிக விரிவான தளத்தில் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய ஒரு இனத்திற்கான சனநாயகப் போராட்ட வரலாறு. சிங்களம் மட்டுமே என்ற சட்டத் திருத்தம் தொடங்கி நடந்த வெகுமக்கள் போராட்ட  கட்சிகளும், தனி ஈழமே எனப் போராடிய விடுதலைப் போராட்டத்தின் முப்பது ஆண்டுகால ஆயுதப் போராட்டமும் என மிகவும் கனமான, இரத்தமும், சதையும் லட்சக்கணக்கான உயிர்ப்பலிகளும் நிறைந்த போராட்டம் கேலிக்குரியதா? கிண்டலுக்குரியதா? பகடிக்குரியதா? இருக்கலாம். யாருக்கு? ஆளும் வர்க்கச் சேவை புரிபவர்களுக்கு. ஆதவன் தன்னை அப்படித் தான் முன்னிருத்துகிறாரா? புதுவிசை தன்னை எந்தவகையான கலாச்சாரக் காலாண்டிதழாக முன்னிருத்துகிறது.
 தமிழகத்தின் இருதுருவ அரசியல் அனைத்துக் கட்சிகளை, இயக்கங்களை தன் பின்னே அணிதிரட்டுகிறது. இடதுசாரிக் கட்சிகளும் இதற்கு விதிவிலக்கில்லை. தலித் அரசியலுக்கான கருத்தியல், சர்வதேசிய, தேசிய, தமிழ்த் தேசிய, ஏனைய அனைத்து சமூக இயக்கங்களையும் மறுதலிக்கிறது. ஆனால் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொள்கிறது. சிறுபான்மை இயக்கங்களின் இந்துத்துவ மதவெறி எதிர்ப்பு அரசியலுக்கான கருத்தியல் தனக்கான அணி சேர்க்கைக்கு முக்கியத்துவ‌மளிக்கும் அதே வேளை தமிழகத்தின் இருதுருவ அணி சேர்க்கையில் சிக்கிக் கொள்கிறது. தேசிய இன அரசியலும் இதே கதி தான். இடதுசாரி அரசியல் இருதுருவ அரசியலுக்குள் மாட்டிக் கொண்டு, சிக்கிக் கொண்டு விடுபட முடியாமல் திணறிக் கொண்டுள்ளது. விடுபடுவதற்கான விருப்பத்தை, முயற்சியைக் கூடப் பார்க்க முடியவில்லை.
 ஆனால் வர்க்கப் போராட்டம் எனும் சொல்லாடல் இன்று பரந்த பொருளில் பார்க்கப்பட்டு, பேசப்பட்டு, கையாளப்பட்டு வருகிறது. பன்முகப் பரிமாணத்தைக் கொண்டுள்ள இந்திய, தமிழ்ச் சமூகத்தில் தலித் ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலுக்கு சாதி ஒழிப்பு நோக்கில் இணைத்துப் பார்க்கும் தன்மை மா- லெ அமைப்புகளில் மட்டுமே இருந்தது. இடதுசாரிகள் சாதிக் கலவரமாக, மோதலாக, வர்க்க ஒற்றுமைக்கு எதிரான ஏகாதிபத்தியச் சதியாகப் பார்த்த சூழல் மாறி இன்று ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யாக அடியெடுத்து வைத்துள்ளது; மாற்றம் நிகழ்ந்துள்ளது. இதைக் கூட எரிச்சலாகப் பார்க்கும் மரபு ரீதியான இடதுசாரிகள் இன்றும் அமைப்புகளுக்குள் உள்ளார்கள்.
 தலித் அரசியலே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! தேசிய இன விடுதலையே மண்ணுக்கேற்ற மார்க்சியம்! எனப் புதிது, புதிதாக முழக்கங்கள் எழுந்து வந்த சூழலில் மார்க்சியத்தின் மறுவாசிப்பும், சுய பரிசீலனையும், தாக்குதல்களும், கடந்த இருபது ஆண்டுகால விவாதங்களும் படிப்படியாக மாற்றங்களைச் சந்தித்து ‘வர்க்கப் போராட்டம்’ அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கி இணைத்துக் கொண்ட பரந்த பொருளில் தன்னை முன்னிருத்தியுள்ளது. பல் தேசிய இன இந்திய நாட்டில், இந்திய ஆளும் வர்க்கம் இந்துத்துவா அரசியலின் மூலம் ஒற்றை அடையாளத்தை முன்னிருத்துகிறது என்றால், உலகமயச் சூழல் உலகமே ஒரு கிராமமாக ஒற்றைத் தன்மையை முன்னிருத்துகிறது. இந்தி மொழித் திணிப்பிற்கு எதிரான இயக்கம் தொடங்கி, இன்றைய இலங்கை அரசுக்குத் துணையான இராணுவ உதவி வரை இந்திய அரசால் தமிழக, தமிழன் உணர்வுகள் புறந்தள்ளப்படுவதை பார்க்க முடியவில்லையா?
 தேசிய இன அமைப்புகளின், தலித் இயக்கங்களின் விருப்பத்திற்கேற்றவாறு கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்தியாவில் இயங்க முடியாது. தலித் இயக்கங்களின் விருப்பங்களுக்கு இணங்க தமிழ்த் தேசிய அமைப்புகள் இயங்க முடியாது. வர்க்க ஒற்றுமை, இன ஒற்றுமை பேசும் அமைப்புகளின் நோக்கங்களுக்காக தலித் இயக்கங்கள் தன் மீதான ஒடுக்குமுறையைத் தாங்கிக் கொண்டு, தனது எழுச்சியைத் தள்ளிப் போட முடியாது. சகலமும் அறிந்ததாக மார்தட்டிக் கொள்ளும் கம்யூனிஸ்ட் அமைப்புகளின், புரட்சியாளர்களின் விருப்பம், உணர்வுகளுக்கேற்றவாறு தலித் இயக்கங்களோ, தேசிய இன இயக்கங்களோ, பெண் விடுதலை அமைப்புகளோ, சிறுபான்மை அமைப்புகளோ, சுற்றுச் சூழல் அமைப்புகளோ சிந்திககவோ, செயல்படவோ முடியாது. இதில் ஆதவன் தீட்சண்யாக்கள் எரிச்சலடைவது எதனால்?
 தங்களது படைப்புகளை ஏனைய கருத்தியலை நோக்கித் திருப்பும் தீட்சண்யாக்கள் கூடங்குளத்தில் அணு உலை ஆதரவும், செகதாவூரில் அணு உலை எதிர்ப்பும் என நிலை எடுக்கும் இடதுசாரிகளைப் பார்த்து எரிச்சல்படுவதில்லையே, ஏன்? ஐந்து ஆண்டுகள் வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி, போராட வைத்து, அடி உதை வாங்கிச் சிறை சென்று, ஆளும் வர்க்கக் கட்சிகளின் தலைவர்களை சனநாயகத்தைக் கொண்டு வரும் விடுதலை வீரர்களாக, வீராங்கனைகளாகச் சித்தரிக்கும் மாபெரும் படைப்பாளிகளான பாட்டாளி வர்க்கத் தலைவர்களை நோக்கித் திருப்புவதே இல்லையே ஏன்? தனது கதையில் படைப்பின் உத்திகளை, படைப்புச் சுதந்திரத்தைப் பாருங்கள் எனக் கூறும் தீட்சண்யா மன்மோகன்சிங், கிலானி, இராசபக்சே, நெடுமாறன், சீமான், வைகோ என எல்லோரையும் தான் சொல்லியிருக்கிறேன், ஒரு படைப்பாளிக்கு சார்புத் தன்மை இல்லை எனக் கூடப் பேசலாம். படைப்புச் சுதந்திரத்தை ஏற்றுக் கொள்! என அறைகூவல் விடுக்கலாம்.
கிரிக்கெட் மைதானத்தில் மாரிச்சாமித் தமிழனை நிராயுதபாணியாக நிறுத்தி கோவணத்தை உரியும் தீட்சண்யா வங்க உணர்வு பொங்கி வழியும் பட்டாச்சார்யாக்களை, பாசுக்களை, சட்டர்ஜிகளை, முகர்ஜிக்களை, யெச்சூரிகளை, மலையாள உணர்வு பெருக்கெடுத்து முல்லைப் பெரியாறு வரை அணை உடைக்கும் அச்சுதானந்தன்களை அழைத்து வந்திருக்கலாமே! ஆந்திரத்தின் தெலுங்கானாவை ஏன் விட்டு விட்டார்? காஷ்மீரின் கிலானி உங்களது கிண்டலுக்கு சோளப்பொறி. வர்க்க உணர்வுகளை தேர்தல் சூத்திரத்திற்கு ஏற்ற அரசியல் உணர்வாக மாற்றி வடிவமைக்கும் கட்சித் தலைவர்கள் மீது காட்டலாமே! பரம ஏழை டாடாவிற்கு சிங்கூர், நந்திகிராம் நிலங்களைப் பிடுங்கிக் கொடுத்து மாட்டிக் கொண்டதை மறைக்க, மாவோயிஸ்ட் பூதத்தைக் காட்டி மம்தாவிடம் பறிகொடுத்த கதையை நூறு கதைகளாக்கலாம். இலங்கைக்குப் போகும் அசோக் லேலண்ட், இந்துஜா பெருமுதலாளிகளுக்கு எதிராக வீட்டு முன் ஆர்ப்பாட்டத்தை த.மு.எ.க.ச வை, சி.ஐ.டி.யூ வை, சி.பி.ஐ (எம்) ஐ நடத்தச் சொல்ல வேண்டியது தானே! ஏர்டெல்லுக்கு எதிரான இயக்கத்தை மே- 17 இயக்கம் முன்னெடுக்காமல், பி.எஸ்.என்.எல் எம்ளாயிஸ் யூனியனா நடத்தியது?
  தாங்கள் நேரிடையாக எதிர்க்க முடியாத சர்வாதிகாரிகள் அடக்குமுறையாளர்கள், கங்காணிகள், ஆதிக்க சக்திகள் இவர்களுக்கெதிராக வெளிப்படும் கோபத்தை உருமாற்றிப் பாடல்கள், கதைகள், பழமொழிகளாக வெளிப்படுத்த உழைக்கும் மக்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் உதவும் கலை வடிவங்கள்தான் பகடி, கேலி, கிண்டல். சாப்ளின் மிகப் பெரிய மேதை. முதலாளித்துவக் கலாச்சாரத்திற்கு எதிராக, இயந்திரமயமாக்கத்திற்கு எதிராகப் பகடிகளைப் பயன்படுத்திய மேதை. என்.எஸ்.கே சாப்ளினின் தமிழ் அடையாளம். அந்தப் பகடி, கேலி, கிண்டல் ஆதவனுக்கு இரத்தம் சிந்திப் போராடிய விடுதலை இயக்கங்களுக்கு எதிராக, போராட முனையும் தமிழகப் போர்க்குணமிக்க இளைஞர்களுக்கு எதிராகப் பயன்படுகிறதே! இதுவும் வர்க்கச் சேவைதான். ஆம். ஆளும் வர்க்கச் சேவை. அந்தோணியோ கிராம்சியின் எழுத்துக்கள் விசையில் பிரசுரிக்க மட்டும் தானே! செயல்பாட்டுக்கு, படைப்புக்கு அல்ல.
 போராட்டங்களை, போராளிகளை, திட்டங்களை, முழக்கங்களை, இலக்குகளை, தலைமைகளை கொச்சைப்படுத்தாமல் கருத்தியல், அரசியல் ரீதியாக விமர்சிக்க நிதானமும், தத்துவ அரசியல் புலமையும் அவசியம். புரட்சிகரத் தலைவர்களுக்கு எதிராக வீசப்பட்ட வதந்திகளை, கிண்டல், கேலிகளை புறந்தள்ளிவிட்டுச் சந்தித்த வரலாறு இலக்கியங்களாக நம் முன் இன்றும் இருக்கிறது. பொறுப்புடன், விமர்சனங்களை முன்வைக்கப் பழகுவதும், பழக்கப்படுத்துவதும் இதழாளர்களின், படைப்பாளிகளின் மாபெரும் கடமை. உணர்ச்சியைக் கொட்டுவதற்கும், உணர்ச்சிகளைத் தூண்டுவதற்கும் தமிழகச் சூழலில் ஏராளமான விசைகள் உள்ளன. புதுவிசை எதற்கு? அரிப்பதைச் சொறிவதும், சொறிவதினால் ஏற்படும் சுகத்தை, எரிச்சலைப் பதிவு செய்யும் சாரு நிவேதிதாக்கள் பேசும் படைப்புச் சுதந்திரம் யாருக்கு?
 இந்தியாவை ஏற்றுக் கொள்ளாதே எனும் தமிழ்த் தேசிய முன் வைப்புகளுக்கு தீட்சண்யாவின் பதில் என்ன? தமிழ்த் தேசிய அரசியலைக் கிண்டலடி என்பதா? சரியான அணுகுமுறையா? தமிழ்த் தேசிய அரசியலுக்கான புறநிலை யதார்த்தம் உள்ளதா? இல்லையா? ஈழ மக்களின் போராட்டங்களுக்கு தமிழகத்தின், தமிழர்களின் பங்கு, பாத்திரம் அவசியமா? இல்லையா? ஒரு படைப்பு உணர்வுகளைத் தூண்டி, வழி நடத்த வேண்டும். அதைச் செய்கிறதா உங்களது படைப்பும், தாங்கள் வெளியிட்ட படைப்பும்.
- மீ.த.பாண்டியன் (

வியாழன், 14 ஜூலை, 2011

இந்திய  தொலைக்காட்சிகளின் இந்தி உணர்வு 



 


மும்பையில்  21 பேர் குண்டுவெடிப்பில் பலியானதை   தொடர்ந்து ஒளிபரப்பி இந்தியாவில் வாழும் 120  கோடி மக்களுக்கும் , கொல்லப்பட்டது   நம் இந்திய உறவுகள் என்ற உணர்வை எற்படுத்துகிற    தமிழக  மற்றும் தென்னிந்திய வட இந்திய தொலைக்காட்சிகளுக்கு ஏனோ   இலங்கை கடற்படையினரால்   நம்  தமிழர்கள்  600 க்கும் மேற்பட்டோர்  கொல்லப்பட்ட போது இவ்வுணர்வு எங்கே  போனது !   (பாசாங்கு தறுதலைக்கு நடந்த பாராட்டு விழாவை நேரடியாய் ஒளிபரப்பவும்,சாமியாருக்கும் நடிகைக்கும் மான நல்ல உறவை காட்டவும்,ஈழத் தமிழர்களை கொல்ல உதவிய   ஏர்டெல நிறுவனம் நடத்தும்  மலையாளிகள் மட்டுமே கலந்து கொள்ளும் தமிழ் பாட்டுப் போட்டிகளை காட்டவும் ,பேயா பிசாசா  என்று பீதிகள் வர பேதைகள் விவாதிக்க பெருச்சாளி  தீர்ப்பு சொல்ல ,இரவு படுக்கையில் இளங்காளையாய்  செயல்பட இரகசிய கேள்வி நடத்தும்  இலட்சிய   நிகழ்ச்சிகளை  ஒளிபரப்பி நாசமாய் போகும் தமிழ் தொலைக் காட்சிகள் இந்திய  தொலைக்காட்சிகளின் இந்தி உணர்வை புரிந்து கொண்டால் சரி.)

--
பாலாஜி ,
கோவை .