புதன், 22 ஜூன், 2011

பிரிகேடியர் தீபன்

25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளையை பிறப்பிடமாக கொண்ட தீபனின்(வேலாயுதபிள்ளை பகீரதகுமார்) இயக்கப்பெயர் சிவதீபன்.இவர் சமயங்களில் தவபாலசிங்கம் என்றும் அழைக்கப்பட்டார். யாழ் மாவட்டம் தென்மராட்சியின் வரணிதான் தீபனின் பூர்வீகமாகும்.
சாவகச்சேரி இந்துக்கல்லூரியின் விஞ்ஞான பீட மாணவனாகவிருந்த தீபன் பெற்ற க.பொ.த உயர் தர பெறுபேறுகள் அவருக்கு இலகுவாக பல்கழைக்கழக இடத்தைப் பெற்றுத்தந்திருக்கும் ஆனால் வரலாற்றுக் கடமையை உணர்ந்து போராளியானார் தீபன்.
தென்மராட்சிப்பிரதேசத்தின் முதலாவது பொறுப்பாளராக விளங்கிய மேஜர் கேடில்ஸின்(மகாலிங்கம் திலீபன் - கண்டாவளை) இளைய மச்சினனாகிய தீபனை இயக்கத்தில் சேர்த்தது கேடில்ஸ் என்று கூறப்படுகிறது.
தீபனை இயக்கத்தில் சேர்த்த மேஜர் கேடில்ஸ்
விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02௧987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.
இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.
1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.
இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.
தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.
இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.
1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.
1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.
1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பிரிகேடியர் பால்ராஜ் பிரிகேடியர் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122ம்ம் ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.
ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.
இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.
இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.
1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.
1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.
ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.
இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.
2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.
அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18க்ம் நீளமான 'ள்' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.
கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.
25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 5ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.
சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜ் என்றால் எந்தவித சந்தேகங்களும் இன்றி சமர்க்களங்களின் துணை நாயகன் இந்த தீபன் அம்மான் தான். பால்ராஜ் எனும் பாசறையிலே வளர்த்தெடுக்க‌ப்பட்ட இந்த கண்டாவளை கண்டெடுத்த கண்மனி, பால்ராஜ் மே 2008ல் மறைந்தபோது அழுதபடியே சொன்ன வார்த்தைகள் இவை "என்னை அருகிலே வைத்திருந்து தளபதியாக வளர்த்தெடுத்த தளபதி, அவர் என் போர் ஆசான்."

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி லெப். கேணல் பொன்னம்மான்,விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பப் பிரிவுப் பொறுப்பாளர் கப்டன் வாசு,லெப்.சித்தார்த்தன்(கேணல் சங்கரின் சகோதரன்) ஆகியோர் வீரச்சாவடைய காரணமாகவிருந்த‌ 14-02௧987 அன்று கைதடியிலே இடம்பெற்ற‌ வெடி விபத்தில் தானும் காற்றோடு காற்றாகிப் போனார்.
1984 ன் முற்பகுதியில் தன்னை இயக்கத்தில் இணைத்துக்கொண்ட‌ பகீரதகுமார், ஆயுதப் பயிற்சி பெற்று தீபனாக மாறினார், இவருடைய தொடர்பாடல் குறிப்புப் பெயர் "தாங்கோ பாப்பா" ஆகும்.
இவர் புலிகளின் முன்னாள் துணைத்தலைவர் மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலராக நியமிக்கப்பட்டு பின்னர் பிரதான மெய்ப்பாது காப்பாளரானார்.
1987 ம் ஆண்டு யூலை 29 ம் திகதி இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் பின் இந்திய அமைதிப்படைக்கு எதிரான‌ அக்காலப்பகுதி சண்டையில், தீபன் கிளிநொச்சி இராணுவ பொறுப்பாளராகவும், பால்ராஜ் முல்லைத்தீவின் இராணுவ பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.
அக்காலத்தில் இந்தியப்படையினருக்கெதிரான அதிக தாக்குதல்கள் நடைபெற்ற மாவட்டங்கள் முல்லைத்தீவும் கிளிநொச்சியுமே ஆகும். இக்காலப்பகுதியில் தீபனின் இளைய சகோதரனாகிய வேலாயுதபிள்ளை சிவகுமாரும் போராட்டத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். தனது சகோதரனைப்போலவே வேகமாக வளர்ந்த கில்மன் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக நியமிக்கப்பட்டார். 1993ல் திருகோணமலைக்குப் பொறுப்பாளராக அனுப்பப்பட்ட கில்மன் 1994ல் நடைபெற்ற தவறுதலான வெடிவிபத்தில் லெப்.கேணல் கில்மனாக தன்னை ஆகுதியாக்கிக் கொண்டார்.
1988ம் ஆண்டின் பிற்பகுதியில் மன்னார் நீங்கலான வன்னிப்பகுதியின் இராணுவப் பொறுப்பாளராக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். துணை இராணுவப் பொறுப்பாளராக தீபன் இருந்தார். இந்த இரண்டு வீரர்களும் தமது போராளிகளை முன்னின்று வழி நடத்தி பல வெற்றிச் சமர்களுக்கு வித்திட்டார்கள்.
இந்திய அமைதிப்படை 1990ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஈழத்தை விட்டு அகன்றது. மீண்டும் ஜூன் மாதமளவில் இலங்கைப் படைகளுடனான 2ம் ஈழப்போர் ஆரம்பமானது. பால்ராஜின் தலைமையின் கீழ் புலிகள் பல வெற்றிகரமான தாக்குதல்களை மேற்கொண்டார்கள், அவற்றில் பிரதானமானவை மாங்குளம் மற்றும் கொக்காவில் முகாம் தகர்ப்பாகும்.
பால்ராஜும் தீபனும் 1991ல் மேற்கொள்ளப்பட்ட‌ ஆனையிறவு முகாம் மீதான ஆகாய கடல் வெளிச்சமரில் பங்கு பற்றி குறிப்பிடத்தக்களவான வெற்றியைப் பெற்ற போதும் முகாம் தகர்ப்பு என்ற இலக்கு எட்டப்படவில்லை.
1992ல் உருவாக்கப்பட்ட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் தளபதியாக பால்ராஜ் நியமிக்கப்பட்டார். தீபன் வன்னிப்பகுதியின் தளபதியானார். இவர்களின் இணை மண்கின்டிமலை மீதான இதயபூமி நடவடிக்கையில் பங்கு பற்றி புலிகளுக்கு மகத்தான வெற்றியை தேடித்தந்தது.
தீபனின் திறமையும் வீரமும் வெளிப்பட்ட இரு சமர்கள் யாழ்தேவி மற்றும் தவளைப்பாச்சல் ஆகும். ஆனையிறவிலிருந்து வடக்காக‌ யாழ்ப்பாணம் நோக்கிப் புறப்பட்ட யாழ்தேவியை இடை நடுவில் தடம்புறள வைத்த பெருமை தீபனையே சாரும். 1993 செப்டெம்பரில் இடம்பெற்ற இந்த இராணுவ நடவடிக்கையின் முதல் நாள் சண்டையிலேயே பால்ராஜ் காயம் காரணமாக களத்திலிருந்து அகற்றப்பட்டார். அதன் பின்னர் தீபனே முறியடிப்புச்சமருக்குத்தலைமை தாங்கினார்.
தீபனின் தந்திரத்தின்படி மண் கும்பிகளுக்குள் மணித்தியாலக்கணக்காக காத்திருந்த புலிகள் முன்னேறிய‌ இராணுவம் மிக அருகில் வந்ததும் திடீர்த் தாக்குதலைத்தொடுத்து அவர்களை நிலை குலைய செய்ததுடன் புலிகள் இரண்டு ரி‍ 55 டாங்கிகளை கைப்பற்றுவதற்கு வழி சமைத்துக்கொடுத்தது.
இந்த‌ இரண்டு ரி‍ 55 டாங்கிகளில் ஒன்றை மண்ணுக்குள் புதைத்து பயன்படுத்தியே இரண்டு டோரா பீரங்கிப் படகுகளை சாலைப்பகுதியில் ஒரே நாளில் புலிகள் தகர்த்து சாதனை புரிந்தனர்.
1993 நவம்பரில் நடைபெற்ற ஈருடகச் சமரான தவளைப்பாய்ச்சல் நடவடிக்கையில் பூநகரி முகாமை தீபன் தலைமையிலான போராளிகளும் நாகதேவன்துறை கடற்படைத்தளத்தை பானு தலைமையிலான போராளிகளும் தகர்த்தனர். இங்கே கைப்பற்றப்பட்ட 5 நீருந்து விசைப்படகுகளே கடற்புலிகள் தோற்றம் பெற்று பலம் பெற உறுதுணையாக இருந்தது என்றால் மிகையாகா.
1994ல் தீபன் யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டார். அக்காலப் பகுதியில் சந்திரிகா அம்மையார் தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும் புலிகளுக்கும் பேச்சு வார்த்தை நடந்தது. 1995ல் முறிவடைந்த பேச்சு வார்த்தை 3ம் ஈழப்போருக்கு வழி சமைத்தது.
1995ல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவத்தினரின் முன்னேறிப் பாய்தலுக்கெதிரான புலிப்பாய்ச்சலிலும் இடிமுழக்கம் நடவடிக்கைக்கெதிரான சண்டையிலும் தன் காத்திரமான பங்களிப்பை வழங்கினார்.
சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையை ஆரம்பத்தில் பிரிகேடியர் பால்ராஜ் பிரிகேடியர் சொர்ணம் தலைமையிலும் பின்னர் தீபன் பானு தலைமையிலும் புலிகள் எதிர்த்துப் போரிட்டனர். தீபன் தலைமையிலான போராளிகள் நவம்பர் 27 மாவீரர் நாள் முடியும் வரை யாழ்ப்பாணம் படையினர் கைகளில் வீழ்வதை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தினர்.
யாழ்ப்பாணத்தை விட்டு 1996 ஏப்ரல்‍ மே காலப்பகுதியில் வெளியேறிய புலிகள் வன்னியை தளமாக்க முடிவு செய்தபோது அதற்குப் பெருந்தடையாக இருந்தது முல்லைத்தீவு இராணுவ முகாம் ஆகும். அம்முகாமை அகற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் புலிகள். தீபனை அழைத்த தலைவர் முல்லைத்தீவு இராணுவ முகாம் மீதான ரெக்கியை ஆரம்பவிக்கவும் தாக்குதல் திட்டத்தை தீட்டவும் உத்தரவிட்டார்.
தீபனின் திறமையான திட்டத்தினால் 1996 ஜூலை 18ல் முல்லைத்தீவு இராணுவ முகாம் தகர்க்கப்பட்டபோது 1000க்கும் மேற்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இங்கே கைப்பற்றப்பட்ட இரண்டு 122ம்ம் ஆட்லறி பீரங்கிகளே பின்னாளில் புலிகள் மரபு ரீதியாக தமது இராணுவத்தைக் கட்டமைக்க உதவின.
ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை 1997ல் ஆரம்பிக்கப்பட்டபோது புளியங்குளத்தை தக்கவைக்கும் பொறுப்பு தீபனிடம் ஒப்படைக்கப்பட்டது. ஓமந்தையையும் நெடுங்கேணியையும் இலகுவாக கைப்பற்றிய இராணுவம் புளியங்குளத்தை கைப்பற்ற முடியாமல் மாற்றுப்பாதையில் கனகராயன்குளத்தையும் கரிப்பட்டமுறிப்பையும் கைப்பற்றியபோது புளியங்குளம் கைவிடப்படவேண்டியிருந்தது.
இதன்போது தீபனின் நம்பிக்கைக்குரிய தளபதிகளாக விக்கீஸ், அறிவு மற்றும் லோரன்ஸ் விளங்கினார்கள்.இந்தக்கூட்டணியின் கண்டு பிடிப்பான மண் அணைக்கட்டும் அகழியுமே இலங்கை இராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது என்பது யாவரும் அறிந்ததே.
இன்றைய தேச நிர்மாணம் மற்றும் கட்டமைப்பு அமைச்சராக இருக்கும் விநாயகமூர்த்தி முரளீதரன் என்கின்ற கேணல் கருணா ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கை காலத்தில் தானே வன்னிப்பகுதியின் கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டேன் என்று கூறி வருகிறார். ஆனால் அவர் தீபனுடன் இணைந்தே இந்தப் பொறுப்பை வகித்தார் என்பதும் இவர் தொடர்பாடல் மற்றும் ஒருங்கிணைப்பு வேலைகளை கவனித்தபோது ஒட்டுமொத்த பொறுப்பாளராக இருந்தவர் தீபன் என்பதையும் குறிப்பிடத்தவறிவிட்டார்.
1998ல் ஜெயசிக்குரு கைவிடப்பட முக்கிய காரணமாக இருந்தது, சத்ஜெய நடவடிக்கையின் மூலம் படையினர் கைப்பற்றி வைத்திருந்த கிளிநொச்சியை ஓயாத அலைகள்‍ 2ன் மூலம் புலிகள் மீளக்கைப்பற்றிக்கொண்டதே. இத்தாக்குதலிலும் தீபனின் பங்களிப்பு மிகக்காத்திரமானதாகும்.
1999ல் புலிகள் ஓயாத அலைகள் 3ஐ ஆரம்பித்து படையினர் ஜெயசிக்குரு இராணுவ நடவடிக்கையின் மூலம் 18 மாதங்கள் கஷ்டப்பட்டு பிடித்து வைத்திருந்த பகுதிகளை வெறும் மூன்றே வாரங்களில் மீளக்கைப்பற்றிக்கொண்டனர்.
ஓயாத அலைகள் 3ன் முத்தாய்ப்பாக அமைந்தது ஆனையிறவு முகாம் கைப்பற்றலாகும். 1991 ல் ஆகாய கடல் வெளிச் சமரில் பெற்ற பின்னடைவும் படிப்பினைகளும் பின்னாளில் உலகமே வியக்கும் வண்ணம் இடம்பெற்ற குடாரப்புத் தரையிறக்கத்துக்கு வழி சமைத்தது எனலாம்.
இத்திட்டத்தை தலைவர் சமர்க்களங்களின் நாயகன் பால்ராஜுக்கு விளக்கியபோது சற்றுத்தயங்கினாராம் பால்ராஜ். பின்னர் தீபன் செய்ய வேண்டிய கடமைகளை விளக்கியபின்பு தீபன் மீதிருந்த அசைக்கமுடியாத நம்பிக்கை காரணமாக களத்தில் இறங்கினாராம் பால்ராஜ்.
குடாரப்புத் தரையிறக்கம் இடம்பெற்றபின் செம்பியன்பற்றிலிருந்து வெற்றிலைக்கேணி கட்டைக்காடு வரை நிலை கொண்டிருந்த படையினரை விரட்டி அடித்தும் ஆனையிறவு முகாமை பின் பக்கமாக தாக்கியும் ஆனையிறவு முகாம் கைப்பற்றலில் முக்கிய பங்காற்றினார் தீபன்.
2000 ஏப்ரல் 24 ல் இடம்பெற்ற ஆனையிறவை மீளக் கைப்பற்றும் நோக்கிலான படையினரின் தீச்சுவாலை(அக்னிகீல) நடவடிக்கையை சின்னாபின்னமாக்கியது தொட்டு 2009 ஜனவரி வரை 55ம் மற்றும் 53ம் படையனியின் ஆனையிறவை மீளக் கைப்பற்றும் எத்தனையோ முயற்சிகளை தவிடு பொடியாக்கியவர் வட போர்முனைக் கட்டளைத்தளபதி தீபன்.
அதே போன்று கிளிநொச்சியை சுற்றி 18க்ம் நீளமான 'ள்' வடிவிலான மண் அணைக்கட்டு அமைத்து கிளிநொச்சியின் வீழ்ச்சியை பல மாதங்கள்(2009 ஜனவரி 1 வரை) தள்ளிப்போட்டவர் தீபன்.
கடைசியாக புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்தில் ஏப்ரல் 1ம் திகதி பல படையணித்தளபதிகளுடன் சேர்ந்து படையினருக்கெதிராக பாரிய முறியடிப்புச் சமர் ஒன்றைத் திட்டமிட்டார் தீபன். ஆனால் காலன் வேறு விதமாக திட்டமிட்டான் போலும். ஏப்ரல் 1ம் திகதி அன்றும் 2ம் திகதி அன்றும் தீபனுக்கு நெஞ்சிலே காயம் பட்டது.ஆனாலும் தொடர்ந்து போராடிய தீபன் எதிரியின் நயவஞ்சகமான நச்சுக் குண்டுத் தாக்குதலில் வீரகாவியமானார்.
25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த இந்தப் புயல் ஏப்ரல் மாதம் 5ம் திகதி புதுக்குடியிருப்பு ஆனந்தபுரத்திலே நிரந்தரமாக அடங்கிப் போனது.

புதன், 15 ஜூன், 2011

தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒளியேற்றுவோம் – சூன் 26 – மெரினா கடற்கரை


தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காகவும் இலங்கை இனவெறி கடற்படையால் கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்களுக்காகவும் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் நடத்த தமிழக இளையோரால் திட்டமிடப்பட்டுள்ளது.

சூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனாவில் ஒன்றுகூடுவோம். ஒளியேந்தி அஞ்சலி செலுத்துவோம்.

கொலைக்களம்* - சாட்சிகளற்ற யுத்தம் குறித்த மூன்று ஆவணப்பட சாட்சியங்கள

இலங்கை அரசு பத்திரிக்கையாளர்களை நாடுகடத்தியும் ஐக்கிய நாடுகள் சபையினருக்கு நிரப்பந்தம் கொடுத்தும் அவர்களை வெளியேற்றியும் சாட்சியமற்ற ஒரு யுத்தத்தை நடத்த விரும்பியது. என்றாலும், கைத்தொலைபேசியினதும் தொலைமதித் தொழில்நுட்பத்தினதும் அசாதாரணமான சக்தியை அதனால் வெளியேற்ற முடியவில்லை. எமது பல்லாண்டு கால யுத்தகள ஊடக அனுபவத்தில் நான் என்றும் பார்த்திராத, வலியுடன் பதிவுசெய்யப்பட்ட, மணிக்கணக்கிலான மிகக் கொடூரமான காட்சிப் பதிவுகளை நாங்கள் அகழ்ந்தபடி நடந்தோம். இலங்கையைப் பொறுத்து மட்டுமல்ல, சர்வதேசியச் சட்டங்கள் மீறப்படப்போகும் எதிர்காலத்திலும் கூட, ஐக்கிய நாடுகள் சபை செயல்படத் தவறுமானால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பது குறித்த உக்கிரமான கேள்விகளை இலங்கையின் கொலைக்களங்கள் நமக்குள் எழுப்புகிறது.

இயக்குனர் ஹலும் மக்ரே
இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம்
நான் உள்நாட்டு யுத்தங்கள் தொடர்பில் முன்னரும் அறிக்கையிட்டு வந்திருக்கிறேன். எண்பதுகளில் மத்திய அமெரிக்காவில் இடம் பெற்ற யுத்தங்கள் பலவற்றை நான் அறிக்கையிட்டிருக்கிறேன். ஆனாலும் இது போன்ற படுகொலை ஆதாரங்களைக் கொண்ட சிவில் யுத்தத்தை நான் காணவில்லை. அதுவும் அரசாங்கப் படையினராலேயே அவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவையெல்லாம் மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்கள்.
தொகுப்பாளர் ஜான்ஸ்நோ
இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம்
I
eelam_women_335வரலாற்று ரீதியில் கில்லிங் பீல்ட்ஸ் (killing fileds) எனும் ஆங்கிலச் சொல் எழுப்பும் அர்த்தம் ஒரு குறிப்பிட்ட நாட்டுடனும் ஒரு குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வுடனும் சம்பந்தப்பட்டது. சம்பந்தப்பட்ட நாடு கம்போடியா. சம்பந்தப்பட்ட நிகழ்வு 1976 முதல் 1979 வரை கம்போடிய சர்வாதிகாரியான போல்பாட்டின் கீழ் இடம்பெற்ற படுகொலை நிகழ்வு. கம்போடிய நாடு பாரிய நெல் வயல்களின் பரந்து விரிந்த நிலம். அந்த நெல் வயல்களிலெங்கும் 1976-1979 காலகட்டங்களில் ஆயிரக்கணக்கலான கொல்லப்பட்ட கம்போடிய மக்களின் மக்கிய உடல்கள் கிடந்தன. மழைச்சேற்றில் நனைந்தபடி நெற்கதிர்களுக்குப் பதில் மண்டையோடுகளும் எழும்புக்கூடுகளும் அந்த வயல்களில் சிதறிக் கிடந்தன.
20,000 வரையிலான இத்தகைய மரணவயல்களை போல்பாட் காலம் உருவாக்கியது. பூர்வீகக் கம்போடியர்களைத்; தவிரவுமான வியட்நாம் இனத்தவர், சீன இனத்தவர்,தாய் இனத்தவர், மலாய் இனத்தவர், சாம் இஸ்லாமிய இனத்தவர், கிறித்தவர், வைதீக புத்தவழிபாடு செய்வோர் என அனைத்துச் சிறுபான்மையினங்களையும் சேர்ந்த இருபது இலட்சம் வரையிலானவர்களும், கம்போடியக் கல்வியாளர்களும், அறிவுஜீவிகளும் போல்பாட் முன்வைத்த ‘பூஜ்ய வருடத்துக்குத் திரும்பும் கம்யூனிச மாதிரி’ச் சோதனைக்காகக் கொல்லப்பட்டார்கள்.
இந்தப் படுகொலைகளை பூஜ்ய வருடத்திலிருந்து துவங்குதல் (starting from zero year) எனும் கருத்தியலின் பெயரால் நிகழ்த்திய கொலைகாரன் போல்பாட், தனது இறுதிக் காலத்தில் விஷம் வைத்துக் கொல்லப்பட்டானா அல்லது கொள்ளை நோயில் மரணமுற்றானா என, எவ்வாறு மரணமுற்றான் என எவருக்கும் தெரியாத வகையிலேயே கம்போடியத் தாய்லாந்து எல்லைப்புறத்தில் செத்தொழிந்தான். வியட்நாமியப் படைகளால் அவன் பதவியிலிருந்து தூக்கிவீசப்பட்டு, அவன் மரணமுற்ற காலம் வரையிலும் அவனுக்குச் சீனாவும் அமெரிக்காவும் மனமொத்து ஆதரவளித்து வந்தன என்பது பிறிதொரு வரலாற்று முரண்நகை. இதுவே அன்றைய இவர்களது மனித உரிமை முகம்.
கம்போடியக் கொலைகள் நிகழ்ந்த அந்த நெல்வயல்களை கொலைவயல்கள் எனும் (killing fields) சொல்லால் அடையாளப்படுத்தினான் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்காக மொழிபெயர்ப்பாளராகச் செயலாற்றிய கம்போடியப் பத்திரிக்கையாளன் தித் பிரான். 1967-1969 வருடங்களிலான தித் பிரானது அனுபவங்களின் அடிப்படையில், 1984 ஆம் ஆண்டு ரோலன்ட் ஜோபே இயக்க பிரித்தானியத் திரைப்படத் தயாரிப்பாளர் டேவிட் பட்னம் தி கில்லிங்க் பீல்ட்ஸ் (the killing fields : 1984 : 140 minutes : united kingdom) எனும் திரைப்படத்தினை வெளியிட்டார். அது கம்போடியாவின் படுகொலை வயல்களைப் பற்றிய திரைப்படம். இதே டேவிட் பட்னம் மாவோவின் நீண்ட பயணம் குறித்தும் ஒரு முழு நீளத் திரைப்படம் எடுக்க முயன்று அது கைகூடாமல் போனது என்பதும் ஒரு துணைச் செய்தி. இந்தத் திரைப்பட நினவுகளை எழுப்பும் விதமாகவும் கம்போடியப் படுகொலைகளின் நினைவுகளை எழுப்பும் விதமாகவும் இப்போது இலங்கையின் படுகொலைவயல்கள் ( sri lanka's killing fileds : 2011 : 50 minutes : channel four : united kingdom) குறித்த ஆவணப்படத்தினை பிரித்தானியாவின் சேனல் நான்கு தயாரித்து வெளியிட்டிருக்கிறது.
கம்போடியாவின் படுகொலை வயல்களை ஒத்தது இலங்கையின் படுகொலை வயல்கள் என்பதனைத்தான் இந்த ஆவணப்படத்தின் தலைப்புச் சொல்கிறது. தமிழில் நெல்வயல்கள் என்பதற்கும் நெற்களம் என்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. வயல்களில் நெல் விளையும். களத்தில் நெற்கதிர்கள் அடிக்கப்பட்டு நெல்மணிகளாக ஆகிறது. தித் பார்ன் தனது சொற்றொடரால் சுட்டுவது, நெல் விளைகிற வயல்களில் அதற்கு மாற்றாக படுகொலை செய்யப்பட்டு உடல்கள் விளைந்தன என்பதனைத்தான். சேனல் நான்கு ஆவணப்படம் இதே அர்த்தத்தில்தான் இந்தச் சொல்லைப் பாவித்திருக்கிறது. ஆசிய நாடுகளில் பெரும்பாலுமானவை நெல்வயல்களால் நிறைந்தவைதான். தமிழர்களின் வாழ்வோடு கலந்தது நெல்வயல்கள். அந்தத் தமிழர்தம் வயல்களில் நெற்கதிர்களுக்குப் பதில் படுகொலை செய்யப்பட்ட அவர்களது உடல்கள் விளைந்தன என்கிறது சேனல் நான்கு ஆவணப்படம்.
II
2009 மே 18 ஆம் திகதி நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் பேரழிவின் இரண்டாம் ஆண்டினை ஒட்டி, பிரித்தானியாவின் பிபிசி தொலைக்காட்சி நிறுவனம் பரமேசுவரன் எனும் ஈழத் தமிழ் இளைஞரின் 2009 ஆம் ஆண்டு மே மாத்தில் லண்டன் பாராளுமன்ற முன்றிலில் நிகழ்ந்த உண்ணாவிரதம் குறித்த சர்ச்சைகளை மையப்படுத்தி ஒரு ஆவணப்படத்தினை (subramanyam parameswaran : 2011 : 50 minutes : bbc documentary சீ யு இன் கோர்ட் ( see you in court) எனும் தொடரின் பகுதியாக வெளியிட்டது. வளைகுடா நாடான கத்தாரில் இயங்கும் அல்ஜஜீரா தொலைக்காட்சி நிறுவனம் முள்ளிவாய்க்கால் பேரழிவின் பின்பாக முதன்முதலாக வன்னிசென்று எடுக்கப்பட்ட ஆவணச்செய்திப்படத்தினை பீப்பிள் அன்ட பவர் (people and power) எனும் தொடரில் ( sri lanka : war crimes : 2011 : 25 minutes : alzazeera : qatar) வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து சேனல் நான்கு தொலைக்காட்சி நிறுவனம் இலங்கைக் கொலைக்களம் எனும் ஆவணப்படத்தினை 2011 மே 03 ஆம் திகதி ஜெனீவா மனித உரிமைச் சபையிலும், அதே ஜூன் 14 ஆம் திகதி நள்ளிரவில் தனது தொலைக்காட்சி அலைவரிசையிலும் திரையிட்டது. இந்த மூன்று ஆவணப்படங்களும் வெளியிடப்பட்ட காலம் என்பது ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் இலங்கை மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் குறித்த அறிக்கை வெளியான சூழல் என்பதனையும் நாம் நினைவில் கொள்வோம்.
யுத்தம் உக்கிரமடைந்துகொண்டிருந்த ஏப்ரல் மாதத்தில், தனது தாயைப் பறிகொடுத்த ஈழத் தமிழரான பரமேஸ்வரன் போர்நிறுத்தம் கோரி பிரித்தானியப் பாராளுமன்றச் சதுக்கத்தில் 26 நாட்கள் உண்ணநோன்பை மேற்கொண்டார். வெளியுறவுத்துறைச் செயலர் டேவிட் மிலிபான்ட் தமது அரசு அதற்கான முயற்சிகளைச் செய்யும் என உறுதியளித்ததனையடுத்து அவர் உண்ணாநோன்பைக் கைவிட்டார். அன்றைய போராட்டங்களில் கலந்து கொண்ட உணர்ச்சிகரமான தமிழர்களினிடையில் அவர் ஒரு உதாரண இளைஞராகப் போற்றப்பட்டார்.
உண்ணா நோன்பு முடிந்து ஆறு மாதங்களின் பின், முள்ளிவாய்க்கால் பேரழிவு முடிந்து ஐந்து மாதங்களின் பின், இங்கிலாந்தின் வலதுசாரி மற்றும் நிறவாதப் பத்திரிக்கைகளான டெய்லி மெயில், ஸ்காட்லான்ட யார்ட் காவல்துறையினர் சொன்னதாக ஒரு அவமானகரமான ஒரு செய்தியை தனது நடுப்பக்கத்தில் இரண்டு பக்கச் செய்தியாக வெளியிட்டது. அந்தப் போராட்ட காலத்தில் ஸ்கட்லான்ட யார்ட் பாதுகாப்புக்காகச் செய்த செலவு 7 மில்லியன் பவுண்கள் என மதிப்பிடப்பட்டது. அந்தக் குறிப்பிட்ட காலத்தில் உண்ணாநோன்பிருந்த பரமேஸ்வரன் திருட்டுத்தனமாக மெக்டொனல்ட் சீஸ் பர்க்கர் சாப்பிட்டதாகவும், அதனை ஸ்காட்லான்ட யாரட் தமது ரகசியக் காமொவில்; பதிவு செய்திருப்பதாகவும் டெய்லி மெயில் செய்தி வெளியிட்டது. அந்தச் செய்தியை பிற்பாடு பிறிதொரு வலதுசாரி மற்றும் நிறவெறிப் பத்திரிக்கையான சன் தனது வலைத்தளத்தில் பதிவு செய்தது. தமது ஈழ இலட்சியத்தைக் கேவலப்படுத்திவிட்டதால் அதனது ஆதரவாளர்களிடம் இருந்து அவருக்கு கொலை மிரட்டல்கள் வரத்துவங்கின. விடுதலைப் புலிகள் எதிர்ப்பு இணையதளங்கள் இந்தச் செய்தியிலுள்ள நம்பகத்தன்மை, ஆதாரங்கள் எது பற்றியும் கவலைப்படாமல், இப்பத்திரிக்கைகள் வெள்ளை இனவாத மற்றும் நிறவெறிப் பத்திரிக்கைகள் என்பதனையும் மறந்து, பரமேஸ்வரன் மீதான அவமானத்தை மேலும் அசிங்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். இலங்கையிலிருந்து அரச ஆதவுச் சிங்களப் பத்திரிக்கைகளும் புகரிட புலிஎதிர்ப்பு இணையத்தளங்களும் இவ்விடயத்தில் ஒரே குரலில் பேசினர்.
வழக்குத் தொடுக்கும் வசதியற்ற பரமேஸ்வரன், வென்றால் வரும் பணத்தில் பகிரந்து கொள்வது-தோற்றால் வழக்குரைஞருக்கு எதுவுமில்லை எனும் அடிப்படையில் கார்ட்டர் ரக் சட்ட நிறுவனத்தினோடு இணைந்து டெய்லி மெயில்மற்றும் சன் பத்திரிக்கைகளின் மீது வழக்குத் தொடர்ந்தார். ஸ்காட்லான்ட யார்ட் தம்மிடம் அவ்வாறான ரகசிய வீடியோ பதிவுகள் எதுவும் இல்லை எனவும், தாம் அப்படியான செய்திகளை எவருக்கும் தெரிவிக்கவில்லை எனவும் அறிவித்தது. டெய்லி மெயிலும், சன் பத்திரிக்கையும் பரமேஸ்வரனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, வழக்குக்கான அனைத்துச் செலவுகளையும் ஏற்றுக்கொண்டன. அதனோடு பரமேஸ்வரனை அவமானப்படுத்தியதற்கான நஷ்ட ஈடாக இரண்டு பத்திரிக்கைகளும் 77,5000 பவுண்களை பரமேஸ்வரனுக்குக் கொடுத்தன. பரமேஸ்வரன் வழக்கு மன்றத்திலிருந்து வெளிவரும்போது புன்னகையுடன் வெளிவந்தார். விடுதலைப் புலிகளின் எதிர்ப்பாளர்கள் வெள்ளை இனவாத நிறவாதப் பத்திரிக்கைகளின் போக்கை தமது புலி எதிர்ப்பு அரசியலுக்காப் பாவித்தது என்பது ஒரு அவமானகரமான நிகழ்வாக இருந்தது. 
Tamil_demonstrator_Subram
அல்ஜஜீராவின் ஆவணப்படமும் சேனல் நான்கின் ஆவணப்படமும் எடுத்துக் கொள்ளும் விடயங்களில் ஒத்த தன்மையைக் கொண்டிருக்கின்றன. இரண்டு ஆவணப்படங்களும் ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் மனித உரிமை அறிக்கையில் சொல்லப்பட்ட இருதரப்புப் போர்க் குற்றங்கள் குறித்தும், இலங்கை அரசின் மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பேசுகின்றன. தனது ஆவணப்படத்திற்கான ஆதாரங்கள் எனும் அளவில் சேனல் நான்கு தனிப்பட்ட தமிழ் மக்களால் எடுக்கப்பட்ட கைத்தொலைபேசி ஆதாரங்களையும், போர்க் குற்றங்களில் ஈடுபட்ட இலங்கைப் படையினர் தமது போர் வெற்றிச் சின்னங்களாக எடுத்த கைபேசிப் பதிவு ஆதாரங்களையும், தமிழ்மக்களால் பொதுவாக எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்களையும், அதிகாரபூர்வமான இலங்கை அரசினதும் ராணுவத்தினதும் வீடியோ ஆதாரங்களையும் பயன்படுத்தி இருக்கிறது. 
அல்ஜஜீரா தொலைக் காட்சி 2011 ஆம் ஆண்டு மத்தியில் வன்னிமக்களிடம் எடுக்கப்பட்ட நேர்முக ஆதாரங்களையும், சேனல் நான்கு ஆவணப்படத்திலிருக்கும் கண்கட்டியபடி சுட்டுக்கொல்லப்படும் போராளிகள் குறித்த காட்சி ஆதாரங்களையும், இலங்கை அரசின் அதிகாரபூர்வ வீடியோ ஆதாரங்களையும் தமது ஆவணக் கட்டமைப்புக்காகப் பாவித்திருக்கிறார்கள். அல்ஜஜீரா ஆவணப்படத்துக்கும் சேனல் நான்கு ஆவணப்படத்திற்கும் ஆதாரங்கள் எனும் அளவில் ஒரு பாரிய வித்தியாசம் இருக்கிறது. அல்ஜஜீரா செய்தியாளர் 2011 ஆம் ஆண்டு மத்தியில் இலங்கை சென்று, வன்னியில் பாதிக்கப்பட்ட மக்களின் நேரடியிலான அனுபவ ஆதாரங்களைப் பதிவு செய்திருக்கிறார். கடைசிக் கட்டப் படுகொலைகள் நிகழ்ந்த, இதுவரை யாருமே சென்றிருக்காத முள்ளிவாய்க்கால் நீரப்பரப்புக்கு அருகாமையிலும் அவர் சென்று படம்பிடித்திருக்கிறார். அங்கு பாரிய மனிதப் புதைகுழிகள் இன்னும் இருக்கலாம் என்பதனையும் அவர் தெரிவிக்கிறார். 
இதுவன்றி யுத்தத்தில் ஈடுபட்ட இலங்கை ராணுவ அதிகாரிகள், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்ச, தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், அடையாளமற்ற தமிழ்க் குடிமகன் ரமணன் போன்றோரது நேர்முகத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார். சேனல் நான்கு ஆவணப்படத்தின் சொல்நெறி ஒரு ஆய்வு அறிக்கையின் நோக்கில் இருக்கிறது. சேனல் நான்கு ஆவணப்படத்தில் காட்டப்படும் உக்கிரமான குரூரமான ஆதாரங்கள் எதுவும் அல்ஜஜீரா ஆவணப்படத்தில் இல்லை. சேனல் நான்கு ஆவணப்படம் என்பது தாம் தமது தொலைக் காட்சி அலைவரிசையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கை தொடர்பாகக் காண்பித்திருத்து வந்திருக்கும் கொலை மற்றும் சித்தரவதைக் காட்சிகள் அனைத்தும் மெய்யானவை என்பதனை ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழு அறிக்கையும், தாம் நேர்கண்ட மனித உரிமையாளர்கள், இலங்கைக்கான ஐநா பிரதிநிதிகள், தமது ஆவணப்படக் காட்சிகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள் போன்றவர்களது கூற்றுக்கள் நிரூபித்திருக்கிறது எனவும் திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது. அல்ஜஜீரா ஆவணப்படம் செய்தி அறிக்கையாக இருக்க, சேனல் நான்கின் ஆவணப்படம் மெய்யான ஆதாரங்களைத் திட்டவட்டமாகப் புலப்படுத்திய ஆய்வறிக்கையாக இருக்கிறது. 
III 
அல்ஜஜீரா ஆவணப்படம் ஒரு சில காட்சிகளில் சில அரசியல் உண்மைகளை முன்வைக்கும் போக்கில், பொய்களைப் பேசும் சிங்களப் படை அதிகாரியுடனான உரையாடலையம், பாதுகாப்பு அமைச்சர் கோதபாய ராஜபக்சேவின் உரையாடலையும் இடைவெட்டி சில பிம்பங்களைக் காண்பிக்கின்றன. ஓரு படை அதிகாரி புதுக்குடியிருப்பில் மருத்துவ மனையில் படையினரின் ஷெல் தாக்குதல் நிகழ்ந்திருப்பதை தவிர்க்கவியலாமல் ஒப்புக் கொள்கிறார். பிற்பாடு படையினர் தாக்கியபோது நோயாளிகள் இருந்தார்களா என்பது தமக்குத் தெரியாது எனச் சொல்கிறபோது, புதுக்குடியிருப்பு படைத்தாக்குதலின் பின்பு எடுக்கப்பட்ட வீடியோ இடைவெட்டிக் காண்பிக்கப்படும்போது நோயாளிகள் மரணமுற்றிருப்பது காட்சிப்படுத்தப்படுகிறது. 
கோதாபாய ராஜபக்சேவினுடனான நேர்காணலில் துறைத்தேர்ச்சியாளர்கள் கண்கட்டியபடி சுட்டுக்கொல்லப்படும் போராளிகள் குறித்த காட்சிகள் உண்மையானது எனச் சொல்லியிருக்கிறார்களே எனச் செய்தியாளர் கேட்கிறார், கோதபாய, எங்களிடமும் துறைச்தேர்ச்சியாளர்கள் இருக்கிறார்கள், அது இட்டக்கட்டப்பட்ட பொய்யான பதிவு என நிரூபித்திருக்கிறார்கள் என்கிறபோது, தொழில்நுட்ப யுகத்தில் இதுவெல்லாம் சாதாரணம் என எகத்தாளமாகச் சொல்லிக்கொண்டு சுழல் நாற்காலியில் இருபுறமும் அசைகிறார். இடைவெட்டி கண்கட்டியபடி சுட்டுக்கொல்லப்படும் காட்சிப் பதிவு காண்பிக்கப்படுகிறது. 
பிறிதொரு காட்சியில் யுத்தப்பகுதியில் அகப்பட்ட பெண்கள் பேசுகிறார்கள். தமது கணவர் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டதாகவும், தமது மகனை இலங்கைப் படையினர் வைத்திருப்பதாகவும் ஒரு வறிய பெண் அரற்றுகிறார். பிறிதொரு பெண், ஒருபுறம் விடுதலைப் புலிகள் சுடுகிறார்கள் பிறிதொருபுறம் படையினர் சுடுகிறார்கள் என்கிறார். கடவுளே ஏன் எங்களுக்கு இந்த நிலைமை என அவர் அழுகிறார். தப்பிச் செல்ல முனையும் வெகுமக்கள் விடுதலைப் புலிகளால் சுடப்படும் காட்சிகள் இடைவெட்டிக் காண்பிக்கப்படுகிறது. 
மனித உரிமையாளர் பாக்கியசோதி சரவணமுத்துவையும், தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனையும் செய்தியாளர் சந்திக்கிறார். சிறிதரனையும் செய்தியாளரையும் படையினர் தொடர்வதால் செய்தியாளரால் அவரொடு எதுவும் உரையாட முடிவதில்லை. பிற்பாடு வீடியோ கானட்பரன்சில் சிறிதரன் மீது குண்டுவீசிக் கொல்ல நடந்த முயற்சியை அவர் செய்தியாளரோடு பகிர்ந்து கொள்கிறார். பாக்கியசோதி சரவணமுத்து விசாரணைகள் செய்யப்படாமல் நல்லிணக்கம் எப்படி சாத்தியப்படும் என்கிறார். கேள்விகளே கேட்டகப்படமுடியாத சூழலில் ஒற்றுமை எவ்வாறு சாத்தியம் எனவும் அவர் கேட்கிறார். 
விடுதலைப் புலிப்போரளிகளின் மறுவாழ்வு முகாம்களுக்கும் செய்தியாளர் செல்கிறார். அங்கிருக்கும் சிங்களப்படையினர், முன்பு தாம் தமிழரை வெறுத்ததாகவும், பிற்பாடு அவர்களது துயரங்களைக் கேட்டு அவர்களைப் புரிந்துகொண்டதாவும் இப்போது வெறுப்பு இல்லை எனவும் சொல்கிறார்கள். வியாபாரிகளின் கூட்டமொன்றைப் படையினர் கூட்டுகின்றனர். ஓரு தமிழ் வியாபாரி தான் புதிதாகக் கட்டிய வீட்டை படையினர் எடுத்துக்கொண்டனர் என முறைப்பாடு செய்கிறார். இங்கு வியாபாரம் தொடர்பான பிரச்சினைகளைத்தான் பேச வேண்டும் வேறு ஏதும் பேசக் கூடாது என்கிறார் படையதிகாரி. ஆவணப்படத்தின் இறுதி நடந்தவை குறித்த கேள்விகளும் புரிதலும் இல்லாமல் எவ்வாறு ஒற்றுமை சாத்தியப்படும் எனும் சரவணமுத்துவின் கேள்வியுடன் முடிகிறது. 
IV 
சேனல் நான்கின் இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம், யுத்தம் உக்கிரமாகத் துவங்கிய 2009 செப்டம்பர் காலப்பகுதி முதல் யுத்தம் முடிவுற்று 2009 மே மாதம் 23 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபைச் செயலாளர் பான் கி மூன் இலங்கைக்கு வருகை தரும் வரையிலுமான நிகழ்வகளை எடுத்துக்கொள்கிறது. யுத்தத்தின் முன்பான ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனவும், அவர்களது உயிருக்கு உத்திரவாதம் தர முடியாது எனவும் இலங்கை அரசு சொன்னதையடுத்து ஐக்கிய நாடுகள் பிரதிநிதி கோர்டன் வைஸ் வெளியேறுவது என முடிவெடுக்கிறார். மக்கள் அவர்களைப் போக வேண்டாம் என மன்றாடுகிறார்கள். அவர்கள் தம்மை விட்டுப் போனால் தாம் கொல்லப்படுவோம் என்கிறார்கள். கோர்டன் வைஸ் இந்நிகழ்வுகளைத் தனது காமெராவில் படம் பிடிக்கிறார். 
இலங்கைப் போர் நிலைமையின் முன்னுரையை அடுத்து, ஐக்கிய நாடுகள் சபையினர் இலங்கையிலிருந்து வெளியேறுவதுடன் ஆவணப்படம் துவங்குகிறது. யுத்தத்தைத் சுயாதீனமான சாட்சியில்லாமல் நடத்த இலங்கை அரசு தம்மை வெளியேற்றியது என்கிறார் வைஸ். மக்களைத் தாம் கைவிட்டுவிட்டோம் என்கிறார் அவர். கிளிநொச்சி வீழ்ச்சி, முள்ளிவாய்க்கால் படுகொலை என மக்கள் நகர்வதோடு ஆவணப்படமும் நிகழச்சிகளைப் பதிவு செய்து கொண்டு நகர்கிறது. 
இங்கிலாந்திருந்து தமது உறவுகளைப் பார்க்கச் சென்ற உயரியல் தொழில்நுட்ப மருத்துவத்துறை ஊழியரான வாணி குமார் மற்றும் டாக்டர். சண்முகராஜா ஆகியோரது அனுபவங்கள் விவரிக்கப்படுகிறது. உணவு இல்லை. தண்ணீர் இல்லை. மருந்துகள் இல்லை. சிகிச்சைக்கான உபகரணங்கள் இல்லை. கத்தியினால் ஆறுவயதுச் சிறுவனின் காயம்பட்ட கை கால் வெட்டியெடுக்கப்படுகிறது. அல்லவெனில் சிறுவன் மரணிப்பான். 
அவசரமாக மருத்துவமனையாக்கப்பட்ட ஆரம்ப பள்ளியின் மீது ராணுவம் திரும்பத் திரும்பத் தாக்குகிறது. கிளிநொச்சி முதல் முள்ளிவாய்க்கால் வரை மருத்துவமனைகளின் மீதான தாக்குதல் தொடர்கிறது. இவ்வகையிலான 65 தாக்குதல்கள் பதியப்பட்டது என கோர்டன் வைஸ் குறிப்பிடுகிறார். பாதுகாக்கப்பட்ட பிரதேசத்தில் அடைபட்ட நான்கு இலட்சம் மக்கள் மீது படையினர் தாக்குதல் தொடுத்திருக்கிறார்கள். முள்ளிவாய்க்காலில் ஒரு சதுர கிலோ மீட்டரில் இறுதியில் இருந்த மக்கள் ஒரு இலட்சத்து முப்பதாயிரம்; என்கிறது ஆவணப்படம். முள்ளிவாய்க்காலில் உணவுக்காக வரிசையில் நின்ற குழந்தைகளைக் குண்டுபொட்டுக் கொல்கிறது இலங்கைப் படை. எங்கும் சிதறிக்கிடக்கும் உடல்கள். இறந்தவர்களின் உறவினர்களது கதறல். மழைச்சேற்றில் இரத்தம் கரைந்து ஓடையெனப் பாய்கிறது. 
நிர்வாணமாக்கப்பட்ட நிலையில் பெண்களின் உடல்கள் வாகனத்தில் இழுத்துப் போடப்படுகின்றன. இழுத்துப் போடப்பட்ட ஒவ்வொரு பெண்ணையும் இலங்கைப்; படையினர் இழிவுபடுத்தி, குதூகலித்துச் சிரிக்கின்றனர். கைகள் கட்டப்பட்டுள்ள நிலையில் கொல்லப்பட்டுக் காணப்படும் பெண்களின் உடல்களைப் பார்த்துப் படையினர் சிரிக்கும் காட்சிகளை ஏனைய படையினர் படம் பிடிக்கின்றனர். அவளின் மார்புகளை அறுக்க வேண்டும் போலிருக்கிறது என்கிறான் ஒருவன். இது கொழுத்த உடல் என்கிறான் ஒருவன். கொல்லப்படுவதற்கு முன்னர் அப்பெண்கள் படையினரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. செல்லிடத் தொலைபேசி மூலம் படம்பிடிக்கப்பட்ட மற்றுமோர் காட்சியில் ஒரு பெண் மண்டியிட்டு மன்றாடுவதும், அதேவேளை அவரை எப்படி கொல்ல வேண்டும் எனப் படையினர் பணிக்கப்படுவதும் பதிவாகியுள்ளது. அடுத்த காட்சியில் அவரது மூளை வெளியில் தள்ளப்பட்டுள்ளது காட்சியாகிறது. 
sri_lanka_executionsஇலங்கைப் படைத்தரப்பினர் தமது நடவடிக்கைகளை கைத் தொலைபேசி மூலம் படம்பிடித்து பதிவு செய்துள்ளனர். சிறிலங்கா படையினரால் கைத்தொலைபேசி மூலம் படம்பிடிக்கப்பட்ட காணொளிகளே மிக மோசமானவை. கைதிகளைக் கொடுமைப்படுத்துவதை அவர்கள் படம் பிடித்துள்ளனர். காணொளிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஒளிப்படங்கள் உள்ளன. அவற்றில் குழிகளிலும், நீண்ட வரிசைகளிலும் கொல்லப்பட்டவர்களின் உடலங்கள் காணப்படுகின்றன. பலர் கட்டப்பட்ட நிலையிலும், பலர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையிலும் காணப்படுகின்றனர். எறிகணை வீச்சிலோ அன்றி போர் நியமங்களுக்கு உட்பட்ட நடவடிக்கைகளிலோ கொல்லப்பட்ட உடலங்களாக அவை தெரியவில்லை. ஒரு சிறு குழு சிறுவர்களின் உடல்கள் குழியில் காணப்படுகின்றன. கைதிகள் உயிருடன் காணப்படுகின்றனர். சில கைதிகள் இம்சைப்படுத்தப்பட்டும், பின்னர் கொல்லப்பட்டும் காணப்படுகின்றனர். முதலில் ஒரு இளைஞன் மார்பில் கத்தியினால் கீறப்பட்டு இரத்தம் கொட்ட மன்றாடுகிறான். பிறிதொரு காட்சியில் அவனது மரணித்த உடல் குழிக்குள் கிடக்கிறது. 
ஷெல் விழுகின்ற போது வெறும் மூன்றடி பதுங்குகுழிகளே சிறிய பாதுகாப்பை வழங்குவனவாக இருக்கின்றன. பெரியவர்கள் சிறுவர்களின் மேல் படுத்து அவர்களைக் காப்பாற்ற முயல்கி;றார்கள். தரை மட்டத்தற்குச் சிறிது கிழேயே தலையை வைத்துக் கொள்கிறார்கள். சிலர் சிறிய கமெராவை வைத்து இச்சூழலிலும் படம் பிடிக்கிறார்கள். குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்குகுழிக்குள் இருந்த பெண் பதட்டத்துடன் அரற்றுகிறாள். தயவு செய்து பங்கருக்குள் வந்து விடுங்கள். வீடியோ எடுத்துக் கொண்டு நிற்காதீர்கள் என அவள் கத்துகிறாள். இந்த வீடியோவை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள், எல்லோரையுமே அவர்கள் கொன்றொழிக்கும் போது என்கிறாள் அப்பெண்.. 
சில வேளைகளில் சாதாரண வீட்டுத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் கமெரா பயன்படுத்தப்பட்டிருக்கிறது. சில வேளைகளில் தொலைபேசிகளில் உள்ள கமெராவினால் எடுக்கப்பட்டிருக்கிறது. இலங்கை ஆயுதப்படைகளின் போர்க்குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விகாரமான பல காணொளிக்காட்சிகள் புகைப்படங்கள் என்பன அவற்றை மேற்கொண்டவர்களாலேயே எடுக்கப்பட்டிருக்கின்றன. அவர்கள் தங்களது கைத்தொலைபேசியில் இவற்றைப் பதிவு செய்திருக்கிறார்கள். 
தனது மகன் தன்னெதிரில் மருத்துவ வசதியின்றி மரணமுறுவதை ஒரு தந்தை சொல்கிறார். தானும் தனது மகளும் தம்மைக் காப்பாற்றிக் கொள்ள படையினரின் பாலியல் வேட்கைக்கு உட்படுத்தபட்டதை கண்ணீருடன் விவரிக்கிறார் தாய். இழுத்துச் செல்லப்பட்ட பெண்களது ஓலமும் பிற்பாடு துப்பாக்கி வெடிக்கும் சப்தங்களும் கேட்டதாக அவர் சொல்கிறார். மகிந்தவும் கோதபாயவும் குதூகலத்துடன் பரஸ்பரம் வணக்கம் சொல்லிக் கொள்கிறார்கள். சரணடைய வந்த நடேசனதும் புலித்தேவனதும் இரத்தம் உறைந்த உடல்கள் காட்சிகளாகின்றன. உயிருடன் விசாரணை செய்யப்படும் விடுதலைப்புலிகளின் தளபதி ரமேஷ் பிறிதொரு காட்சியில் சீருடையில் கொல்லப்பட்டுக் கிடக்கிறார். 
மிகவும் கோரமான காட்சிகள் பெண்போராளிகள் கொல்லப்படும் காட்சிகள். அவர்களைப் பெயர்சொல்லி அடையாளப்படுத்த சொற்கள் எம்மிடம் இருக்க முடியாது. நாய்களின் கோரைப் பற்களால் குருதி கொப்பளிக்கக் குரல் வளை அறுக்கப்படுதலை விடவும் வெங்கொடுமை வாய்ந்த, சிதைந்து சிதறிக்கிடக்கும் எமது சகோதரியரை அக்கோலத்தில் எவரும் எம்மில் ஒரு நொடியும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. தண்டிக்கப்படாத குற்றங்கள் மறுபடியும் காயங்களாகித் திரும்பும் எனும் சொல்லால் இதனைக் குறிப்பிடுகிற மனித உரிமையாளரின் சொற்களே இங்கு எனக்கு ஞாபகம் வருகின்றன. இருண்ட வனாந்தரங்களில் இரத்தப் பசிகொண்டலையும் நாவுகள் தொங்கிய நரிகள் கண்முன் வந்துபோகின்றன. ஆவணப்படத்தின் படத்தின் கடைசிப் பதினைந்து நிமிடங்களை விவரிக்க - அது நிஜமெனத் தெரிந்த பின்னும் விவரிக்க - மறுத்து எனது வார்த்தைகள் மரணித்துப் போகட்டும் எனவே நான் விரும்புகிறேன். 
IV 
இலங்கையின் கொலைக்களம் ஆவணப்படம் திரையிடப்படுவதற்கு முன்னால் பிபிசி ரேடியோ நான்கு உள்பட, பிரித்தானியாவின் புகழ்மிக்க பத்திரிக்கைகளான கார்டியன்,இன்டிபென்டன்ட் உள்பட இந்த ஆவணப்படம் இத்தனை குரூரங்களுடன் சித்திரவதைகளுடன் இப்படியே திரையிடப்படத்தான் வேண்டுமா எனும் விவாதங்கள் பலமாக எழுந்தன. பாசிஸ்ட்டுகளின் சித்திரவதைகளையும் படுகொலைகளையும் ஞாபகமூட்டுமாறு எடுக்கப்பட்ட இத்தாலியக் கலைஞன் பாவ்லோ பசோலினியினது ஸலோ படமும் இதே விதமான விவாதத்திற்கு உள்ளானது. மிக நீண்ட காலங்களின் பின்பே அது முழுமையாப் பிரித்தானியாவில் திரையிடப்பட்டது. பஸோலியின் படம் புனைவுப்படம். இலங்கையின் கொலைக்களம் நிஜவாழ்வினை உலுக்கும் ஆவணங்களின் தொகுப்பு. திரைப்படக் கலைஞனுக்கு இது ஆத்மவேதனை தரத்தக்க ஒரு தேர்வாகவே இருக்க முடியும். மனித குலத்தின் மீது நம்பிக்கை வைத்துத்தான் இதனது படைப்பாளிகள் இந்த ஆவணப்படத்தினை முழுமையாக உள்ளவாறே வெளியிட்டிருக்கிறார்கள். அவர்கள் இந்த முடிவுக்கு வந்து செரந்ததற்கான தமது நியாயங்களையும் தெளிவாகப் பதிவு செய்திருக்கிறார்கள் : 
இத்திரைப்படம் ஒரு குழப்பத்தை உருவாக்கக்கூடும். ஏனெனில் இத்திரைப்படத்தில் வரும் காட்சிகள் மிகவும் பயங்கரமானவையாக மையநீரோட்டத் தொலைக்காட்சிகளில் முன்னொரு போதும் ஒளிபரப்பாகாதவையாக இருக்கின்றன. ஆனால் நாங்கள் நம்புகிறோம் இது இதற்குப் புறம்பான வேறொரு காரணத்திற்காக நினைவு கூரப்படும். நாங்கள் நம்புகிறோம் தங்களுடைய சொந்த மக்களையே படுகொலை செய்தவர்களை இது நினைவூட்டும். அத்தோடு ஐநா, சர்வதேச சமூகம், உலகின் அதிகார சக்திகள் என்பவற்றிற்கு இவை முக்கியமானவை. அதுமட்டுமன்றி நவீன தொழில் நுட்பங்களின் சாத்தியப்பாடுகளையும் இது வெளிப்படுத்தி நிற்கிறது. அதாவது போர்க்குற்றங்களையோ அல்லது மனிதத்துவத்திற்கெதிரான நடவடிக்கைகளையோ இரகசியமாகச் செய்து விட்டுத் தப்பிவிட முடியாது. இப்போதிருந்தே பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பாகவும் பாதிப்புக்குள்ளாக்கியவர்கள் தொடர்பிலும் விடயங்கள் பதிவு செய்யப்பட்டுக் கொண்டே இருக்கும். இது முதற் கட்டம். இரண்டாவது கட்டம் இத்தகைய அச்சம் தருகிற ஆதாரங்கள் புறக்கணிக்கப்பட முடியாதவை என்பதுதான். இந்தக்காட்சிகள் இவ்வாறான காட்சிகளை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள்; ஏற்றுக் கொண்டுள்ள சாதாரண எல்லைகளை இன்னும் உந்தித்தள்ளும். 
இலங்கையின் உள்நாட்டுப் போரின் போதும், போருக்குப் பின்னரும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்திற்கு எதிரான குற்றங்களைச் இலங்கை அரசாங்கம் புரிந்திருப்பதற்கான வலிமையான ஆதாரங்கள் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை நிபுணர்கள் குழு ஏற்கெனவே தெரிவித்துள்ளது. 40,000 வரையான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதாக நிபுணர்கள் குழு நம்புகின்றது. பாரிய அளவிலானதொரு போர்க்குற்ற விசாரணைக்கு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. எதுவுமே முன்னெடுக்கப்படவில்லை. என்ன நடந்தது என்பதைக் கண்டறிவதற்கு ஊடகவியலாளர்களையோ, ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளையே சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்கவில்லை. கொடுமைகளை இழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்துவதற்குரிய அனைத்துலக பொறிமுறை அவசியம் என்பதை வலியுறுத்தும் நோக்கில் எமது ஆவணப்படம் அமைந்திருக்கிறது. 
இது தான் இவை பற்றி உரக்கப் பேசுவதற்கான சந்தர்ப்பம். தலைக்கு மேலால் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் அச்சமூட்டும் வகையில் ஒலியெழுப்பிக் கொண்டு வருகையில் எந்தக் கருணையுமேயின்றி கடுமையான ஆட்லறி ஷெல் தாக்குதல்களை இலங்கை இராணுவம் மேற்கொண்டு கொண்டிருக்கையில் அச்சம் கொண்ட தமிழ் குடும்பங்கள் ஆழமற்ற பதுங்கு குழிகளில் நெருக்கியடித்துக் கொண்டு உயிரைக் கையில் பிடித்தபடி இருக்கிறார்கள். ஐநாவும் ஏனைய மனித உரிமை அமைப்புக்களும் அங்கிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டன. சர்வதேச ஊடகங்கள் அங்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. விமர்சனபூர்வமாக இருந்த உள்ளூர் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். காணாமல் போயினர். அஞ்ஞாதவாசம் போயினர். உலகம் அங்கிருந்து தூர வைக்கப்பட்டது. 
தடுத்து வைக்கப்பட்டவர்களையும் வாய்ப்பூட்டுப் போடப்பட்டவர்களையும் பச்சை இரத்தம் தெறிக்க படுகொலை செய்யப்படுபவர்களையும் இதில் நீங்கள் காணலாம். அப்பாவிப் பொதுமக்கள் தற்காலிக வைத்தியசாலைகளின் தரைகளில் மரணிக்கும் அவலத்தையும் இதில் நீங்கள் காணலாம். இலங்கை அரசின் மருந்துப் பொருட்களுக்கான தடையினால் அவர்கள் இறக்கிறார்கள். இவ்வாறான வழிமுறையின் மூலம் தான் மக்களை இதில் சிரத்தையுடன் கவனம் கொள்ள வைக்க முடியுமா? இந்த படங்களைக் காட்டுவது சரியான வழிமுறை தான் என்று நாங்கள் நம்புகிறோம். 
இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஐநாவின் நிபுணர் குழு இலங்கை அரசாங்கத்தாலும் விடுதலைப் புலிகளாலும் போர்க்குற்றங்களும் மனிதத்துவத்திற்கு எதிரான குற்றங்களும் இழைக்கப்பட்டுள்ளதாகவும் அவை தொடர்பில் விசாரணை நடாத்த ஒரு சர்வதேசப் பொறிமுறை ஒன்றை பான் கீ மூன் உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்திருந்தது. ஆனால் இது வரை அது மேற்கொள்ளப்படவில்லை. அதற்கான அதிகாரம் தனக்கு இல்லையென அவர் சொல்கிறார். அது விவாதத்திற்குரியது. ஆனால் ஐநாவின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கும் மனித உரிமைக் கவுன்சிலுக்கும் இது தொடர்பில் அதிகாரமுள்ளது. ஐநா மீளவும் இதில் தோல்வியடையுமாயின் ஒவ்வொரு கொடுங்கோல் ஒடுக்குமுறை ஆட்சியாளருக்கும் தெளிவான ஒரு செய்தி கிடைக்கும் : உங்களுக்கு வேண்டுமானால் உங்களுடைய சொந்த மக்களையே நீங்கள் சட்டத்திற்குப் புறம்பாகப் படுகொலை செய்யலாம். அதற்கான தண்டனை உங்களுக்குக் கிடைக்கப் போவதில்லை. அதிலிருந்து நீங்கள் தப்பி விடுவீர்கள் என்பது தான் அந்தச் செய்தி. 
கண்கள் கட்டபட்டு சுட்டுக்கொல்லப்படும் ஆதாரங்களான காணொளிக்காட்சிகள் ஐநாவின் சட்டத்துக்குப் புறம்பான படுகொலைகள் மற்றும் மரணதண்டனைகள் தொடர்பான ஐநாவின் விசேட பிரதிநிதி கிறிஸ்ரொப் ஹெய்ன்ஸ் ஆல் போர்க்குற்றங்கள் என வரையறுக்கப்பட்டிருக்கிறது. போர்க்குற்றங்கள் மற்றும் போரின் பின்னான படுகொலைகள் தொடர்பான காணொளிகள் போலியானவை என சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. காணொளி தடய நிபுணர்கள் மற்றும் மருத்துவ வல்லுனர்களால் உறுதிப்படுத்தப்பட்டவற்றையும் சிறிலங்கா அரசாங்கம் மறுத்து வருகின்றது. 
விடுதலைப் புலிகளே மக்களைக் கொன்றதாக சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்து வருகின்றது. விடுதலைப் புலிகளும் மக்களைக் கொன்றுள்ளார்கள். ஆனால் 40,000 பொது மக்களை அவர்கள் கொல்லவில்லை. வேறு சக்தியே இத்தனை ஆயிரம் மக்களைப் படுகொலை செய்தது.  
படுகொலைகள் நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டமையை இங்குள்ள அனைத்து ஆதாரங்களும் வெளிப்படுத்துகின்றன. இது குறித்து என்ன சிந்திப்பது என்பதை உங்களுக்கு நாங்கள் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்களே பார்த்து மதிப்பிட்டுக் கொள்ளுங்கள். இவ்வகையான கொடுமைகளை இழைத்தவர்கள் நீதியின் முன் நிறுத்துவதற்குரிய அனைத்துலக பொறிமுறை அவசியம் என இந்த ஆதாரங்கள் உங்களைச் சிந்திக்க வைக்கும்…. 
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
*சேனல் நான்கு ஆவணப்படத்தின் தலைப்பு கொலைவயல்கள் என்பதனையே நினைவுறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கில்லிங் பீல்ட்ஸ் திரைப்பட வரலாற்றையும் கம்போடியப் படுகொலைகளையும் அறிந்தவர்களுக்கு கம்போடிய-ஈழப் படுகொலைகளுக்கு இடையிலான ஒப்பீட்டைப் புரிந்து கொள்ள முடியும். தமிழ் இணையம் மற்றும் எழுத்துச் சூழலில் திரும்பத் திரும்பவும் கொலைக்களம் எனும் சொல்லே பாவிக்கப்பட்டிருப்பதால், தொடர்பாடல் கருதி நானும் கொலைக்களம் எனும் சொல்லையே கட்டுரை நெடுகிலும் பாவித்திருக்கிறேன். கட்டுரையில் பாவிக்கப்படும் சேனல் நான்கு ஆவணப்படம் குறித்த பல்வேறு பின்னணிச் செய்தி விவரங்கள் ஆங்கில மூலங்களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களில் இருந்து எடுத்தாளப்பட்டிருக்கின்றன. குளோபல் தமிழ் நியூஸ் மற்றும் பொங்குதமிழ் இணையதளங்களில் வெளியான இந்தக் குறிப்புகளை மொழிபெயர்த்த முகம் தெரியாத மொழிபெயர்ப்பாளர்களுக்கு - மொழிபெயர்ப்புக்கான எனது உழைப்பை மிச்சப்படுத்திய பெறுமதிமிக்க அந்த நண்பர்களின் உழைப்புக்கு - எனது மனமுவந்த, கனிவான நன்றி.
------------------------------------------------
- யமுனா ராஜேந்திரன் ( rajrosa@gmail.comஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் )
with thanks to globaltamilnews.net

வெள்ளி, 3 ஜூன், 2011

முதன்மை எதிரியை எதிர்க்காமல்...




எதிரி என்றவுடனேயே மட்டைப்பந்து (கிரிக்கெட்) சுவைஞர் (ரசிகர்)களுக்கு மட்டுமல்ல, இந்திய விடலைகளுக்கெல்லாம் கூட, பாக்கிசுதான் தான் நினைவுக்கு வருகிறது.
இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். போன்றவை மட்டுமல்ல காங்கிரசுக் கட்சியும் அந்தவகை அரசியலைத்தான் பரப்பி வருகிறது.
இந்திய ஆண்டைகள் அவ்வாறு திட்டமிட்டுப் பரப்பும்போது, அடிமைப்பட்டிருக்கிற நம் தமிழகக் குமுகத்திற்கு எதிரிகள் யார் யார் என்று நாம் அறிந்து கொள்வது முகாமையானது.
நமக்கு எதிரியேஇல்லை, நாம் எல்லோரிடமும் ஒரே வகையில் அன்பு செலுத்தக் கூடியவர்கள்தாம் என்று சிலர் எண்ணிக் கொண்டிருக்கலாம்.
ஆனால் அது உண்மையில்லை.
என்நண்பனைத் துன்புறுத்தியவனிடத்திலும், என் நண்பனிடத்திலும் நான் ஒரே வகையில்தான் அன்பு செலுத்துவேன் என்று ஒருவன் சொன்னால் அதை உண்மை என்று ஏற்க முடியுமா?
அதாவது நண்பனைத் துன்புறுத்தியவனுக்குச் சார்பானவனாகவே அவனைக் கருத முடியும்.
துன்புறுத்தலை அவன் தடுத்திருக்க வேண்டும். அல்லது துன்புறுத்தியவனைக் கண்டித்திருக்க வேண்டும்.
இரண்டும் செய்யாமல் அமைதியாக இருப்பதால், அவனை நடுநிலையானவன் என எண்ண முடியாது. துன்புறுத்தியவனுக்குச் சார்பானவனாகவே எண்ண வேண்டியிருக்கிறது.
இந்த இடத்தில் அடிபட்டவன் நிலையிலிருந்து பார்க்கையில், அவனைத் தாக்கியவனை எதிர்மையானவனாகவே எண்ண முடியும்.
ஆக, ஒவ்வொரு செயலுக்குள்ளும் ஓர் உடன்பாடும், ஓர் எதிர்மையும் இருக்கவே செய்கிறது.
முரண்பாடுகள் இல்லாமல் இயக்கம் இல்லை. இயக்கம் என்றிருந்தாலே அதில் முரண்பாடுகளை அறிய முடியும்.
முரண்பட்ட இருவினைகளில் ஒன்றுக்கு ஒன்று சார்பாகவும், மற்றதற்கு மற்றது சார்பாகவும் இருப்பதே இயற்கை.
சார்பற்ற ஒன்றாக எதையும் கூற முடியாது.
அவ்வகையில் எதை ஒருவர் சார்ந்திருக்கிறார் என்பதேகேள்வி. அதிலிருந்தே அவரின் அரசியலை, பண்பை, வாழ்க்கைப் போக்கை அளவிடமுடியும்.
கூலி உழவர்களைக் கொடுமைப்படுத்தும் நிலவுடைமை ஆண்டையின் ஆளுமைப் போக்குக்குச் சார்பாக இருக்கப் போகிறோமா அல்லது கூலி உழவர்களின் மீதான கொடுமைகளைக் கண்டித்து நிலவுடைமை ஆளுமையை எதிர்க்கப் போகிறோமா?
இப்படித்தான் குமுகத்தின் மீதான அவலங்களைக் கணிக்கவும், அவ்வகை அவலங்களை எதிர்த்துப் போராடுவதன் நோக்கமும் ஆக இரு வேறு சார்பு நிலைகள் தோற்றங் கொள்கின்றன.
உழைக்கும் பெருவாரியான மக்களின் பக்கம் இருந்து மக்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள் மக்கள் போராளிகளாகவும் ஆண்டைகளுக்காகவும் இருந்து ஆண்டைகளுக்குச் சார்பாக இயங்குகிறவர்கள் ஆண்டை வகுப்புச் சார்பினராகவும் கணிக்கப்படு கிறார்கள்.
குமுக அமைப்பில் இப்படியாக நிறைய முரண்பாடுகள் உண்டு. ஒரு குமுகத்திற்குள் ஒருவகை முரண்பாடு மட்டுமே இருப்பதில்லை. பல முரண்பாடுகள் இருக்கின்றன.
தமிழ்க் குமுகத்தை எடுத்துக் கொண்டால் இந்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் முரண்பாடு உள்ளது. வல்லரசுகளுக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் முரண் உள்ளது. வெளிநாட்டு முதலாளிகளுக்கும் தமிழ்த் தேச முதலாளிகளுக்கும் முரண்பாடு உண்டு. உலகப் பெரு வணிகர்களுக்கும், தமிழக வணிகர்களுக் கும் இடையில் முரண் உண்டு. தமிழக நிலவுடைமை யர்க்கும் கூலி உழவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் உண்டு. அண்டை இன அரசுகளுக்கும் தமிழக மக்களுக்கும் பகை முரண்கள் உண்டு.
ஆக மொத்தத்தில் இப்படிப் பல முரண்கள் தமிழகக் குமுகத்திற்குள் நிலவிக் கொண்டுதான் உள்ளன.
இவற்றில் எல்லா முரண்களுமே எதிர்க்கப்பட வேண்டியவைதாம். தீர்க்கப்பட வேண்டியவைதாம். என்றாலும் எதை முதலில் தீர்ப்பது எதை அடுத்துத் தீர்ப்பது என்று திட்டமிட்டுச் செயல்படுவதன் மூலமாகவே படிப்படியாக முரண்களைத் தீர்க்கமுடியும்.
தமிழகத்தைப் பொறுத்த அளவில் தமிழக மக்களின் உழைப்பைச் சுரண்டிக் கொள்ளையடித்துச் செல்லும் பன்னாட்டுக் கொள்ளையர்களை விரட்ட வேண்டி யிருக்கிறது. தமிழ்த் தேச உரிமைகளை நசுக்கும் இந்திய வல்லாட்சியின் வாலறுக்க வேண்டியிருக் கிறது. தமிழகத்திற்குத் தண்ணீர் தர மறுக்கும் அண்டை தேச அரசுகளைப் பணிய வைக்க வேண்டியிருக்கிறது...
இப்படியாகத் தமிழ்த் தேச உரிமைகளை மீட்க தமிழ்த் தேசக் குடியரசை நிறுவ நூற்றுக்கணக்கான வேலைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது.
அவ்வகையில் நூற்றுக்கணக்கான எதிர்மை ஆற்றல்களையும் ஒருசேர ஒரே நேரத்தில் எதிர்த்துப் போராட முடியுமா? அப்படிப் போராடி வெல்ல முடியுமா?
தந்தைக்கும் மகனுக்கும் மனவருத்தம் ஏற்பட்டு இருவரும் பேசாமல் இருக்கும் ஒரு வீட்டிற்குள் நுழைந்து விடுகிற திருடன் ஒருவனைப் பிடிக்க வேண்டும் என்றால், தந்தையும் மகனும் தங்களுக் கிடைப்பட்ட முரண்களை விட்டுக் கொடுத்து இணங்கித்தான் பிடிக்க வேண்டும். மாறாக அந்தநேரத்தில் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டு, உங்களுக்கு வேண்டுமானால் திருடனை நீங்கள் பிடித்துக் கொள்ளுங்கள், நான் துணைக்கு வரமாட்டேன் என மகனும், நீ வேண்டுமானால் திருடனைப் பிடித்துக் கொள் நான் உதவ மாட்டேன் எனத் தந்தையும் தங்கள் முரணை முதன்மைப்படுத்திக் கொள்வார்களானால் என்ன ஆகும்? அங்கு நலன் அடைபவன் திருடனாகத்தானே இருக்க முடியும்?
அதுபோல்தான் குமுகத்தில் நிலவும் பல முரண்பாடுகளில் எதை முதலில் தீர்ப்பது எதை அடுத்துத் தீர்த்துக் கொள்வது என்கிற கணிப்பு தேவை.
எதை முதலில் தீர்வுக்கு எடுப்பதால் மற்ற முரண்பாடுகளுக்கு ஆக்கம் விளைந்துவிடாமல் இருக்கும் என்று அளவிட்டு முதன்மை முரண் பாட்டைத் தேர்வு செய்ய வேண்டும்.
எனவே முரண்பாடுகளில் எது முதன்மை முரண்பாடு, எதை அடுத்த முரண்பாடாகத் தீர்ப்பது என்பதில் கூர்த்த அரசியல் ஆய்வு தேவை.
எல்லாமே தமிழ்த் தேச நலனுக்கானதாக இருக்கும்போது, எதை முதலில் தீர்த்தால் என்ன என்று சிலர் எண்ணலாம்.
அப்படி எண்ணுவது அறியாமை வயப்பட்டதே. திருடனுக்கு ஊதியத்தை ஏற்படுத்தித் தருவதைப் போன்றதே.
ஒரு தேசத்தின் விடுதலைக்காக முதன்மைப் படுத்தித் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் சில இருக்கும்.
தேசத்தின் விடுதலைக்குப் பின்பாகத் தீர்க்க வேண்டிய சிக்கல்கள் சில இருக்கும்.
தேசத்தின் விடுதலைக்குப் பின்பாகத் தீர்க்க வேண்டிய சிக்கல்களை விடுதலைக்கு முன்பாகவே தீர்த்துக் கொள்ள முனையக் கூடாது.
இதுகுறித்துச் சற்றுக் கூடுதலாகப் பார்ப்போம்.
 தமிழகம் ஒரு தேசம் என்கிற அடிப்படையில் உரிமை கொள்ள இயலாமல் இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்கும் அடிமைப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தேசிய முதலாளிகளும், வணிகர்களும் எனத் தமிழ்த் தேசத்தின் அனைத்து வகுப்பினருமே மேற்படி இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்கும் அடிமைப்பட்டிருப்பதை அறிவோம்.
அவை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு வகையில் விடுதலை தேவையுடையதாக இருக்கிறது.
இந்நிலையில் தன் விடுதலைத் தேவைக்காக அவை தானாகவே முன்னின்று வல்லரசியத்தை, இந்தியத்தை எதிர்த்துப் போராட அணியமாக இல்லை.
அதேபோது அவற்றை எதிர்த்துப்போராடும் பிற வகுப்புகளுக்கு அவர்கள் துணை செய்ய விரும்பு கின்றனர். அவர்களின் போராட்டம் வெல்ல வேண்டுமாய் விரும்புகின்றனர்.
இந்நிலையில் இந்திய அரசை, வல்லரசியங்களை எதிர்த்துப்போராடுகிற உழைக்கும் வகுப்புகளுக்குத் தமிழ்த் தேசிய முதலாளிவகுப்புகளும், வணிக வகுப்புகளும் ஆதரவு அணிகளாக அமைகின்றன. வெகு மக்கள் தளத்தில் போராடக் கட்டமைக்கப்படும் முன்னணிகளில் பங்கெடுக்கும் நிலையிலும் அவ்வகுப்புகள் கைகோர்க்கின்றன.
எனவே, அதுபோன்ற சூழல்களில் இந்திய அரசையும் வல்லரசுகளையும் தனிமைப்படுத்தி எதிர்ப் பதற்குத் தமிழகத்தின் அனைத்து வகுப்புகளையும், ஒருங்கிணைத்து முன்னிலைப்படுத்தி ஒருங்கிணைந்த தலைமையை உருவாக்க வேண்டிய கடமை தமிழக உழைக்கும் வகுப்பிற்கு உண்டு.
இந்நிலையில் நாங்கள் உழைக்கும் வகுப்பின் தலைமைக்காõகப் போராடக் கூடியவர்கள். எனவே என்ன இருந்தாலும் முதலாளியம் என்பது வகுப்பு (வர்க்க) அடிப்படையில் இன்றைக்கு இல்லாவிட் டாலும் பின்வரும் காலங்களில் எங்களுக்கு எதிரிகள்தாம் என்று சொல்லிக் கொண்டிருந்தால் அவர்களை இன்றைக்கு அணி சேர்க்க முடியுமா?
அப்படி அவர்களை அணிசேர்க்காமல் தேசிய விடுதலையைப் போராடிப் பெற்றெடுக்கவும் முடியுமா?
எதிர்கால ஒப்புரவிய (சோசலிச)க் குமுக உருவாக்கத்திற்கான போராட்டத்தில் எதிர்மையாகக் கணிக்கப்பட வேண்டியவர்களை, இன்றைய தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிர்மையர்களாகக் கணிக்க முடியாது.
காலத்திற்கேற்பப் போராட்டத் தேவைக்கேற்ப நண்பர்களைத் தீர்மானிப்பதும், எதிரிகளைத் தீர்மா னிப்பதும் மிக மிக இன்றியமையாததாக இருக்கிறது.
இன்றைய காலம் என்பதை இன்றைய குமுக அழுத்தத்தின் அளவீடுகளிலிருந்து தீர்மானித்தாக வேண்டும்.
தமிழகத்தின் இன்றைய முதன்மை எதிரி:
ஆக, நம் தமிழகத்தின் இன்றைய முதன்மை எதிரிகளாக இந்திய அரசும், வல்லரசுகளுமே இருப்பதைத் தெளிவாக உணர முடியும்.
இவ்விரண்டு எதிரிகளும் வலுவான எதிரிகள். நம் தேசத்தை அடிமைப்படுத்தியும், சுரண்டிக் கொள்ளை யடித்துக் கொண்டுமிருக்கிற அவ்விரு எதிரிகளையும் எளிதே நாம் விரட்டி அடித்து விட முடியாது.
அப்படி அவர்களை விரட்டியடிப்பதற்குரிய ஒரே போர்க் கருவி நமக்கு மக்கள்தாம். மக்களின் பேரெழுச்சியால் அல்லாமல் அவ்வெதிரிகளை நிலைகுலையச் செய்ய முடியாது.
மக்கள் பேரெழுச்சியைத் திரட்டுவது எவ்வாறு? என்று நாம் திட்டமிட்டாக வேண்டும்.
மக்களுள் பல்துறைசார்ந்த வகுப்பு அணிகளையும் அணி அணியாகத் திரட்டியாக வேண்டும்.
எல்லா அணிகளையும், இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்கும் எதிராகத் திரட்டியாக வேண்டும்.
உழவர்கள், தொழிலாளர்கள், வணிகர்கள், மீனவர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், எழுத்தாளர்கள் என அனைத்துத் துறையினரையும் ஒருங்கிணைத்தாக வேண்டும். அதற்கான அரசியல் மற்றும் செயல் திட்டங்களிடப்படவேண்டும்.
இத்தகைய ஒருங்கிணைந்த முன்னணிகளைக் கட்டிப் போராடுகிற அதே நேரத்தில் பிற தேசங்களின் இந்தியாவுக்கு எதிரான, வல்லரசுகளுக்கு எதிரான போராட்ட வழியான ஆதரவு ஆற்றல்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். உலகம் முழுக்க வல்லரசுகளுக்கு எதிராகப் போராடும் இயக்கங்களை எல்லாம் நமக்கான ஆதரவாளர்களாக ஒருங்கிணைக் கும் பெரும் முயற்சிகளையும் செய்தாக வேண்டும்.
இத்தகு நீண்ட காலத் திட்டமிட்ட முயற்சிகளின் வழியாகவே தமிழ்த் தேசம் இந்தியத்திடமிருந்தும், வல்லரசுகளின் ஆளுமைச் சுரண்டல்களிலிருந்தும் விடுபட முடியும்.
மாறாக அந்த முதன்மை எதிரிகளைக் கூர்மைப் படுத்தி எதிர்க்கிற அரசியல் தெளிவின்றித் தமிழ்த் தேச விடுதலைக்குப் பிறகு செய்யப் பெறவேண்டிய அடுத்தக் கட்ட வேலைகளையெல்லாம் இப்போது செய்தோமானால் அவை இந்திய அரசுக்கும், வல்லரசுகளுக்குமே வாய்ப்பாகப் போகும்.
அவை எவை?
தமிழகத்திற்கும் அண்டைத் தேசங்களுக்கும் முரண்பாடுகள் இருக்கவே செய்கின்றன. காவிரி நீரைக் கருநாடகம் மறிக்கிறது. முல்லைப் பெரியாற்று நீரைப் பறிக்கிறது கேரளம். ஆந்திர நிலவுடைமையர் தமிழகத்திற்குள் வந்தேறி நிலங்களைக் கவர்ந்திருக்கின்றனர்.
அவையாவும் உண்மையாயினும் அந்த அண்டைத் தேசங்கள் யாவும் விடுதலை பெற்ற தனித் தேசங்கள் இல்லை. அவையாவும் இந்திய அரசின் அடிமைத் தேசங்களே.
நமக்கு, இங்கு இந்திய அரசால், வல்லரசுகளால் தமிழ்த்தேசத்தின் மீது ஏற்படும் அரசியல், பொருளியல் அடக்குமுறைகள் அனைத்தும் அவர்களுக்கும் உண்டு.
ஆனால், அவர்கள் தங்கள் தேச உரிமை எழுச்சி களை இந்திய அரசுக்கு எதிராகவும், வல்லரசுகளுக்கு எதிராகவும் போராடிப் பெறும் வரிசையில் தமிழ கத்தை விட மிகப் பிந்திய நிலையிலேயே இருக்கின்றனர்.
அங்கெல்லாம் இந்தியத்திற்கு எதிரான, வல்லரசுகளுக்கு எதிரான போராட்டங்கள் மிக மிக அரிதாகவே நடக்கின்றன.
இந்நிலையில் தமிழகத்திலிருந்து நாம் காவிரிச் சிக்கலுக்காகட்டும், முல்லைப் பெரியாற்றுச் சிக்கல்களுக்காகட்டும், அச்சிக்கல்களைத் தீர்ப்பதில் அக்கறை செலுத்தாத இந்திய அரசை நெருக்கிப் போடாமல் கருநாடகத்திற்கு எதிராகவும், கேரளாவுக்கு எதிராகவும் போராடுவோமானால் அது, இந்திய அரசை மகிழ்ச்சிப்படுத்தவும், அண்டைத் தேசங்களுக்கிடை யான பகைமைகளை வளர்க்கவுமே பயன்படும்.
அதைத்தான் இந்திய அரசும், வல்லரசுகளும் விரும்புகின்றன. ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிகளுக்குக் கொண்டாட்டமாய் ஆகின்றன.
எனவே அவ்வகையில் அல்லாமல், இந்திய ஆட்சிக்குட்பட்டிருக்கிற இரண்டு தேசங்களுக்கு இடைப்பட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்திய அரசால் முடியவில்லை என்றால் இந்திய அரசே எங்களை இந்தியாவிலிருந்து விடுதலை செய் என்றும், எங்கள் தேசங்கள் தனித்தனித் தேசங்களாக இருந்தால் நாங்கள் இந்தச் சிக்கல்களைத் தீர்த்துக் கொள்வோம் என்றும் அறிவித்தாக வேண்டும்.
அவ்வகையில் அறிவிப்பதோடு நிற்காமல், அக்கருத்தை வலியுறுத்தி இந்திய அரசை எதிர்த்துப் போராடியாகவும் வேண்டும்.
அந்த வகையில் இந்தியாவைப் புறக்கணிக்கிற, எதிர்க்கிற சூழல்களுக்கிடையில்தான் இரண்டு தேசங்களுக்கும் இடையில் பகைமை மாறி, ஒற்றுமை ஏற்பட முடியும். அவ் ஒற்றுமை இந்திய, வல்லரசிய ஆளுமைகளை எதிர்க்கப் பயன்படவும் முடியும்.
இதற்கிடையில் தமிழகத்தில் உடுப்பி விடுதிகள், பெங்களூர் ஐயங்கார் பேக்கரிகள், ஆலுக்காசு நகைக் கடைகள் போன்றவை ஏராளமாக உருவாகிக் கொண்டிருப்பதும் உண்மைதான். கேரள இளைஞர்கள் திருப்பூர், கோவை போன்ற பகுதிகளில் வேலைகளில் வந்து குவிவதும் உண்மைதான்.
அவற்றின் சுரண்டல்களும், விரிவும் தடுக்கப் படவும், நிறுத்தப்படவும் வேண்டும் என்பதும் தேவையானதுதான்.
ஆனால் அவற்றை விட முகாமையாக விரட்டப்பட வேண்டியவை அமெரிக்க ஸ்டெர்லைட்டும், பெப்சி, கோக் நிறுவனங்களும் இல்லையா? பிரித்தானிய, செர்மானிய, சப்பானிய, கொரிய போன்ற வல்லரசிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் கால் பரப்பியிருப் பதைத் தடுத்து நிறுத்துவது முகாமையில்லையா? 
தகவல் தொழில் நுட்பம் எனும் பெயரில் தமிழகப் பெரு நகரங்களில் எல்லாம் அமெரிக்கா,பிரிட்டன் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களின் அடிவருடி ஆளுகைகள் சுரண்டிக் கொழுக்கின்றனவே அவற்றை விரட்ட வேண்டாமா?
அங்குப் பணியாற்றும் பல தேச, பன்னாட்டு ஆண்கள் பெண்கள் கொழுத்த வருவாயில் குடிப்பதும், கும்மாளமிடுவதுமாய் அரைகுறை ஆடைகளுடன் அலைந்து தமிழகப் பண்பாட்டையே பாழாக்குகிறார் களே! அவற்றைத் தடை செய்ய வேண்டாமா?
நெய்வேலி நிலக்கரி, நரிமணம் கன்னெய் (பெட்ரோலை) சேலம் இரும்பு எனத் தமிழகத்தில் கிடைக்கும் அரிய கனிம வளங்களையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு போகிறதே இந்திய அரசு, அதைத் தடுத்து நிறுத்தித் தமிழகத்திற்காக ஆக்க வேண்டாமா?
ஆக இவற்றில் எவை முதன்மையானவை?
வல்லரசுகளும், இந்திய அரசும் தம் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு தமிழகத்தையே ஒட்டச் சுரண்டிக் கொள்ளையடித்துச் செல்லுகிற வகையில் தமிழக நிலத்தை, உழவை, தொழில்களைப் பாழடிக்கவும் செய்து கொண்டிருப்பதைத் தடுத்து நிறுத்தி விரட்டி அடிப்பது முதன்மையானதா?
அல்லது,
அண்டைத் தேசங்களில் இருந்து ஊடுருவி வரும் சிறுவணிகர்களை, சிறு தொழில் முதலீட்டாளர்களை, வேலை தேடி வருவோரை விரட்டுவது முதன்மை யானதா?
பின்னவர்கள் வந்தேறுவதை எதிர்க்கவோ, தடை செய்யவோ வேண்டாம் என்பதல்ல நம் கருத்து. ஆனால், அது முதன்மையானதல்ல என்பதே நம் தருக்கம்.
இந்திய, வல்லரசிய ஆளுமையை, சுரண்டல்களை வேரறுக்கிற, விரட்டியடிக்கிற அடிப்படை முதன்மைப் பணியைச் செய்யாமல் விட்டு விட்டு மற்றதைச் செய்வோமானால் அச் செயல்களெல்லாம் இந்திய, வல்லரசுகளின் ஆளுமையை வளர்ப்பதற்கே பயன்படும்.
இதனால் தமிழ்த் தேசிய உரிமைப் போராட்டத்தின் முன் நகர்வில் சிக்கல்களே ஏற்படும் என்பதைத் தமிழ்த் தேசிய இயக்கத்தினர், கருத்தாளர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மலையாளிகளை வெளியேற்றுவோம்! வெளியாரை வெளியேற்றுவோம்! என்பவை அப்போதைய அளவில் அரிப்புகளைச் சொரிந்து விடுகிற நிறைவைத் தரலாமே அல்லாமல், அவை தமிழ்த் தேச விடுதலை அரசியலுக்கான திட்டமிட்ட நகர்வாக இருக்காது.
“செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்!''
எனவே, தோழர்கள் இவை குறித்தெல்லாம் அக்கறையெடுத்துச் சிந்திக்க வேண்டுமாய் வலியுறுத்துவது கடமையாகின்றது.

மீனவத் தோழனே...



தமிழக மீனவத் தோழனே
வலைக் கருவிக்கு இணையாக
கொலை கருவி கொண்டுபோ!
துடுப்புக்குத் துணையாக
துப்பாக்கி கொண்டுபோ!
எரிபொருளுக்கு ஏதுவாக
வெடிபொருள் கொண்டுபோ!
இனி,
இந்தியக் கடலில்
வலை விரித்துப் பிழைக்க முடியாது
தலை அறுத்துப் பிழைத்து கொள் என்று
உன் தலைமுறைக்கு சொல்லி வை.
சிங்கள கடற்படை காடையர்க்கு
நடுக்கடலில் கொள்ளி வை!
ஆழ்கடலில் ஏதிலியாக
அப்பாவி தமிழன் உயிர் அடங்கியது.
மானங்கெட்ட இந்தியக் கடற்படை
இதுவரை எவர் மயிரைப் பிடுங்கியது.
இத்துப்போன இந்தியத்தால்
செத்துப்போன தமிழர் எத்தனைப் பேர்?
குறை ஆண்மை கொண்ட கூட்டம்
இறையாண்மை பேசும் இனி தயங்காதே
சிங்கள எல்லை நோக்கி
தன்மான தமிழ்ப் படை திரளட்டும்.
தடுக்க முடியாது
இந்தியக் கடற்படை திணவூட்டும்
கடற்படையின் திணறல் கண்டு
சிங்கள பேடிப்படை மிரளட்டும்
செந்தமிழன் காலடியில்
செந்நாய்களின் தலை உருளட்டும்
செந்நாய்களின் தலை பார்த்து
தாலி இழந்த தமிழச்சிகளின்
தணல் மனம் குளிரட்டும்
- நா.செந்திசை, புழல் நடுவண் சிறை

கட்டுச் சோற்றுக்குள்ளிருந்த பூனை வெளியே வந்தது


தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டுமென்பதே நமது இறுதி குறிக்கோளாக இருப்பினும், தற்போதுள்ள போலி சனநாயக அரசியல் களத்தின் மூலமாக கடந்த 60 ஆண்டுகளாக நம்மை அடிமைப்படுத்தி நமது பல்வேறு இயற்கை வளங்களைச் சுரண்டி கொழுத்தும், நமது உரிமைகளைப் பறித்தும், நமது அண்டை சகோதர தேசமான ஈழத்தில் பல இலக்கக்கணக்கான தமிழ் சொந்தங்களை கொன்றழிக்க பணம், ஆயுதம், படை வீரர்கள், உணவு, சேதிகள் போன்றவற்றை கொடுத்து பேருதவி புரிந்த பேராயக் கட்சியை இத் தமிழ் மண்ணிலிருந்து வேரோடும், வேரடி மண்ணோடும் கருவறுக்க வேண்டும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை.
அவ்வாறு வேரறுப்பதில் இரண்டு விதம் ஒன்று நிரந்தரம். மற்றொன்று தற்காலிகம், நிரந்தரமென்பது மக்கள் திரள் புரட்சியின் மூலமாக தமிழ்த் தேசியமைப்பின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்.
மற்றது குறைந்தபட்சம் தற்காலிகமானது. அதாவது இந்த போலி சனநாயக அரசியல் தேர்தல் மூலம் அதாவது அந்த எதிரியை வீழ்த்த இன்னொரு துரோகியை ஆதரவளித்து தேர்தலில் தோற்கடிப்பது.
இரண்டாவது உள்ள நோக்கத்தை நம்மைப் போன்ற புரட்சிகர இயக்கங்கள் புறக்கணித்து விட்டு நிரந்தர தீர்வுக்கான வழிகளை செயலூக்கம் செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டி ருக்கும் வேளையில் இனம் தேசியம் பேசும் இயக்கங்கள் இரண்டாவது முறையைக் கையிலெடுத் துக் கொண்டு தற்போது தேர்தல் களத்தில் பரப்பல் வேலை செய்துக் கொண்டுள்ளன. அவற்றில் முதன்மையான அமைப்பாக திரைப்பட இயக்குனர் சீமான் தலைமையிலான நாம் தமிழர் இயக்கமாகும்.
எந்தவொரு தேசிய இயக்கம் கட்டமைக்க வேண்டுமென்றால் மேலை நாடுகளில் வர்க்கப் போராட்டத்தின் மூலமாகவும், தமிழ்த் தேசியத்தில் வர்க்கம் மற்றும் சாதியொழிப்பின் மூலமாகவும் மட்டுமே சாத்தியமாகும். இதை தோழர் தமிழரசன் தனது மீன்சுருட்டி அறிக்கையில் மிகத் தெளிவாக உறுதிப்பட கூறியுள்ளார்.
மேலும் அவர் சாதியச் சங்கங்களைப் பற்றிக் கூறும்போது சாதிச் சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும். அவ்வாறு ஒழிக்கப்படும் போது முதலில் ஆண்டைகளின் சாதிச் சங்கங்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அது ஏன் அவ்வாறு எனக் கூறும்போது ஆண்டைகளின் சாதிச் சங்கமென்பது வர்ணாசிரம படிநிலைகளை நிலை நிறுத்தி ஆண்டைகள் ஆண்டைகளாகவும், அடிமைகள் அடிமைகளாகவும் இருப்பதற்கு பாடுபடுவன. ஆனால் ஒடுக்கப்பட்டோரின் சாதிச் சங்கம் அவர்கள் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான போராட்டத்தில் களமாடுவதற்கானது என விவரிக்கிறார்.
இது தலைவர்களின் சிலைகளுக்கும், கூட்டப்படும் பெயர்களுக்கும் பொது நிகழ்ச்சிகளில் நினைவுக் கூறத்தக்க பெயர்களுக்கும் பொருந்தும். ஏனெனில் ஆண்டைகளின் தலைவனின் பெயரைக் கூறும்போதோ, சிலைகளைக் காணும்போதோ அங்கு அடிமைச் சமூகத்தை நினைவுபடுத்தி தகர்ந்த தனது கட்டமைப்பை மீண்டும் நிலைநிறுத்த முயற்சி செய்ய வைக்கும். அதேவேளையில் அடிமைகளில் அல்லது சாதிமறுப்பு சமத்துவ புரட்சியாளர்களின் பெயர்களை உச்சரிக்கும் போதோ, சிலைகளைக் காணும்போதோ மீண்டும் மீண்டும் மீண்டும் புரட்சியை முன்னெடுத்துச் செல்லத் தூண்டும்.
இது இவ்வாறிருக்க தற்போது நடைபெறவிருக்கிற சட்டமன்றத் தேர்தலில் பேராயக் கட்சியைக் கறுவறுப்போம் எனும் முழக்கத்தோடு அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரித்து வரும் தமிழீழ ஆதரவாளர், நாம் எல்லாம் தமிழர்களாக ஒன்று கூடுவோம் என்று மேடைதோறும் வெற்று முழக்கமிட்டு வரும் திரைப்பட இயக்குனர் சீமான் அவர்கள் கடந்த 9.4.11 அன்று வேலூர் கோட்டை மைதானத்தில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்கு சேகரித்து தனது தொடக்கவுரையில் பேராயக் கட்சியை நாம் அழிக்கத் தேவையில் யார் யார் செயல்களும், சொல்களும் அழிக்கும் எனச் சில பெயர்களைப் பட்டியலிட்டார்.
அவை: 1. பெரியார், 2. இன்றைய நவீன பார்ப்பனர்கள் உட்பட அன்றைய ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் தனது வாழ்நாளை சுருக்கிக் கொண்ட புரட்சியாளர் அம்பேத்கார், 3. இல்லாத இந்திய தேசியப் படைக்க கட்டிய சுபாசு சந்திர போசு, 4. சேரிகளின் சிம்மக்குரல் தாத்தா இரட்டைமலை சீனிவாசன். 5. வெள்ளை ஏகாதிபத்தியத்தில் கைக்கூலி காந்தி, 6. இந்திய அடிமையாக இருந்து தமிழ் மண்ணை விட்டுக் கொடுத்த காமராசு, 7. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மிகப் பெரிய சாதிய சனாதனவாதியாகவும் போக்கிரியாகவும் திகழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கம் ஆகியப் பெயர்களாகும்.
இதில் அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன் தவிர அனைவருமே பேராயக் கட்சியின் அடிவருடிகளாவர் என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவரவருக்கு சில கசப்பான நிகழ்வுகள் நடந்தபோது அதற்கு எதிராக வெளியே வந்து பேசியவர்கள்.
காந்தி கொஞ்சம் மாறுபட்டு இந்திய அதிகாரப் பரிமாற்றம் நிகழ்ந்த பின்பு இந்த போலி சனநாயகத் தேர்தல் முறையில் தான் முன்பு செலுத்திய அதே ஆளுமையைத் தொடர்ந்து செலுத்த முடியாது என்று சிந்தித்துக் கட்சியைக் கலைக்கச் சொன்னவர். ஆனால் அப்போது அவரது பேச்சு எடுபடவில்லை என்பதும் அவ்வாறு கலைக்க யாரும் விரும்பவில்லை என்பதும் தெளிவு.
காமராசரோ தமிழ் நிலம் கேரளாவில், கருநாடகாவில், ஆந்திராவில் இருந்தாலென்ன, தமிழகத்தில் இருந்தாலென்ன எல்லாம் இந்தியாவில் தானே உள்ளது எனக் கூறித் தமிழ் மண்ணை மேற்படி நாட்டிற்கெல்லாம் தாரை வார்த்து இன்றைய தண்ணீர் உட்பட தமிழகத்தின் சிக்கல்களுக்கும், அழிவிற்கும் வித்திட்டவர்.
பசும்பொன் முத்துராமலிங்கமோ தென்மாவட்டங்களில் தனது சாதி வெறித்தனத்தால் பல கைக்கூலிகளின் மூலமாக தன்னை எதிர்த்தோ கேள்விக் கேட்கவோ, நேர் நிற்கவோ, தனக்கு எதிராக செயல்படுகிறார் என்று தெரிந்தாலோ, ஊனப்படுத்துவது, கொலை செய்வது போன்ற செயல்களின் மூலமாகவும், தான் பேசும் மேடைகளில் சுபாசு சந்திர போசுக்கு தான் எல்லாமும் என்றும் தன்னிடம் அணுகுண்டு உள்ளது என்று அழித்து விடுவேன் என்றும் இறந்து போன சுபாசு சந்திர போசு உயிருடன் வருவார். என்னிடம் பேசினார் என்று உண்மைக்கு முரணாக புழுகி எல்லோரையும் முட்டாளாக்கி தனது சாதி சண்டித்தனத்தை அரங்கேற்றி வந்தார். இவரின் யோக்கியதையை தெரிந்து கொள்ள அவரின் சொந்த சாதிக்காரரும் அதே சமயம் நடுநிலைவாதியுமான பத்திரிகை ஆசிரியர் திரு. தினகரன் அவர்கள் எழுதிய முதுகுளத்தூர் கலவரம், திரு.டி.எசு. சொக்கலிங்கம் எழுதிய முதுகுளத்தூர் பயங்கரம் மற்றும் சாதி மறுப்பு போராளி திரு. இமானுவேல் சேகரன் வாழ்க்கை வரலாறு போன்ற நூல்களை வாசித்தால் புரியும்.
இது இவ்வாறிருக்க இதற்கு நேர்மாறாக இந்திய அடிமைப் படையில் தன் வகித்த அவில்தார் பதவியைத் துச்சமெனத் தூக்கியெறிந்து விட்டு இராமநாதபுரம் கரிசல்காட்டு மண்ணில் பசும்பொன் முத்துராமலிங்கத்தால் கரைப்புரண்டோடிக் கொண்டிருந்த சாதிச் சண்டித்தனங்களுக்கு முடிவு கட்ட எண்ணி ஒடுக்கப்பட்ட இளைஞர்களை திரட்டி அவர்களுக்கு கராத்தே, சிலம்பம், வாள் வீச்சு, துப்பாக்கிச் சுடுதல் போன்ற தற்காப்பு கலைகளைக் கற்றுக் கொடுத்து உடலால் திடகாத்திரமானவர்களாகவும், மனதால் சாதி கடந்து சமதர்மத்திற்காக போராடக் கூடிய சாதி மறுப்பு போராளிகளாக உருவாக்கி இமானுவேல் சேகரன் சாதிக் கடந்த நாடார்களுக்காகவும், அகமுடையார்களுக்காகவும், இசுலாமியர்களுக்காகவும், மற்றும் பிற தமிழ்ச் சாதி சகோதரர்களுக்காகவும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் மூலமாக முத்துராமலிங்கம் படைக்கெதிராகச் சமர் புரிந்து வந்தார். மேலும் சாதி மறுப்பு திருமணங்களை அன்றைக்கு நடத்தி வைத்து அத்தம்பதிகளுக்குப் பாதுகாப்பாகவும் அரணாகவும் காத்து சாதி சனாதனத்தைத் தகர்த்தெரிந்தார். அதற்கோர் நல் எடுத்துக்காட்டு தனது சமூகப் பணிக்காக பல்வேறு உயரிய விருதுகளை பெற்று இன்றும் வாழ்ந்து வரும் செகநாதன் (மரணம்) கிருட்டிணம்மாள் தம்பதியர்களாவர்.
இவ்வாறு சாதிமறுப்பு போரின் மூலம் இராமநாதபுரத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தின் சாதி வெறிக் கோட்டையைத் தகர்த்து அனைத்து சாதி மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்று புகழின் உச்சத்திற்கு வந்த இமானுவேல் சேகரனை அன்றைய முதல்வர் காமராசு அவர்கள் காங்கிரசு முத்துராமலிங்கத்தை எதிர்த்து அரசியல் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருந்த வேளையில் காணாது கண்ட முத்தாக தெரிந்த இமானுவேல் சேகரனை முத்துராமலிங்கத்தின் அக்கிரமங்களுக்கு எதிராக செயல்படுவதற்கு பேராயக் கட்சி துணை புரியும். அவரை எதிர்த்து களமாட அரசியல் பலம் மேலும் உதவும் என்று கூறி நயவஞ்சகமாக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்திலிருந்து பேராயக் கட்சிக்கு அழைத்தார்.
அவரின் நயவஞ்சகத்தை அறியாத இமானுவேல் சேகரன் அவர்கள் அது தனது போராட்டத்திற்கு மேலும் பலம் சேர்க்கும் என்றெண்ணி எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல் எவ்வித லாபமும் அடையாமல் சாதி மறுப்பு சமத்துவப் போராட்டத்திற்காக மட்டுமே காமராசுடன் இணைந்து செயல்பட்டார். அவர் எவ்வித பேராயக் கட்சியால் எவ்வித இலாபமும் அடையவில்லையென்பது நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தான் தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்தும் தான் நிற்காமல் தான் கைகாட்டுபவரை நிற்கச் செய்து வைத்து வெற்றிப் பெறச் செய்து முத்துராமலிங்கத்தின் கோட்டையைத் தகர்த்தார்.
இதிலிருந்தே அவர் பேராயக் கட்சியின் சார்பாளராக மட்டுமே இருந்து எவ்வளவு உயரிய நோக்கமாகச் செயல்பட்டார் என்பது தெரியும். இதன் விளைவாக அந்த சாதி மறுப்புப் போராளி சாதி சனாதனவாதி பசும்பொன் முத்துராமலிங்கத்தின் கைகூலிகளால் படுகொலைச் செய்யப்பட்டார். அவர் மட்டும் தேர்தலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி ஓர் சட்டமன்றம் (அ) நாடாளுமன்ற உறுப்பினராக தன்னலத்தோடு ஆகியிருந்தால் அவர் கொல்லப் பட்டிருப்பாரா? கொல்லப்பட்டிருக்க முடியுமா?
மேலும் இமானுவேல் சேகரன் சாதிமறுப்பு போராளி என்பதற்கும், பசும்பொன் முத்துராமலிங்கம் சாதிய சனாதனவாதி என்பதற்கும் அவரின் படுகொலைக்குப் பிறகு தமிழக சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் பேசிய பேச்சுக்களை கண்ணுற்றால் குறிப்பாக சாமி சகசானந்தா அவர்களின் பேச்சு கேள்வியும் கேள்விகளுக்கு பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர்களின் மழுப்பலான பதிலும் கண்ணுற்றால் தெளிவாகப் புரியும்.
வரலாறு இவ்வாறிருக்க தோழர் திரைப்பட இயக்குனர் சீமான் அவர்கள் வேலூர் தேர்தல் பரப்புரையில் தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என்று கூறிய முத்துராமலிங்கத் தேவர் என்று மிகவும் புளகாகிதத்தோடு முழங்குகிறார். ஆனால் முத்துராமலிங்கம் எந்த தேசியம் தனது இரு கண்கள் என்றார். இன்று தமிழர்களைக் கொன்று குவித்த, அடிமைப்படுத்தி ஆளுகின்ற இல்லாத இந்தியத் தேசியத்தை, அப்படியென்றால் சீமான் தமிழர், தமிழர், தமிழ்நாடு, ஈழம் என்று முழங்கும் சீமான் அவர்கள் இந்தியத் தேசியத்தை ஏற்றுக் கொள்கிறாரா என்று வினவ வேண்டும். நாவிற்கு எலும்பில்லை என்பதற்காக சினிமாவில் முழங்கியது போன்று இரட்டை வேடம் பூண்டு முழங்கக் கூடாது.
இவ்வாறு வரலாறுக்கு மாறாக அதுவும் முத்துராமலிங்கத்தின் சாதி வாக்கோ, சாதியோ கொஞ்சமும் இல்லாத வேலூரில் முழங்கிய சீமான் மறந்தும் சாதி மறுப்பு போராளி இமானுவேல் சேகரனைக் குறிப்பிடவில்லை. அவர் இறக்கும்போது பேராயக் கட்சிக்காரராகத்தான் இறந்தார் என்று சப்பக்கட்டு கட்டலாம். அவரது சாவிற்கு அவரது கொள்கைக்கோ, குடும்பத்திற்கோ சமூகத்திற்கோ அல்லது அவருக்குப் பின்னால் படை திரண்டு நின்றிருந்த இளைஞர் சாதி மறுப்புப் போரில் உயிர் நீத்த, வழக்கெடுத்தவர்களுக்கோ எவ்வித கைமாறும் செய்யவில்லை. அதனால் அவரது நினைவலைகளை பேராயக் கட்சியை அழிக்குமென்றுக் கூறலாமே. ஆனால் கடைசி வரை பேராயக் கட்சியில் இருந்து இந்தியத்தைக் காத்து தமிழர் நலனை காவுக் கொடுத்த காமராசரை நினைவு கூரத் தவறவில்லையே.
இவ்வாறு வேலூரில் பேசிய சீமான் முத்துராமலிங்கத்தின் சாதி வாக்கு செறிவு மிகுந்த தென் மாவட்டத்தில் பேசியிருப்பார் என்று எண்ணுவோமானால் நாம் முட்டாள். ஏனெனில் அங்கு இவ்வாறு இம்மானுவேல் சேகரனைப் புறக்கணித்து விட்டு, முத்துராமலிங்கத்தைப் புகழுவாரேயானால், அது அவரின் இரட்டை வேட தேர்தல் பரப்பில் தோல்வியில் போய் முடிந்தும், சீமானின் நாம் தமிழர் இயக்கம் சுவடு தெரியாமல் அழிந்தே போகும்.
அதனால் வியாபார புத்தி கொண்ட திரைப்பட இயக்குநர் சீமான் அவர்கள் கண்டிப்பாக அவ்வாறு பேசி தனது வியாபாரத்தில் மண்ணை அள்ளிப் போட்டிருக்க மாட்டார் என்பதே நமது தின்னம். ஏனெனில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது திருநெல்வேலி பாளையங்கோட்டையில் பேசும் போதும் சரி, தூத்துக்குடியில் பேசும்போதும் சரி, என் தாத்தா கட்டபொம்மன், சுந்தரலிங்கம், பூலித்தேவன் என்ற பெயர்களை உச்சரித்தே முழங்கினார். மறந்தும் பசும்பொன் முத்துராமலிங்கம் பெயரையோ, இமானுவேல் பெயரையோ உச்சரிக்கவில்லை.
இதிலிருந்து என்ன தெரிந்தது என்றால் சாதிமறுப்பு போராளியையும், சாதி ஆண்டையையும் ஒரே தட்டில் சரி நிகராக பார்க்கிறார் என்பதும், இவரின் கட்சிப் பெயரில் வேண்டுமானால் நாம் தமிழர் என்றிருக்கலாம். ஆனால் எப்போதும் தமிழர்கள் என்று கூறி தோழர் தமிழரசன் எண்ணப்படி சாதிக் கூட்டமைப்பை தகர்த்தெறிந்து எல்லோரும் நாம் தமிழர்களாக ஆக முடியாது என்பதும் முத்துராமலிங்கம் போன்று சாதி கட்டமைப்பை பாதுகாப்பவர் என்பதும் அவர் கடந்த இமானுவேல் சேகரன் நினைவு நாளுக்கு சென்றதும், முத்துராமலிங்கத்தின் நினைவு நாளுக்கு சென்றதும் நினைவூட்டியது. இவரைத் தவிர வேறு எந்த தமிழ் தேசிய அமைப்பு முத்துராமலிங்கம் நினைவு நாளுக்கு செல்லவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனெனில் மற்றவர்கள் தெளிவாக அது ஆண்டை தனத்த நிலைநிறுத்தும் நினைவு நாள் என்பதைத் தெளிவாகத் தெரிந்ததினால், அப்போது இவருக்குத் தெரியாதா இல்லை தெரிந்தே சென்றார் என்பதே நம் எண்ணம். ஏனெனில் இவர் ஆண்டைத் தனத்தை நிலைநிறுத்த முயற்சிக்கிறார் என்பதே திண்ணம். அது இவரது வேலூர் பேச்சிலிருந்து தெரிய வருகிறது. எவ்வாறெனில் ஆண்டை முத்துராமலிங்கத்தையும், காமராசரையும், புகழ்ந்து சாதி மறுப்பு போராளி இம்மானுவேல் சேகரனைப் புறக்கணித்தது. அதிலிருந்து ஒன்று தெளிவாக இதுவரைக் கூறியதிலிருந்து விளங்கும். அது எதுவென்றால் முத்துராமலிங்கத்தை ஒரு தேசியத் தலைவராக முன்னிறத்த நடந்த முயற்சியே அன்று அது வேறெதுவுமில்லை.
இப்போதுதான் இவர் தொடங்கியக் கட்சிப் பெயர் மீதும், நமக்கு சந்தேகம் தோன்றுகிறது. ஏனெனில் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் தாங்கள் பெருஞ் செல்வந்தர்களாக ஆக வாய்ப்பிருந்தும் அதை உதறி விட்டு, எடுத்துக்காட்டாக ஒரு பத்து ரூபாய் இருந்திருந்தால் என் அன்பு மனைவியைக் காப்பாற்றியிருப்பேன் என்று வருந்திய போதிலும் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் வாழ்ந்து மடிந்து அய்யா தேவநேயப் பாவாணர் தொடங்கிய உலகத் தமிழர் கழகம் எனும் பெயரையோ, தமிழுக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும் போராடிய கி.ஆ.பெ. விசுவநாதம், மா.பொ.சி. ஆகியோரால் தொடங்கப்பட்ட தமிழரசு கழகம் என்றோ பெயர் சூட்டியிருக்கலாம்.
ஆனால் சீமான் அவர்களை பொருள் ஈட்டி தானும் தனது மரபினரும் இன்று கோடிகளில் கொழுத்து தமிழர் துயரங்களை இருட்டடிப்பு செய்து வெளியிடும் தினத்தந்தி நிறுவனர் திரு.சி.பி. ஆதித்தனார் (ஆதித்தனார் என்பது நாடாரில் ஒரு பிரிவு அதனால் நாடார் என்று பெயருக்குப் பின்னால் வராமல் ஆதித்தனார் என்று வரும்) அவர்கள் தொடங்கி அவரின் மாணவர்கள் என்றோ, தோழர்கள் என்றோ யாருமே இல்லாத ஆனால் பாவாணரின் மாணவர்கள் இன்றும் உள்ளனர். அவர்கள் இப்போது உ.த.க. புத்துயிர் பெறச் செய்து செயல்படுகின்றனர் என்பதைக் கவனிக்க வேண்டும்.
மேலும் தன் வாழ்நாளையெல்லாம் தமிழுக்காகவும், தமிழருக்காகவும் சிறையில் வருத்தி தனது குடும்பத்தை வருத்திய அய்யா பாவலரேறு பெருஞ்சித்திரனார் பாவாணர் மறைவுக்குப் பின் தொடங்கிய உலகத் தமிழர் முன்னேற்றக் கழகம் என்று தொடங்கி செயல்பட்ட பெயரையே சூட்டியிருக்கலாம். இவரது மாணவர்கள் இன்றும் தமிழுக்காக எழுதியும் பேசியும் வருவோரில் பெரும்பாலானோர்கள் (அ) தோழர்கள் தான் என்பதையும் கவனத்தில் கொள்ளவும் ஆக இப் பெயரைச் சூட்டியிருக்கலாம். ஆனால் அதுவன்றி மேற்படிக் கூறிய சி.பா. ஆதித்தனர் தொடங்கி அவரோடு அழிந்து போன நாம் தமிழர் எனும் பெயரையே தான் புதிதாக தொடங்கிய அமைப்பிற்கு பெயராகச் சூட்டியுள்ளார். இவைகளிலிருந்து இவரின் சாதிப் பாசம் வெட்டவெளிச்சமாகிறது.
என்னத்தான் நீருக்குள் தார்ப்பாய் போட்டு மூடிக் கொண்டு காற்று அடித்தாலும், குமிழிகள் வெளிவந்து தானே ஆகும். அதுபோல் சீமானின் சாதிப் பாசமும், ஆண்டைத் தளமும் வேலூரில் வெளிப்பட்டது.
ஆக இவர் ஒரு சாதி மறுப்புப் போராளியாகவோ தமிழர் தலைவராகவோ ஆவதற்கு தகுதியற்றவர் என்பது இவரும் ஒரு வர்ணாசிரம சனாதனவாதிதான் என்பதும் இவரது பேச்சு செயல்கள் மூலம் நிரூபணமாகிறது. நாம் இப்படித்தான் பார்க்க முடியும். பார்க்க வேண்டும். நோக்க வேண்டும். இல்லையே ஒரு கருணாநிதியை, ஒரு முத்துராமலிங்கத்தை சீமான் உருவில் அனுபவிக்க வேண்டி வரும்.
ஏனெனில் பெரிய மக்கள் புரட்சியை தற்போதைய சூழலில் ஏற்படுத்த முடியாவிட்டாலும், தேர்தல் களத்திலிருந்தாவது பேராயக் கட்சியை விரட்டி தமிழர் விரோதப் போக்கிற்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் எனும் எண்ணத்தோடு பல தமிழ்த் தேசிய அமைப்புகளும், தமிழ் இன உணர்வாளர்களும் மாந்த நேய உணர்வாளர்களும் கடந்த இரண்டாண்டாக கடுமையான வறுமை, சிரத்தையின் ஊடே செயல் பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவரின் இதுபோன்ற செயல்களால் அது பேராயக் கட்சிக்கு சாதகமாகத்தான் அதிகமாக வாய்ப்பிருக்கிறது.
இது கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் இவர் அ.தி.மு.க.வுக்கு வாக்கு கேட்டபோது நடைமுறை வாயிலாக தெரிந்து கொண்டோம். ஏனெனில், அதுவரை பேராயக் கட்சியின் எதிர்ப்பு பேசிய மக்கள் இவரது நிலைக்குப் பின் பேராயக் கட்சி பலத் தொகுதிகளில் வெற்றி பெறக் கூடிய சூழல் உருவாகியது.
ஆகவே பேராயக் கட்சியை வீழ்த்த வேண்டும், தமிழ்த் தேசியத்தை வென்றெடுக்க வேண்டும் என்பது சீமான் ஒருவருடைய நோக்கம் மட்டுமல்ல, அக்களத்தில் இவர் பின்னால் வேண்டுமானால் மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதல் மக்கள் பலம் இருக்கலாம். அதற்காக இவர் சொல்லுவதையெல்லாம் சரியெனப் படாது. மாறாக அதுமறை முகமாக உதவியதாக ஆகிவிடும். மற்றவர்களின் உழைப்பை வீணாக்கி விடும்.
மீண்டும் ஒரு முறை தலைப்பை நினைவுப் படுத்துங்கள்.
அதுவே தமிழுக்கும் தமிழருக்கும் நல்லது.

தமிழக மக்கள் குடியாட்சி அமைப்போம்!




தமிழகத்தில் இன்னமும் மக்கள் குடியாட்சி முறை நடைமுறைக்கு வரவில்லை. நடைபெற்றுக் கொண்டிருப்பது மக்களுக்கான குடியாட்சியும் இல்லை. நடந்து கொண்டிருக்கிற இப்போதைய ஆட்சி முறை குடியாட்சி முறைதானே என்று பெரும் பாலானோர் எண்ணிக் கொண்டிருக்கலாம். அரசும் இதைத்தான் குடியாட்சி என்று பரப்புகிறது. மக்களும் அதையே நம்புகின்றனர்.
வாக்குப் போடுவதன் வழிதானே மக்கள் தங்களை ஆளுகிற அரசைத் தேர்ந்தெடுத்துள்னர். அதன் வழி இது மக்கள் குடியாட்சிதானே என்பதாக மக்களை நம்ப வைத்திருக்கின்றனர். அப்படியானால் அரசு என்பதே மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட சட்டமன்றமும், நாடாளுமன்றமும் ஆக மட்டுமல்லவா இருக்க வேண்டும். ஆனால் அரசு என்பது அவை மட்டுமா? சட்ட மன்றமும், நாடா ளு மன்றமும் மட் டும் இருந்தால் அரசு இயங்கி விடுமா? அவை இல்லாமலேயே அரசு இயங்கு கிறதே எப்படி?
சட்டமன்ற, நாடாளுமன்றம் மட்டுமே அரசு இல்லை. நீதித் துறையும், ஆளுகைத் துறைகளும் சட்டமன்ற நாடாளுமன்றங்களோடு இணைந்ததே அரசு. சட்டமன்றங்கள் இயங்காமலேயே நீதித்துறையும் நிர்வாகத்துறையும் மட்டுமேஇணைந்து அரசாக இயங்க முடிகிறது. ஆனால் அவை இரண்டும் இயங்காமல் சட்டமன்ற மும், நாடாளுமன்றமும் மட்டுமே அரசாக இயங்க முடியாது. ஆக, இன்றைக்கு இருக்கிற அரசு என்பது அவை மூன்றும் இணைந்ததாகவே இருக்கின்றது.
குடியாட்சிக்கு மூன்று தூண்களாக அவை அடையாளப்படுத்தப்படுகின்றன. நான்காவது தூணாக ஊடகங்களும், இதழியல் துறைகளும் சொல்லப்பட்டாலும், அது ஆட்சி செய்கிற அரசின் துறையில்லை. ஆக அந்தமூன்று துறைகளில் சட்டமன்ற, நாடாளு மன்றத்திற்கு மட்டும்தாம் தேர்தல் நடக்கின்றனவே அல்லாமல் நீதித் துறைக்கும், ஆளுகைத் துறைக்கும் தேர்தல் நடத்தப்படுவதில்லை.
அவற்றில் யார் நீதித் துறை நடுவராக வரவேண்டும், ஆளுகைத் துறையில் அதிகாரிகளாக வரவேண்டும் என்பதையெல்லாம் அந்தந்தத் துறையின் உயர் அதிகாரிகளாக உள்ளோர்தாம் தீர்மானிக்கிறார்கள். அவர்கள், அவரவர்களுக்குச் சார்பானவர்களையும், சாதி, வகுப்புத் தொடர்பினரையுமே தேர்வு செய்து கொள்கின்றனர்.
அவை ஒருபுறம் இருக்க ஒருவர் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்தல் வழி வெற்றி பெற வேண்டுமானாலோ, கோடிக் கணக்கில் பணத்தைச் செலவழிக்க வேண்டியிருப்பதாகவே இன்றைய தேர்தல் நடைமுறைகள் உள்ளன. அப்படிக் கோடிக் கணக்காகச் செலவழிக்கத் தகுந்தவர்தான் போட்டி போட முடிகிறது. அவ்வாறு தொகை செலவழிக்க இயலாதவர், பிற வகையில் செல்வாக்குப் பெற்றிருப்பாரேயானால் அவருக்கு அந்தத் தொகுதியில் உள்ள பணமுதலைகள், முதலாளிகள் பணம் செலவழிக்கத் தாமாகஙேவ முன்வருகின்றனர்.
அத்தகையவருக்கு ஆதரவாகப் பணம் செலவழிக்கிற அந்த ஆளுமையர்கள் அதற்கு மாற்றாகப் பெரும் பெரும் பயன்களை எதிர்நோக்கித்தான் செலவழிக்கிறார்களே அல்லாமல் வெறுமனே செலவழித்திடுவதில்லை.
சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர் வாகிற வரைத் தனக்கு இசைவானவராக இருக்கும் படியே அந்தத் தொகுதியில் உள்ள பெரும் பெரும் பணமுதலைகளும் பணக்காரர்களும் செய்கின்றனர். எனவே, சட்டமன்ற உறுப்பினராகவோ, நாடாளு மன்ற உறுப்பினராகவோ வெற்றியடைபவர் தொகுதி யில் உள்ள மேற்படி பண முதலைகளுக்கு பணிகிற வராகவும், அவர்களின் தேவைகளை நிறைவு செய்பவராகவுமே செயல்படுகிறார்.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக வருபவர்கள் அப்பகுதியிலுள்ள பண முதலைகளுக்கு ஆட்படுகின்றனர் என்றால், அமைச்சராகவும், முதலமைச்சராகவும், தலைமை அமைச்சராகவும் வருபவர்கள் நாடு முழுவதுமாகக் கொள்ளையடிக்கும் முதலைகளிடமே தவம் கிடக்கின்றனர். ஆக, மிகப் பெரும் தொழில் முதலைகள், பன்னாட் டுத் தொழில் முதலீட் டாளர்கள் ஆகியோ ரெல்லாம் தங்களுக்கு இணக்கமானவரையே அல்லது இணக்க மான கட்சியையே வெற்றி பெறச் செய்கின்றனர். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்கின்றனர். வெற்றி பெற்றபின் அவர்களின் தேவைக்கேற்ப, வாய்ப்புக் கேற்ப நாட்டின் சமூக, பொருளியல் நிலை களையெல்லாம் மாற்றி அமைத்துக் கொள்கின்றனர்.
அரசு திட்டமிடுகிற வரவு செலவுத் திட்ட அறிக்கைகள் கூட அத்தகைய பெரும் பண முதலைகள், பன்னாட்டு நிறுவன ஆண்டைகளின் கலந்தாய்விலேயே நிறைவேற்றப் படுகிறது. ஆக, இன்றைய அளவில் நடக்கிற ஆட்சி முறையை முதலாளிகளின் பண முதலைகளின் நலன்களையே அடிப்படையாகக் கொண்டு ஆட்சி என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.
இன்றைய ஆட்சி அமைப்பு வெளி வேடத்தில் தேர்தல் நடத்தப் பெற்றுத் தேர்ந்தெடுக்கப்படுவதான குடிநாயக ஆட்சிபோல காட்டப்பட்டாலும் அது உண்மையில் மக்களுக்கான குடியாட்சியாக இல்லை. அது முதலாளிகளுக்கான குடியாட்சியாகவே இருக்கிறது. ஆக, குடியாட்சி அமைப்பு முறை என்பதையே இரண்டு தன்மைகளில் பிரித்து உணர வேண்டும்.
ஒன்று, முதலாளிய தலைமையிலான குடியாட்சி அமைப்பு.
மற்றது மக்கள் அனைவருக்குமான மக்கள் குடியாட்சி அமைப்பு.
இந்த இரண்டு வேறுபாடுகளையும் சற்று விளக்க மாக விளங்கிக் கொள்ள வேண்டிய தேவை இருக்கிறது. அதை விளக்கமாக விளங்கிக் கொள்ளுகிற போதுதான் மக்கள் தேவைக்குரிய குடியாட்சி அமைப்பு என்பது என்ன? அதை எப்படி நிறுவது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கான இலக்கு நோக்கிச் செயல்பட முடியும்.
இன்றைக்கு அமெரிக்காவில், ஐரோப்பிய நாடுகள் பலவற்றில், இந்தியாவில் எனஇங்கெல்லாம் நடை பெறுகிற ஆட்சி முறை முதலாளியக் குடியாட்சி முறையே. அதாவது அந்தந்தநாடுகளின் பண முதலைகளின் நலன்சார்ந்தது மட்டுமல்லாமல் பன்னாட்டு முதலாளிகளின் கொள்ளைக்கு வழியமைத்துத் தரும் நோக்கில் அமைக்கப் பட்டிருப்பதே அந்த ஆட்சி முறை.
மக்களின் அடிப்படைத் தேவைகள், அன்றாட வாழ்க்கைத் தேவைக்குரிய அனைத்தையும் முதலாளி களே தீர்மானி“கிற வகையான அரசமைப்பாகவே அந்த அரசமைப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. மக்கள் உடமையாக, அரசுடமையாக இருந்த பல துறைகளை, தொழிலகங்களை, கனிம வளங்களை யெல்லாம் தனியாருக்குத் தாரை வார்த்திடும் வகையில் முதலாளிகளைக் கொழுக்க வைக்கின்றன. இன்றைக்குள்ள அத்தகைய அரசுகள்.
எளிய தொழில்கள், வணிகங்கள் எல்லாம் கூட நசுக்கப்பட்டு கொழுத்த முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளுமே அவற்றைத் தங்களின் கைகளி லெடுத்து வளம் கொழிக்கின்றன. உலகமயமாக்கம், தாராள மயமாக்கம், தனியார் மயமாக்கம் எனும் பெயர்களில் பன்னாட்டுக் கொள்ளையர்களும் கொள்ளையடிக்கின்றனர். இப்படியான கொள்ளையடிப்புக்குத் தகுந்த வகை யான அரசாகவே அவர்களின் அரசு அமைக்கப் பட்டிருக்கிறது. ஆக, இத்தகைய குடியசராட்சியை இங்குநிறுவிய வர்கள் யார் என்று அறிந்தால் அது யாருக்கான குடியரசு என்பதை இன்னும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
தமிழகத்தில் ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்பெல்லாம் குடியாட்சி முறைகளே நிலவின. பழந்தமிழகம் தொடங்கியே முடியாட்சி முறைகள் நடந்துவந்ததை அறியலாம். தொடக்கத்தில் ஆநிரைக் கவர்தலுக்குரிய குக்குலப் போர்கள் நடந்து அதில் வெற்றி பெறுகிற குக்குலங் களின் தலைமைக்குரியதாகவே அரசுகள் இருந்தன. பின்னர் காடுகளில் பயிரிட்டு முறையாக வளர்ந்த குலவாழ்க்கையும், தொல்குடி போர்களாக உருவெடுத்து, நிலைத்த படை கொண்டும் போரிட்ட அரசு வாழ்க்கை உருவெடுத்தது. அதன் பின்னர் நாடுபிடி போராகவும், பிற நாட்டு வீரர்களைப் பிடித்து வந்து அடிமைகளாக்கி அவர்களை நில அடிமைகளாக்கிய கிழாரிய ஆட்சி முறையும் எனப் பழந்தமிழ் அரசு முறைகள் யாவும் படிப்படியாக அரசு பேரரசு முறைகளாக வளர்ந்து வந்தன.
அப்படிப் படிப்படியாக வளர்ந்து வந்த தமிழ்க் குமுகம் வந்தேறிய வேற்றின அரசுகளுக்கு அடிமைப் பட்டது. களப்பிரர் தொடங்கிய பல்லவர், வடுகக் கலப்புற்ற பிற்காலச் சோழர்கள், விசயநகர நாயக்கர்கள், நவாப்புகள், மராட்டியர்கள் என்று தொடங்கி பல்வேறு வேற்றின நாடு பிடி முடியாட்சியின் கீழ்த் தமிழகம் முடங்கிப் போனது. எனவே, நிலக்கிழமை என்பது முற்றும் முழுமையாக நிலக்கிழமையாக அல்லாமல் வேற்றின ஆட்சிகளால் காத்து வளர்க்கப்பட்ட வைதீகம் கற்றுத் தந்த வருண வேறுபாட்டு கடைபிடிகளோடான சாதிய நிலவுடைமையாகவே அதிகாரம் செய்தது.
எனவே, வேளாண்மை மற்றும் தொழில் மீத்தங்களி லிருந்து உருக் கொண்டவணிக வேளாண்மை தோன்ற இயலாமல், இயற்கை விளைப்புப் பொருள்களான சந்தனம், தேக்கு, மிளகு, வாசனைப் பொருள்கள், முத்து, பவளம் உள்ளிட்ட மணிகள் என்பவையே வணிகப் பொருள்களாக இருக்க அன்றைய அம் முடியரசாட்சிக்கு அடங்கியே வணிகங்களும் இருந்தன.
தமிழர்தம் மெய்யியல் கருத்துத் தழுவலோடு வடக்கே வளர்ந்து தமிழகம் நுழைந்த புத்த, சமணத் தோடு கிளர்ந்தெழுந்த வணிக எழுச்சிகளும், பிற்கால நில ஆளுமை மேலாண்மைகளால் நசுக்கப்பட்டன. எனவே தமிழகத்தில் தொழில் பெருக்கத்திற்கான வழிகள் இல்லாமல் போனது. இந்தச் சூழலில் ஐரோப்பியர் சந்தை வணிகர்களாக உள் நுழைந்து, படிப்படியே தொழில்களைப் பெருக்கத் தொடங்கியதோடு, வன்முறையால் தங்கள் அரசுகளையும் அமைத்தனர். அவர்களின் வல்லாட்சிகள், அக்கால நிலவுடை மையாளர்களால் எதிர்க்கப்படவே, அவர்களை அடக்கியும், பணிய வைத்தும் ஆங்கில வல்லரசு கற்றுத் தந்த அரசு முறையே இன்றைக்கு இருக்கிற குடியாட்சி அரசாட்சி முறை. அதாவது இக் கட்டுரையின் தொடக்கத்திலேயே பார்த்த வகையில் நீதித்துறை, நிர்வாகத் துறையுடன் கூடிய சட்டமன்ற நாடாளுமன்றத்திற்கு மட்டுமான முதலாளியச் சார்புடைய தேர்தல் முறை.
அன்றைய ஆங்கில வல்லாட்சியினர் மக்களிடம் தாங்கள் மக்களாட்சி முறையில் நடப்பதாகக் காட்டிக் கொள்வதற்காகச் சட்டமன்றங்களையும், நாடாளுமன் றத்தையும் அமைத்தார்கள். தொடக்கத்தில் அத்தகைய சட்டமன்ற, நாடாளு மன்றங்களிலும் கூட யார் வேண்டுமானாலும் உறுப்பினர்களாகி விட முடியாது. நிலவுடைமை யாளர்களும், கல்வி கற்றோருமே உறுப்பினராகவும், வாக்கு போடவுமான தகுதியாளர்களாக ஏற்கப் பட்டனர். பின்னர் சீக்கியர்களும், இசுலாமியர்களும் போராடி இடஒதுக்கீடு பெற்றனர். தொடர்ந்து தாழ்த்தப்பட் டோருக்கு இடஒதுக்கீடும், பெண்கள் பங்கேற்கவுமான இசைவுகளும் பெற முடிந்தது. இறுதியாக 21 அகவையான அனைவரும் வாக்குரிமை பெற போராடித் தகுதி பெற முடிந்தது. பின்னர் இக்கால் அது 18 அகவை ஆனது.
அவ்வாறு வாக்குரிமை அளிக்கப் பெற்றாலும், உறுப்பினராகியிருந்தாலும், ஆட்சியில் பங்கேற்றிருந்தாலும், ஒரு சட்டத்தை நிறைவேற்ற அது சட்டமன்ற நாடாளுமன்றங்களில் நிறைவேற்றப்பட்டி ருந்தாலும், அனைத்து முன்வரைவுகளையும் ஆளுநரின், குடியரசுத் தலைவரின் இசைவோடேயே சட்டமாக நிறைவேற்ற முடியும் எனத் தீர்மானித்திருந்தனர். அதன்படி ஆளுநரும், குடியரசுத் தலைவருமாக ஆங்கிலேயர்களோ அமர்ந்திருக்கும்படி அமைத்துக் கொண்டனர். ஆக, அன்றைக்கு ஆங்கிலேய வல்லரசிய ஆளுமை நலனுக்காக அமைக்கப்பட்ட ஆட்சி முறையினையே சிறிதும் மாற்றமில்லாமல் ஆங்கில அதிகாரிகளிடம் இருந்து கற்றுக் கொண்டு இந்திய ஆண்டைகள் தொடரலாயினர்.
இந்நிலையில், இன்றைக்கு இந்தியக் குடியரசாட்சியின் கீழ் இருப்பதாகச் சொல்வதும், மக்கள் நாயக நெறியோடு இயங்குவதாகக் காட்டிக் கொள்வதும் யார் வகுத்த குடியரசமைப்பு? யார் பேசிய மக்கள் நாயக நெறி என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அன்றைய ஆங்கிலேய வல்லரசு ஆண்டைகளின் நலன்களுக்கு மட்டுமாக இருந்த அந்தக் குடியாட்சி அமைப்பு முறை இன்றைக்குப் பன்னாட்டு முதலாளி களுக்கும், வல்லரசுகள் பலவற்றுக்குமாக நலன்களுக் கான அமைப்பாக இருந்து கொண்டே இந்தியாவில் செயல்பட்டு வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இத்தகைய வல்லரசு அடிமைக் குடியாட்சி முறையில் தேர்தல்கள் நடத்தப் படுவதே ஏதோ குடியாட்சியின் சிறப்பு என்று வேடம் போட்டுக் காட்டுகிறது இந்தியா. அதே வகையிலேயே குடியாட்சி வேடமிட்டுக் கொண்டிருக்கிறது அமெரிக்காவும். உலகின் எளிய நாடுகளையெல்லாம் நசுக்கிப் பிழைத்துக் கொண்டி ருக்கும் அமெரிக்காவின் ஆட்சி முறை முழுக்க முழுக்க முதலாளிய நலன்களுக்கான குடியாட்சி முறையே அல்லாமல் வேறல்ல.
இந்நிலையில் அமெரிக்காவானது ஏதோ குடியாட்சியில் தளைப்பதாய்ப் பசப்புகிறது. இந்தியாவும் குடியாட்சி நடைபெறும் மிகப் பெரும் நாடென நடிக்கிறது. அண்மையில் இன்னொரு வேடிக்கை என்ன வென்றால் லிபியாவுக்குள் நடக்கும் மக்கள் எழுச்சி யைக் கண்டு குடியாட்சி அமைப்பு முறைக்கான பயிற்சி கொடுக்க இந்தியாவிலிருந்து அதிகாரிகளின் குழு ஒன்று லிபியாவுக்குச் சென்றதுதான். ஆக, குடியாட்சி எனும் பெயரில் முதலாளியத்தால் நடத்தப்படும் நாடகங்களைச் சரிவர விளங்கிக் கொண்டாக வேண்டும்.
இந்நிலையில் குடியாட்சி என்பது எப்படியாக வெல்லாம் வெவ்வேறுபட்ட நிலைகளில் அமைக்கப் பட்டிருக்கிறது என்பதைச் சுருக்கமாகவேனும் புரிந்து கொள்ள வேண்டும். பன்னாட்டு முதலாளிகளின் நலனுக்காக அவர்களால் உருவாக்கப்பட்டு இயக்கப்படும் முதலாளியக் குடியாட்சி முறை ஒருவகை. (அதை விரிவாகப் பார்த்தோம்)
முழுக்க முழக்க உழைக்கும் மக்களின் விடுதலை உரிமைகளைத் தலைமைப்படுத்தி அனைத்து மக்களுக்குமான அமைப்பு முறையை உருவாக்கப் போராடிப் பெற வேண்டுமென குடியாட்சி முறை மற்றொரு வகை. மக்கள் குமுகத்திலிருக்கும் விடுதலைத் தேவைக்குரிய பல்வேறுபட்ட வகுப்பினர்களின் நிகராளியரையெல்லாம் இணைத்து ஒரு கூட்டுத் தலைமையை உருவாக்கிப் போராடி அதன் வழி ஒரு குடியரசாட்சி அமைப்புமுறை நிறுவப்படுவது இன்னொரு வகை. ஆக, இந்த மூன்று வகைகளில் எந்த வகை மக்களாட்சி முறை இக்கால் தமிழகத்திற்குத் தேவை என்பதை ஆய்ந்தாக வேண்டும்.
இன்றைய தமிழகம் இந்திய அரசின் கீழும் பன்னாட்டு நிறுவனங்களின் கீழும் அடிமைப்பட்டி ருக்கிறது. அவ்வாறு அடிமைப்பட்டிருப்பதோடு, தமிழகத் தில் நடைபெறுகிற குடியரசு ஆட்சி முறை என்பதோ இந்திய ஆண்டை அதிகாரத்திற்கும், பன்னாட்டு நிறுவனங்களின் தேவைகளுக்காகவும், ஆங்கிலேயர் களால் அறிமுகப்படுத்தப்பட்ட முதலாளியக் குடியாட்சி முறை கொண்டதாக இருப்பதை அறிந்தோம்.
இத்தகைய அரசமைப்பு முறை பன்னாட்டு மற்றும் இந்திய முதலைகளின் கொள்ளைக்கும், சுரண்டல் களுக்கும் வழியமைத்துத் தருகிற அரசமைப்பு முறையாக இருப்பதால் அதை உண்மையான மக்களாட்சி முறையாக ஏற்க முடியாது.
அடுத்து, உழைக்கம் மக்களின் தலைமையில் அமைக்கப்படும் குடியாட்சி முறை தமிழக நிலையின் இன்றைய தேவைக்குரியதாக இல்லை. இன்றைய தமிழகம் இந்திய அரசிடமிருந்தும், பன்னாட்டு வல்லரசுகளின் ஆளுமை மற்றும் சுரண்டல்களிலிருந்தும் விடுதலை பெற்றாக வேண்டுவதே முதல் பணியாக இருக்கிறது. இந்த விடுதலை தமிழகத்தின் உழைக்கும் மக்களுக்கு மட்டுமே தேவையான விடுதலை இல்லை. மேலும், உழைக்கும் மக்கள் தங்கள் தலைமையின் கீழ் முன்னெடுக்கும் குடியாட்சி அமைப்போ ஓர் ஒப்புறவிய (சோசலிச)க் குமுகத்தைப் படைப்பதற் கான தேவையையும் கொண்டது. ஆனால் தமிழகத்தின் இன்றைய இலக்கு, இந்திய அரசிடமிருந்தும், பன்னாட்டுக் கொள்ளையிலிருந்து மான விடுதலையை நோக்கியதாகவே இருக்கிறது. அதன் அடுத்தக் கட்டமே ஓர் ஒப்புரவிய இலக்கு நோக்கியதாக இருக்க முடியும்.
எனவே, விடுதலை இலக்கைத் தேவை நோக்க மாகக் கொண்ட அனைத்து வகுப்புகளையும், இணைத்து அவ் விடுதலையைநோக்கி வழி நடத்திச் செல்லக் கூடிய ஒரு கூட்டுத் தலைமையே இன்றைக்குத் தேவையாக இருக்கிறது. தொழிலாளர்கள், உழவர்கள், சிறு நிலவுடை மையாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், மீனவர்கள், தேசிய முதலாளிகள், உதிரித் தொழிலாளர்கள், கல்வியாளர்கள் எனப் பல நிலை வகுப்பினரையும் முதன்மை இலக்கு நோக்கி இணைக்க வேண்டியிருக்கிறது.
இந்திய அரசாங்கத்திற்குரிய அதிகாரங்கள் உடைமைகள் மட்டுமல்லாது பன்னாட்டு மூலதன நிறுவனங்களின் உடைமைகள் அனைத்தையும் தமிழகத்திற்குரியதாக ஆக்க வேண்டியதே முதல் கடமை ஆகிறது. இந்திய அரசதிகாரத்தின் காலூன்றல்களை அறுத்தெறிவதும், வெளிநாட்டுக் கொள்ளையர்களை வெளியேற்றுவதும் என்பதே முதல் பணிகளாகின்றன. மற்றபடி, ஒப்பரவிய நோக்கில் பொதுப்பட முதலாளியத்திற்கு எதிராகவோ, தனிச் சொத்துட மைக்கு எதிராகவோ ஆன நோக்கங்கள் யாவும் இரண்டாவது மூன்றாவது எனத்தொடர் நிலைப் பணிகளாகத்தான் இருக்குமே அல்லாமல் அவற்றை இன்றைய முதல் பணிகளாக எண்ண முடி யாது.
இந்நிலையில், இன்றைய முதல் நிலைத் தேவைக் குரிய கூட்டுத் தலைமை குறித் தும் அதன் வழி நிறுவத் திட்ட மிடப்படும் மக்கள் குடியாட்சி அமைப்பு குறித்தும் மேலும் கூடுதலாகத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு தேசத்தை விடுதலை செய்வது என்பதே அந்தத் தேசத்தின் புரட்சி மயக் கட்சியின் இலக்கு எல்லையாக இருக்க முடியாது.
விதலையைப் பெற்றெடுப்பது எவ்வாறு என்று திட்டமிடுவதும், திட்டமிட்ட வகையில் தேசத்தை விடுதலை செய்வதும், விடுதலை செய்த தேசத்தைக் காப்பாற்றுவதும், காப்பாற்றப்படும் தேசத்தில் உண்மையான மக்களாட்சியை நிறுவுவதும், மக்க ளாட்சி நிறுவப்பட்ட தேசத்தில் தனிச் சொத்துடமை யைப் படிப்படியாக மறுத்து ஓர் ஒப்புரவிய (சோசலிச) அரசருவாக்கத்தை நிறுவுவதும், தொடர்ந்து பொதுவுடைமைக் குமுகு அமைப்பு வளர்ச்சி கொள்ள அடித்தளமிடுவதுமான வரை அந்தத் தேசப் புரட்சிமயக் கட்சிக்குப் பொறுப்பும் கடமையும் உண்டு.
எனவே, புரட்சிமயக் கட்சி செய்ய வேண்டிய பணிகள் என்ன? அவற்றை யார் யாரைக் கொண்டெல்லாம் செய்வது? இலக்கு எல்லைக் காலங்களில் செய்ய வேண்டிய பணிகள் என்னென்ன? அவற்றை எப்படி, யாரைக் கொண்டு செய்வது என்பவற்றில் எல்லாம் மிகத் தெளிவோடு இயங்கியாக வேண்டும். ஏற்கனவே பார்த்த வகையில் ஒரு தேசத்தின் விடுதலை அந்தத் தேசத்தில் உள்ள பரந்துபட்ட பெரும்பான்மை மக்களின் தேவைக்குரியதாகவே இருக்கிறது. பல்வேறுபட்ட வகுப்பினர் ஒவ்வொருவரின் விடுதலைத் தேவை அளவீடும், அதற்காக அவர்கள் பங்காற்றும் அளவும் வெவ்வேறு பட்டவையாக இருக்கின்றன. எனவே அவற்றையெல்லாம் அறிந்து அனைத்து வகுப்பு (வர்க்க) சார்ந்த மக்களையும் அணி அணியாக இணைத்துக் கூட்டுத் தலைமைக்குரிய புரிதலோடும், பண்போடும் தேச விடுதலைக்கென அளாவிய ஒரு முன்னணியைக் கட்டி எழுப்பியாக வேண்டும்.
அவ்வாறு முகாமை வாய்ந்த அந்த முன்னணியை நீண்ட காலத் திட்டத்தோடும் அக்கறையோடும் கட்டுகிற பொறுப்பும் கடமையும் அத் தேசத்தின் புரட்சிமயக் கட்சிக்கு இருக்க வேண்டும். மாறாக, அப்புரட்சிமயக் கட்சி தன்னளவில் அது உறுதியாகக் கொண்டுள்ள ஒப்புரவியக் காலத் தேவைக்காக உழைக்கும் மக்களின் தலைமை அரசியல்தான் தேவை என்பதாகத் தேச விடுதலைக் குரிய முதற்கட்டச் சூழலிலேயே அதைவலியுறுத்து வதும் நடைமுறைப்படுத்த முனைவதும், புரட்சிக்கு மட்டுமன்று, விடுதலைக்கும் முட்டுக்கட்டைப் போடவே செய்யும்.
மற்றபடி தேச விடுதலைக்கான கூட்டுத் தலைமை என்பதை உழைக்கும் மக்களின் (பாட்டாளியத்) தலைமைக்குரிய நெறியோடு கொண்டு செலுத்துவது என்பது வேறு, உழைக்கம் மக்களின் தலைமையையே வலியுறுத்துவது என்பது வேறு. எனவே, அத்தகைய உழைக்கும் மக்களின் தலைமைக்குரிய அரசியல் நெறியோடு தேச விடுதலையை முன்னெடுக்க வேண்டுமானால் தேச விடுதலையை முன்னெடுத்துப் போராட முனைகிற அனைத்து வகுப்புகளின் (வர்க்கங்களின்) கூட்டுத் தலைமையோடான முன்னணியை உருவாக்க வேண்டுவதே கட்டாயமாகின்றது. அத்தகைய முன்னணி வழியான முயற்சியாலேயே உண்மையான தமிழக மக்கள் குடியரசை நிறுவுவதற்கான தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் நடந்தேற முடியும்.
தமிழ்த் தேச மக்கள் குடியரசு 
அவ்வகை முயற்சியுனூடாக நிறுவப்படுகிற தமிழ்த் தேச மக்கள் குடியரசு, இன்றைய முதலாளியக் குடியாட்சி அமைப்பிலிருந்து எவ்வகையிலெல்லாம் வேறுபட்டதாக இருக்கும் என்பதையும் மேலோட்ட மாகவாவது தெரிந்திருக்க வேண்டும். இந்திய அரசிடமிருந்து தமிழகம் முழுமையாக விடுதலை பெற்று விடுவதால் தமிழ்த் தேசம் முற்றுரிமைகொண்ட அதிகாரங்களைக் கொண்டிருக்கும்.
ஒரு முதலாளியக் குடியாட்சியில் இருக்கிறபடி நடுவப்படுத்தப்பட்ட வகையில் அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருக்காமல், அனைத்துத் துறைகளிலும், அனைத்து உரிமைகளும் பரவலாக்கப்படும்.
நடுவப்படுத்தப்பட்ட சட்டமன்றம், நடுவப்படுத் தப்பட்ட தேர்தல் முறைகள் அவற்றில் நடக்கும் ஊழல்கள் என்றில்லாமல், ஒவ்வொரு நகரம், வட்டாரம், மாவட்டம் எனும் அரங்குகளிலே தேர்தல் களும் அதிகார நடுவங்களும் நிறுவப்படும். அவற்றிலிருந்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்படும் நடுவக் குழுக்களே நடுவப் பணிகளில் பொறுப்பேற்கும்.
நீதிமன்றங்கள் தனி ஒருவரின் தீர்ப்புக்குரியதாக இல்லாமல் மக்கள் அணிகளும் உள்ளடக்கப்பட்ட குழுக்கள் வழியான மக்கள் நீதிமன்றங்களாகவே செயல்படும். நடுவே குவிக்கப்பட்ட மேலிருந்து கீழான நிலையுள்ள நிர்வாகத் துறை மாற்றி அமைக்கப்பட்டு கீழிருந்து மேலான நிலையில் அதிகாரம் பரவலாக்கப்படடு விரிவுபடுத்தப்படும். வானூர்தி, கப்பல், தொடர்வண்டி, பேருந்து போக்குவரத்துகள், தொலைத் தொடர்புகள், தொழில்கள், கனிம வளங்கள், உள்ளிட்டவை படிப்படியாக தனியார் துறையிலிருந்து முழுக்க மக்களாட்சிக்குரிய அரசுத் துறையாக்கப்படும். மருத்துவத்தில் தமிழ் மருத்துவத்தின் மரபு சார்பு நிலைக்கும் பிற மாற்று மருத்துவ முறைகளுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டு முழுக்க முழுக்க இலவயமாக அரசாலேயே ஏற்கப்படும்.
அனைவருக்கும் ஒரே தரமான இலவயக் கல்வி என்கிற வகையில் உயர் தரமான தாய்மொழிக் கல்வியைத் தர அரசே பொறுப்பேற்கும். நில உச்சவரம்புகள் கடுமையாக நடைமுறைப் படுத்தப்பட்டு கூட்டுப் பண்ணை முறையில் உழவு முறைகள் பேணப்படவும் முதன்மை நிலைத் தொழிலாக மதிக்கப்பட்டு உற்பத்தி உயர்த்தப்படவும் செய்யும். ஆறுகள், குளங்கள், ஏரிகள் எல்லாம் அரசின் முழுக் கட்டுப்பப்டடில் முதன்மைக்கொடுக்கப் பட்டுப் பேணப்படவும் அனைவர் தேவைக்கும் உரிய வகையில் நீர்த் தேக்கங்கள் ஒழுங்கமைக்கப்படும். தமிழகத்தின் உழவு மற்றும் தொழில் உற்பத்திகள் இயற்கை வளங்கள் என அனைத்தும் முழுக்க முழுக்கத் தமிழகத்திற்கே என ஆக்கப்படுவதால் தமிழகம் முழுமையான வகையில் தன்னிறைவு பெறும்.
தமிழக மக்களின் முழுத் தேவைகளுக்கும் முதலுரிமை கொடுக்கும் நிலையில் அனைத்து உற்பத்திப் பொருளும் அளவிடப்பட்டு எஞ்சிய வையே பல நாடுகளுக்கும் வணிகப் பொருளாக்கப் பட்டு, தமிழகத்திற்குத் தேவையானவை பெறப்படும்.
பன்னாட்டு நிறுவனங்களின் மூலப் பணத் தொழில்கள், பொருளியல் மண்டலக் கொள்ளை யடிப்புகள், ஆழ்கடல் மீன்பிடிப்புகள், அணுமின் நிலையங்கள் உள்ளிட்ட திட்டங்கள் அனைத்தும் எவ்வகை உடன்பாடுகளுக்கும் ஆட்படாமல் நீக்கப்பட்டு, தமிழகத்திற்கே உரிமையாக்கப்படும். அவற்றில் தமிழகத்திற்குக் கேடான அணுமின் நிலையங்கள் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டு நிறுத்தப்படும்.
தமிழகத்தின் வாழ்வியல் முறைகளைப் பாழடித்துக் கொண்டிருக்கிற இந்தியப் பார்ப்பனிய மற்றும் வல்லரசிய வக்கிர வெறியூட்டல் கொண்ட பண்பாடுகள் முற்றாகத் தடை செய்யப்படும். மது உள்ளிட்ட உடல் நலக் கேடான மயக்கப் பொருள்கள் அனைத்தும் தடை செய்யப்படும். முதலாளிய ஆண்டைகளுக்குரியதாக இல்லாமல் மக்களின் வாழ்வியல் தேவைக்கான அறிவியல் ஆக்கங்கள் பெருமளவில் வளர்க்கப்படும்.
ஆக, இதன்படி மக்கள் குடியாட்சி மாண்பு காக்கும் வகையில் மக்கள் அணிகளின் படி நிகராளிகளைக் கொண்ட மக்கள் பேராயங்களே தீர்மானிக்கும் வகையில் தமிழக மக்கள் குடியாட்சி தமிழகத்தில் நிறுவப்படும்.